சீறிப்பாய்கிறாள் காவேரி
நீ வீண் செய்! அல்ல
வேளாண் செய்! நான்
கடலைக் நோக்கி பாய
முடிவெடுத்தேன்...
இப்படிக்கு காவேரி என்பது போல!
சீறிப்பாய்கிறாள் நம் காவேரி!
காற்றுள்ள போது, தூற்றிக் கொண்ட நாம் ,காவிரி நளினம் கொண்டு நடமாடுவதை கண்டு கொள்ளவில்லை!
ஆடிப்பெருக்கன்று மட்டும்
எட்டிப் பார்த்து ஏளனம் செய்தோம்...
வெள்ளப்பெருக்கெடுத்து, கரை புரண்டாள் சினங்கொண்டு...
உள்ளம் பொருக்காமல் கண்ணீர் வடிக்கிறோம் இன்று....
சேமிக்கும் குணமும்,
பகிராத மனமும்,
பழகாத மக்களாய்
வாழ்ந்தென்ன பயன்?
பயிர் செய்து பழகியிருந்தால் கூட,
பலர் பசி போக்க வழி செய்யலாம்...
அயல்நாட்டு பந்தங்களிடம் பணமீட்டத்
தெரிந்த நமக்கு, நம்
உள் நாட்டு சொந்தங்களை வெள்ளத்திலிருந்து காக்க
வழி தேடும் நிலைமை எதற்கு?
வெள்ளங்கொண்ட காவிரியே! -எங்கள்
உள்ளங்கண்டு வாழ விடு!
வழிவகை செய்யும் இளைஞர்கள் இங்குண்டு!
கடலோடு விளையாடும் கல் நெஞ்சம் எதற்கு?
இப்படிக்கு
ஜே...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro