Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

மாயம் - 40

தர்மன் ஐயா : இது நிகழுமென நாம் எதிர்பார்க்கவில்லையே... நான் என் செய்வேன்... நான்கு வம்சத்தினருக்கும் அழிவில்லை என்றல்லவா அக்குடும்பத்தினரிடம் விவரித்து வந்தோம்... ஆனால் இப்போது அக்குடும்பத்தில் மரணம் விழப்போகிறதே... மரணிக்க போவது யாரென தெரியவில்லையே... இறைவா... இது உனக்கே அடுக்குமா... கோவன்களும் சஹாத்தியவம்ச சூரர்களும் தங்களுக்கு என்ன செய்தனர்... அவர்கள் தங்களுக்கு செய்தவை எல்லாம் இவ்வுலகை காக்கத்தானே... தற்போது அவர்களை போய் காவு வாங்க பார்க்கிறாயே... கோவன்களுக்கு நிச்சயம் அழிவு வரப்போவதில்லை... அப்படி இருப்பின்... சஹாத்திவம்ச சூரர்களுக்கு தான் உன் குறியா... அவர்களில் ஒருவரா... அல்ல இருவரா... அல்ல அனைவருமா... ஏதேனும் பதில் கூறு இறைவா... குரு தந்திராவும் உயிருடன் இல்லையே.. நான் என் செய்வேன்... இறைவா.. தயவு கூர்ந்து அவர்களை கொன்றுவிடாதே... அது இவ்வுலகிற்கே பெரும் பேராபத்தை விழைவித்திடும்... மூன்று பிறவியிலும் அவர்களை மரணிக்க வைத்த நீ... இப்பிறவியிலாவது வாழ விடமாட்டாயா.... இந்த திடீர் திருப்பம் எதனால் நேர்ந்ததோ... இறைவா.... என கதறினார்....

" இவை அனைத்திற்கும் ஒரு வழி உண்டு தர்மா.... இரட்சகன்கள் பிறப்பெடுக்க வேண்டும்... ஆனால் அவர்கள் பிறப்பெடுக்க துளியும் வாய்ப்பில்லை... இரட்சகன்கள் என்றோ அழிந்துவிட்டனர்.... அவர்கள் பிறப்பெடுப்பதற்கு வாப்ப்பே இல்லை... எங்களுக்கு அழிவே இல்லை ஹாஹாஹா... " என்ற ஒரு அசிரீரி குரல் அங்கு திடீரென கோரமாய் வெடிக்க....

தர்மன்ஐயா : இரட்சகன்களா... அதற்கு வாய்ப்பே இல்லையே.... கோவன்கள் நாகனிகள் சஹாத்தாயவம்ச சூரர்கள் மற்றும் யாளி வம்சத்து வீராங்கனைகள் மரணமடைந்தால் தானே இரட்சகன்கள் பிறப்பெடுப்பர்....

" ஹாஹாஹா... யான் தான் கூறினேனே... அவர்கள் பிறப்பெடுக்க போவதில்லை... இப்புவி மீண்டும் எங்கள் வசம் வரப்போகிறது..."

" வீண் கணா காணாதே... இப்புவி உங்களின் வசம் என்றும் வராது.... இரட்சகன்கள் பிறப்பெடுப்பர்.... இல்லையெனில் கோவன்கள் உங்களை அழிப்பர்.... எதுவாயினும் இப்புவி தங்கள் வசம் வராது.... " என்று திடீரென யாரோ அலர.. திரும்பிய தர்மன் ஐயா அங்கு குரு தந்திரா ஒளியின் நடுவில் சினத்துடன் இருப்பதை கண்டு அதிர்ந்தார்....

தர்மன்ஐயா : குருவே....

குரு தந்திரா : தர்மா.. விதியை நம்மால் மாற்ற இயலாது.... நிகழ்வது நிகழட்டும்... இப்புவியில் தீயசக்தியின் ஆதிக்கம் இல்லாமல் இருப்பதற்கு காரணமாய் இருந்தவர்களே இவர்களின் அழிவிற்கு முக்கிய காரணமாய் இருப்பர்.....

" அதற்குள் கோவன்கள் அழித்த தீயசக்தியை நாங்கள் உயிர்த்தெழ வைத்தால்.... " என்று நக்கலாய் வர...

குரு தந்திரா : அது இப்பிறவியில் என்றுமே நிகழாது... அதற்கு என்றும் கோவன்கள் அனுமதிக்கவும் மாட்டர்... தங்களால் கோவன்களை தொட கூட இயலாது...

" உண்மை தான்... கோவன்கள் எங்களை விட மிக மிக மிக அபார சக்தி படைத்தவர்கள்... ஏன் இப்புவியிலே மிகப்பெரிய அபார சக்தி படைத்தவர்கள்... ஆனால் அவர்கள் தீயக்தியை தான் அழிப்பர்... நாங்கள் தீயசக்தி அல்லவே... இறைவனை போற்றி வளர்ந்தவர்களே... "

குரு தந்திரா : எதுவாயினும் தாங்கள் புவியை அழிக்க தொடங்கியதுமே இறை சக்தியை மறந்தவர்கள்... ஆதலால் தாங்கள் தீயசக்திகளே....

" இறந்தும் உமக்கு திமிர் அடங்கவில்லையோ.. உம் கோவன்களையே அழித்து காண்பிக்கிறோம் பார்..." என்று நடக்காததை வைத்து சவால் விட...

குரு தந்திரா : ஹ்ம்.... பைத்தியத்தின் புலம்பலை நான் செவி மடுப்பதில்லை... கோவன்களுக்கு என்றும் அழிவில்லை... அவர்கள் மரணமடைந்தாலும் மீண்டும் பிறப்பெடுப்பர்....

" பார்க்கலாம் " என அலரியவாறே அமைதி நிலவியது..

தர்மன் ஐயா : குருவே என்ன நிகழ்கிறது இங்கு...

குரு தந்திரா : அனைத்தும் விதி தர்மா... நம்மால் ஏதும் செய்ய இயலாது... இவர்களை அழிக்க பஞ்சலோகத்தினவரால் மட்டுமே இயலும்... ஆனால் அவர்களும் பிறப்பெடுக்க போவதில்லை... இரட்சகன்களின் பிறப்பு இப்புவியின் அடிமட்டத்தில் நிகழுமென்பது தான் விதி... ஆனால் அப்படி ஓர் இடமும் இல்லை... அவர்கள் பிறப்பெடுக்க போவதும் இல்லை.... என்றதுடன் மறைந்தார்....

இரண்டு வருடம் முன் நிகழ்ந்ததை நினைத்து வெறுமையான உணர்வுடன் கண்களை திறந்தார் தர்மன் ஐயா....

அவருக்கு தெரியவில்லை.. யார் பிறப்பெடுக்கவே மாட்டரென்று இரண்டு வருடம் முன் கவலை கொண்டாரோ அன்றைய நாளில் தான் அவர்கள் அவரவர் தாய் வயிற்றில் உருவாகி முதலடியை எடுத்து வைத்தரென்று...

கண்களை தேய்த்தவாறு உடை தரையில் சீக்குவதை அறியாமல் மெல்லமாய் நடந்து வந்த கயல் அம்மா என அரை குறை தூக்கம் கலந்த குரலில் அழைக்க.. இவளின் குரல் அவ்வீட்டில் அனைவருக்கும் கேட்க அவளின் அந்த குரல் சமையலறையிலிருந்த ஒவீவை அங்கு ஓடி வர செய்தது...

வீர் இன்னும் அவன் அதிசய கண்களையே நம்ப முடியாமல் கயலை பார்த்து கொண்டிருந்தான்.. ஒவீயின் பதட்டமான முகத்திலே வீட்டின் ஆண்கள் யாவரும் மாடியின் படிகளகில் நின்ற கயலை கவனித்தனர் ...

கயல் இன்னும் உறக்கம் கலையாமல் தரை என நினைத்து படி கட்டில் காலை வைக்க போக கால் தரையில் பதியாது கீழே இறங்கவும் அவள் தடுமாற திடீரென இரு கைகள் அவளை தாங்கியது...

அவள் பின் முன்பிருந்த உயரம் குறைந்து உடலும் சுருங்கி காட்சியளித்தான் அதே பத்து வயதான துருவ்...

ஒரு நொடி அங்கிருந்த அனைவருக்கும் அவர்கள் கனவுலகில் இருக்கின்றனரோ என்ற எண்ணம் எழுந்தது... ஆனால் அனைவருக்கும் ஒரே கனவு வராது என்பதை போல் இருந்தது குழந்தைகளை நோக்கி வேகமாய் ஓடிய ஒவீயின் ஓட்டம்...

ஒருவரை ஒருவர் பார்த்து கொண்ட கயல் மற்றும் துருவ் இருவரும் பேந்த பேந்த விழிக்க ஒவீ அருகில் வந்ததும் உடனே கைகளை நீட்டி அவளை தூக்க கூறினாள் கயல்...

உடனே அவளை தூக்கி கொண்ட ஒவீ துருவனின் கரத்தையும் பிடித்து கொண்டு திரும்பி அவள் குடும்பத்தினரை பார்த்தாள்...

வளவனின் மோகினி என்ற சத்தத்தில் அவரவர் வேலையிலிருந்த அனைத்து பெண்மணிகளையும் அங்கு குழப்பத்துடன் வேகமாய் இழுத்து வந்தது...

என்ன ஏதென்று தெரியாமல் தன் கணவனை நோக்கி தோட்டத்திலிருந்து உள்ளே வந்த மோகினி எதற்சையாய் படியில் ஒவீயுடன் நின்ற தன் மகனையும் ஒவீ தூக்கி வைத்திருந்த தன் மகளையும் கண்டு அவ்விடத்திலே சமைந்து நின்றாள்...

கிட்டத்தட்ட அவள் நிலையில் தான் அனைவருமே இப்போது இருந்தனர்...

நேற்று பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஆட்டம் போட்ட பதினைந்து வயது மகன் பத்து வயது மகனாகவும் பதினோரு வயது மகள் ஆறு வயது மகளாகவும் நின்றாள் யாருக்கு தான் மூச்சடைக்காது...

துருவனின் கண்களில் எதையோ உணர்ந்ததற்கான மிரட்சி தெரிய அதற்கு நேரெதிராய் கயலின் கண்களில் புதியாய் ஒரு பயம் தெரிந்தது...

பெரியவர்களுக்கு சொல்லவா வேண்டும்.. குளிர் ஜுரம் வராத குறையில் தான் அவர்களுக்கு...

அவர்களின் நிலையை கவனித்ததும் பவி உடனே வேலு தாத்தாவின் அருகில் சென்றாள்...

பவி : தாத்தா இப்போ எங்களுக்கு நேரமில்ல... நீங்க நடந்தது எத பத்தியும் நினைக்காதீங்க... எல்லாமே சரியாய்டும்.. பசங்களுக்கு ஒன்னும் இல்ல..நாங்க உடனே தர்மன் ஐயாவ பாக்க போறோம்..  என அவர் கை பிடித்து கூறவும் நாயகர்களும் அதை தடுக்கவில்லை...

மது : அத்தை பெரியத்தை பெரிம்மா பாட்டி குழந்தைங்களுக்கு பாத்துக்கோங்க... மாமா பெரிப்பா தைரியமா இருங்க நாங்க வரோம் என கூறவும்

நாயகன்கள் : வரோம் என பொதுவாய் கூறி விட்டு உடனே வீட்டை விட்டு வெளிள்ளேறினர்... ஒவீ துருவ் மற்றும் கயலை அழைத்து கொண்டு அவர்களுடன் இணைந்தாள்..

இவர்கள் உடனே அங்கிருந்து ஷேஷ்வமலையை நோக்கி நகர்ந்தனர்...

திவ்யா : இருங்க... இப்போ நாம நடந்து போர அளவுக்குலாம் நேரமும் இல்ல பொருமையும் இல்ல.. நான் அழச்சிட்டு போறேன் என படபடவென கூறிவிட்டு பதிலுக்கு கூட காத்திராமல் உடனே அவளது நீல விழிகளை ஒளிர விட்டு அவர்களனைவரையும் சுற்றி ஒரு நீல நிற வளையத்தை உருவாக்கினாள்...

பந்து போல் உருவான அந்த நீல நிற வளையம் அவர்கள் அனைவரையும் சூழ்ந்து கொண்டதும் மின்னி மறைய நாயகர்களும் அங்கிருந்து மறைந்திருந்தனர்...

கயல் அரை தூக்கத்திலே இருந்ததாலும் திவ்யா செய்த மாயம் கனவென்ற எண்ணத்தை கொடுத்ததாலும் ஒவீயின் தோளில் சாய்ந்து விட்ட உறக்கத்தை தொடர்ந்திருந்தாள்...

தன் பச்சை பசேளென்ற நிலத்தில் உலகின் நாயகர்களை ஷேஷ்வமலை தாங்க இன்னதென்று கூற முடியாத ஒரு சோகத்தை முகத்தில் ஏந்தி திடுதிபுவென தங்கள் முன் நின்ற கோவன்கள் சஹாத்திய சூரர்கள் யாளி வீராங்கனைகள் மற்றும் நாகனிகளை கண்டு ஷேஷ்வமலை வாசிகள் முளித்தனர்...

குடிலின் வாயிலில் அமர்ந்து மண் வைத்து விளையாடி கொண்டிருந்த பத்து வயதான பரிசி " வருக வருக கோவன்களே... வரவேற்கிறேன் சஹாத்திய சூரர்களே.. வருக வருக யாளி வீராங்கனைகள் மற்றும் நாகனிகளே வரவேற்கிறேன் தாயே.. வரவேற்கிறேன் ஐயனே" என தலை பணிந்து மோகினி வளவனுக்கும் கூற அவளுக்கு தானும் பணிந்து புன்னகைத்தனர் நமது நாயகர்கள்...

ஷேஷ்வ குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் ஆரவாரமாய் அவர்களை வரவேற்த்து அமர வைத்தனர்.. இவர்களின் கரகோஷங்களிலும் நன்கு உறங்கி கொண்டிருந்த கயல் பின் தன்னால் எழுந்து அனைவரையும் ஒரு மிரட்சியுடன் சுற்றிப் பார்த்தாள்... தர்மன் ஐயாவின் வரவிற்கான சாயல் தெரியாததால் அவரின் மகன் கற்கரியனை ஏறிட்டான் இந்திரன்..

இந்திரன் : கற்கரியா.. தர்மன் ஐயா இன்னமும் பயணித்திலிருந்து திரும்பவில்லையா..

கற்கரியன் : ஆம் கோவனே இன்னமும் திரும்பில்லை.. தாம் எதற்காய் வரவளித்தீரென இன்னும் கூறவில்லையே..

முகில் : தர்மன் ஐயாவை சந்தித்திடவே இங்கு திடீர் விஜயம் புரிந்திருக்கிறோம் கற்கரியா.. தர்மன் ஐயாவின் உரைவிடத்தை கண்டு கொண்டீரா...

கற்கரியன் : இல்லை சூரரே.. ஐயாவின் உரைவிடம் அவராய் தெரிவிக்கும் வரை எம்மால் கண்டறிய இயலாது.. அப்படி தாம் ஐயாவை சந்தித்து கலந்துரையாட வேண்டிய விசனம் அதி முக்கியமெனில் அவரே தம்மை காக்க வைக்க மாட்டார் அல்லவா.. என கூறி கொண்டிருக்கும் போதே தன் தண்டை ஊண்டி கொண்டு காட்டிலிருந்து வெளியேறினார் தர்மன் ஐயா...

நம் நாயகர்களை எதிர்பார்த்ததன் அடையாளமாய் அவர் நேரே நடந்து மேடையருகிலே வந்தார்...

தர்மன் ஐயா : யாவரும் தத்தமது பணிகளை புரிய செல்லலாம் உறவினர்களே என உரக்க கூறியதும் அங்கு கூடியிருந்த ஷேஷ்வ குடும்பத்தினர் அனைவரும் நாயகர்களுக்கு ஒரு புன்னகையும் தலை பணிதலையும் கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்...

தர்மன் ஐயா : பரிசி.. கயல்விழியையும் உம்முடன் அழைத்து சென்று விளையாடுகிறாயா

பரிசி : நிச்சயமாக ஐயா.. என கயலிடம் ஓடி சென்று முன் நிற்க கயல் நிமிர்ந்து தன்னை மடியில் அமர வைத்திருந்த ஒவீயை நோக்கினாள்... ஒவீ தலையசைத்ததும் புன்னகை பூக்க பரிசியுடன் அங்கிருந்து விளையாட ஓடினாள் கயல்...

தர்மன் ஐயா : தம் முன் விஜயம் புரிய தாமதித்ததற்கு எம்மை பொருத்தருள வேண்டுகிறேன்

அனு : அதற்கு அவசியமன்று ஐயா.. தாம் நிகழும் அனைத்தையும் அறிந்திருப்பீரென எண்ணுகிறேன்...

தர்மன் ஐயா : அறிவேனம்மா ... அறிவேன்..

வர்ஷி : பின் யாம் ஏன் எங்களை எச்சரிக்கவில்லை ஐயா..

தர்மன் ஐயா : அப்பேற்பட்ட நிலையிலிருந்தேன் மகளே.. இரண்டு வருடம்.. முழுதாய் ஈராண்டுகள் எம்மால் தம் முன் பிரவேசிக்க இயலவில்லை.. குற்ற உணர்ச்சி எம்மை வாட்டுகிறது என தோய்ந்த வதனத்துடன் கூறினார்...

சரண் : என்(ன) கூற வருகிறீர் ஐயா..

தர்மன் ஐயா : எவ்வாறு கூறுவேன் சூரரே.. மூன்று வருடங்கள் முன் யானே உம் பெற்றோரிடம் உம் யாவருக்கும் இனி எத்தீங்கும் விழையாதென கூறினேன்.. தற்போது யானே எவ்வாறு தம்முள் எவரோ மரணிக்க உள்ளனர் என்பதை கூறுவேன் என கூறியதை கேட்டு அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியடைய அந்த அதிர்ச்சி நம் கோவன்களை தாக்கியதாய் தெரியவில்லை...

மோகினி : விளையாடுகிறீர்களா ஐயா.. அதற்கு துளியும் வாய்ப்பில்லை.. எமது இளவல்கள் எவரும் மரணிக்க மாட்டர்... அதை தாமே நன்கறிவீர்...

தர்மன் ஐயா : மெய் தானம்மா.. அவர்கள் மரணிக்க வாய்ப்பன்று தான்.. ஆயினும் அவர்களை வதம் புரிந்திட ஆறாயிரம் ஆண்டு காலங்களின் பின் மீண்டெழுந்துள்ளனரடா பஞ்சலோக வம்சத்தினரால் மண்ணுக்குள் அடைக்கப்பட்ட யட்சினி ஸர்ப்ப வம்சத்தினர்.. என கூறவும் நம் நாயகன்களை விடுத்தும் நாயகிகள் அனைவரும் பேரதிர்ச்சியடைந்தனர்..

அர்ஜுன் : அதிலென்ன உள்ளது ஐயா.. யாம் அதை முன்னமே அறிவோம் என சாதாரணமாய் கூறவும் நாயகிகளை அவனை இன்னும் அதிர்ச்சியுடன் நோக்கினர்...

மது : தமக்கு சித்தம் ஏதும் கலங்கியுள்ளதா.. மெய்யாகவே தான் பறைகிரீரா...

ரித்விக் : ஆம்.. யாம் முன்மே அந்த வம்சத்தினர் விடுப்பெற்றதை அறிவோம்.. அத்துடன் ஒன்றரை வருடம் முன் கயலை கிடத்தி சென்றதும் அதே வம்சத்தினர் தான்...

திவ்யா : பின் எதற்காய் எங்களிடம் அதை எவரும் தெரிவிக்கவில்லை... எவ்வாறு இத்துனை நாட்கள் அவையை அறிக்கையிடாமல் மௌனம் காத்தீர்கள் என ஆவேசமாய் கேட்டதும் நாயகர்கன்கள் அனைவரும் இப்போது " நீ சொல்லலையா " என்பதை போல் வளவனை நோக்கினர் ...

வளவன் அதற்கு இடவலதாய் தலையசைக்க நாயகன்கள் ஒரு ஒருவொரும் ஒவ்வொரு உணர்ச்சியை வெளிகாட்டினர்... சமாதானம் செய்ய ரவி வாயெடுக்கும் முன்...

ப்ரியா : தம் மீது மாத்திரமல்ல.. எங்காள் மீதும் தவறுள்ளது... அன்று பலத்த காயங்களுடன் தாம் உரைவிடம் திரும்பும் போதே யாம் சந்தேகித்திருக்க வேண்டும்.. ஆயின் கடம்பர சர்ப்பங்களிடம் போரிட்டதால் ஏற்பட்ட காங்களென தவறாய் யூகித்து கொண்டோம்.. கயலை கிடத்தினரென எண்ணவில்லை... காட்டின் தொலைந்து விட்டாலென்றே எண்ணினோம்... முதல் முறையாய் ஒரு விசனத்தை மறைத்ததால் நம் நாயகன்களுக்கு நாயகிகளின் அடுத்தடுத்த தாக்குதல்களில் பதில் வரவில்லை...

வளவன் : அதை விடுத்து தற்போதுள்ள இன்னலுக்கு வரலாமம்மா என நாயகன்களை மனைவிமார்களிடமிருந்து காப்பாற்றினான்...

தர்மன் ஐயா : சண்டையிட இது நேரமில்லையம்மா.. நிகழ்ந்ததை நம்மால் இனி மாற்ற இயலாது..

ஒவீ : அதுவிருக்கட்டும் ஐயா.. எவ்வாறு அவர்கள் விடுப்பெற்றனர்...

தர்மன் ஐயா : ஹ்ம்.. இரண்டு வருடங்கள் முன் ஒரு கொடூர இரா(இரவு) வேளையில் மகளே.. அன்றைய கால நிலை மிகவும் வேறாய் தெரிந்தது... காரணமின்றி விண்ணில் பயணித்த மாபெரும் மின்னலொன்று தவறுதலாய் நம் வேதபுரத்தின் தூய நதியான தன்யநதியில் விழுந்து அதை அசுத்தமாக்கியது மட்டுமன்றி அதன் அடி மட்டத்தில் அடைப்பட்டு பிணமாய் புதைந்திருந்த அவ்வைவரை எழ வைத்தது...

ரவி : ஒரு நிமிடம்.. இஃது சரியாய் என்று நிகழ்ந்ததென தாம் அறிவீரா ஐயா

வளவன் : உமது சிந்தனை சரியே ரவி.. நாகனிகள் ஆழ்ந்த மயக்கத்துள் தள்ளப்பட்ட அதே நாளில் தான் அவர்கள் விடுப்பெற்றனர்...

அனு : இக்காரணத்தினால் தான் அவர்களின் வரவு இன்றளவும் எங்களுக்கு தெரியாமல் இருந்திருக்கிறது என கையை முருக்கி கதிரையின் பிடியில் அடித்தாள்...

தர்மன் ஐயா : அதில் தம்முடைய தவறில்லை நாகனியே..

துருவ் : யான் அறிந்தவரை யட்சினி ஸர்ப்ப வம்சத்தினரை அழிக்க அவர்களின் எதிரி வம்சமான பஞ்சலோக வம்சத்தினரும் பிறப்பெடுத்திருக்க வேண்டுமல்லவா ஐயா.. அதிலும் கயல் மாத்திரமே பிறப்பெடுத்துள்ளாள்... என இவ்வளவு நேரமும் அமைதி காத்த துருவ் இப்போது ஒரு வினா எழுப்பினான்...

மோகினி : அத்துடன் கயல் பஞ்சலோக வம்சவாசி மட்டும் தான்.. பஞ்சலோக வம்சத்தின் முதல் கருவாய் மூவ்வீரர்களும் பத்து அகால வீரர்களும் பிறக்க வேண்டும்... ஆனால் கயல் மாத்திரம் தானே பிறப்பெடுத்துள்ளாள் என இச்சந்தர்ப்பத்தை தன் சந்தேகத்தை தீர்க்க வேண்டி மோகினி உபயோகித்தாள்...

தர்மன் ஐயா அவை இரண்டிற்கும் பதிலளிக்கும் முன்.. அஷ்வன்த் குறுக்கிட்டான்...

அஷ்வன்த் : கயல் மட்டும் இல்ல... மாதவி அம்மாவோட பேரன் அதாவது நம்ம துருவோட ஃப்ரெண்.. கார்த்திக்கும் பஞ்சலோக வம்சத்தவன் தான்... என கூறவும் நேற்று கார்த்திக் மற்றும் கயல் இடையே நிகழ்ந்த நினைவையும் அவன் கழுத்தில் ஒளிரிய அச்சையும் நினைவு கொணர்ந்தனர்...

தர்மன் ஐயா : ஆம் தாம் கூறும் கார்த்திக் தான் பஞ்சலோக வம்சத்தின் பத்து முதல் கருக்களில் முதலாமவன் அடுத்த எட்டு கருக்கள் சஹாத்திய சூரர்களுக்கும் யாளி வீராங்கனைகளுக்கும் பிறந்த ஆண் மகவுகள் என கூறவும் அனைவரின் முளியும் விரிந்த அளவை பார்க்க வேண்டுமே..

வளவன் : அவ்வாறெனில் இறுதி கரு என மற்றதையெல்லாம் விட்டுவிட்டு இவன் கேள்வியில் குறியாய் இருக்க... அதற்குள் இடை வெட்டினாள் வீனா...

வீனா : இதற்கு துளியும் சாத்தியமில்லை ஐயா.. தாம் தவறாய் எடுத்துள்ளீர் என எண்ணுகிறேன்.. முதல் மூன்று சிசுக்கள் அல்லாது இந்த வம்சமே முழுமையடையாது...

வீர் : அம்மூன்று சிசுக்கள் இன்னும் ஜனிக்கவில்லையா..

ரக்ஷா : நாம் மரணிக்காதவரை அம்மூன்று சிசுக்கள் இப்புவியில் ஜனிக்காது என கூறவும் அனைவரும் முளிக்க நம் கோவன்களோ சற்றே வித்யாசமான பார்வையை பரிமாற்றிக் கொண்டனைர்...

சரண் : சுற்றி வளைக்காது நேரடியாய் விசனத்திற்கு வா ரக்ஷா...

ரக்ஷா : அதாவது புவியில் இப்போது நாம் இருப்பதாலும் நமது வரவே தீய சக்திகளை அழிக்க போதுமானதென்பதாலும் பஞ்சலோக வம்சத்தினர் பிறப்பெடுக்க மாட்டர்...

அர்ஜுன் : இதனால் தான் பஞ்சலோக வம்சத்தினர் பிறக்க மாட்டரென்று தமக்கு யார் கூறியது...

தான்யா : ஐயாயிரம் வருடம் முன்பு நாகமலையில் நாம் வரலாறு பயின்ற போதே இதை அறிந்தோம்.. அப்போது உயர்ந்த யட்சினி சர்ப்ப வம்சத்தை அழிக்க நாம் பிறக்காததால் பஞ்சலோக வம்ச சக்திகள் அதை அடைத்தது... அடுத்த ஆயிரம் வருடத்தில் மீண்டும் முப்பெரும் அரசர்களின் தலை ஓங்கவும் அவர்களை ஒழிக்க பஞ்சலோக வம்சத்தில் எவரும் பிறக்காமல் நம் நான்கு வம்சத்திலும் பிள்ளைகளை ஈண்டெடுத்ததால் இப்படியாக தான் இயற்கையின் நியதி இருக்குமென நம் முன்னோர் முடிவெடுத்திருந்தனர்

தர்மன் ஐயா : அது தவறான கணக்கம்மா... அவ்வாறு அதுவே மெய்யாய் இருந்தால் பராக்ரம வீரன்கள் பிறப்பெடுத்திருக்க மாட்டர்...

நிரு : அது பொய்க்காவே இருந்தாலும் முதல் மூன்று சிசுக்கள் பிறக்க வேண்டுமே ஐயா

ரித்விக் : எதற்காய் அம்மூன்று சிசுக்கள் பிறப்பெடுக்க வேண்டும்..

அனு : அம்மூன்று சிசுக்கள் தான் பஞ்சலோக வம்சத்திலே முதலில் பிறக்கும்.. அவர்களின் ஜனனம் நிகழ்ந்த சில காலத்தில் மிகவும் விரைவாகவே அடுத்த பத்து சிசுக்கள் ஜனிக்கும்.. அதன் பின்பு வாய்ப்பிருந்தால் மட்டும் தான் கயல் போன்ற மனித பிறவிகள் அதே வம்சத்தில் பிறப்பெடுப்பர்...

தர்மன் ஐயா : மெய்யே மகளே.. ஆயினும் அதிரதீர வம்சத்தின் முவ்வீரட்சகன்கள் எனப்படும் அந்த மூன்று கருக்கள் இப்புவியின் அடி மட்டத்தில் மட்டும் தான் ஜனிக்கும் என்பது ஐதீகமாகவும் விதியாகவும் நம்பப்படுகிறது... உண்மை யாதெனில் அப்படி ஒரு இடம் இன்னும் கண்டறியப்படவில்லை என கூற கோவன்கள் மூவரின் விழிகளும் ஒன்றோடொன்று ஒரு நொடி சங்கமித்து கொண்டது...

அம்மூவரும் மையத்திலிருந்த அவர்களின் மூன்று சிம்மசானத்தில் அமர்ந்திருந்ததாலும் அனைவரின் பார்வையும் அந்த சிம்மாசனத்திற்கு நேரெதிரே அமர்ந்திருந்த தர்மன் ஐயாவை நோக்கியிருந்ததாலும் இம்மூவரின் திருட்டு முளிகளை எவருமே கவனிக்கவில்லை...

துருவ் : ஆறாயிரம் வருடம் முன்பு எவ்வாறு இரட்சகன்கள் பிறப்பெடுத்தனர்...

தர்மன் ஐயா : அதற்கான பதில் என்னிடமும் இல்லை துருவா.. ஆனாலும் தாம் இருக்கும் காரணத்தினால் கூட இரட்சகன்களின் பிறப்பு தள்ளப்பட்டிருக்களாம்... அவர்களுக்கு பதில் பராக்ரம வீரன்கள் பிறப்பெடுத்திருக்களாம்... என நாயகர்களை நோக்கி கூறி முடித்தார்

மோகினி : அப்படி இருந்தாலும் பராக்ரம வீரன்கள் பிறப்பெடுக்க பத்து வருடங்கள் முன்பே எவ்வாறு கயல் இப்புவியில் ஜனித்தாள்.. அத்துடன் இன்றைய கயலின் நிலைக்கு காரணம் யாது என கேட்டதற்கு தர்மன் ஐயா பெருமூச்சை இழுத்து விட்டார்...

தர்மன் ஐயா : உண்மையை கூற வேண்டுமெனில் கார்த்திக் ஒரு விமோசனமில்லா சாபத்துடன் பிறந்திருக்கிறான்..

எதற்காய் கயலை பற்றிய கேள்வியில் கார்த்திக்கை இழுக்கிறார் என அனைவரும் புருவத்தை சுருக்க துருவ்க்கு நெஞ்சம் பதறியது...

துருவ் : என்ன கூறுகிறீர்கள் ஐயா.. எமது நண்பனுக்கு எதற்காய் சாபம் இருக்க வேண்டும்... யாரளித்த சாபமது...

தர்மன் ஐயா : பொருமை துருவா.. ஆறாயிரம் வருடங்கள் முன்பு யட்சினி சர்ப்ப வம்சத்தினரால் ஒரு எதிர்பாரா தாக்குதல் ஷேஷ்வமலையில் நடந்தது.. அதை பராக்ரம வீரன்கள் தான் தடுத்து மக்களை பாதுகாத்தனர்... ஆனால் அந்த எதிர்பாரா விபத்தில் பெண்மணி ஒருவர் அவளின் கணவனை இழந்து விட்டாள்.. அவளின் கணவன் பராக்ரம வீரன்களை காக்கவே இன்னுயிர் நீத்தான்... இதனால் தன் இயலாமையை பொருக்க முடியாத அப்பெண் தற்கொலை செய்து கொண்டதோடு மட்டுமல்லாமல் பராக்ரம வீரன்களை சபித்து விட்டாள்...

க்ரிஷ் : கயலை பற்றி கேட்ட வினாவிற்கு எதற்காய் கார்த்திக்கையும் பராக்ரம வீரன்களையும் இழுக்கிறீர்கள் ஐயா...

தர்மன் ஐயா : உண்மை அது தான் கோவனே.. கார்த்திக் கயல்விழிக்காய் பிறந்தவன்... கயல்விழி கார்த்திக்கிற்காய் பிறந்தவள்.. அவ்விருவரும் ஒருவர் மற்றவருக்காய் பிறந்தவர்கள்... கார்த்திக்கிற்கு கிடைத்த சாபமே அவனுக்கும் கயலிக்கும் இடையே விதைத்து மலரப்போகும் காதலின் ஆயுட்காலம் தான்...

வளவன் : புரியும் படி கூறுங்கள் ஐயா... இருக்கும் குழப்பங்களில் இது துளியும் புரிய மறுக்கிறது...

தர்மன் ஐயா : கூறுகிறேன் மகனே.. தான் தன் துணையை விட்டு பிரிந்த வலியை அனுபவிக்க வேண்டுமென அப்படிப்பட்ட சாபமொன்றை அளித்தாள் அப்பெண்.. துரதிர்ஷ்ட வசமாய் அவளின் குறைந்த சக்திக்கு அவளின் சாபம் பத்து பராக்ரம வீரர்களுள் முதல்வனான கார்த்திக்கிற்கு மட்டும் தான் பளித்தது... கார்த்திக் என்று அவனவளை காண்கிறானோ அடுத்த இருவத்திநான்கு மணி நேரத்திலே அவள் அவனை விட்டு வாழ்கையில் வெகு தொலைவு சென்றிடுவாள்.. அவர்களுக்கு காண வாய்ப்பென்பதை விட அவர்கள் சேர வாய்ப்பு குறைவென்பதாய் குறிப்பிட்டாள்... ஆனால் காலத்தில் கயல் வெகு தொலைவு பயணிப்பாள் என்பதை நானே எதிர்பார்க்கவில்லை... கார்த்திக்கிற்காக தான் கயல் முன்பே பிறந்திருக்கிறாள்...

சத்தீஷ் : அவ்வாறெனில் துருவனும் வயதில் குறைந்ததற்கு காரணம் யாது ஐயா...

தர்மன் ஐயா : சஹாத்திய சூரர்கள் மட்டுமன்று கோவனே.. வளவன் மோகினி தம்பதயர்களின் மகன்கள் துருவன் ருமேஷ்யவன் மற்றும் விதுஷ்யவன் இம்மூவரும் கூட பஞ்சலோக வம்சத்தினர்களின் நலன் விரும்பிகளான பருந்து வம்சத்திலே பிறந்துள்ளனர்... கால மாற்றங்களின் காரணத்தினாலும் ஐந்தாயிரம் வருடங்களுக்கும் மேலாக வளவன் மோகினி பிரிந்திருந்ததாலும் வந்த வினை தான் இது... துருவன் பஞ்சலோக வம்சத்தவர்களுக்கு போரிட உதவுகையில் சரியான ஒரு வயதில் இருக்க வேண்டுமென்பதால் இயற்கையெடுத்த முடிவு இது.. இதனால் கயலுக்கோ துருவனுக்கோ எந்த ஒரு தீங்கும் விழையாது... துருவனை விடுத்தும் விரைவிலே கயல் அனைத்தையும் நினைவிலிருந்து மறக்க வாய்ப்புள்ளது... ஏனெனில் அவள் இப்போது உள்ளது ஆறு வயது.. அவளின் அறிவு திறணும் நியாபக சக்தியும் குழந்தை பருவத்திற்கு மாற தொடங்கி விடும்... இன்னும் தெளிவாய் கூற வேண்டுமானால் சாபத்தின் வெளிப்படையாய் கயல் அதன் அடுத்த கட்டமாக விரைவிலே குழந்தையின் உருவையும் எடுப்பாள்... கூற முடியாது ஒரு பெண்ணின் வயிற்றில் சிசுவாகவும் வாய்ப்புள்ளது

இதை கேட்டதும் இத்துனை காலங்களில் அடைந்த அதிர்ச்சிகளுக்கு இது அபாரமாய் தெரிந்தது அவர்களுக்கு.. ஆனால் அது தானே நடக்க உள்ளது...

மோகினி : கயலின் பிறப்பில் இரசியம் உள்ளதாய் கூறினீரே... அதையும் இப்போதே கூறுங்கள்

தர்மன் ஐயா : ஹா.. தாங்கள் எண்ணுவதை போல் கயலின் உண்மையான பெற்றோர் அவளை பதினோறு வருடங்களுக்கு முன்பிலிருந்த வளர்த்த அவ்விருவர் இல்லை... எம்மால் தான் கயல் அவர்களிடம் சேர்க்கப்பட்டாள் என கூறவும் இப்படி அதிர்ச்சி மீது அதிர்ச்சியாக வரவும் அவர்களுக்கு எதிர்த்து பேசிட குரல் வளையமும் மனதும் ஒத்துழைக்கவில்லை...

ப்ரியா : எ..என்ன.. கூறி..கிரீர்க.ள்...

தர்மன் ஐயா : ஆம்.. கயல் பத்து மாதம் ஒரு தாயின் வயிற்றில் வளர்ந்து பிறந்த குழந்தை கூட அல்ல.. பத்தே வினாடிகளில் என் கரத்தில் தோன்றிய குழந்தை...

கூறவா வேண்டும்.. அதிர்ச்சிகளை தாங்க இயலாமல் வர்ஷி மயங்கியே விழுந்திருந்தாள்... தன் தோள் மீது சாய்ந்த வர்ஷியை தாங்கி பிடித்த தான்யா உடனே அருகில் ஒரு குடுவையிலிருந்த நீரை அவள் முகத்தில் தெளித்து அவளை எழுப்பி விட்டாள்...

அரக்க பறக்க எழுந்த வர்ஷி கனவாய் இருக்க கூடாதா என்ற எண்ணத்துடன் சுற்றி பார்த்தாள்... ஆனால் அது தான் கனவில்லையே...

தான்யா : ஆர் யு ஓக்கே என கேட்டதும் தலையசைத்து அமோதித்தாள் வர்ஷி...

தர்மன் ஐயா : ஆம் .. கயல் அவ்வாறு தான் இவ்வுலகில் ஜனித்தாள்... அவளுக்கு இத்துனை இன்னல்களும் பேராபத்துக்களும் ஏற்பட்டும் அவள் இன்னுயிரை பிடித்து கொண்டு வாழ்ந்தது எதற்காய் என எண்ணுகிறீர்கள் அனைத்தும் கார்த்திக்கை காண்பதற்காக தான்... அவர்கள் இருவரின் சந்திப்பின் பின் தான் கயல் முழுமையாக பத்து மாதம் ஒரு தாயின் வயிற்றில் வளர்ந்து பிறப்பெடுப்பாள்...

இதையெல்லாம் கேட்டதும் மோகினிக்கு ஏதோ போல் இருந்தது... மூன்று வருடங்கள் பெற்ற பிள்ளை போல் வளர்த்தவளுக்கு ஒரு தாய் வர போகிறாள்.. அவள் வயிற்றில் கயல் வளரப்போகிறாள் என நினைக்கும் போது அவள் மனதிலிருக்கும் ஏதோ ஒன்று அவளை விட்டு தூரம் செல்வதை போல் தோன்ற தனிச்சையாகவே மோகினியின் கண்கள் கண்ணீர் குளமாகின...

துருவ் : எவ்வாறு கயல் ஒரு பெண்ணின் வயிற்றில் கருவாய் உருவாக முடியும்..

தர்மன் ஐயா : ஹ்ம் ஒருவேளை உறங்குகையில் அவள் காற்றில் மறைந்து போகலாம் துருவா.. மறுநாள் அவளின் இதயத்துடிப்பை உன் தாயின் வயிற்றில் கூட உன்னால் கேட்க இயலளாம் என கூறவும் சட்டென மோகினி அவரை கண்கள் நிறைந்த கண்ணீருடன் ஏறிட அவளை கண்டு புன்னகைத்தார் தர்மன் ஐயா...

வளவன் : மெய்யாகவா ஐயா

தர்மன் ஐயா : ஆம் வளவா... உம் மனைவியே கயலை சுமக்க போகிறாள்.. அது கூடிய விரைவில் என்றாவது நிகழும்...

மகிழ்ச்சியில் மோகினி வளவனை கட்டி கொண்டு கதறி அழுது விட்டாள்... அவளின் அழுகை மற்றவர்களையும் கண்ணீர் சிந்த வைத்தது...

முகில் : சரி தர்மன் ஐயா பராக்ரம வீரன்களுள் பத்தாம் கரு யார்..

தர்மன் ஐயா : அதை தெரிவிக்க தம்மை காண ஒருவர் வரவுள்ளார் என பொடி போட்டு கூற தர்மன் ஐயா கற்கரியனை அழைத்து யாரையோ அழைத்து வர கூறினார்...

சில நிமிடகளில் லீலாவதியும் அவளுடன் ஒரு பெண்மணியும் அந்த சிம்மாசனத்தை நோக்கி வந்தனர்... அந்த பெண்மணியின் கரத்தில் ஒரு குழந்தையும் இருந்தது...

அந்த பெண்மணியின் கண்கள் ஊதாவும் பச்சையும் கலந்த கலவையிலிருக்க அவளின் கழுத்திலும் கன்னத்திலும் இரு குட்டி செதில்கல் முளைத்திருந்தது... பார்க்க வித்யாசமாக அதே நேரம் நாக கலை பொருத்திய பாவையாய் தெரிந்தாள்...

சிம்மாசனங்களை நெருங்கி வந்ததும் இருவரும் பணிவாய் பணிந்து நிமிர்ந்தனர்...

தர்மன் ஐயா : தாம் லீலாவதியை முன்பே அறிந்திருப்பீர்... இப்பெண் மியாரகி ...

இந்திரன் : சர்ப்பலோகத்தை சார்ந்தவர் என இவன் முன்னமே கூற தர்மன் ஐயா தலையசைத்தார்...

தர்மன் ஐயா : மியாரகி மட்டுமல்ல லீலாவதியும் சர்ப்பலோகத்தை சார்ந்தவளே.. மியாரகியின் மகனே பராக்ரம வீரன்களுள் பத்தாமவன் மற்றும் இறுதியானவன் அஜயதீபன்... என மியாரகியின் கரத்திலிருந்த ஆண் குழந்தையை சுட்டி காட்டினார்...

க்ரிஷ் : ஆனால் மியாரகி ஏன் தோற்றத்தில் கார்த்திக்கை ஒத்திருக்க வேண்டும்... இதற்கு தர்மன் ஐயா பதிலளிக்கும் முன் மியாரகியே நேரடியாய் பதிலளித்தாள்...

மியாரகி : ஏனெனில் கார்த்திக்கை ஈண்டெடுத்த தாய் யான் தான் கோவனே.. அஜயதீபன் யான் ஈண்டெடுத்த இரண்டாம் மகவு

தர்மன் ஐயா : பிறப்பிலே அவன் பராக்ரம கருக்களில் முதலாமவன் என அறிந்ததால் அவனை எம்மிடம் விட்டு சென்றான் அவனின் தந்தை.. கார்த்திக்கை ஆஷ்ரமத்தில் லீலாவதியினாலே சேர்த்தேன்.. பின் மாதவி அம்மாள் அவனை தத்தெடுத்து சென்றார்..

சத்தீஷ் : சரி மியாரகி தற்போது இங்கு வரவளித்ததன் காரணமென்ன...

மியாரகி : எம் மகனிற்கு சர்ரப்பலோகத்தில் பாதுகாப்பில்லாத காரணத்தினால் அவனை தம்மிடம் சேர்க்கவே இங்கு வரவளித்துள்ளேன் கோவனே... தம்மால் அவனை பாதுகாக்க இயலுமா...

நிரு : யாம் பெற்ற மகனாகவே அவனையும் வளர்ப்போம் மியாரகி.. நீ கவலை கொள்ள வேண்டிய அவசியமிருக்காது... என கூறியதும் நிம்மதியுடன் புன்னகைத்தாள்...

மியாரகி : யான் சர்ப்பலோகத்திற்குள் இன்னும் சில நாழிகைக்குள் சென்றாக வேண்டும்.. அத்துடம் தமக்கு யான் ஒன்று தர வேண்டும் என கூறவும் சரியாக அனு எதற்சையாய் மியாரகியின் கழுத்திலிருந்த ஒரு தழும்பை கவனித்தாள்...

அனு : மியாரகி தமது கழுத்தில் சுமங்கலிக்கான அடையாளமாய் இருக்க வேண்டிய முத்து மாலை எங்கே.. அத்துடன் தழும்பு இருக்கிறதெனில் என முடிக்காமல் நிறுத்த

மியாரகி : எமது கணவர் இன்னுயிர் நீத்து விட்டார் தேவி.. அம்முத்து மாலை எம் கழுத்தில் இருக்க வேண்டிய காலம் ஓராண்டு முன்பே முடிந்தாகி விட்டது என கூறியதோடு குழந்தையை நேராக சென்று இந்திரனிடம் கொடுத்தாள்...

மியாரகி : எமக்கான நாழி முடியவுள்ளது.. எம் மகனை அவன் தமையனுடன் விட்டு விடுங்கள்... எம்மகன்கள் இருவரும் அன்னை இல்லையென்றாலும் தம் அனைவரின் பாதுகாப்பில் நலமாய் வளர்வர்.. சென்று வருகிறேன் என அதற்கு மேலும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் அங்கிருந்து சென்று விட்டாள்...

அவளின் செய்கை புரியாமல் அனைவரும் அவள் தலை மறையும் வரை அவளையே பார்த்திருக்க இப்போது மீண்டும் தர்மன் ஐயாவை நோக்க திரும்பிய அனைவரும் இந்திரனின் வெளிரிய முகத்தை கண்டு திடுக்கிட்டனர்...

இந்திரன் அக்குழந்தைத்தின் முக ஜாடையை கண்டு சற்றே ஆடிப்போயிருக்க அவன் கழுத்தில் கிடந்த சங்கிலி இந்திரனை வெளிர வைத்தது...

ஆழ்ந்த உறக்கத்திலிருந்த அஜயதீபனின் கழுத்தில் ஒரு கருப்பு கையிற்றில் தொங்கி கொண்டிருந்தது இந்திரன் ஒன்றரை வருடம் முன் சர்ப்பலோக கோட்டையின் சேனை தலைவனிடம் நட்பு பரிசாய் அளித்த அதே பஞ்சலோக தங்க முத்திரை

மாயம் தொடரும்...

ஹாய் இதயங்களே... பெருசா தான் எழுதனும்னு நெனச்சேன்... ஆனா இதுவே உங்களுக்கு புரியுமான்னு

ெரியல.. அதான் அப்டியே நிறுத்தீட்டேன்... கவலப்படாதீங்க.. அடுத்த யூடிய காலைலயே ஸ்டார்ட் பன்னிட்டேன்... நாளைக்கு நைட் போட்டுடுறேன்... மாஸா இருக்கனும்னா என்ன பன்னன்னு தெரியல.. ஒரு போர் வைக்கப்போரோம்ல... பட் அந்த போரோட முடிவு தான் உங்களுக்கு புடிக்காது.. ஹ்ம்ம்ம் என்ன செய்ய ... நீங்க தான் பாப்பாவ மன்னிச்சிடனும்.. ஹிஹி ஓக்கே இதயங்களே... டாட்டா

DhiraDhi❤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro