Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

மாயம் - 54

சடாரென திரும்பிய ஆருண்யா அவள் முன் நின்ற நித்ராவை கண்டு சற்று பின் நகர

நித்ரா : பயப்புடாதீங்க.. நா எதுவும் செய்ய மாட்டேன்.. நா நித்ரவிக்கா... நீங்க

ஆருண்யா : ஆருண்யகவி..

நித்ரா : வித்யாசமா இருக்கு உங்க பேரு.. இங்க என்ன பன்றீங்க...

ஆருண்யா : எமது சகோதரியை தேடி வந்தேன்...

நித்ரா :ஹோ.. நீங்க மூணு பேரும் ட்ரிப்லெட்ஸா... என கேட்டு விட்டு பின் அவளுக்கு புரியாதே என நாக்கை கடிக்க அவளின் செய்கையில் மெலிதாய் சிரித்த ஆருண்யா

ஆருண்யா : ஆம்.. யான் இரண்டாமவள்... என பதிலளித்தாள்...

நித்ரா : உங்களால நா பேசுரத புரிஞ்சிக்க முடியுதா... ஆங்கில வார்த்தைய கூட... என ஆச்சர்யமாய் கேட்க

ஆருண்யா : எளிதாய் புரிந்து கொள்ள இயலும்.. என்றாள் சிறு புன்னகையுடன்...

நித்ரா : அது எப்டி... இங்க ஆங்கில வார்த்தை யாருக்குமே புரியாதே..

ஆருண்யா : யான் எமது இருவது வயதிற்கு முன் வரை பூலோகத்தில் தான் எம் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தேன்.. மூன்று வருடம் முன்பு இங்கு கிடத்தப்பட்டேன்.. ஆதலால் தாம் பறைவதை எளிதாகவே எம்மால் புரிந்துக்கொள்ள இயலும் ... அவள் கூறியதை உன்னிப்பாய் கவனித்தாள் நித்ரா

லீலாவதியை பற்றி வளரி பாட்டி நன்கு இவர்களுக்கு விவரிக்கவில்லை... அதுவே யட்சினிகள் அவரின் மகள்கள் என்ற உண்மையை நித்ரா அறியாமல் போனதன் காரணம்..

நித்ரா : அப்டினா நீங்களும் பூமில பிறந்தவங்க தானா... சர்ப்பலோகத்துல இல்லையா...

ஆருண்யா : பூலோகத்தில் பிறந்தவளே... யமது தந்தை ஒரு மானுட பிறவியே ஆவார்..

நித்ரா : ஹோ.. என்றதோடு இவள் சற்று அமைதி காக்க

ஆருண்யா : தாம் எவ்வாறு இங்ஙனம் சிறை வைக்கப்பட்டீர்கள்.. தம்மை பூலோகத்தில் பாதுகாப்பாகவே வைத்திருப்பதாய் அருளவர்தனன் புலம்பி கண்டிருக்கிறேன்..

நித்ரா : ஹ்ம் எப்டின்னு தெரியல.. அன்னைக்கு ஏதோ ஒரு விசைனால நாங்க இழுக்கப்பட்ட மாரி ஒரு நியாபகம்.. வேற எதுவும் தெரியல என கூறியவளின் நினைவுகளில் ராமின் தவிப்பு நிறைந்த அந்த முகம் வந்து செல்ல கண்களில் தானாய் கண்ணீர் ஊற்றெடுத்தது...

ஆருண்யா : மன்னிக்கவும்.. ஏதேனும் தவறாய் வினவிவிட்டேனா.. என பதற்றத்துடன் வினவ

நித்ரா : இல்ல இல்ல... அன்னைக்கு ஒருத்தர் என்ன காப்பாத்த ரொம்ப ட்ரை பன்னாரு... அவர விட்டு போய்டு வேணோன்னு அவ்ளோ பயம் இருந்துச்சு... அவரு கைய விற்ற கூடாதுன்னு மனசு தவிச்சிச்சு... ஆனா வேற வழி கிடைக்கல... நாங்க பிரிஞ்சிட்டோம் என அழும் குரலில் எங்கோ வெறித்தவாறு கூறியவளின் தோளை ஆறுதலாய் பிடித்த ஆருண்யா

ஆருண்யா : வருத்தமடையாதீர் தோழியே.. தமது மணாளரை வெகு விரைவிலே தாம் சென்றடைந்து விடலாம்... என கூற சட்டென அவள் புறம் திரும்பினாள் நித்ரா

நித்ரா : மணாளரா.. என குழப்பமாய் கேட்டவளின் கண்களில் முத்து முத்தாய் தேங்கியிருந்த கண்ணீர் துளியை மிருதுவாய் துடைத்து விட்ட ஆருண்யா உறுதியளிக்கும் புன்னகையுடன்

ஆருண்யா : ஆம்.. இத்தகைய உணர்வினை மணாளரை விடுத்து வேறெவரிடம் தம்மால் எதிர் நோக்க இயலும் தோழியே.. நீவிர் வருத்தமடைவதை விடுத்து நம்பிக்கையுடன் இருங்கள்.. இவ்வொற்றை கிழமை முடிந்தாகி விட்டால் தாம் தமது இருப்பிடத்திற்கே செல்லலாம்.. அங்கு மீண்டும் தமது மணாளரை தாம் காணலாம் என விஞ்ஞவெள்ளன் இவர்களை அனுப்பி விடுவதாய் கூறிய கூற்றை நினைவு வைத்து கொண்டு கூறினாள்...

நித்ரா : இவங்களோட திட்டம் நிறைவேறி நா பூலோகத்துக்கே போய்ட்டாலும் என்னால அவர பாக்க முடியாது..

ஆருண்யா : ஏன் அவ்வாறு பறைகிறீர்

நித்ரா : ஏன்னா.. ஏன்னா இவங்க எதிர்க்கப் போறதே என் குடும்பத்தத் தான்.. அவரும் அதுல ஒருத்தர் தான்...

ஆருண்யா : தமது குடும்பமா... தம்மால் விவரித்து கூற இயலுமா

நித்ரா : தாரளமா.. இவங்க பழி வாங்கி ஏதோ யாகம் செய்ய நினைக்கிறதே.. எங்க அப்பா அம்மா அத்த மாமா அண்ணன் அத்தான்களையும் வதம் செய்ரதுக்கு தான்..

ஆருண்யா : ஆனால் ஏன் தோழியே.. அவர்கள் யாகம் நிகழ்த்துவதாய் பறைவது ஐந்து வம்சங்களை கொண்டுத் தானே...

நித்ரா : எனக்கும் ரீசன்ட்டா தான் தெரிய வந்துச்சு ஆருண்யா.. எங்களோட அண்ணன்களும் அத்தான்களும் தான் பஞ்சலோக வம்சத்தவர்கள்... எங்களோட அப்பாங்க தான் சஹாத்திய சூரர்கள்.. அம்மாங்க யாளி வம்ச வீராங்கனைகள்.. எங்க அத்தைங்க தான் நாகனிகள்... எங்க மாமாக்கள் தான் கோவன்கள் என கூற இது ஆருண்யாவிற்கே புதிய தகவல் தான்...

ஆருண்யா : பின் கவலை ஏனம்மா... தம்மனைவரையும் காத்திட விரைவிலே அவர்கள் வருவார்கள்... எதற்கும் வருத்தமடையாதீர்.. இந்த யட்சினி சர்ப்ப வம்சத்தவர்கள் தோல்வியை தான் தழுவ உள்ளனர்.. அவர்களினால் ஏதும் செய்ய இயலாது.. என கூற நித்ரா அவளை உடனே அணைத்து கொண்டாள்..

நித்ரா : தன்க் யு .. தன்க் யு சோ மச்...

ஆருண்யா : இதிலென்ன இருக்கிறது... தம்மை மகிழ்வித்ததில் எமக்கும் மகிழ்ச்சியடா என நித்ராவின் தலையை மிருதுவாய் கோதி விட்டாள்...

எதற்சியாய் தன் கண்களை உயர்த்திய நித்ரா அவர்களுக்கு பின் சற்றே தொலைவில் தெரிந்த மதில் சுவரின் மிது முட்டு கொடுத்தவாறு யாரோ அமர்ந்திருப்பதை கண்டு திடுக்கிட அவளது முகமோ நிலவின் ஒளியில் அம்மதிலின் மீது அமர்ந்திருந்தவனுக்கு தெள்ளத்தெளிவாய் தெரிந்தது...

ஆருண்யா அவள் சட்டென எங்கோ பார்ப்பதை கண்டு அணைப்பிலிருந்து தானாகவே வெளியாகி அவள் பார்க்கும் இடத்தை தானும் கண்டாள்... ஆனால் ஆருண்யாவின் பார்வை அம்மதிலை அடைவதற்கு முன்பே மதிலின் கீழிருந்து இவர்களின் பின்னிருந்த ஒரு மண்டபத்திற்குள் நிழல் உருவமொன்று சடாரென பாய்ந்ததில் பதிந்தது...

இருவரும் இருவேறு திசையில் கண்களை விரித்த படி பார்த்தவாறிருக்க ஆருண்யாவின் மனக்கண்ணில் அடர் நீல நிற இரு கண்கள் மின்னலென பாய்ந்து மறைந்தது...

ஆருண்யாவின் மனதில் அபாய ஒலி ஒன்று அடிக்க அப்போதே துஷ்ரிகளின் நினைவு வந்தவளாய் சுற்றி நோக்கினாள்...

ஆருண்யா : துஷ்ரிகள் ஒன்றின் அரவம் கூட கேட்கவில்லையே... இது எல்லாறு சாத்தியம் எவறேனும் அத்து மீறி நுழைந்து விட்டனரா என மனதினுள்ளே இவள் எண்ணி கொண்டிருந்த சமயத்தில் இவ்விரு பெண்களின் செவிகளையும் கிளித்தெறிவதை போல் அந்த கோட்டை முழுவதும் ஓங்கி எதிரொலித்தது துஷ்ரிகளின் ஓசை

அதில் நித்ரா அரண்டு போய் ஆருண்யாவின் கரத்தை இறுக்கி பிடிக்க ஆருண்யா உடனே அவளது கரத்தை ஆதரவாய் பிடித்து கொண்டாள்...

ஆருண்யா : ஐயமடையாதீர் நித்ரா.. அது துஷ்ரிகள் என்னும் ஒரு உயிரினத்தின் ஓசை.. அவ்வுயிரினம் இக்கோட்டையை எந்நேரமும் காவல் காக்கும்... ஏதேனும் சத்தமெழுப்புவதை அது கண்டு விட்டால் உடனே இவ்வாறு ஓசை எழுப்பி துஷ்ரந்கள் என்ற ஜந்துக்களை எழுப்பி விடும்.. அதுக்கள் தாக்க தொடங்கி விடும் என அவளுக்கு விவரித்து அமைதி படுத்தினாள்...

நித்ரா உடனே அந்த மதிலின் புறம் திரும்பி அங்கிருந்தவனை காண அவனோ அவளை ஒரு முறை கண்டு விட்டு கண்ணிமைப்பதற்குள் அங்கிருந்து மறைந்து சென்றான்...

நித்ரா : நாம இப்போ என்ன பன்னனும்... நம்மள யாராவது பாத்துட்டா ஆபத்தாகீடாதா

ஆருண்யா : தம்மை நெருங்க எண்ணும் இன்னல் எம்மை கடக்க வேண்டும் நித்ரா.. தாம் எதற்கும் ஐயமடைய வேண்டாம் என கூறியவளின் கண்கள் நீல நிறத்தில் ஒளிர்ந்தது...

ஆருண்யா அங்கிருந்தவாறே துஷ்ரிகளின் ஓசை எங்கிருந்து வருகிறதென தேட அவளை சலிப்பாக்குவதை போல் பல்வேறு இடங்களில் கேட்டு கொண்டிருந்தது...

ஒரு புறம் மதிலின் அருகில்... மறுபுறம் பாதாள சிறைசாலையின் வாயிலருகில்.. இன்னோறு புறம் கோட்டையின் பின் புறம் .. முன் புறம் மற்றும் இடது வலதிலும் மேல் புறத்திலும் கேட்டது...

ஆனால் இத்தகைய அரவத்திலும் அமைச்சன்கள் இன்னும் எழாதது தான் ஆருண்யாவிற்கு ஆச்சர்யமாய் இருந்தது...

நித்ரா : நாம நம்மளோட ரூமுக்கே போகலாம் ஆருண்யா... நம்ம சிஸ்டர்ஸ் தனியா இருப்பாங்க இல்லையா என கூறிய பின்னே ஆருண்யாவின் மூளையில் ஒரு வேளை இது நித்யாவினால் உருவாகியிருந்த அரவமாய் இருக்குமோ என்ற சந்தேகம் எழ உடனே தலையசைத்தாள்...

ஆருண்யா : அவ்வாறே நடக்கலாம் நித்ரா... தாம் தமதறைக்குச் செல்லுங்கள்...

நித்ரா : நீங்க எங்க போறீங்க...

ஆருண்யா : யான் எமது சகோதரியை தேடி செல்கிறேன் நித்ரா.. விரைவிலே அவளுடன் அறைக்கு எச்சரிக்கையுடன் சென்றிடுவேன்... தாம் செல்லுங்கள்

நித்ரா : சரி... ஜாக்கிரதை என்றதோடு இருவரும் அங்கிருந்து பிரிந்து சென்றனர்...

ஆருண்யா அங்கிருந்து நித்யாவினை கண்டறிய எவ்வழியில் செல்வதென தெரியாமல் தவிக்க பின் ஒரு முடிவெடுத்தவளாய் பாதால சிறை வாசலை நோக்கிச் சென்றாள்...

ஆனால் அதன் வாயிலே இரும்பு கதவினால் பூட்டப்பட்டிருப்பதை கண்டவள் சில பல யோசனைகளின் பின் அந்த இரும்பு கதவினை மெல்ல தட்டினாள்...

ஆழ்ந்த நிசப்தம் நிலவிட தன் தொண்டையை செருமி கொண்டவள்...

ஆருண்யா : நித்தி.. நித்தி நின் உள் தான் வீற்றிருக்கிறாயா... எமக்கு பதிலளி நித்தி என மெதுவாய் கேட்க எந்த ஒரு பதிலும் இல்லையென்றதும் தன் சகோதரி அங்கில்லை என்பதை உணர்ந்து உடனே அங்கிருந்து சென்றாள்...

அந்த இரும்பு கதவிற்கு பின் இருந்தவனோ ஆருண்யாவின் குரலை அடையாளங்காண இயலாமல் குழப்பத்துடன் பாதால சிறைக்குள் துஷ்ரிகளின் ஓசையை எழுப்பி விட்டவாறே சென்றான்...

வேகவேகமாய் மாடி படிகளில் ஏறி தமக்கென்று அளித்த அறைக்குள் பூனை நடையிட்டு நுழைந்த நித்ரா அதே அறையில் இருக்கும் வெட்டவெளியில் இருவர் அப்போதே நுழைந்து அவள் தோழிகளை பார்த்து கொண்டிருப்பதை கண்டு விக்கித்து போனாள்...

யோசிக்காமல் அருகில் சுவரில் மாட்டப்பட்டிருந்த ஒரு வாளை உருவினாள்... அந்த சத்தத்தில் அவ்விருவர் திரும்ப வாளை பிடிக்க கூட அறிந்திடாத நித்ரா அதை உயர தூக்கி காட்டி

நித்ரா : யார் நீங்க.. இங்க என்ன செய்றீங்க.. தள்ளிப் போங்க.. இ..இல்லனா குத்தீடுவேன் என அந்த வாளை இரு கரங்களாலும் பிடித்தபடி மிரட்ட அவ்வாள் அதிக இடையுடன் இருந்ததால் வேறு அவளால் அதை பிடிக்கவும் முடியவில்லை...

அவ்விருவர் ஒரு வரை ஒருவர் முளித்த படி பார்த்துக் கொள்ள

நித்ரா : சொன்னா கேக்க மாட்டீங்களா... போ..போங்க என குத்த வருவதற்குள் " அடியே குட்டி பிசாசே குத்தீராத டி நாங்க தான் " என அந்த வாளின் மறுமுணையை அவ்விருவருள் ஒருவன் பிடிக்க அவன் குரலை கேட்டதும் முதலில் முளித்த நித்ரா பின் " மித்து அண்ணா " என அந்த வாளை அப்படியே போட்டு விட்டு ஓடி சென்று அவணை அணைத்து கொள்ள அந்த வாளின் மறுமுணையை பிடித்திருந்தவன் இப்போது அதை விட்டுவிட்டு ஓடி வந்த தங்கையை ஆறுதலாய் அணைத்து கொண்டான் மித்ரன்...

தன் சகோதரன் தூக்கி போட்ட வாளினை அலேக்காய் பிடித்து " எரும கீழ விழுந்துருந்தா ததுஷ்ரிகள் வந்துடும் டா" என கத்தினான் மிதுன்...

இவர்களின் கத்தல்களில் அனைவரும் திடுக்கிட்டு எழுந்து கண் முன் நிகழ்ந்த காட்சியை கண்டு அதிர்ந்தனர்...

மாயம் தொடரும்...

ஹாய் இதயங்களே... உங்களுக்கு பெரிய யூடி குடுக்க தான் எனக்கும் ஆசை... அஆனா இன்னைக்கு அதுக்கு வாய்ப்பில்ல... இன்னைக்கு நைட் யூடி முடியுமா தெரியல... இல்லனா நாளைக்கு தான்... ஹோப் யு கன் அண்டர்ஸ்டாண்... டாட்டா.

DhiraDhi❤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro