Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

தேடல் - 32

ஷரூரா : அண்ணா...லி அண்ணா... லி அண்ணா.. டேய் அண்ணா என திரையையே வெறித்து கொண்டிருந்த லியானின் தோளை சுரண்டி கொண்டிருந்தவள் அவன் காதருகில் சென்று கண்களை இறுக்க மூடி கத்த திடுக்கிட்டு அதிர்ந்தெழுந்தான் லியான்...

லியான் : என்னாச்சு என்னாச்சு என்னாச்சு

ஷரூரா : ஒன்னும் ஆகல... ஏன் டா குதிக்கிர...

லியான் : ஏன் டி உனக்கிந்த கிருக்குத்தனம்... எரும என திட்டியபடியே அவன் கதிரையை இழுத்து மீண்டும் அமர்ந்தான்...

ஷரூரா : பின்ன என்ன நானும் உன்ன நாழஞ்சு முறை கூப்டு பாத்துட்டேன்... ஏதோ ஸ்விட்ச் ஆஃப் பன்ன ரோபோ மாரி அதையே பாத்துட்டு இருந்த அதான் ரோபோட்ட ஆன் பண்ணலாமேன்னு கத்துனேன்.. என தலையை தேய்த்தபடி அவனருகில் இருந்த ஒரு கதிரையில் அமர்ந்தாள்...

லியான் : உஃப் சரி கேளு ஒழுங்கா... ம்யோரான்னா அது நிலால உருவாகி ஒரு இரெண்டு வர்ஷம் மட்டுமே இருந்த ஒரு மொழியாம்... அதான் நமக்குத் தெரி- என கூறிக் கொண்டிருந்தவனின் மூளை தான் ஏதோ ஒன்றை கேட்டதாய் லியானுக்கு வலியுறுத்த மெதுவாய் தலையை திருப்பியவனுக்கு மீண்டும் ஒரு முறை அக்குரல் கேட்டது...

" ஆனா எனக்குத் தெரிஞ்ச வர நிலால அப்டி ஒரு மொழி உருவாகவே இல்லையே லியான் "

ஷரூராவும் சற்று அதிர்ந்து சுற்றி பார்க்க தன் கடிகாரத்தை நோக்கிய லியான் ஷரூரா கத்திய கத்தில் அதை தெரியாமல் உயிர்பித்திருப்பதை கண்டான்...

அதில் நிரனின் பெயர் அச்சிட்டுத் தெரிய என செய்வதென தெரியாமல் அதை உடனே அணைத்து தெரியாமல் உருவாக்கியிருந்த இணைப்பை அறுத்த லியான் தலையை தாங்கி அமர்ந்தான்...

அவனின் தலை மீண்டும் வலிக்கத் தொடங்கியிருக்க ஷரூராவின் அதிர்ச்சியுடன் கூடிய அரவத்தில் திரும்ப எத்தனித்தவனின் மீண்டும் உறைந்து அமர அவன் முன்னிருந்த திரையில் தெள்ளத் தெளிவாய் ஒரு நீல ஒளி மின்னி மறைவது பிரதிபளிக்க அவன் திரும்புவதற்குள்ளாகவே லியானை இறுக்கி அணைத்திருந்தான் நிரன்...

லியான் தரையோடு ஒட்டி வைத்ததை போலே நிற்க நிரனின் கேள்வி அவனை அசைத்து பார்த்தது...

நிரன் : சோ யு ஆர் அலைவ்... ஒரு பெருமூச்சுடன் அவனை தானும் அணைத்து கொண்ட லியான் தலையசைத்தான்...

லியான் : மிஸ் பண்ணியாடா மச்சான் என உடையும் குரலில் நக்கலாய் கேட்க அவனை தள்ளி விட்டு ஓங்கி ஒரு அறை அறைந்தான் அவன்...

ஷரூரா அதிர்ந்து போய் வாயில் கை வைத்து கொண்டு இரண்டடி பின் நகர லியான் அதை எதிர்பார்த்ததை போலவே கன்னத்தை பிடித்து கொண்டு அறைந்தவனை ஏறிட்டான்...

நிரன் : எப்டி டா பொழச்ச நீ...எங்க கிட்ட நீ பொய் சொன்னதுக்கு அந்த ப்லக் ஹோல் உன்ன முழுங்கீர்க்கனுமே எப்டி தப்பிச்ச என விரக்தியாய் கேட்க

லியான் : எனக்கு மட்டும் தப்பிக்க ஆசையா- என முடிப்பதற்குள்ளாக மீண்டும் ஒரு கன்னத்தில் அறை விழுந்தது...

நிரன் : பேசாத கோவத்துல கொன்னுட போறேன்... என்கவும் லியான் கப்சிபென வாயை மூடி கொண்டான்...

லியான் : நீ எப்டி டா என் டெஸ்ட்டினேஷன கண்டுப்புடிச்ச...

நிரன் : நீ தான் வரல... வந்த என்னயும் ஏன் வந்தன்னு கேக்குறியா... ஆளப்பாரு கொரங்கு தலையா என மீண்டும் ஒரு அறை விட

ஷரூரா : ஏங்க எதுக்கு என் அண்ணன இப்டி அடிச்சிக்கிட்டே இருக்கீங்க... பாவம் அவன்... அவனும் தனியா தான் இருந்தான்...

நிரன் : வா மா... உன்ன தான் தேடீட்டு இருந்தேன்... நீ தான லாஸ்ட் இயர் என்ன ஜெயில்ல பாக்க வந்தது என கேட்கவும் முளித்தபடி ஷரூரா தலையை இடவலதாய் அசைக்க நிரன் மேற்கொண்டு கேள்வி எழுப்பும் முன்பாக

லியான் : டேய் என் கேள்விக்கு பதில் சொல்லு முதல்ல

நிரன் : உன் வாட்ச் உன் கிட்ட இருக்கும் போது ஒரு செக்கெண்ட் போதும் உன்ன கண்டுப்புடிக்க... அது வேற கலெக்சில இருந்தாலும் நாங்க தேடி வருவோம்...

லியான் : ஹ்ம்ம்ம்ம் சரி தான்.. சரி எனக்கு நிறைய கேக்க வேண்டி இருக்கு... உனக்கு ம்யோராங்குர பேரு எப்டி தெரியும்.. அஜிக்கு அத பத்தி எப்டி தெரியும்.. நீ மெடர்மான்ல என்ன பன்னிக்கிட்டு இருக்க... உனக்கு லயான பத்தி எப்டி தெரியும் என கேட்டு கொண்டிருந்தவனின் கடைசி கேள்வியில் திடுக்கிட்டு விழித்தான் நிரன்...

நிரன் : லயான் பத்தி... அம் உனக்கு லயான் பத்தி எப்டி தெரியும்.. என இவன் அதையே திருப்பி கேட்க இதை நிச்சயம் நிரனிடத்தில் கூற வேண்டும் என எண்ணியிருந்த லியான்...

லியான் : எனக்குத் தெரியும் நிரன்... லயான் என்னோட ட்வின் ப்ரதர்... அதாவது சத்யா... என்னோட பேரு சாகித்யன் என ஒன்று பத்தாதென இரண்டு மூன்று என லியான் நிரனின் இதயத்திற்கு அட்டக்கை அனுப்ப நிரன் அதற்கு ஏதேனும் பதில் தரும் முன்பாக திடீரென அவர்களின் பின் நீல நிற ஒளி மீண்டும் தோன்றி பிரதிபளிக்க " லி..யா..ன் " என்ற அதிர்ச்சி கலந்த பரிட்சையமான குரலை கேட்டு பேரதிர்ச்சியுற்று திரும்பினான் லியான்...

ஷரூரா " எங்கேந்து இவங்கல்லாம் வராங்க " என திரும்பி பார்க்கவும் அவளை சூராவளியை போல் தாண்டி சென்று லியானை தாவி அணைத்தான் டிவின்...

டிவின் : டேய் நீ இன்னும் சாகலையா... உயிரோட தான் இருக்கியா... அடேய் நீ லியான் தான... சத்யா இல்லையே... சொல்லுடா...

லியான் : டி..டி...வி... நீ எங்க டா இங்க...

டிவின் : அய்யையோ என் மச்சான் உயிரோட தான் இருக்கான்.. நா எங்க போய் சொல்லுவேன்.. யார்ட்ட போய் அழுவேன்... டேய் நீ மறுப்பிறப்பெடுத்துட்ட டா... என மகிழ்ச்சியிலும் கண்ணீரிலும் குதியாய் குதித்து கொண்டிருந்தவனை லியானும் மகிழ்ச்சியோடு அணைத்து கொண்டான்...

அனைவரும் அஜிம்சனா கூறிய மற்ற காகிதத்தை பற்றி சிந்தையலிருக்கும் பொழுது இரவிலிருந்தே மித்ரானினால் விண்வெளியில் வரும் சிக்னல்கள் அனைத்தையும் டிவின் சேகரித்து கொண்டிருந்தான்...

திடீரென தன் மடிக்கணினியிலிருந்து விடாது ஒலி வருவதை கேட்டு தன்னறைக்கு வந்த டிவின் லியானின் கடிகாரத்தை இரு நொடிகளுக்கிடையே கண்டிருக்க அது மறைந்த அடுத்த நொடி அந்த கடல் போன்ற விண்வெளியில் அந்த குறியீட்டை மீண்டும் கண்டறிய முடியாமல் பலவாறு முயற்சித்தும் அவனின் அறிவு கூர்மையினால் ஒரு நீண்ட போராட்டத்தின் பின்னராக இதுவரை இவர்கள் பார்த்திடாத ஒரு தொலைவில் வந்த சிக்னலை கண்டான்... இதற்கிடையிலே மெடர்மானில் தங்கள் வீட்டில் நிரனில்லாது வேறு ஏதோ இடத்தில் இருப்பதாக குறியீடு காட்ட இப்போது வந்த சிக்னலும் நிரன் உள்ள இடமும் ஒன்றென அவனின் செயலி எடுத்து கூறியது...

அது நிரனுடைய கடிகாரத்தின் மூலமாக தான் வந்திருக்கக் கூடுமென உடனே தன் டெலிகேம் வழியாக அங்கு நிரனின் கடிகாரத்தின் உதவியுடன் இடம் மாறினான் டிவின்.. அவன் எதிர்பார்க்காத அதிர்ச்சி லியான்...

அதிர்ச்சியோடு நின்றிருந்த நிரனையும் லியானின் மடிக்கணினியில் வீட்டிலுள்ளோர் பேசுவது கேட்பதையும் கண்டு மற்றொரு திரையில் அவர்கள் படம் போல் தெரிவதையும் கண்டதும் டிவினின் கோவம் தலை தூக்கியது

டிவின் : டேய் இங்க என்ன டா பன்ற... எத்தன நாளா உயிரோட இருக்க... எப்போ ப்லக்ஹோல்லேந்து தப்பிச்ச...

லியான் : ஒ-ஒரு வர்ஷத்துக்கு முன்னாடி மச்சான்

டிவின்  : ஒரு வர்ஷமா என்ன டா செஞ்ச... என கேட்டு முடிப்பதற்குள்ளாக லியான் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த அறையை பரிசளிக்க ஷரூரா விழி பிதுங்கி அவர்களை நோக்கினாள்...

லியான் : நான்....

நிரன் : நீ நேரா பூமிக்கு வந்துர்ந்தீன்னா கூட உன்ன விற்றுப்பேன் டா... தப்பிச்சு இத்தன நாள் உயிரோட இருந்தும் எங்கள பாக்க வரலல்ல நீ.. என அவன் சட்டையை பிடித்து கொண்டு கண்ணீர் மழ்க அவனின் செயல் புரிந்து கேட்க

லியான் : நா வரலன்னு யாரு சொன்னா... நீங்க என்ன பாக்கல.. மத்தபடி நா நிலாக்கு போன வர்ஷம் வந்தேன்... என இவனும் உளறினான்....

நிரன் : அங்கேந்து 34000 கிலோமீட்டர் தூரத்துல இருக்க பூமிக்கும் வந்தா என்ன குறைஞ்சிடுவ நீ... அங்க இன்னும் நீ சாகல வருவன்னு ஒருத்தி பைத்தியம் மாரி தன்னை தானே வருத்திக்கிட்டு சாகாம செத்துக்குட்டு இருக்கா டா... நீ இல்லாம நாங்க எவ்ளோ கஷ்டப் பட்டோம் தெரியுமா... எல்லைத்தையும் நீ எங்கையோ இருந்துக்குட்டு பாத்துக்குட்டு இருந்துர்க்க இல்லையா... என தன் பொருமை இழந்து கத்தி கதறியவன் லியான் நிரன் இருவருக்குமே புதியவன்... என்றும் எது நடந்தாலும் அதை எளிதாய் எடுத்து கொண்டு விளையாட்டாய் கடந்து செல்பவனையா தான் இவ்வாறு மாற்றி விட்டோம் என எண்ணுகையிலே லியானிற்கு குற்ற உணர்ச்சி தீ பொறியிலிருந்து மனம் முழுவதும் பரவியது...

லியான் : நா தப்புப் பண்ணீட்டேன்லடா... நா உங்களுகெல்லாம் தகுதியே இல்லாதவன் மச்சான்... இதுல அவள எப்டி டா நா நேருக்கு நேரா பாப்பேன்... அவளவிட்டு போக மாட்டேன்னு வாக்கு குடுத்துட்டு அஞ்சு வர்ஷமா கண் காணாத ஏதோ ஒரு இடத்துல வந்து அவள அங்கையே சிக்கித் தவிக்க வச்சிட்டு இருக்கேனே என மற்ற மூவருமே எதிர்பார்க்காத நேரம் லியான் கண்ணீரில் உடைய டிவின் மற்றும் நிரன் இருவரும் லியானின் இரு புறத்திலிருந்தும் அவனை அணைத்து கொண்டனர்...

டிவின் : என்னடா இப்டி சொல்லீட்ட... நீ என்ன செஞ்சாலும் இன்னும் நீ எங்கள்ள ஒருத்தன் டா மடையா... நாங்க உனக்காக எப்பவுமே இருப்போம் டா மச்சான்.... என லியானின் கண்ணீரை துடைத்து விட்டு ஷரூராவை அவர்களை கண்டு புன்னகையுடன் கண்ணீர் சிந்த வைத்தான் டிவின்..

தேடல் தொடரும்...

DhiraDhi

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro