Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

தேடல் - 36

நிரனின் கூற்றில் மற்ற இருவரும் ஒன்றும் புரியாது விழிக்க அதிர்ச்சியிலே அவளின் மன நிலையை அறிய இயலாமல் திண்டாடினான் நிரன்...

நிரன் : நா எப்டி இத கவனிக்காம விட்டேன்... ஒரு வர்ஷம் இல்லாம இன்னைக்கு ஏன் அவ அந்த டாக்குமென்ட்ட பாத்தா... உண்மைய தெரிஞ்சும் என்ன நெனச்சிட்டு இருக்கான்னு தெரியலையே... எப்பவும் போல எல்லாத்தையும் உள்ள வச்சிட்டு இருக்காளா... ஏன் எனக்கு எதுவும் தோன மாடுது... என்னால ஏன் அவ மனச உணர முடியல என தன் பாட்டிற்கு தன் கழுத்திலிருக்கும் டாலரை பிடித்து கொண்டு உளறுபவனை எப்பாடோ பட்டு நிறுத்திய இருவரும்

டிவின் : டேய் டேய் இரு டா ... இரு ஏன் பறக்குர.. அஜிக்கு அந்த உண்மை தெரிஞ்சாலும் இப்போ வர அவ சும்மா தான இருக்கா.. ஐ மீன் நார்மலா தான டா இருக்கா... நீ ஏன் ஹைப்பர் ஆகுர..

லியான் : ஆமா நீங்க வர்ரதுக்கு முன்னாடி வரையுமே அஜி நார்மலா தான் இருந்தா... நீ சொல்ற அந்த உண்மையோட இம்ப்பக்ட் அவ மேல தெரியவே இல்லடா மச்சான்...

நிரன் : ஹான் இருக்களாம் டா... ஆனா

டிவின் : அதெல்லாம் இருக்கட்டும் இப்போ என்ன அவள பத்தின உண்மை...

நிரன் : அவ மார்ன் அன் மெடரோட பொண்ணுங்குர உண்மை டா என பெரிதாகவே எடுத்துக் கொள்ளாமல் பட்டென போட்டுடைத்து அவ்விருவரின் கண்களையும் அகல விரிய வைத்தான்...

டிவின் லியான் : என்னது என ஹை பிட்ச்சில் கேட்ட அலரலிலே தான் என்ன கூறினோம் என சிந்தித்து பார்த்த நிரன் அரண்ட விழிகளுடன் அவர்களை நோக்கினான்...

டிவின் : டேய் என்ன டா சொல்ற... அப்போ அஜியும் மெடர்மான் இணத்தவளா...

லியான் : அப்போ எப்டி டா அவ நிலாக்கு போனா....

டிவின் : உனக்கு அவ நிலாவ சேந்தவ இல்லன்னு தெரியும்னா... ஏன்டா அவளுக்கு தெரியல...

லியான் : ஆமா உனக்கெப்புடி தெரியும்

டிவின் : அதோட அஜி தான் மெடர் அன் மார்ன் உடைய பொண்ணுன்னு எப்டி டா சொல்ற

நிரன் : என்ன பேச விடுங்க டா மொதல்ல... நாம போன வர்ஷம் பூமில உள்ள அண்டர்க்ரௌண்ல ஒரு பெண் அதாவது மெடர் ஒரு பெண் குழந்தைய தூக்கி வச்சீட்டு நிக்கிர ஃபோட்டோ அதாவது பெயின்ட்டிங் பாத்தோம்ல.. அந்த குழந்தை தான் அவங்களோட பொண்ணு .. அஜிம்சனா ... எனக்கும் அப்போ தான் தெரியும்... நா அப்ரமா என் கிட்ட இருக்க டாக்குமென்ட்ல அத கன்ஃபார்ம் பண்ணிக்கிட்டேன்...

லியான் : என்ன டா சொல்ற... ஆனா... ஆனா அப்டி இருந்தா அஜி ஏன் நிலால இருக்கனும்...

நிரன் : எனக்கும் தெரியல... எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ள இருந்து அஜி நிலால தான் இருந்தா வளந்தா...

டிவின் : உனக்கு எப்போ டா நினைவு தெரிஞ்சிது..

நிரன் : நாழு வயசுல மச்சான்... அப்போ அவளுக்கு ஒரு  ஒன்றரை வயசு இருக்கும்...

லியான் : அப்போ அதுக்கு முன்னாடி அவ எங்க இருந்தான்னு உனக்கு தெரியாதா

நிரன் : தெரியுமே... அப்பையும் அவ நிலால தான் இருந்தா... என் அத்தை அதாவது அஜிய வளத்த அவளோட வளர்ப்பு அம்மா சொல்லீர்க்காங்க... அவ பொறந்தப்போ எனக்கு மூணு வயசாம்... நா கூட இருந்தனாம்... அப்போ என் கூட இன்னும் இ-

லியான் : இரு இரு இதெல்லாம் ஓக்கே... நிலால தான் அஜி பொறந்துருக்கான்னா... இருவத்தி மூணு வர்ஷத்துக்கும் முன்னாடியே மார்ன் அண் மெடர்க்கு பூமி மெடர்மான் பத்தி மட்டுமில்லாம அல்ற்றா மூன பத்தியும் தெரிஞ்சிருக்கு

டிவின் :எக்ஸக்ட்லி...

லியான் : அஜி அவங்க பொண்ணுங்குர உண்மை அந்த ம்யோரா டாக்குமென்ட்ல இருந்துர்க்குன்னா அந்த லங்வேஜ் மெடர் அண் மார்ன் க்குமே தெரிஞ்சிர்க்கும்... அப்டீன்னா அவங்க 25 வர்ஷத்துல மூணு கிரகங்களுக்கு பேராபத்து வரும்னு பூமி மெடர்மான் அல்ற்றா மூணத் தான் குறிப்பிற்றுக்கனும்...

நிரன் : மூணு கிரகத்துக்கு ஆபத்தா...என்ன டா சொல்ற...

லியான் : ஆமா டா ... அப்டி ஏதோ இருக்குரதா தான் அஜிமா சொன்னா...

டிவின் : ஒரு நிமிஷம் டா... டேய் உனக்கு அந்த டாக்குமென்ட் உள்ள எல்லாமே தெரியுமா... எப்டி நீ அஜிய பத்தி அதுல கன்ஃபார்ம் பண்ண...

நிரன் : அது என் கிட்ட ம்யோரா லங்வேஜோட ஃபுல் டாக்குமென்ட்டும் இருக்கு டா... நா இன்னும் அத சொல்லல...

லியான் : அப்போ உனக்கு அதுல என்ன என்ன இருக்குன்னு தெரியுமா... எப்டி டா தெரியும்.. உனக்கு தான் முழுசா படிக்கத் தெரியாதே...

நிரன் : அதுவந்து... என் கிட்ட இருந்த டாக்குமென்ட்ல மூணு விதமான டாக்குமென்ட் இருந்துச்சு டா... ஒன்னு ம்யோரா லங்வேஜ்ல... மூணுபக்கத்துக்கு... இன்னோன்னு இங்லிஷ்ல அது பாதி கூட முடியல... கடைசியா ... என சொல்லாமல் இழுக்க அதை லியானே முடித்து வைத்தான்...

லியான் : தமிழ் டாக்குமென்ட்டும் இருந்துச்சுல்ல உன் கிட்ட என கேட்கவும் டிவின் நம்ப இயலாமல் நிரனை நோக்க... நிரன் தயக்கத்தோடே தலையாட்டினான்...

டிவின் : எதுக்கு டா அப்போ எங்க கிட்ட இத்தன வர்ஷமா மறச்ச... அந்த டாக்குமென்ட் உனக்கு நாழு வர்ஷத்துக்கு முன்னாடியே கெடச்சிடுச்சே என பொருக்க இயலாமல் கத்தியவனுக்கு பாவமான ஒரு பார்வையை கொடுத்தான் நிரன்...

நிரன் : அந்த உண்மைய நம்ம தெரிஞ்சிக்கிட்டத விட அதுக்கு சம்மந்தப்பட்டவங்க தெரிஞ்சிக்கனும்னு நெனச்சேன் டா....

டிவின் : இதத் தானே நீ நிலாலையும் தர்மன் கார்மன கொல்லும் போது சொன்ன...

நிரன் : அதே தான் இப்பவும் சொல்றேன்...

லியான் : உண்மையத்தான் சொல்லித் தொலையேன் டா...

நிரன் : அது...

தமிழகம்

நிரன் அந்த டாக்குமென்ட்டுகளை இரண்டாம் மாடியிலிருந்த ஒரு அறையிலிருந்தே எடுத்தான் என்பதை நினைவில் வைத்து கொண்டு நரா தில்வியா மற்றும் ஃத்வருண் இரண்டாம் மாடியை வளம் வர அதே இரண்டாம் மாடியிலிருந்த இரகசிய வாயிலுக்குள் வினயை பின் தொடர்ந்து மெதுவாய் உள்ளே இறங்கி கொண்டிருந்தாள் அஜிம்சனா

அங்கு அவர்களுக்கு முன்னமே சத்யா மற்றும் தாரா அவ்விடத்தை ஆராய்ந்து கொண்டிருந்தனர்...தெளிவாய் கூற வேண்டுமெனில் தாரா அனைத்தையும் பொருமையாய் அலசி கொண்டிருந்தாள் சத்யா ஒரு சுவற்றையே வெறித்து கொண்டிருந்தான்...

தரையை தொட்ட அஜிம்சனாவின் கண்கள் முதலில் நிலைத்ததே அவளும் அவள் தாயும் கண் மூடிய நிலையில் தீட்டப்பட்டிருந்த ஓவியத்திலே... அதை காணக்காண தனிச்சையாகவே அவளின் கால்கள் அதனருகில் சென்று நிற்க அவளருகிலே நின்றிருந்த சத்யாவின் கண்களுமே அந்த ஓவியத்தில் தான் நிலைத்திருந்தது...

தாராவை பின் தொடர்ந்து ஒவ்வொரு ஓவியமாய் பார்த்து கொண்டே வந்த வினய் திடீரென நிற்க அவன் முன்னிருந்த ஓவியத்தில் தத்ருபமாய் காணத்தக்க அழகுடன் செதுக்கப்பட்டிருந்த ஒரு ஜோடி கண்கள்... அக்கண்களில் மொத்த பிரபஞ்சமும் அடங்கியதை போல் ஓவியரால் தீட்டப்பட்டிருக்க அதை முதலில் கண்ட போது இரு ஜோடி கண்கள் மின்னலென வினயின் கண் முன் வந்துசென்றது...

ஒன்று அவன் நினைவு தெரிந்த முதலாகவே கண்டு வரும் கண்கள்... மற்றொன்று நான்கு வருடமாய் பார்த்து விட மாட்டோமா என ஏங்கும் கண்கள்... இரண்டும் கிட்டத்தட்ட ஸெராக்ஸ் எடுக்காத குறையில் இருக்கும் பொழுது வினயின் கண்கள் சத்யாவை ஒரு முறை தீண்டி விட்டு வேறு புறம் சென்றது... ஆனால் தாராவினால் அந்த ஓவியத்தை விட்டு அவளின் விழிகளை அத்துனை எளிதாய் பிரித்தெடுக்க முடியவில்லை...

பின்ன நான்கு வருடமாய் அவ்விழிகளையே காண காத்துக் கிடப்பவளுகு திடீரென அவ்விழிகளை அச்சில் வார்த்தாற் போன்ற ஒரு ஓவியம் கிடைத்தால் காணக் கசக்குமா என்ன...

அஜிம்சனாவின் கண்கள் அந்த ஓவியத்தை கண்டு கண்ணீரால் நனைந்திருந்த போது அவளருகிலிருந்த சத்யா இணமறியா ஒரு உணர்வில் அந்த ஓவியத்தை தன் விரல்களால் வருடினான்... அவனின் விரல் சற்றே அழுத்தம் கொடுத்தாலும் அவ்வோவியம் அவன் கண்களை விட்டு மறைந்துவிடும் என அவன் உள் மனம் அச்சமடைந்திருந்ததோ என்னவோ...

அவன் அறியாதது அஜிம்சனாவின் கண்ணீர் தேங்கிய கண்கள் அவன் மீது எப்போதோ பதிந்திருந்ததை தான்... அந்த ஒரு ம்யோரா காகிதத்தில் அவளுக்கு எத்தனையோ விடயம் புரியாது பல வித கேள்விகளை எழுப்பியிருந்தாலும் சத்யாவை காணுகையில் அவளையும் மீறி கொண்டு அந்த ஒரு சொற்றொடர் காதில் ஒலித்தது... " லியான் லயான் கிரகத்த நீங்க தான் காப்பாத்தியாகனும் "

இவர்கள் இந்த அமைதியான சூழலில் மூச்சடைக்காத குறையில் சூழ்ந்திருந்த போதே அவ்வீட்டிலிருந்த அனைவரையும் கலைத்தது ஃத்வருணின் " கெடச்சிடுச்சு " என்னும் கத்தல்

அந்த முட்டை போன்று விழுந்திருந்த எதையோ கையில் வைத்து தாஜ்மஹாலை போல சுற்றி சுற்றி பார்த்து கொண்டிருந்த ஆர்வின் இவனின் சத்தத்தில் அரண்டு அதை அழுத்தி பிடிக்க திடீரென அவனின் கரம் அழுத்தமாய் பட்டதும் அம்முட்டையின் ஒரு பகுதி உள்ளே சென்று விட்டு வெளியேற அதிலிருந்த ஒரு வட்டமான பகுதி விட்டு விட்டு ஒளிரத் தொடங்கியது...

ஆர்வின் அதை புரியாது பார்க்க இவர்களின் வீட்டை விட்டு ஒரு சில கிலோமீட்டர் தூரத்தில் பாதி நிலத்தை காவலர்களின் கட்டளையால் ஆக்ரமித்திருந்த இரும்பு கம்பிகளுக்கு உள்ளே இருந்த பள்ளத்தின் அடி ஆழத்தில் இருந்த ஒரு வருடம் முன்பு விண்வெளியிலிருந்த வந்து விழுந்த அந்த ஒரு பொருளில் ஒரு சிறிய அதிர்வெழுந்து அந்த அதிர்வலை நிலமெங்கிலும் பரவியது....

தேடல் தொடரும்...

ஹாய் இதயங்களே... ஏதோ என்னால இப்போ முடிஞ்சது... டைம் பத்தல...அடுத்த யூடி பெருசா குடுக்க ட்ரை பன்றேன்... எப்போ நெக்ஸ்ட் யூடி வரும்னு எனக்கே தெரியாது... தயவு செஞ்சு கோபப்படாதீங்க... ஸ்டடீஸ்லையே ரொம்ப ஸ்ற்றெஸ்ல இருக்கேன் நான்.. டக்குன்னு ரிலக்ஸ் ஆகவும் முடியல... நிறைய மலை மாரி குவிஞ்சிட்டே இருக்கு டெய்லி... அதுக்கே சரியா டைமில்லாதப்போ கதைக்கு நா என்ன பன்றது சொல்லுங்க... நாளன்னைக்கோ இல்ல அதுக்கும் மறுநாளோ யூடி குடுக்க கண்டிப்பா ட்ரை பன்றேன்... மே பீ நெக்ஸ்ட் யூடில உங்களோட பல நாள் கேள்விக்கு பதில் தெரியப்போகுது... ஸ்டே ஸேஃப்... குட் நைட்... டாட்டா

DhiraDhi

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro