கானல் - 1
மழை தூறும் அந்த மாலை நேரத்தில் கைகளில் தனக்கான காபி கோப்பையை ஏந்திய படி மறையும் தருவாயிலும் செங்கீற்றுகளால் தன் காதலி ஆழியை அழகாக்கும் ஆதவனைக் கண்டு மனம் குளிர்ந்தது அந்த பேதைக்கு.
காணும் எங்கிலும் காதலைத் தேடுபவள் அவள்.
"டீ சாஹீ பெமினிசம் பத்தி என்ன நினைக்கிற" என்ற தோழியின் கேள்விக்கு பதில் தெரிந்தாலும் அதை வெளியே சொல்ல பயப்படும் பாவை.
சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் பாரதி கண்ட புதுமைப் பெண் மனதில் மட்டும். அதை வெளியே சொல்ல யோசிக்கும் சாதாரண பெண்.
அவளின் பதில் எனக்கு தெரியும் என்பதைப் போல் அதுக்கு பதிலளிக்க தொடங்கினாள் அவளின் தோழி மானு என்கிற மானசா.
"திடீருனு ஏன் இந்த டாபிக்னு நான் தெரிஞ்சுக்கலாமா?" என மானு கேட்க
"என் ஆளு நீ அந்த டிரெஸ் போடாத அது பண்ணாத இது பண்ணாதனு டார்ச்சர் பண்ணுறான் டிஓவரா ஆணாதிக்கம் பண்ணுறான் அதனால என் விருப்பம் எப்படியோ அப்படி தான் நான் இருப்பேன் என் சுதந்திரத்துல நீ தலையிடாதனு சொன்னேன் அதுக்கு அவன் என்னமா பெண்ணியமானு கேட்கிறான்? அவன் ஆணாதிக்கம் பண்ணலாம் நான் பண்ணக்கூடாதா? பெண்களுக்கு தனிப்பட்ட உரிமைகளை எடுக்க சுதந்திரமே இல்லை " எனக் கூற
அவளைப் பார்த்து சிரித்த மானு
" இந்த அளவு நீ அவன்கிட்ட பேசுனதே சுதந்திரம் தான்.
உன்னெல்லாம் நம்ம பாட்டி காலத்துல விட்டுருக்கணும் அப்போ யாரும் பெண்ணியம் பேசல ஏன் மாதர் சங்ககங்கள் கூட இல்ல இப்போதான் நாங்க 21ம் நூற்றாண்டு, டெக்னாலஜி அது இதுனு சொல்லி கலாச்சாரத்தை சீரழித்து இப்போ பெண்ணியம் பேசுற அளவு வந்தாச்சு...ஆண்கள் ஏதாவது சொன்னா உடனே ஆண் அப்படிங்கிற கர்வம் அதுனால தான் அப்படி பேசுறானு சொல்லுறது,கடவுள் அப்படி தான் படைச்சுருக்கார் ஆண்களுக்கு வலிமை அதிகமாகவும் பெண்களுக்கு வலிமை குறைவாகவும் அது எதற்குனு நீ அவரைத் தான் கேட்கணும்.
பெண்கள் பூ மாதிரினு சொன்ன அதே ஆண்கள் தான் இப்போ பேய்,பிசாசுனு சொல்லுறாங்க அதுக்கு முழுக்காரணம் நம்ம மட்டும்தானு நமக்கு தெரியிறது இல்லை.பெண்ணியம் பேசுங்க இல்லைனு சொல்லல அவங்களை தரக்குறைவா பேசாதீங்க." என மானு இன்னும் தொடர
" நீ எப்படி அவங்க மட்டும் தான் வலிமை நம்ம அப்படி இல்லனு சொல்லலாம் அவங்களால மகப்பேறு வலியை தாங்கிக்க முடியுமா? இல்லைல"
"அவங்க பாவம் டி அதை எல்லாம் அவங்களால தாங்கிக்க முடியாது...நீ உலக நியதியை மாற்ற முயற்சிக்காத.
பெண்கள்னு நமக்கு இருக்க ஒரு சிறப்பு தாய்மை அதையும் அவங்களுக்கு விட்டுக் கொடுக்காதே செய்திலாம் படிக்கிறது இல்லையா?ஆண்களும் குழந்தை பெத்துக்கலாம்னு நிறைய ஆய்வுகளே சொல்லுது ஆணுக்கு பெண் இளைப்பில்லைனு சொன்னாங்க தான் அதுக்குனு நீ ஆணாகனும்னு அவங்க பெண்ணாகனும்னு முயற்சி செய்தா அவ்வளவு தான் நீ நீயா இரு"
" போதும் டி முடியல சரி நான் பெண்ணியம் பேசுனது தப்பு தான். ஆனால் என் லவ்வர் சொன்னது மட்டும் ஓகே வா?"
"உன்கிட்ட ஏதாவது அவன் சொன்னா ஏன் சொல்லுறானு யோசி உனக்காக தான் யோசிப்பானே தவிர உன்னை அவன் சர்வாதிகாரம் பண்ணனும்னு நினைக்கல அவங்களும் உங்களை மாதிரி ஆணாதிக்கம்னு பேசிட்டு இருந்தா இங்க பெண் தலைவர்கள் வந்துருக்க மாட்டாங்க எல்லா துறையிலையும் பெண்களும் இருக்காங்க அவங்களுக்கு ஏதோ ஒரு இடத்துல துணையா ஆண்களும் இருக்காங்க"
என்றவள் சாஹீயைப் பார்க்க அவள் மானுவை மெச்சுதலாக ஒரு பார்வை பார்த்தாள்.
இவள் மட்டும் எப்படிதான் தான் நினைப்பதை கூறுகிறாள் என தெரியவில்லை இதுவரை.
எள்ளென்றால் எண்ணெய்யாக இருக்க வேண்டுமென்பதற்க்கு இவர்கள் தான் சான்று.
அவள் நினைப்பதை இவள் செய்து விடுவாள்.
வார்த்தைகளின் ஜாலத்தால் ஒரு போர் முடிந்திருக்க ஏனோ அங்கிருக்க தோன்றாமல் விடுதிக்கு வெளியே இருக்கும் பூங்காவிற்கு சென்றாள் சாஹீ.
அவளுக்குப் பிடித்ததில் இதுவும் ஒன்று.
அங்கிருந்த பென்ச்சில் அமர்ந்து சுற்றிலும் தன் பார்வையை அலைபாய விட்டவளின் விழிகள் சுவாரசியமானது.
"பாப்பு சாரிடா நீ சொல்றதை கேட்காம மறுபடியும் அதையே பண்ணிட்டேன் ப்ளீஸ் மன்னிச்சுடேன்" எனக் கெஞ்சிக் கொண்டிருந்தவளை முறைத்தவன்
" நான் எத்தனை தடவை தான் சரி விடுனு சொல்லுறது நீ மறுபடியும் அதே தப்பைத் தான் பண்ணுற இந்த தடவை உன்கிட்ட நான் பேசுறதா இல்லை" என்றவன் முகத்தைத் திருப்பிக் கொள்ள
அவன் முகத்தைத் தன்புறம் திருப்பியவள் "தங்க பாப்புல,செல்ல பாப்புல மன்னிச்சிடு டா" என அவள் கெஞ்சிக் கொஞ்சி அவனை சமாதானம் செய்து கொண்டிருக்க அவன் மொபைல் ரிங்கானது.
அதில் தெரிந்த பெயரைப் பார்த்தவன் அவளைப் பார்க்க யாரு என அவள் விழிகளே வினவியது.
"ப்ரெண்ட்" என்றவன் அவளைப் பாவமாக பார்க்க
" கேர்ள் ப்ரெண்ட் " என்றவள் வார்த்தையே கோபமாக வர
"அது அது" என இழுத்தவனை சரமாரியாக அடிக்கத் தொடங்கியவளின் கண்களில் காதலையும்,தான் அவளுக்கு மட்டுமே உரிமை என்ற பொசசிவ்வையும் கண்டு கொண்டவன் அவள் கண்ணீரைத் துடைத்து விட்டு " லவ் யூ பாப்பா, லவ் யூ சோ மச்" எனக் கூறி அணைத்துக் கொண்டான்.
அதைக் கண்ட நாயகியின் இதழ்கள் மட்டுமல்லாது விழிகளும் சிரித்தது.
அதில் சிறிது ஏக்கமும் கலந்திருந்தது.
அவளுக்கும் இதே மாதிரி இருக்க வேண்டும் என்ற ஆசை எழாமல் இல்லை ஆனால் அவளால் அப்படி இருக்க முடியவில்லை.
பெயரின் அர்த்தத்திற்கு அப்படியே நேர்மறையானவள். ஜாலி மற்றும் ஜோவியல் என்ற பொருளுக்கு அப்படியே எதிராக என்றும் அமைதியின் உருவமாக வலம் வருபவள்,பேசக் கூட காசு கேட்பியா என பலரின் கிண்டலுக்கு சிரித்து சமாளித்து விடுவாள்.
கண்கள் கலங்கிய நிலையில் இதற்கு மேல் அங்கு பார்க்கக் கூடாது என முடிவெடுத்து பார்வையை திருப்ப அவள் விழிகள் பிரகாசமானது.
எதிலும் பற்றற்று இருந்தவளை கடந்த ஐந்து வருடமாக அவனை மட்டுமே நினைக்க வைத்த விகத்தன் அவன்.
தான் அவன் மேல் கொண்ட காதலால் அவனருகே சென்றால் இறந்து விடுவோம் என அறிந்தும் அவன்பால் கொண்ட காதலால் மறுபடியும் உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவை அவள்.
பீனிக்ஸ் பறவையை தன்னம்பிக்கைக்கு உதாரணமாக சிலர் கூறினாலும் அவளுக்கு அது காதல் பறவை தான்.
கதிரவன் மேல் கொண்ட அளவுக்கடந்த காதலால் அதனருகே செல்ல அவா எழ அதனை நோக்கி செல்லுமாம் பீனிக்ஸ் பறவை,அதன் கதிர் வீச்சை தாங்க இயலாமல் சிறகுகள் தீப்பிடித்து சாம்பலாகி கீழே விழுந்தாலும் கதிரவன் மேல் கொண்ட அதன் காதல் மட்டுமே மறுபடியும் உயிருடன் எழச் செய்து கதிரவனை நோக்கி செல்ல செய்யுமாம் எத்தகைய சுயநலமற்ற காதல் இது.
அந்த பூங்காவைக் கடந்து அவன் செல்ல அவன் மறையும் வரை பார்வையை விலக்காது இருந்தவள் பெருமூச்சு விட
" பாத்து பாத்து " என்றவளைப் பார்த்து சிரித்தவள் அவள் தோள் மீது சாய்ந்து கொண்டாள்.
"உனக்கு யாருடி சாஹீதானு நேம் வெச்சா பேசக்கூட யோசிக்கிறவளுக்கு சாஹீதாவாம் சாஹீதா " என்றவளைக் கண்டு மறுபடியும் சிரித்தாள்.
"சிரிச்சே நல்லா சமாளிக்கிற டி ஆனால் உன்னோட சிரிப்பு எத்தனை அழகு தெரியுமா? ஒரு சிலருக்கு மட்டும் தான் கண்களும் சேர்ந்து சிரிக்கும் நீ எது சொன்னாலும் சிரிப்ப உன் சிரிப்பே காட்டிக் கொடுத்துடும் நீ உண்மையாவே சிரிக்கிறியா இல்லை உன்னை உன் கவலைல இருந்து காப்பாத்திக்க சிரிக்கிறியானு இப்போ நீ சிரிக்கிறது எந்த மாதிரியான சிரிப்பு அப்படிங்கிறதும் எனக்குத் தெரியும்" என்ற மானு
" உனக்கு ஏன் டி அவன் மேல அப்படி ஒரு காதல் இப்படி கூட ஒருத்தரால காதலிக்க முடியுமா? " என்று வியந்தவளை
"ஏன் முடியாது என்னால முடியும் மானுக்குட்டி " என்று கூறியவாறே அவர்கள் அருகில் வந்தான் இவர்களின் தோழன் பூஷன்.
கல்லூரியில் அனைவருக்கும் தெரிந்த வானரப்படை இவர்களது.
மானு,சாஹீ,பூஷன்,நம் நாயகன், மற்றும் சிலர்.
வானரப்படை என பெயர் பெற்றதுக்கு ஒரே காரணம் பூஷன் தான்.
பெயருக்கேற்றார் போல் கொழு கொழுவென்று அய்யோ அமுல் பேபி என்று கொஞ்சும் விதத்தில் இருப்பவன்.
ஆனால் இவன் கொஞ்ச நினைக்கும் மானுவோ இவனைத் திரும்பிக் கூட பார்க்க மாட்டாள்,மானுவிற்கு பிறகு சாஹீயைப் பற்றி நன்கு தெரிந்து கொண்டவன்( சாஹீயின் காதலைப் பற்றியும்)
வானம் என்றால் நமக்குத் தெரிந்தது பரந்து விரிந்து இருக்கும், சூரியன், நட்சத்திரம் என பலவற்றை உள்ளடக்கி இருக்கும் அழகான ஒன்று.
ஆனால் இவர்களுக்கு அப்படி அல்ல...
வானம் என்ன வானம்
தொட்டுவிடலாம்
வெல்லும் வரை வாழ்க்கை வென்று விடலாம்
வில்லாக வானவில்லை கையில் ஏந்த வேண்டும்
அம்பாக மின்னல்களை அள்ளி வரவேண்டும்
நிலவுக்கு மேலே நின்று ஜே போட வேண்டும்
என பாடி வலம் வருபவர்கள். வானத்தை பற்றி தன் நுனி விரலில் வைத்திருக்கும் கல்லூரி மாணவர்கள்.
வானியல் பற்றி படிக்கும் இளங்கன்றுகள்.
ஆராய்ச்சியின் மீது உள்ள ஆர்வம் ஆர்வத்தால் இப்போதா ஆஸ்ட்ரோ பையாலஜி(Astro biology) படித்து வருகின்றர்.
வானத்தில் உள்ள உயிரினங்களைப் பற்றிய படிப்பு அது.
கங்கை கொண்ட சோழபுரமான அரியலூரில் ஒரு புகழ்பெற்ற கல்லூரியில் தங்கள் கனவுகளை நிஜமாக்க போராடி வருகின்றனர்.
இது இவர்களின் இறுதி வருடம்.
தங்களின் அருகே வந்த பூஷனை கண்டுகொள்ளாமல் மானு முகத்தைத் திருப்பிக் கொள்ள அவள் செயலைக் கண்ட சாஹீ சிரிக்க பூஷன் தலையை சொரிந்தான்.(அவன் செய்த செயல் அப்படி)
கல்லூரியில் நேற்று நடந்த ஒரு செமினாரில் சிறப்பு விருந்தினரை வரவேற்க ஒரு சில மாணவிகளை மட்டும் புடவை அணிந்து வர வேண்டுமென்று அவர்களின் ஆசிரியர் கூற வேறு வழி இல்லாமல் மானு மற்றும் சாஹீ புடவை அணிந்து வந்திருந்தனர்.
சும்மாவே அவள் பின் சுற்றி வரும் பூஷன் அவளை முதன் முறை புடவையில் கண்டு மயக்கம் வராத குறையாக சுற்றிக் கொண்டிருந்தான்.
நண்பர்கள் கேலி செய்தும் அதைக் கண்டு கொள்ளாமல் சுற்ற மானுவுக்குத்தான் ஒரு மாதிரி ஆகிவிட்டது.
அவனை திட்டி,மிரட்டி,கெஞ்சி கூட பார்த்து விட்டாள் ஆனால் அவன் கேட்ட பாடில்லை.
காட்டன் புடவை அணிந்திருந்ததால் அது சிறிது மேலே தூக்கிக் கொள்ள அதை சரி செய்ய முடியாமல் அவன் செய்த தொல்லைகளையும் தாங்க முடியாமல் எரிச்சலில் சுற்றிக் கொண்டிருந்தவள் சாஹீயிடம் சென்று அதை சரி செய்து விடுமாறு கூற
அவளும் புடவை அணிந்திருந்ததால் கீழே குனிய முடியாமல் பாவமாக முழிக்க பூஷன் அவள் காலருகில் அமர்ந்து கொண்டான்.
மானு அதிர்ந்து அவனைப் பார்க்க அவன் தூக்கிய புடவையை சரி செய்து ஓகே வா எனக் கண்ணடிக்க அவள் தலையில் அடித்துக் கொண்டாள்.
" ஏன் டா இப்படி" அவள் எல்லாரும் பார்த்து விட்டனரே என்ற அவஸ்தையில் நெழிய " என் அம்மாக்கு நான் தான் இதை சரி செய்வேன் மானுக்குட்டி நீயும் என் அம்மா மாதிரி தானே அதுனால தான் " என்றவன் இரு உனக்கு ஜூஸ் வாங்கிட்டு வரேன் எனக் கூறி சென்று விட்டான்.
பூஷன் அப்படிதான் யார் என்ன சொன்னாலும் அவனுக்கு கவலை இல்லை அவனுக்கு மானு என்றால் உயிர் அவளுக்காக என்ன வேண்டுமென்றாலும் செய்வான்❤.
பூஷனைக் கண்டு வியந்த சாஹீ தன்னவனைக் காண அவனுக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை என்பது போல் எப்போது செமினார் தொடங்கும் நாம் எப்போது தூங்கலாம் என்ற எண்ணத்தில் கன்னத்தில் கை வைத்து அமர்ந்திருந்தான்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro