Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

தேடல் - 9

யதீஷ் அதிர்ச்சியில் ஒன்றையும் நம்ப முடியாமல் சாலையிலிருந்த கவனத்தை முழுதாய் இழந்து கேத்ரியனை நோக்க " ரியா ஹியர் " என்ற கேத்ரியனின் அழுகை நிறைந்த குரல் இன்னும் அவனை அதிர்ச்சியாக்க " வில் கெட் டு தி டெஸ்டினேஷன் சூன் ஃபாஹிர் நிரன் ஃப்ரம் அல்ட்ரா மூன் " என கேட்ட குரலில் யதீஷ் மொத்தமும் செயல் இழக்க கண்ணீர் கலந்த புன்னகையுடன் எதற்சையாய் நிமிர்ந்த கேத்ரியன் தன்னை பேரதிர்ச்சியுடன் பார்த்திருந்த யதீஷை கண்டதும் அதிர்ச்சியடைய அவளை கலைத்தது என்னவோ அவர்களின் காரை இடிக்க முன்னேறி வந்த லாரியின் ஹாரன் சத்தம் தான்....

அதில் பட்டென வெளி வந்த யதீஷ் தன் கவனத்தை மீண்டும் சேர்க்க நேரமெடுத்தாலும் அந்த லாரியை முன்பே பார்த்து விட்டதால் எந்த பக்கமென்றெல்லாம் கவனிக்காமல் ஸ்டியரிங்கை வலது புறமாய் திருப்ப கன நொடியில் சாலையை விட்டு பக்கவாட்டிலிருந்த வேற்று நிலத்தில் காரை இறொக்கிய யதீஷ் ஒரு கட்டத்தில் ப்ரேக்கை அழுத்தி காரை நிறுத்தினான்....

யதீஷ் : ரியா என கேத்ரியனை பார்க்க எச்சிலை கூட்டி விழுங்கிய ரியா தன் லாங் ஸ்லீவ்ஸை இழுத்து உடனே அந்த கடிகாரத்தை மறைக்க முயல யதீஷ் அவள் கரத்தை பிடித்தான்...

ரியா : ஐ..ம் சா..ரி அவன் கூற வருவதே புரியவில்லை என்பதை போல் இவள் திசை திருப்ப முயல அதற்கு முன் ஒளியை அணைத்திருந்த அவளின் கடிகாரத்தை விழி விரிய கண்ட யதீஷ்...

யதீஷ் : நீ..நீங்க ரியா.வா.. இவ்ளோ நேரம் பேசுனது யாரு..

ரியா : ஐம் சாரி.. நீங்க தப்பா நினைச்சிக்கிட்டு

யதீஷ் : தர்மனோட விண்மில்ஸ் ஆர்கனிஸேஷன்ல வேல பாத்த அதே ரியா தான் நீங்களா... சைத்தான்யா அப்போ உண்மையாவே உங்கள தான் தேடுறானா.. இப்போ அடுத்தடுத்து பெயர் வரிசையா சொன்னீங்களே.. அவங்க எல்லாரும் உங்க ஃப்ரெண்ஸ் தானே.. அதோட ஃபாஹிர் நிரன் அல்ற்றா மூன் என இவன் ஒவ்வொன்றாய் அடுக்கிக் கொண்டே இருக்க வெளிரி போன ரியா கேட்டது ஒரே கேள்வி மட்டும் தான்...

ரியா : நீங்க மதி மர்மம் ங்குர புக்க படிச்சீங்களா என கண்ணிமைக்க மறந்து கேட்பவளை கண்டு அவன் தலையசைக்க ரியாவிற்கு தலை சுற்றுவதை போலிருந்தது...

எவ்வாறு நடந்தது... இதற்கு வாய்ப்பே இல்லையே.. என இவள் மருண்டு விழிக்க யதீஷின் குரல் அவளை அதிர வைத்தது

யதீஷ் : பதில் சொல்லுங்க மிஸ் கேத்ரியன் ஐ மீன் ரியா..

ரியா : எப்டி உங்களுக்கு அந்த புக் கெடச்சிது.. எங்கேந்து படிச்சிசீங்க...

யதீஷ் : ஹ்ம்ம் ஆன்லைன்ல இருந்தது... ××× இந்த வெப்சைட்ல

ரியா : எனக்கு தெரியாம இவ வைப்சைட்ல வேற பப்லிஷ் பன்னிட்டாளா சனா உன்ன என வாயிற்குள்ளே முனகியவளின் கூற்று பாதி மட்டும் அவனுக்கு கேட்டது

யதீஷ் : ஏங்க உங்களுக்கு இந்த கதை எழுதுனது யாருன்னு அப்போ தெரியுமா என கண்கள் விரிய கேட்க ரியா என்ன பதிலளிப்பதென தெரியாமல் விழித்தாள்...

அவள் பரிதவித்து விழிப்பதை கண்ட யதீஷ் இதற்கு மேலும் அவளை ஏதேனும் கேட்டு இன்னும் பாடுபடுத்த வேண்டாமென கண்களை அவளிடமிருந்து பிரித்து சாலையில் பதித்தான்...

ரியா அவனை இன்னும் புரியாத பார்வையே பார்த்து கொண்டிருக்க ஸ்ட்டியரிங்கை பிடித்து பெருமூச்சு விட்டு தன்னை அசுவாசப்படுத்தி கொண்ட யதீஷ் " சாரி " என மெதுவாய் கூறி விட்டு காருக்கு உயிரூட்டி உயிர்த்தெழ வைத்தான்...

காரின் பின் பார்த்தவாறு ரிவர்ஸ் எடுத்து மீண்டும் சாலையை நோக்கி சென்றவன் காரை மிதமான வேகத்தில் ஓட்டிச் செல்ல ரியா தான் இவனின் கதாபாத்திரமே புரியாமல் விழித்து கொண்டிருந்தாள்...

தீரா : எவ்ளோ நேரம் முளிப்ப... கண்ணு கண்ணாடிய விட்டு வெளிய வந்து விழுந்துட போகுது சும்மா இரு டி என்கவும் இருவரும் திரும்பி பின் பக்க சீட்டை பார்க்க யதீஷின் வதனத்தில் இல்லா அதிர்ச்சி ரியாவின் முகத்தில் அச்சடித்ததை போல் அப்பட்டமாய் தெரிந்தது

ரியா : அடியே நீயா என அதிர்ச்சியாய் கேட்டதும் யதீஷ் " இந்த கிருக்க உங்களுக்கு தெரியுமா" என்பதை போல் ரியாவை பார்த்தான்

தீரா : எஸ்.. அப்சல்யூட்லி மீ

ரியா : எந்த தைரியத்துல டி வந்த நீ

தீரா : தோ இவன் இருக்கானேங்குர தைரியத்துல தான் என யதீஷை மாட்டி விட

யதீஷ் : அடியேய் எனக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்ல என்ன நடக்குது இங்க என அவன் திடீரென கத்த

தீரா : ஆமா நீ தான் காரணம்.. நீ சைத்தான்யாவ மீட் பன்னாம இருந்துர்ந்தா ரியா மாட்டீற்க்க மாட்டாளே.. என்கவும் துரோகியா டா என்பதை போல் ரியா அவனை பார்க்க யதீஷ் பீதியுடன் முளித்தான்

யதீஷ் : குட்டிமா குட்டியா இருக்கேன்னு பாக்க மாட்டேன்... கொட்டியே கீழ தள்ளீடுவேன்.. நானா போய் சைத்தான்யாவ பாத்தேன்... அங்க இவங்க வருவாங்கன்னும் எனக்கு தெரியாது.. அவன் வருவான்னும் தெரியாது... திடீர்னு இவங்கள பாத்து அவன் ஹைப்பராவான்னும் எனக்கு தெரியாது

தீரா : ஏன்னா அதான் விதி என்றதும் இருவரும் அவளை பார்த்து முறைத்தனர்...

யதீஷ்  : அவள விடுங்க ரியா.. நீங்க எங்க போகனும்னு சொல்லுங்க.. நா உங்கள ட்ராப் பன்னீடுறேன்..

ரியா : என்ன.. என முதலில் எங்கு செல்வதென தெரியாமல் இவள் தினற அதை உணர்ந்ததை போலிருந்தது யதீஷின் முகம்

யதீஷ் : சொல்லுங்க

ரியா ம.வ : நம்ம வீட்டுக்கே போக முடியுமா.. இவரு யாருன்னே தெரியாது.. அந்த இடத்துக்கு அழச்சிட்டு போறதால பிரச்சனை வருமா... நம்ம வீடு பத்தி தெரிஞ்சிடுமே.. அது நடக்கக் கூடாதே... என தன் சிந்தனைக்குள்ளே சுழல யதீஷ் அவளின் தோளை பிடித்ததும் தான் அதிர்ந்து அவன் புறம் சட்டென திரும்பினாள்...

யதீஷ் : ஹே கூல் கூல்.. உங்க வாட்ச்ல ஏதோ சத்தம் வருது.. அதான் கூப்ட்டேன்.. நீங்க ஏதோ யோசிச்சிட்டே இருந்தீங்க.. அதான் என்கவும் தலையை மட்டும் அசைத்த ரியா அவளின் கடிகாரத்தை பரிசோதிக்க அதில் வந்திருந்த கோடிங் ஒன்று அவளின் புருவத்தை முடிச்சிட வைத்தது...

அதை ஓரிரு நொடிகள் பார்த்திருந்தவளின் முகம் அதன் பின் தெளிவாக தான் செல்ல வேண்டிய இடத்தை தீர்மானித்தவளாய் தன் தொண்டையை செருமினாள்...

ரியா : நா சொல்ற இடத்துக்கு போகலாம் என்றதும் சாலையிலிருந்து கண்களை பிரித்து அவளை ஒரு முறை நோக்கிய யதீஷ் அவள் முகத்தில் முன்பில்லா ஒரு குழப்பமும் அத்துடன் ஒரு மிரட்சியும் மகிழ்ச்சியும் கலந்த உணர்விருப்பதை கண்டு கொண்டு சரியென தலையசைத்தான்...

அந்த சாலையோரமாய் பச்சை நிற ஜெர்கினில் ஒரு தொலைகாட்சி நிறுவனத்தின் முன் அந்த தொலைகாட்சியில் ஓடிய செய்தியை கண்டவாறிருந்தான் அவன்...

அந்த தொலைகாட்சியிலோ சடார் சடாரென பல கார்கள் வேகமாய் செல்லும் சீசிட்டீவி ஃபூட்டேஜை காண்பித்து கொண்டிருக்க அதில் சென்ற முதல் காரை படம் பிடித்த படத்தை ஒளிபரப்பினர்...

அதற்கு அருகிலே ஒரு ஆண் " நான்கு வழி சாலையில் நன்பகல் நேரத்தில் இன்று அதிகபடியான வேகத்தையும் தாண்டி அடுத்தடுத்து வரிசையாய் சென்றுள்ளது.. இதில் ஒரு வாகன ஓட்டியிற்கு விபத்தேற்பட்டு பலத்த காயம் பெற்று அருகிலிருக்கும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.. இந்த சம்பவத்தின் அடிபடையில் எந்த ஒரு தகவலும் கிடைக்காததால் முதலில் சென்ற வாகன ஓட்டிகளை காவலர்கள் தேடி வருவதாய் தகவல் கிடைத்துள்ளது... முதல் வாகனத்தில் ஒரு இளைஞருடன் ஒரு இளம் பெண்ணும் இருந்துள்ளார் " என்றதோடு யதீஷ் மற்றும் ரியாவின் மங்களான முகம் அந்த காரின் கண்ணாடியில் தெளிவின்றி தெரிய அது ரியா தான் என பார்க்கும் அவனால் உறுதியாய் கூற முடிந்தது...

தன் ஜெர்கினின் ஸ்லீவை மேலிழுத்தவன் தன் கரத்திலிருந்த பச்சையும் வெள்ளையும் கலந்த கடிகாரத்தில் ஏதோ ஒன்றை செய்ய தொடங்கினான்..

சில நிமிடங்களில் நிமிர்ந்து மீண்டும் அந்த செய்தியை கண்டவனின் பார்வை ரியாவின் அருகிலிருந்த யதீஷை தீண்ட தன் தங்கையை காத்தவனுக்கு மானசீகமாய் நன்றி கூறி விட்டு அங்கிருந்து மெதுவாய் நகர்ந்து சென்றான்...

ஒரு மணி நேரம் முன்பு

ரியாவும் தாராவும் அவர்களின் டக்ஸியில் ஏற போன நேரம் சரியாக ரியாவின் செல்பேசியில் ஒரு மணி அடித்தது..

அதை கண்டதும் இவள் பறபறக்க தாராவை நம் வீட்டிலே ஒரு அரை மணி நேரம் இருக்கக் கூறி விட்டு அந்த சாலைல்லிலல் முணையில் நின்ற அவர்கள் வந்த டக்ஸியில் எங்கோ கிளம்பி சென்றாள்...

தாரா தனக்கு தனிமை தேவையென்றென எண்ணியதாலும் அங்கேயே இருக்க சம்மதித்து மீண்டும் அதே வீட்டிற்குள் சென்றாள்...

ரியா அவளது செல்பேசியில் பேசிக்கொண்டே வந்து கொண்டிருந்தாள்.. அப்புறமிருந்த ஒருவர்

அவர் : ஹலோ மம்.. நாங்க எம் எம் ட்வெல் கம்பெனிலேந்து காள் பன்றோம்.. ஆன்லைன்ல உங்க கோட்ஸ் பாத்தோம்.. எங்களுக்கு உங்க கோட்ஸ் ரொம்ப புடிச்சிருக்கு.. நீங்க விருப்பப்ட்டா நாங்க ஃப்ராஃபிட்டபல் ராயலிட்டியோட எடுத்துக்குறோம் மம்...

ரியா : தன்க் யு சோ மச்.. நா சில விஷயம் உங்க எம்டி கூட பேச வேண்டியதிருக்கும்.. அப்பாய்ன்மென்ட் கிடைக்குமா..

அவர் : ஷ்யுர் மம்.. நீங்க இந்த அட்ரஸ்க்கு வாங்க என்று விட்டு காளை அணைக்க தன் குறுஞ்செய்திக்கு வந்த விலாசத்தை ஓட்டுனரிடம் காட்டி அது யதீஷின் நிறுவனமென தெரியாமல் அவளே அவனை தேடிச் சென்றாள்....

அந்த நிறுவனத்தின் முன் நின்ற ரியா ஓட்டுனரிடம் பணம் கொடுத்து விட்டு உள்ளே செல்ல பெண்ணொருவள் ரியாவை வரவேற்த்து எம்டியின் அறையை சுட்டிக் காட்ட அதை கண்டதும் அங்கே சென்று கதவை தட்டவும் உள்ளிருந்து யதீஷின் மிடுக்கான குரலில் " கம் இன் " என கேட்டது

கதவை திறந்து கொண்டு உள்ளே சென்ற ரியாவும் யார் வருகிறார்களென பார்க்க நிமிர்ந்த யீஷும் ஒருவரையொருவர் கண்டு அதிர்ச்சியடைய யதீஷின் மனசாட்சி அவனை நிலைக்கு இழுத்து கொண்டு வந்து அவன் வதனத்தில் பூரிப்பான புன்னகை ஒன்றை சூட்டியது

யதீஷ் : வாங்க மிஸ் கேத்ரியன்... டேக் யுவர் சீட் என அதே புன்னகையுடன் அழைக்க அதிர்ச்சியிலே உள்ளே வந்த ரியா அவன் காட்டிய இடத்தில் அமர்ந்தாள்...

யதீஷ் அவளிடம் ஏதோ கூற வந்த அந்த நேரம் கதவிற்கு பின் " யதீஷ் உள்ள வரலாமா " என்ற சைத்தான்யாவின் குரல் கேட்டது...

யதீஷ் எழுந்து சென்று கதவை திறக்க சைத்தான்யாவின் வரவை எதிர்பார்க்காதது அவன் முகத்திலே அப்பட்டமாய் தெரிந்தது...

சைத்தான்யா : டிஸ்டர்ப் பன்னிட்டேனா யதீஷ் என திரும்பி அமர்ந்திருந்த ரியாவை பார்த்தவாறு கேட்க

யதீஷ் : ஹான்.. இ.இல்ல சைத்தான்யா... உள்ள வாங்க.. ப்லீஸ் வெல்கம்... என்கவும் ரியாவின் அதிர்ச்சி அனைத்தும் காற்றோடு மறைந்திருக்க மெதுவாய் திரும்பி பார்த்தவள் தன் எதிர்பார்ப்பை பொய்க்காமல் யதீஷுடன் கை குலுக்கிய சைத்தான்யாவை கண்டு பேரதிர்ச்சியுற்றாள்...

மதி மர்மம் புத்தகத்தை ஊர் முழுவதும் தேடி கலைத்துப் போன சைத்தான்யா அதை யதீஷிடமே வாங்கிச் செல்லத் தான் வந்திருந்தான்...

எதற்சையாய் திரும்பிய யதீஷ் ரியா அதிர்ந்தமர்ந்திருப்பதை காண அதே போல் திரும்பிய சைத்தான்யா தன்னை நோக்கிக் கொண்டிருந்தவளை கண்டதும் செயலிழந்து போயிருந்தான்...

யதீஷ் : என்னாச்சு மிஸ் கேத்ரியன் எதாவது ப்ராப்லமா என மென்மையாய் கேட்டும் ரியா தன் பார்வையை சைத்தான்யாவிடமிருந்து திருப்பாது அப்படியே அமர்ந்திருக்க சைத்தான்யவின் கோவம் எப்போதோ எழுந்திருந்தது...

சைத்தான்யா : ஏய் நீ இங்க என்ன செய்ர என திடீரென கத்தியவனை திடுக்கிட்டு ரியா பார்க்க யதீஷ் அதிர்ந்து பார்த்தான்...

ரியா : நா..நா

சைத்தான்யா : உன்ன எங்க எங்கலாம் தேடுனேன் தெரியுமா... இப்போ நீயே வந்து மாட்டிக்கிட்டல்ல.. உன்ன என அவளை அடிப்பதை போல் சென்றவனின் முன் யதீஷ் வந்து குறுக்கிட்டு நின்றான்...

யதீஷ் : இருங்க சைத்தான்யா... நீங்க தப்பா நினைச்சு பேசிக்கிட்டு இருக்கீங்க.. ஷி ஈஸ்..

சைத்தான்யா : உனக்கு எதுவும் தெரியாது யதீஷ்.. இவளுக்கு மட்டும் தான் என் அப்பா எப்டி இறந்தாருன்னு தெரியும்... இவ தான் அவர ஏதோ செஞ்சிட்டா...

யதீஷ் : சைத்தான்யா நீங்க தப்பா புரிசிக்கிட்டு இருக்கீங்க என தனக்கு புரிய வைக்க முயன்றவனை ஒரு தள்ளு தள்ளிய சைத்தான்யா அவனின் கோட்டிலிருந்து ஒரு பிஸ்ட்டலை உயர்த்தி ரியாவை நோக்கி குறி வைக்க யதீஷ் சைத்தான்யாவை இவ்வாறாக என்றும் எதிர்பார்க்கவில்லை...

யதீஷ் : கேத்ரியன் ரன்... இங்க இருந்து போங்க என ரியாவை நோக்கி கத்த அவனை திகிலுடன் நோக்கிய கேத்ரியனை காணாமல் தன் காலால் சைத்தான்யாவின் கரத்தில் இடித்து அந்த பிஸ்ட்டலை தூக்கி எறிந்தான் யதீஷ்..

சைத்தான்யா : யதீஷ்.. என்ன செய்ற நீ

யதீஷ் : நீங்க பொருமையா இல்ல சைத்தான்யா... கோவத்துல தப்பு பன்ன பாக்குறீங்க... நா சொல்றத கொஞ்சம் கேளுங்க... என அவனை மீண்டும் தடுத்தான்...

சைத்தான்யா : நா சொல்றது தான் உண்மை யதீஷ்..

யதீஷ் : நீங்க சொல்றது உண்மையாவே இருந்தாலும் அவங்கள கொல்றது ஒன்னும் திர்வு இல்ல சைத்தான்யா

சைத்தான்யா : எனக்கு நீ ஒன்னும் சொல்ல தேவையில்ல... நகரு என தனக்கு மதிலாக நின்றவனை தள்ள

யதீஷ் : முடியாது சைத்தான்யா ... கேத்ரியன் ரன்.. இந்தாங்க இது என் கார் சாவி... ஐ செட் ரன்... என முதலில் சைத்தான்யாவை தள்ளி விட்டு விட்டு அவளிடம் கார் சாவியை தூக்கி எறிந்தவன் இன்னும் அவள் அப்படியே நிற்கவும் உரக்கக் கூற ரியா வேகவேகமாய் தலையசைத்து கதவருகில் ஓடினாள்...

சைத்தான்யா கோவம் தலைக்கேறியதால் யதீஷை தாண்டி  கேத்ரியனை பிடிக்க வேறு வழியின்றி " ஐம் சாரி சைத்தான்யா " என்ற யதீஷ் ரியாவின் கரத்தை பிடித்த சைத்தான்யாவின் கரத்தை தன் இரு கரத்தால் பிடித்து ஒரு சுழற்று சுழற்றி பற்றி எடுத்தவன் பலமாய் அல்லாது சைத்தான்யாவை கீழே தள்ளி விட்டான்...

அதிர்ந்து நின்ற ரியாவை பிடித்த யதீஷ் அங்கிருந்து வேகமாய் வெளியேறி கீழே ஓடினான்...

நிறுவனத்திலுள்ளோர் அனைவரும் அவர்களை விசித்திரமாய் பார்க்க கீழே பார்க்கிங்கிலிருந்த தன் காரை எடுத்த யதீஷ் ரியாவையும் அமர வைத்து கொண்டு சீரிப் பாய அவனை நான்கிற்கும் மேற்பட்ட கார்கள் அடுத்தடுத்து வரிசையாய் பின் தொடர்ந்து வேகமாய் வந்தது...

தன் வேகத்தை கண்ணிமைக்கும் நொடி பொழுதில் கூட்டிய யதீஷ் நான்கு வழி சாலையில் சீரிப் பறந்ததால் விரைவிலே இவர்கள் சைத்தான்யாவிடமிருந்து தப்பினர்...

இவை பற்றி கேட்பதற்காய் அவன் வாய் திறந்தபோது தான் ரியாவின் கடிகாரத்திலிருந்து அவன் பிடித்து மதி மர்மம் கதாபாத்திரங்களை தாரா அட்டெண்டன்ஸ் எடுக்க தொடங்கினாள்...

யதீஷின் கேபினில் நின்று தன் கோவத்தை வெளியேற்றுவதை போல் அங்கிருந்த அனைவரையும் திடுக்கிட செய்வதை போல் அலரினான் தர்மனின் ஒரே மகன் சைத்தான்யா ராஜ தர்மன்...

தேடல் தொடரும்...

ஹாய் இதயங்களே.... யூடி எந்டி இருக்கு.. ஹிஹி அடுத்த யூடில நம்ம எல்லா கேரக்ட்டர்ஸையும் பாத்துடலாம்... வானு கிட்ட வே டபுல் யூடி தரேன்னு ப்ராமிஸ் பன்னீர்க்கேன்.. சோ உங்களுக்கு இன்னோறு யூடி படிச்சா போரடிக்காதுன்னு தான் நினைக்கிறேன்... மாயம் எப்பிலாக் இன்னும் முடிக்காம இருக்குரதுக்கு காரணம் இருக்கு... நா யோசிச்ச மாரி எழுத எனக்கு டைம் எடுக்குது.. ஏனோ தானோன்னு முடிக்க எனக்கு விருப்பமில்ல... சோ புரிஞ்சிப்பீங்கன்னு நம்புறேன்... டாட்டா

DhiraDhi

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro