Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

மாயம் - 22

ஆழ்ந்த அமைதி நிலவிய இடத்தில் அனைவரின் முகத்தையும் பார்த்தவாறு சலிப்புடன் நடு கூடத்தில் சமனமிட்டு அமர்ந்திருந்தான் ரக்ஷவ்...

ஏக்கமாய் பார்த்த நாயகிகளின் பார்வை இப்போது நாயகன்களை துளைத்தெடுத்து கொண்டிருந்தனர்.. அவர்கள் எட்டு பேரும் ஏதோ சாட்சி கூண்டில் நின்ற குற்றவாளியை போல் தரையையே அளந்து பார்த்து கொண்டிருந்தனர்...

மது : நீங்க எவ்ளோ நேரம் அமைதியா இருந்தாலும் பிரச்சனை தீந்துராது என இவள் கோவமாய் கூற நாயகன்கள் பொருமையாய் நிமிர்ந்தனர்...

ப்ரியா : என்ன தான் நடந்துச்சு... நம்ம பசங்க எங்க...

நிரு : எதுக்காக பசங்கள ஊருக்கு அனுப்புனீங்க...

முகில் : எல்லாமே நலதுக்கு தான்... விதிய நம்மளால மாத்த முடியாது...

பவி : எத அண்ணா மறைக்கிறீங்க... எங்க கிட்ட கூட மறைச்சே ஆகனுமா...

அஷ்வன்த் : சொல்ல முடியாதுன்னு சொல்லியும் ஏன் டி வற்புருத்துறீங்க...

அனு : நா என் சக்திய உபயோகிச்சு இருவது வர்ஷம் ஆகிடுச்சு.. இப்போ என்ன உபயோகிக்க வைக்காதீங்க அண்ணா... என்றாள் சுடர் விடும் பார்வையில்...

ரவி : ஃபு.. இத விட்டா எங்களுக்கு வேற வழி தெரியல அனுமா...

மோகினி : இப்போ என்ன ஆச்சுன்னு நீங்க இப்டி உடஞ்சு நிக்கிறீங்க...

ரனீஷ் : இன்னும் என்னக்கா ஆகனும்... நம்ம புள்ளைங்க எல்லாரையும் அந்த யஷ்டிகள் கடத்தீட்டு போய்ட்டாங்க... சர்ப்பலோகத்துக்குள்ள நம்மளால காலடி கூட பதிக்க முடியாது...

வர்ஷி : இது இருவது வர்ஷத்துக்கு முன்னாடி இருந்த யோகபூஜ தருணம் இல்ல அண்ணா...

வீர் : ஆனா இது மதிநட்சத்திர காலம் டா... மதிநட்சத்திரத்தோட முன் தின நாள் கோவன்கள தவிற வேற எந்த வம்சத்தோட சக்திக்கும் உயிர்ப்பு இருக்காது... இன்னும் இரெண்டு நாள்ள நாங்களே போய் காப்பாத்தீடுவோம்...

ரக்ஷா : ஆ..ஆனா நம்ம பசங்க இருக்கும் போது நீங்க ஏன் இப்போ பின் வாங்கனும்..

சரண் : உங்களுக்கு புரிய மாட்டுதே ரக்ஷாமா.. நம்ம பசங்க பாலமுத்திர கோட்டைய திறந்துட்டாங்க... என்றதும் அப்பட்டமாய் நாயகிகளின் முகத்தில் அதிர்ச்சி பிரதிபளித்தது...

நாயகிகள் : பாலமுத்திர கோட்டையா...

ரித்விக் : ஆமா.. ஆனா இன்னும் அவங்க சக்திகள் எதையுமே உணரல... அவங்க அத உணராத வர சர்ப்பலோகத்துல அவங்களால காலடி பதிக்க முடியாது... அவங்க சக்திகள உணர போற காலம் இது இல்ல போல.ர

பவி : ஆனா இவ்வளவு நடந்தும் ஏன் அத்தான் இரட்சகன்கள் வரல... இரட்சக விழிப்பு நடந்துடுச்சு தான

அர்ஜுன் : அதுக்கான பதில் எங்க யாருக்கிட்டாயும் இல்ல பவிமா... நாளைக்கி க்ரிஷ் இந்திரன் சத்தீஷோட நினைவு நாள் முடிஞ்சதும் நாங்க சர்ப்பலோகம் போக போறோம்...

ஒவீ : ஆனா .. ஆனா சர்ப்பலோகத்துல நீங்க கால வச்சா அது உங்க உயிருக்கே ஆபத்தாய்டும் அத்தான்.. என்றாள் பயம் கலந்த குரலில்...

முகில் : என்ன நடந்தாலும் சரி... இருவது வர்ஷத்துக்கு முன்னாடி அவங்க கிட்ட மூணு புள்ளைங்கள தொலச்ச மாரி இப்போ இவங்க ஒன்பது பேரையும் தொலைக்க மாட்டோம் என்றவர்கள் அதே இறுகிய வதனத்துடன் அங்கிருந்து நகர்ந்து சென்றனர்..

நாயகிகளால் அழுவதை தவிற வேறு எதுவும் செய்ய முடியவில்லை... ரக்ஷவ் பாதி புரிந்தும் புரியா நிலையில் இருந்தான்...

பாலமுத்திர கோட்டை

காற்றினது வேகம் விண்ணை கிளித்து கொண்டு செல்ல... தன் கூர் பற்களை காட்டி சிறுத்தையின் உருவில் கொடூரமாய் சிரித்து கொண்டிருந்தான் மகரகாந்தன்...

அவன் முன் சில காயங்களுடன் நம் பராக்ரம வீரன்கள் முகம் இறுகி நின்றிருந்தனர்...

அரை மணி நேரம் முன்பு..

நம் நாயகன்கள் முகம் கன்றி போய் ஒருவர் மற்றவரிடம் கூட எதுவும் பேசாமல் கோயம்பத்தூர் செல்வதற்கான இரயிலை பிடிக்க காட்டோரமாய் காரில் சென்று கொண்டிருந்தனர்...

அவர்களின் நேரம் சரியாய் கார் டையர் அவ்விடத்திலே பஞ்சராகியிருந்தது... அது வேறு
நம் நாயகன்களுக்கு இருந்த கடுப்பை கிளிர விட வெளியே வந்து டயரை உதைத்து கொண்டிருந்தனர்...

கார்த்திக் : சரி டா அத உதைச்சு என்ன பிரயோஜனம்... ஸ்டெப்னி எடுங்க...

அருண் : உன் தொம்பி தான் டா எடுத்து வைக்கனும் என்றவாறு டிக்கியில் ஸ்டெப்னி இருக்கிறதா என திரும்பி பார்த்தான்...

கார்த்திக் : என் தம்பி நீ எடுத்து வைக்காம என்ன செஞ்சியாம்...

அருண் : நா வைக்கல... பட் எவனோ ஒரு மகராசன் வச்சிருக்கான் என்றவாறு ஸ்டெப்னியை கீழிறக்கி வைக்க

வருண் : வளவளன்னு பேசாம வேலைய பாரு டா... என கடுகடுத்தவனின் கூரான செவி சட்டென அசைந்தது..

திடுக்கிட்டு காட்டை நோக்கி திரும்பிய வருண் என்னவென நோட்டமிட அவனுக்கு ஏதோ ஒரு பெண் அலரும் ஓசை தெளிவாய் கேட்டது... இவன் திடீரென பறபறப்பதை அனைவரும் வித்யாசமாய் பார்க்க அவன் தோள் தொட்டு திருப்பினான் மிதுன்..

மிதுன் : என்னடா...

வருண் : அது .. காட்டுக்குள்ள ஒரு பொண்ணோட அலரல் கேக்குது டா...

அஷ்வித் : எங்களுக்கு ஒன்னும் கேக்கலையே...

வருண் : இல்லடா கேக்குது...

அஜய் : ஆமா என்னாலையும் லைட்டா கேக்க முடியிது.... ரொம்ப தூரத்துல கேக்குது இந்த சத்தம்...

வருண் : எனக்கு ரொம்ப பக்கத்துல கேக்குதுடா...

அருண் : ஒருவேளை நம்ம தங்கச்சிங்களா இருக்குமோ...

என்ற பின் அவர்களுக்கு அங்கென்ன வேலை... ஆளுக்கொரு மரத்தை விளாசி கொண்டு ஓடினர்... தூரத்தை கடக்க கடக்க அலரலின் ஓசை பெருங்குரலாய் கேட்டு கொண்டே செல்ல ஓரிடத்தில் திடீரென சடன் ப்ரேக்கிட்டு நின்றான் அஜய்...

மற்ற நாயகன்களும் பதட்டத்துடன் திரும்பி பார்க்க இப்போது எவருக்கும் எந்த சத்தமும் கேட்கவில்லை... மெதுவாய் நகர்ந்து தன்னருகிலிருந்த மரத்தை காலால் உதைத்தான் அஜய்...

அவன் எதிர்பார்த்தானோ இல்லையோ திடீரென எங்கிருந்தோ வந்து அவன் கரங்களில் பூ மாலையென
விழுந்தாள் அவள்...

அஜய் திடுக்கிட மற்றவன்கள் விக்கித்து போயினர்...

அவள் அணிந்திருந்த கருப்பாடையில் அங்கங்கு கூரிய நகங்கள் கிளித்து வைத்திருந்தன... முகத்தில் சில சீராய்ப்புகளும் அவளின் வலியை எடுத்து கூறியது... குழந்தை முகம் கொண்ட அவளே இவ்வளவு நேரமும் வலியில் கத்தியிருக்கிறாள்...

அவளின் முகத்தை கண்ணிமைக்காது பார்த்து கொண்டிருந்த அஜயின் இதழ் தன்னால் உச்சரித்தது ஐலா என்னும் பெயரை...

தன் பெயரை உச்சரிப்பதை கிணற்றடியிலிருந்து கேட்பதை உணர்ந்த அவள் மெதுவாய் தன் பொண் இமையை திறக்க இயலாமல் திறந்து பார்த்தாள் நம் இறுதி நாயகியும் அஜயின் தோழியுமான ஐலா...

ஐலா : தீபன்.. என மெதுவாய் அவள் அவனை அழைக்க அவர்களின் முன் திடீரென வெளி வந்தது ஒரு உறுமல்...

அஜய் நிமிர்ந்து நோக்க அவர்களின் முன் தன் எகத்தாளமான பார்வையுடன் பயமின்றி தைரியமாய் சிறுத்தையின் உருவில் நின்றிருந்தான் மகரகாந்தன்...

அவனின் கை விரல்களில் இருந்த இரத்த சாயங்களே ஐலாவின் காயங்களுக்கு காரணமென்பதை வார்த்தையின்றி உணர்த்தி அவன் உறுமி முடித்து கண் திறவும் முன் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்ட நாயகன்கள் அங்கிருந்து அதி வேகத்துடன் ஓட தொடங்கினர்...

அவர்கள் ஓடுவதை வெறி பொங்க பார்த்த அவன் அவ்விடமே அதிர உறுமினான்... தன் கைகளை மண்ணில் வேகவேகமாய் உராசியவன் ஓடும் நாயகன்களை வெறி கொண்டு துரத்த தொடங்கினான்...

நம் நாயகன்கள் ஒடி சென்று நின்றது பாலமுத்திர கோட்டையின் முன்... யோசிக்காமல் உள்ளே ஓடியவர்கள் முதல் வேலையாய் ஐலாவை ஓரிடத்தில் பத்திரப்படுத்தினர்...

அக்கோட்டை வரை துரத்தி வந்த மகரகாந்தன் மண்ணின் மீது இத்துனை ஆண்டு காலத்தின் பின் நிலைத்து நின்ற பாலமுத்திர கோட்டையை அதிர்ச்சியுடன் நோக்கினான்...

அவனது அதிர்ச்சி அவனை மனித உருவிற்கு மாற்றி விட இத்துனை காலமாய் எங்கிருக்கிறதென்று கூட காட்டி கொள்ளாமல் மண்ணில் புதைந்து கிடந்த கோட்டையா இப்போது கடலுக்கு முன் தன்னை கம்பீரமாய் காட்டி நிற்கிறதென்று எண்ணியவனுக்கு ஒரு நொடி உடலே சிலிர்த்தடங்கியது...

மகரகாந்தன் அதே வெறியுடன் கோட்டையின் வாயிலை காண சரியாய் அவனின் சினத்தை கிளப்பவே முதல் ஆளாய் ராம் வெளியே ஓடி வந்தான்...

அவனை கண்டு இன்னும் அடி தொண்டையிலிருந்து உறுமியவன் ராம் எதிர்பார்க்காத நேரம் அவன் மீது பாய்ந்திட... ராம் கோட்டைக்குள் சென்று விழுந்த வேகத்திற்கு வெளியே வந்திருந்த மற்றவன்கள் மகரகாந்தன் பாய்ந்த அதிர்வில் வெளியே விழுந்தனர்...

ராமின் அலரலில் பதறி போய் எழுந்தவர்கள் அவர்கள் முன் மகரகாந்தனின் சிறுத்தை உறுவிலிருந்து இன்னோறு மிருகம் திடீரென பிரிந்து தங்களை நோக்கி வருவதை கண்டு மேலும் அதிர்ச்சியடைந்தனர்...

அது பெரிய இறெக்கைகளுடன் இவர்கள் கோட்டையின் உள்ளே கண்டே ஒரு பறக்கும் விலங்கின கல்சிற்பத்தை ஒத்திருந்தது...

அவனும் மகரகாந்தனே... இது தான் அவர்களின் சக்தி... ஒரே கூட்டில் இரு உயிர்... மகரகாந்தன் மற்றுமல்ல... சாகாரகாந்தன் விஞ்ஞவெள்ளன் மிதரவர்தனன் மற்றும் அருளவர்தனன் என ஐவருள்ளுமே இப்படி இன்னுமோர் ஐவர் அனைத்திலும் சரி சமமாய் இருக்கின்றனர்...

தரையை சீரி கொண்டு விழுந்த ராம் அந்த சிறுத்தை சிற்பங்களில் ஒன்றான ஒரு வென்சிறுத்தையின் சிற்பத்தை இடித்து நின்றான்... அவன் கழுத்தை எம்பி பிடித்திருந்த மகரகாந்தன் நாக்கை வளைத்து எச்சில் ஊரிட ராமை கண்டு நகைத்தான்...

மகரகாந்தன் : ஹாஹா என்னடா ராம்சரா... யாம் யாரென விளங்கவில்லையோ... என்றவனை ஒரு சிறுத்தை பேசுமா என்ற அதிர்ச்சியில் பார்த்தான் ராம்....

நேரில் சிறுத்தையை பார்ப்பதே அதிர்ச்சி என்றிருக்கையில் அது பேசினால் அதிர்ச்சியாக தானே இருக்கும்...

மகரகாந்தன் : யான் தானடா உமக்கான எமதர்மன்... உம் தந்தை பறைந்தானே உம் வீரத்தை பற்றி.. ஹாஹா நீர் ... எமக்கு அஞ்சி எம் பிடியில் நடுங்கும் நீர் எமக்கு எமனாய் பிறந்துள்ளாயா... அன்றடா அன்று... நீர் எம்மால் மடிய வேண்டியே உம் அன்னை உம்மை ஈண்டெடுத்துள்ளாளடா என ஏளனமாய் கொக்கரித்தவன் திடிரென ராமின் வதனத்தில் பூத்த புன்னகையை கண்டு சிரிப்பை மெல்ல நிறுத்தினான்...

வெளியே காட்டை சுற்றிலும் ஒரு பேரமைதி நிலவ நம் நாயகன்களும் கண்களை மூடி கண்கள் திறக்கும் முன்னே அங்கு நரிகள் அவர்களை சுற்றி வளைக்க தொடங்கியிருந்தது...

அனைத்திற்கும் தலைவனை போல் உறுமிய மகரகாந்தன் அப்போதும் நாயகன்களை கண்டு சிரிக்க மறக்கவில்லை... அவனை காண காண காரணமே இன்றி ராகவிற்கு கோவம் தலைக்கேறி கொண்டிருந்தது... ராமின் நிலை என்னவானதென்ற பதட்டம் எவர் வதனத்திலும் இல்லை என்ற ஒரு சந்தேகம் மகரகாந்தனுக்கு இருந்தது...

அவனின் சந்தேகத்தை வலுவூட்டவே குள்ளநரிகள் பாய எத்தனித்த அந்த தருணத்தில் சரியாக கோட்டையிலிருந்து அலரியடித்து வெளியே வந்து விழுந்தான் மனித உருவிலிருந்த மகரகாந்தன்... அவன் அலரலில் சுற்றி நின்ற நரிகள் அரண்டு போய் அவர்களை நோக்க ... கோட்டையினுள் கேட்ட ஒரு மாபெரும் உறுமல் அந்த காட்டையே அதிர வைத்தது...

கீழே விழுந்து கிடந்த மகரகாந்தனின் மனக்கண்ணில் தான் ராமை அந்த சிறுத்தையின் சிற்பத்தில் இடித்து பெருந்தவற் புரிந்து விட்டோம் என்றது புரிந்து ஒரு மாபெரும் காட்சி மின்னி மின்னி மறைந்தது...

வெளியே நின்ற அனைவரும் கோட்டை வாயிலை நோக்க புழுதி பறந்த அந்த வாயிலை விட்டு இரு பலமான கைகள் கால்களாய் மண்ணில் பதிய பளிச்சென்ற வெள்ளை நிறத்தில் அபாரமான உடல் வாகுடன் கம்பீரமாய் சிறுத்தையின் உருவில் நடந்து வந்தான் ராம்...

இது கல்லாய் இருந்த சிறுத்தையல்லவா என்பதை போல் நம் நாயகன்கள் அதிர்ந்து போய் அதை நோக்க ராகவ் மற்றும் அஜயின் கண்கள் அதை கூராய் துளைத்தெடுத்தது...

ராம் பத்து படிகளையும் ஒரே தாவில் தாவி கால்களை மண்ணில் தேய்த்து கொண்டு வந்து கீழ் நின்றான்... அவன் கீழே இறங்கியதும் உண்மை உணர்ந்த அஜய் மற்றும் ராகவ் அதே கோட்டையின் உள் ஓடினர்..

மற்ற நாயகன்களும் உள்ளே ஓட முயல ராமின் வரவில் அதிர்ந்திருந்த இன்னோறு மகரகாந்தன் இவர்களை நோக்கி பாய்ந்து வரவும் வேறு வழியின்றி பின் வாங்கினர்...

தன் உறுமலை வெளியிட்டு மகரகாந்தனை முறைத்த ராம் இரு மகரகாந்தனையும் முறைக்க அந்த இன்னோறு மகரகாந்தனோ " உம்மால் எம்மை ஒன்றும் செய்ய இயலாத டா " என பார்வையாலே கூறி விட்டு நாயகன்கள் மேல் பாய எத்தனிக்க அனை தடுத்து நடுங்க வைத்தது கோட்டடை வாயிலில் மீண்டும் கேட்ட உறுமல்...

ராமின் இதழ்கள் கர்வமாய் வளைய இப்போது கோட்டையின் வாயிலில் இருந்து பளிச்சென்ற சக்தி வாய்ந்த கருஞ்சிறுத்தையின் உருவில் கம்பீரமாய் நடந்து வந்தான் ராகவ்...

அவன் பின் கருப்பு பூனை கண்களால் நரிகளை மிரட்டி கொண்டு அசாத்தியமான கர்வத்துடன் தைரியமாய் இரு பெரிய இறெக்கைகளுடன் பறக்கும் சக்தி படைத்த மகரகாந்தனை போன்ற மிருக உருவில் நடந்து வந்தான் அஜய்...

மாயம் தொடரும்...

ஹாய் இதயங்களே... எப்டி இருக்கு சர்ப்ரைஸு.. கோட்டைக்குள்ள சிலையா இருந்த எல்லாமே நம்ம ஹீரோஸ் தான்... ஐ மீன் அந்த பத்து சிற்பம் மட்டும்.. அடுத்த யூடிய நாளைக்கே குடுக்க முயற்சி பன்றேன்... ஸ்டே ட்யூண் டு ரீட் இட்... குட் நைட்.. டாட்டா...

DhiraDhi❤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro