10
க்ரிஷ்ஷின் வீடு புயல் அடித்து ஓய்ந்ததை போல காணப்பட்டது. எந்த பொருளும் உடையவில்லை, எந்த பொருளும் தூக்கி வீசப்படவுமில்லை. எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவும் இல்லை. ஆனால் நான்கு உள்ளங்கள் மட்டும் இந்த புயலில் சிக்கி சின்னாபின்னமாகி இருந்தது. ஆம், நான்கு இதயங்கள்தான். ருபினியையும் சேர்த்து.
" க்ரிஷ் அவங்க உங்க சொந்த அக்காவா?" என்று அவள் கேட்க என்ன நினைத்தானோ தெரியவில்லை ரூபினியை இறுக்கமாக கட்டிப்பிடித்தான். அவன் அணைப்பில் துளி கூட காமம் இல்லை. தாயிடம் அடைக்களம் தேடும் சேயை போல இருந்தது அவன் அணைப்பு. ஆண்களின் இச்சையுடன் கூடிய அணைப்பையே இத்தனை நாள் கண்டிருந்தவளுக்கு இவனின் இந்த அணைப்பு ஒரு வித பரவசத்தை கொடுத்தது. பொண்ணால் ஒரு ஆண் தன்னை எந்த நோக்கத்தில் அணைக்கின்றான் என்பதை அவன் அவளை அனைத்து இரண்டு நொடிகளில் கணித்துவிட முடியும்.
சில நிமிடங்கள் அவளின் கேள்விக்கு பதில் கூறாமல் அணைத்திருந்தவன் ஆவேசமாக அவளை முத்தமிட தொடங்க ரூபினி அவனின் முத்தங்களுக்கு தடை விதித்தாள். என்ன நடந்தாலும் இன்று இந்த அணைப்பை காமதின் பக்கம் அழைது செல்ல அவள் விரும்பவில்லை. அவளின் நிராகரிப்பை அவன் என்ன என்பது போல பார்த்தான்.
" இந்த பார்வையால பதில் சொல்றது, மெளனமா இருந்து சாதிக்க பார்க்கிறது எல்லாமே போதும். இனிமே இந்த விளையாட்டு எல்லாம் என்கிட்ட வேணாம். எதுவா இருந்தாலும் என்கிட்ட வார்த்தைகளால பேசுங்க. என்கிட்ட நீங்க அதிகமான பேசின வசனம் ' இன்னைக்கு வர முடியுமா?' இதை தவிர்து என்கிட்ட வேற எது பேசியிருந்தாலும் அது ரொம்ப கம்மியாதான் இருக்கும். சரி அதை எல்லாம் விடுங்க. இப்போ வந்தது உங்க சொந்த அக்காவா?" என்று அவள் கேட்க க்ரிஷ் அமைதியாக இருந்தான்.
வேதாளம் மறுபடி முருங்கை மரம் ஏறுவதை கண்டவள்
"நீங்க கூப்பிட்டீங்கன்னுதான் வந்தேன். இன்னைக்கு உங்கள பத்தி சொல்ரேன்னு சொன்னீங்க. ஆனா ரொம்ப அமைதியா இருக்கீங்க. சரி நான் போறேன். இனிமே எப்போதும் என்ன காண்டாக்ட் பண்ண வேணாம்" என்று க்ரிஷின் வீக் பாய்ண்ட் பார்த்து சரியாக அடித்தாள்.
அவள் போகின்றேன் என்று கூறியதும் க்ரிஷ் தனது பர்ஸில் இருந்து பணத்தை எடுத்துக்கொடுக்க முயல அவள்
" காசெல்லாம் தேவையில்ல. அதான் நமக்குள்ள எதுவும் நடக்கல்லயே" என்று கூறி அவள் கிளம்ப தயாரானாள். இவளின் செயல்கள் மூலம் கோபம் கொண்டவன் அவளை மூர்க்கத்தனமாக கட்டிப்பிடித்து அவளை முத்தமிட பார்க்க ரூபினி அவனை ஓங்கி ஒரு அரை விட்டாள்.
" உன் அக்கா, உன் முன்னாள் காதலிகிட்ட வேணும்னா அவங்க மனசு நொந்து போற மாதிரி நடந்துக்க. என்கிட்ட இந்த வேலை எல்லாம் வெச்சிக்காத. அப்புறம் உன் காதலி சொன்னமாதிரி நானும் உன்ன கேவலமா பேச வேண்டி வரும். நான் உன்ன கேவலமா பேசினேன்னா உன்னால ஆயுளுக்கும் அதை மறக்க முடியாது. நம்மல ஒரு வேசி திட்டிட்டாலேன்னு உன் மனசு அதை நினைக்கும் போதெல்லாம் வலிக்கும்" என்று கூற மீனாக்ஷியும், ராதவும் பேசும் போது வராத கண்ணீர் ரூபினி பேசும் போது வந்தது.
" ரூபினி, இன்னைக்கு என்கூடவே இருக்கியா?" என்று அவன் பரிதாபமாக கேட்க அவனின் கண்களில் தெரிந்த ஏக்கத்தை பார்த்தவள்
" சரி ஒரு வேசியா இல்லாம ஒரு சக மனுசியா வேணும்னா இருக்குறேன்" என்றாள்.
அவளை தனது படுக்கையில் இருத்தியவன் அவளின் அனுமதி கூட கேட்காமல் அவளின் இடையை கட்டிக்கொண்டு விசும்ப ஆரம்பித்தான்.
" எனக்கும் உன்ன ஒரு சக மனுசியாத்தான் ரூபினி பார்க்கனும்னு ஆசை. இந்த ஆம்பிளைங்க மனசு இருக்கே ரொம்ப மோசமானது. ஒரு ஆணுக்கு மிகப்பெரிய வரம் ஒரு பெண் கொடுக்குற உடல் சுகம். அது வெறும் உடல் சுகத்துக்கான ஒரு விசயம் இல்ல. ஒரு ஆணோட கவலை, கஷ்டம், மனப்பாரம் இது எல்லாத்தையும் இறக்கி வைக்கிறதுக்கு கடவுளால கொடுக்கப்பட்ட ஒரு வரம்.
பொண்ணுங்க கேட்கலாம், ஒரு ஆண் ஒரு பொண்ணு கூட பழகுறது செக்ஸ்ஸூக்காகத்தானா என்று. நான் அப்படி சொல்ல வரல்ல. ஒரு பையன் தன் வாழ்க்கையில் அம்மா, அக்கா, காதலி, தோழிகள் இப்படின்னு பழகிட்டு திடீரென்று எல்லோரும் அவன விட்டு போனா அவன் உலகமே இருண்டு போயிடும். ஒரு பெண்ணால அவளோட வாழ்க்கையில ஒரு ஆண் இல்லாம வாழ முடியும். ஆனா ஒரு ஆணால அது கண்டிப்பா முடியாது.
அம்மா, அக்கா, காதலி கிட்ட அன்பா உரிமையோட பழகினவன் ஒருத்தங்கிட்ட அந்த பொண்ணுங்க எல்லோரும் அவன விட்டு போனா அவன் பாலைவனத்துல தண்ணீருக்காக ஏங்கும் மிருகம் போக ஆகிடுவேன். அந்த நேரத்துல தண்ணீருன்னு யாரு எதை கொடுத்தாலும் அவன் குடிச்சிடுவான். இங்கதான் பல ஆண்களோட வாழ்க்கை திசைமாறி போயிடுது.
எனக்கு எங்கக்கா, மீனாக்ஷின்னா ரொம்ப உயிர். எங்கக்காக்கு நான்னு சொன்னா ரொம்ப பிடிக்கும். எங்கம்மா எனக்கு பத்து வயசா இருக்கும் போது இறந்துட்டாங்க. அன்னையில இருந்து எனக்கு எல்லாமே எங்கக்காதான். ஆனா நான் செய்யாத ஒரு தவறுக்காக என் வாழ்க்கையில இருந்த எல்லா பொண்ணுங்களும் என்ன விட்டு போயிட்டாங்க.
அந்த நேரத்துல எனக்கு சூசைட் பண்ணிக்கனும்னு தோனிச்சி. ஆனா நான் செத்ததுக்கு அப்புறம் என்மேல எந்த குற்றமும் இல்லைன்னு தெரிஞ்சா எங்கக்கா பைத்தியம் ஆகிடுவாங்கன்னு தெரியும். அந்த ஒரே ஒரு காரணத்துக்காகத்தான் நான் சாகாம இருக்கேன்.
எனக்கு பைத்தியம் பிடிக்காம இருக்க நான் தேர்வு செய்த்து உன்ன. ஐ மீன் ஒரு பொண்ணு. மாசம் ஒரு பொண்ணுகிட்ட போக எனக்கு பிடிக்கல. முதன் முதலா உன்கிட்ட வந்தப்போவே தெரிஞ்சது, நீ ஒரு சூழ்நிலை கைதின்னு. எல்லோருக்கும் அவங்களோட செயல்கள்ள அவங்க அவங்க பார்வையில ஒரு காரணம் இருக்கும். ஆனா அது வெளியில இருந்து பார்க்குறவங்களுக்கு தவறா தெரியும். அன்னைக்கு நீ ஏன் இப்படி ஆனேன்னு சொன்னதுக்கான காரணங்கள என்னால ஏத்துக்க முடியல. இப்போ நான் உன்கிட்ட சொல்ற காரணங்கள் உனக்கு தவறா தெரியலாம். அது அவங்க அவங்க பார்வைய பொறுத்தது" என்று கூறி சிறிது இடைவெளி விட்டுக்கொண்டான்.
ரூபினியால் ஆச்சரியத்தை அடக்க முடியவில்லை. ஒரு மனோதத்துவ டாக்டரிடம் சென்றது போல ஒரு உணர்வு அவளுக்கு ஏற்பட்டது. எதை கேட்டாலும் அமைதியாக இருப்பவன் இவ்வளவு எதார்த்தமாக பேச ரூபினியால் தனது ஆர்வத்தை அடக்க முடியாமல்
" நீங்க என்ன படிச்சிருக்கீங்க?" என்று கேட்க
"நான் இரண்டு வருசம் டாக்டருக்கு படிச்சேன்" என்று கூற அவள் கேள்வியாக
" படிச்சேன்னா? என்ன அர்த்தம்"
" இரண்டு வருசம் மட்டும்தான் படிச்சேன். மீதி படிக்கல" என்று கூற அவளுக்கு புரிந்தது அந்த நேரத்தில்தான் அவன் வாழ்க்கையில் ஏதோ ஒன்று நடந்திருக்கின்றது என்று.
அவளின் இடையை அணைத்திருந்தவனை சற்று எழுப்பியவள் தனது உடலை சிறிது சரி செய்து நேராக உட்கார்ந்தாள்.
" க்ரிஷ் உங்க வாழ்க்கையில அப்படி என்ன நடந்திச்சி? அன்னைக்கு நீங்க இன்னைக்கு எல்லாமே சொல்ரீங்கன்னு சொன்னீங்க, அதனாலதான் கேட்குறேன்" என்றாள். அவளை விட்டு விலகிய க்ரிஷ்
" எல்லோரும் பொதுவா சொல்வாங்கள்ள, நமக்கு ஏதும் ப்ராப்ளம் வந்திச்சின்னா நம்ம அத வீட்டுல இருக்குறவங்க கிட்டதான் முதல்ல செயார் பண்ணிக்கனும். வெளி ஆளுங்ககிட்ட செயார் பண்ணிக்க கூடாதுன்னு. ஆனா என்னோட வாழ்க்கையில நடந்தது அதுல இருந்து கொஞ்சம் மாறுபட்டது. நம்ம வீட்டுல இருக்குற ஒருத்தங்க தவறு செஞ்சிட்டாங்க அப்படின்னு யாரும் வெளியாள் சொன்னா அதை அந்த வீட்டுல இருக்குறங்க நம்ப கூடாது. வெளி ஆள் சொல்ரத நம்புறதுக்கு முன்னாடி குற்றம் சுமத்தப்பட்ட ஆளுகிட்ட என்ன நடந்திச்சின்னு விசாரிக்கனும். அதை விட்டுட்டு ஐந்து வருசம் முன்னாடி நீ இப்படி ஒரு தப்ப பண்ண, அதனால இந்த தப்பையும் நீ பண்ணியிருப்பேன்னு முடிவு பண்றது அந்த குடும்பத்தோட மொத்த சந்தோசத்தையும் அழிச்சிடும். அப்படி பழைய தவறையும் புது குற்றச்சாட்டையும் சேர்த்துப்பார்க்காம குற்றம் சுமத்தப்பட்ட ஆளுகிட்ட என்ன நடந்ததுன்னு கேட்கும் போது, அந்த நபர் எப்போமே தன் வாழ்க்கையில எது நடந்தாலும் முதல்ல அவங்க வீட்டுலதான் செயார் பண்ணிக்குவாங்க. இதுக்கு மாற்றமா வீட்டுல உள்ளவங்க ரியாக்ட் பண்ணும் போதுதான் நமக்கு வீட்டுல சொல்லி என்னாக போகுது அப்படி என்ற எண்ணம் வந்திடுது" என்று கூறி தன்னை சிறிய நேரம் ஆசுவாசப்படுத்திக்கொண்டவன்
" எங்க வீட்டுல நான் செய்யாத ஒரு தவற நாந்தான் செஞ்சேன்னு என் மொத்த குடும்பமும் நம்பிடிச்சி. யாரு நம்பியிருந்தாலும் எனக்கு கவலை இல்லை. மீனாக்ஷி என்ன அப்படி நினைச்சது கூட கவலையில்லை. வாழ்க்கையில மீனாக்ஷி இல்லைன்னா மஹாலக்ஷ்மி. ஆனா எங்க அக்கா என்ன நம்பல. அவங்க பார்த்து பார்த்து வளர்த்த பையன் நான். என்ன எப்படி அவங்க நம்பாம போகலாம். அவங்க வளர்ப்ப எப்படி சந்தேகப்படலாம். டீன் ஏஜ்ல எல்லா பசங்களும் பண்ற தப்ப நான் பண்ணேன்னதுக்காக ஒரு பொண்ணோட வாழ்க்கைய அழிக்க பார்ப்பேன்னு எப்படி நினைக்கலாம்?" என்று பிதற்றியவனுக்கு அப்போதுதான் உரைத்தது ராதா மயக்கமாகி ஹாஸ்பிடல் சென்றது.
-----------
ஹாய் வட்டீஸ்,
இந்த கதை எழுத ஆரம்பித்த போது பல யோசனைகள். கதையின் கரு வாசகர்களுக்கு பிடிக்குமா இல்லையா? என்று. ஆனால் பத்து வாசகர்கள் தொடர்ச்சியாக என் கதையை படிப்பது மிகவும் சந்தோசமாக உள்ளது. ஆரம்பத்தில் எழுத்துப்பிழைகள் அதிகம் விட்ட நான் இப்போது என்னுடைய வாசகர்களின் உதவியுடன் சரி செய்ய முயற்சிக்கின்றேன். கதையில் எங்கும் தவறுகள் தோன்றினாள் உடனே சுட்டிக்காட்டவும். ஒரு விலைமகளும் இந்த கதையில் முக்கிய பாத்திரமாக இருப்பதால், ஏதும் காட்சிகள் முகம் சுழிக்கும் படி இருந்தாள் கண்டிப்பாக கூறவும். மாற்றிக்கொள்வேன்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro