கைபாவை இளவரசன், அவன்
தன் மகனை குளிக்கச் சொல்லிவிட்டு அவன் அறையிலிருந்து வெளியே வந்திருந்த தேவயாசினி, டைனிங் டேபிளில் சென்று அமர்ந்திருக்க... மகனின் அறைக்குள் இருக்கையில் அவள் முகத்திலிருந்த மலர்சி இப்போது இல்லை. அதற்கு நேர்மாறாக, பதட்டமும் பரிதவிப்பும் அவர் முகத்தை மொத்தமாக ஆக்கிரமித்திருஇந்தது. அவ்வுணர்வுகளின் காரணமாக, அவர் சிந்தயை சூழ்ந்திருந்தது, பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பாக நிகழ்ந்திருந்த அந்த சம்பவம்.
அன்று, ஒளி நிரம்பிய ஒரு பாதையின் வழியாக தன்னை சந்திக்க வந்து, தன் மகனை குறித்து தன்னிடம் கூறிய அப்பெண்ணின் சக்திகள் தனக்குள் சென்ற நாள். அந்த சக்தியின் தாக்கத்தால், ரக்ஷவனின் பிறப்பின் பிறகு சரியாக பதினான்கு ஆண்டுகள்தான் தன்னுடைய வாழ்நாள் என நிச்சயிக்கப் பட்டுவிட்டது. அப்படி நிச்சயிக்கப் பட்டிருக்கும் அந்த நாள்தான் நாளை மறுநாள். ரக்ஷவனின் பிறப்பின் ரகசியத்தையும் நோக்கத்தையும் அவன் அறிந்துக்கொள்ள வேண்டிய நாள். அவனுடைய பிறந்தநாள்.
அதன்பின் தன்னுடைய துணையின்றி இவ்வுலகில் அவன் தனித்துதான் இருந்தாக வேண்டும். ஆனால், காலை எழுந்தது முதலாக தன்னையே தானே தேடுகிறான் இவன். தன்னை பிரிந்து எப்படி வாழப் போகிறான்? தன் பிரிவை எப்படி தாங்கப் போகிறான்? அவன், சிறு குழந்தை... தாயை பிரியப்போகும் வலியை தன் மகன் தாங்கிக் கொள்வானா? என மகனுடைய எதிர்காலம் பற்றிய கவலைகள் ஒரு புறமாக இருப்பினும், அன்று சந்தித்த அப்பெண்-ஷிவேதனா-கூறிய செய்தியின் நினைவுகளும் ஒருபுறமாக மேலெழும்பி கொண்டே இருந்தது.
ரக்ஷவனின் பதினான்காம் பிறந்த நாளுக்குள் அவன் சக்திகளை உணர்ந்திருக்க வேண்டும். ஆதிலோகத்திற்குள் பிரவேசித்திருக்க வேண்டும். ஆனால் அவனோ எதுவும் அறியா விளையாட்டு பிள்ளையாக அல்லவா இருக்கிறான். இப்போது, அவள் குறிபிட்ட அந்த பதினான்கு ஆண்டுகள் முடிவடையவிருக்கும் நிலையில், என்ன நடக்குமோ? இதன்பின் தன் மகனின் எதிர்காலம் என்னவாக இருக்குமோ? என்று பரிதவித்துக் கொண்டிருந்தாள், தேவயாசினி .
✨✨✨
நிழல் தேசம்
~ இருள் மட்டுமே நிரம்பியிருந்த அந்த குகையினுள், கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு மாய விசையால் அவனின் கைகள் கால்கள் உடல் என எல்லா திசையிலும் கயிறுகள் வந்து இழுக்கும் உணர்விலிருந்து விடுபடத் திமிரிக் கொண்டிருந்தான், ஷேனா. அவன் முயற்சிகள் யாவும் பயனற்று போய்க்கொண்டிருக்க.. தன் வலுவை கொஞ்சம் கொஞ்சமாக இழந்திருந்தவனை மொத்தமாக வீழ்த்திடவென அவன் கழுத்தை சுற்றி இறுக்கிச் சூழ்ந்தது அவ்விசை.
ஷேனாவின் கருவிழிகள் இரண்டும் மேலே சொருகிட, அவன் மூச்சு தடைபடத் தொடங்கியிருந்த நேரம்தனில் காற்றுக்கு ஏங்கிக் கொண்டிருந்த அவன்மீது பளிச்சென்ற சிவப்பு ஒளிக்கீற்று வந்துத் தாக்கிச் சென்றது. அவனை கட்டிப் போட்டிருந்த மாய விசையிடமிருந்து விடுபட்டு பொத்தென மண்டியிட்டுத் தரையில் சரிந்தவன், தன் கைகள் இரண்டையும் நிலத்தில் ஊன்றி ஆழப் பெருமூச்சுகளை இழுத்தபடி இருமிக் கொண்டிருந்த நேரத்தில் அவன் கன்னத்தின் இருபுறமும் மென்மையான ஸ்பரிசம் ஒன்று படர்ந்தது. அவன் பார்வை இன்னும் தெளிவில்லமால் இருந்ததால், நிமிர்ந்து நோக்கிய பொழுதும் அதன் காரணமான நபரின் முகத்தை தெளிவாக பார்க்க முடியவில்லை ஷேனாவால்.
"யா-யார்- நீ?
"யாரென தெரியவில்லையா?" அவளின் குரல் காந்தக் குரல் தான். அதை கேட்ட நொடியே அவனின் உரோமங்கள் யாவும் காந்தத்தால் ஈர்க்கபட்ட இரும்பை போல் குத்திட்டு நின்றது.
"நீ-" அவன் குரல் அதற்குமேல் வெளிவர விரும்பவில்லை. வீம்புசெய்தது அவனின் சொற்கள். கழுத்தில் ஏற்பட்ட அழுத்தத்தின் காரணமாக அல்ல, அந்த அழுத்தத்தின் காரணமாக சிவந்திருந்தத் தழும்பின் மேல் உரசிச் செல்லும் அவளின் இதழின் காரணமாக.
"உங்களுக்கு எல்லாம் புரியும், விரைவில்" அவள் நிமிர்ந்து அவன் முகம் நோக்க.. இப்போது தெளிவாக பார்த்தான் அவளை. அது, ரட்சக ராஜ்ய இளவரசி, மஹிமாயா ~
உடலெங்கிலும் குப்பென வியர்த்து கொட்டிடும் நிலையில் படக்கென எழுந்த ஷேனா, தன் மெத்தையில் அமர்ந்திருந்தான். அவன் உடலை போர்த்தியிருந்த போர்வை, மடியில் விழ.. வலுவேறிய அவன் தேகமெங்கிலும் முத்து முத்தாக துளிர்த்திருந்தது வியர்வைத் துளிகள். நீண்ட பெறுமூச்சுகளின் காரணமாக உயர்த்து அமர்ந்துக் கொண்டிருந்தது அவன் நெஞ்சுக்குழி.
"என்ன, ஷேனா? மீண்டும் அவளா?" இருண்ட அந்த அறையினுள்ளே, அட்டணக்கால் போட்டபடி ஒரு ஆசனத்தில் அமர்ந்திருந்த சமாரா, ஷேனாவின் வலதுபுறம் அமர்ந்துக்கொண்டு அவனையே தான் பார்த்திருந்தாள். திரும்பி, அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் பழையபடிக்குத் திரும்பியவன், ஆமென தலையை மட்டும் அசைத்துவிட்டு கீழே வெறிக்கத் தொடங்க... சலிப்புடன் பெருமூச்சு விட்ட சமாரா, அவள் அமர்ந்திருக்கும் ஆசனத்திலிருந்து எழுந்துவந்து ஷேனாவின் மெத்தை மீது ஏறினாள், அவனுக்கு பக்கவாட்டில்.
"ஷேனா, அவள் செய்தவைகளை மறவாதே. இன்று உன் அம்மா உன்னுடன் இல்லாமல் இருப்பதற்கு காரணம் அவள்தான்." அவன் முதுகின் வழியாக தன் கையை வைத்து அவனின் தோளை பிடித்தவள் அவனை மெல்ல பின்னோக்கி சாய்த்து மீண்டும் படுக்கச் செய்து, "அவளே உன் அம்மாவை துடிக்கத் துடிக்க கொன்றது. நீ அவளை பழிவாங்க வேண்டும், ஷேனா" அவனுக்கு பக்கவாட்டில் குனிந்து ஷேனாவின் காதுக்குள் கூறினாள். அதைக்கேட்டு அவன் வெறி ஏறுவதை அவளால் தெளிவாக காணமுடிந்தது.
"இன்னும் சில தினங்கள் தான், ஷேனா. அந்த ரட்சகனின் கவசம் உடைந்துவிடும். அவனை காக்க அவள் நிச்சயம் வருவாள், அன்றைப் போலவே. அப்போது நாம் அவளை பழி தீர்த்துக் கொள்ளலாம். இப்போது நீ நிம்மதியாக தூங்கு. உன் சக்திகளை எனக்குக் கொடுத்ததில் சோர்வாக இருப்பாய்." போர்வையை மெதுவாக இழுத்து அவனுக்குப் போர்த்தி விட்டபடியே அவள் கூற, அவளின் வசியத்தில் இருந்தவனோ, சமாராவின் ஒவ்வொரு சொல்லையும் அப்படியே செய்வதற்கு அடையாளமாக அவள் உறங்கக் கூறிய அடுத்த நொடியே கண்களை மூடிக் கொண்டான். அதைகண்டு வெற்றிப் புன்னகையுடன் மெத்தையிலிருந்து கீழிறங்கியவள், "ஷேனா, மாமா கேட்டால் நான் விடியல் முதலாக உன்னுடன் உன் அறையில் இருந்ததாத தான் சொல்லவேண்டும். புரிந்ததா?" அவனை நோக்கி வினவ, "நீ சொல்வது போலவே சொல்கிறேன்" கண்களை மூடிய நிலையிலேயே அவன் பதில் கொடுத்தான். அவனை நோக்கி ஏளனமாக சிரித்துவிட்டு அவனின் அறையை விட்டு வெளியேறினாள், அவள்.
ஒருகாலத்தில் ஒளியின் இருப்பிடமாக இருந்த அந்த அறை, ஷிவேதனா தன் மகனுடன் நிம்மதியாக வாழ்த்து வந்த அறை. இன்று, இருள் மாளிகையின் மற்ற அறைகளை போலவே இதுவும் மாறிவிட்டது. நிழல் தேசத்து இளவரசனான ஷேனா இவ்வறையில் இருப்பதால், அவனின் மங்கிய ஆத்ம ஒளி மெல்லிய ஒளியாக அங்கே படர்ந்திருந்தது. அதுவும் அவன் இங்கே இருப்பதால் மட்டுமே. அதை தவிர்த்து ஒளி ஆதாரம் என வேறு எதுவுமே இல்லை இங்கே.
✨✨✨
ரக்ஷவனை அவன் அன்னை எழுப்பிவிட்டு சென்ற பின்னர் குளியலறைக்குள் புகுந்தவன் தான்... முழுதாக ஒரு மணி நேரம் கடந்தும் இன்னுமும் நன்றாக தண்ணிக்குள் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறான். அவனுக்கு நீரின் மேல் உள்ள பிரியம் அப்படி. உள்ளே இறங்கிவிட்டால் அவனை வெளியே இழுப்பது அவ்வளவு எளிதில் நடக்கும் காரியம் அல்ல. இதில், தினம் தினம் அவனை பள்ளிக்கு கிளப்பி விடும் தேவயாசினியின் பாடு தான் பெரும்பாடு.
"அடேய்.. ஸ்கூல் இருக்குறது நியாபகம் இருக்கா என்ன? இப்போ நீயா வெளிய வரியா? இல்ல, பைப் கனக்ஷன ஆஃப் பண்ணட்டுமா?" இன்றைய பொழுதில் மூன்றாவது முறையாக தன் மகனை நோக்கி கூச்சலிட்டார், தேவாயாசினி.
"வெயிட் மம்மி.. சோப் மட்டும் போட்டு முடிச்சுட்டு வந்துறேன்" கைகளால் வாயை மூடிக்கொண்டு பேசுவது போல் அவன் குரல் ஒலிக்க, "சுத்தம்!! சோப்பே இப்போ தா போடுறானா?" மகனுக்கு மதிய உணவினை பாக்ஸில் அடைத்துக்கொண்டே முனங்கியவர், "பார்கவி அம்மா பத்து நிமிஷத்துல வந்துருவாங்க" இறுதியாக ஒரே ஒரு குரல் தான் கொடுத்தார். அவ்வளவுதான், குளியலறையில் கேட்டுக் கொண்டிருந்த ஆட்டம் பாட்டம் கச்சேரி-சத்தம் எல்லாம் சட்டென ஒடுங்கியது. ரக்ஷவனின் அறைக்குள் இருந்த குளியலறையின் கதவு மெல்லமாக சிறிதளவு திறந்தது.
அந்த கதவினுள் இருந்து வெள்ளை நிற பூத குட்டி போல், மூஞ்சி முழுவதும் சோப் அப்பியிருந்த ஒரு தலை மட்டும் வெளியே நீட்டிக்கொண்டு வந்து சுவர்-கடிகாரத்தில் நேரத்தை நோட்டமிட்ட அடுத்த நொடி, "ம்மா! இன்னும் ஹாப் அன் ஹவர் இருக்கு.. சும்மா பயம்புருத்தாம இரு, நானே வந்துருவேன்" கத்திவிட்டு மீண்டும் தலையை உள்ளுக்குள் இழுத்து கதவை அடைத்துக் கொண்டது, அந்த பூத மூஞ்சி. மகனின் குரலை கேட்டு சிரித்து கொண்டார், அவன் அன்னை.
பத்து நிமிடம் கடந்த நிலையில்,
-எனக்கு ராஜாவா நா... வாழுறேன்...
எவனும் இல்லனாலும்... ஆழுறேன்-
நன்றாக குளித்து முடித்துவிட்டு, இடுப்பில் டவல் ஒன்றினை கட்டிக்கொண்டு, பாட்டுடன், வைப்ரேஷன் மோடிலேயே குளியலறையை விட்டு அவனுடைய அறைக்குள் வந்த ரக்ஷவன், தன் அம்மா டேபிள் மீது வைத்துச் சென்ற சீருடையை கையில் எடுத்துக்கொண்டு, மேஜைக்கு அருகிலிருக்கும் மொபைலையும் எடுத்தான். அதில், தான் கத்தி கொண்டிருக்கும் அதே பாடலை ஒலிக்க செய்துவிட்டு கட்டிலில் ஏறி நின்று ஆட்டமாக ஆடக் கிளம்பினான். அதே ஆட்டம் பாட்டத்துடன் சீருடை மாற்றி தயாராகியவன், பாடல் முடியும் தருவாயில் டிப்-டாப் மாணவனாக பள்ளிக்குத் தயாராகி விட்டான்.
பதினொரு ஆண்டுகளுக்கு முன் பால்வாடி செல்ல ஆரம்பித்த நாள் முதல் இதுவே இவனது தினசரி காலை வேலைகள்.. ஓய்வின்றி நீராடிக் கொண்டிருக்கும் இந்த குட்டி வாணரத்தை கரைக்கு இழுத்து வருவதற்கு தேவா அம்மாவிற்கு கிடைத்த துருப்புச்சீட்டு தான் பார்கவி அம்மா. பக்கத்து வீட்டில் வசிக்கும் இவர்களின் ஹவுஸ் ஓனர் மற்றும் ரக்ஷவனின் பள்ளி ஆசிரியர்... அவனது தமிழம்மா.
இன்று, தேவயாசினி சற்று தைரியத்துடன் இருப்பதற்கு முக்கிய காரணம், பார்கவியும் அவரது கணவர் தங்கராஜும் தான். பதினான்கு ஆண்டுகளுக்கு முன் ரக்ஷவன் பிறந்த அன்றே அவனை கையோடு தூக்கி வந்தவருக்கு தன் மகனை பாதுகாப்பாய் கவனித்துக் கொள்ளவேண்டும் என்னும் எண்ணம் மட்டுமே இருந்தது. ஆனால், என்ன செய்து எப்படி அவனை கவனித்துக்கொள்ள போகிறோம் என்பது தெரியவில்லை. அதை யோசித்துக்கொண்டே திரிபுரா நகரினுள் நுழைத்தவரை சோர்வடைய செய்த விதி, பார்கவி அம்மாவின் வீட்டுத் திண்ணையிலேயே அமரச் செய்துவிட்டது.
சற்று நேரத்திலேயே ரக்ஷவனின் அழுகுரலானது, வீட்டினுள் இருந்தவர்களை வெளியே அழைத்து வந்துவிட.. அவர்களிடம் தன்னிலையை மேலோட்டமாக எடுத்து கூறினாள், தேவயாசினி. அவளின் நிலை, பார்கவியையும் அவர் கணவரையும் உருக செய்தது. மேலும், அப்போதைய நேரத்தில் அவர்களிடமும் ஒரு கைக்குழந்தை இருந்தாள். அவளை இந்நிலையில் வைத்து யோசித்து பார்க்க இருவரின் உள்ளமும் பதறியது. அதனால், அவர்களும் தேவயாசினிக்கு உதவிடவே நினைத்தார்கள். நல்ல வேலையாக அப்போதைக்கென அவர்களிடம் புதிதாக கட்டிய சிறிய மரவீடு ஒன்று காலியாக இருந்ததால் தேவயாசினியையும் அவளின் குழந்தையையும் அங்கேயே தங்க அனுமதி கொடுத்து, சிறிது காலம் கடந்த பின் அவருக்கென ஒரு வேலையும் ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். தேவயாசினி வேலைக்கென புறப்பட்ட பின்னர், பார்கவி தான் தன் இரு மகள்களுடன் சேர்த்து ரக்ஷவையும் பார்த்துக் கொண்டார். சற்று வளர்ந்ததும் அம்மூன்று பிள்ளைகளும் ஒன்றாகவே பள்ளிக்குச் செல்ல தொடங்கிட... இப்போது நான்கு ஆண்டுகளுக்கு முன் அதே பள்ளியில் பார்கவிக்கு பணி நியமனம் கிடைத்துவிட்டது.
இவையெல்லாம் இப்போது தேவா அம்மாவின் நினைவுகளில் திடீரென தலைதூக்கக் கிளம்பியிருக்க.. காலை வேலைகளை எல்லாம் முடித்துக்கொண்டு, பழைய யோசனைகளுடன் வாயிலருகில் அமர்ந்திருந்த தேவயாசினியின் முன்பாக வந்து நின்றார்கள் அவ்விருவரும். பார்க்கவியின் இரு புதல்விகள். மித்ரா மற்றும் மயூரி.
வரும்போதே கைகளை விரித்துக்கொண்டு ஓடி வந்தவர்கள், அம்மா என அவளை இருபுறமும் அனைத்துக்கொள்ள.. அடுத்த நொடியே, "அம்மா. எடுங்க, எடுங்க. ஒரு நூறு ரூபா எடுங்க. ஆளுக்கு ஃபிஃப்டி-ஃபிஃப்டி" குறும்புடன் அவசரமாக பரபரத்தாள் மயூரி.
"எதுக்கு டி?"
''நேத்து என் தம்பிய கோவிலுக்கு கூப்புட்டீங்களா? நாங்க சொன்ன மாறியே அவன் வர மாட்டேன்னு சொன்னானா? சோ, நாங்க பெட்ல ஜெயிச்சுட்டோம்." காரணம் புரியாமல் விழித்த தேவா அம்மாவிற்கு விளக்கம் அளித்தாள், பார்கவியின் மூத்த மகள், மித்ரா.
"ஹம்ம்.. ஒருநாள் இல்லாட்டி ஒருநாள் அவன் என் கூட வருவான் பாருங்க. அப்போ கவனிச்சுக்குறேன் உங்கள"
"வரட்டும், வரட்டும்.. வரும்போது வரட்டும். அதுவரையும் எங்களுக்கு லாபம் கூடட்டும். ஹிஹிஹி" மயூரி சிரிக்க.. நூறு ரூபாயை எடுக்குமாறு தேவா அம்மாவிற்கு சைகை செய்தாள், மித்ரா. போலியாக சலித்துக்கொண்டு, ஆளுக்கு ஐம்பது ரூபாயை கையில் கொடுத்தார், தேவயாசினி. அதை உற்சாகமாக பெற்றுக் கொண்டார்கள் இருவரும்.
"சரி, ம்மா.. ரக்ஷவ்க்கு பர்த்டே வருதுல? சோ, அவனுக்கு மிட்-நைட் சர்ப்ரைஸ் ரெடி பண்ணி வச்சுருக்கோம்-"
"மிட்-நைட் சர்ப்ரைஸா? அவன் ஒத்துக்க மாட்டானே மா. அதெல்லாம் அவனுக்கு புடிக்காதே!"
"அதெல்லாம் எங்களுக்குத் தெரியும் ம்மா, நாங்க பாத்துக்குறோம் அவன. நாளைக்கு நைட்டு முன்-வாசல் கதவ மட்டும் தெறந்து வச்சுருங்க.. சரியா?" மயூ கூறி கொண்டிருக்கையிலேயே இடையில் குறுக்கிட்ட தேவா அம்மாவை, நிதானமாக்கினாள் மித்ரா.
"சரி, என்னவோ பண்ணுங்க. இப்போ, உள்ள வாங்க. அவன் இப்போ தா ரெடி ஆகிட்டு இருக்கான். உங்க அம்மாவே வந்து கூப்புடாத வரைக்கும் அவன் வர மாட்டான்" என இருவரையும் உள்ளே அழைத்துச் சென்றாள், தேவயாசினி. உள்ளே சென்ற மூவரும் அரட்டை அடித்துக் கொண்டிருக்க.. பள்ளிக்குத் தயாராகி முடித்த ரக்ஷவன் வந்த பிறகு அவர்களுக்கு சிற்றுண்டியை எடுத்து வைத்தாள், தேவயாசினி.
சிறிதுநேரம் கடந்த நிலையில், "ரக்ஷவ் கெளம்பிட்டானா?" வாயிலில் ஒரு குரல் கேட்க, "இதோ சாப்புட்டு இருக்கேன் ம்மா.. டூ மினிட்ஸ்.. முடிச்சுட்டேன்" பரபரப்பாக சாப்பிட்டுக் கொண்டே, வாசலில் நுழையும் பார்கவி அம்மாவிற்கு பதிலளித்தான், ரக்ஷவன். "பொறுமையா சாப்புடு டா.. நேரம் இருக்கு." பதிலளித்தவர் தன் ஹேண்ட் பேக்கை கழற்றி மடியில் வைத்துக் கொண்டே திண்ணையில் அமர்ந்தார்.
மயூ மற்றும் மித்ரா அவர்கள் வீட்டிலேயே உண்டுவிட்டு வந்ததால் தன் மகனுக்கு கம்பெனி கொடுப்பதற்காக ஆளுக்கு இரண்டு பிரட்டில் ஜாம் வைத்து கொடுத்துவிட்டு, மகனுக்கு மேலும் ஒரு சப்பாத்தியை வைத்துவிட்டு, பார்கவியிடம் நகர்ந்தாள், தேவயாசினி.
"வாங்க 'க்கா.. ரக்ஷவ் சேட்ட இப்போ எப்படி இருக்குது ஸ்கூல்ல?"
"ஹான், இப்போ கொஞ்சம் வால சுருட்டிட்டு தான் இருக்கான் 'க்கா. ஆனா, அது எல்லாம் என் கண்ணுக்கு முன்னாடி மட்டும் தானோன்னு எனக்கு சந்தேகமா இருக்கு. லைட்டா கம்ப்ளைன்ட் மட்டும் வருது" பார்கவி, தன் பார்வையை வீட்டுக்குள் விட.. தரையில் சம்மணமிட்டு அமர்ந்து சப்பாத்திகளை விழுங்கிக் கொண்டிருந்தவன், திருட்டு முளியுடன் வாயிலை நோக்கிய வேகத்தில் தன் பார்வையை மீண்டும் சப்பாத்திக்குள் புகுத்திக் கொண்டான்.
அவனருகில் அமர்ந்திருந்த மயூவும் மித்ராவும் அவனைப் பார்த்து வாய்மூடி சிரிக்க, "ஓய் மயூ.. ஸ்கூல்ல எத்தனயோ பசங்க சேட்ட பண்ணுறாங்க... உங்க அம்மா ஏன் எப்பவுமே என்னையவே லென்ஸ் வச்சு பாத்துட்டு, இப்டி அம்மா கிட்ட வந்து போட்டு குடுக்குறாங்க?" லேசான முறைப்புடன், அடிக்குரலில் சீறியவனை பார்த்து மேலும் சிரித்த மயூ, "மத்த பசங்கலாம் இப்டி வீட்டுக்கு பக்கத்துலயே இல்லையே டா ராஜா! அதா உனக்கு மட்டும் ஸ்பெஷல் கவனிப்பு" எனக்கூறி மீண்டும் சிரித்தார்கள், அக்கா-தங்கை இருவரும்
அவ்விருவரையும் முறைத்துக் கொண்டே கடைசி வாய் சப்பாத்தியை வாய்க்குள் திணித்தவன், பிளேட்டை தூக்கிக் கொண்டு கிச்சனுக்குள் நகர... அவன் சென்றதும், பிரட் சாப்பிட்ட கையை தட்டி விட்டுக்கொண்டு தண்ணீர் குடித்துவிட்டு வாயிலுக்கு வந்தார்கள் மயூவும் மித்ராவும். அவர்களை தொடர்ந்து ரக்ஷவும் தன் பள்ளி பையை தூக்கிக்கொண்டு வாயிலுக்கு வந்துவிட, "ரக்ஷவா.. உன் சேட்ட இன்னும் கொறையலையாமே?" மகனை கண்டிப்புடன் நோக்கினாள், அவன் அன்னை, தேவயாசினி.
"ம்மா.. இல்ல ம்மா.. நான் ஒழுங்கா தா இருக்கேன்." பம்மிய குரலில் வந்த பதிலானது தன் தாய்காக என்றாலும், பார்வை என்னவோ தன் குரு-மாதாவையே தான் நோக்கிக் கொண்டிருந்தது. ஒரு மெல்லிய சிரிப்பை கொடுத்துவிட்டு அவன் தோளில் கை போட்டு தன் பக்கமாக இழுத்த பார்கவி, "அதெல்லாம் நீங்க கவல படாதீங்க 'க்கா. நா பாத்துக்குறேன் இவன" என தேவயாசினியிடம் தலையசைத்துவிட்டு, தன் மகள்கள் இருவருடன் சேர்த்து, மகன் போலான ரக்ஷவையும் அழைத்துக் கொண்டு நடைபயணமாக சென்றாள், தான் வேலை பார்க்கும் பள்ளிக்கு.
❣️ ✨ சாகச பயணம் சலைக்காமல் வரும் ✨ ❣️
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro