தெத்துப்பல்லழகி
என் கோபம் கூட உன்
தெத்துப்பல் தெரியும்
சிரிப்பில் உருகிப் போன
பனித்துளியாய் கரைவதேனோ..!!
என் தெத்துப்பல் சிரிப்பழகி...!!
என கவிதை வாசித்தவனை முறைத்தவள்
"ரொம்பத்தான் போடா.. நான் நம்ப மாட்டேன்... ஓட்டறதும் ஓட்டிட்டு இப்போ வந்து கவிதை சொன்னா... உன் கவிதைக்கு நான் மயங்கி உன் பின்னாடியே வந்துருவ பாரு... உன் பின்னாடியே வர வேற ஆள் பாரு.. பக்கத்துல வா டி அப்பறம் இருக்கு..
"ஜில்லு, செல்லம், மல்லி , என் அல்லி கொடியே.. சும்மா சொன்னேன் டி.. உன் கழுத்தில மூணு முடிச்சு போடற வரைக்கும் ஒரு சிரிப்பு இருந்துச்சா..ஏதோ கட்டாயக் கல்யாணம் மாதிரி மூஞ்சியை வெச்சுட்டு இருந்த அதான் கொஞ்சம் கோபம் வந்து வந்துருச்சு.. அங்கெல்லாம் சிரிக்காதவ பெட்ரூம்ல வந்து உன் அழகான பல்லை காமிச்சு சிரிச்ச அதான் டக்குன்னு கோபம் வந்து திட்டிட்டேன்... அதுவும் தெத்துப்பல்லின்னு தான சொன்னேன்... இந்த ஒரு வார்த்தை சொன்னத்துக்காக இப்படி ஒரு மணி நேரமா கெஞ்ச விடறயே நியாயமா சொல்லு.. எனக்கு எல்லாம் சுட்டு போட்டாலும் கவிதை வராது டி.. உனக்காக கவிதை எல்லாம் எழுதின இந்த மாமன கொஞ்சம் கன்சிடர் பண்ணு டி ரேகா...
"தெத்துப்பல்லின்னு மட்டுமா சொன்ன மணி நீ.. வேற என்னவெல்லாம் சொன்ன... உன்னை கிஸ் பண்ணா உன் பல்லுப்பட்டு ரத்தம் வந்துரும் அப்படி இப்படின்னு சொன்ன.. என அழுகைக்கு தயாராக நின்றவளை..
"ஐயோ செல்லம் அப்படியெல்லாம் இல்லை டி.. வேணும்னா வா ஒரு தடவை கிஸ் பண்ணி பார்க்கலாம்.."
"உன் மூஞ்சி.. என் கிட்டயே வராதா கொன்றுவேன் கொன்னு.. என கூறியவளை தலையில் கை வைத்தவாறே சோகமாக பார்த்து கொண்டிருந்தவனின்
மனதில் "தேவையா இது உனக்கு தேவையா டா... இன்னைக்கும் நீ சிங்கிள் தான் போல இந்த தெத்துப்பல்லி இப்படி புலம்ப வெச்சுட்டாலே.. அடியே உன் பக்கத்தில படுக்கவாது விடு டி.."
"சரி பொலச்சு போ.. இனிமே தெத்துபல்லின்னு ஓட்டனா நீ காலம் முழுக்க சிங்கள் தான்" என கூறியவளை கள்ள சிரிப்புடன் பார்த்து கொண்டிருந்தான் அவளின் நாயகன்..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro