1
ஆம் அவளேதான். வில் போன்ற திருத்தம் செய்யப்பட்ட புருவங்கள், நீவி விடப்பட்ட கண் இமைகள், அங்குமிங்கும் அசைந்தாடி காண்பவரை வசீகரிக்கும் நீல விழி. காதலிக்கும் நாட்களில் தன் கண்களாலும் கைகளாலும் தொட்டு விளையாடிய அதே முகம். ஆனால் கைகளில் இப்போது ஒரு குழந்தை. அதற்கு சாட்சியாக அவளின் உடல் வணப்பில் பல மாற்றங்கள்.
நான் காதலிக்கும் போது இருந்தவளின் அதே முகம், ஆனால் உடலால் அவள் அல்ல. ஒரு கணம்தான். ஒரே ஒரு கணம் மட்டுமே அவளை ரசித்தேன். அந்த ஒரு கணத்திற்குள் என் ரசனை எல்லாம் முடிந்துவிட்டது. அதற்குள் என் மூளையில் ஒரு அலாரம் அடித்தது. ஆம். அவள் என் எதிரி. என் வாழ்க்கையை சீரழித்தவள். தூக்குத் தண்டனை கைதிக்கு கூட தனது கடைசி ஆசையை கேட்பார்கள். ஆனால் என் விடயத்தில் அது கூட நடக்கவில்லை. அம்மா, அப்பா,அக்கா, நண்பர்கள், படிப்பு என எல்லாவற்றையும் நான் இழக்க காரணமானவள். என் உயிர் நண்பனை நான் இழக்க காரணமனாவள்.
எவளை நான் என் வாழ்வில் காண கூடாது என்று நினைத்தேனோ, அவளையே இன்று என் கண் எதிரில் காண்பேன் என்று சற்றும் நினைக்கவில்லை. இந்த இரண்டு வருடத்தில் நான் இழந்தது மட்டும் ஏராளம். அது எல்லாவற்றிட்கும் ஒரே காராணம், நான் ஆசை ஆசையாக காதலித்த என் உயிர்கொண்ட காதலி. ஆம், உயிர் கொண்டவள்தான். என் உயிரை கொன்றுவிட்டு என் உடலை மட்டும் என்னிடம் விட்டு சென்றுவிட்டாள்.
இன்று என்னால் எதுவும் செய்ய முடியாது. இன்றைய நாள் இனி அவ்வளவுதான் முடிந்து விட்டது. வேலைக்கு சேர்ந்து பதினெட்டு மாதங்களில் நான் எடுக்க போகும் முதல் விடுமுறை.
" I am sick. Please accept my leave today" என்று ஒரு குறுஞ்செய்தியை தனது மேலாளருக்கு அனுப்ப மறுபுறம் இருந்து உடனே
" Get well soon my dear. Take care your self. Take two more days if you need" என்று பதில் வந்தது. எந்த ஆபீசிலும் இல்லாத அளவுக்கு இரண்டு நாள் அதிகமாக லீவ் எடுக்கும்படி கூறும் அளவுக்கு இவன் யார்? இவனுக்கும் அவளுக்கும் என்ன தொடர்பு? இவன் காதல் ஜெயித்ததா? அவள் காதல் என்னானது?
ஐந்து வருடம் முன்பு...
" மச்சான் இன்னைகு புது டிக்கட் எல்லாம் வரப்போகுது. நம்ம என்ன பண்ண போறோம். ஆளுக்கொரு டிக்கட்ட தள்ளிக்கிட்டு தனியா போய் உட்கார்றோம். அப்புறமா அத்தை, மாமா, மச்சான், கொளுந்தியா இவங்கள பத்தி எல்லாம் கரக்டா விசாரிச்சிட்டு எல்லோரும் இன்னைக்கு நைட் ஹாஸ்டல்ல ரிப்போர்ட் சப்மிட் பண்ணனும். எவன் ஒளுங்கா ரிப்போர்ட்ட சப்மிட் பண்ணலயோ அவன் தான் இந்த மாசத்துக்கான ஸ்பான்சர். ஆனா முக்கியமான ஒரு விசயம். எந்த பொண்ணும் அழவோ அல்லது முகம் சுழிக்கிற மாதிரியோ நீங்க எந்த கேள்வியும் கேட்க கூடாது. நீங்க டேட்டா கலக்ட் பண்ண போற பொண்ணு உங்களுக்கு தங்கச்சி மாதிரி" என்று கூற அந்த ஐந்து பேரு கொண்ட கூட்டத்தில் ஒருவனை தவிற மற்ற எல்லோருக்கும் முகத்தில் கிலி பறவியது.
கொஞ்சமும் அசராமல் இருந்தவன் ஷக்தி. தன் கையில் கட்டியிருந்த ஆப்பிள் வாட்ச்சில் டைம்மை பார்த்தவன் அலட்சியமாக மற்றவர்களிடம்
"வேணும்னா ஒன்னு பண்ணிக்கலாம். நானே உங்க எல்லோருக்கும் ஸ்பான்சர் பண்றேன். நீங்க எல்லோரும் போய் டேட்டா கலக்ட் பண்ற வேறய பாருங்க" என்று கூற அவர்கள் கூட்டத்தில் இருந்த ஒரு முந்திரி கொட்டை
"அதெல்லாம் முடியாது. இன்னைக்கு நீயும் எங்க கூட சேர்ந்து இந்த டாஸ்க்ல ஜாயின் பண்ற" என்று கூறி அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தான்.
கல்லூரி முதல் நாள். புது மாணவர்கள் வர ஆரம்பித்தனர். இவர்களின் திட்டப்படி மற்ற நால்வரும் ஆளுக்கொரு அழகிய பெண்களை ராகிங்க் என்ற பெயரில் அழைத்து செல்ல ஷக்தி மட்டும் யாரும் மாட்டாமல் யோசித்துக் கொண்டிருந்தான்.
"Excuse me. ஃபர்ஸ்ட் இயர் மெடிக்கல் ஸ்டூடண்ட் ரெஜிஸ்ட்ரேசன் எங்க நடக்குதுன்னு தெரியுமா?" என்று கேட்க ஷக்தி அந்த பொண்ணை நோக்கினான்.
வில் போன்ற திருத்தம் செய்யப்பட்ட புருவங்கள், நீவி விடப்பட்ட கண் இமைகள், அங்குமிங்கும் அசைந்தாடி காண்பவரை வசீகரிக்கும் நீல விழி. தன் உடலுக்கு பொருத்தமாக ஜீன்ஸ் மற்றும் குர்தி அணிந்திருந்தாள். ஷக்திக்கு தனக்கு ஒருத்தி மாட்டிவிட்டாள் என்ற சந்தோசத்தில்
"நான் தேர்ட் இயர் மெடிக்கல் ஸ்டூடண்ட்தான். வாங்க, நானே உங்கள கூட்டி போறேன்" என்று கூறியவன் அவளை அழைத்து சென்றான். போகும் வழியில் அவளுடம் எதுவுமே பேசவில்லை. அவளை ஸ்டூடன்ட் ரெஜிஸ்ட்றேசன் மற்றும் ஹாஸ்டலுக்கு தேவையான ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் முடித்த சமயம் அவனின் ஐபோன் சினுங்கியது.
அவனது போனை பார்த்து முறுவளித்தவன் அவளை நோக்கி
" ஒரு செக்கன் வெய்ட் பண்ணுங்க" என்றவன் காலை அட்டெண்ட் செய்தான்.
" டேய் உன் ரெஜிஸ்ட்றேசன் எல்லாம் முடிஞ்சதா"
"சரி நீ கேண்டீனுக்கு வந்துடு. நம்ம சாப்பிட்டுட்டு மீதிய பேசில்லாம். எவனாச்சும் ஏதும் சொன்னான்னா 'ஷக்தி தம்பி' அப்படின்னு மட்டும் சொல்லு" என்று கெத்தாக கூறியவன் அவளை பார்த்து
"நான் ஷக்தி, நீங்க....." என்று கேட்க அவள் புன்னகையுடன்
"மீனாக்ஷி" என்றாள்.
" சரி மீனாக்ஷி, நான் கேண்டீன் போறேன். என் தம்பி வர்றான். வி வில் சீ லேட்டர்" என்று கூறினான்.
"எனக்கும் லேசா பசிக்குது. காலையில இருந்து எதுவுமே சாப்பிடல. எனக்கும் கேண்டீன் இருக்குற இடத்த காட்டினீங்கன்னா வசதியா இருக்கும்" என்று கூற அவன் பதிலுக்கு சிரித்து அவளை தன்னுடன் அழைத்து சென்றான்.
இவர்கள் கேண்டீனுக்கு நுழைந்த நேரம் ஷக்தி ஒருவனை பார்த்து
"டேய் க்ரிஷ்" என்று கூற, அங்குமுங்கும் தன் கண்களால் ஷக்தியை தேடிக்கொண்டிருந்தவன் அவனின் அழைப்பில் உதட்டில் ஒரு புன்னகையுடன் அவனிடம் போய் சேர்ந்தான்.
ஷக்தி அருகில் இருந்த பெண்ணை பார்த்தவன் ஒரு கணம் குழம்பினான். சரி வந்ததும்தான் வந்தோம் சும்மா ஒரு பிட்ட போடலாம் என்று எண்ணியவன்
"ஹாய் அண்ணா, ஹாய் அண்ணி" என்று கூற மீனாக்ஷி திரு திருவென முழித்தாள். உடனே ஷக்தி
"டேய் எரும, அதென்னடா அண்ணா, உன்ன விட இரண்டு வருசம்தான் பெரியவன். சோ ஷக்தின்னே கூப்பிடு. அப்புறம் அதென்ன அண்ணி? எருமை. இந்த பொண்ணு உன் பேட்ச்தான். வழி தெரியாம தடுமாறிக்கிட்டு இருந்தா. நாந்தான் இவங்கள கூட்டிட்டு வந்தேன். மீனாக்ஷி திஸ் ஈஸ் மை ப்ரதர் க்ரிஷ். கொஞ்சம் இல்ல ரொம்ப வாலு" என்று கூற அவளும் தன் வகுப்பை சேர்ந்த ஒருவனை சந்தித்த மகிழ்ச்சியில் க்ரிஷ்ஷை பார்த்து சினேகமாக புன்னகைத்தாள்.
மூவரும் சாப்பிட்டு முடித்ததும் ஷக்தியே எல்லோருக்கும் பணம் கட்ட செல்ல மீனாக்ஷி தனது உணவிற்கான பில்லை அவளே கொடுப்பதாக கூறினாள். ஆனாலும் அவளின் வேண்டுகோளை ஏற்க மறுத்தவன்
" சீ மிஸ் மீனாக்ஷி, இன்னைக்கு என்னோட டிரீட். ஐ மீன் உங்க சீனியரோட டிரீட். சோ ஜூனியரா நீங்க இரண்டு பேரும் நல்ல பிள்ளை மாதிரி இருங்க. அப்புறம் இவன் கொஞ்சம் வாலு. க்லாஸ்ல ஏதும் பண்ணான்னா நீதான் என்கிட்ட இவன பத்தி போட்டுக்கொடுக்கனும். அதுக்கு வீக்லி ஒருவாட்டி உனக்கு சாப்பாடு வாங்கி தருவேன்" என்று ஜாலியாக பேச அவனின் பேச்சு மீனாக்ஷிக்கு மிகவும் பிடித்தது. தன் அண்ணனா ஷக்தி அவனை ஒரு அழகிய பெண் முன் கலாய்ப்பதை விரும்பாத க்ரிஷ்
"ஆமா மீனாக்ஷி.. அப்படியே நான் என்ன சாப்பிடுறேன், எந்தெந்த க்லாஸ் எல்லாம் கட் அடிக்கிறேன்னும் சொல்லிடு சரியா. என்னாங்கடா இது. ஊர்ல அப்பாவோட காலேஜ்ல சேர்ந்தா ப்ரைவேசி இருக்காதுன்னு வேற காலேஜ்ல சேரனும்னு சொன்னா அவரு ' உன்ன தனியாலாம் அனுப்ப முடியாது. வேணும்னா ஷக்தி படிக்கிற காலேஜ்ல சேர்ந்துக்கோனு' சொன்ன ஒரே ஒரு வார்த்தைக்காக இங்க வந்து சேர்ந்தா... இங்க வந்த பிறகுதானே தெரியுது. நான் இங்க வர்றதுக்கு முன்னாடியே என்ன வேவு பார்க்க ஒரு பொண்ண செட் பண்ணிட்டேன்னு. போடா, நான் எங்கப்பா காலேஜ்ஜுக்கே போறேன்" என்று கூற ஷக்தி அவன் தலையில் ஒரு செல்ல குட்டு வைத்தான்.
புது கதை அறிமுகம்..
Nivithajeni4 இன் Happy Death Day சூப்பரா இருக்கு. எனக்கு மிகவும் பிடித்த ஒரு த்ரில்லர் கதை. போய் படிச்சிடுங்க மக்களே.
புதுகதைகள் இருந்தா லிங்க் அனுப்புங்க.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro