மாயம் - 49
விடியலிலே ஐலாவை காணாமல் அவளை எழுப்ப வந்திருந்த வீனா பரபரப்புடன் அனைவரிடமும் இவ்விஷயத்தை தெரிவிக்க பயிற்சி கூடத்திலும் சமையற்கூடத்திலும் இறங்கியிருந்த அனைவரும் ஐலாவை தேட தொடங்கினர்...
ஐலா அற்புத கோட்டையின் எந்த ஒரு இடத்திலும் இல்லை... பத்தாததற்கு எவராவது வந்து கடத்தி சென்றிருந்தாலும் அப்படி ஒருவர் வந்ததற்கான அடையாளமும் இல்லை...
அனைவரையும் விட அஜய் தான் அதிகமாய் பதறி கொண்டிருந்தான்.. அனைவரும் அவன் தோழி தானே என நினைத்திருக்க அவனுக்கு தானே தெரியும் அவள் உண்மையில் அவனுக்கு யாரென்று...
ரக்ஷவ் : அக்கா எங்க குருவே...
ரவி : எங்களுக்கும் தெரியல ரக்ஷவ்.. ஐலாவா கண்டிப்பா கோட்டைய விட்டு வெளிய போய்ர்க்க மாட்டா...
அஜய் : அவளுக்கு வழியும் தெரியாதுப்பா.. அவள யாரோ கடத்தீட்டு தான் போய்ர்க்காங்க என்றவனின் குரலில் அப்பட்டமாய் பயம் அப்பியிருந்தது..
அனு : கூல் அஜு.. யாராவது கடத்தீட்டு போயிருந்தா நமக்கு கண்டிப்பா தெரிய வந்துருக்கும்.. ஐலாக்கு எதுவும் ஆகாது.. அவள காப்பாத்தீடலாம்...
ப்ரியா : நா நேத்து என்ன நடந்ததுன்னு பாக்க முயற்சி பன்றேன் என ஒரு அறைக்குள் செல்ல முயன்றவளை ஆதியன்த்தின் குரல் தடுத்தது...
ஆதியன்த் : நேத்து ஐலாவ ஏதோ ஒரு பாம்பு தான் கடத்தீட்டு போய்ர்க்கு மா தன் வெண்மை நிற கண்களால் அனைவரையும் ஏறிட்டான்...
திவ்யா : உனக்கு எப்டி ஆதி கண்ணா தெரியும்...
ருத்ராக்ஷ் : கோவன்களோட சக்தி மட்டுமில்லம்மா... நாகனிகளோட சக்திகளும் எங்களுக்கு இருக்கு என கூறவும் நம் நாயகிகளுமே அதிர்ந்து தான் போயினர்...
சித்தார்த் : ஆமா என்னால அனும்மா மாரி ஒருத்தர் மைண்ட கன்ட்ரோல் பன்னவும் முடியும் அவங்க நினைக்கிரதையும் கேக்க முடியும்... ருத்துவால திவிமா மாரி ஒரு இடத்துலேந்து இன்னோறு இடத்துக்கு மாற முடியும்.. ஆன்மாக்களோட உரையாட முடியும்.. அத்துவால காலத்தை மாத்த முடியும்.. நடந்தது நடக்க போறத தெரிஞ்சிக்க முடியும்...
பவி : சரி டா கண்ணா... அந்த பாம்பு யாருன்னு தெரிஞ்சிதா...
ஆதியன்த் : தெரியிது... ஆனா அது யாருன்னு தா தெரியல அத்த... என கண்களை இமைத்து கூறியவனை கண்டு " சத்தீஷ் புள்ளன்னு நிரூபிக்கிறான் டா " என நொந்து கொண்டனர்..
வீர் : அத எங்களுக்கு காட்டு ஆதி.. நாங்க பாக்குறோம்
ஆதியன்த் : ம்ஹும் அதுல ஒன்னுமே தெரியாது மாமா... ஒரே இருட்டா தான் இருக்கு..
மோகினி : சரி நாகம்னு தெரிஞ்சிடுச்சுல்ல... அது கண்டிப்பா சர்ப்பலோகத்து நாகமா தான் இருக்கும்... நாம உடனே கெளம்பலாம்..
துருவ் : அப்போ தீராவோட வார்த்தைகளோட அர்த்தம் இது தான்.. என யோசனையுடன் கூறினான்...
காலம் தாழ்த்தாது வாயிலின் பால் விரையுங்கள்.. விடியலதில் காத்திருக்கும் வெகுமதியும் ஒரு படி தான்.. வெற்றி கனி பழுக்க நாழிச் சக்கரம் சுழல தொடங்கியாயிற்று.. பின் வருமாறு சுழலும் முன் மறு விம்பத்தை அடைந்தனன்றோ பாதை தன்னால் கிட்டும் "
அருண் : காலத்த தாதாழ்த்தாம வாயிலுக்கு போகனும்... விடிஞ்சதும் தெரியிர வெயிட் வெகுமதின்னு அதிர்ச்சிய சொல்றாளா...
ஒவீ : எக்ஸக்ட்லி நமக்கு ட்விஸ்ட்டுன்னா அவளுக்கு வெகுமதி தான்...
ஆதவ் : ஹ்ம்ம்ம் பட் லாஸ்ட் லைன்க்கு என்ன அர்த்தம்... வெற்றி கனி பழுக்க வேண்டிய நேரம் சுழல ஆரம்ச்சிடுச்சு சரி... பட் அது பின் வருமாறு சுழலும் முன் மறு விம்பத்தை .. இதுக்கு மேல புரியலையே...
மிதுன் : மே பீ இதுல நமக்கு எதாவது க்லூ கெடைக்குமா என தந்தை மற்றும் மாமன்களை நோக்கினான்...
கார்த்திக் : எஸ் அதுல ஒரு க்லூ இருக்கு... கண்டுப்புடிங்க
அஷ்வித் : சொல்ற நீ கண்டுப்புடியேன் டா...
கார்த்திக் : தெரிஞ்சா கண்டுப்புடிக்க மாட்டனா டா..
வருண் : டேய் இருங்க டா... யோசிக்கிரப்போ தான் குறுக்க குறுக்க பேசுவானுங்க என அவன்களிடம் கத்தினான்...
ரனீஷ் : ரொம்ப யோசிச்சு டயர்டாகாதீங்க டா... வெற்றின்னு தீரு குறிப்பிட்டது நம்ம வெற்றிய இல்ல அமைச்சன்களோட வெற்றிய என பதிலை கண்டுப்பிடிக்க போராடும் தன் மகன்கள் மற்றும் மருமகன்களுக்கு கூறினான்...
ராகவ் : என்ன சித்தா சொல்றீங்க
ரனீஷ் : ஆமா ராகவா.. இப்போ பஞ்சலோக விந்தைகள் பத்து பேரும் சர்ப்பலோகத்துல இருக்குரதால அவங்களுக்கு தான் வெற்றி காலம் சுழல ஆரம்ச்சிருக்கு.. அந்த காலம் முடியிரதுக்குள்ள ... அத தான் பின் வறுமாறுன்னு குறிப்பிற்றுக்கா... சோ அந்த நேம் முடியிரதுக்குள்ள மறுவிம்பம் அதாவது இன்னோறு உலகத்துக்கு போய்ட்டீங்கன்னா உங்களுக்கு தானாவே வழி கிடைக்கும்... அந்த இன்னோறு உலகம் தான் சர்ப்பலோகம்
மூக்கின் மேல் விரல் வைக்கத் தான் தோன்றியது நம் இரண்டாமணி நாயகன்களுக்கு... சித்தார்த் ஒரு கேள்வி எழுப்பும் முன்...
வீர் : அஜு.. ஐலாவோட பரென்ட்ஸ் நம்பர் குடு... அவங்களுக்கு ஐலாவ பத்தி நாம இன்ஃபார்ம பன்னனும் என கேட்டதும் அஜய் திருதிருவென விழித்தான்...
சரண் : என்ன டா உன் ஃப்ரெண்டு பரென்ட்ஸ் நம்பர் தானே கேட்டான்.. ஏன் ஏதோ தீவிரவாதி நம்பர் கேட்ட மாரி முளிக்கிர...
அஜய் : அது... என் கிட்ட அவங்க நம்பர் இல்ல மாமா..
வளவன் : சரி ஐலாவோட டீட்டைல்ஸ் எதாவது சொல்லு டா
அஜய் : ஹான்... எனக்கு எதுவும் தெரியாதே மாமா...
கார்த்திக் : உன் ஃப்ரெண்டு தான டா அவ.. எதுவும் தெரியாதுங்குர...
அஜய் : ஆமா தான்... ஆனா அவளோட ஃபர்ஸ்ட் டீட்டைல்ஸ் எதுவும் எனக்கு தெரியாது டா அண்ணா...
முகில் : சரி பரவால்ல அஜு.. நீ ஐலா வேலை பாத்த இடத்த பத்தின டீட்டைல்ஸ் குடு நா விசாரிக்கிறேன்...
அஜய் : ஹ்ம் சரி சிச்சா என ஐலா வேலை பார்த்த சனலின் தகவல்களை கொடுத்தான்...
ரக்ஷவ் : சரி சரி போதும் பேசுனது வாங்க கெளம்பலாம் சர்ப்பலோகத்துக்கு போலாம்... அக்காஸ் எல்லாரும் வெயிட் பன்னீட்டு இருப்பாங்க என கோட்டையின் வாயில் புறம் செல்ல போனவனின் சட்டையை பிடித்து பின்னே இழுத்தான் சித்தார்த்...
சித்தார்த் : நீ எங்க டா போற...
ரக்ஷவ் : இது என்னண்ணா கேள்வி... போருக்கு தான் வாங்க போவோம்...
மித்ரன் : தம்பி குட்டி நீ எங்கையும் வர போறதில்ல... இங்க தான் இருக்க போற...
ரக்ஷவ் : ம்ம்ம் அப்போ என்னால போர்ல களந்துக்க முடியாதா... என பாவமாய் உதட்டை பிதுக்கினான்...
நிரு : நிச்சயமா கலந்துக்கலாம் ரக்ஷவா.. ஆனா போர் இப்போ நடக்க போறதில்ல...
மிதுன் : இப்போ இல்லயா.. என்ன அத்த சொல்றீங்க என இரண்டாமணி நாயகன்கள் அனைவரும் நிருவை கேள்வியுடன் ஏறிட்டனர்...
நிரு : ஆமா மிது.. இப்போ போர் நடக்கப்போறதில்ல...
ராகவ் : அப்ரம் எப்போம்மா நடக்கும்...
மது : ஏன் டா அவசரம்.. போர் யோகபரிபூஜன தினம் அன்னைக்கு தான் நடக்கும்... அது வர்ரதுக்கு இன்னும் அஞ்சு நாள் இருக்கு...
ராகவ் : அது எப்டி அத்த அன்னைக்கு தான் நடக்கும்னு உறுதியா சொல்றீங்க...
ப்ரியா : அன்னைக்கு தான் ராகவா பல வர்ஷத்துக்கு ஒரு முறை நிலாவ சுத்தி எட்டு நச்சத்திரம் ஒரு முக்கோணம் போல மின்னி ஒரு புதிய ஒளிய பூமிக்கும் சர்ப்பலோகத்துக்கும் சரி சமமா அனுப்பும்... போர் நடக்க போற அறிகுறியா அதத் தான் போன மாசம் நா என் கனவுல பாத்தேன்... என கூறியவளுக்கு அதே கனவின் நினைவு வந்து போனது.. அதாலோ ப்ரியா கூறியது போல் எட்டில்லாது கூடுதலாய் ஐந்து நட்சத்திரங்களும் இருந்தது... ஆனால் அது ப்ரியாவிற்கு தான் தெரியவில்லை...
ரக்ஷவ் : எதுக்கு எட்டு நட்சத்திரம் இருக்கும்மா...
வளவன் : அந்த எட்டு நட்சத்திரமும் எட்டு வம்சத்த குறிக்கிது ரக்ஷவா... மகாவம்சம்.. சஹாத்திய வம்சம் .. நாகதாரணி வம்சம்.. யாளி வம்சம்.. பஞ்சலோகத்து வம்சம்.. அதிரதீர வம்சம்.. பராக்ரம வம்சம் .. மற்றும் யட்சினி வம்சம்
ஓஹோ என கோரசிட்ட இரண்டாமணி நாயகன்கள் ஏதோ ஒரு யோசனையில் மூழ்க...
நீலி : தாமனைவரும் சர்ப்பலோகம் சென்று விட்டால் ரக்ஷவ் மாத்திரம் இங்ஙனம் தனித்திருந்து என்(ன) வினை புரியப்போகிறான் தமக்கையே.. என தன் சந்தேகத்தை முன் வைத்தாள்...
ரித்விக் : ரக்ஷவ இங்க தனியா விட்டுட்டு நாங்க எப்டி நீலி போவோம்... ரக்ஷவ் எங்க கூட தான் இருப்பான்...
ரக்ஷவ் : அப்போ என்ன கூட்டீட்டு போ மாட்டேன்னு சொன்னீங்க என முறைக்க
அர்ஜுன் : நாங்க எப்போ டா கூட்டீட்டு போ மாட்டோம்னு சொன்னோம்... நீ அவனுங்க கூட போப் போறதில்லன்னு மட்டும் தான் சொன்னோம்...
ராம் : அப்போ நாங்க மட்டும் தான் தனியா போப்போறோமாப்பா...
விதுஷ் : நீங்க சின்ன பப்பா இன்னும் வேற ஆள் வேணுமா... தொணைக்கு தான் ஏழெட்டு பேரு இருக்கானுங்களே டா...
மோகினி : சும்மா இரு டா... ஆமா ராம்.. உங்க கூட துருவ் ருமேஷ் விதுஷும் வருவாங்க என தன் மகனை அதட்டி விட்டு ராமிற்கு பதிலளித்தாள்...
ராம் : எங்கற மட்டும் ஏன்ப்பா அனுப்புரீங்க...
வீர் : நீங்க தான் டா போய் பாதைய திரும்ப கண்டுப்புடிக்கனும்... அதோட சர்ப்பலோகத்தோட நீங்க ஒன்றுனா தான் அவங்க கூட போரிடவும் யோகபரிபூஜன தினத்தப்போ உங்களுக்கு சக்தி இருக்கும்....
அருண் : சக்தி இருக்குமா... ஏன் மாமா அன்னைக்கு எதாவது நமக்கு எதிரா நடக்குமா...
வீர் : அப்டியும் சொல்லளாம்... நீங்க பிறந்து வரப்போற முதல் யோகபரிபூஜன தினம்ங்குரதாலையும் அந்த நட்சத்திரம் தோன்றியது முதல் நிலவோட ஒளி நிலத்துல பட்டு மறையிர வர உங்க பதிமூணு பேரோட சக்தியும் பாதிக்கும் மேல குறைஞ்சிடும்... அதனால நீங்க தான் உங்கள தயார்ப்படுத்திக்கனும்.... என கூறிக் கொண்டிருக்கும் போதே அவனது பார்வை சற்று சிந்தனையுடன் இரட்சகன்களை சுற்றி வந்தது... ஆனால் அதை இரட்சகன்கள் கவனிக்கும் முன் வீர் பார்வையை மாற்றி கொண்டான்....
வீனா : அதனால நீங்க பத்திரமா போய்ட்டு வாங்க...
ராம் : ம்ச் நீங்கல்லாம் மட்டும் இங்க இருந்து என்ன பன்ன போறீங்க... என சுருங்கிய முகத்துடன் மீண்டும் துடங்க
ரக்ஷவ் : எனக்கு மேல இருக்கியே அண்ணா நீ... என சலித்து கொண்டான்...
அஜய் : சரி நாம போகலாமா... எனக்கு படபடப்பாவே இருக்கு ... என சற்று தன் பதட்டத்தையும் தெரிவித்தான்...
சித்தார்த் : போலாம் போலாம்ங்குரீங்களே... போய் நாம என்ன செய்ரது... எதாவது ஐடியா இருக்கா என்கவும் மகன்கள் தந்தைகளை ஐடியா இருக்கா என கேட்பதை போல் நோக்கினர்...
ருமேஷ் : அதான் தீரா சொல்லீர்க்காளே டா...நம்ம அங்க போனா தானாவே வழி கிடைக்கும்... சோ அங்க போய் பாத்துப்போம்...
அனைவரும் சரியென தலையசைக்க சரியாக ஜன்னல் வாயிலாக மயூரனுடன் அதிவேகமாய் உள்ளே வந்தான் சேவன்
மயூரன் : தாமதித்து விட்டேனா தங்கையே...
வர்ஷி : அன்று தமையரே... வாருங்கள்...
சேவன் : பொருத்தருளுங்கள் தேவி.. கால மாற்றத்தினால் கடந்து வர கால தாமதமாகிவிட்டது... என அவர்கள் முன் ஒரு வணக்கத்தை தெரிவித்து விட்டு முதுகிலிருந்த குடுவையை எடுத்து அதிலிருந்த காகிதத்தை உருவி உரக்க வாசிக்க தொடங்கிய மயூரனை நோக்கினான்....
மயூரன் : அன்புள்ள பஞ்சலோக வம்சத்தவர்களுக்கு.. தாம் தற்போது சர்ப்பலோகம் பயணிக்க உள்ளீர் என்றறிவேன்.. தம்மை வாழ்த்த அவசியமென்றென்பதால் எச்சரிக்கயிற்காய் இக்கடிதம்.. இவ்வைந்தின தினங்களிலுக்கும் தாம் சர்ப்பலோக கோட்டையை சுற்றியே தான் வீற்றிருத்தல் வேண்டும்.. மானுடர்களுடன் சக மானுடராய் இணைந்து விட்டால் தம்மை அடையாளங்காண இயலாது.. தமக்காய் காத்திருக்கும் பெண்டிரை காத்தருள வேண்டியது தமது கடமை பராக்ரம வீரர்களே... தம்மை எண்ணி இன்னுயிரை விட மனமின்றி காத்திருக்கும் அவர்களுக்கு ஏமாற்றமளித்து விடாதீர் இப்படிக்கு தர்மன்
இறுதி வரிகள் அனைவரையும் குழப்ப சித்தார்த் " நாம் வருவோம் வந்து அந்த கொடியவர்களிடமிருந்து அனைவரையும் காப்பாற்றுவோமென காத்திருக்கும் சர்ப்பலோக உயிர்களை குறிப்பிட்டிருக்கிறார் போல " என அவனே ஒரு பொருள் எடுத்து கொண்டு கூற அதை அனைவரும் அமோதித்தாலும் அவன் கண்ணில் அவ்வளவு எளிதில் அகப்படாத உருவம் கொண்ட நீலி மற்றும் பிறை குழப்பமாய் தம்மவர்களை நோக்கி ஒரு பார்வையை செழுத்த அதை சேவனும் மயூரனும் கண்டு கொண்டதாய் தெரியவில்லை...
அத்துடன் பெற்றோர்களின் பல அறிவுரைகளுடன் அங்கிருந்து இரண்டாமணி நாயகர்கள் பருந்து சகோதரர்களுடன் பயணத்தை தொடங்கினர்...
வாயிலில் நின்ற படி அனைவரும் அவர்களின் தலை மறையும் வரை பார்த்து கொண்டு நிற்க சிம்மயாளிகள் மூன்றும் அதன் பின் எழுந்து உள்ளே செல்லவும் அதன் பின்னே ரக்ஷவும் ஓடினான்... அவனை பின் தொடர்ந்து யானையாளிகளும் செல்ல நம் குட்டி நாயகர்கள் சேவனை விட்டு விட்டு அங்கிருந்து உள்ளே சென்றனர்..
அவர்கள் அனைவரும் அங்கிருந்து சென்றதை உறுதி படுத்தியதும் வர்ஷி வீரை நோக்கினாள்...
வர்ஷி : வீர் அத்தான்... பராக்ரம வீரன்களுக்கு யோகபரீபூஜன தினமன்னைக்கு சக்தி குறையும் சரி... இரட்சகன்கள் மூணு பேருக்கும் என அத்துடன் நிறுத்த
வீர் : ஹான்.. அத பத்தி இன்னும் நாங்க ஆராய்ச்சிய தொடங்கல டா.. இரட்சகன்கள் அவங்க நியதி படியே அதிரதீர வம்சத்துலையே பிறந்துருந்தாலும் அவங்களுக்குள்ள கோவன்களோட இரத்தம் இருக்குரதாலையும் நாகனிகளோட சக்தி இருக்குரதாலையும் அவங்க நாயக்கர் வம்சத்துலையும் இடம் பெறுவாங்க... ஆனா பிரச்சனை என்னன்னா நாயக்கர் வம்சத்துல சித்து ருத்ரா ஆதியத் தவிர்த்து இத்தன வர்ஷத்துல யாருமே ஒரு முற கூட பிறந்ததே இல்ல... அந்த வம்சத்த பத்தின எந்த ஒரு தகவலும் இல்ல... அதனால அவங்களோட சக்திய நம்மளால அவ்ளோ ஈசியா கண்டுப்புடிச்சிட முடியாது... இப்போ வரையுமே அவங்களுக்குள்ள இருக்குர பாதி சக்திய தான் நாம பாத்துர்க்கோம்... இன்னும் இருக்களாம் ... இல்லாமலும் போகலாம்.. என தன் நீண்ட உரையை பெருமூச்சுடன் முடித்தான்...
வளவன் : இதனால அவங்களுக்கு பிரச்சனை எதாவது வருமா வீர்...
அஷ்வன்த் : அதுக்கெல்லாம் வாய்ப்பில்ல வளவா.. ஆனா உடல் ரீதியா அவங்க வலி அனுபவிச்சாங்களா என்னன்னே தெரியலையே...
சேவன் : முதலாம் இரட்சகருக்கு ... அனல் கோவனை போலே செந்நிற நீண்ட இறெக்கை இருக்கிறது சூரரே... என திடீரென இடை புகுந்தான்...
மோகினி : செந்நிற இறெக்கையா... என்ன சொல்ற சேவா... அதோட உனக்கு எப்டி அது தெரியும்...
சேவன் : யானறிவேன் தாயே... அன்று ஒரு நாள் என சித்தார்த்தை சேவன் சந்தித்த நிகழ்வை மொத்தமும் ஒப்பித்தவன் தப்பித்தவறியேனும் இளவரசிகளை பற்றி வாயை திறக்கவில்லை...
அதை கேட்டதும் நாயகர்களுக்கு மனதில் ஈட்டி இறக்கியதை போல் தான் இருந்தது... இறெக்கை முழைக்கக்கூடிய அந்த வழி அளவற்றது.. முதல் முறை இவர்கள் யாவருமே கோவன்களுக்கு எவ்வாறு இறெக்கை முழைத்ததென காணவில்லை தான்... ஆனால் அம்மூவரையே கட்டுப்படுத்தி கொள்ள அவர்கள் பட்டபாட்டை கண்டிருக்கின்றனர்...
அத்தோடு நம் சஹாத்திய சூரர்கள் அவர்களின் முதலாம் பிறவியிலே கோவன்கள் அவர்களின் சக்திகளை முதல் முறையாக இந்த உலகில் உபயோகிக்க தொடங்கிய பின் வெகு சில நாட்களிலே முதுகில் இறெக்கைகள் முழைக்க தொடங்கி அது அவர்களுக்கு பாதி மரண வலியை தந்ததையும் கண்கூடாக கண்டிருந்தனர்...
அர்ஜுன் : அந்த வலி கொடுமையோட ஒரு உச்சக்கட்டம் .. ஆனா அத பத்தி ஏன் சித்து எதுவும் சொல்லல...
சரண் : ருத்ரா ஆதி கூட சொல்லல டா...
திவ்யா : சரி விடுங்க அண்ணா... சொல்லனும்னு அவனுங்களுக்கு தெரிஞ்சிருக்காது... நடக்குரது நடக்கட்டும்... என் புள்ளைங்க எதுவா இருந்தாலும் அத எதிர்த்து நிப்பாங்க...
சேவன் : ஹ்ம்ம்ம் மருத்துவ தளபதி விஜயன் அவர்களே தம்மிடம் இதை தர்மன் ஐயா சேர்க்க கூறினார் என ஒரு குடுவையை நீட்டினான்...
வெகு சில நேரங்களிலே வேந்தன்யபுரத்தில் அவர்கள் கொண்ட பதவிகளை வைத்து சேவன் குறிப்பிடுவதால் புருவ முடிச்சிடன் அதை வாங்கி பார்த்த ரவியின் மதியில் எழுந்த கேள்விகளுக்கு பேரதிர்ச்சி பதிலாய் காத்திருந்தது....
மாயம் தொடரும்...
ஹாய் ... இதுக்கு மேல ஒரு ஒரு வாரத்துக்கு என் கிட்டேந்து யூடி எதிர்பார்க்காதீங்க... நெக்ஸ்ட் வீக் யூஷ்யுலா போடுர மாரி யூடீஸ் வரும்... என்னால எவ்ளோ சீக்கிரம் குடுக்க முடியும்னு தெரியல... நா என்னோட முயற்சியெடுக்குறேன்... உங்க கருத்துக்களை மறக்காம தெரிவிங்க... இந்த யூடி வேற மாரி தான் கொண்டு போனும்னு எழுத தொடங்குனப்போ நெனச்சேன் ... கிட்டத்தட்ட இந்நேரத்துக்கு நாம சர்ப்பலோக வாயில்ல இருந்துர்ப்போம்... ஆனா... இப்போ எனக்கு ஏற்பட்ட திடீர் சூழ்நிலையால லைட்டா குறைச்சிட்டேன்... மே பீ உங்களுக்கு அனாவசியமா இழுக்குர மாரி தோனலாம்... பட் எல்லாத்துலையுமே ஒவ்வொரு விஷயம் இருக்கு... எல்லாமே கண்டிப்பா உங்களுக்கு புரிய வரும்... லெட்ஸ் டிஸ்கஸ் அபௌட் இட் லேட்டர்... நாளைக்கு எனக்கு 3 1/2 மணி நேரம் ரிவிஷன் நடக்க போகுது.. எக்ஸம் முடிஞ்ச பிறகும் தினம் இந்த மாரி காலைல மூன்றரை மணி நேரம் (எவ்ளோ மணி நேரம் இருக்கும்னு எனக்கு ஷ்யூரா தெரியல ) க்லஸ் நடக்க போகுது... சோ உங்களுக்கே புரிஞ்சிருக்கும் குட் நைட் ... டாட்டா
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro