நன்றியுரை
ஹாய் இதயங்களே... ஒரு வழியா மாயம் கதைய ஆறு மாசம் களிச்சு முடிச்சிட்டேன்னு நினைக்கிறேன்... எனக்கு இவ்வளவு நாளும் தொடர்ந்து ஆதரவ தந்த எல்லாருக்கும் என்னோட பெரிய நன்றிகள்.. கிட்டத்தட்ட ரொம்ப சந்தோஷமா இருக்கேன்... கடைசி அத்யாயம் நீங்க எதிர்பார்க்காத அளவு இல்லன்னு நெனச்சீங்கன்னா மன்னிச்சிடுங்க... என் முயற்சிய நா குடுத்துர்க்கேன்...
மாயம் கதை உண்மையாவே நா ப்லன் பன்னும் போது ஈசியா தான் இருந்தது பட் எழுதும் போது ரொம்ப டைமெடுத்துது... நிறைய யோசிக்க வேண்டி இருந்துச்சு.. நா எழுதுனது வீணா போச்சா இல்ல நல்லா தான் இருந்துச்சான்னு நீங்க தான் சொல்லனும்... ஒவ்வொரு அத்யாயமும் நா உங்க ஒவ்வொருத்தரோட கருத்தையும் எதிர்பார்த்து எழுதுனது...
எல்லாமே... என் கனவு.. கோவன்கள் இறந்துட்டாங்கன்னு இரண்டாம் அத்யாயத்துல சொன்னதுல இருந்து 74 ஆவது அத்யாயம் வரையும் கோவன்கள் திரும்ப வருவாங்கன்னு எனக்கு தெரியும்...அவங்கள கொன்னுட்டு நா எப்டி இருப்பேன் சொல்லுங்க... உங்கள சமாளிக்கத் தான் நா ஏதேதோ உளறிக்கிட்டு கெடந்தேன்... பட் எல்லாருக்கும் அவங்க கம்பக் புடிச்சிருந்ததே எனக்கு சந்தோஷம் தான்...
ரக்ஷவோட கரெக்ட்டர் நா உருவாக்குனதில்ல.. பட் ரக்ஷவில்லாம இந்த கதை இப்டி முடிஞ்சிருக்காது... நா மட்டும் ரக்ஷவ் பர்த் டே க்கு இங்க கூட்டீட்டு வரேன்னு சொல்லாம இருந்துர்ந்தா மாயம் கதை எந்த ட்ரக்ல போய்ர்க்குமோ தெரியல...
எனக்கு நிறைய சொல்லனும்னு தோனுது... ஆனா வார்த்தைகளே கிடைக்க மாட்டுது... மனசு நிறைஞ்சு போயிருக்கு... பயமாவும் இருக்கு... இறுதி அத்யாயம் புடிக்கலன்னா நா என்ன செய்வேன்...
ஹ்ம் நம்ம நாயகர்கள நா ரொம்ப மிஸ் பன்னுவேன்... இவங்க கூட இருந்த மாரி நா என் வாழ்கைல சந்தோஷமா இருந்ததே இல்லங்குரது தான் உண்மை...
கதை இன்க்கம்ப்லீட்டடா தெரியலாம்... பட் இதான் கதையே.. அவங்க அந்த போர்ல ஜெயிக்கனும்.. அதான்... பட் எப்பிலாக் இருக்கு... ஆனா லேட்டாகும்... ஏன்னா....
இத சொல்ல எனக்கே கஷ்ட்டமா தான் இருக்கு... எனக்கு மட்டும் ஏன் இப்டி நடக்குதுன்னே தெரியல... வர 28த் எனக்கு ஹாஃப் இயர்லி எக்ஸாமாம்.. நம்ப முடியலல்ல... போன மாசம் அதாவது நுப்து நாள் முன்னாடி தான் க்வர்ட்டலி எக்ஸம் எழுதுனேன்.. அதுக்குள்ள இப்போ ஹாஃப் இயர்லி...
ஆனா எனக்கு ரொம்ப கஷ்ட்டமா இருக்கு இதயங்களே... கதை கதைன்னு சொல்லி படிப்புல கோட்ட விட்டுட்டேனோன்னு தோனுது... ஒன்னுமே புரியல.. நா எக்ஸம் எழுதுனேன்... ஆனா அதுல வந்த மார்க்ஸ்...
அதெல்லாம் இப்போ வேணாம் விடுங்க... நா என் முயற்சிய குடுக்குறேன்... நாளைளேந்து தேடல் கதை பதிவிடப்படும்.. அதையும் முடிக்கனும் இல்லையா... சொல்ல நினைச்சதெலாம் சொன்னனான்னு கூட தெரியல... இப்போ என்னல யோசிக்கவும் முடியல... திரும்ப நியாபகம் வரும் போது நா கண்டிப்பா சொல்றேன்...
அப்ரம் உங்களுக்கு ஒரே ஒரு ரெக்வஸ்ட் தான்... கதைய பத்தின உங்க கருத்த தயவு செஞ்சு சொல்லுங்க... நா இவ்ளோ கஷ்டப்பட்டது அப்ரம் இல்லாமையே போய்டும்... என்ன திருப்தி படுத்துர ஒரே விஷயம் உங்க கமென்ட்ஸ் தான்... தோன்றது கீங்க உணர்ந்தது... கதை போன போக்கு.. நா எதாவது சொதப்பீருந்தா... நல்லா எழுதலன்னா... எதுவா இருந்தாலும் சொல்லுங்க... எதிர்பாத்துட்டே இருப்பேன்... அது தானே எனக்கு மருந்து
மீண்டும் உங்களை தேடல் கதையில் சந்திக்கிறேன் இதயங்களே டாட்டா
அன்புடன்
தீராதீ❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro