16
வகுப்புக்கு சென்ற ரேஷ்மா இன்று க்ரிஷ் வராததை கண்டு மீனாக்ஷியை பார்த்து ஒரு நமட்டு சிரிப்பு சிர்த்தவள்
" என்னடி அவன ஒரேடியா ஓடி ஒளிய வெச்சிட்ட போல" என்றவள் அவர்களின் வகுப்புத் தோழனிடம்
"ஜீவா இன்னைக்கு க்ரிஷ் வரல்லயா?" என்று ரேஷ்மா கேட்க அவன்
" இல்லப்பா அவனுக்கு நைட் எல்லாம் ஜுரமாம். அதனால இன்னைக்கு வரல்ல. இந்த காலேஜ்ல சேர்ந்ததுல அவன் இன்னைக்குத்தான் லீவு போட்டிருக்கான். என்னாச்சோ தெரியல. நான் ஈவ்னிங்க் போய் பார்க்கலாம்னு இருக்கேன்" என்று கூற மீனாக்ஷி
" அப்போ நாங்களும் வர்றோம். சேர்ந்தே போகலாம்" என்று கூற அவனும் சரி என்றான். எப்பொழுதும் இவர்கள் வகுப்பில் யாரும் லீவ் எடுத்துக்கொண்டால் ஆண்கள், பெண்கள் என பட்டாலமாக நோயாளியின் வீட்டிற்கு சென்று அந்த வீட்டை இரண்டாக்கி விடுவார்கள். ஆனால் க்ரிஷ் இன்று காலேஜ் வராதது பெரிதாக யாருக்கும் தெரியவில்லை. முதல் வருட மாணவர்கள் வந்ததால் அந்த மாணவிகள் பின்னால் இரண்டாம் வருட ஆண் மாணவர்கள் சுத்த ஆரம்பிரித்திருந்ததே காரணம்.
ஈவ்னிங்க் காலேஜ் முடித்து ஜீவா, மீனாக்ஷி மற்றும் ரேஷ்மா மூவரும் க்ரிஷ் வீட்டிற்கு சென்றனர்.
"க்ரிஷ் காலிங்க் பெல் அடிக்குது யாருன்னு பாரு" என்று ராதா சமையல் அறையில் இருந்து சத்தமிட டிவி பார்த்துக்கொண்டிருந்த க்ரிஷ் வாசல் கதவை நோக்கி சென்று கதவை திறந்தவன், வந்திருந்தவர்களை பார்த்து ஒரு கனம் ஷாக்காகி நின்றான். இவன் ஏன் ஷாக் ஆகின்றான் என்பது புரியாமல் ஜீவா
" என்ன மச்சி, பேய கண்ட மாதிரி ஷாக் ஆகுற. நாங்கதான் வந்திருக்கோம். கொஞ்சம் நகரு உள்ளே போகனும்" என்று அவன் சர்வ சாதாரனமாக கூறினான. அவனும் வழிவிட உள்ளே சென்று ஜீவா அமர மீனாக்ஷியும் ரேஷ்மாவும் வெளியிலேயே நின்றனர்
ரேஷ்மாவை நிமிர்ந்து க்ரிஷ் பார்க்க அவள் அவனை பார்த்து
"என்ன சார் நாங்க உள்ள வரலாமா?" என்றவள் மீனாக்ஷியின் பக்கம் திரும்பி
" நீ வலது காலை எடுத்து வெச்சி உள்ள வாம்மா" என்று மெதுவாக க்ரிஷ்ஷிற்கும் மீனாக்ஷிக்கும் மட்டும் கேட்கும் விதமாக கூறினாள். ரேஷ்மாவின் குறும்பு பேச்சும் அவளின் நக்கல் கலந்த பார்வையும் மீனாக்ஷி இதுவரை நடந்த எல்லாவற்றையும் இவளிடம் கூறியிருப்பாள் என்பது க்ரிஷ்ஷிற்கு புரிந்தது.
ராதா கிட்சனில் இருந்து வந்து இவர்களை பார்த்தவர் இது க்ரிஷ்ஷின் காலேஜ் ஃப்ரெண்ட்ஸ் என்று புரிந்து கொண்டார்.
" ஹாய், எப்படி இருக்கீங்க எல்லோரும்?" என்று கேட்க மூவரும்
சம்பிரதாயமாக அவளிடம் பேச அவரும் இவர்களுக்கு தனிமையை வழங்க எண்ணி
" நான் காபி போட்டு கொண்டு வரேன். நீங்க பேசிக்கிட்டு இருங்க" என்று கூறினார். அந்த நேரம் பார்த்து ஜீவாவிற்கு கால் வர அவன் வெளியில் சென்று பேச, மீனாக்ஷி ரேஷ்மாவின் தொடையில் கிள்ளி அவளை கிட்சன் சென்று ராதாவுக்கு உதவுமாறு சைகையாலேயே கூறினாள். ஆனால் இது எதையும் கண்டு கொள்ளும் நிலையில் அவன் இல்லை.
ரேஷ்மா எழுந்து கிட்சன் செல்ல அங்கு மீனாக்ஷியும் க்ரிஷ்ஷும் மட்டுமே இருந்தனர். யார் பேச்சை தொடங்குவது என்று குழப்பத்தில் இருக்க சடுதியாக உள்ளே வந்த ஜீவா
" மச்சி அவசரமா ஒரு வேலை வந்திடிச்சிடா. தங்கச்சிய டெய்லி ஸ்கூல்ல இருந்து கூட்டி வர்ற ஆட்டோகாரன் ஆக்சிடண்ட் ஆகிட்டானாம். அம்மா என்ன போய் தங்கச்சிய கூட்டி வர சொல்றாங்க. ரேஷ்மா, நீயும் மீனாக்ஷியும் இருந்து போங்க. நான் போயிட்டு முடிஞ்சா வர்றேன்" என்றவன் உடனே அங்கிருந்து கிளம்பினான்.
கையில் காபியுடன் வந்த ராதா ஜீவா அங்கில்லாததை கண்டவர்
" எங்க உங்க ஃப்ரெண்டு" என்று கேட்க மீனாக்ஷி நடந்தவற்றை கூறினாள். எல்லோரும் பேசிக்கொண்டிருக்க ராதா
" சரி நீங்க பேசிக்கிட்டு இருங்க. எனக்கு கொஞ்சம் கிட்சன்ல வேலை இருக்கு" என்று கூறி கிட்சன் செல்ல ரேஷ்மாவும் அவளுடன் கிட்சன் சென்றாள். மீண்டும் இங்கு இவர்கள் இருவரும் தனித்து விடப்பட க்ரிஷ் பேசாமல் அமைதியா இருந்தான்.
" என்ன க்ரிஷ் பேச மாட்டியா?" என்று கேட்க க்ரிஷ் அவளை நிமிர்ந்து பார்த்தான்.
" இங்க பாரு க்ரிஷ், எனக்கு உன்ன பிடிச்சிருந்தது. அதனாலதான் ப்ரொபோஸ் பண்ணேன். அதனால என்ன தப்பான பொண்ணுனு நினைச்சிடாத. ஏன்னா பசங்க லவ் பண்ணா அது தெய்வீக காதல்னும் அதையே பொண்ணுங்க நாங்க லவ் ப்ரொபோஸ் பண்ணா இவ அலையிறான்னு சொல்ர சமூகத்துலதான் வாழ்ந்துகிட்டு இருக்கோம். எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும். அது ஏன்னு நான் நேத்தைக்கே சொல்லிட்டேன்.
உனக்கு பிடிச்சிருக்குன்னா பிடிச்சிருக்குன்னு சொல்லு. இல்லைன்னா இல்லைன்னு கூட சொல்லு. உங்களுக்கு எப்படி த்ரிஷா இல்லைன்னா நயந்தாராவோ அதே போலதான் எங்களுக்கும் க்ரிஷ் இல்லைன்ன ஒரு ஷக்தி" என்று கூற சட்டென்று நிமிர்ந்து அவளை பார்த்தான். அவனின் பார்வையின் அர்த்தத்தை புரிந்துகொண்ட மீனாக்ஷி
" ஹேய் நான் சும்ம ஒரு ஃப்லோவுல சொன்னேன். இதை நீ ரேஷ்மாகிட்ட சொல்லிடாத. அப்புறம் அவ என்கிட்ட சண்டைக்கு வர போறா?" என்று கேட்க க்ரிஷ்
"ஏன்" என்று கேட்டான்.
" ஹ்ம்ம்ம்,. உங்கண்ணன மேடம் ரொம்ப லவ் பண்றாங்க. ஆனா அந்த பக்கி இன்னும் என்கிட்ட கூட சொல்லல. இவ போய் எப்ப அவருகிட்ட சொல்லி, இதுங்க ரெண்டும் லவ் பண்ணி..ஹாஹா" என்று சிரித்தவள்
" எல்லோரும் மீனாக்ஷி போல போல்ட்டா இருப்பாங்களா. பிடிச்சிருக்குன்னா பிடிச்சிருக்குன்னு சட்டுனு சொல்லிடனும். நம்ம இன்னும் வாழ போறது ஒரு இருபது இல்லைன்னா இருபத்தைஞ்சு வருசம்தான். அத ஏன் வேஸ்ட் பண்ணனும். ஒவ்வொரு நிமிசமும் முக்கியமானது. எதையுமே வேஸ்ட் பண்ண கூடாது" என்று கூறினாள். இவள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்த க்ரிஷ் அவளை பார்த்து
" மீனாக்ஷி நீ கேட்ட விசயத்துக்கு எனக்கு கொஞ்சம் டைம் வேணும். என்னால சட்டுபுட்டுனு முடிவெடுக்க முடியாது. நான் நிறைய யோசிக்கனும். கண்டிப்பா அது உன்ன பத்தியோ இல்ல உன் குடும்பத்தியோ இல்லை. இது என்ன பத்தியும் என் குடும்பத்த பத்தியும். ப்ளீஸ் கிவ் மீ சம் டைம்" என்று கேட்க அவளும் சரி என்றாள்.
மீனாக்ஷியும் ரேஷ்மாவும் க்ரிஷ்ஷின் வீட்டில் இருந்து கிளம்பி சென்றனர். அவர்கள் சென்றதும் க்ரிஷ்ஷின் அருகில் வந்து அமர்ந்த ராதா
" க்ரிஷ் என்கிட்ட ஏதும் சொல்லனும்னு நினைக்கிறியா?" என்று கேட்க அவன் அவளை ' என்ன' என்பது போல பார்த்தான்.
" எனக்கும் உனக்கும் மூனு வருசம்தாண்டா வித்தியாசம். எனக்கும் உங்களுக்கு இருக்குற ஃபீலிங்க்ஸ் எல்லாமே இருக்கு. உன்னையும் அந்த பொண்ணு மீனாக்ஷியையும் தனியா விடனும் என்பதற்காக ரேஷ்மா இரண்டாவது தடவை கிட்சனுக்கு வந்தப்போவே தெரிந்சது உங்களுக்குள்ள ஏதோ இருக்குன்னு. உனக்கு இந்த அக்கா கிட்ட எதையும் செயார் பண்ணனும்னு தோனிச்சின்னா சொல்லு. இல்லைன்னா இட்ஸ் ஓக்கே லீவ் இட்" என்று கூட அவனுக்கு இப்போது என்ன செய்வது என்றே புரியவில்லை.
தன் சகோதரியிடம் கடந்த இரண்டு நாட்களாக நடந்த விடயங்களை கூற அவர் சிறுது யோசித்தார்.
" இங்க பாரு க்ரிஷ், நீ குழப்பத்துல இருக்கேனு மட்டும் நல்லா தெரியுது. எந்த பொண்ணுகிட்டயும் நீ இப்படி நெருக்கமா பழகாததனாலதான் உனக்கு இந்த குழப்பம். இது உன் வாழ்க்கை. நீதான் முடிவு பண்ணனும். காதலிக்க குடும்பம் தேவையில்ல. ஆனா கல்யாணம் அப்படிங்கிறது ரெண்டு குடும்பம் சம்பந்தப்பட்ட விசயம். எனக்கு தெரியல, எல்லா பசங்களும் பண்ற மாதிரி காலேஜ்ல ஒரு பொண்ண லவ் பண்ணிட்டு கல்யாணம் இன்னொரு பொண்ண பண்ணிக்குவியா? இல்லை காதலிக்கிற பொண்ணயே கல்யாணம் பண்ணிக்க போறியான்னு" என்று கூற ராதா இப்படி நெற்றிப்பொட்டில் அடித்த மாதிரி பேசுவார் என்று அவன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
" ஆனா ஒன்னு மட்டும் சொல்றேன் கேட்டுக்க க்ரிஷ். காதல் ஒரு அழகான ஒரு ரோஜா செடி மாதிரி. அதுல ரோஜாவும் இருக்கும் முள்ளும் இருக்கும். எந்த பிரச்சினையும் இல்லாம இருக்கும் போது நம்ம காதல் நமக்கு ரோஜா பூ மாதிரி இருக்கும். ஆனா அதுவே ஏதும் ப்ராப்ளம் ஆச்சின்னா நம்ம காதல், ரோஜா செடியில இருக்குற முள்ளு மாதிரி நம்ம மனச குத்தி கிழிக்கும். கதலிக்கிறது சம்பந்தமா எந்த முடிவு எடுக்குறதா இருந்தாலும் ரொம்ப யோசி. இந்த கண்டதும் காதல், பேசினதும் காதல்லாம் சினிமாவுக்குத்தான் சரி. ஏன்னா அதுலதான் லவ்வரஸ் சேர்ந்ததும் எண்ட் கார்ட் போட்றுவாங்க. ஆனா நிஜத்துல அதுக்கு அப்புறறமாத்தான் வாழ்க்கையே ஆரம்பமாகும்.
இந்த சினிமா, நாவல்கள்ள வர்ற காதல் கதைகள மறந்துட்டு உன் வாழ்க்கைக்கு அந்த பொண்ணு ஒத்து வருவாளா? அவளோட ஃபேமிலி நம்ம ஃபேமிலிக்கு ஒத்து வருமான்னு யோசி. அவசரப்படு எந்த முடிவும் எடுக்காத" என்று கூற ராதாவின் அருகில் சென்றவன் அவள் மடியில் தலை வைத்து படுத்தான். தாயின் பாசம் இல்லாமல் வளர்ந்தவனுக்கு தாய்க்கு தாயாக இருந்து இப்படி வாழ்க்கையின் சூட்சுமங்களை புரிய வைக்கும் ஒரு தோழியாகவும் இருக்கும் தன் சகோதரியின் வாழ்க்கையில் தன்னாள் எந்த ஒரு கஷ்டமும் வரக்கூடாது என்று நினைத்தான்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro