மாயம் - 15
சித்தார்த்தின் இந்த கம்பீரமான தோற்றமும் அவன் கடப்பாரையாய் இறுகியிருந்த முகமும் அக்கருஞ்சிறுத்தையை சில நொடிகளில் அச்சமடைய வைத்திருந்தது... அவனது இரத்த சிவப்பான விழிகள் எதையோ உணர்த்த மெல்ல தன் காலடிகளை பின்னோக்கி வைத்தது...
சித்தார்த் சற்றும் அதை கவனிக்காமல் அதே போல் நின்றான்... அவன் கண்களை காண காண கருஞ்சிறுத்தையின் கண்களும் நிறம் மாற தொடங்க... அது தான் செய்வதையே மறந்து அவன் விழிகளுள் கட்டுண்டு கிடந்த நேரம் அதி வேத்துடன் எம்பிய சித்தார்த் ஓங்கி அதை ஒரே ஒரு அடி தான் அடித்தான்...
அந்த கருஞ்சிறுத்தை மண்ணை பொத்து கொண்டு விழுந்த வேகத்திற்கு அதன் முதுகெலும்பு நொருங்கியிருக்கும்.. அதன் கோரமான அரலில் இன்னும் புறனா நடுங்கினாள்..
சித்தார்த் : இவ்வாறு உம்மை இனி ஏதேனும் ஒரு அப்பாவி ஜீவனருகில் கண்டேனெனில் அதுவே உமக்கு இறுதி தினமாயிருக்கும்.. என அதனிடம் மெதுவாய் உறுமியவன் திரும்பி நடக்க.. அது அவ்விடத்திலே மயக்கத்தில் ஆழ்ந்திருந்தது...
அதே நேரம் சித்தார்த்தை சுற்றியிருந்த ஒரு மரத்தின் மேல் அமர்ந்திருந்த ஒரு உருவத்தின் மனம் சித்தார்த்தை கண்டதிலிருந்து வேகவேகமாய் துடித்து அடங்கி கொண்டிருந்தது...
தன் கண்ணீரை ஒரு கரம் துடைப்பதை கண்டு பயந்து போய் கண்களை இன்னும் புறனா இறுக்கி கொள்ள...
சித்தார்த் : புறனா என இவன் மென்மையாய் அழைக்க.. அந்த கருஞ்சிறுத்தையிடம் சிங்கமாய் கர்ஜித்தவனா அக்குழந்தையிடம் இவ்வளவு மென்மையாய் பேசுகிறான் என ஆச்சர்யத்தில் பார்த்தது அந்த உருவம்..
சித்தார்த்தின் குரலை இணங்கண்ட புறனாவினுள் ஒரு ஒளி பரவ சட்டென கண்களை திறந்து " இரட்சகரே " என்ற அலரலுடன் அவனை அணைத்து கொண்டாள்..
சித்தார்த் ஒரு கரும்போர்வையை போர்த்தியிருந்ததால் இறெக்கையுடன் நின்றவன் சித்தார்த் இல்லை என்பதை அவளே யூகித்து கொண்டாள்...
தானும் அவளை மென்மையாய் அணைத்து கொண்டவன் அவளது கேசத்தை கோதி விட.. விசும்பலுடன் அவன் முகம் நோக்கிய புறனா..
புறனா : இரட்சகரே.. எம்மை காக்க தாம் ஏன் விரைந்து வரவில்லை.. அச்சிறு..சிறுத்தை எம்மை உண்டியாக்க முனைந்தது தெரியுமா.. என உதட்டை பிதுக்கி சிவந்த முகத்தை காட்டி கேட்க...
சித்தார்த் : இல்லை புறனா.. சற்று அச்சிறுத்தையை நோக்கு.. அது உம்மிடம் விளையாட முனைந்துள்ளதம்மா.. பார் இப்போது நித்திரையில் ஆழ்ந்து விட்டது என அந்த சிறுத்தையை காட்டி கூறினான்..
புறனா : உண்மையாகவா இரட்சகரே.. அது அது எம்முடன் விளையாடவே எண்ணியதா...
சித்தார்த் : ஆம் புறனா.. அப்படி அச்சிறுத்தை உன்னை அச்சுறுத்த முயன்றிருந்தால் உன்னை காக்க உமக்கு முன்பே இங்கு யான் தரிசித்திருப்பேன் அல்லவா...
புறனா : ஆமாம்.. அப்படியெனில் ஏன் இப்போது உறங்குகிறது...
சித்தார்த் : விடியல் முதலிலிருந்து பணி செய்வதால் சோர்வின் காரணமாய் நித்திரையில் ஆழ்ந்து விட்டதம்மா...
புறனா : ஓஓஓ சரி இரட்சகரே.. ஹான் இரட்சகரே தம்மிடம் யான் ஒன்று கூற வேண்டும்..
சித்தார்த் : என்(ன) விசனமடா...
புறனா : சென்ற திங்கள் தங்களை போன்றுள்ளவரை கண்டேன்.. அவருக்கும் தங்களுக்கும் சில வேறுபாடுகளே இருந்தது.. அவர் இரட்சரில்லை என்றார்.. பின்பு தான் அவரது வெண்ணிற விழிகளையே கவனித்தேன்...
சித்தார்த் : ஹ்ம் அவர் தான் மூன்றாம் இரட்சர்.. எனது சகோதரன் என்றான் ஒரு வித நிம்மதியான முகபாவத்துடன்... ஆம் அன்று புறனாவை காத்தது மூன்றாம் இரட்சகனான ஆதியன்த்தே..
புறனா : அவ்வாறெனில் ஏன் தான் இரட்சகனன்றென அவர் உரைக்க வேண்டும்...
சித்தார்த் : எமது சகோதரன்கள் இருவரும் இன்னும் எங்கள் பிறவி பயனை நினைவு கொணரவில்லையடா.. ஆதலாலே மூன்றாம் இரட்சகர் தாம் இரட்சகரில்லை என உம்மிடம் உரைத்துள்ளார்...
புறனா : ஓஓஓ என அவள் அடுத்த வினாவை சிந்திக்கும் முன்...
சித்தார்த் : நீ இந்நாழியில் இவ்விடத்தில் என்(ன) செய்கிறாய்..
புறனா : அது.. அது ஐயா நேற்று பாசன மூலிகையை சேகரித்திட கூறியிருந்தார்.. ஆயினும் நேற்று எம்மால் சேகரிக்க இயலவில்லை.. நாளை விடியலில் அதை ஒப்படைக்க வேண்டுமென்பதாலே அப்பாசன மூலிகையை நாடி வந்தேன்.. வரும் பாதையில் இருளில் மறைந்திருந்த மரத்தில் மோதியதால் கால் இடிறி வீழ்ந்து விட்டேன்... அப்போதே அச்சிறுத்தையை கண்டேன்
சித்தார்த் : சரி புறனா.. இனி இரா(இரவு)வில் குடிலை விட்டு வெளியேறாதே.. சரியா..
புறனா : ஹ்ம் சரி இரட்சகரே.. என்கறதும் தன் கரத்தின் உள்ளங்கையை புறனாவின் காயங்கள் மீது மெதுவாய் வைத்த சித்தார்த் சில நொடிகள் இமைகளை மூடி இருந்து விட்டு மீண்டும் திறக்க.. அவன் கரத்தால் அவள் காயத்தின் மீது மெதுவாய் எடுக்கவும் அந்த காயங்கள் மாயமாய் மறைந்திருந்தது...
சித்தார்த் : தற்போது உமது காயங்கள் நலமாகிவிட்டது..
புறனா : ஹா நன்றி இரட்சகரே...
சித்தார்த் : இருக்கட்டும் புறனா.. ஆம் ஐயாவென யாரை குறிப்பிட்டாய்..
புறனா : எம் பாட்டனாரை தான் இரட்சகரே.. எம் குளத்திற்கே ஐயனாய் திகழ்பவராய்ற்றே .. அவர் தான் தர்மன் ஐயா..
சித்தார்த் : தர்மன் ஐயா.. என மெதுவாய் உச்சரித்து கொண்டான்...
புறனா : சரி இரட்சகரே.. அன்னை இந்நாழிகைக்கு யான் குடிலில்லை என்பதை அறிந்திருப்பார்.. யான் செல்லவா...
சித்தார்த் : ஹ்ம் சென்று வா புறனா.. எச்சரிக்கையுடன் செல்.. இன்னலெனில் ஒரு குரல் கொடு.. என கூறியவன் சட்டென நிறுத்த.. அதை கவனிக்காத புறனாவோ..
புறனா : நிச்சயமாக இரட்சகரே.. சென்றுவருகிறேன் என புறாவின் உருவிற்கு மாறி அங்கிருந்து பறந்து சென்றாள்..
ஒரு மாதிரியாக சமைந்து நின்ற சித்தார்த் தான் கூறிய வார்த்தைகளையே மீண்டும் மீண்டும் அசை போட.. " இன்னலெனில் ஒரு குரல் கொடு " என பின்னிருந்து கோவமான தோனியில் ஒலித்தது ஆதியன்த்தின் குரல்..
தன் சகோதரனின் புத்தி கூர்மையை எண்ணி சித்தார்த்தின் இதழோரம் சிறுநகை பூத்தது..
அன்று புறனாவிடம் ஆதியன்த்தும் " இன்னலெனில் ஒரு குரல் கொடு " என கூறியிருக்கையில் அவளின் வீலென்ற அலரலில் இங்கு வராதிருந்திருப்பானா என்ன..
ஆதியன்த் : ஹ்ம் எம் வரவை முன்னே எதிர்நோக்கியிருந்தாயோ.. அதிர்ந்ததை போல் தெரியவில்லையே..
சித்தார்த் : உண்மை தான்.. புறனாவின் அரவத்தில் நீர் வரவளிக்காதிருந்தால் தான் அதிர்ச்சி கொள்ள வேண்டும் என்றவாறு மெதுவாய் திரும்பினான்...
இருவரும் நேருக்கு நேர் பார்த்து நின்றிருந்தனர்..
ஆதியன்த் : நேரெதிரில் எம்மை கண்டும் நீ மறையவில்லையோ... என தன் இரத்த சகோதரன் என தெரிந்த பின்பும் இரு முறையும் அவன் மறைந்ததால் ஏற்பட்ட சினத்தில் நக்கலாய் கேட்டான்...
சித்தார்த் : ஹ்ம் பலவாறு ஏங்கிய பின் கிட்டிய உறவினை நேரெதிரில் கண்டதால் வந்த வினை...
ஆதியன்த் : பின் தொடக்கத்திலே எங்களை ஏன் நாதியற்று விட்டு சென்றாய் சித்ரா.. என இப்போது உண்மையில் சீரினான்...
சித்தார்த் : ஹ்ம் நிச்சயம் விடை வேண்டுமா இளவா...
ஆதியன்த் : விடையளிக்காதிருப்பின் முன்னமே நீர் இவ்விடத்திலிருந்து மறைந்திருப்பாயே..
சித்தார்த் : மறையப்போவது நீ என்கையில் யான் எதற்காய் மறைய வேண்டும் இளவா...
ஆதியன்த் : நானா.. விடை காணும் முன் திடீர் திடீரென மறைவது உமக்கு தான் வழக்கம்.. எமக்கல்ல..
சித்தார்த் : மறையவிருப்பது நீயென்கையில் யான் மறைந்து பயனில்லை...
ஆதியன்த் : நானா.. எமக்கு இவ்விடத்திலிருந்து மறைய என்(ன) அவசியமுள்ளது..
சித்தார்த் : ஹ்ம் நம் நடுவன் (ருத்ராக்ஷ்) இவ்விடமில்லாததை கனித்தாயன்றோ உமக்கு தனிச்சையாய் புரிபடும்.. என கூறிவிட்டு திரும்பி கொண்டான்..
ஆதியன்த் : என்ன) கூறவருகி.. என வினவி கொண்டே வந்தவன் சட்டென நிற்க.. உடலில் ஏதோ ஒரு வலி மெல்ல பெருகியது.. தடுமாறியவனின் கரம் தனிச்சையாய் இதயத்தின் மீது பதிய அவன் முதுகில் புதிய பாரமொன்று திடீரென கூடி கொண்டது..
சித்தார்த் : பதட்டம் கொள்ளாதே இளவா.. ஒன்றும் இல்லை.. என கூறியவனை கழுத்தை பிடித்து இறுமி கொண்டே பார்த்த ஆதியன்த்திற்கு இப்போதே சித்தார்த்தின் வேற்று முதுகும் அதில் அபார அளவில் இரத்தத்துடன் முளைத்திருந்த சிகப்பு இறெக்கைகளும் தெரிந்தது..
ஆதியன்த் : சித்..தா..ர்.த் என நெஞ்சை பிடித்து கொண்டு இவன் சரிய.. மண்ணில் விழும் முன் சித்தார்த் அவனை தாங்கியிருந்தான்...
சித்தார்த் : பதட்டம் கொள்ளாதே.. நமது சக்திகள் மெதுமெதுவாய் பெருகிக் கொண்டிருக்கிறது.. அதற்கான முன் மாதிரிகளே இவ்வலிகள் யாவும்.. உமக்கு துணையாய் என்றும் நானிருப்பேன்.. இவ்வலியிலிருந்து உம்மால் மிகவும் எளிதாய் வெளி வர இயலும்.. அதற்கு எம் துணை அவசியமன்று.. ஆயின் இந்நாழியில் எமக்கு முடித்திர வேண்டிய சில கடமைகள் உள்ளன.. அவையை சரி வர இயற்பித்ததும் தானாய் தங்கள் இருவர் முன் வரவளிப்பேன்.. அது வரை எம்மை தேடி நாழியை வீணடிக்க வேண்டாம் என அவன் கன்னத்தை பிடித்து இவன் கூறி முடிக்கவும்.. ஆதியன்த் மங்கிய கண்களுடன் அவனை நோக்க.. அடுத்த சில நொடிகளில் சித்தார்த்தின் கைகளிலே ஆதியன்த்தின் உருவம் மஞ்சளாய் கரைந்து போனது..
சர்ப்பலோகம்
அந்த நீண்ட வீதியில் முக்கோண வடிவத்திலிருந்த ஒரு மேடையில் மூன்று ஓரத்திலும் விஞ்ஞவெள்ளனும் சாகாரகாந்தனும் மகரகாந்தனும் கண்கள் மூடி அமர்ந்திருந்தனர்..
அவர்களின் நடுவில் சமனமிட்டு எதையோ ஆழ்ந்து உச்சரித்தவாறு அமர்ந்திருந்தனர் மிதரவர்தினியும் அருளவர்தினியும்..
இரவையும் பகலையும் பாராமல் இவர்கள் செய்த யாகத்தின் படியில் விஞ்ஞவெள்ளனிடமிருந்து ஒரு அதீத வெள்ளி நிற ஒளியும்.. சாகாரகாந்தனிடமிருந்து அதீத சிகப்பு நிற ஒளியும்.. மகரகாந்தனிடமிருந்து அதீத பச்சை நிற ஒளியும் எழுந்து நடுவில் அமர்ந்திருந்த இருவரையும் நிறைத்தது...
இப்போது தானாய் அவ்விடம் முழுவதும் பல நிறமுள்ள சர்ப்பங்களும் பல வகையான சர்ப்பகளும் நொடி கணக்கில் குழிமியிருந்தது.... அந்த இடமே நாக ஓசைகளினால் நிறைந்து ஒருவாறு அதை செவி சாய்க்கும் மனிதர்களின் செவிகளில் ஈயத்தை காய்ச்சி சிந்துவதை போல் இருந்தது..
ஆனாலும் தான் மனித பிறவி தானே என எண்ணியிருந்த அந்த பெண் தனக்கு ஏனெந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தன்னை தானே பார்த்து கொண்டாள்.. அந்த நேரம் அக்கூட்டத்திலிருந்த சர்ப்பம் ஒன்று அவளையே உருத்து நோக்கி கொண்டிருந்ததை கண்டு விதிர்விதிர்த்தவள் எச்சிலை கூட்டி விழுங்க.. அவள் கண்களில் ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் தெரிந்த ஒரு ஒளியில் தனிச்சையாய் அச்சர்ப்பம் வேறு புறம் திரும்பி கொண்டது..
மெதுமெதுவாய் அந்த மூன்று ஒளிகளும் காற்றில் மறைய.. அதனுள் கண்ட அப்பெண் பேரதிர்ச்சியடைந்தாள்...
ஏனெனில் இத்தனை வருடங்களாய் பெண்களாய் இருந்த மிதரவர்தினியும் அருளவர்தினியும் தோற்றம் முற்றிலும் மாறுப்பட்டு தோள்களில் சீரி கொண்டு வந்த நாகத்தின் அச்சுடன் ஒரு ஆணின் தோற்றத்தில் கம்பீரமான ஆண்களென நின்றனர் மிதரவர்தினி என்னும் மிதரவர்தனனும் அருளவர்தினி என்னும் அருளவர்தனனும்.. தன் கண்களை திறந்து தன்னை ஏறிட்ட மிதரவர்தனன் அந்த இடமே அதிர்வதை போல் கொக்கரித்தான்..
மிதரவர்தனன் : ஹாஹாஹா இருவது இருவது வருடாந்திரம் கடந்த பின் என் நிஜ உருவை தத்தெடுத்திருக்கின்றேன்.. ஹாஹா அருளா.. எம் அருமை சகோதரா.. உன்னை பழைய படி மீண்டும் கண்டதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேனடா... என கைகளை விரித்து அணைத்து கொண்டான்...
அருளவர்தனன் : ஹாஹா எமக்கும் உன்னை இவ்வுருவில் கண்டதில் அளவில்லா மகிழ்ச்சியடா சகோதரா.. என தானும் அவனை வாரி அணைத்து கொண்டான்...
மகரகாந்தன் : மகிழ்வை கொண்டாடும் நாழியிதுவல்ல சகோதரர்களே.. நம்மை இந்நிலைக்கு ஆளாக்கிய கோவன்கள் மற்றும் சஹாத்திய சூரர்களின் புத்திரன்கள் இரட்சகன்களாகவும் நம் அழிவை உறுதியூட்டும் பராக்ரம வீரன்களாகவும் ஈண்டெடுத்து தற்போது வேதபுர மண்ணினையும் அடைந்து விட்டனர்..
சாகாரகாந்தன் : கவலை கொள்ளாதே சகோதரா.. நமக்கான காலம் நெருங்கிவிட்டது.. கோவன்களை எவ்வாறு மடிய செய்தோமே அதே போல் சஹாத்திய சூரர்ளையும் மடிய செய்து விட்டால் இரட்சகன்களும் பராக்ரம வீரன்களும் நமக்கு ஒன்றும் பெரும் பாரமாய் இருக்க மாட்டர்..
விஞ்ஞவெள்ளன் : ஹ்ம் அங்கு இரட்சகர்களிடம் தவித்த எமக்கு தான் தெரியும் அவர்கள் எப்படி என்று.. என அடி வாங்கிய அந்த காண்டில் கழுத்தை தடவியவாறு சினத்துடன் கூறினான்
அருளவர்தனன் : என்(ன) உளறல் மொழிகிறாய் சகோதரா...
விஞ்ஞவெள்ளன் : உளறல் மொழியல்ல அருளா.. மெய்யை தான் பறைகிறேன்... நினைவு கிட்டும் முன்னே அம்மூவரின் சொற்களும் தாக்குதல்களும் எவ்வாறென்பதை அறிவீரா.. அம்மூவரின் ஆத்மரூபத்தையும் தாக்குதலையும் கண்டு ஒரு நொடி கோவன்களே எழுந்து வந்து விட்டனரென்று எண்ணினேன் என உணர்வு பூர்வமாய் கூறி முடிக்கும் முன் பளாரென மிதரவர்தனன் ஒரு அறை விட்டான்...
மிதரவர்தனன் : உளறலுக்காய் கூட கோவன்கள் எழுந்து வந்து விட்டதாய் உரைக்காதே.. அது இப்பிரவஞ்சத்தில் என்றும் என்றும் என்றும் நிகழாது அதற்கு நம் மகாப்பிரபுக்கள் அனுமதிக்கவும் மாட்டர்.. புரிந்ததா.. என கர்ஜிக்க " யாரிந்த கோவன்கள் " என்ற கேள்வியுடன் நின்ற அவள் இனிமேலும் இங்கு நிற்பது சரியல்ல என அரவமின்றி அவ்விடத்திலிருந்து விடுப்பட்டாள்..
மகரகாந்தன் : மிதரவர்தனா.. விஞ்ஞவெள்ளன் உரைப்பதும் மெய் தானடா... நீர் என்(ன) தான் கூறினாலும் எம்மை விடுவிக்க சற்றும் எண்ணமில்லா சஹாத்திய சூரர்களையும் மீறி தான் வளர்த்த பராக்ரம வீரன்கள் நம் வம்சத்தை உருத்தெரியாமல் அழித்திடுவர் என்ற பெரும் நம்பிக்கையில் என்னிடம் உரையாடிய இரண்டாம் நாகனியின் உறக்க சொற்கள் மீண்டும் மீண்டும் எனது செவிகளில் ரிங்காரமிடுகிறது ... நிச்சயம் இம்முறை அவர்கள் முன்பிருந்ததற்கும் பலவாறு சக்தி வாய்ந்தவர்களாய் இருப்பர்..
சாகாரகாந்தன் : நாம் மாத்திரமென்ன சலைத்தவர்களா.. நாமும் முன்பை விடுத்தும் சக்தி வாய்ந்தவர்களே..
மிதரவர்தனன் : சரி மகரகாந்தா.. உம் சொல் படியே வரளாம்.. நாம் காலம் தாழ்த்த வேண்டாம்.. விரைவிலே யோகபரீபூஜன யாகத்தை தொடங்கி விடலாம்...
மகரகாந்தன் : ஹா இவையே எதிர்நோக்கினேன் மிதரவர்தனா.. இன்னும் ஒற்றை திங்களில் தொடங்கிடலாம்.. என கூறி ஐவருமாய் சிரித்து கொண்டனர்..
கோட்டை
சஹாத்திய சூரர்கள் அனைவரும் சேவனின் காதலை எண்ணி பூரித்து மனதார வாழ்த்தை தெரிவித்தனர்.. நம் ரக்ஷவ் இவர்கள் திடீர் திடீரென செந்தமிழ் பேசுவதும் பேச்சு வழக்கில் பேவதுமாய் இருக்கவும் அவனுக்கேற்றதை போல் பேச்சு துணைக்கு ஆளில்லாமல் எண்ணையிலிட்ட கடுகாய் கடுகடுத்து கொண்டிருந்தான்...
அவனை சீண்டி பார்க்க நீலியும் அவனுடன் செந்தமிழிலே உரையாடி விளையாட்டு காண்பித்து கொண்டிருந்தாள்.. சேவன் இப்போது ரக்ஷவை காப்பாற்றி வெளியே அழைத்து சென்றான்.. நீலி சரண் ரனீஷுடன் வாயாடி கொண்டு மற்றவர்களிடமும் சகஜமாய் உரையாடியவாறு மீண்டும் தொடரும் காதல் கதையை சுவாரசியமாய் கேட்டு கொண்டிருந்தாள்..
சேவன் ஒரு குச்சியின் முணையை பிடித்திருக்க ரக்ஷவ் அதே குச்சியின் மறுமுணையை பிடித்து கொண்டு நடந்து வந்தைன்...
தீரா : ஒன்னுமில்ல இரெண்டு பேரும் கையப்புடிச்சு நடந்து போய்ட்டு இருக்காங்களாமாம்..
ரக்ஷவ் : ஏன் டா சேவா
சேவன் : சொல் ரக்ஷவா..
ரக்ஷவ் : இது எந்த கோட்டை.. ஏன் நீ நீலிய இங்க அழச்சிட்டு வர்ரதுக்கு அவ்ளோ தயங்குன..
சேவன் : இது ஒரு அற்புத கோட்டை ரக்ஷவா.. கிட்ட தட்ட.. ஈராயிரம் அல்ல அல்ல ஐயாயிரம் வருடாந்திரங்களுக்கு மேலாக இம்மண்ணில் நிலைத்து நிற்கிறது.. இதற்குள் நானே ஒரு முறை தான் வந்திருக்கிறேன்... இதற்குள் வேறெவரேனும் வந்தால் இன்னல்கள் பெருகிடும்... ஆதலாலே வேண்டாமென கூறினேன்...
ரக்ஷவ் : ஹ்ம் ஏன் நிக்கிது.. இத்தன வர்ஷத்துல யாரு கண்ணுலையுமேவா இது படல.. அப்டி பட்டுருந்தா இத கண்காட்சியகமாவே மாத்தீருப்பானுங்களே...
சேவன் : ஹ்ம் நீ யாளிகளை கண்டிருக்கிறாய் என எண்ணுகிறேன்..
ரக்ஷவ் : யாளியா.. அதாவது அந்த யானைங்கள தான சொல்ற...
சேவன் : ஆம் அவ்வெட்டு விலங்குகளும் யானையாளிகள் என அழைக்கப்படும்.. அவைகள் ஐயாயிரம் ஆண்டுகள் முன்பிருந்து இங்கு தான் வாழ்ந்து வருகிறது.. அவைகளின் உயரத்தை கண்டிருக்கிறாயள்ளவா..
ரக்ஷவ் : ஆமா சேவா. அது என்னடா அவ்ளோ பெருசா இருக்கு.. கூகுல்ல கூட நா அதெல்லாம் பாத்ததில்ல...
சேவன் : கூகுலா... என முளிக்க...
ரக்ஷவ் : அது ஒரு செயலி மாரி டா...
சேவன் : ஓஹ் சரி.. அத்துனை பெரிய விலங்கை காக்க பெரும் இடம் தேவையென்பதாலே தங்களின் சக்திகளால் இவ்விடத்தை கோவன்கள் வேந்தன்யபுரத்தின் இளவரசர்களாய் இருந்த போது உருவாக்கினர்.. அவர்களின் சக்திகளால் உருவாகியதென்பதால் இக்கோட்டை சிலருக்கு மாத்திரமே காட்சிப்படும்... அதனால் இன்னலில்லை... ஆனால் தப்பித்தவறி நீலியினால் வேறு எவறேனும் கண்டு விடுவரோ என்ற ஐயம் எமக்கு...
ரக்ஷவ் : ஹோ ... அதெல்லாம் ஒன்னும் ஆகாது.. ஆனா வெறும் எட்டு யானை இருக்கவா இவ்ளோ பெரிய கோட்டை... யானையாளிங்க இப்போ இருக்குர இடம் மட்டும் அதுங்களுக்கு போதுமானது தான...
சேவன் : ஆம் தான் ... ஏனெனினும் இக்கோட்டை பலவையை தன்னுள் காத்து வெளிகாட்டாமல் இருக்கின்றது... இக்கோட்டையின் ஒவ்வொரு தூணிலும் துரும்பிலும் ஓவியத்திலும் பலவை ஒளிந்திருக்கிறது.. அது மட்டுமல்லாமல் யானையாளிகள் மாத்திரம் இங்கில்லை.. கோவன்களின் சிம்மயாளிகளும் இங்கு தான் இருக்கின்றது...
ரக்ஷவ் : ஹான் சிம்மயாளியா... அது எப்டி இருக்கும்...
சேவன் : ம்ம் உமக்கு தெரிந்தவாறு கூறவேண்டுமெனில் சிங்கம் போலிருக்கும்...
ரக்ஷவ் :உண்மையாவா... ஆனா நா மூணையும் பாக்கவே இல்லையே...
சேவன் : அதிலே ஒரு சிக்கல் உள்ளது ரக்ஷவா.. யானையாளிகள் சஹாத்திய சூரர்களிடம் அடங்கிய பின்னர் மூர்க்கமாய் என்றும் நடந்ததில்லை.. அவர்கள் இறந்து நான்காயிரம் வருடாந்திரம் பின் பிறப்பெடுத்த போது கூட இடையில் அவைகள் சாந்தமாய் தான் இருந்தது... ஆனால் சிம்மயாளிகள் அவ்வாறில்லை.. கோவன்கள் இல்லையெனில் கண்காணா வெறி ஒன்று மூன்றையும் பற்றி கொண்டு சித்தம் இழக்க செய்கிறது.. அந்த நான்காயிரம் வருடங்களிலே இவ்விடத்தை விட்டு வெளியேற இயலாமல் கோட்டையை கொலைவெறியுடன் சுற்றி வந்தது.. அதே போல் இந்த இருவது வருடத்தில் அம்மூன்றும் கடும் சினத்தில் அபார வெறி கொண்டுள்ளது.. அவைகளை அடக்க கோவன்கள் வந்தால் மட்டுமே இயலும்.. இல்லையேல் என்(ன) செய்தாலுமே அவைகளை அடக்க இயலாது... தற்போது ஏதோ சஹாத்திய சூரர்கள் பட்ட பெரும்பாடினால் அவர்களின் சொற்களை செவி சாய்த்து இக்கோட்டையை விடுத்து உள்ளேயே பதுங்கி உள்ளது.. ஆயின் என்று வேண்டுமானாலும் வெறி தாளாது யார் எவர் என்று காணாமல் பாயக்கூடும்.. உலகிலே மிகவும் அபாயகரமான விலங்கினம் அது தான்.. ஆதலாலே சஹாத்திய சூரர்கள் மூன்று சிம்மயாளிகளையும் சக்தி வாய்ந்த கூண்டுள் பாதுகாத்து வைத்திருக்கின்றனர் என கவலையுடன் முடித்தான்...
ரக்ஷவ் : ஹ்ம் அப்டி பாத்தா இன்னும் பழங்கால விஷயமா உலகத்துல என்ன என்னலாம் இருக்கு சேவா என பேச்சை மாற்றும் விதமாய் வேறு ஒரு சந்தேகத்தை முன் வைத்தான்...
சேவன் : ஹ்ம் இருக்கிறது ரக்ஷவா... எண்ணிலடங்கா பல பழங்கால சான்றுகள் ஞாலத்தில்( உலகில் ) உள்ளது.. நம் மண்ணிலே கூற வேண்டுமானால் இக்கோட்டை... ராஜ்ஜியமர்வத மண்டபம் மற்றும் ஒரு பழங்கால பாலமுத்திர கோட்டை ..
ரக்ஷவ் : கடைசியா இரெண்டு சொன்னியே என்னது அது..
சேவன் : ராஜ்ஜியமர்வதனமண்டபம் ஏழாயிரம் வருடங்கள் முன்பு ஷேஷ்வமலையின் முன்னோர்களால் கோவன்களுக்கும் சஹாத்திய சூரர்களுக்கு நாகனிகளுக்கும் யாளிவம்ச வீராங்கனைகளுக்கும் நடந்தவையையும் அவர்களின் இரகசியங்களை உணர்த்தவும் கட்டப்பட்டது.. பழங்கால பாலமுத்திர கோட்டை பஞ்சலோக வம்சத்தவர்களால் உயர்த்தப்பட்டது.. இதோ இவ்வோயியத்தில் இருக்கிறது பார் என சுட்டி காட்ட.. அவர்கள் வந்த பாதையின் ஒரு ஓரத்தில் இருந்த பெரிய ஓவியத்தில் ஒரு பெரிய அரண்மணையின் வரைபடம் தத்ருபமாய் தீட்டப்பட்டிருந்தது...
அதை ஓவியமாய் கண்டதிலே ரக்ஷவ் விக்கித்து நிற்க... அதை நேருக்கு நேராய் பார்த்து கொண்டிருந்த நம் இரண்டாம் அணி நாயகன்களான பராக்ரம வீரன்கள் அக்கோட்டையை வாயடைத்து பார்த்து கொண்டிருந்தனர்..
மாயம் தொடரும்...
ஹாய் இதயங்களே... ஒரு ஒர்த்தான யூடி குடுத்துர்க்கேன்னு கொஞ்சம் நம்புறேன்... நா டெய்லி டூ யூடீஸ் குடுக்குறேன்னு சொல்லீர்ந்தேன்... பட் இனிமே டெய்லி யூடி போட முடியுமான்னே தெரியலங்கோ... கல்ல தூக்கீட்டு வந்துராதீங்க என்ன ஆச்சுன்னு சொல்றேன்..
இன்னைக்கு என் ஃப்ரெண்டு அதாங்க நம்ம ஹனா இருக்கால்ல அவ ஃபோன் பன்னி எனக்கு ஹார்ட் அட்டக்கே வர வச்சிட்டா.. அதாவது எனக்கு நாளன்னைக்கு எக்ஸம்னு சொல்லி... ஹ்ம் உங்களுக்கே அதிர்ச்சியா இருக்குள்ள...
அப்ரம் தான் இனிமே வீக்லி ஒன் டே தேர்வு வைக்க போறதா என் காதுக்கு இன்ஃபர்மேஷன் வந்துச்சு.. ஹ்ம் என்ன செய்றது நானும் படிக்கிர புள்ள.. பேர காப்பாத்தனும்.. ஆல்ரெடி அந்த பேரு ரொம்ப டமேஜ் ஆய்ட்டு இருக்கு... நல்லா கதை எழுதுர புள்ளன்னு பேரு வாங்கனும்னா அதே நேரம் படிக்கிர புள்ளன்னும் இந்த உலகத்துல பேரு வாங்க வேண்டியதா இருக்குப்பா..
சரி சரி போதும் வெட்டி சீனு விஷயத்துக்கு வான்னு சொல்றீங்க கேக்குது... வந்துட்டேன்...
ஃபர்ஸ்ட்டு விஷயம் இனிமே டூ யூடி எப்பையாவது தான் குடுக்க முடியும்...
செக்கெண்டு நோ டெய்லி யூடீஸ்...
அதாவது வாரத்துல கரெக்ட்டா வாரத்துல அஞ்சு நாள் உங்களுக்கு யூடி டான் டான்னு வந்துடும்.. ஒரு இரெண்டு நாள்ள மட்டும் ஒரு சமயம் லேட் ஆகலாம்.. சில சமயம் வராமளே போகலாம்.. ஏன்னா தீரா பாப்பா அன்னைக்கு டெஸ்ட் எழுதிக்கிற்றுப்பேன் இல்லனா ரொம்ப சின்சியரா படிச்சிற்றுப்பேன்... மத்த நாள் படிக்க மாட்டியான்னு கேக்காதீங்க... டெஃபெனெட்லி படிப்பேன்... அதே நேரம் யூடியும் போடுவேன்... (சார்ஜ் ஏறுற கேப்ல கூட நாங்க படிச்சிருவோமாக்கும்..😜😝 )
சோ என் அன்பு உள்ளங்கள் என் மேல காண்டாகாம கதைய மறந்துடாம பத்திரமா இருக்கனும் என்ன..
அப்ரம் ஒரு முக்கியமான விஷயம்.. என்ன தான் நீங்க புது கரெக்ட்டர்ஸ் இறக்கு.. நாங்க நியாபகம் வச்சிக்கிறோம்னு சொன்னாலும் உங்கள கஷ்டப்படுத்த எனக்கு மனசு வரல... சோ அந்த மூணு மெய்ன் கரெக்ட்டர்ஸ கட் பன்னிட்டேன்... மூணு மெய்ன் கரெக்ட்டர்ஸான மூணு பொண்ணுங்க தான் வருவாங்க... மத்தபடி ஒரே ஒரு ஹீரோ மட்டும் என்ட்ரி குடுப்பான்.. 🙈 ஈஈஈஈ இது இன்னைக்கு யோசிச்ச ஐடியா தான்... நாளைக்கு அவன் வந்துடுவான்.. கவலப்படாதீங்க.. இப்போ போய் படிச்சிட்டு யூடி எழுதி நாளைக்கு போடுறேன்.. நாளன்னைக்கும் யூடி வரும் நோ கவலை ஓக்கே... சரி இதயங்களே ரொம்ப பேசீட்டேன்.. மறக்காம யூடி நல்லா இருக்கா இல்லையான்னு கமென்ட் பன்னிட்டு போங்கையா.. டாட்டா..
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro