😘 சக்கர -15 😘
தேவா : இந்த இடத்த விட்டு வெளியேவும் போக முடியாது ...
எந்த நேரமும் அவ என்ன வேனா பண்ணுவா .....
ஐயோ இப்போ எப்டி அவர காப்பாத்துரது ....
(அவள் யோசனையின் உச்சத்தில் இருக்கும் போது அவளை அழைத்தான் அவன்)
சத்யா : என்ன சிஸ்டர் இங்க என்ன பண்றீங்க இங்ளோ யோசனையா ???....
இன்னிக்கு எப்டி திட்டலாம்னு யோசிக்கிறீங்களா ???
(என்ன தான் சத்யாவிற்க்கும் தேவாவிற்க்கும் ஒரே வயதாக இருந்தாலும் அவன் அவளை சிஸ்டர் என்றே அழைப்பான் ...
தேவாவிற்க்கு இங்கே ஒரே ஆறுதல் அவன் மட்டுமே .... )
தேவா : இல்ல சத்யா ....
அது வந்து...
எனக்கொரு உதவி பண்ண முடியுமா ??....
சத்யா : என்னது உதவியா ...
என் கிட்ட தான் கேக்கிறீங்களா ??
கனவா இருக்குமோ .....
தேவா : சத்யா செய்ய முடியுமா ?? ...
இல்லயா ???? .... இல்லனா நானே பாத்துக்கிறேன்....
சத்யா : ஐயோ கூல் சிஸ்டர் என்ன ஹெல்ப் சொல்லுங்க ...
தேவா : என்ன **** ஹாஸ்பிடல்க்கு கூட்டிட்டு போக முடியுமா ....
நம்ப பாஸ்க்கு தெரிஞ்சு தான் கூட்டிட்டு போனும் ....
என்ன அவரு அனுப்ப மாட்டாரு நீ தான் எடியாச்சும் கூட்டிட்டு போனும் ....
சத்யா : அவ்ளோதானே இங்கயே நில்லுங்க நா கூட்டிட்டு போறேன் ....
(அவன் அந்த அறையில் சென்று சரியாக பத்து நிமிடத்தில் அவன் வெளியே வர தேவாவை உள்ளே அழைத்தனர்)
அங்கு நிருபமா மற்றும் அவளுடன் இன்னொருவனும் அமர்ந்திருந்தான் ....
அவன் பார்வை முழுவதும் தேவாவின் மேலே பதிந்திருந்தது .....
நிருபமா : என்ன தேவா ....
இன்னுமா அவனயே நெனச்சுட்டு இருக்க ....
எப்போ என் பாட்னர கல்யாணம் பண்ணிக்க போற ...
தேவா : (மறந்தா தானே நெனைக்கிறதுக்கு ....
ஆனா நீ நினைக்கிறது மட்டும் எப்போமே நடக்காது ... அவள் மனத்தில் நினைத்துக்கொண்டாள்....)
நிருபமா : அது சரி ...
என்னோட சத்யா டார்லிங் உன்ன எங்கயோ கூட்டிட்டு போனுமாம ...
ஒழுக்கமா போய்ட்டு சீக்கிரமா திரும்பி வர ....
கார்த்தி இப்போ ஹாஸ்பிடல்ல இருக்கான்....
ஆமால்ல உன்னோட புருசன் அதான் கார்த்திகேயன் மாடில இருந்து விழுந்துடான்....
அது அவனா விழுகல யார் பண்ணிருப்பாங்கனு உனக்கு தெரியும்னு நினைக்கிறேன் ....
இன்னொரு தடவ யாருக்காச்சும் போன் பண்ணும்னோ இல்ல தப்பிக்கனும்னோ நெனச்சா இப்போ அவன் உயிரோட தான் இருக்கான் ....
எல்லா டைமும் இப்டியே தப்பிச்சிடுவானு நினைக்காத .....
இப்போ மணி 9.. மதியம் 2 மணிக்குள்ள கம்பெனில இருக்க இல்லாட்டி அங்க உன்னோட குடும்பத்தில இருக்கவங்களுக்கு என்ன நடக்கும்னு தெரியுமில்ல ...
தேவா : ம்ம்ம்....
(சில நேரங்களில் வார்த்தைகளை விட மௌனங்களுக்கு மதிப்பு அதிகம் ....
நிருபமாவிடம் கொண்ட கோபத்தை காட்டினால் பலியாவது தேவாவின் உயிர் இல்லை தேவாவின் மேல் உயிரே வைத்திருப்பவர்களே .... )
சத்யா : போலாம் சிஸ்டர் ....
சீக்கிரமா வாங்க ....
அந்த பொடவ கட்டுன காட்ஸில்லா வேறெதாச்சு சொல்ல போது .....
தேவா : போலாம் ...
மருத்துவமனைக்கு அவள் சென்ற உடன் அவள் இரத்தத்தை எடுத்து கார்த்தியின் மருத்துவமனைக்கு தனி விமானத்தில் அனுப்பப்பட்டது ....
அன்றிலிருந்து அஞ்சலி மூலமாக
தினமும் கார்த்தியின் உடல் நிலையை கண்காணித்து வருகிறாள் .....
தேவாவின் உயிர் அங்கு நிருபமா மற்றும் அவள் உடன் இருக்கும் கதிரிடம் மாட்டிக்கொண்டிருக்கிறது ....
தற்போது தவின் மற்றும் அஞ்சலியிடம் வருவோம்...
தவின் : அப்போ ஒரு வருசமா அவ எங்க இருக்கானு உனக்கு தெரிஞ்சுருக்கு ....
அஞ்சலி : இல்ல இல்ல ....
கார்த்திக்கு அடிபட்றதுக்கு ரெண்டு நாள் முன்னாடி தான் அவளே கூப்டா .....(பாதி பொய் பாதி உன்மை கலந்து கூறினாள் .... )
தவின் : ஆமா உனக்கெப்டி தேவாவ தெரியும் ....
நாங்க டெல்லி வந்தப்போ எங்க கூடவே ஒரு ஆளு சுத்திட்டு இருந்தாரு அவரு நீ அனுப்புனவரா ....
ஆமா இதெல்லாம் நீ எதுக்கு பண்ணனும் ....
அஞ்சலி : தன் கைகளை பிசைந்தவாரே ....
அது...
அது வந்து ...
தவின் : சொல்லு..
எதுக்கு தேவாவ பத்தி மறைக்கனும் கார்த்திக்கு உதவி பண்ணனும் ....
என்ன நோக்கத்துக்காக இதெல்லா பண்ண ....
அஞ்சலி : (பெரு மூச்சுடன் ஆரம்பித்தாள்)
என்னோட பேரு அஞ்சலி ...
நானும் தேவாவும் ஒன்னா தான் ஸ்கூல் காலேஜ் படுச்சோம் ....
தவின் : அப்டியா .....
ஹே நில்லு நில்லு இது பெருசா போறமாறி இருக்கு ...
மொதல போய் தேவாவ காப்பாத்தனும் அப்றமா பொறுமையா பேசிக்கலாம் ....
அஞ்சலி : (உன்ட எப்போ என்னோட லவ்வ சொல்லி .... சுத்தம்.....
தேவாவ காப்பாத்து அப்றமா உன்ன பாத்துக்கிறேன் .... ) ஆமா ஆனா அவள எப்டி காப்பாத்தபோறீங்க ....
தவின் : அத நா பாத்துக்கிறேன் தேவா எங்க இருக்கா அட்ரஸ் ...
போன் நம்பர் எல்லாத்தையும் என் வாட்சேப் நம்பருக்கு அனுப்பிரு ...
இது என்னோட நம்பர் ....
அஞ்சலி : ( பெரிய நம்பர் ...
இவனோட பழசு , புதுசு , ஜியோ ,கம்பெனி நம்பர்னு எல்லாமே என்கிட்ட இருக்கு இப்போ என்னமோ நம்பர் தராறாமா ... Mind voice )
ம்ம்ம்....
தவின் : அப்றம் நீ என் கூட வர வேனா கார்த்தி கூட இருந்து பாத்துக்கோ ...
தேவாவ நா காப்பாத்தி கூட்டிட்டு வரேன் ....
உன்னால கார்த்திய பாத்துக்க முடியுமா . ????
இல்லனா வேற ஆள பாத்துக்க சொல்றேன் ...
அஞ்சலி : இல்ல ... நானே பாத்துக்குறேன் ....
தவின் : அப்றம் ... தேவா உனக்கு கால் பண்ண எதுவும் சொல்ல வேனா ....
அஞ்சலி : ம்ம்ம்ம் .....
தவின் : எனிவேஸ் சாரி ....
அஞ்சலி : எதுக்கு ....
தவின் : அடுச்சதுக்கு ...
அஞ்சலி : தேவையில்ல ....
( பார்க்கலாம் இவர்கள் காதல் கைகூடுமா ...
தேவா எவ்வாறு காப்பாற்றப்படுவாள் .... )
.................................................................
Please share ur votes and valuable comments 😊😊😊😊
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro