Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

பகுதி-9

                        விக்ரம் வர்ஷா காதல் இவ்வாறு தொடர விக்கி வனிதா திருமண நாள் வந்தது .அங்கு அவள் செய்த கலாட்டாக்களை ரசித்து கொண்டே இருந்தான் விக்ரம்.
  
                       "ஷா நாம மதியம் லஞ்ச் முடிஞ்சதும் போய் மானேஜர் பாத்துட்டு வந்துடலாம். அப்போ தான் வரவேற்பு முடிந்ததும் கிஃப்ட் பண்ணலாம்".. என்றான் விக்ரம்

                         " இல்ல டா அம் வெரி டயர்ட் நாம் 5 மணிக்கு போய் சிக்கிரம் வந்துடலாம் டா பிளீஸ் ".. என்றால் வர்ஷா
   
                       " ஓகே அப்போ வீட்டுக்கு வந்துடரியா" என்றான் விக்ரம்

                        "உனக்கே தெரியும் நான் வந்த சாப்பிடாமல் போக மாட்டேன் அத்தையும் விட மாட்டாங்க ...நீ நாம்
எப்பவும் மீட் பண்ணுவோம்ல அந்த பார்க் வந்துடு நான் அங்க வைய்ட பண்ணுறேன் 5 மணிக்கு மீட் பண்ணலாம் பை" என்றாள் வர்ஷா

                 " ஓகே டா பை லவ் யூ டேக் கேர் டியர்"

                    "லவ் யூ டூ டா பை"

         மாலை 5 மணிக்கு பார்க் வந்த விக்ரம் அவளை தேட அங்கே அவளை காணவில்லை உடனே போனிர்க்கு தொடர்பு கொள்ள அது சுவிட்ச் ஆப் என்று வந்தது.

                  " எப்பவும் இப்படி தான் பண்ணுற என்னை வர சொல்லிட்டு அவ லேட்டா வர" என் மனதில் அவனை திட்டினான் விக்ரம்.

                       அவளுக்காக அரை மணிநேரம் காத்திருக்கும் போது தான் வருணியம் இருந்து விக்கியை காணவில்லை என்னும் தகவல் வந்தது.

   அங்கு உள்ள வாட்ச்மேனிடம் அவள் வந்தாள் மண்டபத்திற்கு வர சொல்லி சொல்ல சொன்னான் ( வழக்கமாக சந்திக்கும் இடம் நம்ம வர்ஷா வாயாடி சோ வாட்ச்மேன் அவ ப்ரெண்ட்)....

             வேந்தனின் அழைப்பில் சுயநினைவுக்கு திரும்பினான் விக்ரம்.
      
" சார் சார் அடுத்து என்ன பண்றது.. அந்த ஸ்பார்ட் விசாரிக்கலாமா? வசீகரன் சார் வனிதா மேம்  அவங்க எல்லாரையும் விசாரிக்கலாமா ?
நீங்க இப்படி சொல்றீங்களோ அப்படி  பண்ணலாம் சார்.." என்றான் வேந்தன்.
    
              "அப்போ கடைசிவரை நீங்க எல்லாம் எதுவும் பண்ண போறது இல்ல ஓகே நீங்க இப்போது ஸ்பாட்டுக்கு போய் வேற ஏதாவது கேமரா இருக்கான்னு பாருங்க.. சைபர் க்ரைம் டிபார்ட்மெண்ட் கிட்ட சொல்லி கேமரா பூட்டேஜ் வாங்க முடியுமா? அவங்களால  டெலிட் ஆன பூட்டேஜ் எடுத்து தரமுடியுமா கேளுங்கள்.. அன்னைக்கு கால் வந்தது அல்ல  அந்த நம்பர்ல இருந்து வேற யார் யாருக்கு கால் போயிருக்கு அப்படின்னு டிடைல்ஸ் கலக்ட் பண்ணுங்க ... நான் தனியா போய் வனிதா வருண் கிட்ட விசாரிக்ரேன்...
நீங்க போய் நான் சொன்னா டிடைல்ஸ் வாங்கி வாங்க .. யூ கேன் கோ நவ்"  என்றான் விக்ரம்.

        வனிதாவிற்கு கால் செய்தான். ஃபுல் ரிங் போய் கொண்டு இருந்தது எடுக்க வில்லை .. மீண்டும் முயற்சி செய்தான்.. ஃபோன் எடுக்க வில்லை..

       வருணுக்கு கால் செய்தான் விக்ரம்.. அவன் ஒரு அரைமணி நேரத்தில் வீட்டில் மீட் செய்வதாக கூறினான். வனிதா ஃபோன் எடுக்கவில்லை என கூறிய போது அவ சைலண்ட் மோட்ல போட்டு இருக்கலாம்   என கூறினான் வருண்.

         சரி என வனிதா வீட்டிற்கு கிளம்பி சென்றான் விக்ரம். காலிங் பெல் அடிக்க அடிக்க கதவு திறக்கவில்லை..

      அதே சமயம் அங்கு வந்து சேர்ந்தான் வருண்..  "வனிதா வனிதா" என் அழைத்து பார்த்தனர் கதவு திறக்கபடவில்லை.. அவள் போனிர்க்கு தொடர்பு கொண்டு பார்த்தனர் . ரிங் சத்தம் உள்ளே கேட்டது.

      "ஒரு வேளை ஃபோன் வைச்சுட்டு வெளியே எங்கேயும் போய்ட்டாலா" என்றான் விக்ரம்.

       வருணுக்கு ஏதோ தவறாக பட ஜன்னலை உடைத்து பார்த்தான்

          "வனிதா" என அலறினான் வருண்.

வருணை சந்தேகமாக பார்த்து கொண்டே சன்னல் வழியே எட்டி பார்த்தான் விக்ரம் அங்கே..

என்ன ஆயிற்று நம் வனிதாவிற்கு??????

( இனி வாரம் இருமுறை அப்டேட்ஸ் தரேன் ப்ரண்ட்ஸ் . இது குட்டி அப்டேட் தான். கொஞ்சம் வேலை அதிகம் உள்ளது. மன்னிக்கவும் ஒரு 2 வாரங்கள் பெரிய பகுதி கொடுக்க இயலாது நட்புக்களே.. அடுத்த பகுதி ஞாயிற்றுக்கிழமை குள்ள பதிவு செய்ய முயற்சி செய்கிறேன்.. தவிர்க்க இயலவில்லை
.. அப்படியே உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும் நன்றி. )

சூழ்நிலை பாடல்:

காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே
காதல் ரோஜாவே , எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே

கண்ணுக்குள் நீ தான்,
கண்ணீரில் நீ தான்
கண் மூடி பார்த்தால்
நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ ஏதானதோ சொல் சொல்
காதல் ரோஜாவே , எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே

தென்றல் என்னை தீண்டினால்
சேலை தீண்டும் ஞாபகம்
சின்ன பூக்கள் பார்க்கையில்
தேகம் பார்த்த ஞாபகம்
வெள்ளி ஓடை பேசினால்
சொன்ன வார்த்தை ஞாபகம்
மேகம் ரெண்டு சேர்கையில்
மோகம் கொண்ட ஞாபகம்

வாயில்லாமல் போனால் வார்த்தையில்லை பெண்ணே
நீயில்லாமல் போனால் வாழ்க்கையில்லை கண்ணே
முள்ளோடு தான் முத்தங்களா சொல் சொல்

வீசுகின்ற தென்றலே
வேலையில்லை நின்று போ
பேசுகின்ற வெண்ணிலா
பெண்மையில்லை ஓய்ந்து போ
பூ வளர்த்த தோட்டமே
கூந்தலில்லை தீர்ந்து போ
பூமி பார்க்கும் வானமே
புள்ளியாக தேய்ந்து போ

பாவையில்லை பாவை ,
தேவையென்ன தேவை
ஜீவன் போன பின்னே சேவை என்ன சேவை
முள்ளோடு தான் முத்தங்களா சொல் சொல்

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro