Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

பகுதி 39 😢

கண்ணன் உள்ள போறா...

டாக்டர்: வாங்க Mr.கண்ணன்,,, உட்காருங்க

கண்ணன்: எஸ் டாக்டர்😊... (சேர்ல உட்காந்து)... தாரா எப்டி இருக்கா?? ரிசல்ட்லா வந்துருச்சா?? பேபி நல்லா இருக்கா??

டாக்டர்: அவங்களுக்கு என்ன வயசு??

கண்ணன்: 23 மேம் 😊

டாக்டர்: 23 ஆச்சூ ஆனா இன்னும் ஊசினா பயப்பட்றாங்க,,,  ப்ளட் டெஸ்ட் பண்றதுக்கு ஊசி குத்த போனா அப்டி பயப்பட்றாங்க....

கண்ணன்: அவளுக்கு ஊசினா பயம் மேம் 😊....

டாக்டர்: ஆமா,, அதா அவங்க வயச கேட்ட.... ஆனா அவங்களுக்கு ஒடம்புல இரத்தமே இல்ல... 4 இடத்துல குத்தி பாத்தும் ப்ளட்டே வரல....

கண்ணன்:😢😢😢

டாக்டர்: அதுவும் ப்ளட் எடுக்க எடுக்க ஸ்ரேன்த் இல்லாம மயங்கீட்டாங்க... அவங்க மொகத்த பாத்தாலே தெறியுது வெளுத்து போயி இரத்தம் இல்லாம இருக்கு...

கண்ணன்: ஆனா இப்போ கரெக்ட்டா சாப்டுட்டு தா இருக்கா...

டாக்டர்: ஆனா ஹீமோகுளோபின் கவுன்ட் 5.5 தா இருக்கு.... வெயிட் கம்மியா இருக்காங்க... அதுவும் அவங்க சமீபத்துல விஷம் குடுச்சாங்கலாமா??

கண்ணன்: ஆமா மேம் ஒரு 2மாசம் இருக்கும்....

டாக்டர்: அதுதா இப்போ பிரச்சணயே...

கண்ணன்: ஐயோ என்ன ஆச்சு மேம்?

டாக்டர்: அவங்க சாப்ட விஷம் வீரியம் ரொம்ப அதிகம்... அந்த வீரியத்தால உணவுகுழல், குடல் எல்லா புண் ஏற்பட்டு இருக்கு...

கண்ணன்: குடல் புண் னா அல்சர் மாதிரியா மேம்??

டாக்டர்: ஆமா இதுவும் ஒரு டைப் ஆப் அல்சர் தா...

கண்ணன்: இது நால எண்ண பிரச்சண மேம்???

டாக்டர்: உங்களுக்கு தெளிவா சொல்லனும்னா... நம்ம சாபட்ற சாப்பாடு உணவுகுழல் வழியா குடலுக்கு போகும்.. குடல்ல ஹைட்ரோகுளோரிக் அமிலம் (HCL acid) சுரந்து நம்ம சாபட்ற சாப்பாட்ட நொதிக்க செய்யும்...நொதுச்ச உணவுப்பொருள் சிறுகுடல்க்கு போயி அங்க உள்ள குடல்உறிஞ்சிகள் (Villai) மூலமா எல்லா சத்துக்களும் உறுஞ்சப்பட்டு பெருகுடல்க்கு போகும் அங்க மீதம் உள்ள தண்ணி, உப்பு, சக்கரைலா உறுஞ்சப்படும்... ஆனா இவங்களுக்கு உணவுகுழல், சிறுகுடல், பெருங்குடல் முழுசா புண்ணு இருக்கு... அவங்க சாப்ட விஷத்தோட வீரியத்தால இப்டி ஆகீருக்கு...

கண்ணன்: இதுக்கு என்ன பண்றது மேம்???

டாக்டர்: இவங்களுக்கு இரத்தம் இல்ல,, ஸ்ரேன்த் இல்ல,,, சாப்டாலும் இந்த குடல் புண் சரியாகரவரைக்கும் எந்த சக்தியும் உடம்புக்கு கெடைக்காது... அவங்க குடல் எந்த சக்தியையும் உறிஞ்சாது... இவங்க கர்பப்பைல எந்த பிரட்சணையும் இல்ல... ஆனா இவங்க ஒடம்புல இவங்களுக்கான சக்தியே இல்லாதப்போ கொழந்தைக்கு எப்டி போகும்...

கண்ணன்: மேம் எதாவ்து ட்ரீட்மண்ட் இருக்கா...??

டாக்டர்: நீங்க மொதல்லயே ட்ரீட்மண்ட் எடுத்துட்டு பேபி ப்ளேன் பண்ணீருக்கனும்... இப்போ ட்ரீட்மண்ட் எடுத்தாலும் தாரா குணமாகவே 3 மாசம் ஆகும்....

கண்ணன்: 3மாசம் தானு மேம்,,, ட்ரீட்மண்ட் எடுத்துக்கறோம்... (மனதிற்க்குள்- நா தா அவசறப்பட்டுட்ட... கொஞ்சம் கன்டரோலா இருந்து இருக்கனும்.. அவ நல்லா அகர வரைக்கு வைட் பண்ணீருக்கனும்)

டாக்டர்: 3 மாசத்துல தாரா குணமாகீருவாங்க... ஆனா பேபி...

கண்ணன்: பேபிக்கு என்ன மேம்???

டாக்டர்: இவ்லோ ஹெல்த் இஸ்யூல அவங்க எப்டி கன்சீவ் ஆனாங்கனு எனக்கே ஆச்சர்யமா இருக்கு... ட்ரீட்மண்ட் எடுத்தாலும் இந்த கொழந்தைக்கு சரியான வளர்ச்சி இருக்குமானு சொல்ல முடியாது... இப்போ பேபி கரெக்ட் க்ரோத் இருக்கு.. 35நாளுக்கு எவ்லோ வளர்ச்சி இருக்கனுமோ அது சரியா இருக்கு பட்..

கண்ணன்: பட் என்ன மேம்😢?

டாக்டர்: ஒருவேல இதுக்கு மேல பேபி க்ரோத் இல்லனா அது தாரா உயிருக்கே ரிஸ்க்...

கண்ணன்: தாராக்கு எப்டி மேம் ரிஸ்க்?? எனக்கு புரியல??

டாக்டர்: இப்போ பேபி அவங்க வயித்துல 6-7mm இருக்கு,, ஒருவேல சரியா க்ரோத் ஆகலனா அது அவங்க யூட்ரஸ்ல ப்ளட் க்ளாட்டா பார்ம் ஆகீரும்... அந்த க்ளாட் அப்டியே இருந்தா 3மாசத்துல கேண்சர் செல்ஸ் பார்ம் ஆகீரும்....

கண்ணன்: ஐயோ மேம்😭😭 தாராக்கு ஒன்னும் ஆக கூடாது....

டாக்டர்: ஒரு மாசத்துக்கு பாக்கலாம் பேபி க்ரோத் சரியா இல்லனா அபார்ட் பண்ணீருங்க அதா பெஸ்ட்...

கண்ணன்: நோ மேம்😭😭.... ப்ளீஸ் என்ன ட்ரீட்மண்ட் எவ்லோ செலவு ஆனாலு பரவால எதாவ்து பண்ணுங்க மேம்...

டாக்டர்: நாங்க ஒரு மாசத்துக்கு எல்லா மாத்திரையும் தரோம்... பேபிக்கு சரியா க்ரோத் இருந்தா ஓகே... இல்லனா ரொம்ப கஷ்டம்...

கண்ணன்: ரெண்டு பேருக்கும் ஒன்னு ஆககூசாது மேம்... அவங்க ரெண்டு பேறும் என் உயரு...

டாக்டர்: ஒரு மாசம் பாக்கலாம்... இல்லனா உங்க தாராவா?? கொழந்தையானு??  முடிவு பண்ணிக்கோங்க....

கண்ணன்: ம்ம்ம்ம்😭😭

கண்ணன் வெளிய வரா... அங்க தாரா ஒரு 6மாசத்து கொழந்தைய அவ மொகத்துக்கு நேரா தூக்கி வெச்சு அந்தகுட்டிகூட கொஞ்சீட்டு இருக்கா..

தாரா: என்ன டா குட்டி.....😍😍😍......(கொழந்த அவள பாத்து சிரிக்க.. அவளும் சிருச்சுட்டு)...😘😘😍😍... தங்ககுட்டி ஆன்டிய பாத்து சிரிக்கரீங்கலா.... ரொம்ப க்யூட்டா இருக்கீங்க பாப்பா நேம் என்ன?...( கொழந்தைய பாத்து கேக்க கொழந்தையோட அம்மா பூர்விஷா னு சொல்லவும்)... பூர்வி யா உங்க பேரு😍😍 (என்னமோ பெருசா புருங்ச மாதிரி கொழந்த அவ தலைய ஆட்டுரமாதிரி ஆட்டி சிரிக்குது).... என்ன டா ஆன்டி பேசறது புறியுதா உங்களுக்கு.... (கொழந்த அவளோட ஜிமிக்கி ஆடுறத பாத்து அத தொட்டு பாக்க).... அடடா பூர்விக்கு ஜிமிக்கி வேணுமா???...

கண்ணன் தாராவ பாத்துட்டு அவ பக்கத்துல வர....

கண்ணன்: தாரா போலாமா??

தாரா: ஹேய் இந்த பேபி பாரு டா... இவ்லோ க்யூட்ல பேரு பூர்விஷா...

கண்ணன்: 😊😊😊 (கொழந்தைய பாத்து)...... குட்டி மாமாகிட்ட வாரீங்கலா (கண்ணன் கைய நீட்ட கொழந்த தாரா பக்கம் திரும்பி அவ மொகத்துல கை வெச்சு பொட்ட எடுக்க)

தாரா: ஹே ஹே😂😂 பாப்பா உன்கிட்ட வரமாட்டாங்க... என்கிட்டதா இருப்பா.. ( கொழந்தைய பாத்து) அப்டிதானு குட்டி😍 (கொழந்த அவள பாத்து சிரிக்க)

கண்ணன்: மாமா கிட்ட வாங்க ப்ளீஸ்😊😊 (மனதிற்க்குள்- யாரோ கொழந்த மேல இவ்லோ பாசமா இருக்காலே நம்ம கொழந்தையோட நெலம தெறுஞ்சா நொறுங்கி போயிருவா😭)

தாரா: நீங்க போகாதீங்க குட்டி மாமா பேட் பாய் (bad boy) என்கிட்டையே இருங்க... உங்கள எனக்கு ரொம்ப புடுச்சுருக்கு (கொழந்த அவ கண்ணத்துல அதோட உதட்ட வெச்சு கொஞ்சம் எச்சி பண்ணவும் - baby kiss pannuchu pola - தாராவும் கொழந்த மொகத்த புடுச்சு அதோட அம்மாவ பாத்து) கிஸ் பண்ணடா கா உங்க பாப்பாவ???

அந்த பெண்: ம்ம்ம்ம் பண்ணீக்கோங்க..

தாரா: இல்ல கா தன் கொழந்தைய கிஸ் பண்றத சிலர் விரும்ப மாட்டாங்க.. ரொம்ப சுத்தம் பாப்பாங்க அதா கேட்ட (கொழந்தைக்கு முத்தம் குடுக்கறா)

கண்ணன்: (மனதிற்க்குள்- தாரா😢 Mother feelings இப்பவே புறியுது உனக்கு)

அந்த பெண்: நீங்க செக்கப்கு வந்தீங்கலா?? எவ்லோ மாசம்?

தாரா: (வெக்கத்தோட🙈) 35 நாள் ஆச்சூ கா 😊.....

கண்ணன்: (மனதிற்க்குள்- பாவம் எவ்லோ சந்தோசமா இருக்க,, நா இத எப்டி உன்கிட்ட சொல்லறது தாரா😢)

அந்த பெண்: பொன்னு வேணுமா?? இல்ல பையனா??

தாரா: பையன் கா 😊.... அவருக்கு பையன்தா வேணுமாமா....

கண்ணன்: (மனதிற்க்குள்- எனக்கு எதுவும் வேண்டா டி,,, நீ போது😢 பயமா இருக்கு தாரா😭)

அந்த பெண்: சரி ரெண்டையும் பெத்துக்கோங்க...

தாரா: 🙈🙈🙈..... எனக்கு கொழந்த நா ரொம்ப இஷ்டம்,, எனக்கு ஓகே தா🙈

கண்ணன்: சரிங்க கா,, நாங்க கெலம்பரோம்... ( மனதிற்க்குள்- கொழந்த மேல ரொம்ப ஆசையா இருக்கயே தாரா😭😭)

அந்த பெண்: சரிங்க தம்பி,,, சரி மா,,, பாய் (கொழந்தைய வாங்கிகிட்டாங்க)

தாரா கோவிலுக்கு போகனும்னு ஆசப்பட்றா அதுநால கண்ணன் அவள கோவிலுக்கு கூட்டீட்டு போறா... முருகார் கோவில்ல சாமி கும்பிடும் போது

தாரா: (மனதிற்க்குள் கடவுளிடம்- முருகா இன்னைக்கு நா ரொம்ப சந்தோசமா இருக்க. நா அம்மா ஆகப்போறனு நெனைக்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு... நா இந்த கொழந்தைய நல்ல படியா பெத்துக்கனும்,,, நீ தா என்கூட இருக்கனு... கண்ணனுக்கு அவன் இழந்த எல்லா சந்தோசத்தையும் இந்த கொழந்த மூலமா குடுக்கனும்... எப்பவும் என்கண்ணன் நல்லா இருக்கனும்)

கண்ணன்: (மனதிற்க்குள் கடவுளிடம்- முருகா ஏன் அவள இப்டி சோதிக்கற,, அவமேல உனக்கு கருணையே இல்லையா.... இல்ல அவள ரொம்ப புடிக்கும்னு உன்கிட்ட கூப்ட்டுக்க ட்ரை பண்றாயா?? என்னோட மொத்த சந்தோசமே அவதா,,, அவளுக்கு எதுவும் ஆககூடாது,,, அவ கொழந்த மேல இவ்லோ ஆசையா இருக்கா பாவம்,,, அந்த கொழந்தைய பறுச்சு அவள அழுக வெச்சுறாத பாவம் அவ... எப்பவும் என்தாரா நல்லா இருக்கனும்)

சாமி கும்புட்டு வெளிய மரத்துக்கு கீழ உட்காந்து பேசிக்கறாங்க..

தாரா: டேய் கண்ணா😊...

கண்ணன்: சொல்லு டா....

தாரா: இன்னைக்கு நா ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்க டா...

கண்ணன்: ம்ம்ம்ம்..

தாரா: ஹாஸ்பிட்டல்ல அந்த கொழந்த செம க்யூட்ல😍.... கொழந்தனாலே அழகு தான் டா.... அந்த மொகத்த பாத்தாலே எல்லா கஷ்டமும் மறந்துறும்ல... அந்த சிரிப்பு ஒன்னே போது நம்ம வாழ்க்கையே ரொம்ப அழகா மாறிரும்ல டா... நமக்கு பேபி வர போகுதுல... ஜாலியா இருக்கு டா😍😊

கண்ணன்: ம்ம்ம்ம் ஆமா (மனதிற்க்குள்- டாக்டர் சொன்னத உன்கிட்ட சொன்னா இந்த சந்தோசம் எல்லா காணாம போயிரும் டி நீ தாங்க மாட்ட.... நீ மனசு ஒடஞ்சு அழுகறத என்னால பாக்க முடியாது தாரா😭)

தாரா: ஆமா டாக்டர் என்ன சொன்னாங்க.....

கண்ணன்: அது நீ ரொம்ப வீக்கா இருக்கயாமா.... ப்ளட் எடுக்கும் போது 4 தடவ குத்தியும் இரத்தம் வரலயாமா,, அப்றம் மயங்கீட்டயாமா,,, அதுநால நெரையா மாத்திர குடுத்துருக்காங்க.. எந்த டைம்க்கு என்ன சாப்டனும்னு தெளிவா சொன்னாங்க டா😊 (மனதிற்க்குள்- இன்னும் ஒரு மாசம் இருக்குல,,, உனக்கு நல்லா ஆகீரும்..😭 அப்டியே அகலனாலும் நீ இந்த ஒரு மாசமாவ்து அழுகாம இருப்பல நா இப்போ பொய் சொல்றநால... இல்ல உனக்கு ஒன்னு ஆகாது... ஒரு மாசத்துல சரி ஆகீரும்)

தாரா: ஐயோ மயக்கம் போட்டத போட்டு குடுத்துட்டாங்கலா😢.....

கண்ணன்: ம்ம்ம்ம் இனி நா குடுக்கறத எல்லா சரியா சாப்டனும் ஓகே வா...

தாரா: சரி டா....

ஒரு மாசத்துல தாராக்கு சரி ஆகீருமா???

Ennoda story aaa regulara padikkara ellarukkum romba thanks😊... (Ellaroda nameum poda mudila thukkam varuthu sorry manuchukongooo🙏) Then enda update la doctor sonna mathiri sila vishayaththa potturukkan... Athu crctaaa nu theriyala... Na kevipattatha vechu ezhuthirukka... Ennoda regular readers la rendu doctors irukkanga ( SrinidhisweetysSneha_RVr) Na sonnathu edavthu mistake aaa iruntha sollunga sis... Crct pannikara....

Next part la pakkala bye👋

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro