மாயம் - 13
அடர்ந்த அந்த காரிருள் வேளையில் மழை கொட்ட கொட்ட அந்த மாபெரும் அரண்மனையை நோக்கி நடந்து கொண்டிருந்தான் சேவன்...
முகத்தில் வலிந்த மழை துளிகளை புறங்கையால் துடைத்தெறிந்தவன் ஒரு வழியாய் அந்த பெரிய மதிலை அடைந்ததும் உடனே அவனது உருவத்தை சுருக்கி கொண்டான்...
அவன் உருவம் சுருங்கிய சில நொடிகளில் அந்த மதிலின் அருகில் தன் கை விரலால் அந்த மதிலில் அவன் சைசிற்கு ஒரு வட்டத்தை வரைய அந்த வட்டம் சட்டென ஒளிரியது... நமது டோரீமானின் எலிவேட்டர் டோரை கடன் வாங்கியதை போல் அங்கு ஒரு கதவு உருவாக அதை திறந்து உள்ளே சென்ற சேவன் அவனது உயரத்திற்கே இருந்த ஒரு தேனீ தலை கீழாய் பறந்து கொண்டு தியான நிலையில் இருப்பதை கண்டு " ஏ மயூரா " என கத்த... மயூரன் என நாமம் கொண்ட அந்த தேனியோ சட்டென கண்களை திறந்து " வரவேற்க்கிர்றேன் சேவன் " என அழுத்தி கூறி கொண்டு மனிதனாய் மாறி தாவி வந்து அவன் முன் நின்றான்...
மயூரம் நம் சேவனின் தோழன்.. யட்சினி வம்ச மெய்க்காப்பாளன்..
சேவன் : வரவேற்புரை இருக்கட்டும்... துஷ்ரிகள் இந்நாழியில் (இந்நேரத்தில்) யட்சினிகளின் சிறை திசையில் இருக்க மாட்டர் அல்லவா...
மயூரன் : ஆம் சேவா.. அதில் உமக்கு ஐயமேது.. கண்காணித்தது யட்சினி வம்ச மெய்காப்பாளன் மயூரனாவான்... இந்நாழிகையில் யட்சினிகளின் சிறை வீற்றிருக்கும் திசையில் ஒரு கிழட்டு துஷ்ரிகளை கூட உம்மால் காண இயலாது... என பெருமையாகவும் அதே நேரம் அழுத்தமாகவும் கூறினான்...
சேவன் : ஹ்ம் சரி மயூரா.. அப்படி இன்னும் ஒரு மணி தியாளத்தில் யான் இவ்விடம் வரவில்லையெனின் வேதபுரத்தின் ராஜ்ஜிய மர்வதன மண்டபத்தில் எமக்காய் காத்திருக்கும் எம் காதலியிடம் நான் விரைவில் அவளிடம் வந்தடைவேன் என்பதை அறிவித்து விடு...
மயூரம் : ஹா தாம் ஒன்றும் மரண வாயிலுக்கு செல்லவில்லை சேவா.. சென்று ஒரு மணி தியாளத்தில் யட்சினிகளின் சிறை ஜன்னலருகில் எமக்காய் காத்திரு.. உம்மை அங்கிருந்து கூட்டி சென்று உமது காதலியிடம் ஒப்படைப்பது எமது கடமை.. சென்று வா... என அனுப்பி வைத்தான்...
நம் சேவனும் " சற்று அதிகமாகவே வசனத்தை விட்டு விட்டோமோ " என யோசித்தவாறு யட்சினிகளின் சிறை பக்கம் சென்றான்...
மயூரன் கூறியதை போலவே துஷ்ரிகள் அங்கு எவ்விடத்திலும் இல்லை... அதற்கு காரணத்தையும் சேவனால் அறிய முடியவில்லை... அதை இனி அறியவும் அவன் முயற்சிக்கவில்லை...
மெல்ல தனது குறுகிய உருவத்திலே அரை மணி தியால நடையின் பின் அச்சிறையை அடைந்தான் சேவன்... அதன் அருகில் நெருங்கி சென்றவன் சிறையுள் கண்கள் மூடி உறங்கி கொண்டிருந்த யட்சினிகளை கண்டதும் மிகவும் மகிழ்ந்தான்...
சேவன் : தங்கைகளே... தங்கைகளே.. என இவன் மெதுவாய் அழைக்க... ஓரத்தில் படுத்திருந்த ஆருண்யாவின் செவிகள் மெல்ல அசைய சில வினாடிகளில் அவள் விழிகளை பிரித்து அந்த சிறையை சுற்றி நோட்டமிட்டாள்...
சேவன் : தங்கையே... சற்று கீழ் நோக்கு.. என கீழிருந்து குரல் கொடுக்க... அதன் படியே கீழே நோக்கிய ஆருண்யா சிறை கம்பிகளின் பின் இவளை எதிர்பார்ப்புடன் நோக்கியவாறு நின்ற சிறு மனிதனை கண்டு திடுக்கிட்டாள்...
உடனே பயத்தில் அவள் நித்யாவையும் அதித்தியையும் எழுப்பி விட அவர்களும் இப்போது என்னானது என்பதை போல் பதறி எழுந்தமர்ந்தனர்..
நித்யா : ஆரு ஆரு... என்னானதம்மா.. ஏன் இவ்வாறு நடுங்குகிறாய்...
ஆருண்யா : நித்து அங்கு அங்கு என இவள் அதே பறபறத்த கண்களுடன் முன்னே சுட்டி காட்ட... அதித்தி என்ன என்பதை போல் திரும்ப...
சேவன் : தங்கைகளே அச்சம் கொள்ள அவசியமன்று.. யான் தங்களின் நலன் விரும்பி.. என கூற இப்போது அதித்தியுமே ஆருண்யாவை போல் திடுக்கிட்டாள்...
நித்யா : தாங்கள் யார்... எங்கிருந்து குரல் தருகிறீர்கள் என இரு தங்கைகளையும் தன்னுள் அணைத்தவாறு சுற்றி முற்றி பார்த்து கேட்டாள்...
சேவன் : தங்கையே... யான் உமக்கு கீழே உள்ளேன்... என மீண்டும் கூற இப்போது இவனை கண்ட நித்யாவும் திடுக்கிட பெருமூச்சு விட்ட சேவன் வேறு வழியின்றி...
சேவன் : நான் தங்களின் மணாளன்களால் அனுப்பபட்டவன்.. என கூற இப்போது மூவரும் அவனை உருத்து நோக்கினர்...
அதித்தி : நீர் பறைவது உண்மையா...
சேவன் : ஆம் அதித்திக்கா.. யான் பறைவது மெய்யே..
அதித்தி : எமது நாமம் வரை அறிந்திருக்கிறீர்களெனில் எம் மணாளனையும் அறிந்திருப்பீர்களல்லவா.. அவரது நாமத்தை கூறுகிறீரா.. என கெஞ்சலாய் கேட்க...
சேவன் : பொருத்தருள வேண்டுகிறேன் தங்கையே... யான் உம் மூவருக்கும் ஒரு தமையன் ஸ்தானத்தில் உள்ளவன்.. உம் மூவருக்கும் இரட்சகன்களின் விழிப்பை பற்றி அறிவித்திடவே இவ்விடம் வந்துள்ளேன்.. தாம் தங்கள் மணாளனை தாமாகவே தான் நினைவு கொனர வேண்டும்.. அவ்வாறெனிலே தமது சக்திகளும் உயிர்த்தெழும்..
ஆம்.. நமது யட்சினிகள் மூவருக்கும் அவர்களின் கடந்த காலத்தில் நிகழ்ந்த எந்த ஒரு நிகழ்வும் நினைவில் இல்லை.. சிறு வயது நினைவுகள் சிலது மட்டுமே தப்பித்திருந்தது.. இவர்கள் இவ்வளவையும் கற்று கொண்டது இந்த இரண்டு வருடத்தில் தான்... வளரி பாட்டியின் வாயிலாக இவர்கள் யார் ஏன் இங்கு கடத்தி வர பட்டிருக்கின்றனர் என்பதை அறிந்து கொண்டனர்...
இம்மூவரிலுமே நித்யா மாத்திரமே அவளின் மணாளனது நாமம் ஆரித் என நினைவு பெற்றிருக்கிறாள்.. வளரி பாட்டியின் சொல் படி அவர்களின் மணாளன்களான இரட்சகன்களே இவர்களை காத்தருள வருவர் என நம்பி வருகின்றனர்.. இவர்கள் கண் மூடி தனமாய் இதை நம்புவதற்கு காரணமும் " தங்களது வாழ்வில் தங்களின் மணாளன்களை தாங்கள் முன்பே சந்தித்திருப்பீர்கள் " என்ற வளரி பாட்டியின் உறுதி சொல் தான்....
ஆருண்யா : மெய்யாகவே தான் கூறுகிறீரா.. இரட்சகன்கள் விழிப்பு ஈடேறி விட்டதா...
சேவன் : ஆம் தங்கையே.. இரட்சகன்கள் விரைவிலே உம் மூவரையும் மீட்க சர்ப்பலோகம் வர உள்ளனர்.. நீர் எண்ணுவதை போலவே அந்த விஸ்வரூப பௌர்ணமி தினம் பிறந்ததற்கு காரணம் இரட்சகன்களே தான்...
நித்யா : ஆயினும்
சேவன் : இன்னுயிர் நீங்கினாலும் மறவாதிருப்பேன் தம் காதலை என உறுதிபூண்டுள்ள உமது ஆரித்தும் இங்கு வரவிருக்கிறார் தங்கையே.. என கூறவும் நித்யாவின் மனதில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் ஒருசேர பறந்தது..
இச்சொல்லை வாழ்வில் கேட்டு விட மாட்டாளா என்றே இரு ஆண்டுகளாய் அவள் வாழ்வை கடத்துகிறாள்.. அப்படி இருக்க இதை செவி சாய்த்த பின் தனிச்சையாகாவே விழிகள் கண்ணீர் குளமானது... ஆனந்த கண்ணீருடன் அமர்ந்திருந்த தமக்கையை கண்டு சகோதரிகள் இருவரும் மகிழ்ந்தனர்...
நித்யா : உ..உண்மையாகவா .. என்.. என் ஆரித் எம்மை நாடி இங்கு வர உள்ளாரா...
சேவன் : ஆமம்மா... என கூறியவன் மனதினுள்ளே " பொருத்தருளும் தங்கையே.. இரட்சகனாய் வருகிறார் என்பதையும் தாண்டி உமது மணாளன் ஆரித்தாய் வருகிறார் என்பது உம்மை எந்தளவு மகிழ்வித்ததோ அந்தளவு வருந்தவும் வைக்கவும்.. ஏனெனில் உமது ஆரித் இங்கு உம்மை நாடி வரவில்லையம்மா " என மன்னிப்பு கூறி கொண்டான்...
அதித்தி : மிக்க நன்றி தமையரே... வாழ்வில் உம்மை என்றும் மறவ இயலாது.. தாம் கூறிய சொற்கள் அவ்வளவு வலிமை மிக்கது... என்றும் உமது உதவியை மறவாதிருப்போம்.. மிக்க நன்றி.. என கண்ணீருடன் கை கூப்பினாள்...
சேவன் : நன்றி கூர அவசியமன்று தங்கையே.. தாம் மகிழ்ந்தால் எமக்கு அதுவே போதுமானது.. என் பணி முடிவு பெற்று விட்டது... மீண்டும் தேவை ஏற்படில் உம் முன்று தோற்றமளிப்பேன்... அது வரை ஜாக்கிரதையாய் இருங்கள்... அனைத்தும் நன்மைக்கே... என்றவன் அவர்களிடம் விடை பெற்று அந்த ஜன்னலருகில் வந்து நின்றான்...
மயூரன் கூறியதை போலவே அங்கு வந்து சேவனை அழைத்து சென்றான்...
மயூரன் : என்ன சேவா பணி முடிந்ததா...
சேவன் : முடிந்தது மயூரா.. உம் சகாயத்திற்கு எவ்வாறு நன்றி கூறுவதென தெரியவில்லை...
மயூரன் : இதிலொன்றுமே இல்லை சேவா..
சேவன் : ஹ்ம் சரி மயூரா.. நம் யட்சினிகள் மாத்திரமல்லாது வேறு சில பெண்களையும் இங்கு அடைத்து வைத்துள்ளதாய் கூறினாயே யாரந்த பெண்கள்... எத்துனை வருடமாய் இங்கு அடைப்பட்டிருக்கின்றனர்...
மயூரன் : அதை எவ்வாறு கூறுவேன் சேவா.. அப்பெண்கள் அவர்களின் பிறப்பின் முதலே இங்கு தான் அடைப்பட்டு கிடக்கின்றனர்...
சேவன் : பிறப்பின் முதலேவா... ஏன் அவர்களை பலியிட காத்திருக்கின்றனரா...
மயூரன் : அவ்வாறொன்றும் தெரியவில்லை சேவா.. அப்பெண்கள் நினைவு தெரிந்தது முதலே இங்கு பணிப்பெண்களாய் பணி புரிகின்றனர்.. அதோ அங்கு இருக்கிறார்கள் பாரேன்.. என கூறி கொண்டே வந்தவன் ஒரு திசையை காட்ட... அந்த திசையில் நடு ஜாமம் என்றும் பாராமல் நிலவை உருத்து நோக்கி கொண்டிருந்த அந்த மூன்று பணிப்பெண்களை ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் பார்த்த சேவனின் அதரங்கள் அதிர்ச்சியுடன் " இளவரசிகள் " என உச்சிரிக்க அடுத்த நொடி " மயூரா நில்... " என சேவன் கத்த அதை சரியாய் கவனிக்கும் முன்பே மயூரன் அந்த மதிலை தாண்டி வெளியேறியிருந்தான்..
விடியற்காலை பொழுதின் சூரியனே நிலமகளை விடுத்து எழுவதற்கு முன் ஒரு பச்சை மண்ணை கூட்டி கொண்டு மண் தரையில் ஓடி கொண்டிருந்தனர் நமது இரட்டை நாணயங்களான ரவி மற்றும் ரனீஷ்
ரக்ஷவும் அவர்களுடன் கற்று கொள்ள வேண்டிய ஆவலில் வந்திருந்தவன் அரை மணி நேரமாய் ஓடி ஓடி அலுத்து போய் ஒரு மரத்தினருகில் நின்று விட்டான்...
தாங்கள் ஒன்றும் அந்தளவிற்கு வேகமாகவெல்லாம் ஓடவில்லையே என்றவாறு திரும்பி பார்த்த ரவியும் ரனீஷும் புன்னகையுடன் அவன் அருகில் வந்தனர்...
ரவி : டேய் பையா என்ன டா இப்போ தான் நம்ம ட்ரெய்னிங்கே ஆரம்பிச்சிருக்கு.. அதுக்குள்ள உக்காந்துட்ட...
ரக்ஷவ் : தோ பாரு குருவே.. வாய்ல வர்ரதெல்லாம் கொட்டீடுவேன் ஆமா.. அரமணி நேரமா ஓடி ஓடி நா என்ன மரத்தான்லையா கலந்துக்க போறேன்...
ரனீஷ் : ஏன் டா டெய்லி இப்டி ஓடுனா மஸ்ஸில்ஸ் ஸ்ட்ரென்த்தா இருக்கும் டா..
ரக்ஷவ் : ம்க்கும் டெய்லி ஓடுனா நா இப்போ இருக்குரத விட மெலிஞ்சு அடையாளமே தெரியாம தான் என் வீட்டுக்கே போவேன்...
ரவி : அதுக்குன்னு உன்ன டெய்லி சும்மாலாம் விட முடியாது.. இந்த நேரத்துக்கு எப்பவுமே ஒரு காமனி நேரமாவது நீ ஓடனும்...
ரக்ஷவ் : சரி ஓடுறேன் குருவே.. மத்த குருக்கள் மட்டும் சும்மா தூங்கிகிட்டு இருக்காங்க...
ரனீஷ் : சொல்லுவ டா.. இப்போ தான முதல் நாள் ஆரம்பிச்சிர்க்கோம் போக போக தெரியும்... அவனுங்க என்ன செய்றானுங்கன்னு... சரி வா.. என அவனை எழுப்பி ஒரு மரத்தின் அருகில் அழைத்து சென்றனர்...
அதன் இறுதி கிளை ரக்ஷவின் தலைக்கு ஒரு ஐந்து அடி மேல் தான் இருந்தது.. அதை அன்னாந்து ரக்ஷவ் பார்க்கும் பொழுதே மற்ற இவருவரும் அதை பிடித்து தொங்கி புல்லப்ஸ் எடுக்க தொடங்க ரக்ஷவ் வாயை பிளந்து அவர்களை பார்த்தான்...
ரக்ஷவ் : யோவ் குருவே... என்ன நீங்க மட்டும் பன்றீங்க..
ரனீஷ் : உன்ன யாரு டா பன்ன வேணாம்னு சொன்னது வா...
ரக்ஷவ் : நா எப்டி வருவேன்.. ரொம்ப ஹைட்ல இருக்கே...
ரனீஷ் : இரு வரோம்.. என இருவரும் ஒரே நேரத்தில் அவன் இரு பக்கத்திலும் குதிக்க.. அவர்கள் எழும் முன்னே ரனீஷ் ரக்ஷவின் வலது காலையும் ரவி ரக்ஷவின் இடது காலையும் பிடித்து மேலே தூக்கினர்...
முதலில் தடுமாறிய ரக்ஷவ் பின் தன் இரு கைகளால் கிளையை பிடித்து தன் விரிந்த கண்களுடன் கீழே பார்த்தான்...
ரக்ஷவ் : அண்ணா... என இவன் மெதுவாய் அலர...
ரவி : குட் ஜாப் டா பையா... நாங்க விடுறோம் நி புல் அப் எடு...
ரக்ஷவ் : மாட்டேன் மாட்டேன் என உயரத்தை கண்டு பதற...
ரவி : சரி நாங்க விடல நீ செய்.. என இவர்களும் அவன் எம்ப எம்ப கீழ் குனிந்து எழுந்தனர்... பத்து எண்ணிக்கை வர மெதுவாய் செய்து கொண்டிருந்த ரக்ஷவ் போக போக வெகமெடுத்தான்... அதில் அவன் குருக்கள் அவன் காலை பிடிக்கவில்லை என்பதையும் மறந்திருந்தான்..
இப்படியே செய்து கொண்டிருந்தவன் நூறு எண்ணிக்கை முடியவும் முகம் கொள்ளா புன்னகையுடன் கீழே குதித்து ரவி ரனீஷுடன் ஹைஃபை போட்டு கொண்டான்...
ரவி : உனக்கு ட்ரெய்னிங் சண்ட போடுறதுல மட்டும் தான் டா பையா குடுக்கனும்... வொர்க் அவ்ட்லாம் சாதாரணமா பன்னாலே நீ டக்குன்னு பிடிச்சிப்ப.. சோ வா நம்ம கோட்டைக்கே போகலாம்...
ரக்ஷவ் : சூப்பர் சூப்பர் அப்போ இப்போ என்ன பன்ன போறோம்...
ரனீஷ் : வெப்பன்ஸ் வச்சு சண்ட போட பயிற்சி எடுக்க போறோம்..
ரக்ஷவ் : அடசூப்பர்... வாங்க வாங்க போகலாம்.. என முன்னே ஓடினான்...
இவர்கள் பத்தடி நடந்ததும் திடீரென கேட்டது சேவனின் " சஹாத்திய சூரர்களே ... சஹாத்திய சூரர்களே " என்ற அழைப்பு...
ரவியும் ரனீஷும் சமைந்து நிற்க.. ரக்ஷவ் இவ்விருவரும் தன்னை பின் தொடராதததை கண்டு திரும்பி பார்த்தான்...
ரக்ஷவ் : என்னாச்சு குருவே...
ரவி : மச்சான் சேவன் குரல் தான அது...
ரனீஷ் : ஆமா டா... அப்டி தா தெரியிது...
ரக்ஷவ் : ஹலோ குருக்களே.. எனக்கு பதில் சொல்லாம என்ன நீங்களே பேசிக்கிட்டு இருக்கீங்க.... என இவர்கள் அருகில் வர.. அவர்களின் முகத்தில் தெரிந்த தீவிரம் இவன் முகத்திலும் ஒட்டி கொண்டது...
சேவன் : சஹாத்திய சூரர்களே.. இங்கிருக்கிறேன்.. என மூச்சு வாங்க வந்த குரலின் திசையிலே இவர்கள் திரும்ப.. ஒரு மரத்தின் கிளையில் நின்று கொண்டு மரத்தில் சாய்ந்து நின்றான் சேவன்...
ரவி ரனீஷ் : சேவன் என இவர்கள் அவனருகில் ஓட...
ரக்ஷவ் : செவனா... என இவனும் அவர்கள் பின் சென்றான்...
சேவன் : சஹாத்திய சூரர்களே ஆபத்து.. சஹாத்திய சூரர்களே ஆபத்து.. என இவன் கீழே குதிக்க.. அவன் கீழே விழும் முன் சரியாய் ரனீஷ் அவன் கரத்தில் தாங்கியிருந்தான்...
ரனீஷ் : சேவா ஜாக்கிரதை.. எவ்வித ஆபத்தாயினும் நீர் உமது நிலையை இழக்க கூடாது என எச்சரிக்கையாய் கூறினான்...
சேவன் : எமது பாதுகாப்பிற்கு தற்போது எந்த ஒரு அவசியமும் இல்லை சஹாத்திய சூரரே.. பெரும் ஆபத்து நேர உள்ளது..
ரவி : எவ்வித ஆபத்தாயினும் சரி எங்களுக்கு உனது பாதுகாப்பு தான் முதன்மையானது... என கூறவும் இந்நிலையிலும் இவர்கள் வைத்திருக்கும் தன் மீதான அன்பை எண்ணி சேவன் வியக்க மறக்கவில்லை...
சேவன் : சரி சஹாத்திய சூரர்களே இனி எமது பாதுகாப்பை உறுதி செய்தே களத்தில் இறங்குவேன்..
ரக்ஷவ் : சரி மிஸ்டர் சேவன்.. தாங்கள் வந்ததன் நோக்கத்தை சொல்லுங்கள்... என இது வரை நமது நாயகன்களுடன் இருந்ததால் அறிந்து கொண்ட பாகுபலி தமிழை உபயோகித்தான்...
சேவன் : நல்லவேளையாக உதவியதற்கு நன்றி கல்கி வீரனே.. சஹாத்திய சூரர்களே ஒரு ஆபத்து... என மீண்டும் முதலில் இருந்து வந்தான்...
ரக்ஷவ் : கல்கி வீரனா.. என முதலில் முளித்தவன் பிறகு இதை பார்த்து கொள்ளலாம் என விட்டு விட்டு சேவனின் கூற்றை கவனித்து ரவி ரனீஷுடன் பேரதிர்ச்சியுற்றான்...
மாயம் தொடரும்...
ஹாய் இதயங்களே... நாளைக்கு யூடி வர கொஞ்சம் லேட்டாகும்.. ஐ மீன் மூணு மணிக்கே குடுக்க முடியுமான்னு தெரியல... அஞ்சு மணிக்குள்ள குடுத்துடுறேன்.. கவலப்படாதீங்க.. இனிமே கதை ஸ்லோவாகாது... டக்கு டக்குன்னு நாம போக போறோம்.. சோ கவனமா படிங்க.. இந்த யூடில க்லஷ் வச்சிருக்கனும் பட் வைக்கல.. அடுத்ததுல வைக்கிறேன்.. இன்ஷா அல்லாஹ்.. குட் நைட் இதயங்களே... நல்லா தூங்குங்க... டாட்டா
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro