அகத்தினை - அறிந்தினை
துயிலுலகின் தூதுவளை
கனவுகளில் கைது செய்தேன்...
திசையறியா தேவதையை
தேன்நிலவில் சிறையெடுத்தேன்...
மல்லிகை மணத்தோடு
மணமகிழ் மனதோடு உன்
மயில் கழுத்துச் சரிவுகளில்
இதழ்களால் ஒரு பயணம்
மோகத்தீ காடுகளில்
வீளாத வேட்கைகளில்...
வெட்கமும் நாணமும்
கொஞ்சலாய் அஞ்சியதோ...
உள்ளிருப்பு போராட்டம்
உள் நெஞ்சில் தொடங்கியதோ...
உன் முத்தத்தில் முகம் புதைத்து
மொத்தமாய் நான்
நீ யாக வேண்டும்...
சத்தமிட்ட தேகத்தில்
சங்கிதழ் முத்து போல் நீ
நானாக வேண்டும்....
விளையாட விண்மீண்கள்
விளக்காக பிறை நிலாக்கள்
விடியல் தொடங்குமுன்
விண்ணுலகில் அகம் பதிப்போம்...
வழிந்தோடும் வியர்வை அருவியில்
கைவிரலால் காதல் வரைவோம்...
எல்லையில்லா இன்பந்தரும்
அகத்தினை ஆராய்வோம்....
ஜே...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro