கேள்வி நேரம்
ஹாய் வட்டீஸ்,
இந்த கதை பற்றி ஒரு சில வார்த்தைகள் கூற ஆசைப்படுகிறேன். இது ஒரு சாதாரண மானிடர்கள் பற்றிய கதை. நமது அடுத்த வீடு, எதிர்த்த வீடு, நாம் படித்த பாடசாலை, காலேஜில் இவை எல்லாம் பார்த்திருப்போம். முடிந்தவரை சினிமாத்தனம் இல்லாமல் காட்ட முயற்சி செய்கின்றேன். ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளேன். காரணம் இந்த கதையில் யாருமே perfect இல்லை. அதுதான் எனக்கு வேண்டும்.
கதையின் 27வது அப்டேட் இப்போதுதான் எழுதி முடித்தேன்.
உடனே உங்க எல்லோரிடமும் கேள்வி நேரத்துக்காக வந்துவிட்டேன். கதையில் இருக்கும் கதாபாத்திரங்களிடம் உங்களுக்கு ஏதும் கேள்வி இருந்தால் கேளுங்கள். அந்த கதாபாத்திரத்தின் பார்வையில் இருந்து பதில் கூற முயற்சிக்கின்றேன்.
இல்லை கேள்வி எழுத்தாளனான என் மீதுதான் என்றால் கூட பரவாயில்லை. I am waiting.
கேள்வி கேட்க எந்த வரைமுறையும் இல்லை. எப்படி வேண்டுமானாலும் கேட்கலாம். ஏன் என்ன திட்டி கூட கேட்கலாம். நான் தயார் பதிலளிக்க. என் கதாபாத்திரங்களும் தயார்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro