😊 பகுதி 42 😊
அடுத்த நாள் காலைல தாராவ டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டுக்குகூட்டீட்டு வராங்க... தாரா மாத்திர வேகத்துல நல்லா தூங்கறா... 11மணிக்கு அவள எழுப்பி..
கண்ணன்: தாரா கொஞ்சம் சாப்டுட்டு தூங்கு டா...
தாரா: இல்ல எனக்கு பசிக்கல டா...
கண்ணன்: கொஞ்சம் சாப்டு டா... டேப்ளட் போடனும்ல 2 இட்லி சாப்டு போதும்....
தாரா: வேண்டா டா ப்ளீஸ்... மதியம் சாப்டுக்கற டா...
கண்ணன்: அப்டியே ஒரு அப்பு👿விட்டன்னா அப்றம் பசிக்கும்... ம்ம்ம்ம் வாயத்தெற...
தாரா எதுவும் பேசாம அவன் ஊட்டிவிட்றத சாப்ட்டு முடுச்சுட்டு தூங்கறா... கொஞ்ச நேரத்துல தாராவோட அம்மா, அப்பா, கண்ணனோட அப்பா எல்லாரு வந்துட்டாங்க... தாரா தூங்கறனால யாரும் அவள எழுப்பல... எல்லாரும் எதுவும் பேசாம மொகத்த பாத்துட்டு இருக்காங்க... லட்சுமி அழுக ஆரமிக்கவும்...
கண்ணன்: அம்மா அழுகாதீங்க ப்ளீஸ்... நீங்கதா தாராக்கு ஆறுதல் சொல்லனும் நீங்கலே இப்டி அழுதா என்னமா பண்றது...
லட்சுமி: எப்டி பா😭😭😭..... ஐயோ என்புள்ள எவ்லோ கஷ்ட்டப்பட்டுருப்பா.
(அதப்பாத்து கிருஷ்ணராசு அழுக)
கிருஷ்ணராசு: வீட்ல ஒரு செடி வெச்சு அது வாடிப்போனாலே என்புள்ள தாங்காதே... முருகா ஏன் அவள இப்டி சோதிக்கற.. (வரிசையா ராம், கீர்த்தி, தேவராசு எல்லாரு அழுகவும் கண்ணனுக்கு கோவம் வந்துருச்சு...)
கண்ணன்: போது 👿 எல்லாரும் அழுகறத நிருத்துங்க மொதல்ல.. அழுதா போனவங்க வந்துருவாங்கலா.. அப்டி அழுதா திரும்பி வந்துருவாங்கனா வாங்க எல்லாரும் உட்காந்து அழுகலாம்...
எல்லாரும் அமைதியா இருக்க...
கண்ணன்: தெறியுதுல என்ன அழுதாலும், பொறன்டாலும் நடந்தத மாத்த முடியாதுனு... இதுல இருந்து அவள எப்டி வெளிய கொண்டு வரதுனு யோசிங்க... அதவிட்டுட்டு அவள அழுக வெக்காதீங்க.....
எல்லாரும் கண்ண தொடச்சுட்டு கண்ணன் சொல்லறது சரினு அமைதியா இருக்காங்க..
கண்ணன்: இனி தாரா முன்னாடி யாராவ்து அழுதீங்க அப்றம் நா மனுசனா 👿 இருக்க மாட்டா... உங்களுக்கு அழுகனும்னு தோனுச்சா வெளிய போயி அழுதுக்கோங்க..
எல்லாரும் அழுகாம இருக்கவும்... மதியம் சாப்பாடு ரெடி பண்றாங்க.. அப்போ ராம் கார்த்திக்கு போன் பண்றா...
ராம்: ஹலோ கார்த்தி...
கார்த்தி: சொல்லுங்கணா..
ராம்: ஊருல இருந்து எல்லாரு வந்துருக்காங்க... சாயங்காலம் இங்க வா... நாளைக்கு இங்க இருந்து காலேஜ் போ...
கார்த்தி: சரிங்க ணா... எனக்கு பஸ்ட் இன்டர்னல்ஸ் நடக்குது... 3.30க்கு முடுஞ்சுரும் நேரா அங்க வந்தற...
ராம்: சரி டா வைக்கற..
கார்த்தி: ம்ம்ம்ம் பாய்..
______________________________________
அங்க கார்த்தி இன்டர்னல்ஸ்க்காக ஹால் தேட்றா.. அவனோட ஹால்ல😍 மது இருக்கா... பொதுவா இன்டர்னல்ஸ்னா எல்லா டிபார்ட்மென்ட்டும் கலந்துதான் உட்கார வெப்பாங்க.. அப்போதா பாத்து எழுதமாட்டாங்கலாமா😂😂.... இந்த ரெண்டு மாசத்துல கார்த்தி மதுகூட நல்லா ப்ரண்ட்ஆகீட்டான்... கார்த்தி ரோல்நம்பர் பாத்து உட்கார அது சரியா மதுக்கு பின்னாடி வந்தது... அவன பாத்ததும் மது..
மது: ஹேய் கார்த்தி😊... ரெண்டு பேறும் பக்கத்துல பக்கத்துல டா..
கார்த்தி: ஹேய் ஆமா பா.. சரி படுச்சுட்டயா 😢...
மது: நீ படுச்சுட்டயா???
கார்த்தி: என்ன சப்ஜட்னே தெறியல😜....
மது: நீயெல்லா நல்லா வருவ டா.. அப்றம் எனக்கு ஒரு ஹெல்ப் டா..
கார்த்தி: என்ன ஹெல்ப் பா??
மது: உனக்கு பின்னாடி என் பிரண்ட் உட்காந்து இருக்கா... டெஸ்ட் ஆரமுச்சு கொஞ்ச நேரத்துல அவ உனக்கு பிட்டு😜 பாஸ் பண்ணுவா அத என்கிட்ட குடு சரியா???
கார்த்தி: ஐஐஐயே😕 எதுக்கு இவ்லோ கஷ்ட்டப்பட்டு பாத்து எழுதறீங்க.. என்ன மாதிரி எதுவும் எழுதாம கெத்த முட்ட வாங்குங்க😂...
மது: போ டா வீட்டுக்கு லெட்டர் போயிடும் எங்க அப்பா திட்டுவாரு... ஆமா உனக்கு பயம் இல்லையா??
கார்த்தி: ஹா ஹா ஹா எங்க வீட்டுக்கு லெட்டர் போனாதானே..
மது: புரியல டா😵... காலேஜ்ல வீட்டு அட்ரஸ்ஸ மாத்தி குடுத்துட்டயா??
கார்த்தி: இல்ல பா... போஸ்ட் மாஸ்ட்டர கரெக்ட் பண்ணீட்ட😝.... எல்லா லெட்டரும் எங்க வீட்டு அட்ரஸ்க்குதா போகும் ஆனா வீட்டுக்கு போகாது.. நா ஊருக்கு போறப்போ போயி ஒட்டுக்கா வாங்கி அடுப்புல போட்டுருவ..
மது: அடப்பாவி😂😂 ..
ஸ்பேப்(staff) உள்ள வரவும் எல்லாரும் அமைதியாகிட்டாங்க... டெஸ்ட் ஆரமிக்குது... மது சொன்ன மாதிரியே பின்னாடி இருந்து பிட்டு பிட்டா வருது😂....
கார்த்தி: (மனதிற்க்குள்- டேய் கார்த்தி இதுதான்டா நல்ல சேன்ஸ் இந்த பேப்பர்ல ஐ லவ் யூ னு எழுதி குடுத்துரு... அவளுக்கு கோவம் வந்தாலும் அடிக்க மாட்ட... ஹால்ல பேசவும் முடியாது அதுநால என்ன திட்டவும் முடியாது)
பின்னாடி இருந்து பிட்டு வரவும் கார்த்தி ஒரு அடிஸ்னல் ஷீட்ல
"I truly
❤️
Madly
❤️
Deeply
❤️
Loves you Madhu😍 "
இப்டி எழுதி கீழ ஒரு ஆட்டோகிராப் போட்டு அதுக்குக்கீட ஹார்ட்டீன் போட்டு அம்பு வேற விட்டு💘... அந்த பேப்பர மதுக்கு பாஸ் பண்றா... மது வேகமா அத வாங்கி பாத்து எழுதலாம்னு தெறந்தா... கார்த்தி எழுதுனத பாத்துட்டு பின்னாடி திரும்பி ஒரு மொற மொறச்சா..
கார்த்தி: (மனதிற்க்குள்- ஐய்யயோ மொறக்கறாலே ஒரு வேல டெஸ்ட் முடுஞ்சு அடுச்சுருவாலோ... வேண்டா கார்த்தி டெஸ்ட் முடுஞ்சதும் அவகிட்ட பேசாம ஓடீரு... அவளாகூப்ட்டு இத பத்தி பேசுவா கண்டிப்பா அப்போ நேருல சொல்லிக்கலா)...
டெஸ்ட் முடுஞ்சதும் கார்த்தி ப்ளான் பண்ண மாதிரியே மது கிட்ட பேசாம ஓடீட்டா (ஒருவழியா ப்ரோப்போஸ் பண்ணீட்டா லெட்டர் மூலமா)... ஓடுனவன் வேகமா ஹாஸ்ட்டல் போயி ட்ரஸ் எடுத்துகிட்டு தாராவ பாக்க போறா.. (கார்த்திக்கு இன்னும் விஷயம் தெறியாது)
______________________________________
அங்க வீட்ல:
தாரா எழுந்ததும் அம்மா,அப்பாவ பாத்து கொஞ்ச நேரம் அழுது ஆறுதல் ஆகிக்கறா... தாரா அம்மா,அப்பாகூட தனியா இருக்கட்டும்னு எல்லாரும் வெளிய பேசீட்டு இ்ருக்காங்க.. அம்மா மடீல தலைய வெச்சு படுத்துட்டு இருக்க தாராகிட்ட வந்த கிருஷ்ணராசு தாரா கால எடுத்து மடீல வெச்சுக்கறாரு..
தாரா: ஐயோ அப்பா... என்ன பண்றீங்க???
கிருஷ்ணராசு: எப்பவும் இப்டிதானு டா தூங்குவெப்போம் உன்ன,,, இப்போ ஏன் புதுசா கேக்கற ...
தாரா: இல்ல பா... அது வந்ந்..... (அவ முடிக்கறதுக்குள்ள கிருஷ்ணராசு)
கிருஷ்ணராசு: ஷ்ஷ்ஷ் எதுவும் சொல்லாத டா.... நீ எப்பவும் எனக்கு 3வயசு தாரா தான்...
தாரா: ம்ம்ம்ம்
லட்சுமி: தாராமா இப்போ உனக்கு நடந்ததெல்லா வாழ்க்கைல சகஜம் டா..
கிருஷ்ணராசு: ஆமா டா,,, நீ கூட எங்களுக்கு 3வது கொழந்த தான் . உங்க அம்மாக்கு ரெண்டு டைம் இப்டி ஆகீருக்கு டா...
லட்சுமி: அதுக்கு அப்றம் தா நீ கெடச்ச... எந்த விஷயமும் உடனே கெடச்சுட்டா அதோட அரும தெறியாது டா...
தாரா: ம்ம்ம்ம் சரி மா😢
கிருஷ்ணராசு: நம்ம கார்த்திகூட 4வருசம் கொழந்த இல்லாம கெடச்ச பையன் தா,,, ஆனா அவங்க அம்மா,அப்பா எப்போ பாத்தாலு வேல வேலனு போயி அந்த பையனுக்கு எந்த பாசத்தையும் தரல..
தாரா: அதா நம்ம அம்மா பாத்துகிட்டாங்கல பா அவன..
லட்சுமி: என்ன இருந்தாலு அவன் கொழந்த டா,,, தாய் பாசத்துக்கு ஏங்குவான்...
கிருஷ்ணராசு: இங்க பாரு டா கொழந்த இல்லாதப்போ கொழந்தைக்காக உருகி உருகி அழுதுட்டு கொழந்த கெடச்சதும் அத இப்டி விட்டறகூடாது... எப்பவும் அதே பாசத்தோட பாத்துக்கனும்...
தாரா: ம்ம்ம்ம் சரி பா...
கொஞ்ச நேரத்துல கார்த்தி அங்க வர.. உள்ள வந்ததும் யாருகிட்டையும் பேசாம உள்ள ஓடிப்போயி லட்சுமியோட கழுத்துல கை கோர்த்து
கார்த்தி: அத்த....😊😊
லட்சுமி: தங்கோ நல்லா இருக்கயாடா...
கார்த்தி: சூப்பரா இருக்க... நீங்க எப்டி இருக்கீங்க (கிருஷ்ணராசுவ பாத்து) அப்றம் மாம்ஸ் எப்டி இருக்கீங்க?
கிருஷ்ணராசு: நல்லா இருக்க டா...
அப்போ தா கார்த்தி தாராவ பாக்கறா..
கார்த்தி: ஏய் எரும நீ என்ன கொழந்தையா இன்னும் இப்டி படுத்துருக்க...
தாரா: நா அப்டி தா தூங்குவ...
கார்த்தி வேகமா லட்சுமியோட இன்னொரு பக்கத்துல போயி படுத்துகிட்டா..
கார்த்தி: நானும் தூங்குவனே.... வ்வ்வவவ்வ்வவவ.....
அந்த நேரம் உள்ள வந்த கீர்த்தி...
கீர்த்தி: அத்த நானு😢😢😢...
உடனே கிருஷ்ணராசு தாரா கால கீழ வெச்சுட்டு...
கிருஷ்ணராசு: நீ என் மடீல தூங்கு டா..
கீர்த்தி போயி கிருஷ்ணராசு மடீல தலைவெச்சு தூங்க...
ராம்: அப்போ நானு😢😢
கிருஷ்ணராசு: இந்த கால் ப்ரீயா தா இருக்கு டா.... நீயும் தூங்கு வா...
ராம் போயி தூங்கவும்,,, அத கண்ணன் போன்ல போட்டோ எடுத்து வெச்சுகிட்டான்... தேவராசு வாயப்பொழந்து எல்லாத்தையும் பாத்துட்டு இருக்காரு கொஞ்ச நேரம் போகவும் கார்த்தி சாப்ட போகவும் அவன் சாப்ட்டு முடுச்சதும் அவன்கிட்ட விஷயத்த சொல்லறாங்க... கார்த்திக்கும் பொக்குனு போய்ருச்சு... கார்த்தி தாராகிட்ட பேச போறா..
கார்த்தி: தாராக்கா...
தாரா: ம்ம்ம்ம் (அவ முகம் சோகமா இருக்கறத அப்போ தா கார்த்தி பாக்கறா... தாராகூட கண்ணன், கீர்த்தி, ராம் எல்லாரும் இருக்காங்க)
கார்த்தி: பீல் பண்ணாத கா...
தாரா: ம்ம்ம்ம் சரி டா இனி பீல் பண்ணமாட்ட ... அம்மா எனக்கு நெரையா அட்வைஸ் பண்ணாங்க அதுநால நா அழுக மாட்ட..
கார்த்தி: ம்ம்ம்ம் சரி கா... (கார்த்தி கண் ஓரமா கண்ணீர் எட்டி பாக்க)
கீர்த்தி: கார்த்தி.....
கண்ணன்: ஒன்னு இல்ல டா...
( பாவம் கார்த்தி என்னதா இருந்தாலும் அவன் சின்னப்பையன்,,, யாரும் அவ அழுததுக்கு திட்டல.. கண்ணன் கார்த்திய அணச்சுக்கறா)
கார்த்தி: எங்க அக்காக்கு எதாவ்து ஆகீருந்தா நா என்ன பண்ணுவ😭😭 தாராக்கா😭😭
கண்ணன்: தாராக்கு ஒன்னும் இல்ல டா,,, அவ நல்லா இருக்கா பாரு... ஏன் இப்டி பீல் பண்ற... She is fine...
கார்த்தி: அண்ணா உங்களுக்கு தெறியாது... எனக்கு எங்கஅக்காதா ரொம்ப புடிக்கும்.. நா பொறந்து 6மாசத்துல இருந்து அக்காதா என்ன பாத்துகிட்டா. . ..
கண்ணன்: தெறியும் டா...
கார்த்தி: நா 3வயசு வரைக்கு அக்காவ தா அம்மானு கூப்ட... அப்றம் எல்லாரும் சொல்லிகுடுத்துதா மாத்திகிட்ட தெறியுமா...
தாரா: கார்த்தி அழுகாத... எனக்கு ஒன்னு இல்ல டா...
கார்த்தி: எனக்கு பயமா இருக்கு கா... (கண்ணன பாத்து) அண்ணா ஒன்னு இல்லல..
கண்ணன்: உன்னோட அக்காக்கு ஒன்னு இல்ல... சரியா...
கார்த்தி: அக்கா பேபி இல்லனு பீல் பண்ணாத... கண்டிப்பா சீக்கரம் பேபி வந்துரும்... ஆனா எத்தன பேபி வந்தாலு நான்தா கா உன்ன மொத மொதல்ல அம்மா னு கூப்ட மறந்துராத...
எல்லாருக்கு ஒரு நொடி சிலிர்த்துருச்சு.. (கூட பெறந்த அக்கா இல்லனாலும் கார்த்திக்கு எவ்லோ பாசம்ல)... அப்டியே அந்த நாள் ஓடீருச்சு...
கண்ணன்: (மனதிற்க்குள்- தாரா மேல எல்லாருக்கு எவ்லோ பாசம்,, உண்மையா இப்டி ஒரு குடும்பம் கெடைக்க அவ தவம் பண்ணீருக்கனும்.. அவள எல்லாரும் எப்டி தாங்கறாங்க.. அந்த குடும்பத்தோட மொத்த சந்தோசமே என்தாரா தா... ஆனா இவங்க பாத்துக்கறதவீட,, இவங்க அன்பவீட 100 மடங்கு நா தாராக்கு தருவ)
Next part la pakkala bye👋
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro