😘 சக்கர 8 😘
....இந்த மீட்டிங் வருடத்திற்க்கு இரு முறை மட்டுமே நடத்தப்படும்....
இந்தியாவில் வளர்ந்து வரும் கம்பெனிகளில் நன்றாக செயல்படும் பல நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.... (ஆனா நம்ப கம்பெனிதா லாஸ்ல போது அப்போ எப்டினு தானே யோசிக்குறீங்க வாங்க பாக்கலாம்...... )
இந்த நிறுவனங்களுக்கே சந்திப்பை ஏற்பாடு செய்தது ஒரு பெரிய MNC கம்பெனி ...
அங்கே எந்த நிறுவனத்திற்கு அதிகமாக ஆதரவு இருக்கிறதோ அந்த நிறுவனத்திற்க்கு அழைப்பு விடுக்கப்படும்.....
அங்குதான் அஞ்சலி கார்த்தி கம்பெனிக்கு ஆதரவாக பேசி அவர்கள் இந்த சந்திப்பில் கலந்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பினாள்......
அஞ்சலி ...... அந்த MNC நிறுவனத்தின் முதல்வர் Mr.சக்திவேல் அவர்களின் ஒரே மகள் ......
அஞ்சலி சிறு வயதிலிருந்தே தன் தாத்தா பாட்டியிடம் நான் வளர்ந்தாள் .........
தன் தந்தையின் வற்புறுத்தலால் அவர்களின் நிறுவனத்திலே தனக்கு பக்கமாக இருக்கும் (தவின் வேலை செய்யும் கம்பெனிக்கு அருகில் இருக்கும்) ஒன்றை தேர்வு செய்து பார்த்துக்கொள்கிறாள்
தவினை சந்தித்தது முதல் அவனை பயித்தியமாக காதலிக்கிறாள்...
(என்ன சந்திப்பு அப்டி பாக்கலாம் நம்ப அஞ்சலி வாய்ல இருந்தே வர வைக்கலாம்....)
ஆனால் இதை பற்றி தவினிற்க்கு ஒன்றுமே தெரியாது...
சொல்ல போனால் அப்படி ஒருத்தி இருப்பதே தெரியாது....
அவர்களின் கம்பெனிக்கு அடிக்கடி ஏதாவதொரு ஆர்டர் அனுப்புவாள்...
தவின் மற்றும் கார்த்தி பற்றி அனைத்து விவரங்களையும் முறையாக ஆட்களை வைத்து அறிந்துக்கொண்டாள்...
இந்த மீட்டிங் மூலமாக கூட அவள் அவளை அறிமுகபடித்திக்கொள்ள விரும்பவில்லை....
(ஆனால் நடக்க இருப்பவை யாராலும் அறிய முடியாதல்லவா... )
கார்த்தியை வீட்டிலிருந்து கிளப்புவதற்க்குள் தேவாவும் தவினும் ஒரு வழியாகிவிட்டனர்...
அவளின் ஒரு துணியையும் எடுத்துக்கொண்டான்...
தங்கள் கல்யாண ஆல்பத்தினையும் கையோடு எடுத்துக்கொண்டான்....
அவளின் அந்த வாசனை திரவியம்....
என அனைத்தையும் எடுத்துக் கொண்டான்...
தேவா பாத்து டீ...
போன் பண்ணிட்டே இரு பத்திரமா இரு...
ஒழுங்கா நேரத்துக்கு சாப்டு...
ரொம்ப வேல எல்ல செய்ய வேனா சரியா...
Miss u di மல்கோவா
என்று அவன் வர வேண்டும் என்று தடுத்தும் அழையா விருந்தாளியானவன் கண்களையும் மீறி வெளியே வந்தான் - கண்ணீர்....
அவனை சமாதானப்படுத்தி தன் இதழை அவனிடத்தில் சிறிது நேரம் கொடுத்திருந்தாள்...
கார்த்தியை சற்று நிதானபடுத்தவே தேவா மிகவும் சிரமப்பட்டாள்....
ஒரு வழியாக கார்த்தியை சமாதானம் செய்து தவினுடன் டில்லிக்கு கிளம்பினர்....
அவன் துனைவியை விட்டு இந்த நான்கு நாட்கள் செல்லவே இந்த குதி குதிக்கிறான் அவளை விட்டு ஒரு வருடம் எப்படி தனியாக இருப்பான்....
பார்க்கலாம் காலம் இவர்கள் வாழ்வில் என்ன கோலம் போட காத்திருக்கிறதென்று...
ஒரு வழியாக டெல்லியை அடைந்து விட்டார்கள் அதற்க்கு இடையில் மட்டும் பதினைந்து முறை அவளுக்கு அழைத்து விட்டான்....
தன் கணவனின் ஒவ்வொரு அழைப்பையும் எந்த ஒரு சலனமும் இல்லாமல் ஏற்று பதிலளித்தாள்...
இன்னும் ஒவ்வொரு நொடிக்கும் அவன் அழைபிற்காக காத்திருக்க தொடங்கிவிட்டாள்.
(நம் மனதிற்க்கு பிடித்தவரின் அழைப்பிற்க்கு காத்திருப்பதே ஒரு தனி சுகம்...
அதுவும் தன் மனதை திருடி போன அந்த கல்வனின் குரலை கேட்டாள் தானே அனுவும் அசையும் )
டெல்லியில் இவர்களுக்கு தேவையான அனைத்தும் அவர்கள் கூடவே ஒரு நபரை அமைத்து பார்த்துக்கொண்டாள் அஞ்சலி....
அங்கேயும் அவர்களின் ஒவ்வொரு செயலையும் அவள் அறிந்துக்கொண்டாள்...
அவர்கள் அறைக்கு பக்கதிலே தன் அறையையும் போடுமாறி கூறினாள்....
(கப்பல் போல வீடு இருந்தும் காதல் படுத்தும் பாட்டினால் இன்று அவன் பின்னால் சுற்றுகிறாள்.....)
மீட்டிங்கிற்காக அனைவரும் அவரவர் இடத்தில் அமர்ந்திருந்தனர்...
அஞ்சலி மட்டும் தவினிற்க்கு தெரியாமல் அவனை ரசித்துக்கொண்டிருந்தாள்.....
தன்னை யாரோ பார்ப்பதை போல் உணர்ந்தாலும் அவன் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை...
ஆனால் அவன் கண்களிலே அவன் நினைப்பதை அறிந்துக்கொண்டாள் அஞ்சலி...
அப்படியே இந்த நான்கு நாட்களும் ஓடியது....
தேவா அங்கு தன் துனையானவன் இல்லாமல் அவன் நினைவுகளில் மூழ்க முயற்சித்துக்கொண்டிருந்தாள்...
பகலில் அவர்கள் அலுவலகம் சென்று வந்தாள்....
இரவில் அவனுடனான பேச்சு மட்டுமே அவளுக்கு ஆறுதலாக இருந்தது...
அவர்கள் சென்று இரண்டு நாட்களுக்கு கடந்து விட்டது......... அவர்களின் கல்யாண ஆல்பத்தை பார்த்து கொண்டு அவனின் சிறு சிறு அசைவுகளும் ரசித்து ரசித்து பார்த்துக்கொண்டிருந்தாள்....
தேவா : இந்த கல்யாணம் நடக்குறப்போ எனக்கு உன் மேல அவ்ளவா ஒரு ஃபீலிங்ஸே இல்லாத மாறி இருக்கும் டா மாமா....
கடமைக்கேனு கழுத்த நீட்டுன ஆனா இப்போ நீ இல்லாம என்னால இருக்கவே முடியாதுன்ற நிலமைக்கே வந்துட்ட....
எப்டி டா என்ன மாத்துன பக்கி....
எப்டியாச்சும் உன்கூட சேந்து ரொம்ப வருசம் வரைக்கும் இருக்கனும் டா....
நம்ப குழந்தைங்கள எந்த குறையும் இல்லாம வளக்கனும்....
என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டு அவன் நினைவுகளோடு உறங்கி போனாள்....
.... கடைசி நாள் இரவும் வந்தது...
இந்த நான்கு நாட்களும் தங்களுடனே இருந்து பார்த்துக்கொண்ட அந்த நபர் இந்த கடைசி நாள் காணவில்லை....
தவின் அவரை நன்றாக ஆராய்ந்து வைத்திருந்தான்...
அவர் யாரிடமோ தங்களை பற்றி கூறியது முதற்கொண்டு...
ஆனால் அவன் கூறியது அஞ்சலியிடம் தான் என்று மட்டும் தெரியாது ....
கார்த்திக்கு இது எதுவுமே பதியவில்லை.... இவ்வாறு இருவரும் தங்கள் அறையில் இருக்க ..
அவர்களுக்கு இரவு உணவு கொடுக்கப்பட்டது ......
போதை பொருட்கள் கலக்கப்பட்டிருந்தது .
(இந்த வேலையை பார்த்தது... update 6 ல சொன்னேனே அந்த நெகடிவ் கேரக்டர்.....)
அவங்க யாரு எதுக்கு இப்படியெல்லாம் பண்றாங்க பாக்கலாம் அடுத்தடுத்து பகுதிகளில்.....
.................................................................
ஏதாவது குறைகள் இருந்தால் தெரிய படுத்துங்கள் மற்றும் புரியவில்லை என்றாலும் கேளுங்கள் என் வாட்பேட் உறவுகளே....
Ethachum thitnunakuda thittirunga unga comments ah sollunga and support panra elarukum romba nandri 😊😊😊😊😊
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro