Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

தேடல் - 24

அந்த பச்சை நிற ஒளியை விழி உருத்து நோக்கிக் கொண்டிருந்த தாரா எதற்சையாய் திரும்புகிறேன் என தெரியாமல் ஃத்வருணருகில் இருந்த ஏதோ ஒன்றை தட்டி விட்டாள்...

தாரா : ஹையோ சாரி அண்ணா

ஃத்வருண் : இட்ஸ் ஓக்கே குட்டிமா .. இரு நா எடுக்குறேன் என கீழே குனிந்து அந்த பொருளை எடுக்கவும் டேபில் மீதிருந்த காகிதத்தை நிமிர்ந்து பார்த்த தாரா

தாரா : அண்ணா... இதுல இருக்குரது உன் பேரா என அந்த இடத்தை சுட்டி காட்ட

ஃத்வருண் : ஹான் தெரியல குட்டிமா ஐம் நாட் ஷ்யுர்...

நரா : அண்ணா... இந்த ஆப்ஜக்ட்க்குள்ள லி அண்ணா ஏதோ ஒரு லேசர் லைட்ட இன்செர்ட் பன்னீர்க்கான்.. அந்த லேசர் லைட் பாய்ன்ட்டர் மாரி தெரியல... பட் அது ஏதோ ப்ரொஜெக்ட்டரா இருக்களாம்னு எனக்கு தோனுது

தில்வியா : அத வெளிய எடுத்து பாத்தா எதாவது நமக்கு தெரியலாம்னு நெனக்கிறேன்...

ஆர்வின் : ம்ஹும்.. டக்குன்னு நாம அப்டி பன்னீட கூடாது... என்னன்னே தெரியாம நாம அத பிரிச்சிட்டோம்னா... திரும்ப அத வச்சு ஒன்னுமே பண்ண முடியாம போய்டும்...

சக்தி : சோ என்ன செய்யலாம் அப்போ

ஃத்வருண் : இந்த மொழிய முதல்ல நா க்ரக் பன்றேன்... ஒருவேளை ஆதி காலத்துல பூமி இல்ல மெடர்மான் எங்கையாவது இந்த மொழி இருந்துர்க்களாம்... மே பீ என்ன லங்வேஜ்னு தெரிஞ்சாளாவது எதாவது பன்ன முடியும்ல...

நரா : என்ன லங்குவேஜ்னு தெரிஞ்சாலும்... இத படிக்கிரதுக்கு யாராவது வேணும்.. அவங்களுக்கு அந்த லங்வேஜ் வேற தெரிஞ்சிர்க்கனுமே

தில்வியா : அதெல்லாம் யாராவது ஒருத்தர்க்கு தெரிஞ்சிர்க்கும் டி... டேய் நீ போய் க்ரக் பண்ணு டா போ டா

சைத்தான்யா தலை கவிழ்ந்தபடி எங்கோ வெறித்து கொண்டு அமர்ந்திருக்க அவன் முன்னோ ஒரு மருத்துவர் தான் ஏன் இங்கு இருக்கிறோம் என்றே தெரியாமல் பராக்கு பார்த்து கொண்டிருந்தார்...

சைத்தான்யாவின் நிறுவனத்திலே ஒரு சொகுசான அறையில் தலையில் பெரும் கட்டுடன் மூக்கிலும் வாயிலும் இரு ட்யூப்களுடன் தன் கடைசி நிமிடங்களை எண்ணியபடி சுயநினைவற்று கிடந்தான் முபல்லன்...

சைத்தான்யா : சோ என்ன தான் சொல்ல வரீங்க என நிமிர்ந்து அந்த மருத்துவரை நோக்கினான்...

மருத்துவர் : அதான் ஸர்.. அம் உங்க ப்ரதர்க்கு ஆல்ரெடி தலைல ஏதோ ஆப்பரேஷன் பன்னீர்க்காங்க... அதுவும் ரொம்ப ரீசன்ட்டா தான் பன்னீர்க்காங்க... அந்த ஆப்பரேஷன்ல அவருக்கு எந்த சைடெஃபெக்ட்டும் இல்லன்னாலும்... இப்போ நடந்த அக்சிடென்ட் அவரோட மூளைய அதிகமாவே பாதிச்சிடுச்சு... அந்த ஆப்பரேஷன்ல இருந்து ரெக்கவர் ஆகுரதுக்குள்ளையே அவரு மூளை வீக்கானதால இன்னும் எவ்ளோ மணி நேரம் உயிரோட இருப்பாருன்னு சொல்ல முடியாது... அவரோட ப்ரெய்ன் கொஞ்ச நேரத்துல டெட் ஆய்டுச்சு ஸர்... நீங்க நெனச்சா உங்க ப்ரதரோட ஆர்கன்ஸ டோனேட் பன்ன முடியும்... அது உறுப்புகள் கிடைக்காம கஷ்டப்படுரவங்களுக்கு பெரும் உதவியா இருக்கும்...

ஆழ்ந்த பெருமூச்சை இழுத்து விட்ட தனக்கென்றிருந்த மற்றொரு இரத்த சொந்தத்தையும் தான் இழந்ததை எண்ணி நொந்து கொண்டு மெதுவாய் தலையசைத்தான்...

சைத்தான்யா : ஓக்கே டாக்டர்... நீங்க ப்ரொசீஜர ஸ்டார்ட் ன்னுங்க... என் ப்ரதர் அப்போவாவது யார் மூளமா  வாழ்ரான்னு நா திருப்தியடைஞ்சிக்குவேன்... அவனின் கரத்தை பிடித்து குலுக்கிய டாக்டர்

மருத்துவர் : தட்ஸ் ஹ குட் டெஸிஷன் மிஸ்டர்

இவர்களின் உறையாடல்களை பார்த்து கொண்டிருந்த ஷரூரா அவ்வளவு சீக்கிரம் இவன் இறந்து விட்டானா என முகம் சுருக்க ஒரு முறை உறங்கும் லியானை கண்டவள் பின் தன் முடிவை எடுத்தவளாய் லியான் அவளுக்கு கொடுத்த டெக்கரானிக் வாட்சை நோக்கினாள்....

நகர மருத்துவமனை

சில மருத்துவர்களும் செவிலியர்களும் அங்குமிங்கும் அவரவர் ஷிஃப்ட் நேரத்திற்கு சுழன்று கொண்டிருக்க வைட்டிங் ஷெஷனில் எங்கோ வெறித்து கொண்டு அமர்ந்திருந்த நிரனின் தோளில் சாய்ந்து கண்களை மூடி அமர்ந்திருந்தாள் அஜிம்சனா

ரிசப்ஷனில் நிரனிற்கு டோக்கனையும் மருத்துவரின் டீட்டைள்களையும் வினய் கேட்டு கொண்டிருக்க நிரனின் நினைவுகள் மீண்டும் மீண்டும் அரை மணி நேரம் முன் நிகழ்ந்தவையையே சுற்றி வந்து கொண்டிருந்தது...

இவன் மெடர் மற்றும் அஜிம்சனாவின் படத்தை பார்த்து கொண்டிருக்க மற்றவர்கள் மெடரின் அழகில் மெய் மறந்திருந்தனர்...

இவர்களின் பின் ஒரு பாம்பு வருவதை கூட பார்க்காமல் அனைவரும் அந்த புகைபடத்தில் மூழ்கியிருக்க அந்த பாம்பின் சீரலில் திடுக்கிட்டு திரும்பிய வினய் அனைவரையும் சுதாரிக்கச் செய்யும் முன் ஸ்வத்திக்கா பாம்பை கண்டு அலரியிருந்தாள்...

அவளின் அலரலில் சீற்றம் கொண்ட அப்பாம்பு சட்டென பாய அனைவரும் ஒவ்வொரு மூலையில் பிரிந்தனர்...

ஸ்வத்திக்காவை அரானா மறு புறமாய் இழுக்க அப்பாம்பு சீரி எழ வேகமாய் தன் நிலையை பெற்ற டிவின் தற்காப்பிற்காய் அப்பாம்பின் தலையில் மிதிக்க நிரன் மற்றும் வினய் ஸ்வத்திக்கா மற்றும் அரானாவை வெளியேற்றினர்...

டிவின் ஒரு கட்டத்தில் அப்பாம்பின் துள்ளலில் பின் நகர தெரியாமல் நிரனின் மீது இடித்து இருவருமாய் சரிந்து கீழே விழுந்தனர்... இந்த நிகழ்வினால் ஏற்கனவே உடல் முழுவதும் காயம் பெற்றிருந்த நிரன் தாங்காமல் அலர வீட்டிற்குள் இருந்த அனைவரும் வெளியே ஓடி வந்தனர்...

டிவினும் வினயும் நிரனை பார்க்க சத்யா மாத்திரம் தான் அப்பாம்பை எதை வைத்தாவது அடிக்களாம் என எண்ணும் பொழுதே அப்பாம்பு சர்ரென எங்கோ சென்றிருந்தது...

நிரன் தன் ஒரு கரத்தை பிடித்தவாறு எழுந்து நிற்க சத்யாவுடன் வினய் டிவின் நிரனை அழைத்து கொண்டு மேலே ஏறி வேகமாய் அந்த கதவை மூடினர்...

அதன் பின்னே நிரனை பரிசோதித்த வினய் அவனுக்கு நேற்றைய பொழுதில் கொடுத்த சாட்டை அடிகள் இன்று உடலில் அதீத வலியை கொடுத்ததும் அந்த சாட்டை அடிகளின் அச்சு இரத்தம் கட்டியிருப்பதையும் கவனித்தான்....

வினய் : டேய் சொரனைகெட்டவனே... வலிக்கிதுன்னா சொல்லி தொலஞ்சிருக்களாம்ல டா... எப்டி டா இன்னைக்கு பெட்ட விட்டு மொதல்ல எந்திரிச்ச என திட்டிக் கொகொண்டே பங்கலாவை விட்டு வெளியே அழைத்துச் சென்றான்...

நிரன் : வலிலாம் இல்லடா... இப்போ விழுந்ததுல தான்.. ஆ

டிவின் : போய் நிலாலையே விட்டுட்டு வந்துருவேன் பொய் சொல்லாத

நிரன் : சரி சரி விடுங்க வலி போய்டும்...

யதீஷ் : ஹாஸ்பிட்டல் போலாம் ப்ரதர்... நீங்க இப்டியே கர்லெஸா விட்டுட்டா சிவியரா போய்டும் என வலியுறுத்தவும் ஒரு கட்டத்தில் நிரனை உருட்டி மெரட்டி வினய் இறுதியாய் மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தான்...

நிரன் தன் தோளில் சாய்ந்து உறங்கும் தன்னவளை அமைதியாய் இப்போது பார்த்தபடி அமர்ந்திருக்க அவர்களின் நேரத்தை வீணடிக்க விரும்பாமல் தனிமையையளித்து விட்டு அந்த கௌன்ட்டரில் நின்றபடியே ஃபோனில் ஏதோ நோண்டி கொண்டிருந்தான் வினய்

" சாரி சாரி சாரி ஸர் " என சட்டென யாரோ கத்தவும் நிமிர்ந்து பார்த்த நிரன் அங்கு யாரோ இருவர் கீழே அமர்ந்து ஏதோ எடுத்து கொண்டிருப்பதை காண திரும்பி அமர்ந்திருந்த அவ்விருவரில் ஒரு பெண் எழுந்து " சாரி தெரியாம இடிச்சிட்டேன் " என கூறி அந்த கோப்புகளை மற்றொருவரிடம் கொடுத்தாள்...

அப்பெண் முற்றிலும் வித்யாசமாய் இருந்தாள்... பங்குனி வெயில் பல்லை இளிக்காத குறையாக இருக்க அவளோ உடல் முழுவதும் ஸ்வெட்டர் போன்ற உடை மறைக்க நின்றிருந்தாள்... அவளின் கூந்தல் இடை வரை இல்லையெனினும் பாதி முதுகில் புரண்டது வித்யாசமான நீல நிற கூந்தல்...

நிரன் அப்பெண்ணை வித்யாசமாய் பார்த்து கொண்டிருக்கும் பொழுதே சட்டென அப்பெண் திரும்பி இவனை பார்க்க இவன் தன்னை கண்டு விட்டான் என்பதை கண்டதும் வேகமாய் உள்ளே ஓடினாள்...

ஒரு சில நொடிகளுக்கு நிரனின் கண்களை அவனாலே நம்ப முடியவில்லை... அவன் நேற்று காலை போல நிலவில் கண்ட அதே பெண்ணை பூமியில் அவன் காண்பான் என எதிர்பார்த்திருக்க மாட்டான் அல்லவா...

தன் வாட்சை நோக்கிய நிரன் அவளை நிலவில் கண்ட நிகழ்வை நினைவு படுத்த முயல ஒரு சுவற்றின் பின் நின்று நிரனை எட்டி பார்த்தாள் ஷரூரா

நிரன் அதிர்ச்சியாய் இல்லாமல் ஏதோ கடிகாரத்தில் பார்த்து கொண்டிருக்கவும் எப்படியும் தன்னை சரியாய் கவனித்திருக்க மாட்டான் என நினைத்து கொண்டு திரும்பவும் சரியாக யார் மீதோ இடித்து கீழே விழுந்தாள்...

அவள் விழும் முன் யாரோ அவளை பிடித்து மேலே இழுக்க ஒரே நேரத்தில் ஏற்பட்ட இரு வேறு அழுத்தங்களினால் தடுமாறி தன்னை இழுத்தவரின் மீதே விழுந்த ஷரூரா தன்னை தாங்கி நின்ற சைத்தான்யாவை சற்றும் எதிர்பார்க்கவில்லை...

சைத்தான்யாவின் தோளை ஒரு கரத்தால் பிடித்து கொண்டு ஷரூரா அவனின் பார்வையில் உறைந்து நின்றிருக்க ஷரூராவின் அழகிய நீல நிற கூந்தலும் ரூராவின் சாம்பல் நிற கண்களும் முதல் பார்வையிலே சைத்தான்யாவின் மனதை ஈர்த்திருந்தது...

ஷரூரா அவனிடம் நனேறி கூற றவாய் திறக்கவும் ரியாக ஒரு மருத்துவர் அவனை வந்து அழைத்துச் செல்ல ஷரூரா தான் வந்த வேலை நினைவு வந்தவளாக வேகமாக முபல்லன் இருக்கும் இடத்தை நோக்கி செல்லத் தொடங்கினாள்...

முபல்லன் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு ஒரு தனி அறையில் படுக்க வைக்கப்பட்டிருந்தான்... அவனின் உடல் உறுப்புகள் அனைத்தும் இன்னும் செயல்பாட்டிலே இருந்ததால் இன்னும் ஐந்தே நிமிடங்களில் அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட இருக்க அந்த அறைக்குள் புயலென நுழைந்தாள் ஷரூரா

நிரன் ஷரூராவை பற்றி எண்ணியடியே " அன்னைக்கு வெள்ளை முடியா இருந்துச்சு... இன்னைக்கு ப்லூவா இருக்கு... ஒருவேளை சத்யா லியான் மாரியா... ஆனா சத்யா லியான் அப்டி இல்லையே... அதோட அந்த பொண்ணு என் வாட்ச ஏதோ பன்னீட்டு மறஞ்சில்ல போச்சு ... அதோட நிலால நா பாத்த பொண்ணு எப்டி பூமிக்கு வந்தா" என வாய் விட்டே கூறியவாறு யோசித்து கொண்டிருக்க உறக்கத்தில் இவன் பேச்சை கேட்டு கொண்டிருந்த லியான்

லியான் : நிலால பாத்த பொண்ணு பூமிக்கு எப்டி டா வருவா வெளெக்கெண்ணெய் என அவனை வருத்தெடுத்தபடியே மீண்டும் தூக்கத்தில் தழுவ காத்திருந்த லியான் சட்டென எழுந்தமர " ஷரூரா " என கத்தியடியே எழுந்து என்றும் ஷரூரா அமர்ந்திருக்கும் அந்த மடிக்கணினி அருகில் ஓடினான்...

இவன் அந்த மடிக்கணினியை திறக்கவும் மருத்துவமனையில் ஷரூரா முபல்லனருகில் நிற்கும் படம் அதில் காட்சியளிக்க முபல்லனை நோக்கி தன் காலடியை எடுத்து வைத்த ஷரூரா தன் கடிகாரத்தை பார்த்து விட்டு " சாரி லியான்... ஐ ஹவ் டு டூ திஸ்... உங்க ப்ரதர் ஜெயிலுக்கு போக கூடாது இல்லையா " என கூறி விட்டு லியான் சற்றும் எதிர்பார்க்காத ஒரு செயலை செய்தாள்...

கத்தி போன்ற ஏதோ ஒரு கூர்மையான பொருளை எடுத்த இரண்டாவது கௌன்ட்டிங்கிலே சரக்கென அவனின் நடு மண்டையில் இறக்க முபல்லனை சுற்றி இருந்த அனைத்து மின்சாதன பெட்டிகளும் மின்சாரம் தாக்கியதில் உடனே அணைந்து போக ஷரூராவின் அந்த கூர்மையான பொருளில் இருந்து பாய்ந்த மின்சாரம் முபல்லனின் மூளையை தாக்கியது

அந்த சத்தத்தால் மொத்த மருத்துவமனையிலும் ஒரு முறை மின்சாரம் அணைந்து விட்டு சட்டென மீண்டும் பழைய படி மாற ஷரூரா தான் வந்த வேலை முடிந்ததென புரிந்து கொண்டு வேகமாய் அந்த அறையின் ஜன்னலில் இருந்து வெளியே குதித்தாள்...

லியான் கண்களை விரித்து அவளை பார்த்து கொண்டிருக்க ஷரூரா அதே அறையில் பொருத்திய செயலியின் மூலமாக அங்கு நடப்பதனைத்தும் ஒலிவாயிலாக லியானிற்கு இன்னமும் தெரிந்து கொண்டிருந்தது...

ஒரு மருத்துவர் உள்ளே வந்து விட்டு முபல்லனின் நிலையை கண்டு பரபரப்டைந்தார்... மூளையின் செயல்பாடில்லாத காரணத்தினால் அவனின் உறுப்புகள் ஒரு சில நிமிடங்கள் தான் உயிர்க்கும் என சைத்தான்யா சொல்ல சொல்ல கேட்காமல் ஆப்பரேஷனை தொடங்க வேண்டுமென படபடத்தனர்...

ஆனால் அவர்களுக்கு அதிர்ச்சிகரமான விஷயமே ... இவர்கள் மீண்டும் முபல்லனை ஒரு முறை பரிசோதித்து மின்சாதனங்களோடு இணைத்த போது முபல்லனின் இதயம் சீராய் துடிக்கத் தொடங்கியது

இவர்கள் புரியாது அடுத்த அடியை எடுத்து வைக்கும் முன்னே முபல்லன் மெதுவாய் கண்களை திறந்து விட்டு மீண்டும் கண்களை மூடி கொண்டான்...

தேடல் தொடரும்...

DhiraDhi

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro