தாயுமானவர்
"அப்பா... அப்பா.."என பிள்ளையின் அழைப்பில் எழுந்தவர்
"என்ன சாமி.. என்ன ஆச்சு..." என கேட்டவாறே எழுந்து அமர்ந்தவர் தன் மகளைப் பார்க்க
"அப்பா.. ஒண்ணுக்கு வருதுப்பா.." என தன் ஒற்றை விரலை தூக்கி காட்டினாள் ஐந்தாம் வகுப்பு படிக்கும் யாழினி.
"சரி வா டா..." என குழந்தையை தூக்கி கொண்டவர் வீட்டிற்க்கு வெளியில் இருக்கும் குளியலறைக்குள் விட்டு வெளியில் நின்று கொண்டார்..
"அப்பா.. (சுச்சு )ஒண்ணுக்கு மட்டும் வரலைப்பா... கூட கக்கவும் வருத்துப்பா.." என பாத்ரூமில் இருந்தபடியே யாழினி கத்த
"ஐயோ குட்டிமா நம்ம பாத்ரூம்லயே போயறாத.." எனக் கூற கூற குளியலறையை நாசம் செய்துவிட
"அப்பா.. இருந்துட்டேன்.." என கூறி வெளியில் வந்தவளை தலையில் கை வைத்து பார்த்த ஈஸ்வரன்.
முத்து பற்களைக் காட்டி சிரித்தவளிடம்
"ஒரு நிமிஷம் இரு குட்டி..." ஒரு துணி கொண்டு அதனை சுத்தம் செய்தவர் அருகில் இருந்த காட்டில் வீசி எறிந்தார்..
வெறும் குளியலறை மட்டும் என்பதால் இந்த வேலை.. என்ன செய்வது இன்றுவரை ஒரு சிலர் வீட்டில் இந்த நிலைமையும் உண்டு..
"போலாமா..." என தன் குட்டியை கேட்க
களைந்து இருந்த இரட்டை சடையை வேகமாக ஆட்டினாள்
அவளை தூக்கி கொண்டு வீட்டுற்கு வந்தவாறே "எப்போ இருந்து சாமி வர மாதிரி இருந்துச்சு.."
"பன்னரெண்டு மணில இருந்து வந்துச்சுப்பா.. அப்போ போனா பேயி புடிச்சுக்கும்ல அதான் ஒரு மணிக்கு எழுப்பி விட்டேன் பா.." என யாழி கூற
"அதெல்லாம் ஒன்னுமில்லை யாரு உனக்கு அப்படியெல்லாம் சொன்னா.. பேய் எல்லாம் இங்க வராது சாமி.. உங்கம்மாவை பார்த்தாவே பயந்து போயிடும் சரியா.. இனிமே எப்பவும் தைரியமா இருக்கணும் புரிதா. அதே மாதிரி ஒண்ணுக்கு வந்தா என்னை எழுப்பிவிடு அப்பா வந்துடுவேன் அடக்கி வைச்சா..இந்த குட்டி வயித்துல கல்லு வந்துரும்.." என ஈஸ்வர் கூற சரியென தலையை ஆடிட்டனாள் அவள்.
*****
" இப்படி அடிக்கடி என் வீட்டில நானே பண்ணி இருக்கேன் பா.. எனக்கு அம்மாவை எழுப்பிவிட பயம் . அம்மாவை எழுப்பிவிட்டா அம்மா தூக்கவெறியில திட்டிடுவாங்க. அதனால நான் என் செல்ல அப்பாவை தான் எழுப்பி விடுவேன்..." என யாழினி கூற
"நாங்களும் தான்.."(அப்பாவை எழுப்பி விடுவோம்..) என கோரஸாக கத்தினர் யாழியின் பிள்ளைகள்..!!
கருவில் சுமந்தது என் தாய் தான்.. ஆனால் அதன் பிறகு தினமும் என்னை அவரின் மார்ப்பில் அல்லவா சுமர்ந்தார்..
அனைத்து கஷ்டகளிலும் என்னை இரவுப் பகலாக பார்த்துக் கொண்ட என் தாயுமானவர் என் அப்பா..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro