Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

தேடல் - 5

நிலவோடு கதை பேசியவாறு அமர்ந்திருந்த யதீஷ் திடீரென அவனது செல்பேசி அதிரவும் அதை எடுத்து பார்த்தான்.. நேரம் பத்தையும் கடந்திருக்க இந்நேரத்தில் அவனது உதவியாளர் என்றும் அழைக்க மாட்டார் என அறிந்திருந்ததால் அந்த அழைப்பிற்கு பதிலளித்து மறுபக்கமுள்ளோருக்கு வாய்ப்பளித்தான் யதீஷ்...

அவர் நாளைய மீட்டிங் பற்றி அனைத்தையும் கூறவே அவைகளை பற்றி நினைவை கொண்டவன் அடுத்த விமானம் ஒரு மணி நேரத்தில் இருப்பதை கண்டு அந்த இரவில் அரக்க பறக்க கிளம்ப ஓடினான்...

அவன் தங்கியிருக்கும் விடுதியிலிருந்து விமான நிலையம் செல்லவே அரை மணி நேரம் எடுக்கும் என்கையில் மற்ற வேலைகளையெல்லாம் செய்து விமானத்தில் ஏறிட முக்கால் மணி நேரமாவது ஆகும்...கேத்ரியனின் நினைவில் அலுவலக விடயங்களை மறந்ததால் வந்த வினை.. ஆனால் அதுவும் அவனுக்கு பிடித்துத் தான் இருந்தது.. இது வரை அவன் எதற்கும் தாமதமாய் சென்றதில்லை..

அதனால் அந்த நேரத்தை அனுபவித்து கொள்ள... நேரமும் ஓடியது... தன் ஓட்டுனரை துரிதப்படுத்தியவன் இதற்கு மேலும் விட்டால் அவர் செல்லும் வேகத்திற்கு பனிரெண்டு மணி விமானத்திற்கு ஒரு மணிக்கு தான் செல்வோமென உணர்ந்த அந்த ஓட்டுனரிடம் கூறிவிட்டு உடனே இடம் மாறி கொண்டான்...

அவரையும் தப்பு கூற முடியாதல்வா... நட்ட நடு ராத்திரியில் எவர் தான் இவ்வாறு எழுந்து வந்து அதுவும் அரை மணி நேர பணத்தை கால்மணி நேரமாக்க கூறினால் ஏற்று கொள்வார்...

யதீஷ் அந்த ஸ்டெயரிங்கை பிடித்ததும் ஓட்டுனர் சீட் பெல்டை பிடித்து கொண்டு அவனை நோக்கினார்.. யதீஷ் ஒரு புன்னகையுடன் அக்ஸலேட்டரை அழுத்தி சீரிப் பாய இன்னும் இருந்த இருவது நிமிட பயணம் அது இரவு நேர ஹைவேஸ் என்பதால் யதீஷின் வேகத்தில் பத்தே நிமிடமாகியது.. அந்த ஓடுனரிடம் ஒரு நன்றியை தெரிவித்து விட்டு தன் உடைமைகளை எடுத்து கொண்டு விமான நிலையத்திற்குள் ஓடினான்...

வெண்முகிலின் நிழல் மண்ணை தொட தன் மஞ்சள் வர்ண கதிர்களை பரப்பி கண்ணிற்கெட்டாது கண்ணாமூச்சி விளையாடி கொண்டிருந்த பனி பொழிவை பூக்களுக்கு காட்டி கொடுத்து தன் வரவினால் சிலிர்க்கச் செய்தான் கதிரவன்...

அந்த அழகிய விடியல் யதீஷிற்கு தமிழ்நாட்டில் விடிய கேத்ரியன் மற்றும் சித்தாரா அந்த மருத்துவமனை விட்டு வெளியேறினர்...

தன் செல்பேசியில் எதையோ பார்த்து கொண்டே நடை பாதையில் நகர்ந்த தோழியின் கரத்தை பிடித்து நிறுத்தினாள் சித்தாரா

கேத்ரியன் : என்னாச்சு டி

சித்தாரா : எனக்கு வீட்டுக்கு போகனும் ரியா என்றவளை கேத்ரியன் சற்று விசித்திரமாய் நோக்க அதற்கு மேல் தாமதிக்காமல் ஆன்லைனிலே டிக்கெட் புக் செய்ய வேண்டிய வேலையை தொடங்கினாள் கேத்ரியன்..

ஒரு முறை அந்த விண்ணை நோக்கினாள் சித்தாரா.. அவளின் கருமையான கண்களில் அந்த விண்ணை காண்கையில் மீண்டும் கண்ணீர் தான் குழுமியது...

வெண்ணிற மேகங்கள் சூரியனை சுற்றி அழகாய் மிதந்தாலும் நீல வானம் அவள் கண்களுக்கு காட்சி கொடுக்கவில்லை... அந்த வானம் இன்றாவது தெளிவாகாதா என நோக்கியவளுக்கு இன்றும் அவள் எதிர்பார்க்கும் நாள் இதுவல்ல என உணர்த்தியது வானத்தில் குழுமி கொண்டிருந்த மேகங்கள்

சற்று தொலைவிலிருந்து தன் தோழியை நோக்கிய கேத்ரியன் அவள் விண்ணை நோக்கிக் கொண்டிருப்பதை பெருமூச்சுடன் நோக்கினாள்...

கேத்ரியன் : அவ இன்னும் நடந்தத மறக்கல அண்ணா.. அவ இன்னும் அதெல்லாம் பொய்னு நம்பிக்கிட்டு இருக்கா... என அவளது காதிலிருந்த ப்லூட்டூத்தில் கேட்ட பெருமூச்சிற்கு உரியவனிடம் கூறினாள்...

அப்புறத்திலிருந்து " அவ உடனே நம்புனா தான் மா ஆச்சர்யம் " என அதே வருத்தம் தோய்ந்த ஒரு ஆணின் குரல் கேட்டது...

தன் கண்ணீரை துடைத்து கொண்ட கேத்ரியன் சித்தாராவை அங்கிருந்து அமைதியாய் அழைத்துச் சென்றாள்...

தங்களது வீட்டிற்குள் நுழைந்ததும் சித்தாரா உடனே அவளது அறைக்குள் சென்று அடைந்து கொள்ள கேத்ரியனும் அவளறைக்குச் சென்று உடைமைகளை அடுக்கத் தொடங்கினாள்...

சித்தாரா கண்களில் கண்ணீர் மழ்க கட்டிலில் அமர்ந்து கண்ணீரை கட்டுப்படுத்தி கொண்டிருந்தாள்.. அவளது கண்ணீரும் நீ என்ன செய்தாலும் எனக்கு தடுப்பு வைக்கவே முடியாது என்பதை போல் கன்னத்தில் தடம் புரண்டு ஓடி கொண்டே தான் இருந்தது...

கண்ணீரை துடைத்து கொண்டு அவளறையிலிருந்த ஒரு அலமாரியை திறந்து ஒரு டைரியை எடுத்தாள்.. அந்த டைரியில் அதிகபட்ச பக்கங்கள் அனைத்தும் வெறுமையாய் இருக்க ஒரு சில பக்கங்கள் மொத்தமும் ஏதோ கிருக்கப்பட்டிருந்தது... அதில் குறிப்பிட்ட ஒரு தாளை பிரித்த சித்தாரா அதில் தீட்டப்பட்டிருந்த நிலவின் ஓவியத்தை கரம் நடுங்க வருடினாள்...

ஆடி களித்த தென்றலின் தாக்கத்தால் அந்த அறையிலிருந்த ஒரு பூஜாடி கீழே விழுந்து நொருங்கியது.. அவள் கனவுகளும் இவ்வாறு தான் இரண்டு வருடம் முன்பு சுக்கு நூறாய் உடைந்தது...

இருந்தும் அந்த சிதறிய துகள்களை சேகரித்து அது ஒன்றிணைந்து விடாதா... வானம் தெளிவடையாதா.. அவளின் கனவு பளிக்காதா என தினம் உள்ளுக்குள்ளே மருகிக் கொண்டிருக்கிறாள்..

அந்த தாளின் பின் பக்கத்தில் ஏதோ குறிப்பு போல் எழுதப்பட்டிருந்தது... அது சித்தாராவாலே எழுதப்பட்டதென அதன் அருகிலே அவள் நாட்குறிப்பை போல தினம் எழுதி வைக்கும் தேதிகளின் கையெழுத்து எடுத்துரைக்க ஒரு பேனாவினால் 2/12/2020 என அன்றைய தேதியை எழுதி விட்டு அதன் எதிர் பக்கத்திலிருந்த குறிப்பை ஏறிட்டாள்...

ஞாலம் தன்னை சுற்றட்டும் -...
கதிரோனை ஈர்மூன்றுக்கு சுழன்றப் பின் -..
ஏதேனும் ஒரு சுற்றலில்-...
வானம் தெளிவடையும்

இது வரிசையாக கொண்ட நான்கு அல்லது ஐந்து வரிகளாய் ஆன பத்தியாய் இருக்களாம்.. ஆனால் அதில் அவளுக்கு கிட்டியது இந்த பாதியும் அல்லாது மீதியும் அல்லாத நான்கு வரிகள் தான்... இதில் சித்தாரா புரிந்து கொண்டது வானம் தெளிவடையும் என்றது மட்டும் தான்... அதை தவிர வேறு எதுவும் உண்மையில் புரியவில்லை... அவளுக்கு இந்த வரிகள் கிடைத்த முதலே அவள் காணும் போதெல்லாம் அந்த பத்தியை தூக்கியெறிய விடாததை போல தெளிவின்றியே தான் காணப்பட்டது பரந்து விரிந்திருந்த நீல வானம்

அதை ஒரு முறை மீண்டும் வாசித்து பார்த்தாள்... 5618 ஆம் முறையென அவள் மூளை ஒரு பக்கம் முழுக்கமிட்டது... இம்முறையும் அவளுக்கு அவ்வரிகளின் பொருள் புரியவில்லை... அவளின் ஒரு பாதி இதையெல்லாம் தூக்கி எறிந்து விட்டு வாழ்கையை பார் என கத்தியது.. மற்றுமோர் பகுதி இவை தான் வாழ்கை உண்மையை கண்டறி என கத்தியது.. இரு கொள்ளி பாம்பாய் ஒன்றும் புரியாமல் தவித்தாள்... அவ்வரிகள் எதை தான் குறிக்கிறதென கண்டறியக் கூட இயலவில்லை... இறுதியாய் டைரியை அந்த கட்டிலிலே வீசி விட்டு தலை முடியை பிடித்து கொண்டு கதறினாள்...

கேத்ரியன் இந்த சத்தத்தில் வேகமாய் அந்த அறை கதவை திறந்து கொண்டு உள்ளே வர சித்தாரா மண்டியிட்டு அமர்ந்து கத்தி கதறி கொண்டிருந்தாள்...

கேத்ரியன் அந்த டைரியை கண்டு நொந்து கொண்டு வேகமாய் தன் தோழியிடம் அமர்ந்து அவளை அணைத்து கொண்டாள்... அவளை அணைத்து கொண்ட சித்தாராவின் கதறல் இன்னும் அதிகரிக்க வாய் வார்த்தைகளின்றி கத்தி கத்தி கேத்ரியனின் மடியிலே மீண்டும் மயக்கத்தை தழுவினாள் அவள்

கேத்ரியன் கண்கள் முழுவதும் கண்ணீருடன் அவளை அவ்வாறு காண இயலாமல் மௌனமாய் அழ அரை மணி நேரம் பின் தலையின் பாரத்தினால் தன்னால் எழுந்த சித்தாராவை மீண்டும் கேத்ரியன் அணைத்து கொண்டாள்..

சித்தாரா : ஐம் சாரி டி.. உன்னையும்

கேத்ரியன் : இட்ஸ் ஓக்கே.. எதையும் யோசிக்காம கெளம்பு.. டூ ஹவர்ஸ்ல ஃப்லைட் என அழத் திராணியற்றவளை எழுப்பி விட்டு அந்த கட்டிலில் அமர வைத்தாள்...

சித்தாரா : ஹ்ம் நா பக் பன்றேன்...

கேத்ரியன் : குளிச்சிட்டு சீக்கிரம் கெளம்பு டா மா.. அங்க போய் பாத்துக்களாம் ... கேத்ரியன் கூறியதற்கு வெறும் தலையசைப்பை பதிலாய் கொடுத்த சித்தாரா மீண்டும் அந்த டைரியை எடுத்து தன் நெஞ்சோடு சேர்த்தணைத்து கொண்டாள்...

அவளை கண்டு கண்ணீரை துடைத்தவாறு வெளியேறி தன் அறைக்குள் சென்ற கேத்ரியன் அவளது கண்ணீரால் நனைந்திருந்த கன்னாடியை துடைக்கும் பொழுதே அவள் அறையின் ஒரு மேஜையிலிருந்த ஒரு புத்தகம் அவளின் கண்களில் பட்டது... மதி மர்மம்

அதை கண்ட உடனே ஏதோ பார்க்க கூடாததை பார்த்ததை போல் அறையை விட்டு சித்தாரா இருக்கிறாளா என பார்த்த கேத்ரியன் அவள் இல்லையென உறுதி செய்தி விட்டு அந்த புத்தகத்தை எடுத்து கொண்டு நேராக சமையலறைக்குச் சென்றாள்...

அங்கிருந்த குப்பைத்தொட்டியில் யோசிக்காமல் அப்புத்தகத்தை வீசப்போனவள் பின் ஏதோ நினைத்தவளாய் தடைப்பட்டு நின்றாள்...

தீரா : இருந்தாலும் அது நா எழுதுனது இல்லையா... *மீ பாவம்*

கண்கள் மூடி தன்னை அசுவாசப்படுத்தி கொண்ட கேத்ரியன் அந்த புத்தகத்தின் அட்டை பக்கத்தை ஒரு முறை வருடினாள்...

கேத்ரியன் : இது அவ கண்ல படக்கூடாது... பழைய விஷயம் தான் நியாபகம் வரும்.. நா ஏன் வெளிய எடுத்தேனோ எல்லாம் அவள சொல்லனும்.. சொல்ல சொல்ல கேக்காம இத பப்லிஷ் பன்னிட்டா என தனக்கு தானே கூறி கொண்டு ஒருவளை டீசன்ட்டாய் திட்டிக் கொண்டே அவளறைக்குச் சென்று அந்த புத்தகத்தை அவளது பெட்டியில் மறைத்து வைத்தாள்...

பக்கத்து அறையில் தண்ணீரின் சத்தத்தை கேட்டதும் சித்தாரா குளிக்கச் சென்று விட்டாளென உறுதி படுத்திய கேத்ரியன் அவளது ஸ்மார்ட் வாட்சிடம் " காள் சனா " என கூற ட்ரிங் என சத்தத்துடன் ஒரு ரிங் கிளம்ப சில நொடிகளிலே கேத்ரியனின் ப்லூட்டூத்தில் ஒரு குரல் கேட்டது

" ஷி ஈஸ் பிசி "

கேத்ரியன் : நீ இப்போ பேசலன்னா அங்கு வந்து மிதிப்பேன்.. ப்லீஸ் ஜஸ்ட் பாஸ் திஸ் டு ஹெர் என இவள் பொருமையாய் கூற அடுத்த சில வினாடிகளில் கேத்ரியனிற்கு மிகவும் பரிட்சயமான ஒரு குரல் கேட்டது... அவள் கேத்ரியன் குறிப்பிட்ட சனா... கேத்ரியன் மற்றும் சித்தாரவின் நெருங்கிய தோழி..

சனா  : சொல்லு டி

கேத்ரியன் : ஏன் டி ஃபோன் பன்னா எடுக்க மாட்டியா...

சனா : அது நா.. ம்ச் அது இருந்துட்டு போது நீ சொல்லு.. என்ன திடீர்னு சொல்லாம கொள்ளாம காள் பன்னீர்க்க

கேத்ரியன் : ஹ்ம்.. ஏன் டி அந்த புக்க பப்லிஷ் பன்ன.. அது இன்னும் பிரச்சனை எகிர வைக்கும் போல என கூறவும் இது என்றும் கூறுவது தானே என்பதை போல்

சனா : கூல் டார்லிங்.. ரிலக்ஸ் என்ன ஆச்சுன்னு சொல்லு என்கவும் கேத்ரியன் நிகழ்ந்தவையெல்லாம் கூறி முடித்தாள்...

கேத்ரியன் : தப்பித்தவறி அவ இந்த புக்க திரும்ப படிச்சா டிப்ரெஸ் ஆவா டி

சனா : ஆனா இது ஒரு சான்ஸ் தான டி.. இதனால ஒரு நல்லது நடக்கும்னு தான் நான் பப்லிஷே பன்னேன்... என தோய்ந்த படி வந்தது பதில்

கேத்ரியன் : பட் இதுவே பிரச்சனையாகாதா

சனா : ஆகாது டா.. இது பிரச்சனையாகாது.. இது கண்டிப்பா நமக்கு ஒரு வழிய குடுக்கும்...

கேத்ரியன் : இரெண்டு வர்ஷமா கிடைக்காத வழி இப்போ கிடைக்க போகுதா

சனா : நம்பலாம் டி.. பாஸ்ட் ஈஸ் பாஸ்ட்.. சோ அதையே நினைச்சிட்டு இருக்காத ... எப்பையாவது நம்ம முயற்சி சக்ஸஸ் ஆகும்...

கேத்ரியன் : ஹ்ம் சரி தான்.. ஆனாலும் எப்போப் பாரு இந்த டயலாக்க விடவே மாட்டியா டி

சனா : அதெல்லாம் விட முடியாது போ.. சரி அப்போ இரெண்டு பேரும் தமிழ்நாட்டுக்கு கெளம்பி வரீங்களா

கேத்ரியன் : ஆமா டி.. அவளே தானா வந்து போலாம்ங்குரா.. நா ஏன் வேணாம்ங்க போறேன்.. அதான் கெளம்பீட்டோம்... சனாவின் குரலையும் தாண்டி வேறொரு குரல் ஒன்று அவளை அழைத்து எதிரொலிக்க

சனா : ஓக்கே டி எனக்கு இங்க கொஞ்சம் எமெர்ஜென்சி.. நா அப்ரம் பேசுறேன்...

கேத்ரியன் : ஹான் சரி டி

சனா : பாத்து பத்திரமா போய்ட்டு வாங்க .. டாட்டா

கேத்ரியன் : டாட்டா என்றதும் அனைத்தும் அமைதியாக சனா காளை கட் செய்து விட்டாளென உணர்ந்து கொண்டு கேத்ரியனும் குளிப்பதற்காய் குளியலறைக்குள் சென்றாள்...

பத்து மணி மீட்டிங்கிற்கு ஒன்பதே முக்கால் மணியளவில் தன் அலுவலகத்திற்குள் வேகமாய் நுழைந்தான் யதீஷ்.. அனைவரும் அவனை சற்று வித்யாசமாய் பார்த்த படி காலை வணக்கத்தை கொடுக்க அனைவருக்கும் மறக்காது பதில் கொடுத்து விட்டு அவையிற்கு சென்ற யதீஷ் அங்கு முன்னமே அமர்ந்திருந்தோரை கண்டு நாக்கை கடித்து கொண்டான்...

யதீஷ் : சாரி ஃபார் தி லேட் ஸர்.. ஐம் யதீஷ் யமர் நைஸ் டு மீட் யு

" நைஸ் டு மீட் யு டூ ஜெண்டில்மென்... பை தி பை நான் தான் சீக்கிரம் வந்துட்டேன்.. நீங்க லேட் இல்ல... ஐம் சைத்தான்யா ராஜ் " என நிறைவான புன்னகையுடன் யதீஷோடு கை குலுக்கினான் சைத்தான்யா...

தேடல் தொடரும்...

ஹாய் இதயங்களே.. இன்னைக்கு யூடி போடுவன்னு நா நெனச்சே பாக்கல.. ஹிஹி இட்ஸ் ஓக்கே.... இந்த கதை ரொம்ப இழுத்தடிக்காதுன்னு நினைக்கிறேன்...சீக்கிரம் முடிச்சிரலாம் போல.. முடிஞ்சா சந்தோஷம் தான்.... அப்ரம் இதயங்களே.. இந்த கதைல சில கரெக்ட்டர்ஸே இன்ட்ரோ ஆகியிருக்குரதால குறிப்பிட்ட அத்யாயங்களுக்கு அதிகமா டயலாக் ஆர் கான்வர்ஸேஷன் இருக்காது... அப்ரம் நிறைய கான்வர்ஸேஷன் என்ன வாக்குவாதமே கூட நாம பாக்களாம்.. சரிங்க இதயங்களே... குட் நைட்... டாட்டா...

DhiraDhi❤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro