Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

தேடல் - 4

தன் நடையை நிறுத்தாமல் விருவிருவென சென்றவளின் கரத்தை பிடித்து நிறுத்தினாள் அவளின் பின் மேல் மூச்சும் கீழ் மூச்சும் வாங்க ஓடோடி வந்திருந்த சித்தாரா..

சித்தாரா : ஏன் டி இப்டி இந்த நட நடக்குர...

கேத்ரியன் : நடக்குறனா.. ஓடுறேன் டி..

சித்தாரா : ஓடுறியா ஏன் டி...

கேத்ரியன் : பின்ன அவன் ஃபோன அவன் பெர்மிஷனில்லாம புடிங்கி பாத்துட்டு ஒரு மனெர்ஸ் இல்லாம தடார்னு வச்சிட்டு வந்துருக்கேன்... சோ தென் எந்த தைரியத்துல செஞ்சன்னு அவன் கேட்டுட்டா என மூச்சு வாங்கியபடி கூற

சித்தாரா : ஹான் பயந்து ஓட வேண்டியது அவங்க தான டி... அவங்க தான நம்மள ஃபோட்டோ எடுத்தது...

கேத்ரியன் : மக்கு அவன் ஐஸ்க்ரீம தான் ஃபோட்டோ எடுத்துருக்கான்... ஃப்லஷ் பட்டதால போட்டோல க்லர் அடிச்சிருக்கு அதுக்கு தான் அவன் கத்தீர்க்கான் என கூற சித்தாரா தலையில் அடித்து கொண்டாள்...

" ஹா தன்க் காட் .. எனக்கு எக்ஸ்ப்லைன் பன்ன வேண்டிய அவசியம் இல்ல " என திடீரென கேட்ட குரலில் இருவரும் திடுக்கிட கேத்ரியனின் இதயம் அடித்து கூறியது அது அவனே தான் என்று...

இவர்களின் பின் அவர்களின் எதிர்பார்ப்பை பொய்க்காமல் தன் வசீகரமான புன்னகையுடன் பன்ட் பாக்கெட்டினில் இரு கைகளையும் நுழைத்து கொண்டு நின்றிருந்தான் யதீஷ்...

வெகு நேரமாய் கேத்ரியன் அவனை பாத்தபடியே நிற்பதை கண்டு சித்தாரா மெதுவாய் அவளின் தோளை இடிக்க கேத்ரியன் திருட்டு முளி முளித்து விட்டு உடனே தலை குனிந்து கொண்டாள்...

கேத்ரியன் : ஐ.. ஐம் எக்ஸ்ற்றீம்லி சாரி ஃபார் ஸ்னப்பிங் யுவர் மொஃபைல் ஃப்ரம் யு.. ( உங்களோட ஃபோன உங்க கிட்டேந்து பிடுங்குனதுக்கு தயவு செஞ்சு மன்னிச்சிடுங்க) 

யதீஷ் : இட்ஸ் ஓக்கே.. தட் வாஸ் மை ஃபால்ட் டூ.. (அது என் தப்பும் தான்) நா அந்த மாரி ஃபோன ப்லேஸ் பன்னி ஃபோட்டோ எடுத்துர்க்க கூடாது... சாரி ஃபார் மேக்கிங் யுவர் டைம் வேஸ்ட் ( உங்க நேரத்த வீணடிக்க வச்சதுக்கு மன்னிச்சிடுங்க) என மென்மையாய் கூறியவன் அதற்கு மேலும் அங்கு நிற்க இயலாமல் விலகி சென்றான்...

சித்தாரா அவன் செல்லும் பாதையை பார்க்கும் தன் தோழியை உலுக்கி நிலைக்கு கொண்டு வந்தாள்...

சித்தாரா : என்ன ஆச்சு...

கேத்ரியன் : நத்திங்... வா போகலாம் என இருவருமாய் அங்கிருந்து நகர்ந்தனர்...

யதீஷ் கேத்ரியனிடம் உரையாடியதால் வானத்தில் பறக்காத குறையாக சுற்ற.. அவளது மென்மையான குரலே காந்தம் வைத்து ஒட்டியதை போல் கீதமாய் அவன் காதில் ஒலித்து கொண்டிருந்தது... நேரம் போனதே தெரியாமல் கடிகார முட்கள் பறந்திட யதீஷ் இரவு உணவை முடித்து கொண்டு அவனது அறைக்கு வந்திருந்தான்...

மனம் முழுவதும் கேத்ரியன் காரணமின்றி நிறைந்திருக்க அவன் உயிர் வரை அவள் சென்றடைந்து விட்டாள் என்பதை முட்டாள் மனமே ஏற்றுக் கொண்டாலும் இவன் ஏற்றுக் கொள்ள மாட்டான் போலும்...

இரவின் விண்ணை தங்களின் ஜொளி ஜொளிப்பால் அலங்கரித்து மின்னிக் கொண்டிருந்த ஒவ்வொரு நட்சத்திரமும் அழகாய் அவனை கண்டு சிரிக்க பால் நிலவை கண்டவனின் கண்கள் கட்டிலின் அருகிலிருந்த மேஜை மீது வைக்கப்பட்டிருந்த மதி மர்மம் கதை புத்தகத்தை தீண்டி வந்தது...

அதையே நோக்கிக் கொண்டிருந்தவனின் செல்பேசியில் டிங்கென ஒரு ஒலி கேட்டது... அதை திறந்தவன் முகநூல் பக்கத்தில் மணி அடித்திருப்பதையும் அந்த மணி கேத்ரியனால் அடிக்கப் பட்டிருப்பதையும் கண்டதும் தனிச்சையாய் புன்னகைத்தான்...

அதை சொடுக்கி உள்ளே சென்றவனின் புன்னகை அந்த கவிதை வரிகளை கண்ட பின் இன்னும் விரிந்தது...

இருள் வண்ண போர்வை போர்த்தி கொண்டு இடையில் முகிலின்(மேகத்தின்) வழியே எட்டிப் பார்க்கும் நிலமகளே உன் மீதுள்ள கல் மண்ணிடையில் ஒளிந்திருக்கும் முத்தின் மர்மம் மனிதன் அறியாததேனோ..

தன் அறையில் அமர்ந்து அந்நிலவை வெறித்து கொண்டிருந்த கேத்ரியன் தன் செல்பேசியில் கேட்ட ஒலியினால் தன் நிலை பெற்றாள்...

கன்னத்தில் வலிந்த கண்ணீரை துடைத்து விட்டு செல்பேசியை எடுக்க கையை நீட்டிய நேரம் சரியாக அவளின் அறைக்கு வெளியே ஏதோ சத்தம் கேட்க செல்பேசியை கட்டிலில் தூக்கி எறிந்து விட்டு வெளியே சென்றாள்...

கீழே  மயங்கி விழுந்திருந்த சித்தாராவை கண்டு அதிர்ந்த கேத்ரியன் அவளிடம் ஓட.. சுயநினைவற்று மயங்கியிருந்த சித்தாராவின் அதரங்கள் ஒரு பெயரை உச்சரிக்க கேத்ரியன் அதை கவனிக்காமல் தண்ணீரை அவள் முகத்தில் வேகமாய் தெளித்தாள்...

அடுத்த அரை மணி நேரத்தில் சித்தாரா மருத்துவமனை கட்டிலில் அமைதியாய் தூக்க மருந்தின் வீரியத்தால் ஆழ்ந்த உறக்கத்திலிருக்க அந்த அறை கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தாள் கேத்ரியன்..

கேத்ரியன் : ஏன் டி நீயே உன்ன வருத்திக்கிர... நீ எல்லாத்தையும் மறந்துட்டு பழைய படி மாறனும்னு தான உன்ன இங்க கூட்டீட்டே வந்தேன்... என கண்ணீரை அடக்க போராடி கொண்டிருந்தவளின் கரத்தில் கட்டப்பட்டிருந்த ஸ்மார்ட் வாட்ச் போன்ற வடிவமுள்ள கடிகாரத்தில் ஒரு ஒலி எழும்ப அதை கண்ட கேத்ரியனும் உடனே அட்டண் செய்ய அவளது காதிலிருந்த ப்லூட்டூத்தில் ஒரு குரல் கேட்டது...

கேத்ரியன் : ஷி ஈஸ் ஃபைன் நௌ அண்ணா..

மறு பக்கம் : ....

கேத்ரியன் : காலைலேந்து நல்லா தான் இருந்தா.. நைட் திரும்ப மயங்கீட்டா... இவ இப்டியே இருக்குரத பாக்க எனக்கு ரொம்ப பயமா இருக்கு அண்ணா

மறு பக்கம் : .........

கேத்ரியன் : எவ்ளோ வர்ஷம் நாம நம்பிக்கிட்டே இருக்குரது... மூணு வருஷமாக போகுது அண்ணா... இவ உண்மைய ஒத்துக்குட்டாலும் ஏத்துக்க மாற்றாளே... என உதட்டை கடிக்க

மறு புறம் : .....

கேத்ரியன் : இனிமேலும் இவ இப்டி இருக்குரத என்னால பாக்க முடியது அண்ணா.. இவ இல்லாம நா எப்டி இருப்பேன்..

மறு புறம் : ......

கேத்ரியன் : சாரி அண்ணா.. இப்டி தான் தப்பு தப்பா நினைக்க தோனுது... அவ சந்தோஷமா இருக்குரது தான் எனக்கு முக்கியம்...

மறு புறம் : ......

கேத்ரியன் : சரி அண்ணா... நா அவள அழச்சிட்டு சீக்கிரமே வரேன்... ஹ்ம் வச்சிடுறேன் என அதையும் கண்ணீரையும் அடக்கி விட்டு அந்த அறையை விட்டு வெளியேறிய கேத்ரியனை கண்களை திறந்து கண்ணீருடன் ஒருமுறை கண்டாள் சித்தாரா...

அந்த பன்னாட்டு நிறுவனத்தில் தலையை கையால் தாழ்த்தி பிடித்த படி கண்ணாடி மேஜை ஒன்றின் முன் அமர்ந்திருந்தான் அவன்... சுற்றி எங்கிலும் பணத்தின் செழுமை.. சிதறி கிடந்த ஏதேதோ கோப்புகளாலும் பல தாள்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த தரை.. அவனுக்கு நேரெதிரிலே பவ்யமாய் நின்றிருந்த அவனின் உதவியாளர் அவன் எப்போது தலை நிமிர்த்துவான் என அவன் தலை மேல் விழி வைத்து காத்திருந்தார்...

அவனின் அலையலையான கேசம் காற்றில் அசைந்தாடி அவன் கண்களை குறுகுறுக்க நிமிர்ந்து அமர்ந்து அருகிலிருந்த ஒரு கோப்பை மீண்டும் எடுத்து புரட்டி பார்த்தவன் ஒரு கட்டத்தில் சினம் தலைக்கேற அந்த கோப்பை தூக்கி எறிய அது அந்த மேஜையிலிருந்த பலகையை இடித்து அதை தள்ளி விட அத்தங்க நிற பலகையோ " சைத்தான்யா " என்ற அவனின் பெயரை தாங்கியதற்கு இது தான் சன்மானமா என அவனை நோக்கியது... 

அவன் தூக்கியெறிந்த கோப்புகளில் இருந்து சிதறிய ஒரு புகைபடம் கீழே விழ அதில் கேத்ரியனின் அச்சம் நிறைந்த முகம் படமாய் சித்தரிக்கப்பட்டிருந்தது...

அந்த புகைபடத்தை கசக்கி தூக்கி எறிந்தவன் மீண்டும் அவன் கதிரையிலே அமர்ந்து அவன் தலையை கைகளால் தாங்கிக் கொள்ள அந்த உதவியாளர் இன்னும் என்னவெல்லாம் செய்வானோ என்பதை போல் அவனை கண்டு அவஸ்த்தையாய் உதட்டை வளைத்தார்...

அதை உணர்ந்ததை போல் நிமிர்ந்து அவரை பார்த்தான் அவன்... சைத்தான்ய ராஜதர்மன்.. இருவத்தி ஐந்து வயது மதிக்கத் தக்க இளைஞன்.. மாநிறம்.. ஐந்தடி உயரம்.. உடற்பயிற்சியினாலே உடலையும் மனதையும் தனக்கேற்றதை போல் மாற்றி அமைத்திருப்பவன்.. அன்பானவன் என கூறாவிட்டாலும் நேர்மையானவன்.. தொழிலில் நேர்மையானவனென்றாலும் அவனது விருப்பு வெறுப்பில் அப்படியே நேரெதிர்... அவன் உண்டு அவன் வேலையுண்டு என இருந்தவனை அவனின் தாயார் தொழிலில் இறக்க முடிவு செய்து அவனையே அவர்களின் குடும்ப தொழிலிற்கு பொருப்பாக்கி மொத்த பொருப்பையும் அவன் தலையில் கட்டினார்.. அது வரை விருப்பம் மீது மட்டும் கவனம் செலுத்திக் கொண்டிருந்தவனை பணத்தின் மீதும் அதை சம்பாரிக்கும் விதத்தின் மீதும் கவனத்தை செலுத்த வைக்க.. அவர்களின் குடும்ப தொழிலின் நஷ்டமனைத்தையும் ஈடு கட்டி பெரும் லாபம் அடைய வைத்தான்... இப்போதைய வருடத்தில் சைத்தான்யாவும் ஒரு இளம் தொழிலதிபன்..

சைத்தான்யா : அங்கில்.. இவனின் குரலில் சட்டென வெளி வந்து அவனை நோக்கினார் திரு சுந்தர நாராயனன்

சுந்தரன் : சொல்லுங்க தம்பி..

சைத்தான்யா : என்ன சொல்லனும்னு நினைக்கிறீங்க.. நா உங்க கிட்ட கேட்ட டீட்டைல்ஸ் என்னாச்சு என கேட்டதும் அவன் தூக்கி எறிந்த கோப்பை ஒரு நிமிடம் ஏறிட்டார்...

சுந்தரன் : அதோ கெடக்குதே தம்பி

சைத்தான்யா : ஐ டோன்ட் நீட் திஸ் அங்கில் ( எனக்கு இது தேவையில்லை அங்கில்) இதையே தான் நீங்க ஒரு வர்ஷமா காட்டிக்கிட்டு இருக்கீங்க... எனக்கு இதுக்கு மேல தெரிஞ்சிக்கனும்.. ஒரு வர்ஷமா இந்த பொண்ணோட போட்டோவ மட்டும் வச்சிட்டு அவள தமிழ்நாடு ஃபுல்லா தேடீர்க்கீங்க... ஆனா ரிசல்ட் ஜீரோ..

சுந்தரன் : என்ன செய்யனும்னு சொல்லுங்க தம்பி

சைத்தான்யா : நா எப்போவோ சொல்லிட்டேன் அங்கில்.. இவ தமிழ்நாடு ஃபுல்லா இல்லனா இண்டியா ஃபுல்லா தேடுங்க.. எனக்கு இவ வேணும்.. சீக்கிரமே வேணும்.. என தீர்மானமாய் கூறியவன் வேறு சில கோப்புகளை பார்க்க தொடங்கினான்...

சுந்தரன் : சரி தம்பி.. நாளைக்கு உங்களுக்கு ஒரு மீட்டிங் இருக்கு.. அத அட்டெண் பன்னுவீங்களா

சைத்தான்யா : அந்த ந்யு கம்பெனி " எம் எம் ட்வெல் " கூட தானே சொல்றீங்க.. கண்டிப்பா அங்கில்.. நா அவர பாத்தே ஆகனும்.. ரொம்ப சீக்கிரமாவே அவரு கம்பெனிய நல்லா கொண்டு வந்துருக்காரு.. நா என்னால முடிஞ்ச ஹெல்ப் செய்யனும்னு நினைக்கிறேன்.. அவரு விருப்பப்பட்டா பாட்னர் கூட ஆகலாம் என முன்பிருந்த கோவத்தை ஒதுக்கி வைத்து விட்டு தெளிவாய் உரையாடினான்...

சுந்தரன் : நல்லது தம்பி.. அந்த பையன பத்தியும் விசாரிச்சேன்.. தங்கமான பையனாம்... நீங்களே நாளைக்கு பாக்கத் தானே போறீங்க

சைத்தான்யா : ஹான் ஆமா அங்கில் ..

சுந்தரன் : தம்பி உங்க கிட்ட ஒன்னு சொல்லனும்

சைத்தான்யா : சொல்லுங்க அங்கில்

சுந்தரன் : அது வந்து.. என் பொண்ணுக்கு பையன் பிறந்துருக்கான் தம்பி.. ஒரு ஹாஃப் டே லீவ் அப்லை பன்னீர்க்கேன் என ஒரு சீட்டையும் இனிப்பு பலகாரத்தையும் நீட்ட அவரை கண்டு புன்னகைத்தான் அவன்

மறுக்காது அந்த இனிப்பு பலகாரங்களை வாங்கி கொண்டவன் அந்த சீட்டை பிரித்து பார்த்துக் கொண்டே

சைத்தான்யா : தாத்தாவானதுக்கு வாழ்த்துக்கள் அங்கில் .. ஹாஃப் டே எதுக்கு.. உங்க பொண்ண கூட பக்கத்து ஊர்ல தானே கட்டி கொடுத்தீங்க... நீங்க போய்ட்டு பாக்க வரனும்னாலே இன்னைக்கு ஹாஃப் டே போய்டும் அங்கில்.. அப்ரம் குழந்தைய சரியா கூட பாக்காம நீங்க கெளம்ப வேண்டியதா இருக்கும்.. ஒரு வாரம் பேரன் கூடையும் பொண்ணு கூடையும் இருந்துட்டு வாங்க என அதே புன்னகையுடன் கூறியவன் அவருக்கு ஒரு வார விடுப்பு கொடுத்து அனுப்பி வைத்தான்...

சுந்தரன் என்றும் போல் சைத்தான்யாவின் குணத்தில் வியந்து அங்கிருந்து விடைப்பெற்று சென்றார்..

அவர் கொடுத்த இனிப்பு பலகாரங்களை மறக்காது எடுத்து கொண்டு தன் காரில் வீட்டை நோக்கி சென்றான் சைத்தான்யா... அந்த இனிப்பு பலகாரங்களில் அவனை கண்டு எட்டி பார்த்த ஒரு மைசூர்பாக்கை ருசித்து கொண்டே வண்டியோட்டி சென்றவன் அவனது வீடிருக்கும் வளாகத்தில் நுழைந்து காரை பார்க் செய்தான்...

ஸூட் கேசும் கோட்டுமாக வரும் மகன் இன்று ஸ்வீட் பாக்ஸும் கையுமாக வருவதை கண்டு ஆச்சர்யப்பட்டு தான் போனார் அவனின் தாயார் வேதவள்ளி...

வேதவள்ளி : வாடா கண்ணா சாப்ட்டியா

சைத்தான்யா : இல்லமா .. நீங்க சாப்ட்டீங்களா.. மாத்திரை போட்டீங்களா

வேதவள்ளி : நா சாப்ட்டேன் கண்ணா... மாத்திரையும் போட்டுட்டேன்.. சரி இது என்ன ஸ்வீட் பாக்ஸு.. என் மருமகள கூட்டீட்டு வந்துட்டு என்ன சமாளிக்கனும்னு வாங்கீட்டு வந்துர்க்கியா என்ன

சைத்தான்யா : மா சும்மா ஒளறாத.. இது சுந்தர் அங்கில் குடுத்தது... சுந்தர் அங்கில்க்கு பேரன் பிறந்துருக்கானாம்.. இந்தாங்க ஸ்வீட் எடுத்துக்கோங்க

வேதவள்ளி : அட எவ்ளோ சந்தோஷயான விஷயம் சொல்லீர்க்க... நாளைக்கு போய் அவங்கள பாத்துட்டு வரலாம் டா கண்ணா

சைத்தான்ய : ஹான் நாளைக்கு எனக்கு ந்யு கம்பெனி ஒன்னோட மீட்டிங் இருக்கே... சரி ஓக்கே அஃப்ட்டர் நூன் போவோமா

வேதவள்ளி : ஹான் போலாம் டா கண்ணா.. சரி உள்ள வா பனி கொட்டுது

சைத்தான்யா : ஃப்ரெஷ்ஷப் ஆய்ட்டு வரேன்மா... என மாடிக்கு இரண்டிரண்டு படிகளாய் தாண்டி தாண்டி ஓடியவனை கண்டு

வேதவள்ளி : பாத்து போ கண்ணா நா சாப்பாடு எடுத்து வைக்கிறேன் என கத்தினார்...

அடுத்த பதினைந்து நிமிடத்தின் பின் அம்மா மகன் இருவரும் மேஜையில் அமர்ந்திருக்க அவன் உண்ணுவதை பார்த்து கொண்டு அமர்ந்திருந்த தாயிடம் நடந்த அனைத்தையும் பற்றி கூறி கொண்டே தன் உணவை முடித்தான் சைத்தான்யா...

வேதவள்ளி நெற்றியில் சின்ன இதழ் முத்தம் கொடுத்தவன் குட் நைட் மா என சோர்வாய் கூறி விட்டு அவர் புன்னகைத்ததும் அவன் அறை தேடிச் சென்றான்...

உறங்கச் செல்லும் மகனை நோக்கிய தாயின் கண்கள் தனிச்சையாக அந்த வீட்டில் மாலையிடப்பட்டிருந்த அவனின் தந்தையின் படத்தை வருடியது....

தேடல் தொடரும்...

ஹாய் இதயங்களே... கதை எப்டி இருக்கு... ஃப்லோக்கு வந்துட்டோமா... சீக்கிரமே மாயம் கதையோட எப்பிலாகோட வரேன்.. கொஞ்சம் மூட் அப்செட்டா இருந்ததால சீக்கிரம் போட முடியல..  அந்த எப்பிலாகுக்கு அப்ரம் நா கொஞ்சம் ப்ரேக் எடுக்கலாம்னு இருக்கேன் இதயங்களே... ஐ நீட் டு ஹவ் சம் ரெஸ்ட்.. அதான் வேணும்னு நினைக்கிறேன்.. அப்பப்போ எனக்கு தோனும் போதெல்லாம் நா கதை எழுதுவேன் கவலப்படாதீங்க.. என்னால முடிஞ்சப்போலாம் யூடியும் குடுப்பேன்... ஆனா ரெகுலர் யூடி இருக்காது... முடிசா வாரத்துல ஒன்னு இல்ல இரெண்டு யூடி.. உங்களுக்கு என் நிலமை புரியும்னு நினைக்கிறேன்... டாட்டா....

DhiraDhi❤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro