18. தீரா!!!
"யாரை நம்பி நான் பிறந்தேன்... போங்கடா போங்க.. ", வாய்விட்டே பாடிக்கொண்டு, காலை ஒன்பது மணியளவில் அந்தச் சாலை வழியாக நடந்துக் கொண்டிருந்தாள் அவள்.
முழு-கை அளவில் வெள்ளை சுடிதார், அடர்-நீல நிற பேண்ட் மற்றும் கோட் என டிப்-டாப் சீருடை அணிந்துக் கொண்டு, தோளில் புத்தகப்பை ஒன்றைத் தொங்கவிட்டுக் கொண்டு.. இரட்டை ஜடையில் கறுப்பு ரிப்பன் வைத்துக் கட்டிக்கொண்டு. அந்த சாலையை அளந்து அளந்து அவள் நடந்துக் கொண்டிருக்க.. 'பாவம், யாரு பெத்த புள்ளையோ.. இப்டி பைத்தியமா சுத்திட்டு கெடக்கு' என்னும் மைன்ட் வாய்சுடன், அவளுக்கு இடது புறம் காலாவும் வலது புறம் மதியும் என அவளுடனே இணைந்து மௌனமாக அன்னநடை போட்டுக் கொண்டிருந்தார்கள் இருவரும்.
சாலையைப் பராக்கு பார்த்தபடியே நடந்துக் கொண்டிருந்தவளின் நடை, சட்டென தடைபட்டு நிற்க.. 'என்ன? வண்டி ஸ்டாப் ஆய்ருச்சு?!' என்பதுபோல் அவளை நிமிர்ந்து பார்த்த மதி, அவளின் அதிர்ச்சிப் பார்வை செல்லும் திசையிலேயே தன் பார்வையையும் திருப்பினாள்.
அவள் பார்க்கும் திசையில் மூன்று வாலிபர்கள், மருத்துவர்களைப் போல் வெள்ளை கோட் அணிந்துக்கொண்டு கழுத்தில் ஸ்டெதஸ்கோப் ஒன்றை மாட்டிக்கொண்டு தங்களுக்குள்ளேயே பேசி சிரித்தபடி நடந்துக் கொண்டிருந்தார்கள். அதை பே'வென பார்த்துக்கொண்டு சிலையாகி நின்றிருந்தவள், அவர்கள் மூவரும் தன் பார்வையை விட்டு மறைந்த மறு நொடி, வந்த வழியிலேயே பின்னால் திரும்பி ஓடத் தொடங்கினாள்.
"ஏய்.. அண்ணா.. ஸ்கூலுக்கு வழி மறந்து போச்சா இந்த புள்ளைக்கு..", தன் அண்ணனிடம் கத்தியபடியே அவளை பின்தொடர்ந்து மதி ஓட.. பதில் எதுவும் சொல்லாமல் சிறு சிரிப்புடன் காலாவும் அவர்கள் இருவரையும் பின்தொடர்ந்தான்.
இரண்டு மூன்று சந்துகளுக்குள் வளைந்து வளைந்து சென்ற அந்த பெண், இறுதியாக, ஆள் நடமாட்டமே இல்லாத ஒரு சந்தினுள் நின்றுவிட... அவளுக்குப் பின்னேயேதான் நின்றிருந்தார்கள் காலாவும் மதியும். "இந்த முட்டுச்சந்துல நின்னு என்ன செய்யுது இந்த பொண்ணு?", என மதி அவளை பார்த்துக் கொண்டிருந்த அதே நேரம் நடந்தது அந்த நிகழ்வு. அந்த பெண், கண் மூடி நின்றுத் தன் கை விரலைச் சொடுக்கிட.. அவளுக்கு முன்னால் கோடாகத் தோன்றி கதவாக விரிந்தது ஒரு நீல நிற ஒளிவட்டம்.
அந்தக் கதவு திறந்த அடுத்த நொடியே அந்தப் பெண் அதனுள் சென்று மறைந்துவிட.. கதவும் மறைந்து போனது அவளுடன் சேர்ந்து. அதைப் பார்த்து, கன்னத்தில் தன் இரு கைகளையும் வைத்து வாயைப் பிளந்துவிட்டாள் மதி.
"அண்ணா!! இந்தப் பொண்ணு மாயவாயில் தெறக்குறா'ண்ணா", உச்சக்கட்ட அதிர்ச்சியில் அவள் குரல் காலாவை அடைய.. விழியை அகல விரித்து தன்னை பார்க்கும் தங்கையை பார்த்து, "சர்பிரைஸ்", என சிரித்து நின்றான் காலா.
"பூமில மாயமே இருக்காதுன்னு சொன்ன?"
"அது எல்லாமே பத்ரா அண்ணா நம்ம வீட்டுக்கு வர்ற வரைக்கும் மட்டும் தான் மதி. அவன் வந்ததுல இருந்து எல்லாமே மாறிப்போச்சு. அவன், மாயத்தோட வாரிசு. அதனால அவன் இருக்குற எடத்துல மாயம் கண்டிப்பா இருக்கும்.", ஆழ்ந்த பெருமூச்சுடன் தன் விளக்கத்தைக் கூறி முடித்தான் காலா.
"சரி, யாரு'ண்ணா இந்தப் பொண்ணு..", அண்ணனின் விளக்கத்தை முழுதாக கேட்டுக்கொண்ட மதிக்கு உண்மை புரிந்தது. அதேபோல், யாரிந்த பெண் என்னும் சந்தேகமும் எழுந்தது.
"தீரா", ஒற்றை வரியில் அவன் சொல்ல, "யாராம்!?", படக்கென ரைமிங்காக கேட்டாள் மதி.
"அவ பேரு தீரா மா, மதி. தீரா தீ. அண்ட், அவ யாருன்னா.. இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நம்ம வீட்டுல வச்சு பாப்பு பாப்புன்னு தூக்கிவச்சுக் கொஞ்சுனியே ஒரு குட்டி பொண்ணு.. அந்த பொண்ணு தான் இந்த பொண்ணு..", மெல்லிய புன்னகையுடன் மிகப்பெரிய அதிர்ச்சியை தூக்கித் தன் தங்கையின் தலைமேல் வைக்க, "என்னது.. அந்தப் பொண்ணா இந்தப் பொண்ணு?", மீண்டும் அவள் கண்கள் அகல விரிந்தது. அவளின் அதிர்ச்சி நிரம்பியப் பார்வைக்கு காலாவின் மெல்லிய சிரிப்பே 'ஆம்' என்னும் பதிலையும் கொடுத்துவிட... அவ்வளவுதான். அடுத்த நோடி, "அவ்வ்வ்வ்.. மை பாப்பு.. அதுக்குள்ள இவ்ளோ பெருசா வளந்துட்டாளா!? ச்சோ கியூட்டு!!", இதற்கு முன்பாக தீரா நின்றிருந்த இடத்தில் இன்னுமும் அவள் நிற்பது போலவே பாவித்துக் கொண்ட மதி, காற்றிலேயே அவளை கொஞ்சத் தொடங்கிவிட்டாள். சில நிமிடங்கள் புன்னகையுடன் அவளையே பார்த்து நின்ற காலா, "சரி, சரி. கொஞ்சுனது போதும் வா மதி. உன் பாப்பு போன எடத்துக்கே நாமளும் போவோம்.", தீராவை போலவே ஒரு வெள்ளை நிறக் கதவைத் திறந்து வைத்துக்கொண்டு காலா அழைக்க, "ஹான் ஹான்.. போலாம் போலாம். போய்.. பாப்பு என்ன செய்யுறான்னு பாக்கலாம்", ஆவலாக அதனுள் மதி நுழைந்துக் கொண்டதும், அவளைத் தொடர்ந்தே உள்ளே சென்றான் காலா.
✨✨✨
ஒளிக்குள் நுழைந்த தீரா நேராக வந்தது, ஒரு அடர்ந்தக் காட்டின் மையத்தில் இருக்கும் பாழடைந்த அழகியதொரு குடிலுக்குத் தான். அந்த நடுக்காட்டில் அப்படியொரு குடிலை பராமரித்து வருவது யாரெனக் கேட்டால், அதற்கு பதில் அதனுள் நிற்பவளே. ஆனால், அவள்தான் அதை உருவாக்கியதா என்று கேட்டால் 'இல்லை' என்பதுதான் பதில்.
அவளுக்கு மிகவும் பழக்கப்பட்ட அந்த இடத்தில், அலமாரி போல் இருந்த மர பலகையில் பரபரப்பாக எதையோ தேடியவளுக்கு ஒரு பாழடைந்த மடல் கிடைக்க.. அதை எடுத்து வாசித்தவள் கண்ணில் குழப்பமும் மகிழ்ச்சியும் ஒன்று சேர்ந்து இருந்தது. "அவங்க மூனு பேரும் இங்க இருக்காங்கன்னா அப்போ? அப்போ நீங்க எல்லாருமே இங்க இருப்பீங்கள்ல? அப்டி இருக்கீங்கன்னா.. கண்டிப்பா உங்க எல்லாரையும் பாக்க வருவேன் நான். ஆனா.. உங்களுக்கு என்னை நியாபகம் இருக்குமா?.. .. .. .. இல்லனாலும் பரவால்ல.. மறுபடியும் மொதல்ல இருந்து பழகிக்கலாம்.", அந்த மடலைப் பார்த்துக்கொண்டே முதலில் உருக்கமாக தனக்குத்தானே பேசியவள் கடைசியாக நக்கலாக சொன்னபடி மடலை தூக்கி தனக்கு பின்னால் வீசிவிட்டு, முழு மனநிறைவுடன் புன்னகைத்துக்கொண்டே அந்தக் குடிலை விட்டு வெளியேறினாள்.
அவளை வினோதமாக பார்த்துக்கொண்டே அவளைத் தொடர்ந்து நடந்த மதி, "அந்த வெள்ள-கோட் போட்ட மூனு பேர பத்தியா சொல்லுறா இவ?", கேள்வியுடன் காலனை பார்க்க.. ஆம் என தலை அசைத்தவன் ஏதோ ஆழமான யோசனைக்குள் நுழைந்துவிட்டான்.
✨✨✨
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro