தொழிற்சாலை
"யோவ் ஏட்டு இந்த இடம் தானா?"
" ஆமா சார்.. இந்த இடம்னு தான் கன்ட்ரோல் ரூம்ல இருந்து வந்த கால்ல சொன்னாங்க.. "
"ம்ம்ம்.. சரி இறங்கு.. "
இருவரும் ஜீப்பை விட்டு இறங்கினர். அது ஒரு மூடப்பட்ட தொழிற்சாலை. அங்கங்கே துருபிடித்து..பொலிவிழந்து.. பழைய கதவு அவர்களை வரவேற்றது..
பெரிய பூட்டு கதவில் தொங்கிகொண்டு இருந்தது. அதை இழுத்து பார்க்க திறந்து கொண்டது.
" இங்க யாரும் இருக்கற மாதிரி தெர்லயேயா.. நீ உள்ள போய் பாரு " என்று ஏட்டை ஏவினார் இன்ஸ்..
இருள் பரவ.. குளிரும் சூழ்ந்தது.. ஒரு தம்மை பற்ற வைத்து ஊதலானார்... ஏட்டு சென்று பல நிமிடங்கள் ஆகியும் வராததால் இவரும் சென்று பார்த்தார்.. இப்பொழுது பூட்டு பூட்டி இருந்தது..
அதை பார்த்து அதிர்ந்தவர், பூட்டை நன்றாக இழுத்து பார்த்தார்.. ம்ஹம்.. திறக்கவே இல்லை.. " ஏதோ தப்பாப்படுதே.. " என்று மொபைலில் ஏட்டை அழைக்க.. ரிங் போய் கட்டானதே தவிர அழைப்பை எடுக்கவில்லை.
பின்புறம் சென்று பார்கலானார்.. ஜன்னல் ஒன்று ஆள் செல்லகூடிய அளவு இருந்தது. அது வழியே உள்ளே இறங்கினார்..
" ஏட்டு.. யோவ் முனுசாமிமிமிமிமி.... " என்று கத்தி கூப்பிட்டும் பதிலில்லை.. கட்டிடம் முழுவதும் அவர் குரல் எதிரொலித்தது...
" வந்த வேலைய விட்டு இவன தேடுறதே பொழப்பா போச்சே.. "
ஏட்டை தேடிக்கொண்டு கட்டிடத்தை அளந்தார்.. வந்த வேளையை மறந்து.. குளிர் ஏறிக்கொண்டே போனது. " இவன தேடி என்ன பண்ண போறோம்.. எக்கேடோ கெட்டு ஒழியட்டும்.. " என்று திரும்பி போக எத்தனித்தார்..
" அப்பாஆஆஆஆஆ....."
" என் பொண்ணோட குரல்.. அவ எங்க இங்க.. " நெஞ்சம் படபடக்க.. குரல் வந்த திசையை நோக்கி சென்றார்.. நெற்றியில் வேர்வை துளிர்க்க ஆரம்பித்தது..
மாடிப்படி ஏறி முதல் தளத்திற்கு சென்றார்... பின்னால் யாரோ இருப்பது போல் தோன்ற திரும்பி பார்க்க அங்கே ஏட்டு மூச்சு வாங்க நின்றிருந்தார்..
" யோவ் ஏட்டு எங்க யா போய் தொலஞ்ச.. சனியம்பிடிச்சவனே.. உன்ன தேடி எவ்ளோ நேரம் அலையறது.. "
" சார் இங்க இருந்து போகலாம்.. இங்க எதும் சரி இல்லை.. "
" அப்பாஆஆஆஆஆஆ.."
" என் பொண்ணு குரல் தான் இது.. இருயா.. "
" சார்.. சார்.. போகாதீங்க சார்ர்ர்ர்... "
முனுசாமியின் எச்சரிக்கையை மீறி அவர் முன்னே சென்றார்... ஒவ்வொரு அறையாக பதற்றத்துடன் தேட ஆரம்பித்தார்...
ஒரு அறையின் முன்னே சென்றவர்.. அப்படியே சரிந்து விழுந்தார்.. தான் காண்பது கனவா நிஜமா என்று அவருக்கு புரியாமல் பித்தம் பிடித்தது போல் இருந்தார்..
அங்கே உடல் நசுங்கி இரத்த வெள்ளத்தில் ஏட்டு இறந்து கிடந்தார்.. ஒரு பெரிய இரும்பு பளுத்தூக்கி அவரை நசுக்கி இருந்தது...
ஹா..ஹா...ஹா..ஹா.... சிரிப்பொலி கட்டடம் முழுக்க எதிரொலிக்க.. திரும்பி பார்த்தார்.. அங்கே...
முகம் சிதைந்த நிலையில்.. ஒரு வாலிபன் அகோரமாக நின்றிருந்தான்.. அதை கண்ட அவர் இதயம் நின்று துடிக்க.. அலறிக்கொண்டு தலை கால் தெரியாமல் ஓடினார்... அவன் சிரிப்பொலி அவரை தொடர்ந்து கொண்டே இருந்தது..
அவர் ஏறி வந்த படி இடிந்து விழுந்தது.. போக வழியில்லாமல் அவர் விழிக்க.. அவர் பின்னே அவன் நின்றிருந்தான்...
" ஏய்.. யார் நீ.. என்ன விட்று... நான் போறேன்... " என்று கதற ஆரம்பித்தார்..
" உன்னையா.. விடனுமா.. ஹா..ஹாஹா..ஹா... நீங்க பண்ண கொடுமை கொஞ்ச நஞ்சமா.. ஐயோக்கி ராஸ்கல்ஸ்... என் வாழ்க்கையே போச்சே.. " என்று அழ ஆரம்பித்தான்.. அவன் குரல் உடலெங்கும் மயிர்கூச்செரிய..
அங்கும் இங்கும் பார்த்து கொண்டு அடுத்த அறைக்கு ஓடினார்.. "ஆஆஆஆஆஆ.. அம்மாஆஆ.. " கண்ணாடி துகள்கள் எங்கும் பரவி இருக்க.. இவர் உடலெங்கும் இரத்தமும் கண்ணாடி செதில்களும் பதிந்திருந்தது...
அதை கோர சிரிப்புடன் இரசித்து கொண்டு நின்றான் அவன்... பெட்ரோல் வாடை அவரை ஆட்கொள்ள.. ஜன்னலிலிருந்து குதிக்க போகும் நேரம் அவர் உடலெங்கும் தீ பரவியது...
( ஷ்ஷ்..அவர் ஏன் செத்தாருன்னு தெரியனுமா.. இங்க வாங்க சொல்லரேன்.. 👂
கேட்டுச்சா... யார் கேட்டாலும் சொல்லாதீங்க என்ன..
அப்றம் அவன் உங்கள தேடி வருவான் 😜👻👻)
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro