Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

விரைவில் சந்திக்கிறேன் உன்னை.

வட்ட வெண்ணிலா அந்த ஜன்னல் வழியாக அவ்வறைக்கு வெளிச்சம் சேர்த்துக் கொண்டிருக்க.. மின்சாரம் தடைபட்டிருந்த அந்த வேளையில் ரக்ஷவனின் அறைக்குள் வட்டமாக அமர்ந்திருந்தார்கள், அந்த ஐவர் குழு. கோவிலுக்கு வெளியில் நடந்த கதையை அர்ஜுன் சொல்ல.. உள்ளே நடந்த கதையை ரக்ஷவன் சொல்ல.. கதையை கேட்டுவிட்டு ஆளுக்கொரு சிந்தனையுடன் ஆழ்ந்தக் குழப்பத்தில் இருக்கிறார்கள் ஐவருமே. அனைத்து குழப்பங்களிலும் நம்பர்-ஒன் குழப்பமாக இப்போது இருப்பது கோவிலுக்குள் தோன்றிய ரகசிய அறையென அனைவரும் சேர்ந்து பெயர் வைத்திருக்கும் அந்த இடத்தில் ரக்ஷவன் சந்தித்த மனிதர், இறுதியாக கூறிய வார்த்தைகளே.

ரக்ஷவனின் மணிக்கட்டில் புதிதாக தோன்றியிருக்கும் வளையத்தையும் அதில் கோர்த்திருந்த சிறிய அளவிலான வாளையும் சுட்டிக்காட்டிய மயூரி, "இது எவ்ளோ பெருசா இருந்துச்சு?" தன் நண்பனின் முகத்தை நோக்க, "ரொம்ம்ம்ப. ...ராஜாலாம் யூஸ் பண்ணுற மாதிரி" அது தன் கையை பிடித்ததிலிருந்து தோன்றியிருந்த புதுவித பிரம்மிப்புடன் அந்தக் குட்டி வாளை பார்த்தபடி பதில் கொடுத்தான், அவன்.

"அப்பறம் ஏன் சின்னதா மாறுச்சு?" அடுத்த கேள்வியை ஹர்ஷன் கேட்க, "தெரியல.. கரெக்ட்டா நா இத எடுக்கப் போகைல அவரு வந்து நீ இன்னும் தயார் ஆகலன்னு சொன்னாரு.. இது இப்டி ஆகீருச்சு" ஆளாளுக்கு கேள்வி எழுப்பினாலும் ரக்ஷவனின் பார்வை மட்டும் அந்த கை-வளையத்தை விட்டு நீங்கவில்லை.

கோவிலில் இருந்து புறப்பட்டது முதல் ரக்ஷவனிடம் எந்தக் கேள்வியும் கேட்காமல் அமைதிகாத்துக் கொண்டிருந்த அர்ஜுன், இறுதியாக, தன் கேள்வி-வரிசையை மொத்தமாகக் கேட்டுவிடலாம் என முடிவெடுத்து, மணிக்கட்டையே உற்று நோக்கிக் கொண்டிருப்பவனை தன்னை நோக்கி திருப்பிவிட்டான்.   

"ஒருவேள.. நீ தயார் ஆனதும் இது மறுபடியும் பெருசா ஆகீறுமோ?"

"இருக்கலாம்."

"ரக்ஷவ், எல்லாத்தையும் நல்லா யோசிச்சு பாரு, அத்த என்ன சொன்னாங்க? நீ சாதாரான பையன் இல்ல.. உனக்குன்னு ஏதோ பெரிய பொறுப்பு இருக்கு.. அதுக்கு நீ ரெடியாகனும்... அதுக்காக தான் நீ கோவிலுக்கு போகனும்ன்னு சொன்னாங்க. அங்க கோவில்ல நீ பாத்தவரும் இதையே தான் சொல்லிருக்காரு. இதுலருந்தே தெரியுது டா நீ எதுக்கோ ரெடி ஆகணும்ன்னு" 

"எல்லாம் சரி தான்.. ஆனா எப்டி தயார் ஆக? எதுக்கு தயார் ஆக? ஒன்னுமே புரியல."

"அதுக்கும் அவரே பதில் சொல்லிட்டாறே! பஞ்ச பூதங்களும் உனக்கு சேவை செய்வாங்கன்னு.  நீ அந்த எலமெண்ட்ஸ கண்ட்ரோல் பண்ண கத்துக்கனும்ன்னு தான் நான் நெனைக்குறேன்"

"உம்ம்.. நா என்ன மேஜிக் மேனா?"

"இவ்வளவு நடந்ததுக்கு அப்பறம், இல்லன்னு வேற சொல்லுவியாக்கும் நீ?" அர்ஜுனின் அழுத்தமான பார்வைக்கு, நைசாக தன் அக்காவிடம் பம்மினான் ரக்ஷவன். 

"சரி, சரி... விடு. என் தம்பி ஏதோ ஒரு ஃப்லோல சொல்லிட்டான்." தம்பிக்கு கேடையமாய் அக்கா வந்து நிற்க, "சரி, அத விடுங்க..  நாளைல இருந்து எல்லாத்தையும் நாம ட்ரை பண்ணலாம். ஆனா, இப்போ அதவிட ஒரு முக்கியமான பிரச்சன இருக்கு. இப்போ வீட்டுக்கு அம்மா வரவும் தேவா அம்மாவ பத்தி கேட்டா என்ன சொல்ல?" எங்கிருந்தோ வந்த கேள்வி-குண்டை இங்கே போட்டுவிட்டாள், மயூரி. அதன் பின்பே அப்படியொரு விஷயம் உள்ளதை யோசித்தார்கள் மற்றவர்களும்.

"தேவா அம்மா சொன்னதையே சொல்லீறலாம் இப்போதைக்கு" சிலநிமிட யோசனைக்குப் பின் மித்ரா சொல்ல, "சரி, நம்ம அம்மாட்ட என்ன சொல்ல?" அடுத்து, வாள் கதையை மறந்துவிட்டுத் தன் அண்ணனை சுரண்டினான், அர்ஜுன். 

"அம்மாட்ட எல்லாம் சொல்லிட்டேன்னு தானே அத்த சொன்னாங்க?"

"சொன்னாங்க தான். ஆனா என்னென்னலாம் சொன்னாங்கன்னு நமக்கு தெரியாதுல. அது தெரியாம நாமபாட்டுக்கு போய் எதையாச்சும் ஒலறி வச்சுட்டோம்ன்னா? அப்ரம் என்னன்னு சமாளிக்கிறதாம்"

"அதானே!" அர்ஜுனின் சொல்லுக்கு ஒரு பிடிமானம் கொடுத்தாள், மயூரி.

"ஆனா, எப்டியும் அம்மாக்கு தெரிஞ்சு தானே ஆகணும்"

"சரி, ஒண்ணு பண்ணலாம். நாமலா பேச்ச எடுக்க வேணா. அத்த என்ன சொல்லிறுக்காங்கன்னு அம்மா வாயாலயே சொல்ல வைப்போம். அதுக்கு ஏத்த மாதிரி அப்போதைக்குன்னு பேசிக்கலாம். ஓகே?" தம்பியின் திட்டம் தெளிவாக இருந்ததால் சரியென ஆமோதித்துத் தலையசைத்தான், ஹர்ஷன்.

தேவா அம்மாவின் பேச்சு எடுத்ததிலிருந்து மொனமாக அமர்ந்திருந்த ரக்ஷவனின் கையை பற்றிய மித்ரா, அவனின் அமைதியான முகத்திற்கு பின்னால் அழுது கொண்டிருக்கும் மனதை உணர்ந்துகொண்டுடாள்.

"ரக்ஷவ்.. அங்க வந்தவரு, நீ அம்மாவ தேடனும்ன்னு தானே சொன்னாரு. அம்மா வேற எங்கேயாச்சும் உனக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க டா. நாம சீக்கிரமா கண்டு புடிச்சுறலாம்" அவன் தோளில் மெல்லமாக அவள் தட்டிக்கொடுக்க, "அம்மா என்னை விட்டு எங்கேயும் போக மாட்டாங்க, மித்ரா'க்கா. என் மனசுலையே தான் இருக்காங்க. அதக்கூட அவரு அப்டி சொல்லிருக்கலாம்" தன் தோளின்மேல் இருக்கும் அவளின் கையை மென்மையாக பற்றியபடி பதில் கொடுத்தவன், அவனின் கலங்கிய விழிகளை இருளோடு சேர்த்து மறைக்க முனைந்த நேரம், துண்டிக்கப்பட்டிருந்த மின்சாரமோ திடீரென அங்கு வந்து நின்றுக்கொண்டு அவன் கண்ணீரை அனைவருக்கும் வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது. சட்டென எழுந்துவிட்டவன்,  தன் முகத்தை மறைக்க ஜன்னலருகில் சென்று நின்றுக்கொண்டான். இருந்தும் என்ன பிரயஜனம்? எல்லாருமே அவன் கண்ணீரை பார்த்துவிட்டார்கள்.

"சரி, சரி... நேரமாச்சு.. கரண்ட்டும் வந்துருச்சு.. அவங்கவங்க வீட்ட பாத்து போய் தூங்குங்க எல்லாரும். மீதியெல்லாம் நாளைக்கு பேசி பிளான் போட்டுக்கலாம்" ரக்ஷவனையே பரிதாப விழிகளில் பார்த்துக் கொண்டிருந்த அனைவரையும் கலைத்து, அர்ஜுன், அங்கிருந்து பத்திவிட..  இப்போதைக்கு அதுதான் சரி என அனைவரும் எழுந்துவிட்டார்கள். 

"ரக்ஷவ், நல்லா தூங்கு.. எத பத்தியும் யோசிக்காம. நாங்க வீட்டுக்குக் கெளம்புறோம்" அவன் தோளில் தட்டிக்கொடுத்துவிட்டு மித்ரா திரும்பிய நேரம், "அக்கா.. பார்கவி அம்மா வரவும் கெளம்புங்க. அதுவர இங்கேயே இருங்க." அவர்களை தடுத்தான். காரணமில்லாமல் இல்லை, அவனை சுற்றி நடக்கும் வினோதங்கள் அவனை பயம்கொள்ளச் செய்துவிட்டது. 

ரக்ஷவன் குரலில் தெரிந்த கவலை அனைவருக்குமே புரிந்தது. "சரி, ரக்ஷவ். அப்போனா நாங்க ஹால்ல இருக்கோம். சீக்கிரம் சாப்ட வந்துரு. சாப்டாம தூங்காத, அம்மாக்கு புடிக்காது" சிறு எச்சரிக்கையுடனே தன் தம்பிக்கு தனிமையை கொடுத்தவள், மற்றவர்களிடம் கண்ணை காட்டிவிட்டு வெளியே நகர.. அவளை தொடர்ந்து அங்கிருந்து வெளியேறினார்கள் அனைவரும்.

"ம்மா... எல்லாரும் நெனைக்குற மாதிரி நீ எனக்காக வெயிட் பண்ணுறியா ம்மா?" பிரகாசித்து ஜொலிக்கும் நிலவை வெறித்துக் கொண்டிருந்தவன், அன்னையென நினைத்து நிலவிடம் பேசத் தொடங்கினான். "அப்டி  நீ வெயிட் பண்ணுறன்னா.. நா சீக்கிரமா உன்னை பாக்க வந்துருவேன் ம்மா. எப்டியாச்சும் வந்துருவேன்." நிலவிடம் வாக்குக் கொடுத்தவனின் கண்களில் நீர் சொட்டக் கிளம்பிவிட்டது. 

இதே வார்த்தையை மித்ரா சொன்னபோது அவளிடம் வீராப்பாய் வசனம் பேசியவன், அது நடந்துவிடாதா என உள்ளுக்குள் ஏங்கிடுவது அந்த நிலவுக்கு தெளிவாகவே புரிந்துபோனது. அவ்வப்போது தன்னை மறைக்கும் மேகங்களையெல்லாம் சற்று மிரட்டி வைத்த நிலா, எவ்வித தடையும் இல்லாமல் தன்னை பார்க்க அவனுக்கு அனுமதி கொடுத்ததுடன் அவன் மனதிற்கு இதமளிக்க ஆரம்பித்துவிட்டது.        

✨✨✨


துளித் துளியாய் மழைத் துளிகள் வந்துத் தன் முகத்தில் விழுந்ததில் உறக்கம் கலைந்து விழித்தான், ஷேனா. அறைக்குள் என்னடா மழை என வியந்து விழித்தவன் பார்வைக்கு கார்மேகக் கூட்டங்கள் எதுவும் தெரியவில்லை. மாறாக, நீர் நிரம்பிய இரு கருவிழிகள் தான் தெரிந்தது.

அவன் உணர்ந்துக்கொண்டான், அவை மழைத்துளிகள் அல்ல... தனக்காகச் சிந்தபடும் அவளின் கண்ணீர் துளிகள் என்பதை. அவள் மடிமேல்தான் தலைவைத்து படுத்திருக்கிறான். தனக்காக வீழும் துளிகளை எண்ணி அவன் முகத்தில் புன்னகை பூக்க.. கைகள் மேல்நோக்கி நகர்ந்து, கட்டை விரலால் அவள் கண்ணீர் துடைத்துக் கன்னம் பற்றியது.

தன் முகத்தை தீண்டிய அந்த மயிலிறகை தன்னோடு சேர்த்து இறுக்கிப் பிடித்துக் கொண்டவள், "போதும், ஷேனா.. என்னிடம் வந்துவிடு நீ" வலிகளை மறைத்து மகிழ்வை பிரதிபலிக்கும் அந்த முகத்தை வருடினாள், அவள்.

"மாயா, நான் இங்குதான் இருக்க வேன்டும்... நீ வா என்னிடம், நீண்ட நாள் காத்திருக்கிறேன்" எத்தனைதான் வசியங்கள் தன்னை கட்டிப்போட்டாலும் அவள் விழிகள் போட்ட நிரந்தர வசியத்தில் என்றோ விழுந்து விட்டவன், அவள் விழி நோக்கினான்.

"தினம்தினம் வலியை தாங்கிக் கொண்டு நீ இங்கிருப்பது அவ்வளவு அவசியமானதா என்ன?"

"அரசன் தன் மக்களை இருளுக்குள் கைவிடக் கூடாது, என் இளவரசியே! அவர்களின் ஒரே ஒளி நான் தானே?" தன் விரல்களை கொண்டு மென்மையாக அவள் முகம் வருடிக்கொண்டே பதில் கொடுத்தான் அவன்.

"அவர்களுக்கு நீ ஒளியானால் என் வாழ்வில் இருள் சூழுமே!"

"ஒளியை என்றுமே இருள் அண்டாது, அழகியே!"

அவன் புன்னகையுடனே பேசிக் கொண்டிருக்க... அவள் கண்ணில் தான் அவனின் மொத்த வலிகளும் பிரதிபலித்தது. வலிகளை தாங்கிக்கொண்டு.. அதை மறைத்துக்கொண்டு வியாக்கியானம் பேசும் அவன் வார்த்தைகள் அவளுக்கு பிடிக்கவில்லை

"போதும் ஷேனா," இவ்வளவு நேரமும் மயிலிறகாய் பற்றியிருந்த அவன் கையை வெடுக்ககென உதறித் தள்ளியவள், தன் சமாதானத்திற்காக வேகமாய் எழுந்த வார்த்தையை கால்-அடிக்குக் கூட எழ விடாமல் அப்படியே அடைத்து விட்டாள், தன் உதடுகளை கொண்டு.

என்ன ஒரு மென்மையான தடுப்பு! சமாதானம் முக்கியம் தான். ஆனால், இந்த மெல்லிய தடுப்பின் வலிமையை உடைக்கும் ஆயுதத்தை தொலைத்து விட்டானே அவன். மென்மையாய் இருந்தும் என்ன ஒரு வலிமையை இந்த தடைக்கு! அவன் எண்ண அசைவுகளை ஒட்டுமொத்தமாகத் தடுத்துவிட்டது, இந்த சிறிய தடுப்பு.

இதன் வலுவை மீறி ஷேனாவின் சேட்டை சொற்கள் வெளியில் தப்பி வருமா என்ன? மூச்சுவிட மட்டுமே அவனுக்கு மூளை பணிந்தது. அதை தாண்டி அவன் எண்ணங்கள், உணர்வுகள், அசைவுகள் என எல்லாமே அசையாமல் நின்று அந்த தடையை மட்டுமே ரசித்தன. தடையை மீறி தன் சொற்களை கொண்டுவரலாமா? என யோசிக்கக்கூட வழி கிடைக்கவில்லை, அந்தத் தடுப்பால்.

"நீதான் அழைத்தாய்... விரைவில் வந்து உன்னை சந்திக்கிறேன்" காதோரம் அவள் குரல் வட்டமடிக்க, அந்த நாற்காலியின் பக்கவாட்டிலிருந்து கண்விழித்தான், ஷேனா.

❣️ ✨ சாகச பயணம் சலைக்காமல் வரும் ✨ ❣️

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro