பகுதி - 7
"வேலை வெட்டி இல்லாம சும்மா இருக்கிறவன் தான் இந்த வேலைலாம் பண்ணுவான்...
எத்தனைக் குப்பை விழும், அதைப் பார்த்துக்கவே ஒரு ஆளு வேணும்...
டைம் வேஸ்ட், வாட்டர் வேஸ்ட் , குப்பை மட்டும் தான் மிச்சம்!!! ஆமா இதெல்லாம் வெச்சு என்ன பண்ண போற? பூ வேணும்னா கடைல போய் வாங்கிக்கோ, அதுக்கு கூடவா உன்கிட்ட காசு இல்லை?" பேசிக் கொண்டே செல்பவனை கண்டிப்பா இவன் தனி டிசைன் என்று தான் எண்ணத் தோன்றியது சுதாவிற்கு.
இவனை எப்படி அப்பாக்கு பிடிச்சுது என்று யோசித்துக் கொண்டிருந்தவளைக் கலைத்தது அவனின் அடுத்த குற்றச் சாட்டு.
"உன் ரூம் தானே இது? ச்ச்ச என்ன இது இவ்ளோ மோசமா இருக்கு...குப்பைத் தொட்டி கூட நீட் அன்ட் க்ளீனா இருக்கும் உன் ரூமை கம்பேர் பண்ணுறப்போ" என்றவனை முறைத்தவள்
பேச வருவதற்குள்
"உடனே சுத்தமா இருந்தா லைப்ரரி, வீடுனா இப்படி கசகசனு தான் இருக்கணும்னு சினிமா டைலாக் பேச வேண்டியது " என்று கூறியவனைக் கண்டு அதிர்ந்தவள் அமைதியாகி விட்டாள்.
ஏனெனில் அவள் கூற வந்ததே அது தான்!!!
"இங்கே பாரு தீரா!" அவனின் அழைப்பில் வெளியே அதிர்ச்சியைக் காட்டினாலும் மனதினுள் ஆச்சரியமும் ,ஆனந்தமும் ஒருங்கே தோன்றியது என்பது தான் உண்மை. சுதா என்றே அழைக்கப்பட்டவளுக்கு இந்த தீரா என்ற அழைப்பு மிகவும் பிடித்துவிட்டது.
அவனைப் பார்க்காமல் கீழே குனிந்துக் கொண்டு அவன் அழைத்ததை நினைத்து புன்னகைத்துக் கொண்டிருந்தவளை தீரா என்ற அழைப்பு திடுக்கிட்டு பார்க்கச் செய்தது.
என்னவொரு ஆளுமை நிறைந்த குரல், குரலிலேயே அனைவரையும் பயப்படுத்தி விடுவான் போல என்று எண்ணியவள் மெதுவாக நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
" இங்கே பாரு தீரா! எனக்கு இப்படி செடி , பூ வளர்க்கிறது லாம் பிடிக்காது என் வீட்டுல அதெல்லாம் இருக்கவும் கூடாது! முக்கியமான ஒன்னு என் வீடு இப்படி சிங்குச்சா கலர்லையும் இருக்காது ! உன் வீட்டுல இருக்க மாதிரி அங்கே இருக்கலாம்னு நினைக்காத!! அது ஒன்னும் உன் வீடு இல்லை புரியுதா? சமையல் செய்யத் தெரியும்ல ?" என்றவன் அவள்
பதிலளிக்க இடம் தராமல்
"நல்லா சமைக்கணும், வீட்டு வேலை செய்யணும், அங்க இருக்கவங்களுக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்கணும் தென் முக்கியமான ஒன்னு காலைல நேரத்துல எழுந்திருக்கணும், வாரத்தில் மூன்று நாளாவது கோவிலுக்கு போகணும்...நான் சொன்னதுலாம் நியாபகம் வெச்சுக்கோ சன் டே மீட் பண்ணலாம் " என்றவன் வந்த வேலை முடிந்தது என்பது போல் கிளம்ப இவள் தான் அவன்
சொன்னதையெல்லாம் கேட்டு சிலையென நின்றிருந்தாள்.
ஹிட்லர் பேத்தியே
ஹிட்லர் பேத்தியே
காதல் ஒண்ணும் யுதர் இல்ல கொல்லாதே
லிங்கன் பேரனே
லிங்கன் பேரனே
தத்துவங்கள் பேசி பேசி கொல்லாதே
காஷ்மீர் நான்
நீ பாகிஸ்தான்
தீராது டிஷ்யூம் தான்
போ டி
போ டா
போ டி
போ டா
என்ற பாடல் தொலைக்காட்சியில்
ஓடிக் கொண்டிருக்க "தத்துவமா சொல்லுறான், ஆர்டர்ல போடுறான்"
"போடா போடா போடா" என்றவள் சோபாவில் தொப்பென்று விழ ,
"தீரா " என்ற அவனின் அழைப்பில் பதறி அடித்து எழுந்தாள்.
"உன் மொபைல் எங்கே? " என்றவன் சோபாவில் ஒரு ஓரத்தில் இருந்த மொபைலை எடுத்து ஆன் செய்ய அது பாஸ்வேர்ட் கேட்டது.
அவளிடம் மொபைலை நீட்ட புரியாது பார்த்தவளைக் கண்டு கடுப்பானவன்
"பாஸ்வேர்ட் போடு!! எனக்கு இப்படி பாஸ்வேர்ட் போடுறதுலாம் பிடிக்காத ஒன்று, மனசுல அழுக்கு இருக்கவங்க , தப்பு பண்ணுறவங்க தான் இப்படி பாஸ்வேர்ட் போடுவாங்க!!! இனிமேல் நீ" என்று அவன் ஆரம்பிப்பதற்குள் மொபைலை வேகமாக அவனிடமிருந்து பிடுங்கியவள் பாஸ்வேர்டை ரிமூவ் செய்து அவனிடம் கொடுக்க "குட்" என்றவனோ அவனின் நம்பரை அவள் மொபைலில் யுவி என்று சேவ் செய்து விட்டு கிளம்பினான்.
அவன் வந்து சென்றதிலிருந்து அவளால் சாதரணமாகவே இருக்க முடியவில்லை.
அழகான குருவி கூட்டிலிருந்து ஒரு சிங்கத்தின் குகைக்குள் மாட்டப் போகிறோம் என்பது மட்டும் தெளிவாக தெரிந்தது.
பார்வதி வந்தது கூட தெரியாமல் சோபாவில் காலை மடக்கி குறுக்கி படுத்துக் கொண்டிருந்தாள்.
"சுதா நீ சாப்பிடவே இல்லையா?
இதென்ன டி பார்சல் ? சாப்பாடா?
அதுவும் அப்படியே இருக்கு!! என்ன தான் பண்ணுற ? இத்தனை கேள்வி கேட்கிறேன், பதில் சொல்லுறாளா பாரு!! அடியே" எனத் திட்டிக் கொண்டே வந்தவர் அவள் முகத்தில் ஓடும் சிந்தனை ரேகைகளைக் கண்டு அமைதியானார்.
சிறிது நேரம் அப்படியே இருந்தவர் அவள் தோளைத் தொட சுயநினைவிற்கு வந்தவள் "வா பாரு !! எப்போ வந்த?" என்று கேட்க
"எத்தனை நேரம் உன்கிட்ட பேசிட்டு இருக்கேன், இவ்வளவு நேரம் கண்டுக்காம எப்போ வந்தேனு வேற கேட்குறியா? என்ன ஆச்சு? ஆர் யூ ஆல்ரைட்" என்றவரிடம் எதுவும் கூறாமல் அவரை அணைத்துக் கொண்டாள்.
"அம்மா உனக்கு ஏன் மா அவரைப் பிடிச்சுது?" என்று கேட்க...
அவள் முதுகை நீவி விட்டுக்கொண்டிருந்தவரோ "யாரை டா?" என்று கூறி அவள் முகத்தைத் தன்னை நோக்கித் திருப்ப
"அதான் அவர்!! எனக்கு பாத்திருக்கீங்களே" என்றவள் கீழே குனிந்துக் கொண்டாள்.
"யுவாவை சொல்லுறியா? அவன் ரொம்ப நல்ல பையன் , பொறுப்பானவன் , எந்த கெட்டப் பழக்கமும் இல்லை, உன்னை நல்லா பார்த்துப்பான் டா" என்றவரை நிமிர்ந்துப் பார்த்தவள்
"உங்களுக்கு எப்படி மா தோணுச்சு? என்னை அவர் நல்லா பார்த்துப்பாருனு? எனக்கும் அவருக்கும் ஒத்துப் போகும்னு?" ஒருவித இயலாமையுடன் கேட்டவளைப் பார்த்து சிரித்தவர் தனக்குத் தோன்றியதைக் கூற ஆரம்பித்தார்.
"என் சுதா செல்லத்தைப் பற்றி எனக்கு நல்லாவே தெரியும் !!! அவ வளர்ந்த குழந்தை , அந்த குழந்தையை நல்லா பார்த்துக்கணும் இல்லையா" என்றவர் அவள் கன்னத்தைக் கிள்ள
சிணுங்கிக் கொண்டே " பாருருரு நான் ஒன்னும் குழந்தை இல்லை ஐ யம் டிவென்டி டூ , ம்ம்ம்க்குகும்" என்று கூறி முகத்தை சுழித்து "யூ கன்டின்யூ பாரு" என்றவளுக்கோ முதலில் இருந்த இயலாமை மறைந்து ஆர்வம் பிறந்தது..
"உன்னை நாங்க ரொம்ப செல்லமா வளர்த்துட்டோம் டா! அதே மாதிரி நீ போற வீட்டுலையும் இருக்க முடியுமானு தெரியாதுல , இதுவே கிருஷ்ணா அண்ணா வீடுனா நல்லாவே தெரியும் அவங்க உன்னை நல்லா பார்த்துப்பாங்கனு!! ராதா அண்ணி மானுவைப் பார்த்துக்கிற மாதிரி தான் உன்னையும் பார்த்துப்பாங்க!!
உனக்கு இருபத்திரெண்டு ஆனாலும் ஒரு குடும்பத்தை நடத்துற அளவுக்கு பொறுப்பு வரல டா!! ஆனால் யுவாக்கிட்ட உனக்கும் சேத்து அவனே குடும்பத்தை பார்த்துக்குற அளவுக்கு பொறுப்பு இருக்கு...இதுதான் டா முக்கியம்!!
அப்போதான் வாழ்க்கை அழகா , அமைதியா போகும்.
நீ நம்ம வீட்டுல எப்படி எங்களை சந்தோஷமா சிரிக்க வெச்சுட்டு நல்லா பார்த்துக்கிறியோ அதே மாதிரி அவங்களையும் பார்த்துக்கோ!! உன்னை மருமகளா பார்க்காம மகள் மாதிரி தான் பார்த்துப்பாங்க... ஓகே வா" என்றவர் அவள் தலையை தடவி விட
"ஆனாலும் பாரு" என்று இழுத்தவளை
"ஓவரா யோசிக்காத டா... உனக்கு இரண்டு மாசம் டைம் இருக்கு! யுவா கூட பேசு கண்டிப்பா உனக்கு அவரைப் பிடிக்கும் " என்று கூறி சமையலறைக்குள் நுழைந்துவிட
"இரண்டு மாசம் என்ன லாஜிக்கோ" புலம்பிக் கொண்டே அவளின் அறைக்குள் புகுந்தாள்.
அறைக்குள் நுழைந்தவள் ஏதோ தோன்ற வேகமாக சமையலறைக்குள் புகுந்து பாருவை தன் பக்கம் திருப்பி "பாரு ஒருவேளை இரண்டு மாசத்துல அவரை எனக்குப் பிடிக்கலைனா ?" என்று கேட்க...
"அதெல்லாம் பிடிக்கும் டா " என்றவரின் கூற்றை மறுத்தவள்
"பிடிக்கலைனா " என்று மறுபடியும் கேட்க
" உனக்கு அவர் தான்னு பிக்ஸ் பண்ணதுமே ஒரு உரிமை வந்துடும் டா...யுவா தான் கணவர்னு முடிவானதுக்கப்புறம் தானா பிடிக்க ஆரம்பிச்சுடும் "எனக் கூறியதும்
"ஓஓஓ " என்றவள் தன் வினுவைத் தேடி தோட்டத்திற்குள் ஓடினாள்.
"இங்கே பாரு வினு!! அவர் ஓவரா கண்டிஷன் போடுறார், ஒரு விஷயத்துல கூட எனக்கும் அவருக்கும் செட் ஆகல,இரண்டு மாசம் டைம் இருக்கு பேசு சொல்லுறாங்க!!! இரண்டு மாசத்துல எப்படி ஒருத்தரைப் பிடிக்கும்?? அவரை அந்நியமா நினைக்கிற மனசு நெருக்கமானவரா நினைக்கவே ரொம்ப நாள் ஆகுமே!!!
இதுல எப்படி கல்யாணம்?
கணவர்னு மனசுல நினைச்சுட்டா அது கட்டாயத்தால தானே ஏத்துக்குற மாதிரி இருக்கும்?
இதைத் தான் மஞ்சள் கயிறு செய்யும் மேஜிக்னு சொல்லுறாங்களோ? ஆனா அதுவும் வேற வழி இல்லாம பிடிச்ச மாதிரி தானே இருக்கும் ?? அய்யோ எனக்கு தலைவலிக்குதே??" மனதில் தோன்றியதையெல்லாம் கொட்டித் தீர்த்தவள் சிறிது நேரம் அங்கேயே அமர்ந்து விட்டாள்.
சனிக்கிழமை வந்ததே தெரியாமல்
சென்றுவிட யாரையும் கேட்காமல் ஞாயிறும் விடிந்தது.
காலையில் இருந்தே ஒரு வித பதட்டத்துடன் காணப்பட்டவளை தீபு தான் கலாய்த்து சகஜ நிலைக்கு கொண்டு வந்திருந்தான்.
அறையினுள்ளே குட்டிப் போட்ட பூனை போல் சுற்றிக் கொண்டிருந்தவள் "டி வளர்ந்துக் கெட்டவளே !! மாம்ஸ் வந்தாச்சு... அழகா இருக்காரே!! ஆனாலும் உனக்கு அவர் ஓவர் தான்!! ஆமா அவர் என்ன ஆறடிக்கும் மேல இருப்பார் போல " என்று கூறியதும் திறந்திருந்த கதவின் வழியே எட்டிப் பார்க்க தீபு கூறியது உண்மை தானோ எனத் தோன்றியது.
"லேம்ப் போஸ்ட் " தானாக அவள் இதழ்கள் உச்சரித்தோடு நிறுத்தாமல் அழகான புன்னகையை வேறு சிந்தியது.
இதுவரை அவனைப் பற்றி நினைக்காமல் இருந்த மனது இப்போது அவனையே ரசிக்க ஆரம்பிக்க ஓஓ இதுதா உரிமை உணர்வா எனத் தனக்குத் தானே கேட்டுக் கொண்டவள் இப்போது ஒருவித உரிமையுடன் அவனைப் பார்க்க ஆரம்பித்தாள்.
வெட்கம் என்றால் எந்த கடையில் கிடைக்கும் எனக் கேட்கும் ரகம் இவள்...
புடவையில் நடக்கத் தெரியாமல் கீழே விழுந்து விடுவோமோ என்ற பதட்டத்தில் தரையைப் பார்த்துக் கொண்டே வந்தவளை "கல்யாணம்னாலே பொண்ணுங்க அழகாகிடுறாங்க!! சுதாக்கு வெட்கத்தைப் பாரேன் பார்வதி" என ராதா கூற
அவர் கூறியதைக் கேட்டு திருத்திருவென முழித்தவள் சமாளிக்கும் விதமாக புன்னகைத்தாள்.
"இவ்ளோ அழகான ஒரு பொண்ணா என் சிடுமூஞ்சி அண்ணாவுக்கு வரணும் " மனதில் புலம்பியவாறே அமர்ந்திருந்தவள் வந்ததிலிருந்து தன்னை சைட் அடித்துக் கொண்டிருக்கும் ஒரு ஜூவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
"போதும் போதும் வழியுது" என்ற சுதாவைப் பார்த்து தனது அனைத்துப் பற்களையும் காட்டிச் சிரித்த தீபு "அவ்ளோ அப்பட்டமாவா தெரியுது " மைண்ட் வாய்ஸ் என்று சத்தமா கூறிவிட
"அப்படியே தான் தெரியுது தம்பி அவர்களே " என்ற சுதாவிடம்
"ஓகே அக்கா அவர்களே" என்றவன் யுவாவின் அருகில் சென்று அமர்ந்துக் கொண்டான்.
அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருக்க தனக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை என்பது போல் நின்றிருந்தவளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது யுவாவின்
குரலும் அவன் கூறியதும்....
என்ன கூறியிருப்பான் 🚶♀🚶♀🚶♀
நாளைக்குப் பார்க்கலாம்...
கொஞ்சமே கொஞ்சம் லேட் ஆயிடுச்சு இன்னைக்கு🚶♀🚶♀
எப்படி தான் இந்த அம்மாங்க எல்லாம் காலைல நேரத்துல எழுந்து சமைக்கிறாங்களோ😒நமக்கெல்லாம் ஒரு நாளைக்கே கண்ணு கட்டுது😌😌
🚶♀🚶♀என் சமையலை சாப்பிட்டு எல்லாரும் நல்லா இருக்கணும்னு வேண்டிக்கோங்க🚶♀🚶♀நல்லா இருந்தா நாளைக்கு அப்டேட்டோட வரேன்😝😝
ப்ரியமுடன்
தனு❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro