பாகம் 1
Orginally Published: 3/6/2021
அழகிய சென்னை மாநகரம், அதன் மையப்பகுதியில் அமைந்திருந்த பிரபல அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி. நகரில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு இடையே நட்புறவை வளர்க்க ஒரு வாரமாகவே இதுபோன்ற போட்டிகள் வெவ்வேறு கல்லூரிகளில் நடந்துவருகிறது. இன்று நடன போட்டியின் இறுதி சுற்று. முக்கியமான விஷயம் இது பெண்கள் கல்லூரி.
அரங்கில் போட்டியின் நடுவர்கள் மூன்று பேர் மற்றும் கல்லூரி முதல்வர் அமர்ந்திருக்க, நான்கு கல்லூரியின் மாணவிகளும் மேடையேறி தங்கள் திறமையை நிரூபிக்க தயாராகினர். நாம் போக வேண்டியது க்ரீன் ரூம் எனப்படும் ஒப்பனை அறை. இரண்டு அணிகள் ஆடி முடித்திருக்க, இன்னும் இரண்டு அணிகள் காத்திருந்தனர்.
ஒரு அணியில், ஹிந்தி பட நடிகையோ என்று சந்தேகப்பட வைக்கும் ஒரு பெண், பெயர் கரிஷ்மா; அவளுடன் நான்கு தோழிகளும். இவர்கள் மேல்தட்டு வர்கத்து பெண்கள் படிக்கும் பிரபலமான கலை கல்லூரியை சேர்ந்தவர்கள்.
அவர்கள் கல்லூரி பெயரை சொல்லி மேடையில் அறிவிப்பு வந்தது.
"கம் கேர்ள்ஸ்" என்றவாறு மேடை ஏறினாள் அந்த மங்கை. அந்த சுற்றில் பாலிவுட் சினிமாபாடலுக்கு ஆட வேண்டுமாதலால் அவர்கள் பிரபல ஹிந்தி பாடல் ஒன்றுக்கு ஹிப்ஹாப் ஸ்டைலில் ஆடினர். ஆடை, மற்றும் நடன முறை என எல்லாமே கச்சிதமாக சினிமா கலைஞர்கள் ஆடுவது போலவே இருக்க, கைதட்டலில் அரங்கம் அதிர்ந்தது. நடுவர்கள் அவர்களிடம் சில கேள்விகள் கேட்க, கரிஷ்மா நுனி நாக்கு ஆங்கிலத்தில் பதிலளித்தாள்.
அவர்கள் கீழே இறங்கியதும் இரண்டாவது அணியில் இருந்த ஒரு பெண் புன்னகை மலர, "நல்லா ஆடினீங்க" என்று வாழ்த்து கூறி கைநீட்டினாள்.
கரிஷ்மா இளக்காரமாக, "ஏன் மா உன் டீம் மற்றும் உன் டீம் தலைவி மேல நம்பிக்கை போச்சா? இந்த மாதிரி காலேஜ்லாம் எங்க கூட போட்டி போட நினைச்சுகூட பார்க்க முடியாது" ஆங்கிலத்தில் பேசினாள்.
"ஏய்! யார் கிட்ட?" என்று இரண்டாம் அணியின் ரோஷினி முன்னே வர, கை நீட்டி வாழ்த்து சொல்லிய பெண், சிரித்தபடியே அவளை தடுத்தாள். அவர்கள் மேடை ஏறவேண்டிய முறை என்பதால் உள்ளே செல்ல திரும்பினார்.
"கவர்ட்! (coward) பதில் பேச கூட தைரியம் இல்ல" என்று அந்த அல்டாப் பேர்வழி சீண்டினாள், மீண்டும்.
வாழ்த்து கூறிய பெண்,
"அமுல்பேபி! கரிஷ்மானு பேர் வச்சா நீ கரிஷ்மா கபூர் ஆகிட மாட்ட! மிடில்க்ளாஸ்ல பிறந்ததால நாங்க மக்கு பசங்க ஆகிட மாட்டோம். உனக்கெல்லாம் பதில் ஆக்ஷன்ல தான்டீ செல்லம்! வர்ட்டா?" என்று அவள் தலையில் இருந்த தொப்பியை வலிக்காமல் தட்டிவிட்டு மேடையேறினாள். இவதான் நம்ம கதையோட நாயகி அன்னப்பூரணி.
அருகில் இருந்த மற்ற கல்லூரி பெண்கள் சிரிக்கவும் கரிஷ்மா முகம் கறுத்தது.
பின்னர் இவர்கள் உடை ஒப்பனை எல்லாம் வித்தியாசமாக இருக்க, வம்பிழுத்தவள் யோசித்தவாறே, பார்வையாளர்கள் பகுதிக்கு சென்றாள் . பூரணி குழுவினர் ஒன்று போல் வெள்ளை நிற அனார்கலி சல்வாரும், மேலே கவசம் போன்ற ஒன்றை அணிந்து, நெற்றியில் வீரத்திலகம், காதில் சிறிய கடுக்கன் அணிந்து, தலைமுடியை அழுத்தமாக கொண்டை போட்டு, தலையில் முண்டாசு அணிந்திருந்தனர். மொத்ததில் போர் வீராங்கனைகளாக காட்சியளித்தனர்.
தொகுப்பாளர் இவர்கள் கல்லூரியின் பெயரை அறிவித்து, "ஆடுபவர்கள் - சுகந்தி சுரேஷ், அன்னப்பூரணி பரந்தாமன், சம்யுக்தா நாயர், ரோஷினி முத்துகுமார், கிரேஸ் தாமஸ் மற்றும் ஜெஸிகா ஜான்."
இவர்களின் வித்தியாசமான ஆடையலங்காரம் அனைவரின் ஆர்வத்தையும் தூண்டியது. ஆட துவங்கியதும் வாயடைத்து போயினர் அனைவரும்.
[பாடலின் லிங்க் மேலே கொடுக்கபட்டுள்ளது].
பலத்த பாராட்டும் கரகோஷமும் ஓயவே சில நிமிடங்கள் ஆனது. நடுவர் ஒருவர் கேள்வி கேட்க தொடங்கினார்.
"பிரமாதமா ஆடினீங்க, ஆண்களோட பாடிலாங்க்வஜ் மெயின்டெயின் பண்ணி ஆடினீங்க. ஆனா ஏன் இந்த மாதிரி ஒரு டான்ஸ்? பெண்கள் வீரமிக்கவர்களா காண்பிக்கிற சாங்க்ஸ் இருக்கே."
பூரணி முன் வந்து தமிழில் பதிலளித்தாள்.
"நடுவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வணக்கம்! எல்லா விதமான நடனமுறைகளிலுமே இந்த விஷயம் இருக்கே. பாரம்பரிய நடனமான பரதம், கதக், பாலே- இதிலெல்லாம் ஆண்கள் நளினமாக ஆடவேண்டிய அவசியமும், இப்போ இருக்கற (contemporary dance) கன்டெம்ப்ரரி டான்ஸ் முறைகள்ல சிலதுல ஆண்களை போல பெண்கள் body language and attitude மாத்தி பர்ஃபாரம் பண்ணவேண்டியும் இருக்கு. உதாரணம்: ஹிப்ஹாப், பிபாயிஙக் (bboying), streetdance, krumping etc, அது மட்டுமில்லாமல் பெண்கள் ஆண்களுக்கு சமமாக போர்ல கலந்துகிட்டு இருக்காங்க அந்த காலத்துல, அப்படி இருக்க வெற்றியையும் ஒரேமாதிரி தானே கொண்டாடியிருக்கணும். அதுதான் எங்களோட சிந்தனை இந்த டான்ஸுக்கு பின்னாடி".
கேள்வி கேட்ட நடுவர் மீண்டும் பேசும் முன், பார்வையாளர்கள் மத்தியிலிருந்து, "Can't you answer in English? Oh! Government college students, they don't know maybe" என பலர் கிண்டலடித்தன்ர்.
பூரணியின் முகம் மாறியது. சிறிது தயக்கத்துடன் நடுவர்கள் மற்றும் முதல்வர் இருந்தபக்கம் அவள் பார்வை சென்று மீண்டது. முதல்வர் தலையசைத்து ஆமோதிக்க
"We have enough courage and english knowledge. Looks like you people need some lessons on courage and manners though. Call us if you need help, don't worry, its free".
பேசிவிட்டு கல்லூரி முதல்வரை பார்த்து கைகூப்பி வணங்கிவிட்டு திரும்பினாள்.
"ஓஓஓ! பூரணி! கலக்கு மச்சி!" என்று இவர்களது காலேஜை சேர்ந்த மாணவிகள் கோஷமிட்டனர்.
சிறுது நேரத்தில் முடிவுகள் அறிவிக்கபட - கரிஷுமாவின் அணியும் பூரணியின் அணியும் சம மதிபெண்கள் பெற்று 'டை' நிலையில் இருந்தது. இவர்களை மேடைக்கு அழைத்து முடிவை அறிவித்தனர் நடுவர்கள்.
"இதுக்கு தீர்வு, நாளைக்கு - டை பிரேக்கர் டான்ஸ், ஒரே ஒரு டான்ஸ், எந்த ஸ்டைல் வேணுமானாலும் ஆடலாம். ஸோலோ இல்லை டூயட்", என்று கூறிவிட்டு கிள்மபிவிட்டனர்.
இவர்கள் மீது வெறுப்பில் இருந்த எதிர் அணி இவர்கள் தங்களுக்கு நிகராக மீண்டும் போட்டியா என்று கறுவிக்கொண்டிருந்தனர்.
"கல்ச்சுரல் செகரட்டரியை பாக்க போகணும் வாங்க, நாளைய டான்ஸ் பத்தி டிஸ்கஸ் பண்ணனும்" என்று சுகந்தி முன்னே நடந்தாள்.
"மச்சி! பசிக்குது டீ. கேன்டீன்ல தான் இன்னிக்கு எனக்கு சாப்பாடு. வாங்கடீ" என்றாள் ரோஷினி. மற்றவர்களுக்கும் வயிற்றின் நினைவு வர பரிதாபமாய் முகத்தை வைத்துக்கொண்டு யோசித்தனர்.
"சரி ஒண்ணு பண்ணலாம், நீங்க போங்க நான் பார்சல் வாங்கிட்டு வரேன், நம்ம லஞ்ச் ஸ்பாட்டுல மீட் பண்ணலாம்."
கல்சசுரல் செகரட்டரியோடு பேசி நாளைய போட்டிக்கான பாடல், யார் ஆடுவது என தீர்மானித்தனர். பேசும் போது, எதிர் அணியினரின் செய்கையை பற்றி மறக்காமல் குறிப்பிட்டாள் பூரணி.
"இவங்கள ஹாண்டில் பண்ண முடியாதுன்னு இல்லை ஸ்ருதி. ஜஸ்ட் இன்பார்ம் பண்ணவேண்டியது அவசியம்ன்னு பட்டுச்சு. ஆடியன்ஸ்ல கத்தினதும் அவங்க ஆளுங்களா" இருக்கலாம்" என்றாள்.
"ரோஷு இன்னும் ஆளை காணோமே பூரணி" சம்யுக்தா கேட்க.
"சரி வாங்க பாக்கலாம், நானும் சாப்பிட அங்கதான் போறேன்" என்று எழுந்தாள் ஸ்ருதி.
கேன்டீன் வாயிலில் அமர்க்களமாக இருந்தது.
"பர்ஸ்ட் எய்ட் பாக்ஸ் எங்க? டிபார்ட்மண்ட்ல யாராச்சும் இன்பாரம் பண்ணுங்கபா. பிரின்ஸி க்கு சொல்லணுமா? "
இப்படி கலவரமாக பல குரல்கள், கேள்விகள்.
ஸ்ருதி கூட்டத்தை விலக்க முயன்றாள், "என்ன பிரச்சினை? என்ன பண்ணுறீங்க எல்லாம்"?
"சீனியர்! டான்ஸ் ஆடுன அக்கா ஒருத்தகங்களுக்கு அடிபட்டுருச்சாம்" என்று ஜூனியர் ஒருத்தி சொல்லி முடிக்கவும் "ரோஷூ" என்று அலறியபடி கூட்டத்தை விலக்கிக்கொண்டு முன்னே சென்றனர். வலியில் துடித்துக்கொண்டு தரையில் கிடந்தாள் ரோஷினி. நெற்றியில் ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. ஆடையிலும் முகத்திலும் உணவு சிந்தியதற்கான அடையாளம்.
"ரோஷு, என்ன ஆச்சு டா?" மூவரும் ஒருசேர கேட்டனர் அருகே அமர்ந்து, அவள் பேச முடியாமல் அழுது கொண்டிருந்தாள்.
"கொதிக்கிற டீயும், சாம்பாரும் மேல கொட்டிடுச்சு பூரணி, தடுக்கி கீழே விழுந்ததுல. அதுவும் வாசல் படியில் விழுந்ததால, நெத்தியில காயம்" என்றாள் அருகிலிருந்த அவள் வகுப்பு தோழி. பின்னர் அவளுக்கும், ஸருதிக்கும் கேட்கும் வகையில் ஏதோ கூறினாள்.
அதிர்ந்தது போய் "ஆர் யு ஷ்யுர்? " என்றாள் ஸ்ருதி.
"நான் பக்கத்துல தான் இருந்தேன் ஸ்ருதி. கேன்டீன் சிசிடீவி வேணும்னா செக் பண்ணி பாக்கலாம் கன்பரம் பண்ணிக்க" என்றாள் சமயோசிதமாக. மெல்ல சில மாணவிகள் உதவியோடு ரோஷினியை முதலுதவி அறைக்கு கொண்டு சென்றனர். அதிக சூடான டீயும், சாம்பாரும் அவள் மீது கொட்டியதில் வயிறு மற்றும் தொடை பகுதியில் காயம் ஏற்பட்டிருந்தது. அது போக நெற்றியில் காயம். அவளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அவளுக்கு ஆறுதல் சொல்ல போன பூரணியிடம் முழூ விவரத்தையும் சொன்ன ரோஷினி, "அதுங்க அல்லக்கைதான். ஏவி விட்டவ வீட்டுக்கு போய்ட்டா. ஒருத்தி சுகு வீட்டுக்கு எதிர் வீடாம் ரொம்ப பயந்தா - மாட்டிகிட்டா என்ன செய்யிரதுன்னு" என்ற முக்கியமான விஷயத்தை கூறி விட்டு ஆம்புலன்ஸில் ஏறினாள்.
முழு விவரத்தையும் முதல்வரிடம் தெரிவித்தனர்.
அவர் வருத்தமும் கோபமும் கலந்த குரலில், "வருஷா வருஷம் இப்படி எதாவது ஒரு சம்பவம் மாணவர்களுக்குள்ளே. அப்படி என்ன போட்டி பொறாமை? நான் அந்த காலேஜ் பிரின்ஸிகிட்ட பேசறேன்".
செல்போனை எடுத்தவரை தடுத்தாள் பூரணி
"மேம் ப்ளீஸ்! நீங்க இப்போ கம்ப்ளைண்ட் பண்ணா அவளை சஸ்பெண்ட் இல்லைனா ரெஸ்டிகேட் பண்ணுவாங்க, அது வேண்டாம் மேம். யாரா இருந்தாலும் படிப்பு, கேரியர் பாதிக்ககூடாது. அவளுக்கு நம்ம காலேஜ் மாதிரி இடத்துல படிக்கிற பசங்க டேலனட் இல்லாதவங்க மட்டம்னு நினைப்பு. நாளைக்கு டைபிரேக்கர்ல ஆட பர்மிஷன் குடுங்க. அது கேன்சல் பண்ணா நம்ம காலேஜ் மேல அவ சொல்ற களங்கம் உண்மைனு ஆகிடும். இன் தி மீன் டைம், நீங்க அவங்க தப்பு செஞ்சதுக்கான எவிடன்ஸ் கலெக்ட் பண்ணிகோங்க மேம்."
" நீ பிரின்ஸிபல்கிட்ட பேசுறனு நினைப்பு இருக்கா அன்னப்பூரணி?" என்றார் சற்று கடுமையான குரலில். ஸ்ருதி சிரிப்பை அடக்கிகொண்டாள்.
"மேம் ஸாரி!" பூரணி எழுந்தாள். "அவங்க டார்கெட் - என் காலேஜ் அண்ட் என் பிரண்ட். அதுக்கு நான் பர்ஸ்னலா பதில் குடுத்தே தீருவேன். அது உங்க பர்மிஷனோட இந்த போட்டியின் மூலமா இருக்கணும்னு ஆசைப்படுறேன்".
வெளியேறப்போனவர்களை, "ஆல் தி பெஸ்ட்" என்ற அவர் குரல் திரும்பி பார்க்க வைத்தது. "நோ அன் எத்திகல் மீன்ஸ்" (தவறான வழிமுறைகள் கூடாது) என்று விரலை நீட்டி எச்சரித்தார்.
"கண்டிப்பா களங்கம் ஏற்படுத்தமாட்டோம் மேம், நன்றி" என்று கூறி வெளியேறினாள்.
"அடியே பிசாசே! ஒரு நிமிஷம் பலி குடுக்க இருந்தியே, உன்னை சப்போர்ட் பண்ண வந்த பாவத்துக்கு. ப்ரின்ஸிகிட்ட இப்படியாடி பேசுவ?" சுகந்தி முதலில் அடிக்க, மற்றவர்களும் முதுகை பதம் பார்த்து விட்டு மூச்சு வாங்கினர்.
"நம்ம மேம் பாவம் டி. நம்மளை எதுவும் சொல்லமாட்டாங்க."
"அடிங்க! நீ பேசுவ ஆத்தா. உனக்கு என்ன? டிபேட், டான்ஸ், படிப்பு எல்லாத்துலையும் ஸ்கோர் பண்ணிடுவ. எங்களை மாதிரி நார்மல் மனுச பிறவியும் இருக்கோம்டீ இங்க. நாங்க தாங்க வேண்டாம்? ஐயோ என் அரியர் வேற..." கிரேஸ் புலம்பியதும் அவளை கட்டிகொண்டு சமாதானப்படுத்தினாள் பூரணி.
"பேட் கேர்ள்! இப்டி ஐஸ் வச்சிட்து, கோவம் போய்ட்து" என்று உடைந்த தமிழில் கோபித்து கொண்டாள் ஆங்கிலோ இந்தியனான ஜெஸி.
"இது டமில் பேசுது, டமில் ஓடுது" என அவளை வாரினாள் பதிலுக்கு.
நாளைய போட்டியில் என்ன நடக்கும்? மீண்டும் எதிரி அணி சதி செய்வார்களா?
AUTHOR'S NOTE:
வாட்பேட் தமிழ் வாசக அன்பர்களுக்கு என் அன்பான வணக்கங்கள்🙏 என் பெயர் அனு. வாட்பேட் தமிழ் தளத்தில் இதுவே என் முதல் பதிவு. இந்த கதையை நான் வேறு ஒரு தளத்தில் முன்பே பதிவிட்டிருக்கிறேன். இப்பொழுது சிறு சிறு மாற்றங்கள் செய்து இங்கே பதிவேற்றம் செய்கிறேன். உங்கள் கருத்துக்களையும், அன்பையும், வாக்குகளையும், ஆதரவையும் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுகொள்கிறேன்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro