Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

தேடல் - 59

நிலா

தன் முன் எங்கிருந்தோ வந்து குதித்தவனை கண்டு திடுக்கிட்டு அந்த பெண்மணி நெஞ்சை பிடித்து கொண்டு பின்னே நகர லியான் முதலில் கேட்ட கேள்வியே அவருக்கு மாரடைப்பை கொடுத்தது...

அப்பெண்மணி : எனக்கு நீங்க யாருன்னே தெரியாது... என்ன விடுங்க.. நா உங்கள வேற யாரோன்னு நெனச்சிட்டேன்... நா எந்த குழந்தையையும் அனுப்பி வைக்கல... என அவர் எடுத்த எடுப்பிலே மறுத்து விட்டு அங்கிருந்து செல்வதிலே குறியாய் இருக்க பொருமை இழந்து தன் தோள் வரை நீண்ட கேசத்தை அழுந்த கோதிய லியான்

லியான் : அம்மா ப்லீஸ்... நீங்க ஏரண்னு யார சொன்னீங்கன்னு எனக்குத் தெரியல... பட் ஐம் ஷ்யுர் எனக்கும் அவருக்கும் ஏதோ ஒரு சம்மந்தம் இருக்கு... அவரு யாருன்னு தெளிவா சொல்லுங்க ப்லீஸ்...

உண்மை தான்... லியானுக்கு அவனும் அவனின் சகோதரனின் அவ்விருவரின் தந்தையின் அச்சடித்த பத்திரம் என்ற உண்மையே தெரியாது... சத்யாவாவது அவர்களின் தாய் வரைந்த மார்னின் கண்களை பார்த்திருக்க அதை கூட லியான் பார்த்ததில்லை...

அப்பெண்மணி : இல்ல தம்பி... அப்டிலாம் யாரும் எனக்கு தெரியாது... என்ன விடுங்க நா போகனும்...

லியான் : ஏங்க கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி செவனேன்னு போய்ட்டு இருந்த என்ன புடிச்சு ஏதேதோ சொல்லி கொழப்பீட்டு இப்போ எதுவும் தெரியாதுன்னு சொன்னா எப்டி என அவனும் ஒரு கட்டத்தில் காட்டு கத்து கத்த அவரோ அனை மீண்டும சற்று சந்தேகமாய் நோக்கியவர்

அப்பெண்மணி : நீங்க உண்மையாவே ஏரண் இல்லையா தம்பி? என மீண்டும் கேட்க லியானுக்கு எங்கு சென்று முட்டி கொள்ளலாமென்றிருந்தது..

லியான் : இங்க பாருங்கமா... நீ ஏரண்னு யார சொல்றீங்கன்னு எனக்கு தெரியல.. என் பேரு லியான்-என அவனை முடிக்க கூட விடாமல் அவர் வாயை பிளந்து அதிர்ச்சியை வெளிகாட்ட லியான் சொல்வதை அப்படியே நிறுத்தி விட்டிருந்தான்...

அப்பெண்மணி : கடவுளே.. லியான் நீயா இது... இத்தன வர்ஷம் களிச்சு பாத்ததும் நா உன்ன உங்க அப்பான்னு நெனச்சிட்டேன்ப்பா... என்றவரை இப்போது அவன் நம்பாமல் பார்க்க அந்த பார்வையின் அர்த்தம் புரிந்ததை போல தலை கால் புரியாது ஏதேதோ வேகமாய் தன் சட்டை பையில் அவர் தேட... சில நொடிகளிலே ஒரு தட்டையான மரப்பெட்டியை தேடி எடுத்தார்...

அதிலிருந்து மடங்கியிருந்த ஒரு தாளை காட்டிய அப்பெண்மணி " இங்க பாரு... இது.. இது நீ தான்... இது தான் உங்கப்பா... ஏரண்.. இது உங்க அம்மா.. அமூரா... இதப்பாருப்பா " என அந்த பழைய புகைமடத்தை நீட்ட தன் கண்களை தானே நம்ப இயலாமல் அதை வாங்கிய லியானின் கண்களில் கண்ணீர் கோர்த்து கொண்டது உண்மையே...

அந்த புகைபடம் மஞ்சள் பூத்திருந்தாலும் ஒரு நிறைந்த புன்னகையுடன் நிறைமாத கர்பிணியாய் மலர்ந்த முகத்துடன் நின்றிருந்த மெடரின் அருகில் லியான் மற்றும் சத்யாவை ஃபோட்டோ காப்பியை எடுத்து வைத்ததை போல சிறு புன்னகையுடன் தன் இரட்டை மகன்களை இரு தோளிலும் தூக்கி வைத்து நின்றிருந்தார் அவர்களின் தந்தை ஏரண்...

" என்ன உன்ன நியாபகமிருக்காதுப்பா... என் பேரு பமிளா... உங்க தங்கச்சி அஜிம்சனாவ என் கிட்ட தான் விட்டுட்டு போனாங்க " என அப்போதே தனது அடையாளத்தையும் தெளிவாய் கூறினார் நம் அஜிம்சனாவின் வளர்ப்பு அன்னையும் நிரனும் அத்தையுமான பமிளா...

லியான் : நீ-நீங்க சொல்றதெல்லாம்... உ-உண்மையா..

பமிளா : ஆமாப்பா... சனா இங்க கூட இருந்துர்ந்தா அஅவள உன் கண்ணு முன்னாடியே நிறுத்தீர்ப்பேன் ப்பா... அவள இத்தன வர்ஷம் எந்த உண்மையும் சொல்லாம நா வளத்துருந்தாலும் உண்மையான பாசத்தோட தான்ப்பா வளத்தேன்... அவளுக்கு நிலவோட இளவரசரரோட கல்யாணம் ஆனதும் அவங்களுக்கு கொழந்தை பொறந்ததும் ராஜாக்கு அவ மேல கோவம்... அதனால எங்க போறேன்னு சொல்லாம என் கிட்ட சொல்லாம போய்ட்டு வரேன்னு மட்டும் சொல்லீட்டு காணாம போய்ட்டாப்பா என அவர் கண்ணீர் விட்டு கூற ஒரு சில நொடிகளுக்கு லியானுக்கு என்ன சொல்வதென்று வார்த்தைகளே தெரியவில்லை...

லியான் : அஜிக்கு எதுவுமில்லம்மா... அஜி.. அஜி இப்போ சத்யா.. அதாவது லயான் கூட பூமில தான் இருக்கா... நாங்க மூணு பேரும் முன்னாடியே பூமில சந்திச்சிக்கிட்டோம்...

பமிளா : என்னப்பா சொல்ற என புரியாமல் கேட்டவருக்கு மேலோட்டமாய் மதிமர்மம் தொடங்கி ஷரூராவை தேடி வந்த தேடல் வரை இவன் கூறி முடிக்க உண்மைகளை பாதிக்கும் மேலாக குழந்தைகள் அறிந்து கொண்டனர் என்பதையும் முக்கியமாக அனைவரும் சந்தித்து கொண்டனர் என்பதையும் கேட்டு பமிளா உள்ளூற மகிழ்ச்சி அடைந்தார்...

லியான் : நா இப்போ தான் பூமிக்கு போக போறேன்மா...

பமிளா : உங்க அம்மா அமூரா உயிரோட இருந்துருந்தா உங்கள நெனச்சு ரொம்ப பெருமற்றுப்பா லியான்.. அவளுக்கு உங்க மேல அவ்ளோ பாசம்... அன்னைக்கு அந்த பூமி வாசிங்க இரெண்டு பேரால உங்களுக்கு பிரச்சனைன்னு தெரிஞ்ச உடனே உங்கம்மாவும் அப்பாவும் உங்கள பத்தி தான் யோசிச்சாங்க... வேற வழியில்லாம தான் உங்க மூணு பேரையும் பிரிச்சாங்க... ஆனா அப்பையும் உங்கள அப்டியே விட முடியாம தான் உங்க சொந்தங்களையும் உங்க கூட அனுப்புனாங்க...

லியான் : என்ன சொல்றீங்க... என இவன் கேட்டதுமே பமிளா அனைத்தையும் கூறி விட சில நொடிகளுக்கு உறைந்து நின்றிருந்த லியான் அவர் கூறிய பெயர்களை கேட்டதும் அவன் முதல் முறை ஷரூராவிடம் அவனின் நண்பர்கள் அனைவர் பற்றியும் கூறிய போது ஒரு பெயரை கேட்டு அவள் நாள் முழுவதும் மந்தம் பிடித்து அமர்ந்திருந்த நினைவு வந்து சென்ற அடுத்த நொடியே " அப்போ ஷரூ உண்மையாவே எனக்கு தங்கச்சியா? " என்ற கேள்வி தான் முதலில் உதித்தது லியானின் மனதில்...

பமிளா : இவ்ளோ நடந்தும் நீங்க ஒன்னு சேந்ததே எனக்கு சந்தோஷம்ப்பா... உங்க தங்கச்சிய பத்திரமா பாத்துக்கோங்க... அவளுக்கு ஒரு குடும்பம் இருந்தும் அத நா மறச்சிட்டேன்... நா எந்த தங்கச்சிய பத்தி சொல்றேன்னு உனக்கே புரிஞ்சிருக்கும் என அவனின் கன்னம் தட்டி அன்புடன் கூறினார்...

லியான் : அம்மா... நா.. இந்த ஃபோட்டோவ எடுத்துக்கட்டுமா என லியான் தயங்கி தயங்கி கேட்க " தாராளமா எடுத்துக்கோ பா... உனக்கு சேர வேண்டியது தான் அது " என புன்னகைத்தார் பமிளா...

தமிழகம்

நிரன் : எல்லாம் சரி... டேய் வருண் இதுல இருக்க குட்டி பையன் மாறி ஏன் டா நீ இருக்க?? என இவன் அந்த புகைபடத்தை நோட்டமிட்டபடி கேட்க ஃத்வருணிடமே அந்த கேள்விக்கு பதிலில்லாத போது குறுக்கே புகுந்த அனாமிக்கா " டேய் அண்ணா அந்த ஃபோட்டோவ குடு டா " என அதை பிடுங்கி கொண்டு கீழே ஓடினாள்...

சக்தி : என்ன டி ஆச்சு உனக்கு என சக்தி பயத்தோடு அவளை நோக்கி கத்த அதையெல்லாம் பொருட்டென்றே மதிக்காமல் அந்த ஓவியங்களிருந்த பெட்டியோடு ஓடி வந்த அனாமிக்கா மொத்தத்தையும் கீழே கடை பறப்பினாள்...

அதில் அளசி ஆராய்ந்து ஒரு ஓவியத்தை எடுத்த அனாமிக்கா அந்த புகைபடத்தோடு இந்த ஓவியத்தை வைத்து அதில் இருந்த இரட்டையன்களை ஒதுக்கி விட்டு மூன்றாமவனை உறுத்து கவனித்தாள்... வினய் அதையெல்லாம் கண்டு உற்சாகம் பெற்றவனாய் தங்கையின் அருகில் அமர்ந்து அவள் பறப்பிய கடையிலிருந்து பல ஓவியங்களை இவனும் எடுத்து பார்க்க அனைத்திலும் கண்கள் மட்டும் மறைந்திருப்பதை கண்டு ஒரு யூகத்தினால் ஒரு பென்சிலை எடுத்து தன் கலைவண்ணத்தை ஒன்றில் காட்டத் தொடங்கினான்..

ஐந்தே நிமிடத்தில் " பரவால்ல அத விட இது நல்லாயிருக்கு " என தான் வரைந்ததை ஒரு ஓரமாய் வைக்க போன வினய் மீண்டும் அதை சரியாய் பார்த்து விட்டு பட்டென சத்யாவை திரும்பி பார்க்க சத்யாவின் பார்வையுடன் மற்ற அனைவரினது பார்வையுமே அவன் வரைந்த கண்கள் மீது தான் இருந்தது...

அவன் யோசித்து வைத்து கொண்டு அந்த கண்களை வரைந்தானோ அல்ல அதில் அழியப்பட்டிருந்த அச்சை வைத்து வரைந்தானோ இரட்டையன்களின் கண்கள் பக்காவாய் பொருந்தியிருக்க அது லியான் மற்றும் சத்யாவே தான் என்பது அங்கிருந்த அனைவருக்குமே தெரிந்தது...

" இந்த ஃபோட்டோஸ்லா உங்களுக்கு எப்டி கெடச்சிது... என் அப்பா அம்மா கிட்ட கூட இதெல்லாம் இருந்துச்சு " என்றபடியே தனிச்சையாய் அந்த ஓவியங்களை ஷரூரா வருட அவளின் மீது ஃத்வருணின் பார்வை வந்து வந்து சென்றதை சக்தி கவனித்து கொண்டே தான் இருந்தது...

" மச்சான்... இந்த போட்டோல உள்ள கண்ண அதுல இருக்க பையனுக்கு வர " என அனாமிக்காவிடமிருந்த புகைபடங்களை வாங்கி வினயிடம் கொடுக்க சக்தியை கேள்வியாய் பார்த்த வினய் கேள்வி எதுவுமின்றி அவன் கூறியதை போலவே வரையத் தொடங்கினான்...

பார்த்து வரைந்ததாலோ என்னவோ வினய் சற்று வேகமாகவே வரைந்து முடித்திருக்க அதை வாங்கி பார்த்த மீரா தனிச்சையாய் அதை மென்மையாய் வருடியபடியே " நல்லா வரைரடா அத்தான் நீ " என்றாள்...

" அந்த ஃபோட்டோல லியான் அண்ணா அண் சத்யா அண்ணா கூட இருக்குரது என்னோட அண்ணா தான் " என ஷரூராவே நம்ப முடியாமல் தெரிவிக்க மீரா அவளை விசித்திரமாய் பார்க்கும் போதே அவளின் கண்களை விரிய வைப்பதை போல " அதுல இருக்குரதே நான் தான் " என்றான் ஃத்வருண்...

ஷரூரா அவனை நோக்கி திரும்ப அப்போதே அவளுக்கும் அவனின் பெயர் ஃத்வருணென்ற உண்மை அவளின் புத்திக்கு உரைத்தது... ஃத்வருணின் கண்கள் எதையோ வெகு நேரமாக அவனுக்கு எடுத்து கூற முயற்சித்தது.... அவன் எவ்வளவு தான் முயன்றாலும் குறிப்பிட்ட சிலவையை தவிர்த்து வேறெதுவும் அவனுக்கு நினைவிலும் இல்லை...

மெடர்மான் நாயகர்களும் அவனை தான் பார்த்து கொண்டிருந்தனர்... அவர்களும் அறிவர்... அவர்களனைவரையும் போலல்லாது லியானோடு முதல் முதலில் அவர்களின் வளர்ப்பன்னை தத்தெடுத்தது ஃத்வருணை தான்... அவர்களை எவ்வாறு தத்தெடுத்தனர் என்ற கதையை கூட லெனா கூறியதில்லை... தன் நண்பன் எதற்காகவோ வெகுவாய் சிரமப்படுவதை பார்த்து கொண்டிருந்த மித்ரான் ஏதோ ஒரு நினைவு பெற்றவனாய் " மச்சான்... ப்ரஜாரா?? " என கேள்வி கேட்கிறானா பதில் சொல்கிறானா என்றே தெரியாமல் அவன் கூறி முடிக்க ஃத்வருண் மற்றும் ஷரூரா இருவரின் கண்களிலும் ஒரு மின்னல் வெட்ட இருவரும் ஒரு சேர " அது என் தங்கச்சி பேரு " என்றனர் கோரசாய்...

ப்ரஜாரா என்ற பெயர் ஃத்வருண் சிறு வயதிலிருந்து கூறும் ஒரு பெயர்... அவனுக்கு அது மழலை மொழிக்கு ஏதுவாய் இருந்ததனாலோ என்னவோ அதை தான் வெகுவாய் கூறிக் கொண்டிருப்பான்... அது என்று கூறினாலும் கேட்டாலும் ஃத்வருணுக்கு மனம் ஒரு விதமான உணர்வில் திழைப்பதை அவன் உணர்ந்திருக்கிறான்... அந்த ஒரு பெயர் தெரியாத உணர்வு என்றுமே தன்னை விட்டு சென்று விடக் கூடாதென்றபதற்காகத் தான் தன் மகனுக்கும் ப்ரஜின் என்ற பெயரை சூட்டினான்...

" சரி சரி போதும் எல்லா டீட்டைலும் தெரிஞ்சிடுச்சு... ஷரூமா... இவன் தான் நீ தொலச்ச உன்னோட அண்ணன்... எனக்கும் அண்ணன்... நா உன்னோட பெரியப்பா பொண்ணு... அதோ அவன் என் அண்ணன்... உன் பெரியப்பா பையன் தான்.. " என சம்மந்தமே இல்லாமல் அஜிம்சனா அனைத்து உண்மையையும் பட்டு பட்டென போட்டுடைக்க ஷரூராவோடு அனைவருக்குமே திடீரென மூச்சடைக்கத் தான் செய்தது...

" ஹே குட்டிமா என்ன டி ஒளளுற " என ஃத்வருண் பதட்டமாய் கேட்க " ஒளறுல ஒளறுல இதுல அதான் போற்றுக்கு... " என நிரன் தன்னவளின் கரத்திலிருந்த ம்யோரா காகிதத்தை படித்து கொண்டே குரல் கொடுத்தான்...

" அஜிமா என்ன டா சொல்ற? " என சத்யாவும் புரியாது கேள்வி கேட்க " நா எக்ஸ்ப்லைன் பன்றேன்... அதுக்கு முன்னாடி ஷரூமா.. ஹ்ம் உனக்கு என் கூட சட்டுன்னு பழக கொஞ்சம் அன்கம்ஃபர்ட்டிபிலா தான் இருகும்... ஆனா போக போக பழகிடும்.. சோ இப்போ உன் சிப்லிங்ஸ பத்தி உனக்கு தெரிஞ்ச உண்மைய சொல்லுமா " என புன்னகையோடு கேட்க ஷரூரா ஒரு புரியாத முளியுடனே " என் அண்ணன் பேரு... ஃத்வருண்... என் தங்கச்சி பேரு ப்ரஜாரா... எங்களுக்கு ஒரு வயசு போல இருக்கும் போதே எங்க அண்ணன் தொலஞ்சு போய்ட்டான்னு அம்மா சொன்னாங்க... என் தங்கச்சியையும் நா ஃபோட்டோல தான் பாத்துர்க்கேன் " என அவள் கூறி முடிப்பதற்குள்ளாக " ப்ரஜாரா எங்க? " என பதட்டமாய் கேட்டான் ஃத்வருண்...

" எனக்கு தெரியாது... அவள நீ..ங்..க கா..ணாம போன ஒரு வர்ஷத்துலையே தத்து கொடுத்துட்டாங்க... " என ஷரூரா தலை குனிந்து கூற ஃத்வருணால் அவனை சுற்றி நடப்பதை அவனாலே நம்ப முடியவில்லை...

" இப்போ யாராவது இங்க என்ன நடக்குதுன்னு எக்ஸ்ப்லைன் பண்ண போறீங்களா இல்லையா? " என நரா பொருமையிழந்து குக்கரை விடவும் மோசமாய் விசில் விட அஜிம்சனா இதற்கு மேலும் கடுப்பேற்றாமல் உண்மையை கூறத் தொடங்கினாள்...

" ஷரூமா.. உன்னோட பெரியப்பா பேரு ஏரண்.. பெரியம்மா பேரு அமூரா ரைட்டா??? " என முதலில் கேட்டு கொள்ள ஷரூரா ஆமாம் என்று வாயால் கூட சொல்ல தேவையிருக்கவில்லை... அதிர்ச்சியில் விரிந்த அவளது நீலக் கண்களே போதுமானதாயிருந்தது...

" ஓக்கே இப்போ சொல்றேன்.. அப்பாவோட பேரு மட்டும் அம்மா எங்கயுமே குறிப்பிடலல்ல... அதனால அப்பா அம்மாக்கு தெரியாம நமக்கு ஒரு லெட்டர் எழுதியிருக்காரு... அது தான் இது... அப்பாவோட உண்மையான பெயர் ஏரண் " என அந்த காகிதத்தை காட்டியபடி கூறத் தொடங்கினாள்... " ஃத்வருண் அண்ணா.. ஷரூராமா ப்ரஜாரா இவங்க மூணு பேரும் எரணப்பாவோட தம்பி சகரன் ஓட புள்ளைங்களாம்... ஃத்வருண் அண்ணாக்கு அந்த நேரத்துல நல்லாவே நெனவு கொஞ்சம் தெரிஞ்சிருந்ததால லியான் அண்ணாவ தனியா அனுப்பப் போறாங்கன்னு தெரிஞ்ச உடனே ரொம்ப அடம் புடிச்சாராம்... அதனால பரென்ட்ஸ் எல்லாரும் வேற வழியில்லாம ஃத்வருண் அண்ணாவ லியான் அண்ணா கூட மெடர்மானுக்கு அனுப்பியிருக்காங்க... இத பத்தி அம்மா எதுலையும் குறிப்பிடல... ஆனா ஒரு இடத்துல ஃத்வருணின் மதின்னு மட்டும் குறிப்பிற்றுந்தாங்க... இந்த விஷயத்த பத்தி அவங்க எழுதப்போனப்போ அப்பா சண்டை போட்டு நா தான் எழுதுவேன்னு தனியா எழுதியிருக்காரு... ஆனா அப்பாவையும் பாராட்டீர முடியாது... அப்பாவும் அரைகுறையா தான் எழுதி வச்சிருக்காரு... ப்ரஜாராவ பத்தி இதுல எதூமே அப்பா சொல்லல " என அவள் வெகு சாதாரணமாக அனைத்தையும் கூறி முடிக்க மொத்தத்தில் ஏரண் மற்றும் அமூராவின் இடையேயான செல்ல சண்டைகளில் பிள்ளைகள் இத்துனை நாளாய். சரியான பதிலின்றி மாட்டி இன்று பதிலிருந்து அது சரியாய் இல்லாமல் சிக்கிக் கொண்டனர்...

" இப்டி திடுதிபுன்னு சொல்லாம கொள்ளாம தலையும் வாலும் புரியாம பேசுறதும் எழுதுரதும் உனக்கு எங்கேந்து வந்துச்சுன்னு இப்போ தான் டி தெரியிது எனக்கு " என நிரன் முனுமுனுத்படி தலையசைத்தான்..

" சரி சரி புலம்பாத டா அண்ணா... நாம இப்போ ப்ரஜாராவ பத்தி கண்டுப்புடிச்சாகனும்.. அப்ரம் இவரு நம்ம தலைய போட்டு உலுக்குவாரு " என தில்வியா நிலமையை சீராக்கும் பொருட்டு தன்னவனை ஒரு புறமாய் இடிக்க அவளை ஒரு கேள்வியோடே பார்த்திருந்த ஷரூரா..

ஷரூரா : நீங்க தானே தில்வியா

தில்வியா : அஃப்கோர்ஸ் நான் தான் மா உன்னோட ஃப்யூச்சர் அண்ணியார் என அழகாய் சிரித்தபடியே கூற ஷரூரா அவளின் குரலில் மற்றவை மறந்து ஒரு நொடி சிரித்தே விட்டாள்...

நிரன் : ஹான் அம்புட்டு தான்.. மச்சினிச்சி சிரிச்சாச்சு கெளம்பு கெளம்பு வியோனார் போய் செக்கெண்ட் மச்சியையும் பாத்துட்டு வரலாம் என இவன் சரியாய் தில்வியாவை பின் தொடர தன் புருவத்தை ஏற்றி அவனை நோக்கிய அஜிம்சனா " சாரு எங்கையும் வரல... நா தான் போறேன்... புள்ளைய பாத்துக்குட்டு ஒழுங்கு மரியாதையா வீட்ல இரு " என மிரட்டி விட்டு நிரன் அவளை முறைப்பதை கண்டு கொள்ளாமல் ஷரூராவிடம் சென்றாள்...

தாரா : ஹே நானும் வரேன் உங்க கூட... நா வாட்ச அங்க நடந்த அக்சிடென்ட்ல அப்டியே விட்டுட்டு வந்துட்டேன்... அப்ரம் வட்ரன நம்மளால ட்ரக் பண்ண முடியாது என்றவளை தொடர்ந்து " ஹே நானும் வரேன் டி " என மீரா வேகவேகமாய் முன் வர அவளுக்கு பின் ஃத்வருண் மற்றும் சைத்தான்யா ஒரே நேரத்தில் " நானும் வரேன் " என கை தூக்கினர்...

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு சொல்லி வைத்ததை போல் ஷரூராவை பார்க்க அண்ணன் கண்ணிற்கு அவள் சைத்தான்யாவை பார்க்காமல் திரும்பியது முதல் பார்வையிலே சிக்கி விட்டது... அவனின் ப்ரொட்டெக்ட்டிவ் மோட் ஆட்டோமேட்டிக்காகவே ஆன் ஆகிக் கொள்ள ஃத்வருண் முறைக்கிறானா பார்க்கிறானா என புரியாமலே சைத்தான்யா ' நான் வரல ' என தலையசைத்து கொண்டே பின் நகர்ந்திருந்தான்...

அடுத்த சில நொடிகளிலே ஷரூரா மீரா தாரா அஜிம்சனா மற்றும் ஃத்வருண் ப்ரஜாராவின் தகவலை தேடி வியோனாருக்கு கிளம்பிய அதே நேரம் ஷ்ரவனிடமிருந்து இவர்களுக்கு தகவல் வந்தது...

ஷ்ரவனின் பெயரை கேட்டதுமே அவர்களை எப்போதோ வரக் கூறியும் ஏன் இன்னும் பூமிக்கு வரவில்லை என்ற சந்தேகத்தில் டிவின் நாயகன்கள் அனைவரையும் கூட்டி கொண்டு தனியே சென்றான்...

ஷ்ரவன் எடுத்த எடுப்பிலே முபல்லன் செய்ததை பற்றி கூற அஅனைவருக்கும் சுறுக்கென கோபம் ஏறியது... " அவன இப்போ வீட்டுக்கு கூட்டீட்டு வரனுமா என்ன டா? " என யதீஷ் கேட்டதும் டிவின் உடனே " வேணா வேணா அவனோட ரேடார் இருக்குல்ல அங்க அவன கூட்டீட்டு வாங்க டா... அங்க பாத்துக்களாம் அவன " என்று கூறவும் அனைவரும் சம்மதித்த பின் ஷ்ரவன் தொடர்பை துண்டித்தான்...

அதே நேரம் மெதுமெதுவாய் மணி இரண்டரை தாண்டி மூன்றரை ஆனதை பார்த்தவாறே படிக்கட்டை ஏறி மேலே வந்த அரானா " டேய் சத்யா இங்க கொஞ்சம் வாயேன்...  எனக்கு தூக்க தூக்கமா வருது டா " என பாவமாய் கூறியபடி கை நீட்ட அவள் முன் நின்றிருந்தவனோ " உனக்கு என்னைக்கு தான் டி தூக்கம் வராம இருந்துச்சு தூங்கு மூஞ்சி " என்றான் கேலியாய்...

அரானா குழப்பமாய் அவனை ஏறிட்டு " டேய் என்ன டா புதுசா பேசுர? " என கேட்க " ஹரிச்சந்திரன் காலத்துலையே இருந்தா எப்டி குட்டி.. கொஞ்சம் இப்போ இருக்க ட்ரெண்டான ஹிப்ஹாப் காலத்துக்கும் வா " என மேலும் அவளை சூடேற்றுவதை போலவே பேச " டேய் வீணா கடுப்பேத்துரியா என்ன... நீ செஞ்சதெல்லாம் லியான் வந்ததும் சொல்லவா நான்? " என மிரட்டுவதை போல் கோவமாய் கேட்க அவள் முன் நின்று இன்னும் புன்னகை மறையாது " அதான் வந்துட்டனே இப்போவே சொல்லு டா அராமா " என்றான் லியான்...

அதே நேரம் கீழிருந்து அதே படியில் ஏறி கொண்டிருந்த சத்யா " ஹே அரா யார்ட்ட டி பேசீட்டு இருக்க " ஃபோனை பார்த்தபடியே கேட்க முதலில் அவன் கூறியதே புரியாது நின்ற அரானா தன் பின் சத்யாவின் குரல் கேட்கவும் திரும்பி பார்த்து ஒரு முறை உறுதியும் செய்து கொண்டவள் தன் முன் இன்னமும் அந்த கலர் ஜெராக்ஸ் புன்னகையோடே நிற்பதை கண்டும் அழுகை தொண்டையை அடைக்க " லியான் !!!!" என கத்தி கொண்டே ஓடிச் சென்று அவனை அணைத்து கொண்டாள் லியானிற்கு அன்றும் இன்றும் என்றும் முதல் குழந்தையான அரானா...

தேடல் தொடரும்...

ஹலோ இதயங்களே... இன்னைக்கு ரொம்ப நாள் களிச்சு பெரிய யூடி எழுதீருக்கேன்... அட மணி பத்தரையாக போகுதா... ஹ்ம்ம்ம் சரிங்க இதயங்களே... எல்லாமே புரியும்னு நெனக்கிறேன்... ப்ரஜாரா யாருங்குரத தவிற நா வச்ச ட்விஸ்ட் எல்லாத்தையும் எனக்கு தெரிஞ்ச வர ஓப்பன் பண்ணீட்டேன்... அம்டி நா எதையாவது மறந்துருந்தா சொல்லுங்க அதையும் அடுத்த யூடில அட் பண்ணீரலாம்... கொஞ்சம் சீக்கிரமா சொல்லுங்க... இல்லனா நெக்ஸ்ட் யூடி லேட்டாய்டும்... எனக்குத் தெரிஞ்சு ஆனா எல்லாமே முடிஞ்சிடுச்சு... சோ ஓக்கே நீங்க சொல்லுவீங்கனு நம்புறேன்... குட் நைட்... டாட்டா

DhiraDhi

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro