தேடல் - 30
தன் உணவை முடித்து கொண்டு இப்போது ஒரு மிட்டாயை ருசித்து கொண்டிருக்கும் காதலியை கன்னத்தில் கை வைத்தவாறு பார்த்து கொண்டிருந்த வினய் திடீரென தன் செல்பேசி சினுங்கியவும் அதை எடுத்து பார்க்க " டெவில் ஹெட் " என்ற பெயரை கண்டு உடனே நேரத்தை பார்க்க தாங்கள் இங்கு வந்து முக்கால் மணி நேரமானதை கண்டு அவன் கண்கள் அகல விரிந்தது... மீண்டும் ஒரு முறை செல்பேசி சினுங்கவும் இம்முறை அதை அட்டெண் செய்து காதில் வைத்தான்
வினய் : சொல்றா மச்சான்
யதீஷ் : டேய் எங்க டா இருக்கீங்க... லென்ஸ் வாங்குறியா இல்ல கடையையே எழுதி வாங்க போறியா என எடுத்த எடுப்பிலே அவன் மறுப்புறத்திலிருந்து கத்த ஃபோனை சற்று காதை விட்டு தள்ளி வைத்து கொண்டு இன்னமும் மும்மரமாய் மிட்டாயை ருசித்து கொண்டிருந்தவளை அவஸ்த்தையாய் நோக்கினான் வினய்
வினய் : தோ தோ பார்க்கிங்க்கு தான் டா வந்துக்குட்டே இருக்கோம்... தோ உன்ன பாத்துட்டேன்.. நீ என் தலைய வெளிய விட்டுட்டு கத்திக்கிட்டு இருக்க... காக்கான்னு நெனப்பா உனக்கு.. இரு இரு வரேன் வரேன் என யதீஷிற்கு பதிலளிக்கவே நேரம் கொடுக்காமல் மீராவை இழுத்து கொண்டு ஓடினான்...
மீரா : டேய் டேய் என் சாக்லேட்டு டா
வினய் : போற வழில வாங்கித் தரேன் டி வா என படிகளை விட்டு இறங்கியவர்கள் கூட்டத்தை கடக்க எத்தனித்த போது வினய் ஓரிடத்தை கண்டு திடீரென ப்ரேக்கிட்டு நின்றான்...
யதீஷ் மற்றும் ரியா ஒருவரை ஒருவர் காணாமல் அவரவரது செல்பேசியில் மூழ்கியிருந்தனர்... அவன் சமாதானம் அடைந்ததும் தான் மனதிலிருந்து கூறிய வார்த்தையை ரியாவும் முதல் முறை தன்னவளிடம் மடை திறந்த வெள்ளமென உடைந்ததை யதீஷும் எண்ணி மனம் நெகிழ்ந்தனர்...
யதீஷிடம் ரியாவின் அரவணைப்பில் உணர்ந்த உணர்வை பகுத்தறிய கூறினால் அவன் கனவுலகில் சஞ்சரித்திருப்பான்... அந்தளவிற்கு அவளின் வார்த்தைகளும் அவளின் அரவணைப்பும் அவனுக்கு இதுவரை அறிந்திடாத ஒரு உலகத்தை காட்டியிருந்தது...
ரியா ஒரு புறம் அவனின் வலிகள் அனைத்தையும் அவள் குத்தகைக்கு வாங்கியதை போல் முகத்தில் இருள் குடி கொண்டு சோர்ந்திருந்தாலும் அவன் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறான் என்ற ஒரு ஒளி அவளின் மனதின் ஏதோ ஒரு மூலையில் நிம்மதியை விதைத்தித்திருந்தது....
யதீஷ் தலையை வெளியே விட்டு மீண்டும் பார்க்கவும் தூரத்தில் வினய் மற்றும் மீரா அவர்களை நோக்கி விரைந்து வருவதை கண்டான்...
அவர்களின் முகத்தில் ஒரு பதட்டமிருப்பதையும் அவர்களின் நடை சாதாரணமாய் அல்லாது ஓட்டமும் நடையுமாய் தெரிய அவர்களை சுற்றி அலசிய யதீஷ் வினய் அவனை கண்டதும் பின் கண் காட்டுவதை கண்டு எதற்சையாய் அவர்களின் பின் நோக்கியவன் கருப்பாடை அணிந்த சிலர் அவர்களை அங்குமிங்கும் பின் தொடர்வதை கண்டு கனபொழுதில் நிகழ்வதை யூகித்து கொண்டான்...
யதீஷ் : ரியா... ஷிஃப்ட் என உரக்கக் கூறிய யதீஷ் அவனுக்கு எதிரே இருந்த ஓட்டுனர் இருக்கையில் பின்னிருந்தே மாறி அமர முதலில் புரியாது விழித்த ரியா பின் யதீஷ் மாறி அமர்வதையும் அவன் நடுவே இருந்த இருக்கையை மடக்குவதையும் கண்டு ஏதோ புரிந்தவளாக முன் புற இருக்கைக்கு மாறினாள்...
காரின் ஸ்பெர் கீயை எடுத்து காரை உயிர்பித்த யதீஷ் பின் பார்த்தவாறே காரை ரிவர்ஸ் எடுக்க அதை கண்டதுமே மீராவின் கரத்தை பிடித்து இழுத்து கொண்டு காரை நோக்கி ஓடினான் வினய்...
இவ்விருவர் ஓடுவதை கண்டதும் அவர்களை பின் தொடர்ந்த நாழ்வரும் அவர்களை துரத்தி வர காரை ரிவர்ஸிலே கொண்டு சென்று மறு புறமாய் திருப்பிய யதீஷ் அக்ஸலேட்டரில் காலை அழுத்த சரியாக மீராவை மறு புறமாய் போக கூறிய வினய் இடது புறத்து பின் கதவை திறந்து உள்ளே அமர மீராவும் வலது புறத்து பின் கதவை திறந்து உள்ளே ஏறினாள்.. அவர்கள் அமர்ந்ததுமே ஸ்ட்டெயரிங்கை திருப்பி வலதிலிருந்த வாயில் வழியாக காரை ஓட்டினான் யதீஷ்...
ரியா : ஹே யாரவங்க... என்ன நடக்குது
வினய் : தெரியல டா... அவங்க சைத்தான்யா ஆபீஸ்லேந்து நம்மள ஃபாலோ பன்றாங்க... உடனே ஷ்ரவனுக்கு காள் பன்னுங்க.... குயிக்...
ரியா : வெயிட் வெயிட் என வேகமாக ஷ்ரவனுக்கு காள் செய்த ரியா அவனுக்கு இவர்களிருக்கும் இடத்தை கூறி விரைந் வர கூறினாள்...
அங்கு
ஷ்ரவன் விரைந்து தன் காவல் ஜீப்பை எடுத்து கொண்டு எங்கோ செல்வதை கண்டு என்ன ஏதென விசாரிப்பதற்காக ஆராய்ச்சி அறைக்குள் நுழைந்த ஆர்வின் முன்பே அறைக்குள் ஃத்வருண் மற்றும் நரா பரபரப்பாய் அலைந்து கொண்டிருப்பதை கண்டு புருவ முடிச்சிட விழிக்க அவனை பின் தொடர்ந்து உள்ளே வந்த ராவனா கீழே ஒரு காகிதம் விழுந்திருப்பதை கண்டு குனிந்து எடுக்க அவள் கரத்திலிருந்த ப்ரஜின் ராவனாவின் நெஞ்சில் சாய்ந்தவாறு அவன் பிடித்திருந்த ஊட்டியிலிருந்து கரத்தை எடுத்து விட்டு அந்த காகிதத்தை பிடுங்க ராவனாவிடம் கை நீட்டினாள்...
ஆர்வின் : என்னாச்சு டா.. ஏன் டென்ஷனா இருக்கீங்க
நரா : ரியா கிட்டேந்து ஃபோன் வந்ததால ஷ்ரவன் அண்ணா வெளிய போனான் அண்ணா... நாங்க டாக்குமென்ட்ட தேடீட்டு இருக்கோம்... டேபில்ல தான் இருந்துச்சு... காணும் என படபடப்பாய் கூற
ராவனா : ஹேய் இதுவா அது... என அதை தூக்கி காட்ட ப்ரஜினும் அதை பிடிக்கிறேனென ராவனா எதிர்பாராத நேரம் திடீரென எகிறினான்...
ராவனா அதிர்ச்சியில் அந்த காகிதத்தை மதிக்காது அதை அப்படியே போட்டு விட்டு இரு கரத்தாலும் குழந்தையை பிடிக்க அது கீழே விழும் முன் அவளின் பின்னிருந்து வந்த சக்தி அதை பிடித்தான்...
சக்தி : கெர்ஃபுல் குட்டிமா
ராவனா : சாரி அண்ணா என ப்ரஜினை பார்த்து முகத்தை சுருக்கிக் கொண்டே கூறினாள்...
அதை ஃத்வருண் நிம்மதியுடன் வாங்குவதற்காக கை நீட்டவும் அந்த காகிதத்தை ஒரு முறை பார்த்த சக்தி அதை தலை கீழாய் திருப்பி கொடுத்தான்...
ஃத்வருண் : நேரா தான டா குடுத்த...
சக்தி : நேராவா... தலை கீழ குடுத்துர்ப்பேன் டா என கூறவும் ஃத்வருண் அவனை புரியாமல் பார்க்க ஃத்வருணின் கரத்திலிருந்த காகிதத்தை தான் நின்ற இடதிலிருந்தே பார்த்த ராவனா அதன் எழுத்துக்கள் அனைத்தும் இப்போது ஏதோ ஒரு வரிசையில் எழுதப் பட்டிருப்பதை போல் கண்டு அதிர்ந்தாள்...
ராவனா : டேய் அண்ணா அதையே நாம திருப்பி தான் டா பாக்கனும் என அதிர்ச்சியிலே கத்தவும் அனைரும் அவளை புரியாமல் பார்க்க " என்ன திருப்பி பாக்கனும் " என கேட்டபடி உள்ளே வந்த அரானா அந்த காகிதத்தை தலை கீழாகவே வாங்கிப் பார்த்தாள்...
அரானா அதை கண்டு ஒன்றுமே புரியவில்லை என்றாலும் தோன்றும் ஏதோ ஒன்றை தவிர்க்க விரும்பாதவளாக ஒரு பென்சிலை எடுத்து அந்த காகிதத்தில் ஏதோ செய்யத் தொடங்கினாள்...
ஆர்வின் : என்ன டா செய்ர...
அரானா : வெயிட் வெயிட்
ராவனா : எதாவது கிருக்க உனக்கு வேற பேப்பர் தரோம் டி அத நாசம் பன்னீடாத
அரானா : அய்ய நா சின்ன புள்ளையா சும்மாண்டு இரு டி...
அவள் திருப்தி அடைந்ததும் அதை சற்று தள்ளி வைத்து விட்டு பார்க்க அனைவரும் அவள் என்ன செய்தாள் என வேகமாய் பார்த்தனர்...
அரானா : நல்லா உத்து பாருங்க... எதாவது தெரியிதா...
தலை கீழாய் இருக்கையில் நேர் கோடென தெரியும் எழுத்துக்களை அவள் கோடிட்டு எடுத்து காட்டியிருக்க அரானா செய்த அந்த ஒரு செயலினால் அந்த காகிதத்தில் இத்துனை நாட்களும் பிய்த்து போட்டு குழப்பி வைத்திருந்த எண்ணற்ற மொழிகளுடைய எழுத்துக்கள் யாவும் நேர்த்தியாய் மாறி ஒரே மொழியுடைய எழுத்தாகத் தெரிந்தது..
அதோடு இல்லாமல் அது இப்போதும் படிப்பதற்கு ஏதுவாக இருக்கவில்லை... படிப்பதற்கு அந்த மொழி வேறு தெரிந்திருக்க வேண்டுமே
நரா : வாழ்கைலையே முதல் முறையே நல்ல வேலை பன்னீர்க்க டி சூப்பர்....
அரானா : ஆனாலும் ஒன்னும் புரியலையே டி...
அதை மேலிருந்தே பார்த்து கொண்டிருந்த அனைவரும் அது முதல் கோட்டின் ஓரத்தில் தொடங்கியிருப்பதை கவனிக்க மறந்தனர் போலும்...
அதை ஃத்வருண் இப்போது தெளிவாய் கண்ட பின் ஏதோ ஒன்று கூறி அனைவரையும் அதிர வைத்தான்...
ஃத்வருண் : இது நாம நினைக்கிர மாரி ஃபுல் பேப்பர் இல்ல... இதோட மறுபாதி கெடச்சா தான் அன்சரே தெரியும் நமக்கு என கூறவும் விஞ்ஞானி நாயகர்கள் அனைவரும் அவஸ்த்தையாய் கத்தினர்...
இந்த சத்தத்தில் உள்ளே வந்த அஜிம்சனா எதற்சையாய் ஃத்வருணின் கரத்திலிருந்த காகிதத்தை பார்த்து விட்டு சாதாரணமாக
அஜிம்சனா : ஹே மெடர்மான்ல இதெல்லாம் கூட இருக்கா... சொல்லவே இல்ல...ஆமா எதுக்குண்ணா இது...
தில்வியா : ஏன் டி தலையும் புரியாம வாலும் புரியாம பேசுர...
அஜிம்சனா : தோ இந்த பேப்பர பத்தி கேட்டேன்... எதுக்கு இது... இத வச்சு என்ன பன்னீட்டு இருக்கீங்க... அதோட இத எழுத தெரியும்னு யாரும் சொன்னதே இல்லையே...
நரா : எங்களுக்கு தெரியும்னு நாங்க எப்போ டி சொன்னோம்... அது எழுதுனதுன்னே நீ சொல்லித் தான் தெரியிது... இத்தன நாளா யாரோ பேச்சி போட்டதுன்னு தான் நாங்க நெனச்சிட்டு இருக்கோம் என அது கொடுத்த கொடுமையிலும் இனிமேலும் அதை கண்டு பிடிக்க வேண்டியிருக்கும் என்ற கடுப்பிலும் காண்டாய் கூறியவளை புரியாது பார்த்தாள் அவள்...
அஜிம்சனா : என்னா டி ஒளறுர... நிலால இருந்த மாரி இந்த லங்வேஜ் மெடர்மான்லையும் இருந்துச்சான்னு தான கேட்டேன்...
அனைவரும் : நிலால இந்த லங்வேஜ் இருந்துச்சா என அனைவரும் ஒரு சேர கத்த இவர்களின் இந்த கோரசான சத்தத்தில் அஜிம்சனா அவளின் காதை மூடிக் கொள்ள வெளியே இருந்த அனைவரும் இந்த அறைக்கு ஓடி வந்தனர்...
ஸ்வத்திக்கா : என்னாச்சு என்னாச்சு
ராவனா : ஹே என்ன டி சொல்ற... ஏன் டி இத்தன நாளா சொல்லல நீ..
அஜிம்சனா : என்ன டி ஒளறுர... உங்களுக்கு இந்த லங்வேஜ் தெரியும்னே எனக்கு இப்போ தான் தெரியும்.. நா எப்டி முன்னாடியே சொல்ல முடியும்....
ஆர்வின் : குட்டிமா அப்போ உனக்கு இந்த லங்வேஜ் தெரியுமா...
அஜிம்சனா : வொய் நாட் அண்ணா... நல்லாவே தெரியுமே.. என அவளே அறியாமல் அனைவரின் மனதிலும் ஆச்சர்யம் அதிர்ச்சியோடு விஞ்ஞானி நாயகர்களின் வயிற்றில் பாலையும் வார்த்தாள்...
இவ்வளவு நேரமும் அஜிம்சனா உள்ளே நுழைந்து பேசத் தொடங்கியதிலிருந்து புருவ முடிச்சோடு அமர்ந்திருந்த லியான் அவள் இறுதியாய் கூறியதை கேட்டு கண்கள் வெளியே வந்து விழுமளவிற்கு முளித்தான்...
மீனா : என்ன லங்வேஜ்டி இது... சொல்லு டி டக்குன்னு... இது லங்வேஜ் தானா
அஜிம்சனா : லங்வேஜ் தான்... இதுல என்ன சந்தேகம்...
நரா : பேர சொல்லித் தொலடி எருமகடா
அஜிம்சனா : ம்யோரா என இன்னமுமே புரியாமல் முளித்தபடியே கூறி லியானின் அதிர்ச்சியை இரட்டிப்பாக்கினாள்....
தேடல் தொடரும்...
ஹாய் இதயங்களேஏஏஏஏஏஏ எப்டி இருக்கு ஓக்கேவா... இன்னைக்கு அவசர அவசரமா எழுதுனது... மிஸ்டேக் இருந்தா அட்ஜெஸ்ட் பன்னிக்கோங்க... குட் நைட்... டாட்டா
DhiraDhi ❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro