10. என் நம்பிக்கை நீ(ங்கள்) தான்
மாலை நேரம், மலர துடித்துக் கொண்டிருந்த மொட்டுக்களை பறித்து கமலக்கண்ணன் பூக்கூடையில் நிரப்பிக் கொண்டிருந்தார். இதை நிரப்பினால் தான் மனையாள் தனது வயிறு நிறைய மாலை சிற்றுண்டி செய்து தருவேன் என்று சொன்னதால். கல்லூரி முடிந்து மகள் தர்ஷினி(22) ஆக்டிவாவில் வந்திறங்க, தந்தைக்கு மாலைவணக்கம் சொல்லி, ஒரு முத்தத்தை பரிசாக வழங்கி விட்டு உள்ளே சென்றாள்.
அடுத்த கால்மணிநேரத்தில் மகன் நந்தகுமார் (26) தான் வந்த பல்சரை நிறுத்தக்கூட பொறுமையின்றி கீழே தள்ளிவிட்டு ரூத்ரமூர்த்தியாய் உள்ளே நுழைந்ததை கண்டார். ஏதோ ஒன்று நடந்துள்ளது என மனம் சொல்ல, பறித்த மலர்களை ஹால் மேசைமீது வைத்துவிட்டு அவனது அலுவலகஅறைக்கு நுழைந்தார்.
நந்தாவின் கைவண்ணத்தில் அறையிலிருந்த பொருட்கள் அலங்கோலமாய் கிடந்தது. அலமாரியிலிருந்த சட்டநூல்களை வீசியெறிய போக மனம் அதன் புனிதம் உரைக்க அப்பிடியே நாற்காலியில் சரிந்தான். கமலகண்ணன் மகன்முன் நிற்க அவரது வயிற்றில் முகம் புதைத்து அழத் தொடங்கியவன் தந்தையின் தோள் தடவலில் சிறிது நேரத்தில் இயல்புநிலைக்கு திரும்பினான்.
"டேட்! உன் ஆசையான சிஏவுக்கு பதிலா எல்எல்பி படிக்கிறேன் சொன்னதுக்கு சந்தோசமா சம்மதிச்சே... அப்போ ஒரு வார்த்தை சொன்னேலே... லாயர் உன்னோட லட்சியம்ன்னா காசு சம்பாதிக்கிறதே விட நீதியே காப்பாத்த போராடுறதுலே இருக்கனும்... நானும் இந்த எட்டுமாசமா தனியா கேஸ் எடுத்து அதுக்குதான்ப்பா ட்ரை பண்றேன்..... ஆனா என்னாலே ஒரு கேஸ்லே கூட ஜெயிக்க முடியலே... அந்தவலியே விட நீதி என் கண்முன்னே விலைக்கு போறது உயிர்லே வலிக்குதுப்பா... எதுவும் பண்ண முடியாத பதரா கீழே கிடக்க வேண்டியிருக்கு..."
"பாலியல் வன்கொடுமை, வரதட்சணைகொடுமை, கௌரவக்கொலை, போதைமருந்து, ஏன் இன்னைக்கி நான் தோத்த காலவாதியான பொருட்கள் விற்பனை இப்படி சமூக அவலஙகளே தேடிபிடிச்சு பொதுநல வழக்கா பதிவு செஞ்சு வாதாடினாலும் தோல்விதான்.. அப்பா சின்ன குழந்தைப்பா... பொறந்து மூணுமாசம்தான் ஆகுது... பாவம்மா அந்த மதர் ப்ரக்னெட் தேர்ட் ஸ்டேஜ்லே ஜாண்டிஸ் வந்து டெலிவரி டேட்க்கு முன்னாடியே ஃபீரிமெச்சூர்ட்டு பேபி.. அந்தம்மா வீக்னெஸ்லே பீஃட் பண்ண முடியலே.... அதனாலே டாக்டர் ப்ரஸ்க்ரைப் பண்ண ஃகாஸ்ட்லி மில்க் பவுடர் ஒருடின் டவுசண்ட் ருபீஸ் ஆனாலும் அவங்களோட சக்திக்கு மீறி வாங்கி கொடுத்திருக்காங்க... லாஸ்ட் மன்த் அந்த ஹாஸ்பிட்டல் மெடிக்கலேதான் வாங்கியிருக்காங்க... எக்ஸ்பையர்டு டேட் கவனிக்காம குழந்தைக்கு கொடுத்து பிட்ஸ் வந்து அது செத்து போச்சு... கஷ்டப்பட்டு எல்லா எவிடேன்ஸூம் கலெக்ட் பண்ணா..., அந்த பெரிய ஹாஸ்பிட்டல் இது வெளியே தெரிஞ்சா அவங்க நேம் போய்டும் என பேபி சரியான ஊட்டச்சத்து இல்லாம இறந்திடுச்சுன்னு போலியா சர்ட்பிகேட் கொடுத்ததோட... அந்த பேரண்ட்சையும் எங்க கொழந்த இறந்த துக்கம் குழப்பத்திலே புரியாம கேஸ் போட்டுட்டோம்.. இப்பதான் உண்மையே தெரிஞ்சி கேஸ் வாபஸ் வாங்குறோம்ன்னு பொய் வேறே சொல்ல வச்சிட்டாங்க... நீதி கிடைக்காத அந்த பேரண்ட்ஸ் ஃபெனால்டி வேற கட்டிட்டு போறாங்க... என்னாலே யாருக்கும் நீதி வாங்கி குடுக்க முடியலயே.." என மனக்குறைகளை கொட்டிய மகனெதிரே ஒரு நாற்காலி போட்டு அமர்ந்தார்.
"நந்து! கண்டிப்பா ஒருநாள் நீதி.ஜெயிக்கும் ..." என ஒற்றை வாக்கியத்துடன் முடித்தார்.
"டேட்! எப்போ டேட் எனக்கு பையன் பொறந்து பெரியவன் ஆனப்பிறகா...தாமதமா வழங்கப்படுற நீதி மறுக்கப்பட்ட நீதிப்பா... நீதிஒருவனோட அடிப்படை உரிமைப்பா... அந்த நீதியே பெறமுடியலன்னா அதுவும் அவனுக்கு எதிரா இழைக்கப்படுற குற்றம்தானே... அப்போ எனக்கும் அந்த குற்றத்திலே ஒரு பங்கு இருக்குலே..."
"கண்டிப்பா நந்து.... உனக்கும் ஒரு பங்கிருக்கு..." என்ற தந்தையின் வார்த்தையில் அவனுக்குள் புதுப்பொறி கிளம்பியது.
"டேட்! நீங்க என்ன சொல்ல வரீங்க..."
"உனக்கு தாமதமா வழங்கப்படுற நீதி.. உன் கேஸ்லே விடுதலையான குற்றவாளியோட அடுத்த குற்றத்திற்கு பிள்ளையார்சுழி நந்து... உனக்கு தெரிஞ்ச இல்லே நீ வாதாடுனா கேஸ் ஹிஸ்டரி டாப் டூ ஃபாட்டம் படி... அதுலே ஒருசிலரே தேர்ந்தெடு... அவன் ஜெயிச்சு இறுமாப்புலே திமிரா அடுத்த குற்றம் செய்வான்... கண்டிப்பா செய்வான்... அவன் ஏற்கனவே செஞ்ச தப்புக்கு எவிடேன்ஸ் தேடாதே.... உனக்கு எவிடேசன்ஸ் கிடைக்கிற மாதிரி இனி அவனே தப்பு பண்ணுவான் இல்லே நீ பண்ண வை.... பல பெரிய குற்றம் செஞ்சவன் கூட ஏதாவது ஒரு சின்ன கேஸ்லேதான் மாட்டுவான் நந்து... பதுங்கியிரு.. சரியான சமயத்துலே பாயுறதுக்கு... அப்புறமென்ன நீ கேஸ் பைல் பண்ணி வாதாடி நீதி வாங்கி கொடு நந்து..., இன்னைக்கி நீ துவண்டு இருந்தாலும் நாளைக்கு என்பையன் நம்பிக்கைநட்சத்திரமா பலபேருக்கு இருப்பான்ற நம்பிக்கை இருக்கு..." என்றவர் எதிரே கீழே அமர்ந்த நந்து அவரது மடியில் தலைவைத்தான்.
"நந்து! நீ..." என அவர் மேலும் அறிவுரை வழங்க முயல ,
"டேட்! அந்த எருமைக்கு இப்படி சொன்னா புரியாது... நான் சொல்றேன்..." என வந்த தங்கை தர்ஷினியை நந்து முறைத்துப் பார்த்தான்.
"டேய் தடியா...! நீ என் ப்ரண்ட் ஆனந்தி பின்னாடி நாய் மாதிரி சுத்த, அவே உன்காதுல ரத்த வர அளவுக்கு திட்டினாலும் எருமமாடு மாதிரி சொரணை இல்லாம நின்னலே அதுமாதிரி... அவஅப்பன்கிட்டே போட்டுகொடுத்து, மூஞ்சிலே பெரியமார்க் போட்டுவிட்டாலும் மறுநா போய் வெட்கமில்லா இளிச்சிட்டு நின்னலே அந்த மாதிரி... எல்லாத்தையும மறந்து நீ ஜெயிக்கிறவர போராடு... கண்டிப்பா ஜெயிப்பே..." என சந்தடிசாக்கில் அவனது காதலை போட்டு கொடுத்துவிட்டு தந்தை அமர்ந்த நாற்காலி கைப்பிடியில் அமர்ந்து அவரை கட்டிக் கொண்டாள்.
தந்தையோ இது எப்போது என்பது மகளிடம் விசாரிக்க, அன்னையோ, "என் நந்து எங்கிட்டே எப்பவோ சொல்லிட்டான்... நான் உங்கப்பாகிட்டேயும் சொல்லிட்டேன்..." என மகனுக்காக பொய்வாதம் செய்து வக்காலத்து வாங்கி அவன் தோளில் கைப்போட்டு அவன்புறம் நிற்க, தர்ஷினி தந்தையை முறைத்துப் பார்த்தாள்.
தந்தையும் தன்னவள் பொய் சொல்கிறாள் என்று உரைக்காது, அதேசமயம் மகளின் மனம் கோணாது, "தர்ஷூ! நான் ஈசியா அவன் லவ்வே ஆக்செப்ட் பண்ண மாட்டேன்..." என மகனின் காதலுக்கு மறைமுகமாய் சம்மதம் தெரிவித்தார்.
"அப்போ எப்பிடியோ ஓகே சொல்லிடுவிங்க... யூ டு டேட்..." என்ற மகளை அணைத்து நெற்றியில் முத்தமிட்டு அவளின் ஏமாற்றத்தை மறக்க வைத்தார்.. அதுவரை கொதித்து கொண்டிருந்த மகனுக்கு நம்பிக்கை ஊட்டி தந்தை கோபத்தை தணிக்க, தங்கை அவனின் மனநிலையை மாற்ற அவன் காதலை கையில் எடுத்தாள்.
பிள்ளைகள் வெற்றிபெற தோல்வியை மகிழ்ச்சியாய் ஏற்பவள் தாய்...
பிள்ளைகள் தோற்று வாடி நின்றால் நம்பிக்கை அளித்து உயர்த்துபவன் தந்தை...,
அவன் தன்னிடம் தோற்க, மகிழ்ந்தாலும் பிறரிடம் விட்டு கொடுக்காதவள்(ன்) உடன்பிறப்பு..
அவன் நம்பிக்கை நட்சத்திரமானால் அதன் ஔிக்கற்றைகள் அவனது குடும்பமே...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro