மாயம் - 6
விளையாடும் காலமெல்லாம் வீட்டில் முடங்கி கிடந்த அந்த கொடூர காலங்கள் கண்கள் முன் நிழலாட தன்னை பெற்றவர்கள் ஏன் அனாதையாய் வீசி விட்டு சென்றனர் என அவன் எண்ணிடா நாட்களில்லை...
ஏகாந்த தூரத்தில் தெரிந்திடும் மலைமகளின் உச்சியை பார்த்து கொண்டிருந்தவனின் கண்கள் திடீரென ஒளிர்த்தடங்க... காற்று வீசிய வேகத்தில் கீழே தள்ளப்பட்டு மீண்டும் எழுந்து நின்றான் ஆதியன்த்...
அவன் விழுந்த வேகத்திற்கு எழுந்த சத்தத்தை கேட்டு உறக்கம் கலைந்து பதறி ஓடி வந்தான் விதுஷ்...
விதுஷ் : டேய் எத டா போட்டு உடச்ச...
ஆதியன்த் : நா உடைக்கல டா... இது தான் என்ன தள்ளி விட பாத்துச்சு...
விதுஷ் : எது டா...
ஆதியன்த் : தோ நம்மள சுத்தி சுத்தி வருதே...அது தான்...
விதுஷ் : எது டா... என பதறி போய் விதுஷ் அவனை சுற்றி பார்க்க...
ருமேஷ் : எரும... அவன் காத்த சொல்றான் டா... என கண்களை கசக்கி கொண்டே வந்தான் ...
ஆதியன்த் : கரெக்ட்டா சொல்றான் பாரு என் மச்சான்...
விதுஷ் : வாய்ல வருது...
ஆதியன்த் : எது வார்த்தையா...
விதுஷ் : இல்ல வாந்தி... இரத்த வாந்தி... மரியாதையா போய் தூங்கீடு... என அடித்து துரத்த... அவனோ " நா ஸ்விம்மிங் பூல் போறேன் டா டேய் " என கத்தி விட்டு ஓடினான் அவன்... விதுஷ் நிலவை யோசனையோடு பார்த்து கொண்டிருந்த ருமேஷை நெருங்கினான்..
ருமேஷ் : காலம் நெருங்கீடுச்சோன்னு பயமா இருக்கு டா...
விதுஷ் : நாமளே பயந்து அவன தூண்டி விற்ற கூடாது டா... நடக்குரத நம்மளால மாத்த முடியாது... வருடங்கள் கடந்தாலும் நீண்டு வந்த மாய கட்டுகள் இந்த பௌர்ணமியோட மறைய ஆரம்ச்சிருக்கும்...
ருமேஷ் : அதனால தான் விழிகலைகள் அவனுங்களோட அனுமதி இல்லாமலே வெளிப்படுது... இவனுங்க இத எப்போ கத்துக்குவானுங்கன்னு தெரியல... ஆனா கூடிய சீக்கிரமே பெரிய ஆபத்து நெருங்குது... என கூறி கொண்டிருக்கும் போதே நிலவை சுற்றியிருந்த மேகங்களை கிழித்து கொண்டு வந்தது ஒரு பருந்து...
அதன் சத்தத்தில் சட்டென திரும்பிய இருவரும் அதை காண... விதுஷின் தோளில் வந்து அமர்ந்த அப்பருந்து அவன் காதை கடிக்க... ஆவ்ச் என காதை தடவி தன் நண்பனை தடவி விட... தன் நண்பனின் வருடலில் அகமகிழ்ந்தது விதுஷின் குட்டி பிராணி வசு...
விதுஷ் : டேய் வசு... விசு எங்க டா... என கேட்டதும் வசு மேலே பார்க்க... ஒரு இறக்கை உடைந்து... மறு இறக்கையால் மெதுவாய் பறந்து வந்து கீழே விழுந்தது ருமேஷின் குட்டி பிராணி விசு..
இவர்கள் மூவரும் அதை நெருங்க... ருமேஷ் அதை தூக்கி அதன் ஒரு பக்க இறெக்கையில் வெள்ளி நிற கோடு ஒன்று வடுவாய் விழுந்திருப்பதை கண்டு விதுஷை கண்டு " விஞ்ஞவெள்ளன் " என்றான்...
விதுஷ் : என்ன நடந்துச்சு வசு... என வசுவை பார்க்க... மேல் நோக்கி பறந்த வசு அதன் இரு இறெக்கைகளையும் சுழற்றி காற்றோட்டம் அதிகமுள்ள இடத்தில் அழுத்த... அங்கே சுழல் போல் உருவான வடிவத்தில் மெல்ல மெல்ல ஒளி எழும்பி காட்சிகள் தென்பட்டது...
மஞ்சள் வர்ணம் பூசி கொண்டு வீழ்ந்து கிடந்த அந்த மாலை தருணத்தில் இறுகி வீற்றிருந்த பாளத்தில் வேகமாய் சென்று கொண்டிருந்தது அந்த நான்கு மோட்டார் வண்டிகள்...
சீரான வேகத்தில் தங்களது வாகனத்தை ஓட்டி கொண்டு ஊட்டியை நோக்கி பயணித்து கொண்டிருந்தனர் நமது இரண்டாம் அணி நாயகன்கள்..
ருமேஷ் : என்ன வசு சொல்ல வர...
விதுஷ் : எல்லாரும் இங்க வந்துக்குட்டு இருக்காங்களா... என தீவிரமாய் கேட்க... வசுவும் விசுவும் ஒரே நேரத்தில் தலையாட்டினர்...
ருமேஷும் விதுஷும் ஒரே நேரத்தில் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள.. இருவரும் ஒரே நேரத்தில் "ருத்ராக்ஷ்" என்க.. அவர்களின் எண்ணத்தை பொய்யாக்காது ஊட்டியின் சில்லென்ற குளிர்ச்சியான செம்மண்ணில் தன் காலை பதித்திருந்தான் ருத்ராக்ஷ்...
சில நொடிகளில் ருமேஷின் மொபைல் ரிங்காக ... அதில் ருத்ராக்ஷின் பெயர் பளிச்சிட தெரிய... இவர்களை அதை எடுக்காமல் பார்த்து கொண்டே இருக்கும் போது அது கட்டானது...
அங்கு தார் சாலையில் தன்னை இடிப்பதை போல் வந்த லாரியிலிருந்து கன நேரத்தில் தன்னை இழுத்தவரிடம் நன்றி கூற திரும்பியவன் அங்கு நின்றிருந்தவனை கண்டதும் மனதில் மின்னல் வெட்ட நின்றான் ருத்ராக்ஷ்...
தன் முன் ஒரு மாஸ்க் அனிந்து கொண்டு தலைக்கு மறைவாய் ஒரு தொப்பியையும் அனிந்து கொண்டு ட்ரவல் பகுடன் நின்றவனின் தோளிலும் உடையிலும் இருந்த மண்ணை தட்டி விட்டு விட்டு நின்றது நம் மிதுன்...
மிதுன் : ஓக்கே தான பாஸ்... அடி படலையே... என இவன் கேட்க.. ருத்ராக்ஷோ ஏதோ மின்சாரம் பாய்ந்ததை போல அப்படியே நின்று கொண்டிருந்தான்...
மித்ரான் : டேய் மிது... என்னாச்சு... என பைக்கில் அமர்ந்தவாறு கத்தியவனை மெல்ல நோக்கிய ருத்ராக்ஷ் மீண்டும் உறைந்தான்...
மிதுன் : தோ வரேன் டா... என அவனிடம் சத்தமிட்டவன் ருத்ராக்ஷை பார்க்க... தன் நிலையை விரைவிலே பெற்று கொண்ட ருத்ராக்ஷ்...
ருத்ராக்ஷ் : அ.. தன்.. தன்க்ஸ்... அடி படல...
மிதுன் : ஹான் ஓக்கே பாஸ்... நீங்க எதூமே பேசலையேன்னு கொஞ்சம் பயந்துட்டேன்... என்றான் புன்னகையுடன்..
ருத்ராக்ஷ் : இட்ஸ் ஓக்கே... நீங்க இந்த ஊரா... என கேட்க...
மிதுன் : ஹ்ம் இல்லையே பாஸ்... ஊட்டிக்கு இப்போ தான் ஃபர்ஸ்ட் டைம் வந்துர்க்கேன்...
ருத்ராக்ஷ் : ஓஹ் ஓக்கே .... ஹோட்டல் அட்ரெஸ் கேக்க தான் கேட்டேன்...
மிதுன் : அட்ரெஸ் சொல்லுங்க... நா என் பிரதர்ஸ்ட்ட கேக்குறேன்...
ருத்ராக்ஷ் : ××××× ... என கூறவும் பிரகாசமான முகத்துடன்...
மிதுன் : அட நாங்களும் அதே ஹோட்டல்க்கு தான் போறோம்... எங்க கூட வாங்க... நாம ஒன்னாவே போகலாம்...
ருத்ராக்ஷ் : இ... இல்..ல..
மிதுன் : அட வாங்க பாஸ்... முன்னாடிலேந்தே பாட்டு க்லஸ்ல இருக்க மாரி இழுத்துக்குட்டு.. கமான் யா... என இவன் சொல்ல சொல்ல கேட்காமல் மற்ற நாயகன்கள் இருக்கும் இடத்திற்கு அழைத்து சென்றான் மிதுன்...
மிதுன் யாரோ ஒரு புதியவனை அழைத்து வருவதை கண்ட ஏழ்வரும் புன்னகையுடன் ஹாய் என்றனர்...
ருத்ராக்ஷ் : ஹாய்..
அருண் : என்ன டா வந்து அரை மணி நேரம் கூட ஆகல.. அதுக்குள்ள புது ஃப்ரெண்ட புடிச்சிட்டியா...
மிதுன் : ஆமா டா... நம்ம ஹோட்டல்ல தான் இவரும் தங்க போறாரு... மீட் மை ஃப்ரெண்ட்... என கூறியவன் நாக்கை கடித்தான்...
ராம் : இன்னும் பேர கேக்கல தான டா நீனு என சிரித்து கொண்டே கூற... அசடு வழிந்த மிதுன் ருத்ராக்ஷின் புறம் திரும்ப... அதற்கு முன்னே...
ருத்ராக்ஷ் : ருத்ரா... ருத்ராக்ஷ்...
மிதுன் : நா மிதுன்... இவனுங்க எல்லாரும் என் பிதர்ஸ் அன் கசின் பிரதர்ஸ்... மித்ரான்... அஷ்வித்.. ஆதவ்.. வருண் ... அருண்... ராகவ்... அன் ராம்...
ருத்ராக்ஷ் : நைஸ் டு மீட் யு ஆல்...
அருண் : ஓக்கே மச்சான்... போதும் இன்ட்ரோ... வா வா பைக்ல ஏறு... போகலாம்... என இவன் வெகு சாதாரணமாய் பேச... ருத்ராக்ஷ் ஆச்சர்யமாக கண்களை விரித்தான்...
அவனிடம் இதுவரையிலும் ருமேஷ் விதுஷை தவிர்த்து வேறு எவரும் இப்படி தோழமையுடன் அதுவும் பார்த்த உடனே பேசியதே இல்லை...
அஷ்வித் : என்ன மச்சான் ப்லின்க்கிங்...
மிதுன் : அப்டிலா முளிக்காத பாஸு... எங்க கிட்டலாம் பாத்த அஞ்சு நிமிஷத்துக்கு தான் மரியாதை ... அப்ரம்லாம் எதிர்பார்க்க கூடாது... என அவன் தோளில் கை போட்டு கொண்டான்..
ஆதவ் : ஏன் நாங்க இப்டி பேசுரது புடிக்கலையா... என கேள்வியாய் கேட்க
ருத்ராக்ஷ் : ஹே இல்லப்பா... என் கிட்ட இதுவர யாரும் இப்டி டக்குன்னு ஃப்ரெண்லியா இருந்ததில்ல... அதான் கொஞ்சம் எம்பரசிங்கா இருந்தது...
ராம் : இப்டி அமைதியின் சிகரமா இருந்தா... உடனே எப்டி டா பேசுவாங்க...
ருத்ராக்ஷ் : உன்ன மாரி எனக்கென்ன வாலா டா இருக்கு... நான் சமத்தான பையன்... என அவனும் அவர்களுக்கு சலைத்த கூச்ச சுபாவமுள்ளவனில்லை என இவன் நிரூபிக்க...
மித்ரான் : அப்டி சொல்லு டா என் சிங்கக்குட்டி... என கை தட்ட... ருத்ராக்ஷ் வெடித்து சிரித்தான்...
வருண் : இப்டி இருந்தா எவ்ளோ நல்லாயிருக்கு... மாஃபியா கேங்க பாத்த அப்பாவி மாரில நீ இருந்த...
ருத்ராக்ஷ் : இன்னமும் எனக்கு அப்டி தான் டா இருக்கு... என இவன் சிரிக்காமல் கூற... அவன் முறைத்தான்...
மிதுன் : சரி சரி போதும் கடல போட்டது... டேய் எங்க கூட வரியா இல்லையா டா நீ... என ருத்ராக்ஷை பார்க்க...
ருத்ராக்ஷ் : வரலன்னு சொன்னா என்ன பன்னுவ...
ராகவ் : ஒன்னும் பன்ன மாட்டோம்... எங்க கூடவே துண்டு கட்டா தூக்கீட்டு போய்டுவோம்... என அவனை இழுத்து வண்டியில் ஏற வைத்தவன் அவன் பின் அமர... ருத்ராக்ஷ் வாயை பொத்தி விட்டு அஷ்வித் பைக்கில் ஹோட்டலை நோக்கி பறந்தான்...
அடுத்த பத்து நிமிடத்தில் இவர்கள் அந்த ஹோட்டலின் முன் பைக்குகளை சீரி கொண்டு நிறுத்த .... அந்த சத்தத்தின் வீரியத்தினால் ஏழாம் மாடியிலிருந்த பால்கெனியில் இருந்து ஒன்றாய் எட்டி பார்த்தனர் ருமேஷ் விதுஷ் இருவரும்...
ருத்ராக்ஷ் இங்கு வருவான் என எதிர்பார்த்திருந்த இருவரும் அவன் இவர்ளுடன் வருவான் என்றும் இவ்வளவு சீக்கிரத்தில் வருவான் என்றும் எதிர்பார்க்காமல் அடித்து பிடித்து புலம்பி கொண்டே கீழே சென்ற ஆதியன்த்தை நோக்கி ஓடினர்..
நீச்சல் குளத்தை நோக்கி சென்று கொண்டிருந்த ஆதியன்த் என்ன நினைத்தானோ அவன் அறைக்குள் சென்று முடங்கிக் கொண்டான்...
அவனை தேடி ஓட்டமும் நடையுமாய் வீரைந்து வந்த விதுஷும் ருமேஷும் ஆதியன்த்தின் அறை இருக்கும் தளத்தில் காலை வைக்கவும் அதே தளத்தில் புக் செய்யப்பட்டிருந்த அறைக்கு புதிதாய் கிடைத்த தோழர்களுடன் ருத்ராக்ஷ் வரவும் சரியாய் இருக்க... அவனை கண்ட இவ்விருவரும் தாவி குதித்து ஒரு அறைக்குள் பதுங்கி கொண்டனர்...
அருகருகே இருந்த அறைகளுக்குள் நுழைந்த தோழர்ளில் அந்த தளத்தில் இறுதியில் ஒரு குட்டி பருந்து அங்குமிங்கும் நடமாடி கொண்டிருப்தை குழப்பமாய் பார்த்தவாறே சென்றான் ராகவ்...
நீண்ட பயணம் உடலை முறுக்க... நாயகன்கள் அனைவருமே அடித்து போட்டதை போல் பஞ்சு மெத்தையை கண்டதும் படுத்து உறங்கி விட்டனர்...
ருத்ராக்ஷிடம் இவ்வளவு சீக்கிரத்தில் உருவான பந்தம் அவர்களை ஒரு புறம் ஆச்சர்யமாக்கினாலும் மறுபுறம் மகிழ்ச்சியடைய வைத்தது
மறுநாள் விடியற்காலையிலே முடிந்த மட்டும் ஆதியன்த்தை அறையை விட்டு வெளியே ஆனுப்பாமல் உள்ளேயே பூட்டி வைத்த ருமேஷும் விதுஷும் நிம்மதி பெருமூச்சு விடும் சமயம் திடீரென ஒலித்தது அவர்களின் செல்பேசி மணி...
இந்த முறை அழைப்பு வந்ததெு சித்ரனிடமிருந்து... அதை கண்டதும் பீதியாக... அவர்கள் எடுக்கும் முன் அது கட்டாகி விட்டது... புலம்பியவாறே திரும்பிய இருவரும் இந்த விடுதியை தோக்கி வந்து கொண்டிருந்த சித்ரனை கண்டு அதிர்ந்தனர்....
அவர்களுக்கு அந்த அதிர்ச்சி பத்தாதென அந்த நேரமென பார்த்து ஃபோனை நோண்டி கொண்டு காலை நேர ஜாகிங்கிர்க்காய் ருத்ராக்ஷ் அவன் அறையை விட்டு வெளியேறினான்...
அவன் கதவு திறக்கப்படும் ஓசையில் சுதாரித்த இருவரும் ஆதியன்த்தின் அறை கதவை திறந்து உள்ளே மறைய... அவன் கீழ் செல்வதை காலடி யோசை மூலம் உணர்ந்தவர்களுக்கு மனதில் அபாய மணி அடிக்க... அவர்களின் தலையிலே இடி விழும் அளவு இருந்தது ஆதியன்த் இல்லாத அந்த வெறுமையான அறை...
ருமேஷ் : டேய் ஆதி எங்க டா...
விதுஷ் : அய்யையோ அவன் நமக்கு முன்னாடியே கீழ போய்ட்டான் டா... என ஜன்னல் முன் நின்று கொண்டு குதிக்க... ஆதியன்த் இப்போது நீச்சல் குளத்தில் குதித்தான்...
ருமேஷ் : இப்போ என்ன டா பன்றது ...
விதுஷ் : நடக்குறது நடக்கட்டும்... அவங்க இன்னைக்கு தான் பாத்துக்கனும்னு இருந்தா அத நாம என்ன பன்னாலும் தடுக்க முடியாது... எல்லாத்தையும் அவங்க பாத்துப்பாங்க... என இவன் ஏதோ ஒரு அர்த்தத்துடன் கூறி விட்டு அவர்களை நோக்கினான்...
சித்ரன் அவனின் கருப்பு கன்னாடியையும் விழிப்புணர்வினால் மாஸ்கினையும் அனிந்து கொண்டு மெதுவாய் நடந்து வந்து கொடிருந்தான்... ருத்ராக்ஷ் அவனுக்கு நேரெதிரில் ஃபோனில் தீவிரிமாய் ஏதோ பார்த்தவாறு வந்து கொண்டிருக்க... ஆதியன்த் சுற்று முற்றி எதையும் கவனிக்காமல் தன்னையும் கவனிக்க விடாமல் நீருக்குள் சூரையாடி கொண்டிருந்தான்...
நீரின் இரைச்சல் சத்தத்தை கேட்டு தனிச்சையாய் அப்புறம் நடந்து வந்த சித்ரனின் இதயம் வெடவெடக்க... ருத்ராக்ஷ் திடீரென தன் கைகள் நடுங்குவதை உணர்ந்து ஃபோனை ஒரு கையால் பார்த்தவாறு மறு கையை பார்த்தவாறு வர... சட்டென நீருக்குள் மூச்சு விட இயலாமல் ஆதியன்த் நீரை விட்டு வெளியேற... சரியாய் அப்போது பார்க்காமல் வந்து கொண்டிருந்த சித்ரன் தெரியாமல் தண்ணீரில் காலை வைத்ததில் தடுமாறி நீரில் விழ போக... கீழே பார்த்து வந்த ருத்ராக்ஷ் சித்ரனின் கால் தடுமாறியதை கண்டு கனநேரத்தில் அவன் கரத்தை பிடிக்க... கீழே விழ போனவனை எம்பி குதித்து ஆதியன்த் தாங்க... மூவரின் கண்களும் ஒரே நேர் கோட்டில் சந்தித்தது...
அடுத்த நொடி அவ்விடத்திலிருந்து எழுந்த ஒரு ஒளி வேகமாய் பயணித்து ஒரு பெரிய மின்னலாய் வெடிக்க... நீலமாய் இருந்த நீண்ட வாணம் செம்மை நிறத்தை பூசி கொண்டு வெண்மேகங்களை கலைத்து விட... அந்த ஒளி பெருகும் இடத்தினை சூரியனும் அஞ்சி நெருங்க தயங்க... சூரியனை சுற்றியிருந்த நீல வாணமும் ... வெண்மேகங்களும் அந்த செந்நிறத்தை நோக்கி சென்றது....
நீரில் மூக்குளித்து நின்ற ஆதியன்த்தின் முகம் சித்ரனின் முகத்தினால் பாதி மறைந்திருக்க... அதே போல் சித்ரனின் முகத்தினால் ஆதியன்த்திற்கும் ருத்ராக்ஷின் முகம் மறைந்திருக்க... மூவரும் நேருக்கு நேர் நின்றிருந்ததை கண்ட விண்ணுலகின் அரசன் இடிந்து சிரிப்பதை போல் ஒரு பேரொலி எழும்பி பேரிடி இடிக்க... விதுஷும் ருமேஷும் அந்த கோர காட்சியினை கண்டு இன்றளவும் இருந்த சந்தேகம் நீங்கிட ... இரட்சகர்களின் விழிப்பு என கூறினர்...
விண்ணுலகின் கோர சம்பாஷனைகள் கேட்ட உலகவாசிகள் எதார்த்தமாய் பார்த்து விட்டு செல்ல... இதையே அர்த்தத்துடன் அந்த மலையின் உச்சியில் நின்று பார்த்து கொண்டிருந்தார் அவர்... தர்மன் ஐயா...
அவரின் அனுபவ மிக்க கண்களினோரப் சிறு துளி கண்ணீர் கசிந்திட தன் சுருங்கிய தோல் விரிந்திட.. முகம் கொள்ளா கசந்த புன்னகையுடன் நின்றிருந்தார்...
அந்த இடியின் சத்தத்திலும் உடலில் உணர்ந்திடாது தொடர்ந்து தீண்டிய மின்சார இணைப்பும் உடலை சிலிர்க்க அத்ததோடு கண்களை ஒளிர செய்தது...
ஆதியன்த் மற்றும் ருத்ராக்ஷ் இருவரின் கண்களிலும் ஒளிரும் ஒளியையும் இருவரும் பார்க்க இயலாமல் போக... மூவரும் மின்னலின் ஒலியில் ஒருவரை ஒருவர் பார்க்க இயலாமல் எழுந்து நின்றவர்கள் சரியாய் ஒருவரை ஒருவர் கூட காணாமல் " தன்க்ஸ் " " இட்ஸ் ஓக்கே " " ஜாக்கிரதையா போங்க " என கூறிவிட்டு மூவரும் மூன்று திசையில் பிரிந்து சென்றனர்...
சித்ரன் வெயில் விழும் திசையிலும்... ருத்ராக்ஷ் நீச்சல் குளமுள்ள திசையிலும்... ஆதியன்த் அதிக காற்றோட்டத்துடன் கருமேகங்கள் சூழ்ந்திருந்த திசையிலும் செல்வது மகா வம்சத்து மாவீர கோவன்களின் நிழல் போல் காட்சியளிக்க... இறுகியிருந்த இதழ்களும் உச்சரித்தது அப்பெயரை...
" அதிரதீர வம்சத்து மகாவீரட்ச்சகன்கள் "
இம்மூவரையும் மாடியில் உடற்பயிற்சி செய்தவாறு பார்த்து கொண்டிருந்த மற்ற நாயகன்கள்... " டேய் ருத்ரா " என கத்த... மூவரும் ஒரே நேரத்தில் நிமிர்ந்து பார்த்தனர்...
ருத்ராக்ஷ் : என்ன டா... என மேலே பார்க்க...
ஆதவ் : இரு டா நாங்க கீழ வரோம்... என்கவும் வெவ்வேறு புறம் திரும்பி நின்றிருந்த சித்ரனும் ஆதியன்த்தும் அவரவர் வழியில் நடக்க செல்ல...
வருண் : பாஸ்... உங்களையும் தான்... இரெண்டு பேரும் போகாதீங்க... என இவன் கத்த... அவர்களும் நடையை நிறுத்தி விட்டு திரும்பி நின்றனர்...
வெயிலின் தாக்கத்தினால் ஆதியன்த்தின் முகம் ருத்ராக்ஷின் முகமும் க்லர் அடிக்க... ருத்ராக்ஷ் என்ன நித்தானோ... உடனே அவன் மாஸ்கை எடுத்து மாட்டி கொள்ள... ஆதியன்த் ஒரு டவலை எடுத்து அவன் முகத்தையும் துடைத்தவாறு தலையை துவட்டி கொண்டிருந்தான்...
கீழே வந்தவர்கள் மூச்சினை வாங்க... அவர்களின் பெரும் மூச்சுக்களை கேட்ட சித்ரன்...
சித்ரன் : என்னனாச்சு... எதுக்கு கூப்ட்டீ.க..
ராம் : இருங்க பாஸ்... மூச்சு வாங்கிக்கிறோம்...
ஆதியன்த் : எங்கள ஏன் பா் அதுக்கு நிக்க சொன்னீங்க...
அஷ்வித் : அட இரேன் யா மூச்சு முட்டுதுல்ல...
ருத்ராக்ஷ் : அப்ரம் என்னத்துக்கு டா இவ்ளோ வேகமா ஓடி வந்தீங்க...
ராகவ் : உங்க முணு பேரையும் பாத்தப்போ எங்கையோ ஒன்னா பாத்த மாரியே இருந்துச்சு டா...
ருத்ராக்ஷ் : என்னையே நீங்க நேத்து தான டா பாத்தீங்க...
சித்ரன் : அதோட இவங்களும் என்ன பாத்ததில்ல...
ஆதியன்த் : அப்போ நீங்க எங்கள பாத்துர்க்கீங்களா...
சித்ரன் : என்னால பாக்க முடியாது... ஐம் அ ப்லைண்ட்... என அவன் புறம் திரும்பி கூறினான்...
அருண் : ப்லைண்டா... அப்டி தெரியலையே பாஸ்...
சித்ரன் : போக போகதான் தெரியும்... என இவன் இப்போது அவனை பார்த்து கூற...
மிதுன் : ஆனா உங்கள ப்லைண் சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க... யாரு எங்க நின்னு பேசுறோம்னு கரெக்ட்டா ரெஸ்பான்ஸ் பன்றீங்க... என ஆச்சர்யமாய் கூறினான்...
சித்ரன் : ம்ம்ம் நா சின்ன வயசுல இருந்தே ப்லைண் க்லஸ் அட்டென் பன்னீர்க்கேன்... சோ உன்னிப்பா கவனிக்க முடியும்...
மித்ரன் : குட்.. பைத பை உங்களுக்கு ஊட்டி நேட்டிவா ...
சித்ரன் :ஆமா...
ஆதியன்த் : இல்ல நா டூ டேஸ் முன்னாடி தான் இங்க வந்தேன் பாஸ்... உங்களுக்கும் நேட்டிவா...
ருத்ராக்ஷ் : எனக்கு நேட்டிவ் இல்ல பாஸ்..
மிதுன் : எங்களுக்கு நேட்டிவ் தான் பாஸ்... பட் வந்து பல வர்ஷமாச்சு...
ஆதியன்த் : ரொம்ப ஃபார்மலா பேசுறோமே... உங்களுக்குலாம் பேரில்லையா...
வருண் : பாத்த உடனேயேவா நார்மலா பேச முடியும்... நீங்க தீவிரவாதியா இல்லையான்னு செக் பன்ன வேணாமா பாஸ்..
ஆதியன்த் : ஏன் மூஞ்ச பாத்தா உனக்கு தீவிரவாதி மாரியா இருக்கு... என இவன் டவலால் துடைப்பதை நிறுத்தி விட்டு கண்களை விரித்து கேட்டான்...
ருத்ராக்ஷ் : பேசுனா தெரிஞ்சிரும்னு நெனக்கிறேன்...
ஆதியன்த் : என் சூப்பர் சிங்கர் குரல கேவலப்படுத்தாத டா... என இவன் வெறியுடன் கூற...
சித்ரன் : சூப்பர் சிங்கர் குரலா... ஏதோ கரகரன்னு கேக்குது... என இதழோரம் அரும்பிய புன்னகையுடன் இவன் கேட்க... மேல் நின்று இவர்களை பார்த்து கொண்டிருந்த ருமேஷ் விதுஷ் இருவரின் மனமும் சித்ரனின் இதழோர புன்னகையில் ஆச்சர்யமடைந்தது..
ஆதியன்த் : யூ டூ ப்ருட்டுஸ்... வொய் ப்ரோ... என பாவமாய் சித்ரனை பார்க்க...
அருண் : யு கூல் ப்ரோ... நா உனக்கு சப்போர்ட் பன்றேன்...
ஆதவ் : இன்னும் பேரே இரெண்டு பேருக்கும் தெரியலையாம்... இதுல சப்போர்ட்டா நீ...
அருண் : தமிழன்ங்குர சம்மந்தத்த விட வேற என்ன டா சம்மந்தம் வேணும்.. என இவன் எகிர...
ருத்ராக்ஷ் : சபாஷ் சபாஷ்... என்ன ஒரு தமிழ் பற்று டா மச்சான் உனக்கு... என அவன் தோளை தட்டினான்...
சித்ரன் : ஹ்ம் உங்க கிட்ட பேசுறது ரொம்ப ஃபெமிலியரா இருக்கு... வந்த டென்ஷன் கூட போய்டுச்சு... ஐம் சித்ரன்... என இவன் அவனை அறிமுக படுத்தி கொண்டான்...
ஆதியன்த் : எனக்கும் ஃபெமிலியரா இருக்கு... ஐம் ஆதியன்த்...
ருத்ராக்ஷ் : ஐம் ருத்ராக்ஷ்.. நாங்க புதுசா சேந்த கங்... என கண்ணடித்து கூறிட...
ராம் : ஆமா நாகள்ளாம் ப்ரதர்ஸ் அன் கசின்ஸ்... மித்ரன் அஷ்வித் வருண் அருண் ஆதவ் மிதுன் ராகவ் அப்ரம் நா ராம்...
ருத்ராக்ஷ் : ஏதோ டென்ஷன்னு சொன்னியே டா... நாங்க வேணும்னா ஹெல்ப் பன்னனுட்டுமா...
சித்ரன் : அதெல்லாம் ஒன்னும் இல்ல... இப்போ ரிலக்ஸாய்டேன்... இனிமே நானே சமாளிச்சிடுவேன்...
ஆதவ் : சரி சித்... உனக்கு ஊட்டில எல்லா இடமும் தெரியுமா...
சித்ரன் : ஹான் தெரியுமே... சுத்தி காட்டவா... என குறும்பாய் கேட்க...
ராகவ் : பீசில்லாம ஒரு கைடு கெடச்சிட்டான்..
சித்ரன் : ஹாஹா ஈவ்னிங் இந்த அட்ரெஸ்க்கு வந்துடுங்க... என ஒரு கார்டை நீட்டினான்...
ருத்ராக்ஷ் : சாரி காய்ஸ்.. இன்னைக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு... நா நாளைக்கு உங்கள மீட் பன்றேன்...
ஆதியன்த் : எனக்கும் ஒர்க் இருக்கு டா... நாளைக்கு நா அங்க வந்துடுறேன்...
சித்ரன் : சரி ஓக்கே தென் லெட் மி லீவ்... வரேன் என்று விட்டு அவன் வந்த வழியே சென்றான்... அவனூடே ருத்ராக்ஷும் சொல்லி விட்டு கிளம்பிட... ஆதியன்த்தும் மாடிக்கு ஓட.. காலை உணவுக்காய் அருணும் மிதுனும் உணவு விடுதிக்கு சென்றனர்...
ருமேஷ் : வசு விசு என அவர்களின் செல்ல பிராணிகளை பார்க்க... அவைகள் இரண்டும் அட்டென்ஷனில் அவனை நிமிர்ந்து பார்த்தது...
விதுஷ் : உம் கரம் நலம் பெற்று விட்டது தானே விசு... என்க... தன் கோதுமை நிற சிறகினை மடித்து வைத்து எம்பி காட்டியது விசு...
ருமேஷ் : நன்று.. தற்சமயம் விஞ்ஞவெள்ளன் விடு பெற் கொண்டான் எனும் காரியம் ( விஷயம் ) அவர்களை விரைந்தடைந்திட கூடும்... ஆயினும் நிங்கள் இருவரும் இரட்ச்சக விழிப்பும் இமை சஞ்சரிக்கும் நொடி பொழுதினில் நிகழ்ந்தேரியதென அறிய செய்ய வேண்டும்... என கூற ஒரே போல் தலையாட்டிய வசுவும் விசுவும் விண்ணில் சிறகடித்து பறந்தனர்..
மாயம் தொடரும்...
ம்ம்ம்ம் என் ரைட்டிங் மாரியே இல்லல... ஒன்னும் இல்ல... MTK க்கு அப்ரம் ஒரு சைன்ஸ் ஃபிக்ஷன்... ஒரு லவ் ... அன் ஒரு ஹாரர் கலந்த லவ் ஸ்டோரி... சை... நானே அத திகில் கதைன்னு மறந்துடுவேன் போல... லவ் கலந்த ஹாரர் ஸ்டோரி எழுதுனதுனால ஃபன்ட்டசி ஊருக்கு போய்ர்க்கு... போய் கூட்டிக்கிட்டு வந்துடுறேன்... எப்டியும் மமொக்கையா தான் இருக்கும்... லேட்டா வேற போட்டுட்டேனேன்னு கோவ படாதீங்க... நம்ம மாயம் கதை இனிமே ஸ்பீடப்பாய்டும்... லஃக் இருக்கவே கூடாது... சோ அடுத்தடுத்து அத்யாயங்கள் டக்கு டக்குன்னு நகரும்... வாசிச்சிருங்க... முடிஞ்சளவு சீக்கிரமே யூடீஸோட வரேன்... டாட்டா
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro