😘 சக்கர - 21 😘
மூன்று வருடங்களுக்கு பிறகு .....
சக்தி வெட்ஸ் நிருபமா ....
என்ற பிளக்ஸ் அந்த மண்டபத்தின் வாயிலில் வைக்கப்பட்டிருந்தது ....
வருகின்றவர்களை வரவேற்க்கும் விதமாக தேவாவும் ரேவதியும் வாசலில் நின்று கொண்டிருந்தனர் ...
இன்னும் சிறிது நேரத்தில் சக்தி நிருபமா கழுத்தில் தாலி கட்ட காத்துக்கொண்டிருந்தான் ....
கார்த்தி அந்த அறையில் தன் இரண்டு வயது செல்ல மகள் செய்யும் அலப்பறைகளை ரசித்துக் கொண்டிருந்தான் ....
தன் மழழை மொழியில் மிக அழகாக பேசிக்கொண்டிருந்தாள் .
வர்ஷினி ...
அந்த சண்டைக்கு அப்றம் ஒரு வழியா எல்லாமே சமாதானம் ஆயாச்சுங்க ....
நம்ப கார்த்தி தேவாவோட எல்லா சந்தோஷத்துலயும் முக்கியமா ஒரு இடத்த பிடிச்சுடான் ...
அதுக்கு அப்றம் அவங்க லைஃப் ரொம்ப நல்லா போச்சு ...
அப்போ தான் தேவா மாசமா இருக்க விஷயம் தெரியுது ...
தேவா : மாமா..
கார்த்தி : சொல்லுடா சக்கர..
என்ன மேடம் முகமே ஒரே பிரகாசமா இருக்க மாறி இருக்கே ...
உன் அழகின் ரகசியம் என்ன டா மல்கோவா ...
(அவள் இடையை வளைத்தவாரு கேட்க ... )
தேவா : அது வந்து...
(என்று அவன் கைகளை அவள் வயிற்றில் மேல் வைத்து அர்த்த பார்வை ஒன்றை பார்த்தாள் ... )
கார்த்தி : ஹே மல்கோவா...
நெஜமாவா டா ....
(அவளை இருக்க அனைத்துக்கொண்டான் .. )
எப்போ கன்பார்ம் பண்ண டாக்டர் கிட்ட நாளைக்கு போலாம்ல .....
தேவா : நாளைக்கு தான் போனும் போலாம் மாமா .....
மாமா உனக்கு எந்த பேபி வேனும் ....
கார்த்தி : எனக்கு எந்த பேபினாலும் ஓகே தான் டா ...
ஆனாலும் குட்டி தேவா தான் வருவானு தோனுது ...
தேவா : ஹாஹா....
என்ன பேர் வெக்கலாம் ...
கார்த்தி : பொண்ணு பொறந்த வர்ஷினி...
பையன் னா ... ஹரிஷ் ..
(தேவா அவன் வயிற்றின் மீது படுத்துக்கொண்டு வசதியாக காலை நீட்டிக்கொண்டாள் ... )
கார்த்தியின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றிய தன் ஆசை மனைவிக்கு அவள் கற்பமடைந்த நாளில் இருந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதமும் அவளுக்கு தனி கவனிப்புதான் ..
முதல் மாதத்தில் இருந்து மாதம் மாதம் ஒரு பரிசு நிறைய திடீர் ஆனந்த அதிர்ச்சி என அவளை மகிழ்ச்சி கடலில் தத்தளிக்க விட்டான் ...
அவளுக்கு ஐந்தாவது மாதம் நடக்கும் போது ..
அந்த அறை முழுவதும் பலூன்கள் சுவர்கள் மீது சாக்லேட்கள் ஒட்டபட்டிருந்தது ..
நடுநடுவே கலர் பேப்பர் என அந்த அறை வண்ணமயமாய் காட்சியளித்தது ....
தரை முழுவதும் தெர்மாகோலில் இருக்கும் குட்டி குட்டி பஞ்சு கொட்டிகிடந்தது ....
அதன் நடுவில் ஒரு டேபிள் போடபட்டு அதன் மேல் அவளுக்கு பிடித்தமான கேக் (வெள்ளைக் காடு) வைக்கபட்டிருந்தது ....
கண்களை மூடியபடி தேவா அந்த அறைக்கு அழைத்து வந்தான் கார்த்தி ....
தேவா : மாமா எங்க கூட்டிட்டு போறீங்க ....
கார்த்தி : ஸ்ஸ்ஸ்...
பேச கூடாது ...பதறாம நடந்து வா மல்கோவா ....
அந்த அறையை பார்த்ததும் அவள் ஆனந்ததிற்க்கு எல்லையே இல்லை...
அவள் கற்பினி என்பதையும் மறந்து விளையாட தயாராக சரியாக அவள் மனதை படித்தவன் அவளை தடுத்தான் ....
தேவா : ஏய் மாமா .. சோ ஸ்வீட் ....எப்போ இதெல்லாம் ரெடி பண்ண .....
எனக்கு புடிச்ச கேக் அதுவும்.
எல்லாம் எனக்காகவா ...
கார்த்தி : (அவள் ஆனத்த அதிர்ச்சியில் விரிந்த அந்த குண்டு குண்டு கண்கள் ....
சற்று புடைப்பாக இருந்த அவள் நாசி ...
அவள் மகிழ்ச்சியில் சிவந்த ரோஜா இதழ்களை போல் இருக்கும் அவள் செவ்விதழ் ...
என கண்களால் அவள் மேனியில் ஊர்வலம் நடத்தினான் ...)
புடிச்சுருக்கா .. ???
தேவா : புடிக்கல ....
கார்த்தி : என்ன ???
தேவா : இதெல்லாதையும் விட எனக்கு என் மாமாவதான் பிடிச்சிருக்கு ....
(என்று அவன் பார்வை வீச்சில் தப்பித்து கொள்ள அவன் மார்பிலே தஞ்சம் புகுந்தாள் ..... )
அந்த கேக்கை அவள் வெட்ட அவள் மீது வெள்ளை ரோஜா இதழ்கள் விழுந்தது அவள் சிரிப்பை பார்க்க கார்த்தியின் முயற்சி வெற்றிபெற்றது ....
இதே போல் அடுத்த மாதம் அவள் அளவிற்க்கு ஆள் உயர பெரிய டெடி பியர் பொம்மை ஒன்றை அவர்கள் அறையில் சேர்த்தான் ....
அடுத்த மாதம் அவள் பெற்றோரை சந்திக்க ஏற்பாடு செய்தான் ....
அடுத்து அந்த கார்டனில் இருந்த பூக்கள் பார்க்க வெள்ளை தாளில் கொட்டிய அழகிய பல வண்ணங்கள் கொண்ட ஓவியம் போலவே காட்சியளித்தது ...
அங்கு அழைந்து சென்றான் ....
இவை அத்தனைக்கும் மேல் மாதம் நெருங்க நெருங்க தேவாவிற்க்கு தினமும் சேலை கட்டி விட்டு அவள் கை கால் நகங்களை வெட்டி விட்டி அதற்க்கு தகுந்த நிறத்தை கொண்டு அழகுபடுத்துவது ....
அவனுக்கு தெரிந்ததை போல் மருதாணி வைத்து பார்ப்பது என்று அவளை அணு அணுவாக காதலித்தான் ....
குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் வயிற்றில் கைவைத்து உணர்ந்தனர் ... இருவருக்கும் ஒரு விதமாக சிலிர்ப்பை ஏற்படுத்தும் தருணமாய் அமைந்தது...
தாயின் இந்த மகிழ்ச்சியை மென்மேலும் அதிகரிக்க ஆரோக்கியமாக வளர்ந்தது அவர்களுடைய சேய் ....
ஒன்பது மாதத்தில் அவளுக்கு வளைகாப்பு நடத்தி கையிறைய வளையல் பூட்டி ...
சந்தனம் பூசி குங்குமமிட்ட அவள் முகத்தை பார்க்க மெய்சிலிர்த்து பூரித்துபோனான் தன்னவன் ...
10 மாத முடிவில் அன்று பிரசவ வலியும் வந்தது இந்த மகிழ்ச்சிக்கெல்லாம் திருஷ்டி வைப்பது போல அவள் அலறல் அந்த மருத்துவமனையையே தூக்கியது ...
இரண்டு நாட்கள் வலி மட்டுமே இருந்தது குழந்தை பிறக்கவில்லை ...
கார்த்தி அவள் அருகிலே அவள் கைகளு இருக பற்றிக்கொண்டு இருந்தான் ...
அவள் வலியால் துடிப்பதை பார்த்தி இவன் முழுவதுமாய் நொருங்கி விட்டான் ....
மூன்றாவது நாளாக தன் தந்தை சாயலை உரித்துவைத்தார் போல் அழகிய குட்டி தேவதை பிறந்தாள்......
அவளின் மறுஜென்மம் தான் ஒரு தாய் என்ற வார்த்தையால் விவரிக்க முடியாத ஒரு உறவை பெற்ற ஆனந்தம் தேவாவிற்க்கு ....
தன் ரத்தத்தில் உரிமை கொண்ட தன் பிள்ளையால் தந்தை என்ற அங்கீகாரம் பெற்ற உச்சகட்ட மகிழ்ச்சியில் இருந்தான் கார்த்தி ....
தன் குட்டி தேவதையுடன் தேவாவும் கார்த்தியும் ஒரு புது வாழ்க்கை பயணத்தை தொடர்ந்தனர்....
மண்டபத்தில் .....
அதற்க்கு அடுத்த அறையில் தவின் தன் 8 மாத கைக்குழந்தைக்கு உடை மாற்ற படாத பாடு பட்டுக்கொண்டிருந்தான் ....
அஞ்சலி : ஹோய்...
என்ன டார்லிங் பண்றீங்க ..
குழந்தைய ஏன் அழ வெக்குறீங்க ....
நா குளிச்சிட்டே வந்துட்டேன் இன்னுமா ஒரு டிரஸ் மாத்தல ....
தவின் : கை கால்ல சாஃப்ட் சாஃப்ட்டா இருக்கு டீ ...
எப்டி மாத்துறது ...
நா கைய வெச்சாலே வீரு வீருனு கத்துரான்டீ
அஞ்சலி : அடேய் மங்கூஸ் புருசா ..
நகரு நகரு ....
என்று தன் மகன் வதனனுக்கு வேக வேகமாக உடை மாற்றினாள் ...
டார்லிங் 8 மாசம் ஆச்சு இப்போ கொஞ்சம் நல்லாவே மாத்தலாம் ..
சீக்கிரமா கத்துக்கோடா மாமா ....
தவின் : உன்னோட பைய சரியான கேடி டீ...
நா தொட்டா எப்டி கத்துறான் பாரு நல்ல கெடுத்து வெச்சுருக்க ...
அஞ்சலி : இது நல்லா இருக்கே கத.....
(அவர்களின் குட்டி குட்டி சண்டைகள் தொடர ஒரு வழியாக தயாராகி வந்தனர் ... )
(3 வருசத்துக்கு முன்னாடி தவின் எப்டி அஞ்சலிக்கு ஓகே சொன்னான் பாக்கலாம் வாங்க ... )
தவின் : அஞ்சலி ....
அஞ்சலி : சரி தவின் உங்களுக்கு தேவையான எல்லா விஷயங்களையும் நான் சொல்லிட்டேன் ...
எனக்கு கொஞ்சம் ஆபிஸ்ல வேல இருக்கு கெலம்பலாமா ...
தவின் : அவ்ளோதானா ...
அப்போ நீ என்ன லவ் பண்ற அது இதுனு சொன்ன ...
அஞ்சலி : அட ஆமா ஒன்னு சொல்ல மறந்துட்டேன் ...
தவின் : என்னது ...
அஞ்சலி : நான் இன்னும் மூனு மாசத்துல அமெரிக்கா போறேன் ...
வரதுக்கு எப்டியும் ஒரு வருசம் ஆகும் ...
அப்றம் நான் உங்கள லவ் பண்றேன் ரொம்ப உங்கள பாத்ததுல இருந்து இப்போ வரைக்கும் ...
அதுக்காக எல்லாம் நீங்க என்ன கல்யாணம் பண்ணிக்கனும்னு நா சொல்ல வரல ...
நல்லா டைம் எடுத்து யோசிங்க ..
ஒன் இயர் டைம் இருக்கு அதுக்கு மேல நாலும் ஓகே தான் ....
இந்த கேப்ல என்மேல எதாச்சும் கொஞ்சமா பீலீங்ஸ் வந்தாலோ இல்லாட்டி என்ன மிஸ் பண்ணாலோ ஒடனே கால் பண்ணுங்க கல்யாணம் பண்ணிக்கலாம் ....
தவின் : என்ன டீ நீ பாட்டுக்கு பேசிட்டே போற ...
ஒரு வேல இந்த ஒன் இயர்ல நா வேற யாராயாச்சும் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டா என்ன பண்ணுவ ...
அஞ்சலி : அது உங்க இஷ்டம் இது உங்க லைஃப் ..
உங்க பெட்டர் ஆல்ஃப்ப செலெக்ட் பண்றதுக்கு உங்களுக்கு எல்லா ரைட்சும் இருக்கு ...
அதே மாறி தான் எனக்காக நீங்க இருக்கனும்னு நான் ஆச பட்றேன் அதுக்கான ஸ்பேசையும் உங்களுக்கு தரேன் நா திரும்பி வரதுக்குள்ள நல்ல முடிவா சொல்லுங்க ...
தவின் : உனக்காக நா எதுக்கு வெய்ட் பண்ணணனும் நீ கெலம்பின அடுத்த மாசமே நல்லா பிகரா பாத்து கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்றேன் டீ ...
இவளா லவ் பண்றனே சொல்வாளா நாம இவளுக்கு வெயிட் பண்ணணுமா ....
அஞ்சலி : ஹலோ...
உங்கள நா வெயிட் பண்ண சொல்லல ...
நா போனதுக்கு அப்றம் உன்னால முடிஞ்சா நீ வேற பொண்ண பாரு லவ் பண்ணு என்னவேனா பண்ணிக்கோ ....
(சிரித்தமுகத்துடன் ... )
போய்ட்டு வரேன் டா புருசா ..
நேரத்துக்கு சாப்ட்டு ஒடம்ப பாத்துக்கோ ...
டாட்டா ...
(அவன் கன்னத்தில் அழுத்த இதழ் பதித்தவள் சிட்டாய் பறந்துவிட்டாள் .... )
தவின் : லூசு லூசு...
மூஞ்சிய பாரு ....
ஏ நானெல்ல லவ் பண்ண மாட்டனா ...
இவதா என்னமோ பெரிய ரதி மாறி பேசுறா ...
( அவள் சென்ற அன்று இரவு கூட அவனால் அவளை நினைக்காமல் இருக்க முடியவில்லை ...)
தவின் : கிருக்கச்சி என்னமோ பண்ணிட்டு போய்ட்டா ...
நெஜமாவே ஊருக்கு போய்ட்டாலோ .....
அவளுக்கு போன் செய்தான்...
நாட் ரீச்சபிள் ....
.அவள் சென்ற ஒரு மாதத்ததில் தவின் வேறொருவனாகவே மாறியிருந்தான் ...
அவள் பெயரை கேட்டாலே இவன் திரும்பி பார்ப்பதும்...
என் போனிற்க்கு வரும் குறுந்தகவல்களை உடனுக்குடன் பார்ப்பதும் என்று அவள் நினைவுகள் முழுவதுமாய் அவனை வாட்டி எடுத்தது ....
அவளுடன் இருந்த சில தருணங்களையும் மனதில் ஓட்டி பார்த்துக்கொண்டே இருந்தான் ..
அவள் சென்று இன்றோடு ஆறு மாதம் கடந்திருந்தது ...
அதற்க்கு மேல் தாக்கு பிடிக்க முடியாதவனாய் அஞ்சலியின் வீட்டிற்க்கே சென்று விட்டான் ...
அவர்களிடம் எப்படி பேசுவது என்று பலவாரு தன்னை தயார்படுத்திக்கொண்டு ஒரு தயக்கத்துடன் அஞ்சலி வீட்டிற்கு சென்றான் ....
அவன் எதிர்பார்த்தது ஒரு ஆனால் அங்கு நடந்தது ஒன்று ...
அவனை வரவேற்று உபசரிப்பார்கள் என்று அவன் நினைக்கவில்லை ....
உள்ளே இருந்து அஞ்சலி வருவாள் என்றும் அவன் எதிர்பார்க்கவில்லை ....
அஞ்சலி : என்ன சார் யாரையும் லவ் பண்ணலயா ...
இன்னு கல்யாணம் பண்ணிலயா ...
இங்க என்ன பண்றீங்க ....
தவின் : ஓவரா ஓட்டாத டீ ...
நீ தா வசியம் பண்ணிட்ட ...
எங்க டீ போன ஆறு மாசமா ...
இம்ச...
போறவ எப்டியோ போய் தொலைய வேண்டியது தானே ...
பேசியே கவுத்துட்டா ...
அஞ்சலி : இப்போ என்ன வசியம் பண்ணிடாங்க ...
புடிச்சுருக்கா புடிகலையா நேரா சொல்லி..
(அவள் கேட்டு முடிப்பதற்க்குள் அவள் இதழை அடிமைபடுத்திவிட்டான்.... )
மங்கள இசை ஒலிக்க மஞ்சள் கலந்த அரிசி அனைவரின் நல்வாழ்த்துக்களாக மணமக்கள் மீது தூவ அனைவரின் ஆசியுடன் தவின் அஞ்சலியின் கழுத்தில் திரு மாங்கள்யத்தை
கட்டினான் ....
அவர்கள் இருவரின் காதல் பரிசாக தங்கள் மகனுக்கு வதனன் என்று பெயர் வைத்தனர் .....
.................................................................
Intha update laum story mudikkala pakkalam next update la kandippa mudunjurum 😊😊😊😊
Share ur votes and valuable comments 😊😊😊😊😊😊😊😊
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro