மாயம் - 53
துருவ் : யோக்யா என அழைக்க நம் நாயகன்கள் அனைவரும் அவனை " என்ன யா " என்பதை போல் திரும்பி பார்க்க " ம்க்கும் யான் தான் யோக்யா " என தன்னிருப்பிடத்தை காட்ட தொண்டையை செருமி தன்னை அறிமுகப்படுத்தி கொண்டான் நம் முதலணி நாயகர்களின் தோழனும் தமையனுமான பத்யரூனாவின் கணவனும் நம் ஐலாவின் தந்தையுமான சர்ப்பலோக கோட்டையின் சேனை தலைவன் யோக்யா...
கருத்த நிறம்.. மஞ்சள் நிற கண்கள்.. மிடுக்கான உடல்.. என கம்பீரமாய் நின்றவனை ஸ்நேகமான புன்னகையுடன் துருவ் வேகமாய் அணைத்து கொள்ள அவனுடைய இளவல்களோ டிஃபென்ஸ் பொஸிஷெனில் நின்று கொண்டிருந்தனர்...
யோக்யா : வரவேற்கிறேன் துருவா... என துருவனை தானும் அணைத்துக் கொண்டான்...
யோக்யா : வரவேற்கிறேன் பஞ்சலோக சூரர்களே... தமது வரவிற்காகவே பல வருடங்களாய் இம்மண்ணில் காத்துக்கிடக்கிறேன்... என இவர்களிடம் புன்னகையுடன் கூறினான்...
மித்ரன் : அப்போ இவரு தான் ராஜ்ஜிய மர்வதன மண்டபத்த பாதுகாத்த யோக்யாவா... என துருவை பார்க்க துருவ் தலையசைத்தான்...
யோக்யா : பரவாயில்லையே துருவா.. எமது இடையளவு இருந்த நீ இப்போழ்து எம் தோளை தாண்டியும் வளர்ந்துள்ளையே எம்மை இன்னமும் நினைவில் வைத்திருக்கிறாயோ... என புன்னகை மாறாமல் நலம் விசாரித்தான்...
துருவ் : எவ்வாறு தம்மை மறவேன் யோக்யா.. நீவிர் எனது அத்தைகளின் தமையனுமாயிற்றே...
ருமேஷ் விதுஷ் : பொருத்தருள வேண்டுகிறோம் யோக்யா... தமது மானுட உருவினை கண்டிறாததால் தாம் தானென கண்டறிய இயலவில்லை என பணிவாய் தலை பணிந்தனர்...
யோக்யா : இதிலென்ன இருக்கிறது இரட்டையன்களே... தம் இருவரை சிறுவர்களாய் கண்டது.. தற்போதே இளைஞர்களாய் காணுகிறேன்.. தம்மை கண்டதிலும் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் என இருவரையும் அணைத்து கொள்ள...
விதுஷ் : ஆயினும் யாமல்ல யோக்யா... ஏனெனில் யாம் இருவர் தம்மை பல முறை சர்ப்பலோகத்தில் கண்டிருக்கிறோம்... ஆழிலோகம் மூலமாய் சில தகவல்களை சேகரிக்க சர்ப்பலோகத்திற்கு வந்துள்ளோம்... ஆயினும் தாம் தான் சேனை தலைவனென அறியேன்...
யோக்யா : இருக்கட்டும் விதுஷ்யவா.. ஈடேரியதில் மாற்றம் ஏற்படுத்தி என்(ன) விழைய போகிறது... அடடே சேனை தலைவர் மருதீபனின் தனையன்கள்... கௌத்தம கார்த்திக் அஜயதீபன்... தாம் இருவரும் நலமா... தம்மை கண்டதில் நெகிழ்ச்சியுளுள்ளேன் என இருவரையும் வேகவேகமாய் சென்று அணைத்து கொள்ள தந்தையின் பெயர் கூறியதாலோ என்னவோ ஒருவரை ஒருவர் பார்த்து கொண்ட சகோதரர்கள் இருவரும் யோக்யாவை மீண்டும் அணைத்து கொண்டனர்...
கார்த்திக் : யாம் இருவரும் நலம் தான் சேனை தலைவரே...
யோக்யா : அட யோக்யா என்றே எம்மை அழையுங்கள் .. யாம் தம் தாய் தந்தையருக்கு எவ்வாறு நண்பனோ அவ்வாறே தமக்கும் நண்பனாவேன்...
ராகவ் : தாம் எம்மனைவர் பற்றியும் அறிவீரா...
யோக்யா : நிச்சயமாக ராகவா.. தாம் அனைவரையும் யான் அறிவேன்... ஆயினும் கோவன்களின் மகன்களான இரட்சகன்களை அறிந்திடத்தான எமக்கு வாய்ப்பு அமையவில்லை...
ஆதியன்த் : ஆதலின் என்ன யோக்யா... மேலும் யாம் தம்முடன் இங்ஙனம் தானே இருக்க உள்ளோம்... யாம் மூவரும் எப்படிப்பட்ட சேட்டைக்காரர்களென்பதை விரைவிலே அறிந்து கொள்வீர்...
ருத்ராக்ஷ் : மானத்த வாங்காத டா என அவன் மண்டையில் தட்டினான்...
யோக்யா : ஹாஹா தம்மை காண்கையில் காற்கோவனே இங்ஙனம் வந்திருப்பதை போலுள்ளது இரட்சகனே...
ருத்ராக்ஷ் : அதென்ன எம் மூவருக்கு தனி அடைமொழி... எமது இளவனையும் தாம் நாமமிட்டே அழையுங்கள் யோக்யா...
யோக்யா : தாராளமாக கண்ணா... சரி தாம் எவ்வாறு பூலோகத்திலிருந்து சர்ப்பலோகம் வந்தீர்கள்...
மிதுன் : பாலமுத்திர கோட்டையினுள் யாம் மறைத்து வைத்திருந்த ஒரு வாயிலின் வழியாக இங்ஙம் வந்துள்ளோம் யோக்யா...
யோக்யா : அவ்வாறெனில் இன்னமும் பூலோகத்தில் ஒரு வாயில் உள்ளதா...
ஆதவ் : யமது கட்டுப்பாட்டின் கீழ் உள (உள்ளது) யோக்யா..
யோக்யா : நன்று நன்று... அவ்வாயிலை தாம் எல்லாறு மறைத்தீர்களென்பதை அறியேன்.. ஆயினும் தமது செயலால் அப்படி ஓர் வாயில் உள்ளதை இத்துனை வருடாந்திரங்களிள் எவருமே அறியவில்லை ... பாராட்டுகிறேன் பஞ்சலோக சூரர்களே... என மனதார பாராட்டினான்...
அருண் : மிக்க மகிழ்ச்சி யோக்யா... சரி யாம் இனி என்(ன) வினை புரிய வேண்டுமென்பதை கூறுவீரா...
ராம் : அதற்கும் முன்... எம்மவள்களை பற்றி அறிய விரும்புகிறேன் யோக்யா...
யோக்யா : பஞ்சலோக விந்தைகள் அனைவரும் நலமுடன் உள்ளனர் ராமா... யாவருக்கும் எத்தீங்கும் விழையவில்லை...
அஜய் : ஆயினும் ஐலாவை கிடத்தி சென்ற நாகமனிதனை எவரோ கொன்றுள்ளனரே... ஐலாவும் இங்கு தான் உள்ளாளா என கேட்டையில் அவன் கண்களில் அத்துனை ஆர்வம்...
அதில் தவிப்பும் நிறைந்திருப்பதை கண்டவாறு தலையசைத்தான் யோக்யா...
யோக்யா : எம்மகள் நலமாகவே உள்ளாள் அஜயதீபா என கூறியவன் சற்று அமைதியாக அனைவரையும் கவனிக்க இவனது கூற்றில் அனைவரும் அதிர அஜயோ அவள் நலமாக உள்ளாள் என்பதை மட்டும் உள்வாங்கியதால் நிம்மதி பெருமூச்சு விட்டான்...
ருமேஷ் : என்ன... ஐலா தம்முடைய மகளா... என அதிர்ச்சியாய் கத்த அதிலே அவனை கவனித்த அஜய் அவன் கூறுவது புரியாமல் முளிக்க அஜயை கண்டு புன்னகைத்த யோக்யா...
யோக்யா : ஆம் ருமேஷ்யவா... ஐலா யாம் பெற்ற மகளே.. எம் மனையாள் யமது மகளை ஈண்டெடுத்த பின்பே அவளும் ஒரு பஞ்சலோக விந்தையென்பதை அறிந்தோம்... ஐலா இவ்வுலகில் ஜனித்த காலங்களுக்கு முன் யான் பூலோகத்திலும் எம் மனையாள் பத்யரூனா சர்ப்பலோகத்திலும் இருந்தமையால் முன்னாள் சேனை தலவன் மருதீபனின் மரணத்தின் பின் யான் இங்ஙனம் வரவளைக்கப்பட்டேன்... அடுத்த சில வருடங்களின் பின்னே அமைச்சன்கள் பூலோகத்தில் நிகழ்த்திய பெரும் போரினில் கோவன்களை யாம் இழந்தோம்.. அதில் அமைச்சன்களுள் சாகாரகாந்தன் மாத்திரமே பாதிஜடமாய் கிடைத்ததால் சர்ப்பலோகத்தை காக்கும் பொருப்பு எம்மிடம் வந்தது... சாகாரந்தன் ஆழ்ந்த நித்திரையிலிருந்த ஆறு வருடங்களிலே ஐலா பிறப்பெடுத்தாள்... அவளை மேன்மேலும் இங்கு வைத்திருப்து அவளது இன்னுயிருக்கு ஆபத்தென்பதாலே அவள் பிறந்த ஒரு வருடத்திலே ஐலாவினை பூலோகத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் ஒப்படைத்தேன்... எம் மகளை அவர்கள் ஒரு ஆஷ்ரமத்தில் சேர்த்ததால் அவள் எந்த வித இடையூறும் இன்றி வளர்ந்தாள்... ஆனால் ஐந்து அமைச்சன்களும் உயிர் பெற்றதும் ஐலாவினையும் அவர்கள் அறிந்து கொண்டனர்... அன்று ஐலாவை எம்மால் காக்க இயலாமல் போனது.. ஏனெனில் அன்றைய நாளிலே பராக்ரம வீரன்களால் பாலமுத்திர கோட்டை திறக்கப்பட வேண்டியிருந்தது... ஆதலால் யான் அஜயதீபனை தாக்கி பாலமுத்திர கோட்டைக்கு கிடத்தி சென்றிருந்தேன்...
அஜய் : அவ்வாறெனில் அன்று வேதபுரத்தை அடைய யான் மேற்கொண்ட பயணத்தில் எம்மை தாக்கியது தாம் தானா...
யோக்யா : ஆம் ... யான் தான் தம்மை தமது சகோதரர்களுடன் சேர்த்தேன்... அவ்விடைவேளையில் யான் பூலோகத்திற்குள் வந்தமையால் ஐலாவை கிடத்த முயற்சிக்கும் பொழுது எம்மால் பூலோகத்திற்கு வரயிலவில்லை... ஆழிலோகத்திலிருந்து இங்ஙனம் வர எமக்கு இருந்த சக்திகள் அப்போது போதவில்லை... ஆனால் தாம் அவளை காத்தருளிவிட்டீர்... பின் நேற்றைய இரவு ஐலா தாம் யாவரும் அறியாமல் எக்காரணத்திற்காகவோ கானகத்தினுள் வந்துள்ளாள்... அதனாலே இறந்த நாகமனிதன் அவளை எளிதாய் கிடத்தி விட்டான்... ஐலாவினை அவன் தவறான எண்ணத்தில் கொல்லும் முயற்சியில் இறங்க எண்ணிய போதே அவனை கொன்று எம் மகளை காத்து சர்ப்பலோகத்தை அடைந்தேன்...
வருண் : தாம் ஏன் நேரடியாய் எங்களை சந்திக்கவில்லை யோக்யா...
யோக்யா : அது தமக்கான சவால் .. ஆதலாலே யான் உட்புகுந்து தம்மை திசைதிருப்ப முணையவில்லை...
அஜய் : சரி முடிந்தது முடிந்ததாகவே இருக்கட்டும் .. யாம் என்(ன) வினை புரிய வேண்டுமென்பதை விவரியுங்கள்
யோக்யா : தாம் இன்று வரவுள்ளீர்கள் என உறுதியாய் தெரியவில்லை என்பதால் யான் எந்த ஒரு முன்னேற்பாடும் செய்து வைக்கவில்ல.. தாம் சர்ப்பலோக மக்களுடன் மக்களாகவே வாழ பழகுங்கள்... பின் என்(ன) செய்ய வேண்டுமென்பதை தொடர்ந்து பார்ப்போம்...
சித்தார்த் : யோக்யா... எமக்கு என் இளவல்கள் அனைவரையும் ஒரு முறை காண வேண்டும்... அதற்கு வழி வகுத்துத் துர இயலுமா... என தயங்கி தயங்கி கேட்க இவ்வளவு நேரமும் வாய் மூடி இருந்தவன் எப்பாடு பட்டு பேசி விட்டானே என புன்னகைத்த யோக்யா தலையசைத்தான்...
யோக்யா : தாராளமாக ... அத்துடன் அனைவரும் யோக்யாவுடன் அங்கிருந்து சர்ப்பலோகத்திற்குள் தங்களது காலடியை எடுத்து வைத்தனர்...
உணவு உண்டு விட்டு தன் வாள் உரையை எடுப்பதற்காக படியேறி மாடிக்கு வந்த ரக்ஷவ் எதற்சையாய் சிம்மயாளிகள் என்றுமில்லாமல் ஆயுதகள அறையை விட்டு வெளியே வேறெங்கோ செல்வதை கண்டு சுற்றி முற்றி நாயகர்கள் எவரேனும் இருக்கின்றனரா என பார்த்தான்...
அவன் அப்படி சுற்றி காணும் பொழுது சரியாக விகி இவனை கண்டு இவனிடம் நடந்து வர யுகி மற்றும் அகி நின்ற இடத்திலே நின்றவாறு இவர்களை கண்டது...
ரக்ஷவ் விகியை காணும் முன்னே ஏதோ ஒன்று தன்னை மேலே தூக்குவதை உணர்ந்து கீழே நோக்கிய ரக்ஷவ் தான் வெள்ளையும் சாம்பலும் கலந்த மிருதுவான பஞ்சு மேல் அமர்ந்து எங்கோ தானாக செல்வதை கண்டு தலையை உலுக்கி விட்டு பார்க்க விகி அவனை அதன் முதுகின் மீது அமர வைத்து எங்கோ அழைத்து சென்றது...
ரக்ஷவ் : விகி நாம எங்க போறோம் என விகியின் காதிற்கு குனிந்து அவை மூன்றும் மெதுவாய் சத்தம் வராமல் நடப்பதால் அதே போல் ஹஸ்கி வாய்சில் கேட்டான்... ஆனால் விகி அதற்கு பதிலளிக்கவில்லை...
ரக்ஷவ் இதுவரை அற்புத கோட்டையில் பார்த்திடாத ஒரு வளைவிற்குள் சிம்மயாளிகள் நுழைந்தன... அந்த பகுதி என்றும் இருட்டியே இருப்பதாலும் அங்கு ஒன்றுமே இருக்காதென தெரிந்திருந்ததாலும் ரக்ஷவ் அப்புறமே வந்ததில்லை...
அந்த பகுதிக்குள் செல்லவும் இருளில் ஒன்றும் தெரியாமல் விகியை இறுக்கி பிடித்த படி ரக்ஷவ் அமர்ந்து கொண்டான்...
சுவரோடு ஒட்டி நின்ற ஒரு தூணின் தூசியை தன் கைகளால் துடைத்த யுகி அந்த தூணின் ஒரு பகுதியை அழுத்தியது... ரக்ஷவ் என்ன டா நடக்குது இங்க என ஒன்றும் புரியாமல் முளிக்கவும் அந்த தூணின் அருகில் வெறுமையாய் இருந்த சுவரில் திடீரென கட்டம் ஒன்று தோன்றி உள்ளே சென்று திரும்ப இப்போது அந்த சுவரின் பின் ஒரு படமிருந்தது...
அந்த படத்தை உற்று நோக்கிய ரக்ஷவ் ஏதோ கருப்பாய் இருக்கவும் அவனது கரத்தால் அதை துடைத்து பார்த்தான்... யுகி தீயை கக்கி அங்கிருந்த தீக்கம்பம் ஒன்றில் தீ மூட்ட விகி மெல்ல எக்கவும் அதன் மீது அமர்ந்தவாறே அந்த தீ கம்பத்தை கை பற்றிய ரக்ஷவ் அந்த படத்தை நோக்கினான்...
தீயின் ஒளியுடன் தூசியை துடைத்தெடுத்த ரக்ஷவ் ஒரு பெரிய விலங்கு நிற்பதை கண்டு புருவத்தை சுருக்கி யுகி அகியை நோக்க உடனே யுகி அகி மீது ஏறி ஏதோ உணர்த்த முயலவும் ரக்ஷவின் நினைவுகளில் சில மணி நேரம் முன்பு சிம்மயாளிகள் மூன்றும் காட்டிய நிழல் உருவம் வந்து போனது...
இப்போது அந்த படத்தை கண்டால் அந்த நிழல் உருவமும் இந்த விலங்கும் ஒத்து போக ... ஒன்றும் புரியாமல் முளித்த ரக்ஷவ் அப்படத்தின் கீழே ஏதோ எழுதப்பட்டிருப்பதை கண்டு தீக்கம்பத்தை சற்று அருகில் கொண்டு வந்து அதை படித்தான்...
இரட்சய பத்மவிமோச்சன முவ்வியாளன்
அது முவ்வீரயனின் புகைபடமே தான்... அதை பற்றி தான் சிம்மயாளிகள் ஏதோ மும்மரமாய் கூற முயற்சி செய்து கொண்டிருக்கிறது... ஆனால் நம் ரக்ஷவிற்கு தான் புரியவில்லை...
சர்ப்பலோகம்
உணவு மேஜையில் நடந்த களோபரத்தின் பின் யட்சினிகள் அவர்களுக்கான அறையை விட்டே வரவில்லை... இருட்டத் தொடங்கியதால் சர்ப்பலோகத்தின் ஒவ்வொரு மூலையிலும் தீக்கம்பங்கள் கொழுத்தப்பட்டு இருளை விரட்டி கொண்டிருந்தது...
இளைய நாயகிகள் எதனாலோ நிம்மதியான உறக்கத்தை தழுவியிருக்க யட்சினிகளுள் நித்யாவின் கண்களை மட்டும் நித்ராதேவி தழுவுவேனா என தள்ளியே நின்றிருந்தாள்...
மேலும் மேலும் அமைதியாய் இருக்க இயலாமல் என்றும் போல் தப்பிக்க வழி தேடி எழுந்தாள்...
ஒரு கரும்போர்வையை தோள் முதல் கால் வரை போர்த்தி கொண்ட நித்யா ஒரு சுடர் விளக்கினை ஏந்தியபடி அறையை விட்டு வெளியேற மாடியின் திண்டின் வழியே கீழே எட்டிப் பார்த்தவள் கோட்டைக்குள் எந்த வீரர்களும் இல்லை என்பதை உறுதி படுத்தியதும் ஒரு முறை உறங்கும் தன் தங்கைகள் இருவரையும் நோக்கி விட்டு அவளுக்கு முன் இருந்த வழியில் சென்றாள்..
சில நிமிடங்களில் குளிரினால் கண் விழித்த ஆருண்யா தன் சகோதரியை அருகில் காணாமல் அவள் நிச்சயம் கோட்டையை சுற்றித் தான் சென்றிருப்பாள் என உணர்ந்து நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்...
மீண்டும் உறங்க முயற்சித்தவளுக்கு உறக்கம் கிட்டாது போக ... சரி நித்யாவையாவது தேடி செல்லலாமென அங்கிருந்து அதித்தியை பார்த்து விட்டு வெளியேறி சென்றாள்....
ஆருண்யாவின் கால்கள் இறுதியாய் தோட்டத்தில் சென்று முடிவடைய அழகாய் ஓடி கொண்டிருந்த செயற்கை விழுச்சியில் கண்ணாடியென பிரதிபளித்த நிலவின் பிம்பத்தை இவ்வளவு தெளிவாய் பல நாள் பின் கண்டதால் அதன் அழகில் அங்கேயே சற்று நேரம் அமர முடிவெடுத்தாள்...
தென்றல் காற்றுடன் இரவின் குளிரான சூழல் கலந்து அவளது உடலை சிலிர்ப்படைய செய்ய நிலவை வெறித்த படி அமர்ந்திருந்தாள் ஆருண்யா..
அந்த நேரம் சர்ப்பலோகத்தின் அத்தகைய நீளமான மதிலினை தாண்டி குதித்து உள்ளே தன் காலடியை பதித்தான் அவன்... அவன் காலடி பட்ட அடுத்த நொடி சிலிர்த்தடங்கிய ஆருண்யா திரும்பி அந்த திசையில் நோக்க அவள் என்ன ஏதென்று கவனிக்கும் முன் அவள் தோளில் ஏற்பட்ட கரத்தின் ஸ்பரிசத்தால் பட்டென எழுந்து திரும்பி பார்த்தாள்...
மாயம் தொடரும்...
ஹாய்ய்ய்ய்ய்ய்... எப்டியும் யூடி சிம்ப்பிலா தான் இருக்கும்... இப்போ திரும்ப எல்லா ஜோடிக்கும் குட்டி குட்டி சீன் வச்சா எப்டி இருக்கும்... ஹிஹி நல்லா இருக்கும்ல... பாப்போம் என்ன நடக்குதுன்னு... நாளைக்கும் டபுள் யூடி குடுக்க ட்ரை பன்றேன்..... குட் நைட் இன் அட்வான்ஸ் இதயங்களே... டாட்டா...
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro