பகுதி 7
விக்ரம் நேரக சென்ற இடம் காவல் நிலையமே....
"வேந்தன் அந்த கேஸ் பைல் எடுத்து வாங்க" என இன்ஸ்பெக்டர் பாரிவேந்தனிடம் கூறினார் ஏசிபி.
விக்ரம்.
ஃபைல் உடன் வந்தார் வேந்தன்.
அதை படித்த விக்ரம் கொஞ்சம் குழம்பி போனான்.
விக்கி உடம்பில் அடித்த தழும்புகள் உள்ளதாக போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் சொல்கிறது. ஆனால் வர்ஷா உடம்பில் ஆக்ஸிடெண்ட் ஆன காயங்கள் மட்டுமே உள்ளது.
விக்கியை யாரோ கடத்தி சென்று அடித்து இருக்க வேண்டும். அவனை காப்பாற்ற வர்ஷா அங்கு சென்று இருக்க வேண்டும் என யூகித்தான் விக்ரம்.
ஆனால் அவ்வாறு யார் செய்திருப்பார்கள்?.
"வேந்தன் அந்த ஏரியா கேமரா ரெக்கார்டிங் செக் பண்ணிங்களா?".
"சார் அது வந்து அன்னைக்கு ரெக்கார்டிங் மட்டும் காணும் டெலீட் ஆயிடுச்சு ஆனா எப்படினு இன்னும் தெரியல.."
"வேறு ஏதும் க்ளூ கிடைச்சுதா? அன்னைக்கு விக்கி போன் பண்ண நம்பர் யாரோடது?"...
"சார் அது பேக் நம்பர்... விக்கி போன்க்கு கடைசியா அந்த நம்பர்ல இருந்து கால் வந்து இருக்கு"
"ஓகே" என கூறி அங்கு இருந்த போர்டிதல் எழுத ஆரம்பித்தான் விக்ரம்.
என்னோட சந்தேகங்கள்
1. வசீகரன் ( ஏன்னா அவர் தகுதியோடு குறைந்து எடத்துல பொண்ணு கொடுக்க விரும்பாமல் விக்கியை கொலை செய்ய முயற்சிக்கலாம்..ஆனால் அவர் கல்யாணத்துக்கு முன்னாடி கொலை செய்திருக்க வாய்ப்புண்டு. ஆனால் திருமணத்திற்குப் பிறகு எவ்வாறு செய்திருக்க முடியும் தன் மகளின் வாழ்க்கை கேள்விக்குறி ஆகும் என அவருக்கே தெரியும் ஒருவேளை வருணை தனக்கு மருமகனக்கா எண்ணி அவ்வாறு செய்தாரோ?)
2. சுரேஷ் (இந்த கொலையை செய்திருக்க வாய்ப்பு அதிகம்.. யார் வனிதாவின் கழுத்தில் தாலி கட்டிகனாலும் கொள்வேன் என்று கூறினான்.. ஆனால் சுரேஷ் இன்னும் காவல் நிலையத்தில் உள்ளான் ..
அன்று மண்டபத்தில் கலாட்டா செய்த பிறகு அவன் மீது இருந்த பழைய வழக்குகள் மீண்டும் விசாரணை செய்யப்பட்டு 5 வருட தண்டனை பெற்றான்)
3. ராஜேஷ் (வர்ஷா குற்றவாளி என கூறினாள். ஆனால் யார் அந்த ராஜேஷ் ஏன் வர்ஷா அவ்வாறு கூற வேண்டும்.)
4. வருண் (விக்கி ஏன் அருணுக்கு கால் பண்ணனும் வனிதாவுக்கே கால் பண்ணி இருக்கலாமே.. ஒரு வேளை வருண் செய்த ஏற்பாடா இருக்குமோ.. கல்யாணமே வேண்டாம் அப்படின்னு சொல்லிட்டு இருந்தவன் திடீர்னு எப்படி வனிதாவ மேரேஜ் பண்ண ஒத்துகிட்டான்).
5. வருண் விக்கியோட காமன் எதிரிகள் (வர்ஷா வனிதா கிட்ட விக்கிய காப்பாத்த முடியலை நீ வருணை காப்பாற்று என கூறினாள் அப்போ அவங்க ரெண்டு பேருமே டார்கெட்?)
6. வர்ஷா ஓட எதிரிகள் (அவளுக்கு எதிரிகள் நிறைய ஒரு
வேலை அவளை பழிவாங்க விக்கியையும் வருணையும் காயப்படுத்த பிளான் பண்ணி இருக்கலாம்)
7. வசீகரன் ஓட எதிரிங்க ( அவருக்கு ஒரே பொண்ணு.. ஒரு வேலை அவரோட பொண்ணு வாழ்க்கை கேள்விக்குறி ஆச்சுன்னா அவரால அத ஃபேஸ் பண்ண முடியாது)
(இவ்வளவு யோசிச்சு விக்ரம் வனிதா வோட எதிரிகளா இருக்கலாம் அப்படின்னு யோசிக்க மறந்துட்டான்)....
யோசித்து கொண்டு இருக்கும் பொழுதே வர்ஷாவின் ஞாபகங்கள் அவனை ஆட்கொண்டது.
"வர்ஷா வர்ஷா எங்கடி போன? உன் குரல் கேட்காமல் தவிக்கிறேன் டி... என்னையா பார்க்ல வெயிட் பண்ணு சொல்லிட்டு நீ எங்கடி போன".
சில வருடங்களுக்கு முன்..
"அத்தை காபி வேணும்" என உள்ளே நுழைந்தால் வர்ஷா.
"என் செல்ல மருமகளுக்கு இல்லாததா 5 நிமிஷம் டா" என கூறினார் வேணி
"எங்க நீங்கதான் மருமக மருமக சொல்றீங்க உங்க பையன் என்னை கண்டுக்கவே மாட்டேங்குறான்"
"அவன எப்படி கரெக்ட் பண்ணுவியோ எனக்கு தெரியாது ஆனால் இரண்டு வருடங்களுக்கு உள்ள எனக்கு பேரனோ பேத்தியோ வேணும்"...
"வா மா மருமகளே ... உனக்கு பயந்துதான் காலையிலேயே எழுந்து விட்டானா ... அவ்ளோ வேகமாக செல்லும்போதே நினைச்சேன் புயல் வரக்கூடும்".
"அந்த தடியன் இப்ப வரனும் உங்க கூட நான் சண்டை அவனை நீங்கள் புடிச்சு வச்சு இருக்கணும் இல்ல நான் வருவேனு உங்கள் கிட்ட சொன்னேன்ல ... அவன் இங்க வரல மாமா இன்னிக்கு உங்களுக்கு நான் தான் சமையல் பண்ணி தருவேன்..."
" அம்மா தெய்வமே அவன் ஜாக்கிங் தான் போயிருக்கான் வந்துருவான்... வெயிட் பண்ணு சாப்பாட்டுல கை வைக்காதே தாயே"..
அவர் கூறியதை கேட்டு வர்ஷா சிரிக்க இருவருக்கும் காபி உடன் வந்தார் வேணி.
காபியை பருகிய படி கனவுலகில் நுழைந்தாள் வர்ஷா.
காதல் ஆசை யாரை விட்டதோ
உன் ஒற்றை வாழ்வில் ஓடி வந்து உயிரை தொட்டதோ
காதல் தொல்லை தாங்கவில்லையே அதை தட்டி கேக்க உன்னை விட்டால் யாரும் இல்லையே ....
யோசனை ஓ.. மாறுமோ ஓ… பேசினால் ஓ… தீருமோ ஓ…
உன்னில் என்னை போல காதல் நேரமோ
ஓர் குழந்தையின் மகிழ்ச்சியை போலவே உனை விடுமுறை தினம் என பார்க்கிறேன் ...
என் நிலைமையின் தனிமையை நீ மாற்று இந்நேரமே ..
அன்பே நான் பிறந்தது மறந்திட தோணுதே..
உன் ஒரு முகம் உலகமாய் காணுதே.. உன் ஒரு துளி மழையினில் தீராதோ என் தாகமே
பகலிரவு பொழிகின்ற பனித்துளிகள் நீதானே
வயதினை நனைக்கிறாய் உயிரினில் இனிக்கிராய்
நினைவுகளில் மொய்க்காதே நிமிடமுல்லில் தைக்காதே
அலையென குதிக்கிறேன்
உலை என கொதிக்கிறேன்
வீடு தாண்டி வருவேன் கூப்பிடும் நேரத்தில்
உன்னால் விக்கல் வருதே ஏழு நாள் வாரத்தில்
ஏழு நாள் வாரத்தில்
ஒரு பார்வை பாரு கண்ணில் ஓரத்தில்
விழிகளிலே உன் தேடல்
செவிகளிலே உன் பாடல்
இரண்டுக்கும் நடுவிலே
இதயத்தின் உரையாடல்
காதலுக்கு விலையில்லை
எதை கொடுத்து நான் வாங்க உள்ளங்கையில் அள்ளித்தர
என்னை விட ஏதுமில்லை
யாரை கேட்டு வருமோ
காதலின் ஞாபகம்
என்னை பார்த்த பிறகும்
ஏன் இந்த தாமதம்
ஏன் இந்த தாமதம்
நீ எப்போ சொல்வாய் காதல் சம்மதம்?????????
(சூழ்நிலை பாடல் ... என்னால முடிஞ்ச அளவு இந்த பகுதி பெருசா கொடுத்திருக்கேன் அடுத்த பகுதி திங்கள்கிழமைக்குள்... )
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro