தேடல் - 22
அஜிம்சனா : ஏன் இரெண்டு பேரும் பாக்காத அதிசயத்த பாத்த மாரி இப்டி முளிக்கிறீங்க ... யாரையாவது கொல்ல ப்லன் பன்றீங்களா அப்டீன்னா சொல்லுங்க நா என் பொண்ண தூக்கீட்டு அப்டியே போய்டுறேன் என யாரியை மறுபுறமாய் வைத்து கொண்டு காட்டமாய் கூற யாராயோ சத்யாவிடம் செல்ல வேண்டி தன் அன்னையின் கரங்களில் நெழிய சத்யா முன் வந்து யாரியை வாங்கி கொண்டான்...
சத்யா : அதெல்லாம் இல்ல அஜிமா... சும்மா தான் பேசீட்டு இருந்தோம்...
அஜிம்சனா : ஓஹ் ஆமா அதென்ன அண்ணா ஏதோ கட்டம் செவுத்துல... ஆர்ட் ப்ரக்டிஸ் பன்றியா என்ன
யதீஷ் : இல்ல சிஸ்டர் அது எப்டி வந்துச்சுன்னே சத்யாக்கு தெரியலையாம்
சத்யா : ஆமா அஜிமா... இது லியான் பன்னீர்ப்பான்னு நெனைக்கிறேன் என தன் கேசத்தை பிடித்து இழுத்தபடி சிரித்து கொண்டிருந்த யாரியை திசை திருப்புவதற்காக எக்குத்தப்பாய் யோசிக்காமல் தன் மறு கத்திலிருந்த கத்தியை யாரியிடம் கொடுத்தான் சத்யா
அதை பார்க்காத பொருளை கண்டதாய் கண்களை அழகாய் விரித்து இரு கரத்தாலும் அதன் மரப்பிடியை பிடித்து யாரி சுற்றி பார்க்க அந்த கத்தியில் லைட்டின் வெளிச்சம் பட்டு மின்னவும் யாரியின் கண்களும் அழகாய் மின்னியது
அஜிம்சனா : டேய் அண்ணா லூசா டா நீ... எதடா புள்ள கைல குடுக்குர என வேகமாய் பிடுங்க வர உடனே யாரி அதை விடாமல் சத்யாவின் கழுத்தருகில் வைத்து கொண்டு தன் அன்னையை பார்த்து முகத்தை அழகாய் சுருக்கினாள்...
அவளுக்கு நிகராக அஜிம்சனாவும் முகத்தை சுருக்க அதை கண்டு சிரித்த சத்யா
சத்யா : நத்திங் டு வர்ரி டா... அது டம்மி கத்தி தான்.. ஐ மீன் ஷார்ப்பெல்லாம் இல்ல... பாப்பாக்கும் ஒன்னும் ஆகாது என்கவும் அதை புரிந்து கொண்டதை போல யாரி அந்த கத்தியால் சத்யாவின் கற்றை கேசத்தை சுற்ற அவ்வயதிலே அக்குட்டி வாண்டு சத்யாவின் கேசத்தை கர்லிங் செய்ய முயல்வதை யதீஷ் சத்தமின்றி தன் கமாராவில் படம்பிடிக்க தொடங்கினான்...
அஜிம்சனா : சரி அந்த கட்டம் என்ன... லியான் அண்ணா ஏன் அத பன்னனும்...
சத்யா : தெரியலடா ... நா இங்க வரும் போது அதுக்கு முன்னாடி தர்மனோட பிக் இருந்துச்சு... தர்மனோடு கழுத்துல இந்த கத்தி குத்தீட்டு இருந்துச்சு
அஜிம்சனா : ஓஹ் ஆமா அந்த கத்திய லியான் அண்ணா தான் எரிஞ்சான்...
சத்யா : நா இங்க இருந்த வர இந்த மாரி செவுத்துல கார்விங் பன்னல... லியான் போனப்பிறகு நாம ஒரு முறை தான் இங்க வந்தோம்... அப்ரம் இப்போ தான் வரோம்.. ஐம் டம் ஷ்யுர் நம்மள யாரும் இத செய்யல... நா மெடர்மான்ல இருந்த அந்த இரெண்டு நாள்ள லியான் தான் பன்னீர்க்கனும்...
அஜிம்சனா : ஹ்ம்ம்ம் இஉக்களாம்... லியான் அண்ணா அந்த இரெண்டு நாள் வெட்டியா தான் சுத்திக்கிட்டு இருந்தான்.. சோ அவன் செய்ய வாய்ப்பிருக்கு... செஞ்சாலும் அதுனால என்ன
யதீஷ் : லியான் செஞ்சிருக்காரு சிஸ்டர் அது போதாதா என ஃபோனில் கண்ணாயிருந்தவாறே கேட்க
அஜிம்சனா : ஹ்ம்ம் இதுலையும் லியான் அண்ணா எதாவது வேலை பாத்துர்ப்பான்னு சொல்ல வரீங்களா என யோசனையாய் கேட்க ஆண்கள் இருவரும் அவளை பார்க்காமலே ஒரு சேர " மே பி " என்றனர்
யதீஷ் : ஹ்ம் சத்யா உங்க கழுத்து கிட்ட இருக்க முடிய ஒதுக்குங்கப்பா... பாப்பாக்கு உங்க கழுத்து ரொம்ப டிஸ்டர்பா இருக்கு... என்கவும் சத்யா சிரித்தபடியே அதை செய்யவும் யதீஷின் கூற்று அவனுள் மீண்டும் ஒலித்தது
சத்யா : நகத்தனும்... ஏன்னா அது டிஸ்டர்பா இருக்கு...
அஜிம்சனா யதீஷ் : ங என புரியாத ரியக்ஷன் கொடுக்க அக்கட்டத்தை நோக்கி சற்று விரைந்து சென்ற சத்யா யாரியை அஜிம்சனாவிடம் கொடுத்து விட்டு அவள் அழுவதற்குள் மீண்டும் அந்த கத்தியை அவளிடமே கொடுத்து விட்டு அங்கு சென்றான்...
அந்த சுவற்றை மீண்டும் வருடி பார்த்தவன் அதை ஒரு முறை தட்டி பார்க்க அந்த கட்டத்திற்கு பின் இடமுள்ளதென்பதை உறுதியூட்டவே அந்த சத்தம் கேட்கவும் அதை எங்கேனும் தள்ள முடிகிறதா என முயற்சி செய்து பார்த்தான்...
ஆனால் அக்கட்டம் அச்சுவற்றின் ஒரு பகுதியாகவே ஒன்றப்பட்டிருந்ததால் ஒரு புறமும் நகராமல் சுவற்றிலே ஒட்டி கொண்டு சத்யாவை அலுப்படைய வைத்தது...
திடீரென யாரி அழவும் சத்யா இப்புறம் திரும்ப தன் கரத்திலிருந்த கத்தியை கீழே போட்டதால் அவள் அழுவதை உணர்ந்து அஜிம்சனா குனிந்தெடுக்கும் முன் யதீஷ் அதை எடுத்து யாரியிடம் நீட்டும் முன் எதையோ அதில் கண்டு விட்டு மீண்டும் திருப்பி எடுத்து கொண்டான்...
யாரி அவனை கண்டு கண்களில் கண்ணீருடன் முறைக்க அதை கவனிக்கும் நிலையில் அவன் இருக்கவில்லை... சரியாக அந்த நேரம் சத்யா மற்றும் யதீஷை அழைத்த படி ஷ்ரவனும் உள்ளே வந்து தீவிர முகபாவத்துடன் நின்றிருந்த மூவரையும் கண்டான்...
ஷ்ரவன் : காய்ஸ் என பொருமையாய் அழைத்த படி உள்ளே வந்தவனினன் சத்தத்தில் தன் ஆராய்ச்சிலிருந்து மீண்ட யதீஷ்
யதீஷ் : சத்யா யு ஆர் ரைட்... இதுல கண்டிப்பா ஏதோ இருக்கு... இந்த கத்தில " எல் " அப்டீங்குர வர்ட் இருக்கு.. இது லியான்ங்குர பேர குறிக்க வாய்ப்பு இருக்கு... என கூறவும் அதை கேட்டு ஷ்ரவனும் தீவிரமடைய அந்த நேரம் சரியாக ஒரு நிமிடம் கடந்தும் தனக்கு அந்த மினுமினு பொம்மை கிடைக்காததால் யாரி கத்தி அழ அவளை அஜிம்சனா சமாதானம் செய்ய முயன்று தோற்கவும் சட்டென அஜிம்சனாவின் அருகில் நின்றிருந்த ஷ்ரவன் அவளின் காதோரத்திலிருந்த கற்றை கூந்தலை ஒதுக்கி விட்டு அவளின் நீண்ட தோடை ஆட்டி காட்ட அதிலிருந்து வந்த ஜிங்குஜிங்கு ஒளியில் யாரி உஉஉ என பார்த்தவாறு அதில் கண்ணானாள்....
சத்யா : அத நல்லா பாருங்க யதீஷ்.. உண்மையாவே " எல் " தானா
யதீஷ் : எஸ் சத்யா..
ஷ்ரவன் : இங்க குடு யதீஷ்
யதீஷ் : இந்தாங்க ப்ரோ என அவனும் அவனிடம் கொடுக்க அதை வாங்கிய ஷ்ரவன் அதை கூர்ந்து நோக்கிய பின் அந்த " எல் " என்ற வார்த்தையே கத்தியின் நுனியில் பதிக்கப்பட்டிருப்பதையும் அதன் ஓரத்தில் ஏதோ ஒன்று இருப்பதையும் கண்டு ஏதோ நினைத்தவனாய் இரு கையாலும் அக்கத்தியின் இரு புறத்தையும் பிடித்து அழுத்தம் கொடுத்து இழுக்க அக்கத்தி இரண்டாய் பிரிந்து வெவ்வேறு பொருளானது
கத்தியின் கூரான முணையின் மறுபுறத்தில் ஏதோ ஒரு நீளமான சாவியின் உருவில் நீண்ட கட்டம் அமைக்கப்பட்டிருக்க கத்தியின் மரப்பிடியின் உள்ளோ பச்சை நிறத்தில் விட்டு விட்டு ஒரு ஒளி எழுந்து கொண்டிருந்தது...
சத்யா : சூப்பர்ப்... பந்த கத்திய என் கிட்ட குடு மச்சான் என அதன் கத்தி பகுதியை வாங்கிய சத்யா அந்த நீண்ட சாவியை போலான கட்டத்தை சுவற்றிலிருந்த கட்டத்தின் மையத்திலிருந்த துளையில் இட்டான்
அது அதற்கென்றே அமைக்கப்பட்டிருப்பதை போல் அழகாய் உள்ளே செல்ல சத்யா அதை திறக்கும் முன்பாகவே அந்த கத்தி அச்சுவற்றோடு இறுக சிக்கிக் கொண்டது
மாட்டிக்கிச்சோ என்ற சந்தேகத்தில் அதை சத்யா பிடுங்க முயற்சிக்கவும் அவனுக்கு வேலையே வைக்காமலே அந்த கத்தி பட்டென மொத்தமாய் அந்த கட்டத்திற்குள்ளே சென்று மறைந்து அந்த கட்டத்தையும் திறக்க வைத்தது
சத்யா குட்டியான கதவு போலிருந்த அக்கட்ட கதவை திறக்கவும் அதன் உள் ஒரு காளியான இடமும் நடுவில் நீல நிறத்திலும் ஒரு ஒளி விட்டு விட்டு எரிந்து கொண்டு ஒரு செயலி இருந்தது... அதனூடே லியான் என்ற அச்சடிக்கக்கட்டிருந்த எழுத்துக்களும் அவன் பார்வை வட்டத்தில் விழாமலில்லை... அச்செயலியை சத்யா மெதுவாய் வெளியே எடுக்கவும் மற்ற மூவரும் அவனை சற்று அதிர்ச்சியோடே பார்க்க காற்றடித்த வேகத்தில் அதே காலியான பகுதியிலிருந்து இப்போது சடாரென சில காகிதங்கள் கீழே வந்து விழுந்தது...
அதை குனிந்து எடுத்த சத்யா கண்களை விரித்து அதை நோக்க நீல மையில் எழுதப்பட்டிருந்த ஒரு வார்த்தை கூட அவனுக்கு புரியவில்லை... தெளிவாய் சொல்ல வேண்டுமென்றால் அது எழுதப்பட்டிருக்கும் வார்த்தையா அல்ல ஏதேனும் கிருக்கலா என்றும் அவனால் கண்டறிய முடியவில்லை....
சத்யா அதையே விழி விரித்து நோக்கி கொண்டிருக்கவும் மற்றவர்களும் அதை பார்க்க முன் வர அவர்களுக்கும் அது என்னவென்று சரியாய் புரியவில்லை...
ஷ்ரவன் : மச்சான் நாம வருண்ட்ட தான் இத குடுக்கனும்... அவன் தான் லங்வேஜ் எக்ஸ்ப்பெர்ட்
அஜிம்சனா : ஓ இது லங்வேஜா என கேட்ட கேள்வியில் மூன்று ஆண்களும் அவளை விசித்திரமாய் பார்த்தனர்...
அடுத்த ஐந்து நிமிடத்தில் வீட்டிலுள்ளோர் அனைவரும் அங்கு கூடிவிட அஜிம்சனா அனாமிக்கா மற்றும் ராவனா மாத்திரம் குழந்தைகள் மூவரையும் பார்த்து கொள்ள கீழேயே இருந்து விட்டனர்...
அந்த மரடேபிலில் அமர்ந்து சத்யா கொடுத்த அந்த காகிதத்தை பார்த்து கொண்டிருந்த ஃத்வருணை சுற்றி அனைவரும் வட்டமடித்தபடி அனைவரும் அவனையே உற்று பார்த்து கொண்டிருந்தனர்...
ஃத்வருண் அந்த குருகுரு பார்வையை ஏறெடுத்தும் பார்க்காமல் அக்காகிதத்தையே கூர்ந்து பார்த்தப்படியே இருக்க ஃத்வருண் பட்டென அவனின் ஆராய்ச்சி கூடத்திலிருந்த ஒரு குட்டி ட்ராயரை திறந்து அதிலிருந்து ஒரு காகிதத்தை உருவினான்...
அது அன்று ஒரு முறை ஃத்வருண் பார்த்து கொண்டிருந்த புரியாத மொழியிலிருந்த அதே காகிதம் தான்... இக்காகிதங்களை கண்டதும் நிரனின் கண்கள் சற்று கலவரத்தை காட்ட அவன் முகமோ எவ்வுணர்வையும் காட்டாமல் இருந்தாலும் உறங்கும் குழந்தைகளோடு அமர்ந்திருந்த அஜிம்சனாவிற்கும் ஷரூராவிடம் கலந்துரையாடிக் கொண்டிருந்த லியானிற்கும் தனிச்சையாகவே அவனின் உணர்வுகள் தெரிந்தது...
நிரனின் உணர்வுகளை வெளி காட்டும் அந்த டாலர் அவனின் கடிகாரத்தோடு இணைந்திருப்பதாலும் அக்கடிகாரத்தை இப்போது லியான் தன் கடிகாரத்தோடு தற்காலிகமாய் இணைத்திருந்ததாலும் லியானால் அவனின் உணர்வுகளை படிக்க முடிந்தது...
ஸ்வத்திக்கா : டேய் அண்ணா என்ன டா இது.. ஏதோ ப்லக் மேஜிக்ல கிருக்குர வார்த்தை மாரி இருக்கு...
வினய் : ப்லக் மஜிக்கா எரும... மூடு வாய
மீனா : ஓ அதில்லையா அப்போ
ஃத்வருண் : இது ஏதோ ஒரு மொழிடா பட்டு... ஆனா என்னன்னு தெரியல... மொதல்ல நா இத மட்டும் வச்சு கொழப்பிக்கிட்டு இருந்தேன்.. இப்போ இந்த பேப்பரும் கொழப்புது... இரெண்டும் வேற வேற மாரி இருக்கு
தில்வியா : இரெண்டும் வேற வேற மொழியா...
ஃத்வருண் : அப்டி தான் நினைக்கிறேன் டி... சத்யா இதுக்கூட வேற ஏதோ இருன்ச்சுன்னு சொன்னீங்களே எங்க அது எனகேட்கவும் சத்யா அந்த நீல நிற ஒளி செயலியை எடுத்து கொடுத்தான்...
மித்ரான் : இத வச்சு நாம என்ன செய்யனும்... எதுக்கு லி இதெல்லாம் விட்டுட்டு போய்ர்க்கான்...
அரானா : என்னத்தையோ நாம கண்டுப்புடிக்கனும்னு நினைச்சருக்கான்... அதான்...
ஆர்வின் : ஆனா அது என்னவா இருக்கும் குட்டிமா... இந்த லைட்ட வச்சு நாம என்ன பன்றது... ஒன்னும் பன்ன முடியாது...
யதீஷ் : எதாவது யோசிங்க... உங்களுக்கு தெரிஞ்ச ஒரு விஷயமாத்தான் இருக்கும்...
சக்தி : எத குறிக்கிதுன்னே தெரியலையே யதீஷ்.. இந்த லெட்டர்ஸ் அவன் ஏன் நம்மள விட்டு போனான்னு சொல்லுதா... இல்ல வேற எதாவதா... அத எப்டி படிக்கிறது...
நரா : நாம லியான் மாரி யோசிச்சா தான் நமக்கு பதில் கிடைக்கும்... வேற எந்த அங்குல்ல யோசிச்சாலும் பதில் கிடைக்காது என்கவும் சத்யா அவளை சட்டென திரும்பி பார்த்தான்....
நிரன் : அதுக்கு நாம டைம் மிஷின் கண்டுப்புடிச்சு லியான தான் கூட்டீட்டு வரனும்
சத்யா : தட்ஸ் ரைட் ... நாம அததான் பன்னனும் என்றவனை அனைவரும் " சீரியசா தான் பேசுறியா " என்பதை போல் பார்த்தனர்..
தில்வியா : என்னண்ணா சொல்ற... டைமிஷின் கண்டுப்புடிக்கனுமா
சத்யா : டைம் மிஷினா... இல்லடா... நாம லியான் மாரி யோசிக்கனும்... வெவ்வேறு பக்கத்துலேந்து யோசிக்கிரத விட வெவ்வேறு விஷயமாவே யோசிக்கனும்... நாம இந்த லைட்ட லைட்டா பாக்குரத விட பாய்ன்ட்டரா பாத்தா நல்லதுன்னு தோனுது எனக்கு.. என கூறவும் இதை கேட்டு கொண்டிருந்த லியானின் முகத்தில் தன் சகோதரனை எண்ணி கர்வப் புன்னகை படர்ந்தது...
சத்யா கூறியதை போல ஃத்வருண் அந்த நீல நிற செயலியால் அந்த காகிதங்களில் ஒவ்வோர் இடத்தை சுட்டி காட்டத் தொடங்கவும் ஷ்ரவனிடமிருந்த கத்தியின் மரப்பகுதியினுள் இருந்த பச்சை நிற ஒளி நேராய் பாய்ந்து அதே சுவற்றின் மீது படர்ந்து அனைவரையும் அப்புறமாக திருப்பியது...
தேடல் தொடரும்...
ஹாய் இதயங்களே... இன்ட்ரெஸ்ட்டிங்கா இருக்கா இல்ல போரடிக்கிதான்னு சொல்லுங்க... கொஞ்சம் கை வலியா இருக்குரதால தொடர்ந்து எழுத முடியல... முடிஞ்சா நாளைக்கு பெரிய யூடி குடுக்குறேன்... அந்த லெட்டர்ஸ் என்னாவா இருக்கும்னு எதாவது கெஸ் பன்னுங்க ஹிஹிஹி... நீங்க தாராளமா என்னன்னு கேக்களாம்... ஏன்னா அது என்னன்னு எனக்கு தெரியும்... ஆனா உங்கள்ட்ட நா சொல்ல தான் மாட்டேன்... யப்பா எங்க ஊர்ல நல்லா மழை பேயுதுப்பா... நெட்டே எடுக்க மாட்டுது.... உங்க ஊர்லையும் மழபேஞ்சாலும் பேயலன்னாலும் சேஃபா இருங்க... எலெக்ட்ரிசிட்டிய நாம எப்பவும் நம்பீடகூடாது... ஷாக்கடிச்சி விற்றும்... ஓக்கே இதயங்களே... நாளைக்கு சந்திக்கலாம் குட் நைட்... டாட்டா...
DhiradDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro