தேடல் - 35
அனைவரும் ஏதோ ஒரு படப்படப்பிலே அலைந்து கொண்டிருந்த போது தாரா மாத்திரம் தீவிரவாய் தன் மடிக்கணினியில் ஏதோ தட்டி கொண்டே இருந்தாள்...
அவளுக்கு ஒரு கப்பில் ஜூசை எடுத்து வந்த யதீஷ் அவளருகில் அமர்ந்து அதை அவளிடத்தில் நீட்ட முதலில் முகத்தை சுழித்தவள் அவனின் கண்டிப்பான பார்வையை பார்த்து அதை பருகியவாறே தன் பணியை தொடர்ந்தாள்...
யதீஷ் : என்ன பன்ற அம்மு... நீ நம்ம விஷயத்தையோ இல்ல எப்பவும் போல வட்ரனையோ தேடுர மாரி தெரியலையே...
தாரா : ஆமாண்ணா... இப்போ கொஞ்சம் நம்ம உலகத்துல உள்ள பிரச்சனைய பாத்துட்டு இருக்கேன்.. பிரச்சனைன்னு இல்ல... ஆனா இப்போ ஒரு 50 லைட் இயர் பக்கத்துல ஒரு கிரகத்த கண்டுப்புடிச்சதுலேந்து உலகத்துல உள்ள பல விஞ்ஞான ஆராய்ச்சி அரங்கங்கள் இன்னும் விண்வெளிய அலசி இப்போ ரீசன்ட்டா ஒன்னு கண்டுப்புடிச்சிருக்காங்க... அதான் பாத்துட்டு இருக்கேன்...
வினய் : நீ லியான நெனச்சிட்டே இல்லாம வேற விஷயத்துலையும் கவனம் செலுத்த ஆரம்ச்சத நினைச்சா இப்போ நிம்மதியா இருக்கு என அவளின் தலையை வருடி விட்டு அவளின் மறு பக்கத்தில் அமர்ந்தான்...
தாரா : ஹ்ம்ம்ம் என்னண்ணா பன்றது... எவ்ளோ நடந்தாலும் நம்மளோட நடைமுறை வாழ்கைக்கு நாம திரும்ப வந்து தானே ஆகனும்... நம்ம வலி நமக்கு தெரியும்... ஆனா நமக்கு மேல உள்ளவங்களுக்கு தெரியனும்னு எதிர்பார்க்க முடியாதே என மடிக்கணினியிலிருந்த பார்வையை தன் கரத்திலிருந்த பழரசத்தில் பதித்து வினயின் மீது சாய்ந்து கொண்டள்...
யதீஷ் : சரி என்ன பாத்துட்டு இருக்கன்னு சொல்லு டா... என பேச்சை வேகமாய் மாற்ற அவனின் செயல் புரிந்து வினயும் அவனுக்கு அமோதித்தான்...
தாரா : அது ஒன்னும் இல்லண்ணா... நம்ம பூமி பக்கத்துல இருக்க ஒரு ப்லக்ஹோலேந்து வர ஏதோ ஒரு ரேஸ் பூமி மேல இன்னும் கொஞ்ச நாள்ள விழ போகுதாம்....
யதீஷ் : என்ன டா சொல்ற...
தாரா : அவ்ளோ சீரியஸ் ஒன்னும் இல்லடா அண்ணா... முன்னாடியே கூட இது நடந்திருக்கு... ப்லக்ஹோல்லேந்து வெளியவும் தெரியிர ஒரு ஒளி விண்வெளில நெடுந்தூரமும் பயணிச்சு தெரிஞ்சிட்டே தான் இருக்கும்.. அந்த ஒளியோட நெடுந்துயரப்பயணம் நம்ம பூமிய நோக்கி இருக்குரதால அந்த ஒளி பூமி மேலையும் விழ வாய்ப்பு இருக்குரதா சொல்லீர்காங்க...
வினய் : சரி அதனால என்ன நடக்கும்.. என்ன ஏதுன்னு கண்டுப்புடிச்சாங்களா...
தாரா : ஒன்னும் இல்லண்ணா... ஆனா அந்த நாளோட இரவு நேரத்துல பூமியோட வானம் இருளால இல்லாம ஊதா நிறத்துல அதாவது வயலட் நிறத்துல இருக்கும்...
யதீஷ் வினய் : ஓஹ்ஹ்ஹ் என இவ்விருவர் ஊளையிட்டு கொண்டிருக்கும் போதே குழந்தைகளுக்கு அவர்கள் பின்னாடி ஓடி ஓடி கெஞ்சி கொஞ்சி உணவூட்டி கொண்டிருந்த ஸ்வத்திக்கா மற்றும் ஷ்ரவனும் தொலைகாட்சியில் கண்டனர்...
ராவனா வீட்டிலே இல்லாத டிவினை தேடி வீடு முழுவதும் சுற்றி அலைந்து கொண்டிருந்தாள்... ஒரு இடம் விடாமல் அனைத்தையும் அலசி ஆராய்ந்தவள் அவனது அறையில் போட்டது போட்டபடியே கிடக்க எங்கோ காணமல் போய் விட்டான் என்பது மட்டும் அவளுக்கு புரிந்தது
வீட்டை விட்டு வெளியேறியிருந்தாலோ அல்ல வெளியே செல்வதாய் இருந்தாலோ நிச்சயம் வீட்டில் ஒருவராவது என்ன ஏதென்று அறிந்திருப்பர்...ஆனால் இவனின் நிலை அப்படி இல்லையே...
அவளுக்கு கம்ப்பெனி கொடுத்த படியே அரானாவும் டிவினை தேடி அலைய மறுபுறம் ஃத்வருண் மற்றும் தில்வியா ம்யோரா கோப்பின் மறு பாகத்திற்கான குறிப்பிட்ட வாய்ப்புகளை சேகரித்து கொண்ருக்கையில் நரா அனாமிக்கா இருவருமாக நிரனை மெடர்மான் முழுவதும் வலை வீசி தேடி கொண்டிருந்தனர்...
ஒரு கட்டத்தில் வீட்டையே பிரட்டி தேடியும் தன்னவன் கிடைக்காததால் வெளியே தான் போய் தொலைந்து விட்டானென அவனை வாயிலே வறுத்தெடுத்தபடி சத்யா மற்றும் சக்தியோடு வீட்டை விட்டு கிளம்பினாள் ராவனா
சக்தி : ஏன் குட்டிமா... அவன இங்க தேடுனியா என வீட்டின் பின் புறமுள்ள அந்த கட்டிடத்தை கை காட்ட யோசனையோடே இல்லையென தலையசைத்தாள்
சரி அங்கும் பார்த்து விடலாமென மூவரும் அக்கட்டிடத்தின் கதவை தள்ளி கொண்டு உள்ளே சென்றனர்...
இவர்கள் எதிர்பார்த்ததை போல் அங்கு எவரும் இல்லை... எதற்கும் அந்த வீட்டின் நடுவே உள்ள சுரங்கத்திலும் பார்த்து விடலாமென சத்யா முன்னேற அதற்கு முன்னதாகவே ராவனாவின் பார்வை அங்கிருந்த ஒரு குறிப்பிட்ட பொருளின் மீது விழுந்தது...
அண்ணன்களை கவனிக்காமல் அதை நோக்கிச் சென்றவள் அங்கிருந்த ஒரு மரஷெல்ஃபின் ஓரத்தில் இருந்த குட்டி கரடியின் சிலையை கையிலெடுத்து அது மீது படர்ந்திருந்த தூசியை தட்டி சுத்தம் செய்தாள்...
மெடர்மானில் நான்கு வருடங்களுக்கும் முன்பு இவர்கள் அனைவரும் அந்த ஆடிட்டோரியத்தை அலசி ஆராய்ந்த போது ராவனா மற்றும் அரானா கண்டெடுத்த கரடி சிலையை அச்சில் வார்த்தார் போலே இருந்தது இச்சிலை...
அந்த ஆடிட்டோரியத்திலிருந்த அதிகப்படியான பொருட்களும் அறைகளும் விசித்திரமாக இங்கும் இருக்கிறதென அவளின் மனம் சுற்றி வளைத்து வேறொரு விஷயத்தில் நிற்க அந்த ம்யோரா கோப்புகளின் மற்றொரு அசல் ஏன் இங்கும் இருக்கக் கூடாது என்று அவளின் மூளையில் பல்பெரிந்த டுத்த நொடியே அண்ணா என மாடியேறி சென்ற இருவரையும் கத்தி அழைத்தாள்....
சத்யா மற்றும் சக்தி சுடுத்தண்ணீரை ஊற்றியதைப் போல் உடனே அவளை திரும்பி பார்க்க ராவனாவின் முகத்தில் தெரிந்த ஒரு பிரகாசம் அவர்ளுக்கு ஏதோ ஒரு பதிலை தரப் போகிறதென்ற நம்பிக்கையை அப்போதே கொடுத்திருந்தது அம்மூவரின் பார்வை
அடுத்த கால்மணி நேரத்திற்கெல்லாம் குழந்தைகளையும் தூங்க வைத்து விட்டு மற்ற அனைத்து வேலைகளையும் ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டு அனைவரும் இக்கட்டிடத்தின் உள்ளே கூடினர்...
ராவனா கண்டெடுத்த கரடியை பற்றியும் அந்த சுரங்க பாதையையும் குறிப்பிட்டு இங்கும் அது போன்றே கோப்புகள் இருக்க அதிகப்படியான வாய்ப்புள என்பதை எடுத்துரைத்ததும் அனைவரும் இப்போது அக்கட்டிடத்தை புரட்டி போடாத குறையாக களத்தில் இறங்கினர்...
லியானின் கதையை கேட்டு இன்னமும் அதிர்ச்சியிலே அமர்ந்திருந்த நிரன் மற்றும் டிவின் இன்னும் ஆச்சர்யம் தாங்காமல் அவனை திட்டுவதும் அடிப்பதுமாய் தங்கள் நேரத்தை கடத்தி அவர்கள் மூவரின் கடிகாரமும் ஒரே நேரத்தில் அணைந்ததை கவனிக்க தவறினர்...
அதை நண்பர்களின் ஒன்றிணைப்பில் மிகவும் தாமதமாகமே கண்டு கொண்ட ஷரூரா இன்னும் அணையாதிருந்த தன் கடிகாரத்தை குழப்பமாய் ஏறிட அவர்களை சுற்றியிருந்த லியானின் கடிகாரத்தோடு இணைந்திருந்த பெரும்பாலான மின்சாதனங்கள் உயிரிழந்த நிலைக்கு ஆளாகப்பட்டிருந்தது...
அதை மன நெருடலுடன் ஆச்சர்யமாய் பார்த்து கொண்டிருந்த ஷரூரா எதற்சையாய் கட்டிலில் இருந்து எழ திமிறி பாடுபடும் முபல்லனை கண்டு அதிர்ச்சியில் கண்களை விரித்தாள்...
மருத்துவர்கள் முபல்லனை கட்டிலிலே கிடத்தி வலுக்கட்டாயமாக மயக்க மருந்தை அளித்து அவனை மேலும் மேலும் மயக்க மடையச் செய்து கொண்டிருந்த காணொளியே அது...
அதை கண்ட சில நொடிகளிலே தான் முபல்லனை காப்பாற்றி இன்றோடு ஒரு வருடமானதை உணர்ந்து கொண்டு வேகமாய் தன் செயலிகளை உயிர்பித்து அங்கிருந்த மற்ற மூவரின் தருணத்தை கெடுக்க வேண்டாமென அவர்களிடம் ஏதும் கூறாது தன் செயலியின் உதவியோடு நடக்கவிருக்கும் நிகழ்வை அறியாது பூமிக்கு பயணமானாள் ஷரூரா...
இங்கு இம்மூவருமோ இன்னமும் அதே அறையில் வெறொளுவளும் இருந்தாளே அவள் இப்போது இல்லையே என்ற எண்ணமே இல்லாமல் உரக்க பேசிக் கொண்டிருந்தனர்...
லியான் : இப்போவாவது பதில் சொல்லு டா...அந்த டாக்குமென்ட்ஸ் உனக்கு எப்டி கெடச்சது...
டிவின் : அதான டேய் முதல்ல உனக்கெங்கேந்து டா கெடச்சிது என லியானிடமே அவன் கேள்வியை திருப்பி விட லியானும் அதற்கு ஷரூராவிடம் அளித்த அதே விளக்கத்தை இவர்களுக்கும் கூறினான்...
லியான் : சோ சொல்லு...
நிரன் : அது ஆடிட்டோரியத்துல தான் கெடச்சிது... உனக்கு அதுல எதாவது தெரிஞ்சிதா டா...
லியான் : ஹ்ம்ம்ம் எனக்கு அந்த புரியாத லங்குவேஜு.. அதான் ம்யோரா அதுல ஒன்னும் புரியல.. அதான் பூமிலையே வச்சிட்டு வந்தேன்... உசுரோட வந்தா தேடி கண்டுப்புடிச்சிக்களாம்னு
டிவின் : ஆனா அதுக்கு என்ன டா அர்த்தம்...நிலால இருந்த லங்வேஜ் எப்டி மெடர்மானுக்கு வந்தது
லியான் : அதான் தெரியல
நிரன் : ம்யோரான்னு ஒரு லங்வேஜ் நிலால தோன்றவே இல்ல டா
டிவின்: ஏன் டா அங்க உன் இராட்சசி பக்கம் பக்கமா விளக்கம் குடுத்தத கேக்கலையா நீ... டேய் ரெக்கார்ட் எதாவது இருந்தா ரீப்லே போட்டு காட்டு டா இவனுக்கு.. அவ அளவுக்குளாம் நம்மால பேச முடியாது
லியான் : ஆமா டா நிரா... அது ரொம்ப பழமையான மொழியாம்... அது வெகு சிலருக்கு மட்டும் தான் தெரியுமாம்... அஜிமாவோட ஃபமிலிக்கு தான் கடைசியா தெரிஞ்சிருக்கு...
நிரன் : டேய் எனக்கே அதெல்லாம் தெரியும் டா.. பட் அவளுக்கு ம்யோரா தெரியும்ங்குரது ஆச்சர்யம் தான்...
டிவின் லியான் : உனக்கும் தெரியுமா...
நிரன் : ஆமா எனக்கும் ம்யோரா தெரியும்... உன் தங்.. ஐ மீன் அவ தான் சின்ன புள்ளையா இருக்கப்போ என் உசுர வாங்கி ஏதோ படிக்க வச்சா டா... சோ எனக்கும் தெரியும்.. ஆனா அவ அளவுக்கு தெரியாது எனக்கு... வரி படி நேரா இருந்தா என்னால ஏதோ கொஞ்சம் வாசிக்க முடியும்... மத்தபடி அஜி மாரி ஒரே பேஜ்லலாம் என்னால படிக்க முடியாது...
லியான் : சரி நீ படிச்ச டாக்குமென்ட்ல அப்போ என்ன இருந்துச்சு...
நிரன் :அது... என கூற தொடங்கும் முன்பாக
டிவின் : டேய் இரு...அஜியால ஒரு பக்கம் இருக்கும் போதே அத படிக்க முடியும்னா... எதுக்கு டா அவ அங்க படிக்கல...
நிரன் : படிக்கலையா...அவ கைல கெடச்சப்போவே அவ அந்த பேப்பர கண்ணாலையே ஒரு முறை அலசீருப்பாடா... என நிலமை புரியாமல் கூற டிவினின் கூற்று லியானுக்கும் புரிந்தது...
லியான் : ஆமா டா.. அஜி அப்டி எதுவுமே சொல்லல... மூணாவது பக்கம் இருந்தா தா படிக்க முடியும்னு மட்டும் தான் சொன்னா...
அஜிம்சனா எனக்கு இது புரியவில்லை.. இது இவ்வாறு சொல்கிறது.. என்னால் இவ்வாறு வாசிக்க முடியும் என எதுவும் கூறாமல் நேராக இதன் மூன்றவது பக்கமான தொடக்கம் இருந்தால் தான் வாசிக்க முடியுமென கூறியிருந்தாள்...
நிரன் இதை கேட்டதும் புருவத்தை சுருக்கினான்...
நிரன் : அப்போனா அவ ஏதோ ஒரு விஷயத்த மறச்சு, அந்த விஷயம் வெளிய சொல்லப் படுர நேரம் வரதுக்காக காத்துக்குட்டு இருக்கா டா... ஆனா எந்த விஷயம்??? மற்றவர்கள் குழப்பமாக இருந்த போதே தன்னிடமுள்ள பாகங்களோடு பூமியில் உள்ள அந்த ஒரு பக்கத்தை சிந்தித்து பார்த்த நிரன் அதை அஜிம்சனா வாசித்திருந்தால் எதை படித்திருப்பாள் என யூகித்ததும் பட்டென கண்களை திறந்தான்...
நிரன் : அவ அவள பத்தின உண்மைய தான் படிச்சிருக்கா என்கவும் மற்ற இருவரும் ங என முளிக்க பூமியில் வந்திறங்கிய ஷரூரா பூமிக்கு முன்பாகவே ஒரு எதிர்பாராத வலையில் சிக்கினாள்...
தன் ஒட்டு மொத்த நவீனத்தையும் எதிர்த்து எவரால் தன்னை சிறைப் பிடிக்க முயன்றதென அறியாமல் நட்ட நடு விண்வெளியில் தவித்து கொண்டிருந்த ஷரூரா ஒரு முறை கண்களை மூடி மீண்டும் திறந்த போது வெள்ளை மூட்டமாய் இருந்த வானத்தையே முதலாக கண்டு அது நிலவென உணர்ந்து கொண்டாள்...
அவள் முன் நிலவின் பாதுகாப்பிற்காய் மற்றும் இதர சில சகாயங்களுக்காய் நிரன் கண்டுப்பிடித்த ஸ்கை ஸ்ரக்கர்ஸ் என்னும் செயலியினால் ஷரூராவை சிறை பிடித்து வைத்தார் ராஜா குரோபடரான்
அந்த கட்டிடத்தில் இருந்த அனைவரும் ஒவ்வொரு மூலை முடுக்கெங்கிலும் சுற்றித் திரிந்த போது எதற்சையாக அக்கட்டிடத்தின் ஒரு ஜன்னலை திறந்த தில்வியா அதிலிருந்து திடுதிபுவென முட்டை போன்ற ஏதோ ஒன்று விழவும் வீலென கத்தி விட்டு தள்ளி ஓட எப்பவும் பூச்சி கீச்சியை பார்த்திருப்பாள் என அனைவரும் அவரவர் வேலையிலே கண்ணாயிருந்தனர்....
இவளின் அலரலில் அப்புறமாய் வந்த ஆர்வின் கீழே கிடந்த அந்த முட்டையை எடுத்து திருப்பி பார்க்க தூரத்திலிருந்து திரும்பி பார்த்த யதீஷ் அந்த முட்டையை கண்டதும் எங்கோ கண்டதை போலுள்ளதே என சிந்திக்க சென்ற வருடம் ஷ்ரவன் ஸ்வத்திக்கா சனாயாவுடன் தோட்டத்தில் உறங்கிய போது அவன் கண்ட ஏதோ ஒன்று அவன் கண் முன் வந்து சென்றது...
தேடல் தொடரும்...
ஹலோ இதயங்களேஏஏஏஏ...அடுத்த யூடி முடிஞ்சா நாளைக்கு போடுறேன்.. இல்லனா நாளன்னைக்கு... ஓக்கே... வெயிட் பண்ணனும் சரியா... டாட்டா குட் நைட்...
DhiraDhi ❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro