Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

தேடல் - 42

தமிழகம்

நீண்ட அமைதி நிலவிய அந்த அறையில் திடீரென கதவு திறக்கும் சத்தமும் ஒரு சின்ன அழுகையின் சத்தமும் கேட்க கதவிற்கு சற்று அருகிலே இருந்த ஃத்வருண் வேகமாய் அப்புறம் திரும்பி பார்த்தான்...

அங்கு உறக்கத்திலிருந்து எழுந்து விட்டு அரைகுறை தூக்கத்தில் கண்களை தேய்த்த படி யாரையும் காணாமல் பயத்தில் அழுகையுடன் தத்தி நடந்து வந்தாள் சனாயா...

" அ..மா.. " என்ற சனாயாவின் அழுகை அனைவரையும் மறுபுறம் ஈர்க்க ஃத்வருண் ஓடிச் சென்று அவளை தூக்கி சமாதானம் செய்யத் தொடங்கினான்... அரை தூக்கத்தில் இருந்ததனாலோ என்னவோ அவனின் கழுத்தை தன் குட்டி கரங்களால் கட்டி கொண்டாள்... தன்னை சாய்த்து அவன் மெதுவாய் ஆட்டி சமாதானம் செய்யத் தொடங்கிய போதே சனாயா மீண்டும் உறக்கத்தை தழுவினாள்...

அக்காட்சியை பார்த்து கொண்டிருந்த சத்யாவின் மனதில் புதிதாய் ஒரு எண்ணம் நுழைய அவனின் கண்கள் மெதுவாய் யதீஷின் நெஞ்சில் சாய்ந்து கை சப்பிக் கொண்டிருந்த யாரியின் மீது பதிந்தது...

இவர்கள் அறிந்தவை தான்... யாரி இங்கு வந்தது முதலில் இருந்து இப்பொழுதும் சரி அஜிம்சனா நிரன் மற்றும் சத்யாவை தவிர்த்து எவரிடமும் அழாமல் இருந்ததில்லை...

இப்பொழுதும் யதீஷை கண்டாலே கத்தி அழுபவள் அவனை கண்டு பழகியதால் அவனிடம் அழாதிருக்கிறாள் ஆனால் முதல் முறை சத்யா ஒரு வருடம் முன் வீட்டிற்கு வந்த போது அவனை அடையாளங்கண்ட யாரி அதற்கு முன் ஒரு முறை கூட உண்மையில் சத்யாவை பார்த்ததில்லை...

" இட்ஸ் ஃபீல்ஸ் ஸ்ற்றேஞ்... யாரி எதனால அஜி நிரனுக்கு அப்ரம் என் கிட்ட அழாம இருக்கா? " என சம்மந்தமே இல்லாமல் திடீரென அவன் கேள்வி எழுப்பவும் அனைவரும் அவனை நோக்க யாரி கூட தன் பெயர் அடிப்பட்டதால் பட்டென தலை தூக்கி சத்யாவை நோக்கினாள்...

சத்யாவின் பார்வையும் அவள் மீதே பதிந்திருப்பதை கண்டதும் கைகளை நீட்டி " மா..மா " என யாரி ஆசையாய் அழைக்க இப்போது சத்யாவின் கேள்வி மற்றவர்களுள்ளும் எழுந்தது...

" அது சிம்ப்பில் தான் டா அண்ணா.. இரத்தப் பாசம்னு சொல்லுவாங்களே.. அது தான்.. நீ தான் என் கூட பொறந்தவன்னு கன்ஃபார்ம் ஆய்டுச்சு.. சோ அவளுக்கு உன்ன பாக்கும் போது என் கிட்ட இருக்க மாரி தான் தோனும்... குழந்தைங்களுக்கு அப்டி ஒரு இன்ஸ்ட்டிக்ட் இருக்கு... தன்னோட அம்மா அப்பா கண்ல படலன்னா.. அம்மா இல்லனா அப்பாவோட அம்மா கிட்டயோ இல்ல அண்ணன் தங்கச்சி கிட்டயோ போய்டுவாங்க... இட்ஸ் சிம்ப்பில் இங்க இருக்குரதுலயே எனக்கு அடுத்து யாரி உன் கிட்ட மட்டும் தான் போவா... அது ஏன்னு எனக்கிருந்த சந்தேகமும் இன்னைக்கு சரியாப்போய்டுச்சு " என அஜிம்சனா எந்த தடுமாற்றமும் இன்றி பதில் தர மற்றவர்கள் அவள் பழைய நிலமைக்கு மாறி விட்டாள் என்பதை புரிந்து கொண்டனர்...

" ஆனா உங்களுக்குள்ள எப்டி ப்லட் பாண்டிங் இருக்கும்... யாரி அடாப்டட் பேபி தானே? " என யதீஷ் புரியாமல் கேட்க அதுவும் சரிதானே என அனைவரும் அஜிம்சனாவை பார்க்க அவளோ ஒரு முறை யாரியை கண்டவள் பின் சற்றே பதட்டத்துடன் அவளின் நெற்றியை மெதுவாய் நீவினாள்...

" அது... வந்து... அக்ச்சுவலி ஆமா.. ஆனா யாரியோட அம்மா நான் தான் " என கூறவும் அனைவரும் " அதான் எங்களுக்கு தெரியுமே " என பார்வையாலே ரியக்ஷன் குடுக்க " இல்ல... நா அப்டி சொல்லல... யாரியோட பயோலாஜிக்கல் மாமும் நான் தான் " என அவர்களிடம் ஒரு வழியாக உண்மையை போட்டுடைத்தாள்...

சைத்தான்யா முபல்லனின் கூற்றை நம்ப முடியாது நின்றிருந்த நேரம் வேதவள்ளி பதறத் தொடங்கியிருந்தான்..

வேதவள்ளி : என்னடா செஞ்ச.. சொல்லேன் டா...

முபல்லன் : அம்மா.. அது வந்து... நா.. ஒரு வர்ஷத்துக்கு முன்னாடி தான் பூமிக்கு வந்தேன்... லியானோட ஃப்ரெண்ஸ் பூமில தான் இருக்காங்கன்னு எனக்கு தெரிஞ்சது... அவங்க ஆல்ரெடி லியான இழந்துட்டு நிக்கிரப்போ நா இன்னும் அவங்கள கஷ்டப்படுத்தனும்னு நெனச்சேன்... லியான் உயிரோட இருக்குர மாரி அவங்கள நம்ப வைக்கிரதுக்காக டூப்லிகேட் வட்ரன் ரெடி பன்னீருந்தேன்... ஆனா எதுக்கும் இருக்கட்டுமேன்னு நா கண்டுப்புடிச்ச மன்வெல் க்ரவிட்டி ரேடாரையும் எடுத்துட்டு வந்தேன்... நா இங்க வந்தப்புரம் அன்ஃபார்ச்சுனேட்லி அந்த ரேடாரோட கன்ட்ரோலர் காணாப் போய்டுச்சு... நா அத தேடி கண்டுப்புடிச்சிடலாம்னு கேர்லெசா இருந்துட்டேன்.. ஆனா அதுக்கப்ரம் தான் எனக்கு அக்ஸிடென்ட் ஆகி நா ஒரு வர்ஷம் கோமால இருந்துர்க்கேன்... அந்த ரேடாரோட டைமிங் ஒரு வர்ஷம் தான்... அந்த கன்ட்ரோல யாராவது ஆன் பண்ணிட்டாலே அது ஆன் ஆகிடும்.. ஆனா ட்யூ டைம் ஒன் இயர்ங்குரதால அது ஆட்டோமேட்டிக்கா ஆன் ஆய்டும்... இந்நேரத்துக்கு அது வொர்க் ஆக ஆரம்ச்சிருக்கும் மா

சைத்தான்யா : முபல்லா... அப்டினா என்ன டா... ரேடார்னா என்ன... அது என்ன செய்யும்... அது ஆன் ஆனா தான் என்ன???

முபல்லன் : அது.. அது ஒரு பெரிய ஆபத்தாகும் சைத்தான்யா... பூமிக்கும் மெடர்மானுக்கும் நடுவுல ஒரு பெரிய கருந்துளை இருந்துச்சு... அது சில வர்ஷத்துக்கு முன்னாடி தான் வொய்ட் ஹோலா மாறுச்சு... ஆனா அந்த நேரத்துல அது பக்கத்துல கொஞ்ச தூரத்துலையே வேற ஒரு ப்லக் ஹோல் இருந்தது தெரிஞ்சது... அது தான் இப்போ பிரச்சனையே...

வேதவள்ளி : என்னடா ஒளறுர... தெளிவா சொல்லேன் டா...

முபல்லன் : அது ஒரு க்ரவிட்டி ரேடார்மா... கிரகத்தோட மொத்த கிரவிட்டியையும் அந்த ரேடார் கொஞ்ச கொஞ்சமா இழுக்கும்... இதனால பக்கத்துல எவ்ளோ தூரத்துல ஒரு ப்லக்ஹோல் இருக்குதோ.. அந்த ப்லக்ஹோல கிரகங்கள் அட்ரக்ட் பண்ணும்... அது எதுல போய் முடியும்னு எனக்கே தெரியல... என திக்கித் தினறி அவன் கூறி முடித்தான்...

இவை அனைத்தையும் குரோபடரான் ராஜா அம்போவென விட்டுச்சென்ற ஷரூரா தன் நிலை பெற்றதும் தன் கடிகாரத்தின் மூலமாக தெள்ளத் தெளிவாய் கேட்டுக் கொண்டிருந்தாள்...

ஷரூரா : ப்லக் ஹோல நோக்கி கிரகங்கள் ஈர்க்கப் படும்னு சொல்றானா... இல்ல ப்லக் ஹோல் கிரகங்கள் இழுக்கும்னு சொல்றானா என ஒன்றும் புரியாமல் தனக்குத் தானே கேட்டு கொண்டவள் இவனை இனி மேலும் நம்பி பிரயோஜனம் இல்லையென தன் கடிகாரத்தின் மூலமாக மீண்டும் பூமிக்கு செல்ல முயற்சி செய்தாள்...

ஆனால் அவளின் நேரம் அவள் அச்சிறையிலிருந்து மறைந்து மீண்டும் மீண்டும் அதே சிறையில் வெவ்வேறு இடத்தில் தோன்றிக் கொண்டிருந்தாள்... வந்த இடத்திற்கே மீண்டும் மீண்டும் வருவது ஏதோ பூமிக்கு உள்ள வழியையே யாரோ அடைத்து வைத்தார் போன்றொரு உணர்வை கொடுத்தது...

இப்படி ஒரு அபாயம் நிகழ்வது வியோனாரிலும் பூமியிலும் உள்ளோருக்கு தெரியுமா என்றறியாமல் தலையை பிய்த்துக் கொள்ளாத குறைக்கு தள்ளப்பட்ட ஷரூரா தன்னை தானே சமாதானம் செய்து கொண்டு லியானை எப்படியாவது தொடர்பு கொண்டாக வேண்டுமென்ற தீர்மானத்துடன் மீண்டும் தன் கடிகாரத்தோடு போராடத் தொடங்கினாள்...

விதி அவள் மீது பரிதாபம் கொண்டு சற்று நேரம் மற்றவர்களை படுத்தியெடுக்கச் செல்கிறேன் என சொல்லாமல் சென்றதை போல திடீரென அவளது கடிகாரத்தில் ஒரு ஒளி பரவ அவளால் அவளது கடிகாரத்தில் அப்போது வியோனாரின் படத்தை காண முடிந்தது...

எப்படியோ தன் கடிகாரத்தை அங்கிருக்கும் ஒரு சட்டிலைட்டோடு இணைத்து விட்ட நிம்மதியில் பெருமூச்சு விட்டவள் அதை இப்போது அங்கிருந்து லியானிடம் இணைக்க முயன்ற போதே வியோனாரின் அழகிய நீல நிறம் மெல்ல மெல்ல ஓர் அடர்ந்த பச்சை பசையினால் நிறைந்திருப்பதை கவனித்தாள்...

தன் கண்களை தானே நம்ப இயலாமல் மீண்டும் அதை சரி செய்து பார்த்தவள் இம்முறையும் அது பச்சை நிறத்திலே இருப்பதை கண்டதும் முபல்லன் எந்த கருவியை பற்றி உரையாடிக் கொண்டிருந்தானோ அதை முதன் முதலில் வியோனாரில் தான் உருவாக்கினான் என்பது அவளது சிந்தைக்கு எட்டியது...

பின்ன நினைவை இழந்த அவனுக்கு தான் அவன் மெடர்மானில் அந்த கருவியை உருவாக்கினான்.. ஆனால் உண்மையில் நடந்தது வேறாயிற்றே...

ஐந்து வருடம் முன்பு மெடர்மானில் நடந்த அந்த பேராபத்தின் பின் தான் செய்தவை எண்ணி தன் மீதே கடுங்கோபத்திலிருந்த முபல்லன் தன் தந்தையும் இறந்து விட்டதையும் அறிந்ததும் கோபம் தலைக்கேற ... மதியற்று செய்த ஒரு காரியத்தால் ஏதோ கோளாறு ஏற்பட்டு விண்வெளியிலிருக்கும் மெடர்மானினது விண்வெளி நிலையத்திலிருந்து வெளியேறி உயிருக்கு போராடிய நிலையில் அதே வார்ம் ஹோலின் வாயிலாக ஷரூரா அவனை வியோனார் முன் கண்டு பிடித்து காப்பாற்றினாள்...

பூமி மெடர்மான் மற்றும் நிலவை போல் அல்லாது வியோனாரில் உள்ளோர் அனைவருக்கும் அவர்களை விடுத்தும் இன்னும் பல கிரகங்கள் இருக்கிறதென்றும் அதில் சில கிரகங்களில் அவர்களை போலவே மனிதர்கள் வாழ்கின்றனர் என்பதையும் அறிந்திருந்தனர்...

ஆதலாலே ஷரூராவிற்கு வெட்ட விண்வெளியில் ஒரு மனிதனை கண்டுப்பிடித்த போது ஆச்சர்யமாய் இல்லை...

அவனை உயிர் பிழைக்க வைத்த பின்பும் திருந்துவானென எதிர்பார்க்காதே என சொல்லாமல் சொல்வதை போல தன் தந்தையை கொல்வோரை பழிவாங்குவேனென பொய் கங்கனம் கட்டி கொண்டு திரிந்தான்...

அப்போது தான் க்ரவிட்டி ரேடார் என்ற ஏதோ ஒன்றை உருவாக்கி ஷரூராவிடமும் அதை பற்றி ஒன்றும் கூறாமல் வியோனாரில் பதுக்கினான்...

அவன் மெடர்மானை விட்டு வெளியேறும் முன்பாகவே தான் கண்டுப்பிடித்த முதல் ரேடாரை மெடர்மானில் பதுக்கியிருந்தான்... இப்போது வியோனாரிலும் பதுக்கி வைத்தது அவனது நினைவில் மெடர்மானில் ஒரே நேரத்தில் இரண்டு ரேடார் பதுக்கியதை போன்ற நினைவை தந்திருக்கிறது... தற்போது அவன் பூமிக்கு வந்த பின் அங்கும் ஒரு ரேடார் மண்ணோடு பதுங்கியது... அவன் அதை பூமியில் பதுக்க நினைத்தானோ இல்லையோ அவன் பூமியில் தரை இறங்கிய நேரம் அது மண்ணில் பாதி பள்ளத்தை உருவாக்கி பதுங்கும் நிலைக்கு ஆளாகப்பட்டது...

இவ்வாறாக இவை மூன்றிற்கும் உண்டான ஒரே கன்ட்ரோலரை தான் ஆர்வின் ' முட்டை போல் இருக்கிறதே பொரிக்கலாமா? அவிக்கலாமா? ' என்ற மைண்ட் வாய்ஸுடன் பார்த்து உயிர்பித்து வைத்திருந்தான்...

ஷரூரா : இவன் சொல்ற மாரி ப்லக் ஹோலால கிரகங்கள் ஈர்கப்பட்டுட்டா... பூமி சூரியன சுத்தாம அதோட வலது பக்கம் ஈர்க்கப்பட்டு தன்னோட ஆர்பிட்டர விட்ட வெளியேறும்... அப்டி நடந்தா பூமிய ஆர்பிட்டரா கொண்டிருக்கிர இரெண்டு நிலாவுமே கிரவிட்டிய இழக்கும்... லியான் சொன்ன மாரி நிலால நிரன் கண்டு பிடிச்ச க்ரவிட்டி ஸ்டேபிலிட்டி இருந்தாலும் பூமியே இல்லாதப்போ நிலா மட்டும் ஒரு தனி ஆர்பிட்ல சூரியன சுத்தி வந்தா அது அவங்களுக்கு இன்னும் ஆபத்து... பட் அதுக்கு வாய்ப்பு இல்லையே...  மெடர்மான்க்கும் இதே நிலமை தான்.... ஆனா வியோனார்... வியோனாருக்கு என்ன ஆகும்.. எனக்குத் தெரிஞ்ச வர வியோனார்க்கு பக்கத்துல எந்த ப்லக் ஹோலும் இல்லையே... வியோனாருக்கு என்ன காத்துருக்கு...

வியோனார்

லியான் : மச்சான் இங்க ஏதோ தப்பா நடக்குது டா.. ஏதோ சரியில்ல... இந்த ஒரு வர்ஷத்துல இங்க டெக்னாலஜீஸ் இப்டி ஆனதே இல்ல... சம்த்திங் ஈஸ் ராங்... நாம அத கண்டுப்புடிச்சாகனும்...

டிவின் : ஆனா எப்டி டா... இங்க நீ வச்சிருக்க எந்த எலெக்ற்றானிக்கும் ஒர்க் ஆக மாட்டுதே...

நிரன் : அதான் ஏன் ஒர்க் ஆகல

லியான் : உன் கூட தான டா நாங்களும் இருக்கோம் எங்களுக்கு எப்டி தெரியும்...

டிவின் : ஓக்கே ஓக்கே கூல் டௌன்... நம்ம டிவைஸ் தான எடுக்கல... இங்க அந்த ஷரூரா பொண்ணோட டிவைஸ் எதாவது இருந்தா அத யூஸ் பன்னலாமே டா...

லியான் : டேய் புரியிதா இல்லையா உனக்கு... இங்க உள்ள டிவைஸ் மட்டும் இல்ல... மொத்த வியோனார்ல உள்ள டிவைஸுமே ஒர்க் ஆகல என ஜன்னலின் வாயிலாக எதையோ சுட்டி காட்டி கத்தினான்..

அங்கு வானளவிற்கு உயர்ந்திருந்த ஒரு பெரும் டவரின் உச்சி முழுவதும் பச்சை நிற வானத்தினடையே புகுந்திருக்க அந்த மொத்த டவருமே இடி விழுந்ததை போல் இருண்டு இருந்தது...

தேடல் தொடரும்...

DhiraDhi❤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro