18
" என்னடி அவன் ப்ளேட்டை மாத்தி போட்டுட்டான். என்கிட்ட சத்தியமா அவன் லவ் பண்ண முடியாதுன்னுதாண்டி சொன்னான். ஆனா உன்ன பார்த்ததும் அவன் அப்படியே பல்டி அடிச்சிட்டாண்டி" என்று கூற மீனாக்ஷி தன் தோழியை பார்த்து சிரித்தாள்.
" காதல், இது எப்படியான ஒரு வார்த்தை. இதுக்கு அர்த்தம் என்ன. யாருக்குமே தெரியாது. ஒவ்வொருத்தரும் அவங்க அவங்க தேவைக்கேற்ப அதற்கான அர்தத்தை மாத்திக்குவாங்க. அதற்கு என்ன தெரியும், அதற்கு என்ன தெரியாததுன்னு யாருக்குமே தெரியாது. தெரிஞ்சிக்கவும் விரும்பமாட்டாங்க. காரணம், அவங்க அவங்களுக்கு அவங்க அவங்க காதல்தால் உசத்தி. ஊசிமுனையில் நூலை கோர்க்கச்செய்வதும் காதல்தான்னா ஒரு மனிதப்படுகொலைக்கும் முதல் வித்தும் அதே காதல்தான். ராமாயானம் தோன்ற காரணமும் காதல்தான், மகாபாரதம் தோன்ற காரணமும் காதல்தான். அதெப்படி ராமாயனம் மகாபாரதம் எல்லாம் தோன்ற காரணமும் காதல்தான்னு யோசிக்கிறியா?" என்று கூற ரேஷ்மா
" ஹேய் என்ன ஃபிலாசபியா? மத்த எல்லாமே சரி, அதென்ன மகாபாரதம் தோன்ற காதல்தான் காரணம்னு சொல்ர?" என்று கேட்க மீனாக்ஷி
" எந்த ஒரு இதிகாச கதைய வேணாலும் எடுத்துக்க. அத படிக்கும் போது காதல் கண்ணோட்டத்துல பாரு. அப்போ புரியும். ஆனா பார்க்குற பார்வை காதல் மூலமா இருக்கனும். அப்போதான் அதை உணர முடியும்" என்று கூற ரேஷ்மா
" சத்தியமா எனக்கு புரியலடி" என்றாள்.
" இதெல்லாம் புரியனும்னா நீ யார சரி காதலிக்கனும் பேபி" என்று அவள் கன்னத்தை இவள் கிள்ள மீனாக்ஷி கடைசியாக கூறிய வார்த்தை அவளை குழப்பத்துக்குள் ஆக்கியது.
' காதலிச்சாத்தான் இதெல்லாம் புரியும்னா? நானும்தான் ஷக்திய காதலிக்கிறேன். சொல்லப்போனா ஷக்திதான் என் மனசுக்குள்ள வந்த முதல் ஆம்பள. மூணாவது காதல் பண்ற இவளே இவ்ளோலாம் பேசுறான்னா, அப்போ என்னோட காதல் அந்தளவுக்கு வெர்த் இல்லையா. நான் நிஜமா ஷக்திய காதலிக்கல்லையா? காதலிச்சா நம்ம பார்வை வித்தியாசமா இருக்கனுமா? ஏன் நமக்கு மட்டும் அப்படி தோனல்ல. எல்லாமே எப்பவும் போலதானே இருக்கு' என்று தன் காதல் மீதே அவளுக்கு சந்தேகம் வந்தது. ஆனால் ரேஷ்மாவுக்கு ஒன்று மட்டும் புரிய மறந்தது. மீனாக்ஷி கூறியது போல காதல் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கிடையாது. அது அவரவருக்கு தேவையானது போல அந்த வார்த்தைக்கான அர்த்தத்தை மாற்றிக்கொள்கின்றனர் என்று. மீனாக்ஷி அவளுக்கு ஏற்றாற் போல மாற்றியது ரேஷ்மாவுக்கு பொருந்தவில்லை.
காலேஜ் முடித்து க்ரிஷ் வீடு வர ராதா அவனின் வருகைக்காக காத்திருந்தாள்.
" டேய் தம்பி, என்னடா ஆச்சி. என்ன சொன்ன அந்த பொண்ணுகிட்ட?" என்று ஆர்வமாக கேட்க அவன் ராதாவை ஆச்சரியமாக பார்த்தான். ஒரு தோழியை போல தன்னுடைய காதலின் முடிவை இவ்வளவு ஆர்வமாக எதிர்பார்த்திருக்கின்றாளே என்று அவனுக்கு தன் அக்கா மீது பாசம் வழிந்தது. இவர்கள் வீட்டில் இருவருக்கும் இடையில் இப்படி பாசம் வழிவது ஒன்றும் புதிதல்ல.
" அக்கா நான் என்ன சொல்லியிருந்தா உனக்கு சந்தோசமா இருந்திருக்கும்?" என்று அவன் எதிர் கேள்விகேட்க ராதாவுக்கு க்ரிஷ் என்ன கூறியிருப்பான் என்பது புரிந்தது. அவனின் மனம் நொந்துவிடக்கூடாது என நினைத்தவள்
" நீயும் அவள பிடிச்சிருக்குன்னு சொல்லியிருந்தா எனக்கு ரொம்ப சந்தோசமா இருந்திருக்கும்" என்று கூறா ராதாவை கட்டி அணைத்தான்.
" உனக்கு பிடிச்சதையே சொல்லிட்டேன்கா. எனக்கும் அவள பிடிச்சிருக்குன்னு அவ காதலுக்கு யெஸ் சொல்லிட்டேன்" என்று கூறி ஆண்களுக்கு உரித்தான வெட்கத்தை அவன் முகம் பூசிக்கொண்டது.
" டேய் என்னடா வெட்கம்லாம் படுற. ஹ்ம்ம் என் தம்பியையும் ஒரு பொண்ணு வெட்க பட வெச்சிட்டாலே. சரி க்ரிஷ் போய் ஃப்ரெஷ் ஆகிட்டு வா நான் காபி போட்டு வைக்கிறேன்" என்றவள் கிட்சனுக்குள் புகுந்து கொண்டாள்.
தன் தம்பியின் முகத்தில் இருந்த சந்தோசத்தை வைத்தே அவன் மீனாக்ஷியின் காதலுக்கு பச்சை கொடி காட்டிவிட்டான் என புரிந்துகொண்டவள் அவனின் மனது நோகாமல் இருக்கவே அவளும் அதையே விரும்பியதாக கூறினாள். ஆனால் இதுவே மீனாக்ஷியிடம் அவன் காதலை கூற முன் அவளிடம் என்ன கூற என்று கேட்டிருந்தாள் அவளின் பதில் வித்தியாசமாக இருந்திருக்கும்.
ஃப்ரெஷ் ஆகி க்ரிஷ் கிட்சனுக்குள் நுழைந்தவன் கிட்சன் கட்டில் ஏறி அமர அங்கேயே இருவரும் காபி குடித்தனர்.
" க்ரிஷ் நான் ஒன்னு சொன்னா கேட்பியா?" என்று ராதா கேட்க க்ரிஷ் அவளை கேள்வியாக பார்த்தவன்
" அக்கா ப்ளீஸ் இப்படி கேட்காத. நீ மீனாக்ஷிய லவ் பண்ணாதேன்னு சொன்னா கூட நான் கேட்பேன். ஆனா என்கிட்ட ' நீ சொன்னா கேட்பியா' அப்படின்னு மட்டும் கேட்காத. நீதான்கா என் உலகம். நீ என்ன சொன்னாலும் இந்த தம்பி நான் கேட்பேன். ஐ லவ் யூ மோர் தன் எனிதிங்க் இன் திஸ் வேர்ல்ட்" என்று உணர்ச்சி மிகுதியில் கூறினான்.
" க்ரிஷ் இப்போ நீயும் மீனாக்ஷியும் லவ் பண்றீங்க. ஒரே காலேஜ், ஒரே வகுப்பு வேற. அடிக்கடி காலேஜ்ல வெளியில தனியா போக எல்லாம் சான்ஸ் இருக்கு. ஆனா உங்க காதல மத்தவங்களுக்கு தெரியிற மாதிரி மட்டும் காட்டிக்க வேணாம். உன் காதல்ல என்ன பிரச்சினை வந்தாலும் என்னால எதிர்த்து உன்கூட நிற்க முடியும். ஆனா அப்பாக்கு தெரியவந்து அவரு ஏதும் சொன்னா என்னால அப்பாவ எதிர்த்து ஒரு வார்த்தை பேச முடியாது.
இப்போ உன் காதல் நம்ம வீட்டுக்கு தெரிய வந்தா கண்டிப்பா அப்பா உன்ன ரொம்ப திட்டுவாரு. அந்த நேரத்துல என்னால உன் பக்கம் சப்போர்ட்டா நிற்க முடியாது. அப்படி ஒரு சந்தர்ப்பம் வர்ற மாதிரி பண்ணிடாத. காலேஜ் முடிச்சதும் அப்பாகிட்ட பேசுற மாதிரி பண்ணலாம். நீயும் மெடிசின் முடிச்சிட்டின்னா அவருக்கும் உன்மேல இருக்குற பழைய கோபம்லாம் குறையும்" என்று கூற அவனுக்கும் ராதா கூறுவது சரி என்றே தோன்றியது. ஆனால் க்ரிஷ்ஷிற்கு அப்போது புரியவில்லை, மீனாக்ஷியின் காதல் அவன் வாழ்வில் எத்தனை எத்தனை பிரச்சினைகளை கொண்டு வர போகின்றது என்று.
வீட்டிற்கு வந்த மீனாக்ஷி தூங்கும் நேரம் வந்ததும் தனது மொபைலை வைத்துக்கொண்டு க்ரிஷ்ஷிற்கு மெசேஜ் அனுப்பலாமா வேண்டாமா என யோசித்துக்கொண்டிருந்தாள். முன்பென்றால் எந்த ஒரு யோசனையும் இல்லாமல் அவனுக்கு மெசேஜ்ஜை தட்டிவிட்டு இருந்துவிடுவாள். ஆனால் காதல் கொண்ட பின் அவளால் முன்பிருந்தது போல இருக்க முடியவில்லை. இருந்தாலும் தூங்க முன் அவனுக்கு ஒரு குட்நைட் மெசேஜ் அனுப்பியவள் தனது போனை சைலண்டில் போட்டு தூங்க ஆரம்பித்தாள். பல நாட்களின் பின் அவளுக்கு நிம்மதியான ஒரு தூக்கம் வந்தது. அதற்கு காரணம் கூட இருந்தது. க்ரிஷ் தனது அக்கா மீது வைத்திருக்கும் பாசம் அவ்வப்போது அவனது சில சில செயல்களால் தெரிந்து கொண்டாள். அதே போல் தன்மீதும் அவன் கண்மூடித்தனமாக பாசம் வைப்பான் என்ற எண்ணமே அவளை நிம்மதியாக தூங்க வைத்தது.
பல வருடம் பெற்றோரின் பாசத்துடன் தன் அக்காவின் பாசத்தையும் சேர்த்து கண்டவளுக்கு சடுதியாக அவை எல்லாம் ஒரே நேரத்தில் இல்லாமல் போனது அவளை மிகவும் மன உளைச்சலுக்குள் ஆளாக்கியது. அதற்காக அவள் யாரையும் தவறு கூற முயற்சிக்கவில்லை. ஆனாலும் அவளுக்கு அந்த பாசம் தேவைப்பட்டது. அந்த நேரத்தில் அவள் பார்த்து வியந்ததுதான் ராதா மீது க்ரிஷ்ஷிற்கு இருக்கும் பாசம். ஒரு அக்கா மீது தம்பி இவ்வளவு பாசம் வைப்பான் என்றாள் கண்டிப்பாக அவன் பெண்களை மதிக்க தெரிந்த ஒருத்தனாகவே இருப்பான் என்பது அவளின் எண்ணம். நிஜமும் அதுதான். அப்படிபட்ட ஒரு ஆண் நம் கண் முன் இருக்கும் போது அவனை இழக்க எந்த ஒரு பெண்ணும் விரும்பமாட்டாள். அதுவே இங்கு மீனாக்ஷியின் காதலை வெளிக்கொணர்ந்தது.
அங்கு க்ரிஷ் வீட்டில்..
பாத்ரூம் சென்று விட்டு வந்து தனது மொபைலுக்கு வந்த மெசேஜ்ஜை பார்த்தவன் உடனே ரிப்ளை செய்தான். ஆனால் மறுமுனையில் மீனாக்ஷி அவன் மெசேஜ்ஜை பார்க்கவில்லை. இரண்டு மணி நேரம் அவளிடம் இருந்து பதில் வரும் என்று காதிருந்த்தவனுக்கு முதல் நாளே ஒரு ஏமாற்றம் உண்டானது. இருந்தாலும் காதலித்த ஆரம்பத்தில் பார்ப்பது பாதி கண்ணில்தானே. அதனாலேயே குறைகள் தெரிவதில்லை. சும்மாவா சொன்னார்கள், கிளி மூக்கின் நுனிமூக்கில் கோபங்கள் அழகென்று ரசிக்கும் அதே காதல்.. கல்யாணம் ஆனால் துரும்பெல்லாம் தூணாக தோன்றும் என்று.
மறு நாள் காலேஜுக்கு மிகவும் சுறுசுறுப்பாக செல்லும் தன் தம்பியை கண்ட ராதா
" என்ன கிருஸ்ணா, ரொம்ப ஹாப்பியா இருக்கீங்க போல" என்று கூற எப்போதும் கிருஸ்ணா என்று அவனை அழைத்தாள் கோபப்படுபவன் இன்று கோபப்படாமல் வெட்கப்பட்டான். இதை கண்ட ராதாவுக்கு சிரிப்பு சிரிப்பாக வந்தது.
" டேய் டேய் போதும்டா போதும். நீ இவ்ளோலாம் வெட்கபடாத. அப்புறம் எனக்கே ஒரு மாதிரி இருக்கு. அப்புறம் க்ரிஷ் ஒரு முக்கியமா ஒன்னு உன்கிட்ட சொல்லனும். இந்த ராதா உயிரோட இருக்குறவரைக்கும் நீ எது பண்ணாலும் அவ உன்கூட இருப்பா. உன்கூட நான் இல்லைன்னா அதுதான் என்னோட இறந்த நாளா இருக்கும்" என்று கூற க்ரிஷ்ஷிற்கு அவள் ஏன் அப்படி கூறுகின்றாள் என்று புரியவில்லை. ஆனால் ராதாவுக்கு தெரியு கண்டிப்பாக க்ரிஷ், மீனாக்ஷி காதலால் ஏதும் பிரச்சினை வரும் என்று. கல்லூரி காதலில் பிரச்சினை வராமல் இருந்தால்தானே ஆச்சரியம். அதைத்தான் அவள் மறைமுகமாக தன் தம்பிக்கு உணர்த்த முற்பட்டாள். ஆனால் அவன் அதை புரிந்துகொண்டானா என்பது தெரியவில்லை.
--------
இந்த அப்டேட்டில் சில உதாரணங்கள்
" செப்டம்பர் மாதம் " பாடலில் இருந்து சுட்டுள்ளேன்.. ஹாஹா. நீங்க எல்லாம் சொல்ல முன்னாடி நானே சொல்லிட்டேன்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro