Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

14. தங்க மீன்கள்

"அம்மா" என்ற கத்தலில் மாமானாருக்கு பழச்சாறு தயாரித்து கொண்டிருந்த மரகதவள்ளி வெளியே வர, அங்கு சற்று காய்ந்த ஈர ஆடையுடன் கையில் மீன் ஏந்தியவாறு அவளது மகன்கள் அபினவ்(15)  கௌதம்(12) இருவரும் நின்றிருந்தனர். வள்ளி அவர்களை  முறைப்பதை  பார்த்த தாத்தா கனகவேல் தனது பேரன்களை திட்டத் தொடங்க, வள்ளி அமைதியாய் மீன்களை வாங்கிக் கொண்டு பெரியவரை முறைத்துவிட்டு  சமையலறை நுழைய, இங்கு தாத்தாவும் பேரன்களும் ஹைபை போட்டுக் கொண்டனர்.

"பெரியய்யா! திட்டுனதுக்கு நாளையிலேருந்து பசங்க ஓடைக்கு போக மாட்டாங்க..." என வேலைக்காரி சொல்ல,

"நீ வேறே.. நான் திட்டுவேன்னு அவரு முந்திட்டாராம்.... இவரே பசங்களே மீன்பிடிச்சிட்டு வரச்சொல்லியிருப்பாரு.. கொழம்பு வைச்சி பொறிக்குற வாசம் வெளியே போகட்டும் அப்பா மகன் பேரன்னு ரவுண்ட் கட்டி கொட்டிப்பாங்க... பரம்பரையே மீன்னா உயிரே விடும்..." என வள்ளி வெளியே சலித்துக் கொண்டாலும், மாமானாருக்கு நேரத்துக்கு பழச்சாறு கொண்டு வந்து கொடுத்தார்.

வள்ளியின்  அலைப்பேசி அழைக்க, அதில் வந்த செய்தி அறிந்தவள் தனது மாமானாரிடம் விவரம் சொலலிவிட்டு இருமகன்களிடமும் இரண்டு நாட்களுக்கான ஆடையை எடுத்து வைக்க சொன்னார். கணவர் வெற்றிவேல் வந்ததும் பெரியவரை விட்டுவிட்டு காரில் நால்வரும் சென்னை பறந்தனர்.

பிரபலமான பத்துமாடி மருத்துவமனையின் ஐந்தாவது தளத்திற்கு செல்ல, வெற்றியின்  தம்பி சரவணன் ஓடிவந்து கட்டிக்கொண்டு அழுதான்.

"அண்ணா!  ராகுல் ஸ்கேட்டிங் க்ளாஸ் போய்ட்டு வந்து  பூஸ்ட் குடிச்சிட்டு டான்ஸ் க்ளாஸ் கிளம்பினான்... திடீர்ன்னு மயக்கம் போட்டு விழுந்திட்டான்ண்ணா.... இங்கே வந்தா டாக்டர்ஸ் ஸ்ட்ரெஸ்லே இப்படி ஆயிடுச்சுன்னு சொல்றாங்க..., பனிரெண்டு வயசுப் பையனுக்கு என்னண்ணா ஸ்ட்ரெஸ்..." என வினவியவனிடம் அவன் கேள்வியிலே பதிலுள்ளது என அந்தநிலையில் சொல்ல மனம்வராது வெற்றி அமைதியாய் இருந்தார்.

மறுநாள் மதியப்பொழுது  ராகுல் இல்லம்வர, அவனதறையில் ஒருபக்க சுவர் முழுவதும் கண்ணாடிதொட்டியாய் மாற்றி அமைக்கப்பட்டிருக்க அதில் பல வண்ண மீன்கள் நீந்திக் கொண்டிருந்தன. "டேட்" என ராகுல் உற்சாகமிகுதியில் தந்தையை கட்டிக்கொண்டான். அவனோ மகனது மனஅழுத்தத்தை நீக்க கணக்கில்லா பணம் செலவழிக்க தயார் என தன்பணபலத்தையும், அவனின்மீதான பாசத்தை காட்டியதாக பெருமிதம் கொண்டான்.

ராகுல் தனது அண்ணன்கள் மற்றும் தனது பத்துவயது தங்கை  நேகாவுடன் மீன்களை ரசித்துக் கொண்டிருக்க, கம்பிவேலியிடப்பட்ட பால்கனியில் சகோதரர்கள் இருவரும் அமர்ந்தனர்.

"சரோ! ஒரு இரண்டு இலட்சம் ஆயிருக்குமா... இந்த ஆக்யூவேரியம் வால் செட் பண்ண...."

"என்பையன் முன்னாடி  காசு பெரிசில்லே..."

"ஆனா உன் பையன் பெரிசுதானே சரோ..." என்றதும் சரவணன் தன்அண்ணனை புரியாது பார்த்தான்.

"சரோ! இந்த பிஷ் வால்  அவனுக்கான ஸ்ட்ரேஸே போக்கிடும்ன்னு நீ நினைக்கிறியா...." என்றதும் சரவணன் ஆமாமென தலையாட்டினான்.

"கண்டிப்பா கெடையாது சரோ... டூ டேஸ்லே சலிச்சிடும்... ராகுலுக்கு மறுபடியும் இதே மனஅழுத்தம்  வரும்..." எனறதும் சரவணன் அதிர்ந்தான்.

"அண்ணா என்னே என்ன பண்ண சொல்றே..."

"இந்த வெக்கேஷன் டைம்லே ஒரு ஆறேழு  க்ளாஸ்க்கு அனுப்புவியா..."

"இருக்கும்ண்ணா..  நீ கேட்டதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்... அண்ட் இந்த காம்படிசன் வேர்ல்ட்லே இப்படி இருந்தாதான் அவனாலே சமாளிச்சு மேலே வரமுடியும்..."  என்றதும் வெறுமையாய் சிரித்த வெற்றிவேல்,

"சரோ!   ஒருநாளைக்கு ஏழுக்ளாஸ்... அப்போ இந்த சின்னவயசிலே ஸ்ட்ரெஸ் வரத்தான் செய்யும்...  நீயே அவனுக்கு ஸ்ட்ரெஸ் வரவைக்கவும் செலவு பண்ணிட்டு   அதே தீர்க்கவும் செலவு பண்றே சரோ... நாமே குழந்தையே தான் வளர்க்கிறோம்.... பந்தயக்குதிரையை இல்லே...  நீ  சொல்லுற இந்த க்ளாஸ் எல்லாம் கத்துக்கிட்டா அவனாலே எல்லாத்தையும் சமாளிச்சு வரமுடியுமா..." என்ற கேள்விக்கு விடை சொல்ல முடியாமல் சரவணன் தடுமாறினான்.

"கண்டிப்பா முடியாது... ஒரு சின்ன எக்ஸாம்பிள்... அவன் ஸ்வீம்மிங்க்ளாஸ் போறான்லே... ஒரு ஆழமான கிணத்துல குதிக்க சொல்லு பயப்படுவான்.. அடிக்கிற ஆத்துதண்ணியே எதிர்த்து போக சொல்லு திணறுவான்....  
அவன் கராத்தே கத்துக்கிட்டாலும் நாளைக்கு இந்த உலத்தே எதிர்க்கிற துணிச்சல்வராது சரோ... உங்க ஏட்டுக்கல்வியோட லட்சணம் அப்பிடி.... 

" நம்ம குழந்தைங்க தங்கமீன்கள் சரோ... அதே பரந்து விரிந்த இந்தஉலககடல்லிலே சுதந்திரமா நீந்த விடனும்... அதே விட்டு இப்படி பாதுகாப்புன்னு பொத்திவச்சா அவனோட  உலகம் அதோ  மீன்தாெட்டி  அளவுதான்.., மீன்தொட்டிலேவளருற மீனே  நாளைக்கு கடல்லே நீந்த விட்டா  சமாளிக்க முடியமா மனஅழுத்தம் அதிகமாகி  வேற தவறான  முடிவு எடுக்க வைச்சிடும்... உன்னே பயப்பட வைக்க இதே சொல்லலே....

"நம்ம குழந்தைங்களே கொஞ்சம் இயற்கையோடவும் வளர விடுங்க சரோ.... என் பசங்க எந்த ஸ்வீம்மிங் க்ளாசும் போகலே... ஆனா எவ்வளவு ஆழம் வேணா நீந்தி போவாங்க... கராத்தே க்ளாஸ் போனதில்லே... ஆனா லாஸ்ட் மன்த் பெரியவன் கூடப்படிக்கிற பொண்ணே  ஒருத்தன் கிண்டல்பண்ணான்னு அவனே விட அஞ்சுவயசு பெரியவனே போட்டு அடிச்சான்... சின்னவன் கையெழுத்து நல்லாயிருக்காது... உன்அண்ணி அவனே தினமும் 108 தடவை ஸ்ரீ ராம ஜெயம் எழுத வைச்சா.. இப்போ பாரு மணி மணியா கையெழுத்து அப்பிடியிருக்கு.... அவங்க இயற்கை சூழ்நிலையிலே  வளருறாங்க சரோ...  ஆனா  உன்பையனே விட திறமை குறைவா இல்லையே...

"ஏன் சின்னவயசிலே நாமே ரெண்டுபேரும் எந்த க்ளாஸ் போயி நீச்சல், கிரிக்கெட், மரஏறுறது, சண்டே கத்துக்கிட்டோம்.. எல்லாம் தன்னாலேதானே... நாமே இந்த உலகத்திலே ஜெயிக்கலே...  லீவ்னா ஊருக்கு அனுப்பி வை... அங்கே பிரியா இயற்கை சூழல்லே எல்லாம் கத்துப்பாங்க நம்ம குழந்தைகளுக்கு ஸ்பெசல் டெவண்ட் இருந்தா அதே இம்ப்ரூவ் பண்ண க்ளாஸ் அனுப்பு... உன் பணபலத்தே காட்ட அவங்களே  க்ளாஸ் போற அடிமையா மாத்தி பலவீனமாக்காதே சரோ..."

"அண்ணா! இப்போ..." என தடுமாறியவனிடம்,

"ராகுலுக்கு இன்னும் ஒன்மன்த் லீவ் இருக்குலே.. நாங்க ஊருக்கு கூட்டிட்டு போறோம்..." என்றவரிடம்,

"அண்ணா! அவளே சமாளிக்க முடியாது..." என மனைவியை நினைத்து சொல்ல,

"பாக்ட்ரியிலே அத்தனே பேரே மேனேஜ் பண்ற நீ  உன்வைப்பே சமாளி டா... காலையிலே நாங்க கிளம்புறோம்..." எனற் பேச்சின் குறுக்கே,

"நானு..." என அங்குவந்த நேகா கேட்டாள்.

"பட்டுக்குட்டி நீயில்லாமலா... அவங்க மூணுபேரு வரலேன்னாலும் உன்னே தூக்கிட்டு போயிடுவேன்.." என்ற பெரியப்பாவிடம் ஒற்றை பெண்மீனாள் ஒட்டிக் கொண்டாள்..

பிள்ளைகளுக்கு மீன்தொட்டியாய் குறுகலான  உலகம் காட்டாமல் பரந்த உலகத்தில் நீந்த விடுவோம்...
அவர்களுக்கான எல்லை எது என்பதை உணர்த்தி ...

"

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro