முதல் காதல்
என்னடா இது இன்னும் பஸ் வரலை னு மனசுக்குள்ள புலம்பிக்கிட்டே வாட்ச் பார்த்தாள் நவ்யா .....நவ்யா யாருன்னு சின்னதாக ஒரு இன்ட்ரோ
வாங்க வாங்க ...
நவ்யா ,அவங்க அப்பா வச்ச பேரு ...நல்ல மாநிறமான உடல் நிறம் . மெல்லிய இடையுடன் அழகான தோற்றம் முகத்தை மட்டும் கடுகடுனு வச்சிக்கிற கேரக்டர்.... இப்ப எங்க போறா அப்படினா ஒரு பி.பி.ஓ கம்பெனி ல இன்டர்வியூ. அதான் மேடம் பஸ்ஸுக்கு வெயிட்டிங்.
மணி இங்கயே 8 ஆயிடுச்சு ஆன இன்னும் பஸ் வரலேயே னு யோசிச்சிட்டு இருந்தவளுக்கு அப்போ தான் அவளுக்கு ஒரு ஆட்டோ கிடைச்சது ஏறி உக்காந்தா......"ஏங்க சீக்கிரம் போங்க டைம் ஆகுது "னு அவன் முகத்தை கூட பார்க்காமல் ட்ரைவரின் தோள்பட்டை தட்டி சொல்ல....
"ஹேய்..... நீ இன்னும் ஆபிஸ் வரலையா னு அவளுடைய ப்ரண்டு திவ்யா அழைக்க..
வரேன் டி வந்துட்டே இருக்கேன் இப்பதான் பக்கி ஆட்டோவே கிடைச்சது.பேசிட்டு போனை வச்ச அடுத்த நொடி ஆட்டோ வேற ரூட்டில் போவதை உணர்ந்தவள் "ஏங்க எங்க போறிங்க ஆட்டோ ஏன் இந்த பக்கம் போறிங்க......????👍
அவன் நேராக அந்த பார்க்கில் நிறுத்தினான் ஆட்டோவை. இறங்கி வந்த நவ்யா அப்போது தான் அந்த ட்ரைவரின் முகத்தை சரியாக ஏறிட்டு பார்த்தாள் அப்போது தான் புரிந்தது அது அவளுடைய "அரவிந்த்"என்று .....
அர....விந்த்....நீ...நீயா....
ஆமா...நானே தான் . உனக்கு இந்த பார்க் ஞாபகம் இருக்கா? முதன் முதல்ல நம்ப காதலை சொல்லிக்கிட்டது இங்க தான்.
திரும்பி அந்த பார்க்கை பார்த்தவள் ஏதோ ஒன்று நினைவுக்கு வர...."அரவிந்த் ஐயம் ஸாரி.......
இந்த ஸாரிக்கு அர்த்தம்?????
தெரியல...ஆனால் உனக்கு ஆயிரம் முறை ஸாரி சொல்லனும் னு தோனுது. உன்னை விட்டு போனது என் தப்பு தான். ஆனால் இனி நானே ஆசைப்பட்டாலும் நம்ப ஒன்னு சேர முடியாது அரவிந்த் என்னை மன்னிச்சிறு. னு சொல்லிவிட்டு விறு விறு னு நடக்க முயன்றாள்.
"நவ்யா".........இங்க பாரு
திரும்பி பார்த்தவள் அவனருகே செல்ல...
உன்னை பற்றி எல்லாம் கேள்வி பட்டேன் நவ்யா ,உனக்கு கல்யாணம் ஆகி இப்போ டிவோர்ஸ் அப்ளை பன்னியிருக்க னு....என்று அவன் சொல்லும்போதே அவளரியாமல் கண்கள் கலங்கின ....அவனை கட்டி கதறி அழுதாள் "எனக்கு ஹார்ட் ல ஓட்டை இருக்கு னு டாக்டர் சொல்லவே என் புருஷன் வீட்டில் டிவோர்ஸ் முடிவு பன்னிட்டாங்க அரவிந்த் இனி என் வாழ்க்கை அவ்வளவு தான் என்னை எதும் கேக்காத இதுக்கு மேல... பை என்று சொல்லிவிட்டு முதல் காதல் நினைவுகளோடு சாலையை கடந்தாள்
அவள் எதிர்நோக்கிய பஸ்ஸு வத்தது ஏறினாள் . இருக்கையில் அமர்ந்தவள் கண்டெக்டரிடம் டிக்கெட் வாங்கியபடி தூரத்தில் இன்னும் அதே இடத்தில் நிக்கும் அரவிந்தை பார்த்தாள். சிறிது நேரத்தில் அவள் சென்றடைந்தாள் அலுவலகத்திற்கு.. இன்டர்வியூ அட்டண்டு பன்னவளுக்கு வேலை கிடைக்குமா கிடைக்காத என்ற கவலையை தாண்டி அரவிந்தின் சிந்தனையே இருந்தது.
ச்ச போன் நம்பர் கூட வாங்காமல் வந்துட்டேன் என்று நினைத்தவளுக்கோ...அவன் அலுவலக வாசலில் காத்துக்கொண்டு இருப்பதை பார்த்து மனசு லேசானது ...
"அரவிந்த்...
வா ஏறு என்னோட ஆட்டோல....
அதுக்கு எனக்கு தகுதி இல்லை அரவிந்த்.
ஏன்???
அன்னைக்கு ஒரு ஆட்டோ காரன்னு எளக்காரமா பேசிட்டு உன்னை விட்டு போயிட்டேன். இன்னைக்கு இதே ஆட்டோ எனக்காக காத்துட்டு இருக்கு.
ஆட்டோ மட்டுமல்ல நானும் காத்துட்டு இருப்பேன்.
புரியல.....😃என்ன சொல்ற
ஹாஹா.... உனக்கு சீக்கிரம் டிவோர்ஸ் கிடைக்கனும் னு நான் வேண்டிக்கிறன். இன்னுமும் புரியல???
"உன் ஹார்ட் ல இருக்கிற ஓட்டையை அடைக்கபோறன் என்னோட காதல் பசை கொண்டு"ஹாஹா......
அவள் எதுவும் பேசாமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
முதல் காதல் கைக்கூடுமா😀😀😀😀??கூடும் இப்படி ஒரு அரவிந்த் இருந்தா.
முற்றும்.
கமெண்ட் ப்ளீஸ்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro