பகுதி - 10
விருப்பம் பாதி தயக்கம் பாதியில்
கடலில் ஒரு கால் கரையில் ஒரு கால்
அலைகள் அடித்தே கடலில் விழவா
துரும்பை பிடித்தே கரையில் எழவா
இதுவரை இது போலே இருமனம் கொண்டு தவித்ததில்லை
கேண்டீனில் ஒரு ஓரத்தில் மேசையின் மேல் தலையை வைத்து அமர்ந்திருந்தவள் கண்களோ இலக்கில்லாமல் வெறித்துக் கொண்டிருந்தது.
கேண்டீனுக்கு வா என்று பூஜிதாவிற்கு செய்தி அனுப்பிவிட்டு இங்கு வந்தவள் நினைவுகளெங்கும் யுவி மட்டுமே நிறைந்திருந்தான்.
அவனைப் பார்த்ததிலிருந்து இன்று காலை நடந்தது வரை அனைத்தும் கண்முன் வந்து போக மனம் ஒரு இடத்தில் இல்லாமல் அங்கும் இங்கும் அலைந்துக் கொண்டிருந்தது.
"சுதா" என்று அழைத்த பூஜிதாவின் குரலில் மெல்ல நிமிர்ந்தவள் அவளை அணைத்துக் கொண்டாள்.
"என்னாச்சு டா" என்றவளுக்கு பதில் சொல்லாமல் அவளை இறுக்கி அணைத்துக் கொண்டிருந்தவளை வித்தியாசமாக பார்த்தவள் அவளின் கண்ணீரால் தன் முதுகில் ஈரம் ஏற்படுவதைக் கண்டு பதறி தன்னிடமிருந்து விலக்க
"எனக்கு அவரைப் பிடிக்கவே இல்லை டா! வீட்டுல சொன்னாங்கனு தான் ஓகே சொன்னேன் ஆனால் எனக்கு பயமா இருக்கு டா " என்றவளின் கண்ணீரைத் துடைத்து விட்டவள்
" மொதல்ல அழுகையை நிறுத்து! இந்தா தண்ணீர் குடி " என்று நீட்டிய பூஜிதாவிடம் இருந்து மறுக்காமல் வாங்கிக் கொண்டாள்.
"இப்போ சொல்லு என்னாச்சு?" என்றவளிடம் நடந்த எல்லாவற்றையும் கூறியவள் அப்படியே அவள் தோளில் சாய்ந்துக் கொள்ள
"எல்லாம் சரி ஆகிடும் டா...
உனக்கு வரப்போகிறவர் எப்படியெல்லாம் இருக்கணும்னு உனக்கு நிறையாவே எதிர்ப்பார்ப்பு இருந்துச்சு ஆனால் இவர் அப்படி இல்லைனு தெரிஞ்சதும் உனக்கு பிடிக்கலை...ஆனால் அம்மா அப்பா உனக்காக பார்த்தவர் கண்டிப்பா உனக்கு பொறுத்தமானவரா தான் இருப்பார்!! அதை நினைத்து கவலைப்படாதே...
இப்போ பிடிக்கலைனாலும் போகப் போக பிடிக்கலாம் டா" என்றவளின் கூற்றை மறுத்தவள் இன்று காலையில் நடந்ததை கூற ஆரம்பித்தாள்.
காலையில் எழுந்தவள் எப்பொழுதும் போல் தன் கைபேசியை தேடி எடுக்க அதில் யுவாவின் பத்திற்கும் மேற்பட்ட தவறிய அழைப்புகளுடன் பல குறுஞ்செய்திகளும் நிறைந்திருந்தது.
எப்பொழுதும் போல் அறிவிருக்கா,இடியட் என்றெல்லாம் திட்டியவன் செய்திகளெல்லாம் ப்ளூ டிக் ஆனது தெரிந்ததும் உடனே அழைப்பு விடுத்து விட்டான்.
"ஹலோ" அவனின் கோபமான அழைப்பில் இவளின் தேகம் பயத்தில் நடுங்க ஆரம்பிக்க "உன்னைத் தான் கூப்பிடுறேன் லைன்ல இருக்கியா? இல்லையா?" என்றவனின் கத்தலில்
"ம்ம்ம்" என்றவள் மறுபடியும் "அதென்ன ம்ம்ம இருக்கேனு சொல்ல உனக்கு என்ன ?" என்றவனிடம்
"லைன்ல தான் இருக்கேன் " என்று கொஞ்சம் சத்தமாக கூறிவிட்டாள்.
"வாய்ஸ்லாம் ரெய்ஸ் ஆகுது? ஓஓ ஆணுக்கு பெண் சமம்னு சொல்லிட்டு பெண்ணியம் பேசிட்டு சுத்துற கூட்டத்துல நீயும் ஒன்னா? நேத்து உன்னை விட்டு வந்தேன்ல ஒரு வார்த்தை கேட்டியா? ரீச் ஆயாச்சானு? நாங்களா தான் வந்து பேசணும் நீங்களா எதுவும் பேசமாட்டீங்க அப்படித்தானே!!! திமிரு திமிரு உடம்பெல்லாம் திமிரு! உன்னை டிபி எப்போ மாத்த சொன்னேன் ஆனால் மாத்தவே இல்லை!! சொல்லுற பேச்சை கேட்கவே கூடாதுனு முடிவு பண்ணியாச்சு!! பப்ளிக் பிளேஸ்ல எப்படி பிகேவ் பண்ணனும்னு தெரியல! எப்படி பேசணும்னு தெரியல!! உங்க வீட்டுல உன்னை ஏன் இப்படி வளர்த்திருக்காங்க ?" என்றவன் கடைசி வார்த்தையில் கோபம் தலைக்கேற மொபைலை ஆப் செய்தவள் இடையில் பூஜிதாவிற்கு மட்டும் மெசேஜ் செய்துவிட்டு அதற்கு பிறகு ஆன் செய்யவே இல்லை.
"ஒருவேளை அவங்க இயல்பே அப்படியோ?" என்று கூறிய பூஜிதாவை முறைத்தவள்
"அவனுக்கே சப்போர்ட் பண்ணு!! அந்த லேம்ப் போஸ்ட் மட்டும் என் முன்னாடி வந்தான் அவ்வளவு தான் !" என்று கத்தியவள் அவ்விடத்தை விட்டு வெளியேறி விட இங்கு நடந்ததையெல்லாம் ஒன்று விடாமல் அன்புவிடம் கூறியவள் "பாவம் டா சுதா!! எனக்கு அவளை நினைச்சா ரொம்ப கஷ்டமா இருக்கு, என்ன பண்ணுறது இப்போ?" என்று கேட்க
" எதிர்ப்பார்ப்பு பொய்யா போனா அப்படி தான் டா இருக்கும்!! சுதாக்கு அதை புரியவெச்சுட்டா போதும்...
எதிர்ப்பார்க்கிறதே எல்லாருக்கும் கிடைக்கிறது இல்லை, கிடைக்கிறதை வெச்சுட்டு சந்தோஷமா வாழுறவங்க நிறைய பேரு இருக்காங்க!!! சுதாவை பத்திரமா பார்த்துக்கோ " என்று கட் செய்தவனால் அதற்கு மேல் தன் வேலையைத் தொடரவே முடியவில்லை.
தலையில் கை வைத்து அமர்ந்தவனை அருகில் இருந்த நண்பன் வசந்த் என்னவென்று கேட்க ஒன்னுல்ல டா என்றவனின் முக வாட்டத்தைக் கண்டவன் "வா வெளியே போகலாம்" என அழைத்து வந்துவிட்டான்.
வெளியே டீக்கடைக்கு அழைத்து வந்தவன் அன்புவிற்கு காபி இவனுக்கு டீ விகிதம் வாங்கிக் கொண்டு "இவன் ஆளுக்கு காபி பிடிக்குமாம் அதுனால இவனும் குடிப்பானாம் " புலம்பிக் கொண்டே அன்புவின் அருகில் வந்து அமர்ந்தான்.
"சொல்லு டா லவ் என்னாச்சு?" என்று கேட்ட வசந்திடம் ஒன்னுல்ல டா எனக் கூறியவன் காபி கிளாஸையே பார்த்துக் கொண்டிருக்க
"அது கிளாஸ் டா உன் ஆளு இல்லை..." என்ற வசந்தை முறைத்தவன் "அப்படியெல்லாம் இனிமேல் சொல்லாத" கோபமாக உரைக்க இப்போது வசந்த் அன்புவை உற்று நோக்கினான்.
சுதா என்றோ ஆளு என்றோ கலாய்க்கும் போதெல்லாம் அத்தனை பற்தளும் தெரியும் படி அன்பு புன்னகைப்பான்...இவனே சில சமயம் அப்படி கலாய்க்குமாறு கெஞ்சவும் செய்வான்...
இன்று அன்புவின் திடீர் கோபத்தால் ஏதோ நடந்துள்ளது என்பதைக் கண்டறிந்தவன்
"ஒழுங்கா என்ன நடந்துச்சுனு சொல்லுறியா இல்லையா ?" என்று கேட்க நடந்த அனைத்தையும் கூறியவன்
"சுதாக்கு ஏன் டா இப்படி ஒரு மாப்பிள்ளையைப் பார்த்தாங்க...
அவர் கொஞ்சமாச்சும் புரிஞ்சுக்கிட்டா போதும் டா சுதா நல்லா இருப்பா...அவ சந்தோஷமா இருக்கணும் டா " என்றவனை தன்னால் முடிந்த வரை முறைத்தான் வசந்த்.
"உனக்கென்ன தியாகினு நினைப்போ? அவளுக்கே பிடிக்கலை !! அவகிட்ட பேசி உன்னை லவ் பண்ண வெக்காம எங்கிருந்தாலும் வாழ்கனு பாட்டு பாடிட்டு இருக்கப் போறியா ? " கடுப்புடன் கேட்டவனை இந்த முறை முறைப்பது அன்புவின் செயலாயிற்று.
"அறிவுக்கெட்டத் தனமா பேசாத டா அறிவுகெட்டவனே!!! நான் எதுக்கு டா அவ கிட்ட இத்தனை நாள் என் காதலை சொல்லாம இருந்தேன்? அவளுக்கு அவ குடும்பம் தான் முக்கியம் அவங்களை மீறி அவ எதுவும் பண்ண மாட்டா!!அப்படி பண்ணுறதும் எனக்குப் பிடிக்காது....அவ சந்தோஷமா இருக்கிறது தான் டா எனக்கு முக்கியம், ஏற்கனவே அவ ரொம்ப குழப்பத்துல இருக்கா இந்த நேரம் என் காதலை சொல்லி அவளை சம்மதிக்க வெச்சா அது என் காதலுக்கு தான் டா அசிங்கம்...
அதுமட்டுமில்லாம அவளுக்கு அவரோட இந்த குணம் தான் பிடிக்கல அவளுக்காக மாறிட்டா கண்டிப்பா சந்தோஷமா அவரை ஏத்துப்பா...
நேத்து அவ பியான்சினு சொல்லும் போதே தெரிஞ்சுது டா அவளுக்கு அவரைப் பிடிச்சுருச்சுனு" என்றவனை அணைத்துக் கொண்டவன் "சரி டா விடு...அவ சந்தோஷமா இருப்பா போதுமா!!" எனக் கூற
" அவ நல்ல மனசுக்கு கண்டிப்பா நல்லா இருப்பா டா ,அவரும் அவளை புரிஞ்சுக்கணும்" என்றவன் நடக்க
" இவனுக்கு என்ன அவார்டா கொடுக்கிறாங்க? இந்த அளவு தியாகியா இருக்கான்...எனக்கு நீ தான் மச்சான் முக்கியம் , உனக்காக நான் என்ன வேணாலும் பண்ணுவேன், இப்போ தப்பா இருக்கிறது பின்னாடி நல்லதா இருக்கலாம் " என்றவன் தான் அடுத்து செய்ய போகும் செயல்களை வரையறுக்க ஆரம்பித்தான்.
"ஏன் டா தீபு இப்படி உட்கார்ந்துட்டு இருக்க? ஆமா எங்கே போன " என்ற சிவாவிடம்
"அக்காவுக்கு இந்த கல்யாணம் பிடிக்கலை டா " என்றவன் தான் கேட்டதையெல்லாம் அப்படியே கூற
"நான் நினைச்சேன் டா , அவங்க முகமே சரியில்லை இப்போ என்ன பண்ண போற " என்றவனின் கூற்றை நிறுத்தி
"பண்ண போற இல்ல பண்ண போறோம்... இந்த கல்யாணத்தை நிறுத்த போறோம் " எனக் கூறி
இருவரின் தோள்மீதும் கை வைத்தாள் மதுமிதா.
"நம்ம எப்படி டி நிறுத்துறது?" எனக் கேட்ட தீபுவிடம்
"அதை தான் யோசிக்கணும் " என்றவள் யோசிப்பது போல் தாடையின் மீது தன் ஒற்றை விரலை வைக்க மற்ற இருவரும் இவளையேப் பார்த்தனர்.
"என்ன ஏன் டா பார்க்குறீங்க? நீங்களும் யோசிங்க டா உங்களுக்கும் மூளை இருக்கு தானே " என்று திட்டியவளை
" அது இருந்தா நான் ஏன் உன்னை பார்க்க போறேன் " என முணுமுணுத்தவாறே கீழே குனிந்த சிவா ஐடியா என்று கத்த
"என்ன டா " என்று ஆவலாய் கேட்ட இருவரின் முகத்தையே பார்த்தவன் "ஐடியானு சொன்னா நீங்க எப்படி ரியாக்ட் பண்ணுறீங்கனு பார்த்தேன்!! குட் நல்லா தான் ரியாக்ட் பண்ணுறீங்க " என்றவனை இருவரும் அடிக்க ஆரம்பித்தனர்.
"அக்காவை கடத்திடலாமா?" என்று கேட்ட மதுவை முறைத்த சிவா
"அக்காக்கு தான் கெட்ட பேரு, உருப்படியா ஏதாச்சும் யோசி" என்று கூற
"அப்போ அக்காக்கு பார்த்த மாமாவை கடத்திடுவோம் " என்றவளைப் பாவமாக பார்த்தான் தீபு.
"ஏன் டா ?" என்றவளிடம் யுவாவின் புகைப்படத்தைக் காட்ட
"வாவ் செமையா இருக்காரு டா " என மதுவும்
"இவரைக் கடத்தவே நான் பல நாள் சாப்பாட்டை ஒரே நாள் சாப்பிடணும்...என்ன டா இவர் அர்னால்டுக்கு ஒன்னு விட்ட தம்பி மாதிரி இருக்கார் " என சிவாவும் கூற
"இவரைக் கடத்துறதுலாம் கஷ்டம் டா வேற யோசிப்போம் " என அதோடு அந்த திட்டத்திற்கு குழி தோண்டி புதைத்து விட்டனர்.
பல நேரம் அதே இடத்தில் அமர்ந்து சோறு தண்ணீர் இல்லாமல் யோசித்தவர்கள் அடுத்து என்ன செய்யலாம் என்பதை மட்டும் யோசிக்கவில்லை...
அந்த அளவு யோசிக்க மூளையில் ஒன்றும் இல்லை.
"சிவா நீ கோலிவுட் எடுத்துக்கோ , நான் பாலிவுட் , டேய் தீபு நீ ஹாலிவுட் ...இதுவரை வந்த எல்லா படத்தையும் பார்க்குறோம் ஏதாவது உருப்படியா ஒரு ஐடியாவோட நாளைக்கு வரோம் ஓகே வா " என்று கேட்ட மதுவிடம் வலமும் இடமும் என வேகமாக தலையசைத்தவர்கள் "சிங்கமொன்று புறப்பட்டதே " என்ற பாடலுடன் தங்களின் வீட்டிற்கு கிளம்பினர்.
வாங்க நாமும் கிளம்புவோம்🚶♀🚶♀
ஐடியாவோட வருவோம்🚶♀🚶♀
ப்ரியமுடன்
தனு❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro