பகுதி 17
அன்று முழுவதும் அறைக்குள்ளேயே அடைந்துக் கிடந்தவளுக்கு வெளியே வரும் எண்ணம் துளியும் இல்லை.
ச்ச என்னை இப்படியெல்லாம் வெட்கப் பட வெச்சுட்டானே எனப் புலம்பியவளுக்கு அவள் கொடுத்த அந்த முத்த நிகழ்வு வந்து போக உடல் சிலிர்த்தது.
"இப்படியா டி பண்ணுவ ? என்னைப் பத்தி என்ன நினைச்சிருப்பான் ?" என்றெல்லாம் எண்ணியவள் உடனே "அவன் என் யுவி நான் பண்ணாம வேற யாரு பண்ணுவா ?" என்று கூறி தனக்குத்தானே புலம்பிக் கொண்டு இருந்தாள்.
எனதுயிரே எனதுயிரே
எனக்கெனவே நீ கிடைத்தாய்..
எனதுறவே எனதுறவே
கடவுளைப் போல் நீ முளைத்தாய்.
நெடுஞ்சாலையில் படும் பாதம் போல்,
சேர்கிறேன் வாழும் காலமே
வரும் நாட்களே, தரும் பூக்களே,
நீளுமே காதல் காதல் வாசமே..
தானும் இருக்கிறேன் என்ற விதத்தில் கைபேசி அழைத்து ஓய
ரிங் டோனைக் கேட்டதும் பதறி அடித்து எழுந்து அமர்ந்தவள் முகத்தை மூடிக் கொண்டாள்.
"அய்யய்யோ இவன் ஏன் இப்போ போன் பண்ணுறான் ?" எனக் கூறி உதட்டைக் கடித்தவள் ஒரு கையை மட்டும் விலக்கி கைபேசியை எட்டிப் பார்க்க தவறிய அழைப்பு 1 எனக் காட்டியது.
அப்பாடா என்று பெருமூச்சு விட்டவள் "தேங்க் காட்" என்று கூறி முடிப்பதற்குள்
அவளின் மனமெங்கிலும் நிறைந்திருந்த நாயகன் மறுபடியும் அழைத்தான்.
"மாட்டிக்கிட்டேனே " என்று புலம்பியவள் அட்டெண்ட் செய்து காதில் வைக்க அவனும் பேசவில்லை இவளும் பேசவில்லை.
"லைன்ல இருக்கியா தீரா ?" என்றவனின் கேள்விக்கு ம்ம் என்று மட்டும் பதிலலித்தவள் அடுத்த வினாடியே அவனிடம் திட்டு வாங்க ஆரம்பித்திருந்தாள்.
"அப்புறம் ஏன் அமைதியா இருக்க? அட்டெண்ட் பண்ணிட்டு அமைதியா இருக்கணும்னு வேண்டுதலா ? " என்று திட்டியவனுக்கு "இவர் மட்டும் என்ன செஞ்சாராம் இவருக்கும் வேண்டுதல் தான் போல " மனதினுள்ளே மட்டும் தான் சுதாவால் கவுண்டர் கொடுக்க முடிந்தது.
"அமைதியாவே இருக்கலாம்னு நினைக்கிறவ ஏன் கால் அட்டெண்ட் பண்ண ? " யுவி கேட்க
"அப்படியெல்லாம் இல்லையே " என்றவள் "என்னை பேச விட்டா தானே " என்று முணுமுணுக்க அது அவனுக்கு நன்றாகவே கேட்டது.
"முணுமுணுக்காமல் எங்கே பேசு பார்க்கலாம் ! நீ அப்படி என்ன பேசுறேனு நானும் பார்க்கிறேன் " என்றவனை "இவன் என்ன லூசா " என நினைக்காமல் அவளால் இருக்க முடியவில்லை.
"பேசுடி " என்றவனிடம்
"யுவி ப்ளீஸ் " என்று சுதா சிணுங்க.
"ம்ம் விடு விடு...ஏன் டி துணி பையை எடுக்காம போன உங்கப்பாவா எடுத்துட்டு வந்து தருவார் ? " அவளை வம்பிலுக்கவே யுவா கூற
"ஏன் நீங்க கொண்டு வந்து கொடுத்ததுல குறைஞ்சா போயிட்டீங்க ?" என்றவள் பதிலுக்கு அவனை வம்பிலுத்தாள்
"வாய் வாய் கொழுப்பு டி உனக்கு "
"பேசுனாலும் திட்டுறது பேசலைனாலும் திட்டுறது டூ பேட் யுவி " என்றவள் கூறியதைக் கேட்டதும் முறைத்தவன்
"அப்படி தான் திட்டுவேன் , அதென்ன மரியாதை இல்லாம யுவினு கூப்பிடுற ? உன்னை ஐந்து வயது பெரியவன் நான் ஒழுங்கா இனிமேல் மரியாதை கொடுத்து பேசணும் இல்லைனா அவ்வளவு தான்" என்றவனிடம்
" அய்யய்யோ பயந்துட்டேன் , போங்க பாஸ் " என்றவள் அவனை கலாய்க்க ஆரம்பிக்க
அதில் கோபம் கொண்டவன் அவளை எப்படி அமைதியாக்குவது என்று யோசிக்க ஆரம்பித்தான்.
"என்ன சத்தத்தையே காணோம் ? அழுகுறீங்களா ? ஓஓ ஓவரா கலாய்ச்சதால அம்மா கிட்ட கம்ப்ளைண்ட் பண்ண போயிட்டீங்களா ? சரி சரி வாங்க கலாய்க்க மாட்டேன் " என்று கூறி சிரித்தவளை பல நல்ல வார்த்தைகளால் மனதிற்குள் அர்ச்சித்தவன் "நீ ஒன்னு கொடுத்தியே சூப்பரா இருந்துச்சுனு கூட சொன்னனே !!! அதைப் பத்தி யோசிட்டு இருந்தேன் ... செமையா இருந்துச்சு ஆஹா " என்றவன் கூறியதைக் கேட்டதும் பதறிவளுக்கு வயிற்றுக்குள் பட்டாம்பூச்சியெல்லாம் பறக்க
"யுவி ப்ளீஸ் " என்று கெஞ்சினாள்.
"அடடா இவ்வளவு நேரம் என்ன ஆட்டம் போட்ட அனுபவி டி " என மனதினுள் நினைத்தவன்
"என் பர்மிஷன் இல்லாம என்னை எப்படி கிஸ் பண்ணலாம் ? சொல்லு சொல்லு " என்றவனை மனதினுள் நன்றாக வசைபாடியவள்
"ஆன் அம்மா இதோ வரேன் . யுவி அம்மா கூப்பிடுறாங்க பாய் பாய் " என்றவள் அழைப்பைத் துண்டித்து விட்டு தான் ஆசுவசமானாள்.
"ஆன்டி கூப்பிடவே இல்லை எப்படியெல்லாம் தப்பிக்கிறா !! கேடி கேடி" என்றவனுக்கு முகமெல்லாம் பல்லாக இருந்தது.
அப்படி ஒரு சிரிப்பு அவனுக்கு!!!
சுதாவிற்கும் அப்படி தான்...
ப்ராடு ப்ராடு என்றவளுக்கும் இதழ்களில் அழகான புன்னகை ஒன்று தவழ்ந்தது.
திருமண வேலைகளில் அனைவரும் பிஸியாக இருக்க சுதாவோ
தான் இத்தனை நாள் பார்க்க ஆசைப்பட்ட தெலுங்கு படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்ததைக் கண்டு சந்தோஷமாக அதை பார்த்துக் கொண்டிருந்தாள்.
முறுக்கைக் கொறித்துக் கொண்டே ஆஆ என்று வாயைப் பிளந்தபடி பார்த்துக் கொண்டிருந்தவளின் தலையில் கொட்டிய பார்வதி போய் காபி போடு டி என்று கூற
"விளம்பரம் போட்டதும் கண்டிப்பா போட்டு தரேன் பாரு " என்றவள் மறுபடியும் தொலைக்காட்சியில் கவனத்தைச் செலுத்த
அங்கு அறையில் இருந்த சிவராமனோ "காபி போட இவ்வளவு நேரமா பாரு " என்று கத்த
நறுக்கிக் கொண்டிருந்த காய்கறியை அப்படியே வைத்து விட்டு சுதாவை முறைத்தவாறே சமையலறைக்குள் நுழைந்தார்.
விளம்பரம் போட்டதும் சமையலறைக்குள் நுழைந்தவள் "தள்ளு பாரு நான் போடுறேன் " என சுதா கூற
"அடிச்சேனா பாரு, அப்படியென்ன டி படம் வேண்டிக்கிடக்கு போற வீட்டுல இப்படி இருந்தா என்ன பொண்ணை வளர்த்து வெச்சிருங்காங்கனு எங்களைத் தான் திட்டுவாங்க " பாருவின் திட்டுகளையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாதவள்
பாருவை தள்ளிவிட்டு காபியை போட்டு முடித்தவள் அதை அவர் கையில் திணித்து விட்டு இன்னும் கொஞ்சம் முறுக்குடன் சோபாவில் சென்று அமர்ந்துக் கொண்டாள்.
"காபி சூப்பரா இருக்கே சுதா ? எப்போ கத்துக்கிட்ட உனக்கும் பொறுப்பு வந்துருச்சே " என்ற பார்வதியைக் கண்டுக் கொள்ளாமல் படம் பார்த்துக் கொண்டிருந்தவள் மறுபடியும் விளம்பரம் போட்ட பிறகு தான் பாருவை திரும்பிப் பார்த்தாள்.
"யுவி தான் எனக்கு காபி போட சொல்லிக் கொடுத்தாங்க , நான் அங்கே போனாலும் எனக்காக அவங்க உதவி பண்ணுவாங்க , உன்னை எதுக்காகவும் திட்ட மாட்டாங்க போதுமா ? " என்றவள் திரும்பி அமர்ந்துக் கொள்ள
அவள் கூறியதில் புன்னகைத்தவரோ "வாய் மட்டும் தான் டி உனக்கெல்லாம் நானும் பார்க்க தானே போறேன் எங்க மானத்தை வாங்காம இருந்தா சரி " என்ற பாருவை முறைத்தவள்
"அமைதி பாரு படம் போட்டுட்டாங்க " என்றவள் மறுபடியும் படம் பார்ப்பதில் கவனம் செலுத்தினாள்.
படம் முடிந்த பிறகே அவள் அந்த இடத்தை விட்டு எழ "சுதா நான் சொல்லுறதை கேளு டி தயவு செய்து வீட்டு வேலைலாம் கத்துக்கோ " எனக் கூற
"எது இன்னும் நாலு நாளைக்குள்ளவா ? போ பாரு காமெடி பண்ணிக்கிட்டு... சங்கீத் பங்ஷன் கண்டிப்பா வேணும் பாரு , நான் எனக்கு டிரெஸ் கூட பார்த்து வெச்சுட்டேன் அப்பா கூட போய் வாங்கிட்டு வந்துடுறேன் " என்றவளை முறைத்தவர்
"கடவுளே என் பொண்ணு நல்லாருக்கணும் " என்று மனதினுள்ளே வேண்டியவர்
விட்ட வேலையை பார்க்க ஆரம்பித்தார்.
யுவா இதெல்லாம் எதற்கு என தந்தையிடம் கேட்டு சண்டைப் பிடிக்க சங்கீத் வேணும்னு சுதா ஆசைப்படுறா டா உனக்கு அதுல என்ன பிரச்சனை என கிருஷ்ணா கேட்க
"என்னவோ பண்ணுங்க" என்றவனோ அறைக்குள் நுழைந்து கதவை மூடிய சத்தத்திலேயே அவனின் கோபத்தின் அளவு தெரிந்து விட ஒரு பெருமூச்சுடனே அனைவரும் கலைந்தனர்.
சுதா வீட்டின் தோட்டப்பகுதியிலேயே சங்கீத்திற்காக மேடை , வண்ண வண்ண விளக்குகள் , தோரணங்கள் என அனைத்தும் ஏற்பாடு பண்ணியிருக்க ஏற்கனவே மஞ்சள் நிற ஆடையில் தான் வர வேண்டும் என சுதா ஆர்டர் வேறு பிறப்பத்திருந்ததால் மஞ்சள் காட்டு மைனாவாக அனைவரும் சுற்றிக் கொண்டிருந்தனர்.
மஞ்சள் நிற லெஹங்காவில் ,
ப்ரீ ஹேர் விட்டு தலைக்கு மேல் பூக்களால் அலங்கரிக்கப்பட வளையம் அணிந்திருக்க அவளை அது இளவரசி போலவே காட்டியது.
தன் இரு கைகளையும் மருதாணி இட நீட்டியவளின் கண்களோ யுவியை மட்டுமே தேடியது.
எந்த வித மேக்கப்பும் இன்றி அழகாக வலம் வருபவள் இன்று பியூட்டிசியனின் கைங்கரியத்தால் பேரழகியாக தோற்றமளிக்க தீபு , மது, சிவா தான் அவளிடம் நீ சுதா இல்ல அவளை எங்கே மறைச்சு வெச்ச எனக் கூறி அவளை கலாய்த்துக் கொண்டிருந்தனர்.
நெனச்சபடி நெனச்சபடி மணப்பொண்ணு அமைஞ்சதடி
உனக்கெனப் பிறந்தாளோ உயிருடன் கலந்தாலோ
என் தோள்களே தோட்டம் என்று
என்னாளுமே தொத்திக்கொள்ளும்
காற்றல்லவா நீ என் கண்ணே
கல்யாண நாளில் மாலை கொள்ள
கண்ணாளனின் பூஞ்சோலை செல்ல
அந்த வானம் நந்தவனம் ஆகும்
மருதாணிக் கோலம் போட்டு
மணிக்கையில் வளையல் பூட்டு
இந்த ரோஜாவுக்கு ரோஜாப்பூ நீ சூட்டு
மருதாணிக் கோலம் போட்டு
மணிக்கையில் வளையல் பூட்டு
இந்த ரோஜாவுக்கு ரோஜாப்பூ நீ சூட்டு
உன் கணவன் நாளை தான் வரவேண்டும்
உயிர்க் காதல் நெஞ்சையே தரவேண்டும்
மணப்பந்தல் தோரணம் நான் போட
மணவாளனோடு உன் கைகூட
உன் தந்தை உள்ளந்தான் ஊஞ்சல் ஆட
தீபுவின் கை வண்ணத்தால்
அந்த சூழலுக்கு ஏற்ப அனைவரையும் குஷி படுத்தவே பாடல்கள் ஓடிக் கொண்டிருக்க
எதையும் ரசிக்காமல் விழிகள் அலைபாய தன் மாயக்கண்ணனைத் தேடிக் கொண்டிருந்தவளின் விழிகள் அவனைக் கண்டதும் அப்படியே ஆச்சரியத்துடன் விரிந்தது.
அவனும் மஞ்சள் நிற குர்தா , ப்ளூ ஜீன்ஸ் விகிதம் அலை அலையாய் காற்றில் பறந்த கேசத்தை கோதியவாறு அவளை நோக்கி நடந்து வர
" இவன் என்ன இவ்வளவு அழகா இருக்கான் " என நினைக்காமல் இருக்க முடியவில்லை சுதாவால்.
இத்தனை மேக்கப் பண்ணியும் அவன் முன்னாடி நம்ம சுமாரா தான் இருப்போம் போலயே என்று எண்ணியவள் அவனையே இமைக்க மறந்து பார்த்திருந்தாள்.
அங்கு இருந்த யாரிடமோ சிரித்து பேசியவனின் கன்னக்குழி அவளுக்குத் தென்பட
சுற்றி இருந்த அனைவரும் மறைந்து அவன் மட்டுமே அங்கு இருப்பது போல் தோன்றியது.
"கடவுளே இவனை ஏன் இவ்வளவு அழகா படைச்சீங்க " என்று புலம்பியவள் மறுபடியும் அவனைப் பார்க்க இப்போது அவன் அவளை நோக்கி தான் வந்துக் கொண்டிருந்தான்.
மஞ்சள் நிற மேடை , விளக்குகளும் அதே நிறமென அந்த இடம் மஞ்சள் நிற உலகமாக தோற்றமளிக்க மேடையின் நடுவில் அமர்ந்திருந்த அவள் மட்டும் தனியாக தெரிந்தாள் யுவாவிற்கு.
"ப்பா தேவதை மாதிரி இருக்காளே " என நினைத்தவன் அவள் பார்வையில் கண்ட ரசனையைக் கண்டு சிரித்தவாறே அவளருகில் சென்றான்.
கைகளைக் கட்டியபடி நின்றவன்
"எதுக்கு இந்த வேண்டாத செலவு , பங்ஷன் எல்லாம் " என்று கேட்டு விட முகம் வாடியவள் எதுவும் பேசாமல் கீழே குனிந்துக் கொள்ள
"மேல நிமிர்ந்து பாரு தீரா , கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு " என்றவனின் குரலில் பயந்தவள்
"படத்துல லாம் பண்ணுவாங்களே எனக்கும் ஆசையாய் இருந்துச்சு" விட்டால் அழுதுவிடுவேன் என்ற தோரணையில் கூறியவளைக் கண்டு பொங்கி எழுந்த சிரிப்பைக் கட்டுப்படுத்தியவன் "ஓஓ " என்று கூறி அவளை இன்னும் சீண்ட நினைத்தான்.
"இதென்ன டிரெஸ் கோட் ரொம்ப கேவலமா இருக்கு " என்றவனின் கண்கள் சுதாவை மட்டும் சுற்றி சுற்றி வந்தது.
" இவ ஏன் இவ்வளவு அழகா இருக்கா " என நினைத்தபடி...
"அழகா தானே இருக்கு " என்றவளுக்கு ஏற்கனவே கண்களில் கண்ணீர் தேங்கி விட
"நாட் பேட் " எனக் கூறி அங்கிருந்து கிளம்பி விட்டவனுக்கு அவள் பக்கம் மட்டும் திரும்பவே கூடாது என்ற எண்ணமே வலுத்திருந்தது.
"எனக்கும் ஆசையாய் இருந்துச்சு" அவள் கூறியதை நினைத்துப் பார்த்தவனுக்கு சிரிப்பு வர ஒரு ஓரத்தில் அவளைப் பார்த்தவாறே அமர்ந்துக் கொண்டவன் அவளை அங்குலம் அங்குலமாய் ரசிக்க ஆரம்பித்தான்.
அவன் அமர்ந்து இவளைப் பார்ப்பது அவளுக்குத் தெரியாதது போல் அமர்ந்திருந்ததால் அவனைத் தேடித் தேடி சோர்ந்தவளுக்கு அதற்கு மேல் சங்கீத் பங்ஷனில் கலந்துக் கொள்வதில் இருந்த ஆர்வம் குறைந்து விட கை கால்களில் மருதாணி போட்டு முடித்ததும் வீட்டிற்குள் நுழைந்து விட்டாள்.
கைகளில் மருதாணி இருந்ததால் கதவை அடைக்க முடியாமல் அப்படியே சென்று அமர்ந்தவளுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது.
"அழுகை வந்தா அழுதுடணும்" என்ற யுவியின் குரலில் நிமிர்ந்து பார்த்தவள் "நான் ஒன்னும் அழுகலையே " எனக் கூறி முகத்தைத் திருப்பிக் கொள்ள
"ஓஹோ எனக்கு தான் தப்பா தெரிஞ்சிடுச்சு போல!! இந்த மூக்கு ரெட் கலர்ல ஆனதும் அழுகிறியோனு நினைச்சேன் ஆனால் அது மேக்கப்னு இப்போ தானே தெரியுது " என்றவனை முறைத்தவள்
"எதுக்கு உள்ளே வந்தீங்க வெளியே போங்க " என்று கூற
"அப்படி தான் வருவேன் " என்றவனோ அவளை நெருங்கி அவள் முகத்தை தன் கைகளில் தாங்கி அவள் கண்களைப் பார்த்தான்.
"எனக்கு தோணுணதை அப்படியே கேட்டுடுவேன் தீரா , வீண் செலவுனு தானே கேட்டேன் அதுக்காக அழுவியா ? ம்ம் " என்றவன் புருவத்தை உயர்த்த
"எனக்கு " என்று ஆரம்பித்தவளின் வாய் மீது தன் ஒற்றை விரலை வைத்து தடுத்தவன்
" எனக்கும் ஆசையாய் இருந்துச்சு " அவளைப் போலவே கூறிச் சிரிக்க
அவனை முறைத்தவள் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள்.
"அய்யோ தீரா மா " என்றவன் அவள் இடையில் கை பதித்து தன்னை நோக்கி இழுக்க அதிர்ந்து அவன் மேலே விழுந்தவள் அழுகையை நிறுத்தி படபடக்கும் இமைகளுடன் அவனைப் பார்க்க
படபடக்கும் இமைகளில் முத்தம் வைத்தவன் "ஸ்கூல் பாப்பா மாதிரி அழக்கூடாது " எனக் கூற
அவனைப் பார்த்து முறைத்தாலும் சரியென்று தலையாட்டினாள்.
சிவந்திருந்த அவள் மூக்கில் தன் முத்திரையை பதித்தவன் "எனக்கு கோபம் வந்தா உடனே அதைக் காட்டிடுவேன் பட் ரொம்ப நேரம்லாம் அந்த கோபம் எனக்கு இருக்காது நானே வந்து பேசிடுவேன் , லூசுத்தனமா பண்ணுறேனு நான் கோபத்துல இருக்கப்போ என்னை கன்வின்ஸ் பண்ணா இன்னும் தான் எனக்கு கோபம் அதிகமாகும் புரிஞ்சுதா ?" என்றவனுக்கு அவள் எப்படி பதில் சொல்வாள் அவள் தான் கண்களை மூடி கனவுலகத்தில் மிதந்துக் கொண்டிருந்தாளே..
இப்போது கன்னத்தில் இதழ் பதித்தவன் "இன்னும் ஆண் பெண் சமமில்லைனு சுத்துற ஆள் தான் நான் ... அதுனால என் வீட்டுக்கு வந்ததுக்கு பிறகு எனக்கு உரிமை இல்லையா அது இல்லையா இது இல்லையானுலாம் கேட்க கூடாது ஓகே வா ?" என்றவன் கண்கள் மூடியிருந்தவளைப் பார்த்து சிரித்து அவள் இடையில் கிள்ள
"ஆஆ " என்று அலறியவளோ "ஏன் யுவி கிள்ளுன எனக் கேட்க...
"நான் என்ன உனக்கு தாலாட்டா பாடிட்டு இருக்கேன் லூசு நான் சொன்னது புரிஞ்சுதா" எனக் கேட்டு முறைத்தவனிடம்
அவன் கூறியதை கவனிக்கவே இல்லை என்று எப்படி கூற எனத் தயங்கியவள் "ம்ம் புரிஞ்சுது " என்று வேகமாக தலையசைத்தாள்
"குட் " என்று அவள் தலையில் தட்டியவனோ "தீரா எனக்கு சாக்லெட் வேணும் " எனக் கேட்க
"வெளியே இருக்குமே " என்றவள் அவன் பார்வையைக் கண்டு "யுவி வெளியே போ " என்று தன் பதட்டத்தை மறைத்துக் கூற
"ம்க்கூம் " என்றவனோ
"சாக்லெட்னு அம்மா கிட்ட சொன்னது உனக்கு எப்படித் தெரியும்?" எனக் கேட்டு முடிப்பதற்குள்
அவள் இதழை முற்றுகையிட்டிருந்தான்.
இதுக்கப்புறம் நமக்கு என்ன வேலை வாங்க கிளம்புவோம்🚶♀🚶♀🚶♀🚶♀🚶♀
நாளைக்கு கல்யாணம் எல்லாரும் வந்துடுங்க கரி சோறு , கரி சாப்பிடாதவங்களுக்கு தயிர் சோறுனு எல்லாமே நம்ம சுதாவே செஞ்சு போடுவா😝🚶♀🚶♀🚶♀
ப்ரியமுடன்
தனு❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro