மாயம் - 31
க்ரிஷ் தன் கரங்களிலே சரிந்த அனுவை பதட்டத்துடன் பிடித்த அடுத்த நொடி அவனுக்குள் ஒரு உணர்வு ஊடுருவி இதயத்தை தொட்டு வர கண்கள் ஒரு நொடிக்கும் குறைவான இடைவேளையில் அவனது சிகப்பு நிற இரத்தினக்கல்லாய் பளபளத்து விட்டு பழைய நிலைக்கு திரும்பியது...
தன் அதிர்ச்சியை ஓரங்கட்டிய க்ரிஷ் உடனே அனுவை தூக்கி கொண்டே உள்ளே ஓடி வர.. இவன் உள்ளே கால் வைத்த அடுத்த நொடியே மாடியிலிருந்து " ஷிவானி என்ன பாரு டி.. " என்ற இந்திரனின் அலரல் வீட்டை நிறைக்க அதே நேரம் வீட்டின் வெளியிலிருந்து " வீனா ரக்ஷா தான்யா யாராவது வாங்க... தேவி மயங்கீட்டா " என்ற சத்தீஷின் அலரல் வீட்டுள் நுழைந்தது...
தனக்கு ஒன்றும் புரியவில்லை என்றாலும் சிந்திக்க நேரமில்லை என்பதை உணர்ந்திருந்த க்ரிஷ் உடனே அனுவை சோபாவில் கிடத்தி விட்டு வேகவேகமாய் உணவு மேஜையிலிருந்த தண்ணீர் ஜெக்கை எடுத்து கொண்டு ஓடி வந்தான்... அதற்கு முன்னமே உணவு பலகாரங்களை சமையலறைக்குள் வைத்து விட்டு வந்த வீனா க்ரிஷ் மயங்கிய அனுவை சோபாவில் கிடத்தி விட்டு பதட்டத்துடன் செல்வதை கண்டு உடனே அவளை பரிசோதிக்க ஓடியிருந்தாள்...
அதே போல் மாடியில் மதுவிற்கு மலர் எடுத்து சென்றிருந்த ரக்ஷா இந்திரனின் அலரலில் அவனிடம் ஓடி உடனே திவ்யாவை பரிசோதித்தாள்... அறையில் மதுவை அலங்கரித்து கொண்டிருந்த பவி வர்ஷியும் அவளுடனே ஓடி வந்தனர்...
கீழே கொள்ளை புற வாயிலில் உணவை கிண்டி கொண்டிருந்த தான்யா சத்தீஷின் அழைப்பினால் அவனிடம் ஓடி மயங்கி கிடந்த ப்ரியாவையும் அவளை பதட்டத்துடன் எழுப்ப முயன்று கொண்டிருந்த சத்தீஷையும் கண்டு அவர்களை அனுகினாள்...
தோரணங்களை கட்டி கொண்டிருந்த ரனீஷ் ரித்விக்கும் பதறியடித்து உள்ளே ஓடி வர சத்தீஷிடமோ வெளியே பந்தல் வேலையை பார்த்து கொண்டிருந்த முகிலும் சரணும் ஓடினர்...
அனு திவ்யா ப்ரியா மூவரின் மணிக்கட்டையும் பிடித்து பார்த்த வீனா ரக்ஷா தான்யா ஒரே நேரத்தில் ஒரு சேர " நம்ம வீட்டுக்கு இன்னோறு பாப்பா வர போகுது " என கத்தினர்...
மூன்று திசையிலும் எதை கவனிப்பதென தெரியாமல் அனைவரும் முளிக்க ஒரு பக்கம் மூன்று மடங்காய் சந்தோஷம் எழுந்தாலும் க்ரிஷ்ஷிற்கு மாத்திரம் இவை ஏதோ தவறாகவே உணர்த்தி கொண்டிருந்தது..
அனுவின் முகத்தில் தண்ணீரை தெளித்தும் அவள் எழாதது இன்னும் அவனது பதட்டத்தை கூட்டி விட வீனா ரனீஷ் ரித்விக்கிடமே அனுவை பத்திரமாய் விட்டவன் மாடிக்கு ஓடினான்...
அங்கு இந்திரனின் அணைப்பில் திவ்யாவும் இன்னும் மயக்கத்தில் தான் இருந்தாள்.. அவனை சுற்றி ரக்ஷா வர்ஷி மது பவி நாழ்வரும் ஒருவரை ஒருவர் மகிழ்ச்சியில் அணைத்து கொண்டாலும் இந்திரனின் முகத்தில் அந்த மகிழ்விற்கான சாயல் தெரியவில்லை..
க்ரிஷ்ஷின் வரவை அறிந்ததை போலவே இந்திரன் நிமிர்ந்து அவனை நோக்க.. இருவரின் முகத்திலுமே கண்ணிற்கெட்டா தவிப்பு படர்ந்திருந்தது.. திவ்யாவை கீழே கிடத்தியிருந்தவன் எழவும் இப்போது இருவரின் பார்வையும் ஒரே போல் திரும்பி ஜன்னல் புறம் செல்ல தடதடவென வேகமாய் ஜன்னல் புறம் சென்று இருவரும் கீழே எட்டி பார்த்தனர்...
ப்ரியாவை தன் நெஞ்சோடு அணைத்து கீழே மடிந்து அமர்ந்திருந்த சத்தீஷை முகில் சரண் அர்ஜுன் மற்றும் அவர்களுடனே உணவு பொருட்களை சரி பார்த்து கொண்டிருந்த வனித்தா (க்ரிஷ் இந்திரன் சத்தீஷ் பவி மற்றும் வர்ஷியின் தாய்) இரமனன் (சரண் அனு திவ்யா மற்றும் ப்ரியாவின் தந்தை ) வட்டமடித்து நின்றிருந்தனர்...
தான்யா ப்ரியாவின் கண்களை திறந்து பார்த்து கொண்டிருந்தாள்.. க்ரிஷ் இந்திரனின் பார்வையிலிருந்த தீர்க்கம் பொய்க்காது சத்தீஷின் கண்களிரண்டும் அவன் சகோதரரைர்களை தேட இரு நிமிடங்களில் சகோதரன்களை கண்டு கொண்டதாய் அவன் விழி வெண்மை நிறத்தை பற்றி கொண்டு சுட்டி காட்ட ... ஒன்றாய் சங்கமித்திருந்த க்ரிஷ் இந்திரன் சத்தீஷ் மூவருள்ளும் ஒரே பயம் தான் எழுந்தது...
அரை மணி நேரம் பின்..
அனு திவ்யா ப்ரியா அவரவர் அறையில் மயக்க நிலையில் இருந்ததனர்.. மருத்தவ நாயகிகள் மூவருமே அவர்களுக்கு ஓய்வு தேவை என கூறியிருந்ததால் யாரும் அவர்களை தொந்தரவு செய்யவில்லை...
வீட்டினர் அனைவரின் முகத்திலலும் இப்போது நான்கு மடங்கு மகிழ்ச்சி தாண்டவமாடியது... மூன்று தாத்தா பாட்டிகளும் மகிழ்ச்சியில் தலை கால் புரியாமலிருக்க அனு திவ்யா ப்ரியாவின் அண்ணன்களான சரண் அஷ்வன்த் ரித்விக் வீர் முகில் அர்ஜுன் வாணத்திற்கும் பூமிக்கும் ரவி ரனீஷுடன் குதித்து கொண்டிருந்தனர்.. மோகினி தன் இளவல்களின் பிள்ளைகளை காண போகும் ஆவலில் இன்னும் மகிழ்ச்சி அடைந்தாள்...
நம் துருவ் கயலை பற்றி சொல்லவா மீண்டும்.. ஒன்னுக்கு நாழு பாப்பா கிடைக்க போகுது என நாழு லட்டு திங்க ஆசையா என்ற ரேஞ்சிற்கு ஆசையாய் இருந்தனர்..
இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் மதுவிற்கு ஐந்தாம் மாத சடங்கு மிகவும் விமர்சையாக நிறைவேறியது.. எவ்வளவு தான் மகிழ்ச்சி தலை விரித்து கண் முன் ஆடினாலும் க்ரிஷ் கோவத்திலும் இந்திரன் அமைதியிலும் சத்தீஷ் சிந்தனையிலும் மூழ்கியிருந்தனர்...
அதை வெளிப்படையாய் காட்டி கொள்ளாமலும் இருந்தனர்.. பெரியவர்கள் மனைவிகள் உடல் நிலை சோர்வாகியுள்ளதால் இப்டி இருக்கின்றனர் என நினைத்து கொண்டாலும் அவர்களுடனே இருவத்தியாறு வருடங்களை கடத்திய அஷ்வன்த் ரித்விக் மற்றும் முகிலின் மூளைகளில் பல்பெரிந்து கொண்டே இருந்தது...
முன்ஜென்ம பிறவு நினைவுகள் முழுதாய் அடைந்த பின்பு நம் நாயகன்கள் அறிந்த வரை இம்மூவர் இவ்வாறு என்றும் இருந்ததில்லை.. இரண்டு வருடம் பின் என்னவானது என புரியாமல் அவர்களும் அமைதி காத்தனர்...
மதுவின் ஏக்கமான பார்வைக்காகவே அண்ணன் பொருப்பை ஏற்று மூவரும் தத்தமது உணர்வுகளை பூட்டி வைத்து அங்கேயே அமைதியாய் நின்றிருந்தனர்...
அவர்களுக்கு மகிழ்ச்சி இல்லாமல் இல்லை.. ஆனால் வேறேதோ ஒன்றும் அவர்ளை பயங்கரமாய் சுரண்டி கொண்டிருந்தது...
ஒரு வழியாக சடங்கை முடித்ததும் மெல்ல கதிரவனும் தாயை கண்ட சேயாய் நிலமகளடி சாய்ந்து சகோதரன் சந்திரனை உலகின் பாதுகாப்பிற்கு அனுப்பி வைத்தான்...
வீட்டிலிருந்த மகிழ்ச்சி சற்றே மறைந்து பதட்டம் ஆட்சி கொண்ட நேரம் தான் அது.. ஏனெனில் காலையில் பதினோறு மணி போல் மயங்கி விழுந்தவள்கள் தான்... காலை கடந்து மாலை கடந்து மணி ஏழாகியும் எழவில்லை...
இப்போது சொல்லவா வேண்டும்.. கோவன்கள் மூவரும் தாம் தூமென குதிக்க தொடங்கிருந்தனர்...
வனித்தா : டேய் ஏன் டா இந்த குதி குதிக்கிறீங்க.. ஒருவேளை உடம்பு ரொம்ப வீக்கா இருக்கும் டா என் மருமகளுங்களுக்கு...
இந்திரன் : அது எப்டி அம்மு ஒரே நேரத்துல மூணு பேருக்கும் ஹெல்த் வீக் ஆகும்... காலைல வர நல்லா அக்டிவா இருந்த மூணு பேரும் ஏன் இப்போ இப்டி எந்திரிக்காமையே இருக்காங்க...
காவியா (அஷ்வன்த் மற்றும் ரித்விக்கின் தாய் ) : இந்த நேரத்துல உடம்பு சோர்வா தான் டா இருக்கும்... ஏதோ அதிசயம் நடக்குர மாரி ரியக்ட் பன்னாதீங்க.. நைட் எழுந்துப்பாளுங்க...
க்ரிஷ் : அத்தமா இதுக்கு பாசிபிலே இல்ல.. மூணு பேரும் நேத்து வர ஒரு முறை கூட வீக்கா ஃபீல் பன்னல.. இன்னைக்கு எப்டி ப்ரெக்னென்ட்டுன்னு நம்புறது...
மாதவன் (வனித்தாவின் கணவர் ) : ஏன் டா அப்போ என் மருமகளுங்க கர்பமா இல்லங்குரியா...
க்ரிஷ் : அப்டி இல்லப்பா நா என்ன சொல்ல வரேன்னா என ஏதோ கூற வரும் முன் சட்டென தன் இருக்கையிலிருந்த எழுந்த ரவி...
ரவி : டேய் சும்மா பயப்புடாதீங்க டா.. எங்க தங்கச்சிங்க ஸ்ற்றாங்கு... சீக்கிரம் எந்திரிச்சுப்பாங்க... நீங்க வாங்க நாம போய் கணக்கு போடுர வேலைய பாப்போம்.. என அம்மூவரும் திமிற திமிற பெரியவர்களின் கண்களில் காட்டாமல் அழைத்து (தள்ளி ) கொண்டு சென்றான் ரவி...
இலக்கியா ( இரமனனின் மனைவி) : என் பொண்ணுங்க மேல என் மருமகனுங்களுக்கு எவ்ளோ லவ்வு.. எப்பா கன்சீவானதுக்கு சந்தோஷப்பட்டு ஊர கூட்டாம இவளுங்க எந்திரிக்க மாற்றாளுங்கன்னு கூச்சல் போட்டுட்டு இருக்கானுங்க... என அவர்களின் நிலை புரியாமல் சந்தோஷத்துடன் குறும்பாய் கூறினார்...
இரமனன் முரளி (காவியாவின் கணவர்) : பின்ன அவங்க எங்க மருமகனுங்களாச்சே.. என இருவரும் காலரை தூக்கி விட்டு கொண்டனர் ..
காவியா : அவங்க எங்க அண்ணி பச்ஙகங்குரதால தான் இப்டி இருக்காங்க.. வேலை வேலைன்னு சுத்தீட்டு பொண்டாட்டிங்க மேல காதல அள்ளி வீசி பதக்கம் வாங்குன மாரி காலர தூக்கி விடுரத பாரு என நக்கலாய் இருவரின் காலையும் வாரினார்...
முரளி : உன் தங்கச்சிக்கு இந்த வாய் மட்டும் எப்போ குறையும்னு தெரியல மச்சான்... நானும் நுப்பத்தி இரெண்டு வர்ஷம் வாழ்க்க நடத்தி சோர்ந்து போய்ட்டேன்... என மாதவனிடம் பொய்யாய் அழுத்து கொண்டார்..
சரண் : வேணும்னா சொல்லுங்க சித்தப்பா நா புது சித்தியா பாக்குறேன்... நல்லா அடக்கமான சித்தியா தேடுவோம் என எங்கிருந்தோ வந்தவன் அனவரின் தோளில் கை போட்டு கொண்டு சோபாவில் பிடியில் அமர்ந்து கொண்டான்...
முரளி : டேய் மகனே இது நல்லா ஐடியாவா இருக்கே டா..
சரண் : அப்போ இப்பவே மற்றிமோனில அப்லிக்கிஷேன் போடுறேன் இரு சித்தப்பு என போனை தூக்கியவனின் காதை பிடித்து திருகிய காவியா...
காவியா : படவா பேச்ச பாரு.. போய் உன் சித்தப்பாக்கு நல்ல அடக்கமான பொண்ணா பாரு என முகத்தை திருப்பி கொள்ள...
முரளி : ஹே கவி டார்லிங் அந்த அடக்கமான பொண்ணல்லாம் சுடுகாட்டுல போய் எப்டி என் மவன் தேடுவான்..சோ இந்த ஐடியாவ ட்ராப் பன்னிடலாம்டா என கூற...
ரித்விக் : ப்பா இதெல்லாம் போங்கு.. என்ன என் தம்பிய இழுத்து விட்டு நீங்க ஓடுறீங்க.. என சரணுக்கு ஆதரவாய் வர...
முரளி : உங்களுக்கு என் பொண்டாட்டி மாரி வாயாடி பொண்டாட்டி கிடக்கிலையேன்னு பொறாமை டா அதான் என் வாழ்கைல மண்ணள்ளி போட பாக்குறீங்க... நீ வா கவி செல்லம்.. டேய் நீங்களும் போய்டுங்கடா அப்ரம் நம்ம சோத்துக்கு இவனுங்களே ஒள வச்சிடுவானுங்க என சரண் ரித்விக்கின் காலை வாரியதுமில்லாமல் மாதவன் இரமனனுக்கு இலவச அட்வைஸும் கொடுத்து விட்டு தலையிலடித்து சிரித்த படி வந்த காவியாவுடன் நகர சரணும் ரித்விக்கும் " அடப்பாவி தகப்பா " என அவரை பார்த்து கொண்டிருந்தவர்கள் திருபும் முன் மாதவன் மற்றும் இரமனன் அவரவர் ஜோடி புறாவுடன் பறந்திருந்தனர்...
சரணும் ரித்விக்கும் தங்களுக்கு கிடைத்த க்ரேட் அவமானத்தில் பல்லை கடிக்க இவ்வளவு நேரமும் கீழே அமர்ந்து மதுவிற்கு பழம் நறுக்கி கொண்டே இதை கேட்டு கொண்டிருந்த தான்யா வாயை மூடி சிரித்து கொண்டிருக்க அண்ணன்கள் இருவரும் அவள் மண்டையிலே நங்கென கொட்டிவிட்டு தான்யா கத்தியை தூக்கி கொண்டு துரத்தி வரும் முன் மாடிக்கு ஓட்டமாய் ஓடியிருந்தனர்...
மாடியில் இப்போது க்ரிஷ்ஷை அடக்க தான் ரவி படாதபாடு பட்டு கொண்டிருந்தான்... அஷ்வன்த் ரனீஷ் மற்றும் வீர் எதிலோ மிகவும் தீவிரமாய் செயல் பட்டு கொண்டிருந்தனர்.. கவனம் சிதறாமல் இருக்கவும் க்ரிஷ்ஷின் கோபக்கனல்களை கேட்டு திசை மாற கூடாதெனவும் அவர்கள் காதுகளை பஞ்சினால் அடைத்திருக்க அந்த பஞ்சையும் மீறி கொண்டு மூவரையும் அவன் கத்தல்கள் நச்சரித்து கொண்டே இருந்தது...
இருந்தும் அருகில் நின்றிருந்த முகில் மருத்துவன்கள் மூவரையும் கவனம் சிதற விடாமல் தன்னால் இயன்றவரை ஒரே புள்ளியில் ஒருங்கிணைத்து அவர்களை காத்து கொண்டிருந்தான்...
இன்னும் க்ரிஷ் வாக்குவாதத்தில் புலம்பி கொண்டிருக்கவும் அருகிலிருந்த ப்லஸ்டிக்கை ஜாடியை அவன் மண்டையிலே தூக்கி எறிந்தான் அர்ஜுன்...
இப்போது க்ரிஷ் ரவியை விட்டு விட்டு அர்ஜுனை முறைக்க அவனுக்கு நிகராய் அவனாலும் முறைக்க முடியும் என்றாலும் க்ரிஷ்ஷை போல் எரிக்க முடியாதென்பதால் அவன் எரித்தாலும் எரித்து விடுவான் என்று உடனே அவனருகில் வந்து கீழே கிடந்த ப்லஸ்டிக் ஜாடியிலிருந்த நீரை க்ரிஷ்ஷின் தலையில் ஊற்றி சாந்தப்படுத்தினான்...
ஆனால் க்ரிஷ் முறைப்பதை இன்னும் நிறுத்தவில்லை...
அர்ஜுன் : என் பொண்டாட்டியே இப்டி என்ன சைட்டடிச்சதில்லடா.. செய் அந்த பக்கம் பாத்து தொல என திருப்பி விட...
க்ரிஷ் : ஏன் டா என் டெவில் க்லர் உனக்கு ரொமேன்ட்டிக் லுக் மாரி இருக்கா.. பல்ல கலட்டி கைல குடுத்துடுவேன்.. ஏன் டா நா சொல்றத எவனும் கேக்க மாற்றீங்க...
ரவி : கத்தி தொலையாத டா... உன் குழப்பங்கள் எல்லாத்துக்கும் தான் இப்போ தீர்வ தேடிக்கிட்டு இருக்கோம்.. அதுக்கு கவனம் வேணும் டா... நீ இந்த கத்து கத்துனா அவனுங்க எப்டி கான்சென்ட்ரேட் பன்ன முடியும்... என்றதும் ஒரு பெருமூச்சை இழுத்து விட்டு தன் கோவத்தை தன்னுள்ளே கடினப்பட்டு மட்டுப்படுத்திய க்ரிஷ் அமைதியாய் சென்று ஓரிடத்தில் அமர்ந்து கொண்டான்...
மற்றவர்களும் அவனிடம் எந்த வம்பும் வைத்து கொள்ளவில்லை.. தன்னாலே அடங்க நினைக்கும் எரிமலையை வெடி வைத்து வெடிக்க வைக்க அவன் தோழன்களென்ன முட்டாள் முப்பெரும் தேவன்களா?? இல்லையே...
இப்படியே நேரம் மணிக்கணக்காய் நகர்ந்தது... வீட்டில் அனைவருமே உறங்கவும் சென்றிருந்தனர்... இன்னும் நம் நாயகன்கள் மாத்திரமே அந்த பால்கெனியில் கண் கொத்தி பாம்பென உளாவி கொண்டிருந்தனர்... ஆனால் இன்னமும் கூட மயக்கத்தில் ஆழ்ந்த நாகனிகள் கண் விழிக்கவில்லை...
பொருத்து பொருத்து வெறுத்து போன அமைதியின் சிகரமே இப்போது பொங்கி எழுந்தது...
மூன்று மணி நேரமாய் அஷ்வன்த் ரனீஷ் மற்றும் வீர் ஒரு வார்த்தை கூட பேசாமல் ஒரு மர டேபிலை சுற்றி நின்று என்ன தான் செய்கிறார்கள் என காண வேகமாய் இந்திரன் அவர்களை நெருங்க சரண் அவனை பிடித்து நிறுத்தினான்...
அர்ஜுன் : கூல் மச்சான்.. கஷ்டப்பட்டு எரிமலையையும் சூராவளியையும் அடக்கி வச்சிருக்கோம்.. அமைதியின் சிகரமான நீ சுனாமியா கெளம்புனா அவனுங்க இரெண்டு பேருக்கு வழி போட்டு குடுக்காம வாலன்ட்டியரா அவனுங்களே வந்துடுவானுங்க டா என கூற இந்த நேரத்தில் உனக்கு காமெடி கேக்குது என்பதை போல் இந்திரனுடன் க்ரிஷ் மற்றும் சத்தீஷும் அவனை நிமிர்ந்து முறைக்க அவன் இளித்தான்...
ரித்விக் : டேய் கூல் டா.. இப்போதிக்கு அனு திவி ப்ரிமாக்கு ஒன்னும் இல்ல... தெ வில் பி ஆல்ரைட் இன் தி மார்னிங்..( காலைல அவங்களுக்கு எல்லாமே சரியாய்டும் ) நீங்க உங்க ரூம்ல போய் இருங்க போங்க...
சத்தீஷ் : அப்போ சொல்யூஷன் இப்போ கிடைக்காதா என ஒரு வேகத்துடன் வந்தது அவன் கேள்வி...
ரவி : இப்பவே வாய்ப்பு இல்ல டா.. விடியற்காலைல சொல்யூஷன் கிடைக்க வாய்ப்பிருக்கு...
இந்திரன் : அப்போ நாங்களும் இங்கையே இருக்கோமே டா...
அர்ஜுன் : வேண்டாம் ... இப்போ அவங்கவங்க ரூம்க்கு போங்க.. ஃபர்ஸ்ட் அஃப் ஆல் த்ரி ஆஃப் யு காய்ஸ் வான்ட் டு கெட் காம்.. ( முதல்ல நீங்க மூணு பேரும் அமைதி ஆகனும் ) காலைல எரிமலை சுனாமி சுறாவளிய தாங்குர அளவெல்லாம் எங்க கிட்ட சக்தி இருக்காது... அதனால போய் தூங்க முயற்சி பன்னுங்க என அம்மூவரையும் இழுத்து சென்று அவரவர் அறையில் விட்டு வந்தான்...
தன் அறைக்குள் மெதுவாய் நுழைந்த சத்தீஷ் நிர்மலாய் மயக்கத்தில் ஆழ்ந்திருந்த ப்ரியாவின் அருகில் அமர்ந்து அவள் சிகையை ஒதுக்கி விட்டான்... என்றும் ஓயாது அவனிடம் பதிலுக்கு பதில் பேசும் அந்த இதழ்கள் இப்போது மௌனம் காத்திருப்பதை அவன் மனம் ஏற்க மறுக்க அந்த இதழில் மெல்லிய இதழ் முத்திரை ஒன்றை பதித்து அவள் வயிற்றில் கை வைத்து பார்த்தான்...
திவ்யாவின் கரத்தை தன் கைகளுள் வைத்து கொண்டு அவளருகில் மண்டியிட்டு அமர்ந்திருந்தான் இந்திரன்... அவளிடம் மட்டுமே வம்பிழுக்கும் அவனுக்கு அவனிடம் மட்டுமே வாயடிக்கும் அவள் என்றுமின்றி இன்று தன் கண் முன்னிலையிலே இவ்வளவு அமைதியுடன் இருப்பது மனதில் புதிய வலி ஒன்றை தோற்றுவித்தது.. இதழை கடித்து கண்ணீரை அழுகையை நிறுத்த முயன்றவனின் மறு கரம் திவ்யாவின் வயிற்றை வருடியது...
அந்த நீண்ட மெத்தையில் தன்னந்தனியாய் அனு மாத்திரம் இருக்க அவளுக்கு சில அடிகள் முன் வாயிற்கதவருகிலே நின்றிருந்த க்ரிஷ்ஷை ஏதோ ஒன்று அவளிடம் நெருங்க தடுத்தது... இருந்தும் அனுவின் முகம் ஒரு நொடி சுருங்குவதை கண்டவன் சட்டென அவள் அருகில் ஓடி சென்று அவள் கரத்தை பிடித்து விட்டான்...
திவ்யா ப்ரியாவை போல் அல்லாது அனு " யுவா " என க்ரிஷ்ஷின் பெயரை முனகினாள்...
க்ரிஷ் : ரது .. இ..இங்க தான் டி இருக்கேன்... நா உன்ன விட்டு எங்கையும் போகல.. என அவளின் கைகளில் மெதுவாய் அழுத்தம் கொடுத்து அவள் நெற்றியில் மிருதுவாய் இதழ் பதித்தான்...
அவனின் குரலை கேட்டாளோ இல்லையோ அவன் ஸ்பரிசத்தல் மெதுவாய் முனகல் அடங்கி மீண்டும் மயக்க நிலையிலே ஆழ்ந்தாள் அனு...
க்ரிஷ்ஷின் கண்ணீர் அவன் கண்களை விட்டு கசிந்து அனுவின் கண்களில் விழ அதை துடைக்க கைகள் வரவில்லை அவனுக்கு.. என்ன தான் உலகிலே அதிசக்தி படைத்த ஒரு கோவன் என பல சக்திகளையும் தைரியத்தையும் பெற்றிருந்தாலும் அந்த ஒரு துளி கண்ணீரை துடைக்க போய் தன்னவளின் ஓய்வு கலைந்து அவள் எழுந்து அவளுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என அவன் இதயம் பலவாறு சிந்தித்து துடித்து கொண்டிருந்தது...
அதே நிலையில் அவள் வயிற்றை கண்டவனால் ஒன்றும் கூற முடியவில்லை.. மெதுவாய் பட்டும் படாமல் அவளின் வயிற்றில் அவன் ஒரு கரத்தை வைத்தான்...
முவ்வேறு அறைகளில் இருந்த மூவரும் விதியோ சதியோ ஒரே போல் அவரவர் மனைவியின் உள் உருவாகியிருந்த அவர்களின் உயிரை ஒரே நொடியில் உணர்ந்து சட்டென கண்களை திறந்தனர்...
க்ரிஷ்ஷின் கண்கள் சிவப்பாகவும் இந்திரனின் கண்கள் நீலமாகவும் சத்தீஷின் கண்கள் வெண்மையாகவும் மின்னி மிளிர்ந்தது...
அதே நேரம்...
அடர்ந்த வேதபுரக்காட்டினில் வைரமென மின்னி மிளிர்ந்த தூய தன்ய ஆற்றில் ஆபத்தான மின்னலினால் மெதுமெதுவாய் அந்த ஆற்றின் அடி மட்டத்தில் ஏற்பட்டிருந்த பெரும் பிளவு விரிய தொடங்கியது...
நிலத்தின் பிளவினால் ஆற்றின் நீர் உட்புகும் என அறிந்திருந்தோருக்கு நேர் நிகராய் அதிலிருந்து கருமையான திரவொமொன்று வெளியேறி ஆற்றோடு கலக்க தொடங்கியது...
ஆற்றின் நிறம் மாற மாற ஒரு சில நிமிடங்களில் கருப்பு நீர் குமிழிகள் மெதுவாய் மேலெழும்பி அந்த ஆற்றின் ஓரத்தில் கிடந்த ஒரு மரக்கட்டையின் மீது ஊரி அதை முழுதாய் ஆக்ரமித்தது...
அந்த கருமையான மரக்கட்டை தானாகவே இப்போது ஆற்றின் கீழே இருந்த கருங்கல் ஒன்றை தகர்த்தெரிந்திட அதிலிருந்து வேகமாய் உள் அமுங்கியிருந்த நீர் தெறித்து கொண்டு வெளியேறியது... அதனூடே அக்கல்லின் பின் இரண்டு வருடமாய் தேங்கியிருந்த அந்த திரவம் அந்த பிளவினுள் தனிச்சையாய் நுழைந்த அடுத்த நொடி ஒரு பெரும் சத்தம் அந்த காட்டையே அதிர செய்தது...
தன்ய ஆறு நொடி கணக்கில் முழுதாய் கருமை நிறத்தை தத்தெடுக்க அதிலிருந்து சீரி வந்து நிலத்தில் பலத்த சத்தத்துடன் தங்கள் காலடியை பதித்தனர் யட்சினி சர்ப்ப வம்சத்தின் ஐந்து அமைச்சர்கள்...
அது இரண்டு வருடம் முன் கயலின் உடலை விட்டு வெளியேறிய யோகனா புதுப்பித்த அதே யட்சினி சர்ப்ப வம்சத்தின் உயிர் கொல்லி நஞ்சு தான்...
யோக்யா துருவனால் இந்த தன்ய ஆற்றில் மூழ்கப்பட்ட கயலின் உடலில் பாதிக்கும் மேலாக பரவியிருந்த அந்த நஞ்சு தன்ய ஆற்றின் இயற்கையிலே இருந்த தூய்மையினாலும் அதன் சரி செய்யும் திறணினாலும் அவளை விட்டு நீங்கி தவறுதலாய் அந்த ஆற்றிலே தேங்கியிருந்தது...
துரதர்ஷிட வசமாய் ஆறாயிரம் வருடங்கள் முன்பு இரட்சகன்களும் பராக்ரம வீரன்களும் ஒன்றிணைந்து அடைத்த அந்த தன்ய ஆற்றின் அடி மட்டத்தில் மண் சிலைகளாய் உயிரற்று புதைந்திருந்த அவ்வைந்து பிணங்களுக்கும் தன்ய ஆற்றின் தூய நீரும் யட்சினி சர்ப்ப வம்சத்தின் அதே நஞ்சும் உயிர்த்தெழ செய்தது....
நீரில் நனைந்த உடலுடன் ஒருவரையொருவர் ஆழ்ந்த பார்வையுடன் பார்த்து கொண்ட ஐவரின் கண்களும் விட்டு விட்டு ஒளிர ஐவருமே பெருமூச்சறித்தவாறு இருந்தனர்...
அதில் முதலில் தன் ஈரமான தலை கேசத்தை பின் தலைக்கு தூக்கி ஒதுச்சி விட்டு அதே விஷமமப் புன்னகையுடன் அந்த தன்ய ஆற்றில் மீண்டும் குதித்தான் மிதரவர்தனன்...
அவனோடு இப்போது அருளவர்தனனும் குதிக்க விஞ்ஞவெள்ளனும் அவனூடே உள்ளே குதித்து மூவருமாய் காட்டில் வாழும் உயிர்களை பயமுறுத்துவதை போல் கொக்கரித்து சிரிக்க தொடங்கினர்...
மேல் நின்ற சாகாரகாந்தன் மற்றும் மகரகாந்தன் ஒரு ஏளனமான புன்னகையுடன் தன்ய ஆற்றின் நீரை கையில் தேக்கி கொண்டு அதை தொண்டை குழி நிறம்ப அருந்தினர்...
என்ன தான் நஞ்சு கலந்தாலும் அதன் சுவை இன்னும் நாவை ஈரப்படுத்தியது...
சாகாரகாந்தன் : எத்தூய சக்தி நம்மை அடைக்கும் என எண்ணினார்களோ அத்தூயசக்தியே தற்போது யமது சக்தியின் கீழ் அசுத்தமடைந்தது மட்டுமன்றி யமக்கு உயிரும் அளித்து விட்டது ஹாஹாஹாஹா என சிரித்தவனுக்கு தெரியவில்லை அதே சக்தி தான் அவனையும் அவன் சகோதர்களையும் மண்ணிலே பிணங்களாய் அடக்கி வைத்திருந்ததென...
மாயம் தொடரும்...
ஹாய் இதயங்களே... ஒரு நாள் எக்ஸ்ற்றாவா டைம் எடுத்ததுக்கு சாரி... இரெண்டு நாளா என்னால எழுத முடியல.. ஐ மீன் என்னோட இந்த டிவைஸ்ல ரொம்ப சீக்கிரம் சார்ஜ் டௌன் ஆக ஆரம்பிச்சிடுச்சா... சோ நா வேற கதை படிச்சிட்டு இருக்கும் போதே பேட்டரி லோ ஆகீடுது... மூணு நாள்ள இரெண்டு இங்லிஷ் ஸ்டோரீஸ படிச்சதால வந்த வினை... இனிமே லேட் பன்னாம பாத்துக்குறேன்... நாளைக்கு உங்கள இன்னோறு யூடியோட வந்து சந்திக்கிறேன்.. ஸ்டே ட்யூண் டு ரீட் இட் குட் நைட் .. டாட்டா...
(அண் ஒன் மோர் திங்... நா இப்போ ரீசென்ட்டா பப்லிஷ் பன்ன ஹார்ட் ஹாரர் ஸ்டோரி .. " திகிலிரவு " கான்ட்டஸ்ட்ல ஜெய்ச்சிச்சான்னுலாம் தெரியல.. பட் 9 மார்க் ஸ்கோர் பன்னீருக்கு.. இட்ஸ் பிகாஸ் ஆஃப் யு இதயங்களே... சோ கங்ராட்ஸ் டு யூ ஆல்.. ஜெய்க்கிரோமான்னு பாக்க கூடாது.. நம்ம முயற்சிக்கு ஒரு நல்ல பதில் வந்துருக்கு... சோ பீ ஹப்பி..
அன் ரீசன்ட்டா ஒரு ஐடியா.. ஒரு ந்யூ ட்ரைன்னு வச்சிக்கோங்களேன்... மே பீ அது நெக்ஸ்ட் மன்த் உங்க கிட்ட வரும்... ஆப்யஸ்லி தட்ஸ் அ ஷார்ட் ஸ்டோரி.. கவலப்படாதீங்க ஒரே எப்பிசோட்ல முடிஞ்சு போய்டும்.. கழுத்தறுக்க மாட்டேன்... பட் என் கதைகள ஃப்ரம் பிகினிங்... அதாவது நா எழுத ஆரம்ச்சதுலேந்தே வாசிக்கிரவங்களுக்கு அந்த ட்ரை நிச்சயமா புடிக்கும்... நெனைக்கிறேன்... ஓக்கே மீண்டும் குட் நைட்.. டாட்டா
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro