1
செந்தனல் சத்ரியன் - 1
ரம்பம் போல் அறுத்திடும் வலி கழுத்தை அறுக்கும் அளவு வெறியை தூண்டி விட... தன் முன் பயத்தில் வெளிரி கொண்டு பாதி உடல் இரத்த சாயத்தை பூசி கண்கள் மருண்டு விழிக்க நின்ற அப்பெண்ணவளின் கழுத்தை இரத்த வெறியுடன் பிடித்த அவன் அவள் கழுத்தை கடிக்க முன்னேறிய அடுத்த நொடி அவன் தலையை பொத்து கொண்டு வந்து நின்றது ஒரு கோடாரி...
அப்பெண்ணின் பின் உடல் விரைத்து பெருமூச்சறித்தவாறு ஒருவன் நின்றிருத்தான்... வெளிரி நின்றவளின் கரத்தை கெட்டியாய் பிடித்து அவள் முன் நின்றவனின் நெஞ்சில் உதைத்து கீழே தள்ளி விட்டவன் அடுத்த நொடி அவளை இழுத்து கொண்டு அவன் வந்த வழியே ஓடடினான்.. கீழே விழுந்த அவன் வெறி பிடித்து எழுந்து அவர்களை பின் தொடர்ந்து ஓடி வந்தான்...
இவர்கள் இருவரும் ஓடி சென்று ஒரு அறையுள் நுழைந்து கதவை மூடி கொள்ள... வெளியில் நின்றவன் வேகவேகமாய் அக்கதவை தள்ள... இவர்கள் இருவரும் அக்கதவை அப்புறம் தள்ள.. திடீரென அவர்கள் காதையும் கிளித்து கொண்டு கேட்டது சீரி பாய்ந்த ஒரு தோட்டாவின் சத்தம்...
இவ்விருவரும் அதிர்ந்து போய் கதவை திறந்து வெளியே வர... இவர்களை துரத்தி வந்தவன் நெற்றி பொட்டில் ஒரு ஓட்டையுடன் கண்கள் திறந்த நிலையிலே மூச்சற்று கீழே கிடந்தான்...
" என்ன காரியம் பன்னீர்க்க... ஆர் யு மட்... இவனும் ஒரு உயிர் தான்... அவன் அந்த நோயால தான் பாதிக்கப்பற்றுக்கான் " என செத்து கிடந்தவனின் நாடியை பிடித்து உண்மை உணர்ந்ததும் மனதின் வேதனையில் தன் குணத்தையும் மீறி கொண்டு காட்டு கத்து கத்தினான் வித்வான்...
அவன் அருகில் இன்னும் பயம் நீங்காமல் தன் பூ உடல் அதிர... சற்று அழுகையுடனும் அதிர்ச்சியுடனும் நின்றிருந்தாள் அவள் இருவத்திமூன்று வயது பாவை அமைரா
அவர்களின் முன் அலட்ச்சியமான பார்வையுடன் இயல்பிலே உண்டான இறுக்கத்துடன் உதட்டோரம் வலிந்த இரத்தத்தை துடைத்தவாறு கீழ் விழுந்தவனை சுட்டு தள்ளியதன் அடையாளமாய் ஒரு துப்பாக்கியுடன் நின்றான் அகரன்...
வித்வான் : உன்ட்ட தான் கேக்குறேன்... கொஞ்சம் கூட அறிவில்லையா உனக்கு... என அகரனை நோக்கி சீரினான்..
அமைரா ஒரு உயிரை எப்படி கொன்றாய் என்பதை போல் அகரனை நோக்கினாள்...
அகரன் : இல்லன்னே வச்சுக்கோ... எனக்கு கவலை இல்ல... இன்னும் கொஞ்ச நேரத்துல இந்த சத்தத்துலையே அதுங்க வந்துரும்... உயிர் மேல பயம் இருந்தா வாங்க... இல்லனா கெடந்து எக்கேடோ கெட்டு போங்க... என ஒரு கவலையுமின்றி கூறியவன் அவன் வந்த வழியில் திரும்பி பார்க்காமல் அந்த கன்னை முதுகில் சொருகி கொண்டு சென்றான்...
வித்வான் அவனை தன்னால் முடிந்த மட்டும் முறைக்க... அப்போதே இவ்வளவு நேரமும் அகரனின் பின் நின்றிருந்த அந்த குட்டி பெண் அம்மா என கத்தி கொண்டே ஓடி வந்து அமைராவை கட்டி பிடித்து கொண்டாள்...
அவள் நம் அமைராவின் இரண்டரை வயது மகள்... அவளை அள்ளி அணைத்து கொண்ட அமைரா அவள் முகம் முழுவதும் ஏக்கம் தீற இதழ் பதித்தாள்... அவளை இரு கண்கள் அவளறியாது பார்த்ததை இவள் கவனிக்க தவற... அழுதவாறே அவள் அணைப்பிற்குள் அடங்கினாள் அவள் மகள் சம்யுக்ரா
வித்வான் : ஹ்க்கும் போலாமா... இனிமேலும் இங்க இருக்குரது நமக்கு சேஃபில்ல... என அவளிடம் மென்மையாய் கூறியவனின் குரலில் கலைந்தவள் கண்ணீருடன் தலையசைத்து அவள் மகளை அணைத்தவாறு திரும்பி கூட பார்க்காமல் சென்றிருந்த அகரனின் வழியை பின் தொடர்ந்தாள்...
நேராக நடந்து சென்ற அகரன் அங்கு பல கட்டைகளையும் ஆணிகளையும் வைத்து அடைத்திருந்த ஒரு அறையை ஓரக்கண்ணால் பார்த்து கொண்டே கடந்து சென்றான்...
அவனது பார்வை அதில் படுவதை கண்ட அமைரா அதை பார்க்க திரும்பும் முன் சட்டென அகரன் ஒரு அறைக்குள் நுழைவதை கண்டு அக்கதவை கவனிக்க தவறி அவ்வறைக்குள் வித்வானுடன் நுழைந்தாள்...
அங்கு இவர்களை போலவே பயந்த பார்வையுடன் உடல் வேர்வையில் குளித்திருக்க சிலர் பதுங்கியிருந்தனர்... உள்ளே வந்த உடனே கதவை நன்கு அழுத்தமாய் அழுத்தி தாழ்ப்பாளிட்ட வித்வான் அவர்கள் அருகிலே நின்ற ஒரு இளைஞனுடன் பல மேஜைகளையும் அலமாரிகளையும் இழுத்து போட்டு அந்த கதவை அடைத்து விட்டு திரும்பினான்..
அந்த அறையில் இருந்த சிலரும் எழுந்து வந்தனர்... இம்மூவரையும் சேர்த்து ஒரு ஆறு பேர் இருந்தனர்...
வித்வானுக்கு உதவிய அந்த இளைஞன் அகரனின் நண்பன் நவீனசஞ்ஜீவ்... ஐம்பது வயது மதிக்கத்தக்க வித்வானின் மாமா பாண்டிய பிரகாஷ் .. அமைராவின் பக்கத்து வீட்டு பெண் நிர்மலா...
நவீன் : என்னாச்சு... கன் ஷாட் கேட்டுச்சு... என ஒரு சிறு பதட்டத்துடன் கேட்க...
அகரன் : ஒன்னும் இல்ல... ஒருத்தன் கடிக்க வந்தான்... அதான் சுட்டுட்டேன்... என அதை ஒரு பெரிய விஷயமாய் கூட எண்ணாமல் சாதாரணமாய் கூறியவனின் சட்டையை பிடித்த வித்வான்...
வித்வான் : உயிரோட அருமைய பத்தி தெரியுமா டா உனக்கு... இடியட்... அவனும் ஒரு உயிர் தான டா... என கத்தியவனை கண்டு தன் சட்டையை பிடித்ததிலே சூடேரிய அகரன் வாயை திறக்கும் முன்...
நிர்மலா : அதெல்லாம் அவருக்கிட்ட கேக்காதீங்க வித்வான்... உயிர்களோட வாழ்ந்துருந்தா தான அவருக்கு அருமை தெரியும்... என வித்வானின் கவனம் தன் புறம் வர வேண்டி இவள் அவனிடம் அகரனுக்கு எதிராய் பேச... அதை ஒரு பொருட்டாகவும் அந்த இருவர் மதிக்கவில்லை...
அகரன் : ஷட் தி *** அப்... நா சுடுவேன்... இல்ல கடிக்க கூட விடுவேன்... நீ என் கிட்ட கேக்க கூடாது...
வித்வான் : ஒரு உயிர கொல்ல நீ யாரு டா...
அகரன் : அத கேக்க நீ யாரு டா என இருவருள்ளும் கைகலப்பு அதிகமானது...
வித்வான் : ஹேய் இது என் கேபின்... உயிர மதிக்காத நீ இங்க இருக்க தேவையில்ல...
அகரன் : நா ஒன்னும் பிடிச்சு போய் இங்க இல்ல... வேற வழி இல்லாம தான் இங்க இருக்கேன்....
வித்வான் : நீ எதுக்கு டா இங்க இருக்கனும்... வெளிய போ... என இவன் தன் பொருமையிழந்து கத்த... தனது குணத்தையே மீறி நடந்து கொள்ளும் மருமகனை கண்டு
பாண்டியபிரகாஷ் : வித்வான்... என குரலுயர்த்தி அவனை அடக்கியவர்... அகரனின் புறம் திரும்பி அவன் காதிலே வாங்க மாட்டான் என தெரிந்தாலும் தன் பொருப்பை செய்தார்...
பாண்டியபிரக்காஷ் : தம்பி... கோவப்படாதீங்க... அவன் கோவப்பட்டதுக்கு மன்னிச்சிடுங்க...
அகரன் : இவனெல்லாம் மன்னிக்க எனக்கு ஒன்னும் அவ்ளோ நல்ல மனசு இல்ல.. என முகத்தில் அடித்ததை போல் பேசினான்...
பாண்டிய பிரக்காஷ் : நா சொல்ல வர்ரத தயவு செஞ்சு கேளுங்க... இங்க நடக்குரது சாதாரணது இல்ல... இது ரொம்ப டேன்ஜர்... நேத்து காலைல இங்க வந்தப்போ நாம ஐம்பது பேர் இருந்தோம்... இப்போ நாம ஏழு பேர் தான் இருக்கோம்... நம்ம கூட இருந்த நாப்பத்தி மூணு பேர்ல பாதி பேர் இறந்துட்டாங்க... மீதி பேர் அந்த நோயால பாதிக்கப்பட்டு அலைறாங்க... நம்மள பத்தி நம்ம அரசாங்கமே கவல படாம உள்ள வச்சே அடச்சிட்டாங்க... நமக்கு தப்பிக்கிர வாய்ப்பு ரொம்ப கம்மியா இருக்கு... நாம தான் இதுல ஜாக்கிரதையா இருக்கனும்... அந்த நோயால பாதிக்கப்பட்டவங்களோட பற்கள் நம்ம மேல பட்டாளே நமக்கு இன்ஃபெக்ட் ஆய்டும்... நாம ரொம்ப ஜாக்கிரதையா இருக்கனும்...
அகரன் : இப்போ அதுக்கு எங்கள என்ன செய்ய சொல்றீங்க... இதத்தான் உங்க மான்புமிகு அமையச்சர் ஜெய்ச்சார்யாவே மைக்ல சொல்லிட்டாரே... கூடவே உள்ள இருந்த அம்பது பேரும் செத்துட்டாங்கங்குர கூடுதல் தகவலோட... என எரிச்சலுடன் கூற...
பாண்டியபிரகாஷ் : தப்பா நெனைக்காதீக தம்பி... இது நம்ம ஊரு உலகத்துக்கே ரொம்ப ஆபத்து...
அகரன் : இருந்துட்டு போகுது எனக்கென்ன... என இவன் வெடுக்கென கேட்க...
நவீன் : அகரா... என்ற இவனின் குரலை கேட்டு அவனை முறைத்து பார்த்த அகரன் அமைதியாகினான்...
பாண்டியபிரகாஷ் : பரவால்ல தம்பி விடுங்க...
நவீன் : சாரி ஸர்... நீங்க சொல்லுங்க... என்ன பன்னனும்...
அகரன் : டேய் என்னாலலாம் ஒன்னும் செய்ய முடியாது...
நவீன் : நா உன் கிட்ட பேசல சும்மா இரு... நீங்க சொல்லுங்க ஸர்..
பாண்டியபிரகாஷ் : நாம இந்த இடத்த விட்டு எங்கையும் போகாம ஒன்னா ஜாக்கிரதையா இருக்கனும்...
அகரன் : ஐம் சாரி... என்னாலலாம் இங்க இருக்க முடியாது... வேணும்னா நீங்க உங்க மருமகனோட இந்த உலகத்த காப்பாத்த இங்கையே இருங்க... நா என் வழில தா போவேன்.. என கூறியவன் மற்றவர்கள் எதிர்பார்க்கும் முன்னே அந்த பொருட்களையெல்லாம் தள்ளி நகர்த்தி விட்டு கதவை திறந்து விட்டு வெளியே சென்று விட்டான்...
நவீன் : டேய் அகரா என கத்தவும்... அவனை சட்டென வித்வான் பிடித்து இழுத்து வாயை மூட... சரியாய் அகரன் நகரவும் அவன் பின் அந்த நோயால் பாதிக்கப்பட்ட ஒருவன் மெதுவாய் நகர்ந்து சென்றான்...
அதை கூட கண்டுக்கொள்ளாமல் அகரன் நகர... சம்யுவை நவீனிடம் கொடுத்து விட்டு வெளியே சென்ற அமைரா அகரனை நோக்கி அவள் காலை கீழே மெதுவாய் தட்டினாள்... அவளின் கால்களில் மெல்லிய ஓசையில் சினுங்கிய கொலுசொலியை கேட்டு வித்வான் அவளை நிமிர்ந்து பார்க்க அந்த சத்தத்தில் நின்ற அகரன் நிமிரவும் அவன் மீது வாயெல்லாம் இரத்தத்துடன் ஒருவன் பாய்ந்தான்....
ஒரு வாரம் முன்பு...
காலை மேகங்களின் இடையே புகுந்தெழுந்து நீர் மேகங்களின் இடையே மூக்குளித்து கதிர் அனுப்பி மெல்ல துயில் கலைந்து விண்ணுலகில் தன் அழகால் சஞ்சரித்தான் சூரியன்...
சூரியனின் உதயத்தால் கண்கள் கூசிட... தன் வசீகர புன்னகையுடன் எழுந்தாம் நம் நீலவித்வான்...
ஆறடி உயரம்... மாநிறம்.. இருவத்தியேழு வயது மருத்துவன்... என்றும் ஒரு வசீகர புன்னகையுடன் வளம் வரும் பேரழகன்... அன்பானவன்... அக்மார்க் பையன்... அவன் குழந்தையாய் இருந்த போதே அவனது பெற்றோர்கள் இன்னுயிர் நீத்திருந்தனர்... இருந்தும் அவனது மாமாவின் வீட்டில் ஒழுக்கத்துடன் வளர்ந்தவன்.. பெரியவர்களை மதிப்புடன் நடத்த கற்றறிந்தவன்.. பெண்களை நிமிர்ந்தும் பார்க்க மாட்டான்... குழந்தைகளிடம் ஒரு புன்னகையுடன் விளையாட்டு காட்டும் இன்னோறு குழந்தை... பணத்தை விடவும் உயிரே பெரிதென உயிருக்கே என்றும் முதலிடம் கொடுப்பவன்... பணம் சம்பாதிக்க என்றுமே பேராசை கொண்டிராதவன்... மருத்துவம் பார்த்து மனதை திருப்தி கொள்கிறான்... ஓடி ஓடி அனைவருக்கும் உதவுவான்.. ரோட்டோரம் விபத்துக்குள்ளாகியவர்களை அவன் காரிலே அழைத்து சென்றுள்ளான்.. கெட்ட பழக்கம் எதுவும் இல்லை.. பார்த்தாலே பெண்கள் அவன் பின் வரிசை கட்டி நின்றுவிடுவர்.. அவனது நல்ல குணத்திற்கு மயங்கி விழாத உயிர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்...
அது இந்தியாவிலே டாப் ஹண்ட்ரட் என போற்றப்படும் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரு பெரிய கட்டிடம்.. அதன் இரண்டாம் மாடியில் தனக்கான புதிய வாழ்கையை தொடங்க புது வீடாய் எடுத்து குட்டி பட்டாம்பூச்சி போல் துருதுருவென சிறகடித்து ஓடும் தன் மகள் சம்யுக்ராவை இரசித்தவாறு அங்கு காலடி பதித்தாள் அமைரா..
ஐந்தடி உயரம்.. மெலிந்த உடல்.. தோளுக்கும் மேல் போனீட்டைல் இடப்பட்ட கூந்தல்.. நெற்றியில் தவழும் குட்டி குட்டி முடி.. மௌனமாய் சிரிக்கும் கருங்கற்கண்டை போன்ற விழிகள்.. ரோஜாவை போன்ற மென்மையான புன்னகை பூசியிருக்கும் செவ்விதழ்.. என இயற்கையான அழகுடையவள்.. தனக்கு இருக்கும் அழகே போதுமானதென்றும் அலங்காரம் தேவயற்றதென்றவும் எண்ணும் வித்யாசமானவள்...
அதே அடுக்கு மாடி கட்டிடத்தின் ஆடம்பரமான அறை ஒன்றின் கதவை வேகமாய் திறந்து கொண்டு கோவத்துடன் உள்ளே நுழைந்து " இங்க என்ன டா செய்ற " என பால்கெனியை பார்த்து கத்தினான் நவீனசன்ஜீவ்..
ஆறடி உயரம் கொண்டவன்.. மாநிற ஆணழகன்.. கோவம் வந்தால் திட்டி விடுவான்... பாசக்காரன்.. துஷ்டனை கண்டால் தூர விலகு என்னும் பாலிசியை பிறந்தது முதல் ஃபாலோ செய்யும் சீரியசான பக்தன்.. நல்லொழுக்கம் உடையவன்..உதவி என்றால் நாப்பது கிலோமீட்டராய் இருந்தாலும் கடந்து சென்று போய் உதவுவான்.. என்றும் கனிவுடன் பழகுவன்... பன்பு மிக்கவன்.. பெண்களை கண்ணியமாய் நடத்துபவன்.. ஓரிரு வார்த்தைகளை தவிர்த்து தேவைக்கு மீறி பேச்சு கொடுக்க மாட்டான்.... வாய் ஓயாமல் கூட பேசுவான் ஆனால் அவன் பேச்சை தரை குறைவாய் பேசினால் மறந்தும் அப்பக்கம் கூட திரும்பி பார்க்க மாட்டான்... ஏன் டா அவன் மேல கோவமா என கேட்டால் ... " கோவமா சச்ச... அங்க இரத்தம் சிந்தி கெடக்குர அவன பாத்து நா என்ன பன்ன போறேன் .. அவன் எந்திரிச்சு வரும் போது ஹாஸ்பிட்டல்ல சேத்துட்டு போய்டுவேன் " என கூறிவிட்டு அவனை இகழ்வாய் பேசியவனை அவனே மருத்துவமனையில் சென்று விட்டுவிட்டு மொத்த செலவுக்கும் பண உதவியும் செய்து விட்டு வருவான்... அவ்வளவு பரந்த மனசு கொண்டவன்...
அவன் பார்த்து கொண்டிருந்த பால்கெனியில் கிடந்த பெரிய பெட்டில் வெற்று மார்பில் சூரிய தேவனால் ஏற்பட்ட வேர்வை முத்துக்கள் துளிர் விட வெயிலுக்கு நேராய் முகத்தில் கை வைத்து கொண்டு கால் மேல் கால் போட்ட படி சாய்ந்திருந்தான் அவன் அகரராவணன்..
ஆறடி உயரம்.. பெயருக்கு ஏற்ற இராவணனை போல் கம்பீரமும் தைரியமும் கொண்டவன்.. ஆளும் திறனில் மிஞ்ச வேறாரில்லை என நிரூபிப்பதை போலவே " எஸ் . ஏ . என் " என்ற ப்ரண்டை உலகு முழுவதும் நிலை நிறுத்தி வைத்திருப்பவன்... இளம் வயதிலே தொழில் உலகில் சிறந்த இடத்தை பிடித்த இருவத்தி எட்டு வயது வாலிபன்... எதையோ அழித்தே தீருவேன் என்பதை போல் கண்களில் ஒரு வெறியை என்றும் தேக்கி வைத்திருப்பவன்.. எவ்வளவு தான் கூலாய் இருந்தாலும் அவனது ஒரு அலட்சிய பார்வையில் பார்ப்போர் காண்டாகி விடுவான்... மறந்தும் சிரிக்க தெரியாதவன்.. யார் எவரென்று பார்க்காமல் காதில் இரத்தமே வரும் அளவு நேருக்கு நேராய் பேசி விடுவான்... பெண்களை கண்களாலே தூர தள்ளி நிறுத்துபவன்.. நவீனை ஒரு சொல் தவறாய் பேசினாலும் யார் எவரென்று பாராமல் அவன் கரத்தை பேச விடுவான்... அதனாலே என்னவோ நவீனின் செலவுகள் அடி வாங்கிடும் யார் யாருக்கோ மருத்துவமனையிலே களிகிறது... மரியாதையை எந்த கடையில் சென்று வாங்க வேண்டுமென கேட்டாலும் கேட்பான்.. ஈவு இரக்கமின்றி யார் செத்தால் எனக்கென்ன என்ற இரகம் இவன்...
அகரன் : ஏன் நா இங்க தா தூங்குவேன்னு உனக்கு தெரியாதா... என பெட்டிலிருந்து நிமிர்ந்தான்..
நவீன் : காலங்காத்தால உனக்கு இங்க என்ன வேலை... உன்ன கம்பெனிக்கு தானே வர சொன்னேன்...
அகரன் : ம்ச் விடிஞ்சும் விடியாம நொய் நொய்னு கத்திக்கிட்டு கெடக்காத.. போபோய் உக்காரு என்றவன் நவீனை சற்றும் மதிக்காமல் அருகிலிருந்த ஒரு சிக்ரெட்டை வாயில் வைத்து லைட்டரால் பற்ற வைத்தான்..
நவீனுக்கு ஏறிய கோவத்தில் அதை பிடுங்க அகரன் அவனை முறைத்து பார்த்தான்...
நவீன் : அகரா இப்டி எழுந்த உடனே சிக்ரெட் புடிக்கிறது நல்லதில்ல... என அதே காட்டமான பார்வையுடன் கூற அவன் கண்டு கொண்டால் தானே... நவீனின் கரத்திலிருந்த சிக்ரெட்டை நொடி கணக்கில் பிடுங்கி வாயில் வைத்து இழுத்திருந்தான்...
நவீன் : நீ போற போக்குக்கு நா டாக்டர் வித்வான் கிட்ட கூட்டிக்கிட்டு போக தான் போறேன் பாரு...
வித்வான் பெயரை கேட்டதும் அகரனுக்கு தலை முழுவதும் இரத்தம் சூடேறி நவீனை ஒரு அறை விட்டுவிட்டு அதே கோவத்துடன் சிக்ரெட்டை தூக்கி எறிந்து விட்டு சென்றான்...
கன்னத்தை தேய்த்தவாறு " யம்மா என்னா அறை... எனக்கும் ஒரு காலம் வரும் டா " என அகரனை முறைத்து கொண்டே பால்கெனி பக்கம் சென்றான்...
என்ன தான் கோவப்பட்டாலும் அவனுக்கு அகரன் மீது கொள்ளை அன்பு.. அகரன் தான் நவீனுக்கு எல்லாம்... நிச்சயம் தன் நண்பன் திருந்தி விடுவான் என நம்பி கொண்டிருக்கிறான்...
இப்படி மூன்று திசையிலிருந்து ஒரே புள்ளியில் சேரும் இவர்களின் வாழ்கையை சுற்றியே தமிழ்நாட்டின் அருகில் புதிய மாநிலமாய் அறிவிக்கப்பட்ட சமதரநகரத்தில் காலடி பதித்தது விதி...
அனல் வீசும்...
ஹலோஓஓஓஓ இதயங்களே... திஸ் ஈஸ் தீரா ஹியர்... ஹ்ம் என்ன புது ஸ்டோரி ... என்ன விஷயம் அப்டீன்னு கேட்டா ஷ்பெஷலா எதுவும் இல்ல... எனக்கு இன்னைக்கு தேடல் எழுத முடியல... வேற எதாவது பன்னனும்னு யோசிச்சிட்டு இருந்தேன்... இன்னைக்கு Kv யூடி படிச்ச பிறகு நம்ம வானுட்ட சஜெஷன் கேட்டனா.. அவ தான் ந்யூ ஸ்டோரி போட சொன்னா... ஹிஹிஹி க்ரெடிட்ஸ் கோஸ் டு ஹெர்...
ஓக்கே 13 இல்லாம ஏன் 15 த் ஸ்டோரி போற்றுக்க அப்டீன்னு கேட்டீங்கன்னா... ஹம்ம்ம்ம் 13த் ஸ்டோரி இன்னும் ப்ராசசிங்ல தான் இருக்கு... சோ இன்னோறு நாள் எப்போவாவது கண்டிப்பா போடுறேன்... ஹ்ம் நா 12த் ஸ்டோரி பப்லிஷ் பன்னப்போ நா எதிர்பார்த்த ரிசல்ட் இல்லன்னு தான் நா அதுக்கு மேல என் புதிய கதைகள பப்லிஷ் பன்றத நிறுத்திக்கிட்டேன்... இன்னைக்கு போட்டாச்சு.... சோ இந்த கதை எப்டி இருக்கப் போகுதுன்னு யோசிச்சு பாருங்க... இது ஒரு ஜாம்பி கதைன்னு யோசிச்சீங்கன்னா... ஹம்... அப்டியும் சொல்லலாம்... பட் இதுல வைரசோ இல்ல சம்த்திங் லைக் தட் எதுவும் கிடையாது... கொஞ்சம் டிஃப்ரென்ட் கான்சப்ட் எடுத்துர்க்கேன்... ஹிஸ்ற்றி அதாங்க... Fb அதெல்லாம் போக போக வரும்... நா முன்னாடி இருக்க... ஒன்னு இரெண்டு ஹான்... 8 கதைய முடிச்ச பிறகு இந்த கதைய பாப்போம் சரியா...
மனசாட்சி : இன்னும் மொத்தமா ஏழு கதைய முடிக்கல... அதுக்கு பதினாழாவது கதை...
ஹ்ம்ம்ம்ம் ஓக்கே இதயங்களே... அட்வான்ஸ் இனிய பொங்கல்... 😊 குட் நைட் .. டாட்டா
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro